கிருஷ்ணர் கொடுத்த நன்கொடைகள்!

beauiful-krishna-radha

எழுதியவர்- லண்டன் சுவாமினாதன்

கட்டுரை எண்-1599; தேதி:- 24 ஜனவரி 2015

 

Compiled by london swaminathan

Post No: 1599: Dated 24 January 2015

கிருஷ்ணர் ஒரு தாராளப் பிரபு. அவர் அறிந்தும் அறியாமலும் கொடுத்த நன்கொடைகள் பலப்பல.

குசேலர் என்னும் சுதாமா கிழிசல் துணியில் பழைய அவலை முடிந்து வந்தார். அதை ஒரு பிடி வாயில் போட்டுக் கொண்ட அடுத்த நிமிடம் அந்த ஏழையின் குடிசைகள்,  மாட மாளிகைகள் ஆக மாறின. அவருக்குச் செல்வத்தைக் கொடுத்தார்.

திரவுபதியின் வஸ்த்ரங்க்களை துச்சாதனன் உருவிய போது சேலையைக் கொடுத்தார். ஆடை மட்டும் இன்றி திரவுபதிக்கு மானத்தையே கொடுத்தார்.

துரியோதணனும் அர்ஜுனனும் போருக்கு உதவி கேட்டு வந்தனர். துரியோதணா நீயே முதலில் வந்தாய். முதலில் உனக்கு என்ன வேண்டும் என்பதைக் கேள் என்றார். அவன் எல்லா படைகளையும் கேட்டான். எடுத்துக் கொள் என்று சொல்லி எல்லா ஆயுதங்களையும் படைகளையும் துரியோதணனுக்குக் கொடுத்தார்.

கண்ணன் மீது பரிபூரண பக்தி கொண்ட அர்ஜுனனுக்கு தன்னையே கொடுத்தார். அவனுக்கு சாரதியாக/ டிரைவராக அமர்ந்தார். ஆக உடல் உழைப்பைக் கொடுத்தார்.

கோபியர்கள் மட்டற்ற, மாசு மருவற்ற, தூய, மனம் திறந்த அன்பைப் பொழிந்தனர். அதைப் பன்மடங்கு திருப்பித் தந்து புல்லாங்குழல் இன்னிசையாலும் அவர்களை மகிழ்வித்தான்.

பெரும் மழை வந்தபோது பயந்து நடுங்கிய இடைச் சிறுவர்களுக்கு கோவர்த்தன மலையையே உயர்த்திக்  குடை கொடுத்தான்.


Was Draupadi Disrobed

பெரும் சன்டைகளுக்கும் உயிர்க் கொலைகளுக்கும் காரணமாக அமைந்த சியமந்தக வைரத்தை அக்ரூரருக்குக் கொடுத்தான்.

 

அம்புப் படுக்கையில் இருந்த பீஷ்மருக்கு, ஏற்கனவே அர்ஜுனனுக்கும் சஞ்சயனுக்கும் காட்டிய விஸ்வரூப தரிசனத்தைக் கொடுத்தான். இப்படி எவ்வளவோ கொடைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

அது சரி,

 

திரவுபதிக்கு புடவை

துரியோதணனுக்கு படைகள்

அர்ஜுனனுக்கு  டிரைவர் சேவை

கோபியருக்கு அன்பு

அக்ரூரருக்கு சியமந்தக வைரம்

பீஷ்மருக்கு தரிசனம்

இடைச்சிறுவருக்கு மலைக் குடை

 

மானுடப் பிறவி எடுத்து தினமும் அல்லற்பட்டு, அவன் புகழ் பாடும் நமக்கு என்ன கொடுத்தார்?

 

கீதை — பகவத் கீதை–  என்னும் மாபெரும் பொக்கிஷத்தைக் கொடுத்தார். உபநிஷதம் எல்லாவற்றையும் ‘சாறு (ஜூஸ்’) பிழிந்து அதை நமக்கு எளிதில் பருக வசதியாக ஒரு கோப்பையில் கொடுத்தது போல — பகவத் கீதை என்னும் 700 ஸ்லோகங்களே மட்டும் உடைய — 1400 வரிகளே உடைய — அரிய பெரிய புத்தகத்தைக் கொடுத்து இருக்கிறார். பயன்படுத்துவதும் பயன் படுத்தாமல் இருப்பதும் நம் கைகளில்தான்!

 

கண்ணன் மாபெரும் கொடையாளி !

 

முந்தைய கட்டுரைகள்:

 

Krishna’s Diamond in USA? – posted 23 April 2012)

Atom Bomb to Zoo of the Bhagavd Gita – posted in two parts on 22, 23 November 2011

Swami Vivelkanda on Krishna and Gopis – posted on March 8, 2014

 

contact swami_48@yahoo.com