கருகத் திருவுளமோ? (Post No. 2589)

green field, hare krsna

Written by S Nagarajan

 

Date: 2 March 2016

 

Post No. 2589

 

Time uploaded in London :–  6-00 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

நாட்டு நடப்பு

கருகத் திருவுளமோ?

 

ச.நாகராஜன்

 

கெட்டதிலும் நல்லதைப் பார் என்று கூறுகின்றன ஹிந்து அற நூலகள்.

 

இது சாத்தியம் தானா? முயல்கிறோம். பார்க்கிறோம்!

சமீபத்தில் ஜவஹர்லால நேரு பல்கலைக் கழகத்தில் தலை தூக்கி கோர தாண்டவம் ஆடிய சக்திகள் இரண்டு விஷயங்களை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளன:

 

 

  • தாங்கள் தேச துரோக சக்திகள் என்பது.
  • தாங்கள் ஹிந்து விரோத சக்திகள் என்பது.

 

 

இந்த இரண்டையும் இணைத்து ஒரு தூண்டுதலைச் செய்தால் ஆங்காங்கு விதைக்கப்பட்டிருக்கும் இந்த தீய சக்திகளின் ஆதரவுகள் தலை தூக்கி ஆடும் என்பது இவர்களின் எதிர்பார்ப்பு.

ஆனால் இந்தக் கெடுதலிலும் ஒரு நல்லதையே நாம் பார்க்கிறோம்.

 

 

நமது நாட்டின் இராணுவம் உலகின் தலை சிறந்த ராணுவம் என்றாலும் தனித் தனியாக தேச துரோக சக்திகளை இனம் காண நாட்கள் ஆகும்.

 

 

நமது நாட்டின் போலீஸ் அற்புதமான நுண்ணறிவுத் துறையைக் கொண்டிருக்கிறது என்றாலும் அதால் கூட அனைத்து ரவுடிகளையும் தேச துரோக சக்திக்ளையும் ஒரே இடத்தில் கூட வைக்க முடியாது.

 

இந்த அரிய காரியத்தை ஜவஹர்லால நேரு பல்கலைக் கழகம் செய்துள்ளது.

 

ஜவஹர்லால் நேருவுக்கு நன்றி. அவர் வாரிசுக்கு வாரிசு வழை வந்த ராகுல் காந்திக்கு நன்றி.

 

ஏன்?

 

இந்த நிகழ்வு மூலம் இவர்களை ஆதரிக்கும் தீய சக்திகள் எங்கெல்லாம் ஒளிந்திருக்கின்றன என்பதையும் சுலபமாகத் தெரிந்து கொள்ள முடிந்து விட்ட்து.

 

ஜவஹர்லால நேரு தந்த வாரிசுச் செல்வம் தேசத் துரோகிகளை நேரில் சென்று பார்த்து ஆதரவை வழங்கியது தீய சக்திக்குத் துணை போவது என்ற குற்றத்தின் பால் படாதா?

 

இந்த தேச துரோகிகளை ஆதரிக்கும் ஊடகங்களை சுலபமாக இப்போது அறிய முடிந்து விட்டதே!

field, HT

இதற்கு வரிந்து கட்டும் காம்ரேடுகள் எங்கெல்லாம் பாக்கட் பாக்கட்டாக குழுமி இருக்கிறார்கள் என்பது தெரிந்து விட்டதே!

மொத்தத்தில் தேச துரோக செயல்களைத் தூண்டி விடும் மோசமான அறிவு ஜீவிகள், அன்னிய சக்திகளிடமிருந்து பணமும் தளவாடமும் வாங்கி இந்த நாட்டைத் துண்டாட நினைக்கும் சதிகாரர்கள் ஆகிய அனைவரையும் நன்கு இனம் காண முடிகிறதே!

 

சாமர்த்தியமாக இதை காங்கிரஸ் ப்ளஸ் கம்யூனிஸ்டுக்கும்  பாரதீய ஜனதாவிற்கும் உள்ள கருத்து மோதலாகச் சித்தரிக்கப் பார்த்தால் அந்த  ஊடகங்களை மக்கள் ஒரேயடியாகப் புறக்கணித்து அழித்து விடுவர்.

 

ஏனெனில் கற்பில் ஒரு சதவிகிதக் கற்பு 99 சதவிகிதக் கற்பு என்று கிடையாது. கற்பு என்றால் அது 100 சதவிகிதம் தான்!

அதே போல,

 

தேச பக்தியிலும் விகிதாசார பக்தி கிடையாது.

தேச பக்தி என்றால் அதில் 100 சதவிகிதம் அலுங்காமல் குலுங்காமல் அப்படியே இருக்கும்.

 

இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கித் தர பாடுபட்ட காங்கிரஸ் இன்று இருக்கலாம். ஒரு வேளை காந்திஜியின் கனவை மெய்ப்பிக்க நாளையே இல்லாமல் போகலாம்.

 

பி.ஜே.பி என்பது சில காலம் முன்னால் ஜனதா கட்சி. அதற்கும் முன்னர் ஜன சங்கம். நாளை ஒருவேளை இதன் பெயர் இன்னமும் ஒரு முறை மாறலாம். ஆனால் மக்கள் இந்தக் கட்சிகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு தேசத்தை நேரிக்கிறார்கள்..

இன்று பிஜேபிக்கு இந்தியாவே ஒட்டு மொத்தமாகத் தரும் ஆதரவு அந்தக் கட்சிக்காக அல்ல; இந்த தேசத்திற்காக.

இந்த தேசத்தை எதிர்க்கும் தீய சக்திகளை அகற்றுவதற்காக.

இந்த தீய சக்திகளுக்கு காங்கிரஸும் காம்ரேடுகளும் துணை போவார்கள் என்றால் அவர்களை மக்கள் புறக்கணித்துப் புறம் தள்ளி விடுவார்கள்.

 

சட்டம் இவர்கள் மீது தன் கடமையைச் செய்யட்டும்.

யாரோ ஒருவர் பாதிக்கப்பட்டார் என்பதைக் கண்ட நீதி அரசர் சுமோடோ அடிப்படையில் தானே வழக்கைப் பதிவு செய்கிறார்.

மாபெரும் தேசத்திற்கு எதிராக சில சின்ன பொடிசுகள் ஆட்டம் ஆட நினைக்கும் போது அதற்குத் தூபமிட ‘பெரிய தல’கள் முன் வரும் போது நாட்டின் உச்ச நீதி மன்ற நீதியரசர்கள் தாமே வழக்கைப் பதிவு செய்து விடலாமே

 

இதை சமீபத்தில் 33 வருடம் கழித்துத் தீர்ப்பளித்ததைப் போலத் தீர்ப்பளிக்க கூடாது. ஒரு சில நாட்களிலேயே விசாரித்து இந்த தீமையைச் செய்தவர்களுக்கும் ஆதரவு அளித்தோருக்கும் எதிர்மறை ஊடக சக்திகளுக்கும் தண்டனை விதிக்க வேண்டும்.

டிவி சானல்களை உடனடியாக மூடி விட உத்தரவிட வேண்டும்.இதற்கென அப்பீலுக்கும் தடை விதிக்க வேண்டும்.

 

கட்சிகளை விட தேசம் பெரிது! தேசத்திற்கென பாடுபடும் கட்சிகள் மட்டுமே நிலைக்கும் அல்லாதவை அகலும்  அல்லது அழியும்.

 

இந்த வகையில் தேசத்தைக் காக்கும் பிஜேபிக்கு மக்களின் நல்லாதரவு கூடுகிற; இன்னும் கூடும்.

 

ஜ.நே.ப. போன்றவை இந்தியாவிலிருந்து அகலும். இனியும் தேச துரோக சக்திகளை அனுமதிக்க முடியாது.

 

தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா?

இப்பயிரைக் கண்ணீரார் காத்தோம்

கருகத் திருவுளமோ?

கருக விடமாட்டோம்!

ஃபேஸ் புக் நல்லனவற்றைப் பரப்ப ஒரு நல்ல சக்தி. அதன் மூலம் வலுவான இந்தியவை உருவாக்குவோம். தேச துரோகிகளை இனம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்துவொம்.

Leave a comment

Leave a comment