விவேகாநந்தருக்குப் பிடித்த கீதை ஸ்லோகம்

gita2

லண்டன் சுவாமிநாதன்;
கட்டுரை எண் 831 தேதி 10-02-2014

“உலகில் பாவம் என்பது உண்டு என்றால் அதுதான் பயமும் பலஹீனமும். இந்த ஒரு ஸ்லோகத்தைப் படித்தால் கீதை முழுதும் படித்த பயன் எய்துகிறான். இந்த ஒரு ஸ்லோகத்தில் கீதையின் ரஹஸ்யம் ஆழ்ந்து உறைகின்றது.” —- சுவாமி விவேகாநந்தர்

“க்லைப்யம் மாஸ்ம கம: பார்த்த நைதத் த்வய்யுபபத்யதே
க்ஷுத்ரம் ஹ்ருதய தௌர்ப்பல்யந் த்யக்த்வோத்திஷ்ட பரந்தப:”
–பகவத் கீதை 2-3

பொருள்:- எதிரிகளை எரிப்பவனாகிய பார்த்தா ! பேடித்தனத்தை அடையாதே. இது உன்னிடத்தில் சிறிதும் பொருந்தாது. அற்பமான மனத் தளர்ச்சியை ஒழித்து விடு. எழுந்திரு !

இதையே ‘அச்சமே கீழ்களது ஆசாரம்’ (குறள் 1075) – என்று வள்ளுவன் இடித்துரைக்கிறான்.

ஈடிலாப் புகழினோய்! எழுகவோ எழுக!
பாரதியோ பொங்கு தமிழில் முழங்குகிறான்:

“உண்மையை அறியாய்; உறவையே கருதிப்
பெண்மை கொண்டு ஏதோ பிதற்றி நிற்கின்றாய்
வஞ்சகர், தீயர், மனிதரை வருத்துவோர்,
நெஞ்சகத் தருக்குடை நீசர்கள் — இன்னோர்
தம்மொடு பிறந்த சகோதரர் ஆயினும்,
வெம்மையோடு ஒறுத்தல் வீரர்தம் செயலாம்
ஆரிய! நீதி நீ அறிகிலை போலும்!
பூரியர் போல் மனம் புழுங்குறலாயினை
அரும்புகழ் தேய்ப்பதும் அனாரியத் தகைத்தும்
பெரும்பதத் தடையுமாம் பெண்மை எங்கு எய்தினை?
பேடிமை அகற்று! நின் பெருமையை மறந்திடேல்!
ஈடிலாப் புகழினோய்! எழுகவோ எழுக!
— பாரதியார் பாடல்

இன்னொரு பாடலில் பாரதி சொல்வான்:
வில்லினை எடடா! – கையில்
வில்லினை எடடா! – அந்தப்
புல்லியர் கூட்டத்தைப் பூழ்தி செய்திடடா!
வாடி நில்லாதே; — மனம்
வாடி நில்லாதே; — வெறும்
பேடியர் ஞானப் பிதற்றல் சொல்லாதே.
— பாரதியார் பாடல்

ஆன்மா அழியாதது என்ற உபதேசமும் கீதையின் இரண்டாவது அத்தியாயத்தில்தான் வருகிறது. அதையும் பாரதி விட்டுவிடவில்லை:-

ஆன்ம ஒளிக்கடல் மூழ்கித் திளைப்பவர்க்கு
அச்சம் உண்டோடா? –மனமே!
தேன் மடை இங்கு திறந்தது கண்டு
தேக்கித் திரிவமடா— பாரதியார் பாடல்

“ஆத்மா பலவீனம் உடையவனால் அடையமுடியாதது” (ந அயம் ஆத்மா பலஹீனேன லப்யதே) என்று உபநிஷதமும் கூறுகிறது.

ஸ்ரீமத் பகவத் கீதைக்கு உரை எழுதிய ஸ்ரீ அண்ணா அவர்கள் கீழ்கண்ட மேற்கோள்களைத் தருகிறார்:
உத்திஷ்ட – இது துக்கத்தில் ஆழ்ந்த ஜீவனைத் தட்டி எழுப்பும் மந்திரம்

உத்திஷ்டத, ஜாக்ரத, ப்ராப்யவரான் நிபோதத = எழுந்திரு! விழித்துக் கொள்! குறிக்கோளை அடையும் வரை ஓயாது செல்! (கடோபநிஷத்)

இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம் – ஆண்டாள் திருப்பாவை

Contact swami_48@yahoo.com

Please read my earlier posts:
On Gita: 1.One Minute Bhagavad Gita 2. Bhagavad Gita through a Story
3.Bhagavad Gita in Tabular Columns 4. 45 commentaries on Bhagavad Gita 5. G for Ganga….. Gayatri…… Gita…. Govinda…
6.A to Z of Bhgavad Gita (Part 1 and Part 2) 7. Krishna’s Restaurant in Dwaraka: Hot Satwik Food Sold! 8. Krishna’s List of 26 Divine Qualities! (post 721 Dt.24/11/13) 9. கண்ணன் கூறும் 26 தெய்வீக குணங்கள் (Post 727, Nov.30, 2013)

On Bharati: 1.சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே! 2.பாரதியின் பேராசை 3.பாரதியுடன் 60 வினாடி பேட்டி 4.பயமே இல்லாத பாரதி 5.பாரதி பாட்டில் பகவத் கீதை 6.பாரதி வாழ்க
7.பாரதி நினைவுகள் 8.பாரதி பாட்டில் பழமொழிகள்
(9) பேய்கள் பற்றி பாரதி & விவேகாநந்தர் (10) சிட்டுக் குருவி! சிட்டுக் குருவி! சேதி தெரியுமா? (11) வாழ்க்கையில் வெற்றி பெற பாரதி ‘அட்வைஸ்’ (741 posted Dec.10) 12) பாரதி தரிசனம்.

Leave a comment

Leave a comment