பிரம்மாவின் 29 பெயர்கள்!

brahma stamp
Stamp for Brahma issued by France

Research paper written by London Swaminathan
Research article No.1424; Dated 21 November 2014.

“பிரம்மா பற்றிய விஞ்ஞான உண்மைகள்” என்ற தலைப்பில் கட்டுரையின் முதல் பகுதி நேற்று வெளியாகியது. அதைப் படித்துவிட்டு இதைப் படிக்கவும்.
அமரகோசம் என்ற வடமொழி அகராதி உலகில் தோன்றிய முதல் அகராதி—நிகண்டு ஆகும். ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இந்த அகராதியில் பிரம்மாவுக்கு 29 பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஏனைய கடவுளருக்கு

சிவனுக்கு 52 பெயர்களும்
விஷ்ணுவுக்கு 46 பெயர்களும்
பலராமனுக்கு 17 பெயர்களும்
அம்பாளுக்கு 21 பெயர்களும்
லெட்சுமிக்கு 14 பெயர்களும்
கணபதிக்கு 8 பெயர்களும்
முருகன்/ ஸ்கந்தனுக்கு 17 பெயர்களும்
இந்திரனுக்கு 35 பெயர்களும்
அக்னிக்கு 34 பெயர்களும்
யமனுக்கு 14 பெயர்களும்
வருணனுக்கு 5 பெயர்களும்
வாயுவுக்கு 20 பெயர்களும்
குபேரனுக்கு 17 பெயர்களும்
சூரியனுக்கு 37 பெயர்களும்
மன்மதனுக்கு 19 பெயர்களும்
ஜினதேவனுக்கு 18 பெயர்களும்
புத்தபகவனுக்கு 7 பெயர்களும்

கொடுக்கப்பட்டுள்ளன. இதற்கு ஒன்பதாம் நூற்றாண்டு முதல் பல உரைகள் எழுந்தன. அவைகளைப் படித்தால் சம்ஸ்கிருதத்தையும் இந்து மதத்தை யும் “ஓரளவுக்கு அறிந்ததற்குச் சமம்”.

museum brahma

பிரம்மாவின் பெயர்களை மட்டும் இன்று காண்போம்:

1.பிரம்மா= மூச்சுக்காற்றை அளிப்பவர்; பெரியவர்
2.ஆத்மபூ= தான் தோன்றி
3.சுரஜேஷ்ட= தேவர்களில் மூத்தவர், பெரியவர்
4.பரமேஷ்டி= பெரிய ஆசையான மோட்சத்தை தருபவர்; யாகத்தால் பூஜிக்கப்படுபவர்; இதய தாமரையில் வீற்றிருப்பவர்.
5.பிதாமஹர்= பாட்டனார்
6.ஹிரண்யகர்ப்பர்= தங்க முட்டை (யிலிருந்து வந்தவர்)
7.லோகேச= மக்கள் ஈசன், உலகு இயற்றினான்
8.ஸ்வயம்பூ= தான் தோன்றி (இது ஸ்வயம்பூ லிங்கமாகத் தோன்றும் சிவ பெருமானுக்கும் உள்ள பெயர்)
9.சதுரானானன= நான்முகன் ( நாற்புறமும் பார்வை உடையவர் )
10.தாதா = உயர் தலைவன்
11.த்ருஹினஹ= படைப்போன்
12.அப்ஜயோனி = தாமரையில் உதித்தோன்
13.கமலாசன = தாமரையில் அமர்ந்தோன்

14.ஷ்ரஷ்ட= உலகைப் படைத்தோன்
15.பிரஜாபதி= மக்களை உருவாக்கியவன்; படைத்தோன்
16.வேதா= வேதம் உடையோன்
17.விஸ்வஸ்ரு = எல்லாம் அறிந்தவன் (கேட்பவன்)
18.விதாதா= உயர் தலவன்
19.விதி = வேதம் உடையவன்; விதிகளை எழுதுபவன்
20.நாபிஜன்ம= நாபியில் (தொப்புள்) உதித்தோன்
21.பூர்வ= முன்னோன்
22.கமலோத்பவ = தாமரையில் உதித்தோன்
23.சதானந்த = எப்போதும் மகிழ்பவன்
24.நிதன = ( மரணம் எனப் பொருள்; ஆயினும் பிரம்மாவுக்கு இது எப்படிப் பொருந்தும் என்று தெரியவில்லை)
25.ரஜோ மூர்த்தி = ரஜோ குணம் உடையவர்
26.சத்யக = உண்மை விளம்பி
27.ஹம்சவாஹன; அன்னப் பறவை வாஹனம் உடையோன்
28.விரிஞ்சி = உலகைப் படைத்தோன்
29.அண்டஜ= முட்டையில் உதித்தோன்

guimet-brahma-from-cambodia
Brahma from Cambodia, Museum Guimet, Paris

அமரகோஷம் போன்ற நிகண்டுகள் பெரிய விஷயங்களையும் அழகாக மனப்பாடம் செய்யும் வகையில் பாடலாக எல்லாவற்றையும் கொடுத்து விடும். இதோ பிரம்மாவின் 29 பெயர்களும் அடங்கிய அமரகோச ஸ்லோகம்:

பிரம்மாத்மபூ: ஸூரஜ்யேஷ்ட: ப்ரமேஷ்டி பிதாமஹ:
ஹிரண்யகர்ப்போ லோகேஸ: ஸ்வயம்பூஸ் சதுரானன

தாதா அப்ஜயோனி த்ருஹிர்ணோ விரிஞ்சி கமலாசன:
ஸ்ரஷ்டோ ப்ரஜாபதிர் வேதா விதாதா விஸ்வஸ்ருத் விதி:

நாபிஜன்மாண்டஜ: பூர்வோநிதன: கமலோத்பவ:
ஸதானந்தோ ரஜோமூர்த்தி சத்யகோ ஹம்சவாஹன

இந்தப் பெயர்களைத் தவிர அவருக்கு வேறு சில பெயர்களும் உண்டு. உலகம் முழுதும் பிரம்மா வழிபாடு இருக்கிறது. இந்தியாவில் ராஜஸ்தானில் உள்ள புஷ்கர் என்னும் இடத்தில் பூஜிக்கப்படுகிறார். மற்ற எல்லாக் கோவில்களிலும் சிலை உண்டு. தென் கிழக்காசிய நாடுகள் முழுதும்— குறிப்பாக கம்போடியா, இந்தோ நேசியாவில் நிறைய சிலைகள் உள்ளன. பால்டிக் நாடுகளில் இவர் ‘’ஸ்வேதோவித்’’ என்ற பெயரில் வழிபடப்படுகிறார். இவருடைய நாலு முகங்கள் நால்திசைகளையும் பார்ப்பதால் இப்பெயர். வெள்ளை நிறத்தவர் என்ற பொருளும் உண்டு. இந்தியாவில் எல்லாப் பெரிய கோவில்களிலும் பிரம்மா இருக்கிறார். எகிப்தில் ‘’பிதா’’ என்ற பெயரில் பிரம்மா இருக்கிறார் (மாதா பிதா இன் ஈஜிப்ட் என்ற என் ஆங்கிலக் கட்டுரையில் மேல் விவரம் காண்க)

brahma-temple7
Brahma’s Temple at Pushkar, Rajasthan

பிரம்மாவின் ஐந்தாவது தலை சிவனால் கிள்ளி எறியப்பட்டது. நான்கு கைகளில் ஜபமாலை, வேதப் புத்தகம், கமண்டலம், யாகக் கரண்டி வைத்திருப்பார். மனைவி சரஸ்வதி — இவருக்கு அன்ன வாகனம். அவர் உடல் செந்நிறம். ஆயினும் வெள்ளை வஸ்திரம் தரித்து இருப்பார். வரம் கொடுப்பதில் தயாள குணம். ராமனுக்கு மட்டுமின்றி, பலி, ராவணன் ஆகிய ராக்ஷசர்களுக்கும் வரம் கொடுத்தவர்.

சதபத பிராமணம் என்னும் நூலில் பல அடையாளபூர்வ கதைகள் உள்ளன. பிரம்மா — ‘’பூர்’’ என்று சொன்னவுடன் பூமியும் ‘’புவர்’’ – என்று சொன்னவுடன், காற்றும், ‘’ஸ்வர்’’ என்று சொன்னவுடன் வானமும் உருவானதாக சதபதப் பிராமணம் கூறும்.

படைப்புத் தொழில் செய்தபின் அவர் அலுப்பால் படுக்கவே எலும்புகள் விலகி மூட்டு வலி ஏற்பட்டது ஆயினும் பின்னர் சரியானது. அக்னிஹோத்ரம் என்னும் யாகத்தால் அவர் மூட்டுகள் ஒன்று சேர்ந்து அவர் பலம் பெற்றார் என்றும் சதபதம் கூறும். இந்த விலகிப்போன மூட்டுகள் எலும்புகள் ஆகியன ‘’காலம்—பருவங்கள்’’ எனப் பொருள்படும். சங்கேத மொழியில் பேசுவது ரிஷிகளுக்கு மிகவும் பிடிக்கும் என்று வேதமே சொல்லுகிறது

prambanan
Brahma’s Temple ta Prambhanan, Indonesia

பிரம்மன், பிராமணன், பிரம்மா

பிரம்மன், பிராமணன், பிரம்மா ஆகிய மூன்றும் வெவ்வேறு பொருள் உடையவை. பிரம்மம் என்பது கடவுள்; பிராமணன் என்பது ஜாதிப் பெயர்-பிரம்மத்தை நாடுவதே அவன் வாழ்க்கையின் லட்சியம்., பிரம்மா என்பவர் மும்மூர்த்திகளில் ஒருவர். இது தவிர ‘’பிராமணம்’’ என்ற நூல் வேத இலக்கியத்தில் சம்ஹிதைகளைத் தொடர்ந்து வந்த இலக்கியங்கள்.

பிரம்மாவுக்கு தனி வழிபாடு, பூஜை- புனஸ்காரங்கள் இல்லாவிடினும் துதிப்பாடல்களிலும், பஜனைப்பாடல்களிலும் திரி மூர்த்திகளின் பெயர்களில் அவர் பெயரும் சேர்ந்தே வரும். சுசீந்திரம் போன்ற இடங்களில் தான்+மால்+ அயன் என்ற பெயரில் கடவுள் வணங்கப் படுகிறார். பிரம்மாவின் வாய் — இடைவேளை இன்றி வேதத்தை ஒலிபரப்பும் வேத ஒலிபரப்பு ரேடியோ ஸ்டேஷன் — ஆகும். அவர் எப்போதும் வேதமுழக்கம் செய்தவண்ணம் இருப்பார்.

வேதத்தில் இவர் பெயர் பிரஜாபதி, வால்மீகி ராமாயணத்தில் பிரம்மா என்ற பெயருடன் வலம் வருகிறார். சிவனுடைய அடி முடி தேடிய படலத்தில் பொய் சொன்னதால் வழிபாடு இல்லாமற் போனது என்பர்.

யசோதர்மன் என்பவன் கி.பி. 533ல் வெளியிட்ட மாண்டசோர் கல்வெட்டில் படைப்போன், காப்போன், அழிப்போன் ஆகிய மூவரும் பிரம்மாவே என்று சொல்லி இருக்கிறார்.
பிரம்மா வாழ்க! பிரம்மம் வாழ்க! பிரம்மத்தை நாடும் பிராமணர்கள் வாழ்க! பிராமணம் என்னும் நூல்கள் வெல்க!!
brahma (1)halebedu
Brahma at Halebedu, Karnataka.

Except my Brahma stamp photo all other pictures are taken from different websites; thanks.

-சுபம்-

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: