தினகர, ருசிகர, சஸிகர, கடகர, ரதகர, மதுகர: –சம்ஸ்கிருத மொழி அழகு (Post No.2856)

papanasam sivan 1

Compiled by london swaminathan

 

Date: 31 May 2016

 

Post No. 2856

 

Time uploaded in London :– 8-25 AM

 

(Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Contact : swami_48@yahoo.com

 

சம்ஸ்கிருதம் என்பது செம்மை செய்யப்பட்ட மொழி; சம்ஸ்கிருதம் என்றாலே நன்கு செய்யப்பட்டது எனப் பொருள்; 2700 ஆண்டுகளுக்கு முன்னரே பாணினியால் இலக்கணம் பெற்ற மொழி. அவருக்கு முன்னால் இருந்த இலக்கண கர்த்தாக்களின் நீண்ட பட்டியலும் உள்ளது. அப்படியானால் எவ்வளவு பழமை என்று தெரிந்து கொள்ளலாம்.அதற்கும் முன்பாக இருந்த பழைய மொழி வேத கால சம்ஸ்கிருதம்.

இன்று சங்க காலத் தமிழ் மொழியை நாம் புரிந்துகொள்ள உரைகாரர்களின் உரை தேவைப்படுகிறது. 2000 ஆண்டுகளில் நம் தமிழ் மொழி மாற்றம் அடைந்தது போல, பாணினி காலத்துக்குள் வேதகால சம்ஸ்கிருதம் புத்துருப் பெற்றுவிட்டது.

 

சம்ஸ்கிருதம் பழைய மொழி மட்டுமல்ல. அழகான மொழியும் கூட. சொல்லாக்க முறையைத் தெரிந்துகொண்டு விட்டால் புதிய சொற்களை நாமே உருவாக்கலாம். வேர்ச் சொல்லின் பொருளும் வினைச் சொற்களின் வடிவமும் தெரிந்துவிட்டால், அகராதி தேவையே இல்லை. பொருளை நாமே கண்டுபிடித்து விடலாம்.

p sivan 2

தமிழ் இசை மன்னன் பாபநாசம் சிவன் அவர்கள் வடமொழிச் சொற்கடல் என்ற ஒரு நூலில் சம்ஸ்கிருதச் சொற்களை புதிய முறையில் அழகு படத் தொகுத்துள்ளார். அந்த மொழியின் அழகை விளக்க சில சொற்களை மட்டும் காண்போம்:–

கரம் என்றால் கை; கையால் செய்யப்படுவது காரியம். கர என்ற விகுதியைக் கொண்டு முடியும் சொற்களின் அழகைப் பாருங்கள்:–

சுககர:= இன்புறச் செய்பவன்

ருசிகர:= இனிமை அளிப்பது

சுசிகர:= சுத்தம் செய்பவன்

கஜகர:= துதிக்கை, விக்னேச்வரன்

கடகர:= குயவன் (கடம்/பானை செய்பவன்)

ஹிதகர: = நன்மைசெய்பவன்

ரதிகர: = பிரியத்தை அளிப்பவன்

ரதகர: = தேர் செய்பவன் (ரதகாரன்)

மதுகர: = தேனீ (மதுவைச் செய்வது)

தினகர:= சூரியன் (பத்திரிக்கையின் பெயர்)

அனுகர: = உதவி செய்பவன்

லிபிகர:= கணக்குப் பிள்ளை

சுபகர:= க்ஷேமம் தருபவன் (ஜோதிடத்தில் சுபகாரன் யார் என்று சொல்லுவர்)

ஹிமகர: = சந்திரன் (குளிர்ச்சி தருபவன்)

பரிகர:= பரிவாரம், கட்டில், கூட்டம்

அவகர: = குப்பை

சவிகர: = சோபை/அழகு தருவது

சசிகர:= சந்திர கிரணம்

அஸிகர: = வாள் பிடித்தவன்

ரவிகர: = சூரிய கிரணம் (ரவி= சூரியன்)

வசிகர= ஆகர்ஷண சக்தி (வசீகரம்)

நிசிகர:= நிலவு

அசுகர: = செயற்கரிய செயல்

பசுகர:= செல்வம் தருவது

பஹுகர:= பல கை உடையான்; நகர சுத்தி செய்பவன்

அஜகர: = பெரிய பாம்பு

 

 

ஜலதர, ஹலதர, சசிதர, விஷதர

இதே போல ‘தர’ என்பது தரிப்பவன், தாங்குபவன் எனப்பொருள்படும்:-

நகதர:= கண்ணன்; ம்ருகதர:= சந்திரன் ( மானைத் தாங்குபவன்); ஜலதர: = மேகம் (நீரைத் தாங்குபவன்); ஹலதர:= பலராமன் (கலப்பையைத் தாங்குபவன்); சசதர: = சந்திரன் (முயல் தாங்கி); சசிதர: = சிவன் (பிறை அணிந்தவன்); விஷதர: = பாம்பு (விஷம் தாங்கி); மஹிதர: = மலை.

 

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

 

மடாதிபதி, ஜனாதிபதி போன்ற சொற்களை நாம் தமிழிலும் பயன்படுத்துகிறோம். அதிபர், அதிப என்பதெல்லாம் தலைவன் என்ற பொருளில் வரும்; இதோ சில எடுத்துக் காட்டுகள்:-

அகாதிப:, நகாதிப:= இமயமலை; ககாதிப: = கருடன்; ம்ருகாதிப: = சிங்கம்; மடாதிப: = மடாதிபதி; கணாதிப: = கணபதி (கணங்களின் தலைவன்); மதாதிப: = மதத்தின் தலவன்; ஜனாதிப: = அரசன்; தினாதிப: = சூரியன்; தனாதிப:= குபேரன் (தனத்திற்கு அதிபதி);தராதிப:, நராதிப: = ராஜா (நரர்களுக்குத் தலைவன்); சுராதிப:= சுரர்களுக்கு/ தேவர்களுக்குத் தலைவன் இந்திரன்); தசாதிப:=ஒன்பது கிரகங்கள்; திசாதிப; = திக்குகளின் தலைவன்; நிசாதிப: = நிசி/ ரவின் தலைவன்/சந்திரன்.

ஆதாரம்:- வடமொழிச் சொற்கடல், தொகுத்தவர்- பிரும்ம ஸ்ரீ பாபநாசம் சிவன், வெளியீடு—டாக்டர் ருக்மிணி ரமணி, 30, கிருபா சங்கரி தெரு, சென்னை- 600 033, விலை ரூ 150; வருடம்- 2000 (முதல் பதிப்பு 1954)

(வடமொழி பயில விரும்புவோர் வாங்க வேண்டிய நூல்)

 

எனது முந்தைய ஆராய்ச்சிக் கட்டுரைகள்

சம்ஸ்கிருதத்தைக் கண்டு உலகமே வியப்பது ஏன்? (ஜூலை 4, 2015)

பாணினி மாஜிக்!! Panini Magic!! ( 7-4-2015)

பாரதியை வியக்கச் செய்த சிவபக்தன் – உலக மஹா அறிஞன் பாணினி! (19-2-2015)

கடவுள் தந்த இரண்டு மொழிகள் (13 நவம்பர் 2014)

தமிழும் சம்ஸ்கிருதமும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்! (20-12-2014)

 

p sivan 3

–சுபம்—

 

 

 

Leave a comment

4 Comments

  1. Surendhra Kumar Sundaramoorthy's avatar

    இந்த புத்தகம் கிடைக்குமா? எங்கு வாங்கலாம்? ஆன்லைனில் உண்டா?

  2. Tamil and Vedas's avatar

    I dont think you can get it online. Contact the Publishers, please.

  3. Tamil and Vedas's avatar

    I HAVE GIVEN THE FULL ADDRESS IN THE WRAPPER PICTURE. PLEASE TRY THAT.

  4. Tamil and Vedas's avatar

    ADDRESS IS IN THIS POST
    லண்டனில் பாபநாசம் சிவன் விழா! (Post No …
    https://tamilandvedas.com/…/லண்டனில்-பாபநாசம…
    Translate this page
    28 May 2019 – லண்டனில் பாபநாசம் சிவன் விழா! (Post No. 6452). Written by London Swaminathan. swami_48@yahoo.com … Related. லண்டனில் பஞ்சாங்க படனம்! பஞ்சாங்கம் ஒரு …

Leave a comment