யானை பற்றிய நூறு பழமொழிகள்

Guruvayur’s famous Valiya Kesavan elephant

 

20 000 Tamil Proverbs என்று ஆங்கிலத்திலும் 20000 தமிழ் பழமொழிகள என்ற எனது இரண்டு கட்டுரைகளைப் படித்துவிட்டு இதைப் படிக்கவும்.

தொடர்புடைய கட்டுரைகள்: தமிழ் ஒரு கடல், சம்ஸ்கிருதம் ஒரு சமுத்திரம்

மேற்கூறிய கட்டுரையில் கூறியது போலவே தமிழ் மொழி மிகவும் வளமான ஒரு மொழி. உலகில் தமிழ் மொழியில் உள்ளதைப் போல வேறு எந்த மொழியிலாவது பழமொழிகள் இருக்குமா என்பது சந்தேகமே. வளமிக்க மிகப் பழமையான சம்ஸ்கிருதத்தில் சுபாஷிதங்கள் 20,000 க்கும் மேலாக இருந்தபோதிலும் அவை தனிப்பாடல்கள், நீதி நெறி புகட்டும் குறள் பாக்கள் என்ற வகையில் சேர்ந்துவிடும்.

இதோ யானை பற்றிய நூறு பழமொழிகள். பாமர மனிதன் ஆனை என்றே சொல்லுவான். யானை என்பது எழுத்து வழக்கு-இலக்கிய வழக்கு

 

Punnathurkotta elephant camp with 64 elephants

1. யானை வரும் பின்னே, மணி ஓசைவரும் முன்னே

2. யானைக்கும் கூட அடி சறுக்கும்

3. பட்டிக்காட்டான் யானையைப் பார்த்தது போல

4. யானையைப் பார்த்து நாய் குரைத்த மாதிரி

5 .யானை உண்ட விளங்கனி

6. யானை அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும்

7. யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்

8. வெண்கலக் கடையில் யானை புகுந்தது போல

9. யானை முதல் எறும்பு வரை

10. ரத கஜ துரக பதாதி உடன் வந்தான் மன்னன்

11. யானைப் பல் காண்பான் பகல் (பழமொழி)

12. யானை தன் தலையிலேயே மண்ணைப் போட்டுக் கொள்ளும்

13. ஆனைக்கும் பானைக்கும் சரி

14. ஆனக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்

15.யானைக்கு அல்வா வாங்கிப் போட்ட கதைதான்

16. யானைப் பசிக்கு சோளப் பொறி

17. யானை கண்ட பிறவிக்குருடர்கள் அடித்துக்கொண்டதுபோல

18. ஆனை அசைந்து தின்னும், வீடு அசையாமல் தின்னும்

19. ஆனை ஆசாரவாசலைக் காக்கும், பூனை புழுத்த மீனைக் காக்கும்

20. ஆனை ஆயிரம் பெற்றால் அடியும் ஆயிரம் பெறுமா?

Elephant playing drums

21. ஆனையிருந்து அரசாண்டவிடத்திலே பூனையிருந்து புலம்பியழுகிறது

22. ஆனை இலைக் கறி, பூனை பொறிக்கறி

23. ஆனை உயரம் பூனை ஆகுமா?

24. ஆனை ஏறித் திட்டிவாசலில் நுழைவது போல

25. ஆனை ஏறியும் சந்து வழி நுழைவானேன்?

26. ஆனை ஒரு குட்டி போட்டும் பலன், பன்றி பல குட்டி போட்டும் பலன் இல்லை

27. ஆனை கட்டத் தாள், வான முட்டப்போர்

28. ஆனை கறுத்தால் ஆயிரம் பொன் ஓட்டை கறுத்தால் உதவி என்ன?

29. ஆனை காணாமற் போனால் அரிக்கன் சட்டி குண்டு சட்டிகளில் தேடுவதா?

30. ஆனை குட்டி போடும் என்று நம்பி லத்தி போட்டது போல

31. ஆனை குண்டுச் சட்டியிலும் குழிசிச் சட்டியிலும் உண்டோ?

32. ஆனை குத்தும் தோட்டிக்குப் பிணக்கா?

33. ஆனை கேடு அரசு கேடு உண்டோ?

34. ஆனை கேட்ட வாயால் ஆட்டுக் குட்டி கேட்கிறதா?

35. ஆனை கொடிற்றில் அடங்குகிறது போல எந்த மட்டும் அடக்குகிறது?

36. ஆனை கொடுத்தும் அங்குசத்திற்குப் பிணக்கா?

37. ஆனைக் கவடும் பூனைத் திருடும்

38. ஆனைக்கிட்டுக் கெட்டவன் குடத்தில் கையிட்டாற்போல

39. ஆனைக்கில்லை கானலும் மழையும்

40. ஆனைக்கு அறுபது முழம், அறக்குள்ளனுக்கு எழுபது முழம்

Surin City, Thailand

41. ஆனைக்கு கோவணம் கட்டினாற்போல

42. ஆனைக்கு சிட்டுக் குருவி மத்தியஸ்தம் போனாற்போல

43. ஆனைக்குத் தீனியிடும் வீட்டில் ஆட்டுக் குட்டிக்குப் பஞ்சமா?

44. ஆனைக்குத் துறடும் அன்னத்துக்கு மிளகாயும் வேண்டும்

45. ஆனைக்குத் தேரை இட்டது போல

46. ஆனைக்குத் தேரை ஊனா?

47. ஆனைக்குமுண்டு அவ கேடு

48. ஆனைக்கும் புலிக்கும் நெருப்பை கண்டால் பயம்

49. ஆனைக்கு வேகிற வீட்டில் பூனைக்கு சோறில்லையா?

50. ஆனைக் கூட்டத்திற் சிங்கம் புகுந்தாற்போல

51. ஆனைச் சவாரி செய்தவன் பூனைச் சவாரிக்கு அஞ்சுவானா?

52. ஆனை தழுவிய கையால் பூனையைத் தழுவுறதா?

53. ஆனை தன்னைக் கட்ட சங்கிலியைத் தன் கையாலேயே கொடுத்தது போல

54. ஆனை துரத்தி வந்தாலும் ஆலயத்தில் நுழையலாகாது

55. ஆனை நிழல் பார்க்க தவளை அழித்தாற்போல

56. ஆனை படுத்தால் ஆட்டுக் குட்டிக்குத் தாழுமா?

57. ஆனை படுத்தால் ஆள் மட்டம்

58. ஆனை படுத்தால் குதிரை மட்டமாவது இராதா?

59. ஆனை பார்க்க வெள்ளெழுத்தா?

60. ஆனை புலி வந்தாலும் தாண்டுவாள்

Famous elephant Echo

61. ஆனை போகிற வழியில் எறும்பு தாரை விட்டாற் போல

62. ஆனை போகிற வழியில் போன வீதியில் ஆட்டுக் குட்டி போகிறது வருத்தமா?

63. ஆனை மதத்தால் (கொழுத்தால்) வாழைத் தண்டு, ஆண்பிள்ளை மதத்தால் கீரைத் தண்டு

64. ஆனை மிதிக்கப் பிழைப்பார்களா?

65. ஆனை மேயும் காட்டில் ஆடு மேய இடம் இல்லையா?

66. ஆனை மேல ஏறுவேன் வீர மணி கட்டுவேன்

67. ஆனை மேல இடும் பாரத்தைப் பூனை மேல இடலாமா?

68. ஆனை மேல இருக்கிற அரசன் சோற்றை விட, பிச்சை எடுக்கிற பார்ப்பான் சோறு மேல்

69. ஆனை மேல போகிறவன்கிட்ட சுண்ணாம்பு கேட்டா அகப்படுமா?

70. ஆனை மேல போகிறவனையும் பானையோட தின்றான் என்கிறது

71. ஆனையும் அருகம் புல்லினால் தடைப் படும்

72. ஆனையும் ஆனையும் முட்டும் போது இடையில் அகப்பட்ட கொசுகு போல

73. ஆனையும் நாகமும் புல்லினால் தடைப்பட்டன

74. ஆனையை ஆயிரம் பொன்னுக்கு வாங்கி, இரும்பு அங்குசத்துக்கு ஏமாந்து நிற்பானேன்?

75. ஆனையைக் கட்டி சுளகாலே மறைப்பாள்

76. ஆனையைக் குத்தி சுளகாலே மூடுவாள்

77. ஆனையைக் கொன்றவன் பூனையை வெல்ல மாட்டானா?

78. ஆனையைத் தண்ணீரில் இழுக்கும் முதலை பூனையைத் தரையில் இழுக்குமா?

79. ஆனையைத் தேட பூதக் கண்ணாடி வேண்டுமா?

Kenya’s famous elephant

80. ஆனையைப் பிடிப்பதும் கரகத்தில் (பானையில்) அடைப்பதும், அதுவே செல்லப் பிள்ளைக்கு அடையாளம்

81. ஆனையை வித்துவானுகும் பூனையைக் குறவனுக்கும் கொடு

82. ஆனையை விற்றா பூனைக்கு பரிகாரம் (வைத்தியம்) செய்யறது?

83. ஆனையை விற்று துறட்டிக்கு மன்றாடுகிறான்

84. ஆனை லத்தி ஆனை ஆகுமா?

85. ஆனை வயிறு நிறைந்தாலும் ஆட்டின் வயிறு நிறையாது

86. ஆனை வாயில போன கரும்பு போல

87. ஆனை வால் பிடித்து கரை ஏறலாம், ஆட்டின் வால் பிடித்து கரை ஏற முடியுமா?

88. ஆனை விழுங்கிய அம்மையாருக்கு பூனை சுண்டாங்கி

89. ஆனை விழுந்தாலும் குதிரை மட்டம்

90. ஆனை விழுந்தால் கொம்பு ,புலி விழுந்தால் தோல்

91. ஆனை வேகம் அடங்கும் அங்குசத்தில்

92 .யானை தொட்டாலும் மரணம் வரும்

93. யானை முன்னே முயல் முக்கினது போல

94. யானை வந்தால் ஏறுவேன், சப்பாணி வந்தால் நகருவேன்

95. யானை வாய்க் கரும்பும், பாம்பின் வாய்த் தேரையும், யமன் கைக்கொண்ட உயிரும் திரும்பி வாரா

96. யானை விற்றால் யானை லாபம், பானை விற்றால் பானை லாபம்

97. யானைக்கு சிம்ம சொப்பனம் போல

98. பன்றிக் குட்டி யானை ஆகுமா?

99 .மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று ஆனை கட்டிப் போரடிக்கும் அழகான தென் மதுரை

100. யானையால் யானை யாத்தற்று

101. சோழ நாடு சோறுடைத்து, பாண்டி நாடு முத்துடைத்து, சேர நாடு வேழமுடைத்து, தொண்டை நாடு சான்றோருடைத்து

102.வேழத்திற்குச் சிறிதும் பெரிதாய்த் தோன்றும்

103. வேழத்தை ஒத்த வினைவந்தால் தீர்வது எப்படி?

104.வேழம் முழங்கினாற் போல

 

இவை ஒவ்வொன்று பற்றியும் ஒரு கதையும் ஆய்வுக் கட்டுரையும் எழுதலாம். அவ்வளவு பொருள் பொதிந்த பழ மொழிகள்.

 

Sri Lanka Elephants

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: