
Compiled by London swaminathan
Date: 15 December 2015
Post No. 2391
Time uploaded in London :– 5-50 am
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
Following jokes were taken from 100 year old Tamil book Vinotha Vikata Chintamani; Book given by S Srinivasan of Chennai.
ஒரு எருமைக்கு இரண்டு எருமை இருக்கும்!
ஒருவன் ஒரு உபாத்தியாயரிடம் சென்று, “ஐயா! எமது பையனைப் படிக்க வைக்க மொத்தச் செலவு என்னவாகும்?” என்றான்
50 ரூபாய் ஆகும் என்று வாத்தியார் சொல்ல அதற்கவன், “ஐயோ! அந்த ஐம்பது ரூபாயிருந்தால் ஒரு எருமைமாடு வாங்குவேனே” என்றான். அதற்கு உபாத்தியாயர், “வாங்கு,வாங்கு, வாங்கினால் ஒரு எருமைக்கு இரண்டு எருமை உன் வீட்டில் இருக்கும்” என்றார்.
Xxx
ஒரு கணக்கு
உபாத்தியாயர் பையன்களைப் பார்த்து, “இந்தக் கணக்கு தெரியவில்லையா? உங்கள் நால்வருக்கும் 100 வாழைப்பழம், 60 கொய்யாப்பழம் கொடுத்துவிட்டால், ஒவ்வொருவனுக்கும் என்ன வரும்?” என்று கேட்டார்.
சிறு பையன்:- வயிற்று வலி வரும்!

Xxx
சம்பாஷணை
மகன்:- நம்ம வீட்டில் பேசும் பாஷைக்கு தாய் மொழி என்று ஏன் கூறுகிறார்கள்?
தகப்பன்:- ஏனெனில் வீட்டில் தகப்பன் பேச்சை யாரும் ஏற்காததால் அப்படியாயிற்று.
Xxx
யார் வீரன்?
ஒரு வீரன் “நான் ஆயிரம் பேருடைய கால்களை வெட்டி வந்திருக்கிறேன், பாருங்கள்” என்றான்.
சூரன்: அடே, முட்டாள்! தலையை வெட்டுவதல்லவோ சுத்த வீரத்தனம்?
வீரன்: அதற்கு நானென்ன செய்வேன்? முன்னமேயே ஒருவன் தலைகளையெல்லாம் வெட்டிக்கொண்டு போய்விட்டானே” என்றான்.
Xxx
தடையென்ன பத்தியம் சொல்
இறக்கும் தருணத்திருக்கிற ஒரு பிராமணனருகில் பந்துக்கள் சேர்ந்து, ஓய்! சாஸ்திரிகளே! தாங்கள் பெரியவாள், எல்லாம் அனுபவித்தாயிற்று. சந்நியாசம் வாங்கிக்கொள்ளுங்கள்” என்றார்கள். அதற்கந்த ரோகி, “ஆஹா, ரொம்ப சரி, அதற்குத் தடையில்லை. பத்தியமென்ன?சொல்லுங்கள்” என்றார்
Xxx

காப்பி கிளப் கல்யாணமய்யன்
ஒரு காப்பிக் கிளப்பில் ஜம்பக்கார சாஸ்திரியார் ஒரு சேர் அல்வா வேண்டும் என்று கேட்டார். கல்யாணமய்யன் கட்டிக் கொடுக்கவே, அதற்குச் சாஸ்திரியார், அல்வா வேண்டாம், ஜிலேபி கொடு என்று திருப்பிக் கொடுத்துவிட்டார்.
ஜிலேபி கட்டிக்கொடுத்தவுடனே அதை வாங்கிக் கொண்டு, அவர் மெள்ள மெள்ள பொடி நடையாகச் சென்றார். ஓய், சாஸ்திரிகளே! ஜிலேபிக்கு ரூபய் தரவில்லையே என்று கல்யாணமய்யன் கேட்க, ஜிலேபிக்குப் பதிலாக அல்வா கொடுத்தேனே என்றார். ஓய், அல்வாக்குப் பணம் எங்கே? என்று கல்யானமய்யன் கேட்க, சாஸ்திரியார், அல்வா நான் வாங்கவில்லையே என்று சொல்லிவிட்டுச் சென்றார்.
Xxxx
சொக்காய் தைக்கும் சுப்பிரமணிய மேஸ்திரி
ஒருநாள் சுப்பிரமணிய மேஸ்திரி என்னும் தையல்காரன், தன் மனைவிக்கு ரவிக்கை தைத்துக் கொண்டிருக்கும்போது அதில் அரைகஜம் துணி எடுத்துப் பதுக்கி வைத்தான். கதவுக்கு மறைவில் நின்று அதை பார்த்துக் கொண்டிருந்த மனைவி, “ஏன் அப்படி செய்தீர்கள்?” என்றாள்.
அதற்கு மேஸ்திரி வழக்கம் மாறாதிருக்கும் பொருட்டும், மறவாதிருக்கும்பொருட்டுமே அப்படிச் செய்தேன் என்று பதில் சொன்னான்.
Xxx
குதிரையும் கழுதையும்
ஒரு ஊரில் ஒரு நீதிபதியும் வக்கீலும் மிக நேசமாயிருந்தனர். அவர்கள் காப்பி சாப்பிடப் போகும்போது
நீதிபதி: ஹலோ மிஸ்டர் அரிகரய்யர்வாள்! நாமிருவரும் கழுதையும் குதிரையுமாய் மாறும்பக்ஷத்தில் நீங்கள் எதுவாகவெண்டுமென்று கோருவீர்கள்?
வக்கீல்: – இதைக் கேட்கவும் வேண்டுமா? சந்தேகமின்றி கழுதை ஜென்மமே கோருவேன்
நீதிபதி:– ஏன் அவ்விதம் கோருவீர்?
வக்கீல்:- கழுதைக்கு ஒருதடவையாவது நீதிபதி பதவி கொடுத்திருக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம். ஆனால் குதிரைக்குக் கொடுத்ததாகக் கேட்டதேயில்லை.
-சுபம்–
You must be logged in to post a comment.