Written by London Swaminathan
ஆய்வுக் கட்டுரை எண் 1586; தேதி 18 ஜனவரி 2015
ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பெயர்களைப் படிப்பதே ஒரு ஆனந்தம். தஞ்சாவூர் பெரிய கோவிலில் உள்ள கல்வெட்டுகளில் 400 ஆடல் அழகிகள் பெயர்களை ராஜ ராஜ சோழன் பொறித்து வைத்துள்ளதையும் அவகள் பெயர்களில் அழகான சம்ஸ்கிருத, தமிழ் பெயர்கள் உள்ளதையும் முன்னரே எழுதிவிட்டேன். தொல்பொருட் துறை அறிஞர் டாக்டர் இரா. நாகசாமி வெளியிட்ட கல்வெட்டுத் தொகுப்புகளில் ராஜராஜ சோழனின் கல்வெட்டுகள் உள.
கல்ஹணர் என்ற காஷ்மீரி பிராமணன் எழுதிய ராஜ தரங்கினி என்ற நூலைத் தான் இந்தியர் எழுதிய முதலாவது வரலாற்று நூல் என்று அரிஞர்கள் போற்றுவர். காரணம்?அவர்தான் முதல் முதலில் ஒவ்வொரு மன்னனும் சக வருடத்தில் எப்போது ஆண்டான் என்று தற்கால வரலாற்றுப் புத்தகம் போல எழுதியுள்ளார். அவர் அக்காலத்தில் நிலவிய பெண்கள் பெயர்களைக் குறிப்பிடுகிறார். ஆங்கிலக் கட்டுரையில் எல்லா பெயர்களையும் கொடுத்துள்ளேன் சில சுவையான பெயர்களை தமிழில் தருகி றேன்.
லண்டனில் வாழும் எனது நண்பர்கள் ஜோதிடப் பித்தர்கள். இந்த எழுத்தில் துவங்கி, உங்கள் பிள்ளைக்குப் பெயர் வைத்தால் நல்லது என்று ஜோதிடர்கள் சொல்லவே அவர்கள் எழுத்தில் கவனம் செலுத்தி பெயர்களை உருக் குலைத்து விடுகின்றனர். தமிழும் தெரியாமல் சம்ஸ்கிருதமும் தெரியாமல் கன்னா பின்னா என்று பெயர்கள் வைக்கின்றனர்.நிர்சாந்தன் (அமைதி இல்லாதவன்) போன்ற எதிர்மறைப் பொருள் உடைய பெயர்களைப் பிள்ளைகளுக்கு வைக்கின்றனர். எனது நண்பி ஒருவர் பிள்ளைகளுக்கு ஹாஜி, பாஜி, ஷாஜி என்று பெயர் இட்டார்கள். இது என்ன கொடுமை? என்று கேட்டேன். கூப்பிட வசதியாக இருக்கிறதல்லவா? என்றாள் அப்பெண்மணீ! அட! சொஜ்ஜி என்று வைத்தால் இன்னும் இனிப்பாக இருக்குமே என்று சொல்லிவிட்டு வந்தேன் (ஸொஜ்ஜி = ரவா கேசரி)
தென் ஆப்பிரிக்கா, மோரீஷஸ் தீவுகளில் வாழும் தமிழர்கள் பிரெஞ்சு, டச்சு மொழி ஸ்பெல்லிங் பயன்படுத்துவதால் மருதமுத்து என்பதை மர்டர் முத்து என்று எழுதுகின்றனர். இப்படிப் பல விநோதங்க்கள்!
காஷ்மீர் பெண்கள் பலர் பெயர்களில் லலிதா சஹஸ்ர நாமப் பெயர்கள் இருக்கின்றன. யாருக்காவது நல்ல பெயர்கள் வேண்டுமானல் எல்லா சஹஸ்னாமங்களையும் வைத்துக் கொண்டால் போதும் — நல்ல பெயர்களை தெரிந்தெடுக்கலாம். ஏதேனும் பெயர்ப் பிரச்சினை இருந்தால் எழுதுங்கள். என் அண்ணன் சீனிவாசன் தீர்த்துவைப்பார். அவர் பெயர்கள் நிபுணர்.
பிறந்த தேதி அவசியம்!!
இதோ 900 வருடங்களுக்கு முன் கல்ஹணர் எழுதிய பெயர்கள்:
அம்பிக புத்ரிகா, அம்ருத லேகா, அனங்க லேகா, அஞ்சனா, பப்பட தேவீ, புவன மதி, பிஜ்ஜா, பிஜ்ஜலா, பிம்பா, சக்ரமர்திகா, சந்திரவதீ, சாந்த்ரீ, சிந்தா, தேவலேகா, தித்தா, திலா, குணதேவீ, குணலேகா, ஹம்ஸி, இந்திரதேவி,
ஐராவதீ, ஈசானதேவி, ஜஜ்ஜலா, ஜயாதேவீ, ஜயலக்ஷ்மி, ஜயமதீ, கலனீகா, கல்யாணதேவீ, கமலா, கமலாவதீ, காவ்யா, காவ்யாதேவீ,
காடனா, க்ஷேமா, சில்லிகா, குமுதலேகா, மல்லா, மம்மா, மம்மனிகா, மஞ்சரிகா, மங்கனா, மேகாவலீ, மெனிலா, நாக லேகா, ம்ருகாவதீ, நாகா,
நாகலதா, நந்தா, நரேந்திர ப்ரபா, நொனா, நொனிகா, பத்மலேகா, பத்மாவதீ, பத்மஸ்ரீ, ப்ரகாச தேவி, ரட்டாதேவீ, ராஜ்யலக்ஷ்மி, ராஜ்யஸ்ரீ, ராமலேகா,
ரமண்யா, ரனாரம்பா, ரத்னாதேவீ, ரத்னப்ரபா, ரத்னாவலீ, ரத்தா, சஹஜா,
சாம்பவதீ, சம்மா, சாரதா, சில்லா, சோமலதேவீ, ஸ்ரீலேகா, சுபதா, சுகலா, சுகந்தா, சுல்லா, சுரேந்திரவதி, சூர்யமதீ, சுஸ்ஸலா, சுய்யா, ஸ்வேதா, தேஜலாடினா, தக்கணா, திலோத்தமா, த்ரைலோக்யதேவீ, உட்டா, வல்கா, வல்லபா, விமலப்ரபா, யசோமதீ, யசோவதீ, யூகாதேவீ
இது பற்றி, ராஜ தரங்கிணியை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ஆர்.எஸ்.பண்டிட் எழுதிய குறிப்பில்– “ இன்றும் கூட காஷ்மீரி பிராமணர்கள் வல்கா, நொனா, சில்லா என்று பெயர்கள் வைப்பதாகவும் தித்தா என்ற மஹாராணிக்கு மிகவும் பிடித்த பெண் வல்கா என்பதால் இது பிரபலம் ஆனதாகவும்சொல்கிறார். இது துருக்கிய செல்வாக்கில் எழுந்த பெயராக இருக்கலாம். இதே போல சுல்லா, சில்லா என்பன ஈரானிய பெயர்கள்” — என்றும் சொல்கிறார்.
தமிழநாட்டில் பொன்னியின் செல்வன் நாவல் வந்த பின்னர் எவ்வளவோ குடும்பங்களில் பெண்களை குந்தவை, வானதி என்று அழைத்தனர். ஆக வரலாறும் கூட பெயர் வைப்பதில் செல்வாக்கை உண்டாக்க முடியும்.
கல்ஹணர் குறிப்பிடும் பெரிய அறிஞர்கள், கவிஞர்கள் குறித்து மற்றொரு கட்டுரையில் தருகிறேன்.



You must be logged in to post a comment.