உலகின் அதிசய நூல் யோக வாசிஷ்டம் ! – 2 (Post No.2880)

Yoga_vasistha_of_valmiki_medium

Article written by S.NAGARAJAN

 

Date: 9 June 2016

 

Post No. 2880

 

Time uploaded in London :–  5-28 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

ச.நாகராஜன்

 

 

யோக வாசிஷ்டத்தில் சிக்கலான கேள்விகளுக்கான பதில்கள் அனைத்தும் உள்ளன என்பதை எப்படி நம்புவது என்று ஒருவர் கேள்வி கேட்டால் அது நியாயமான கேள்வி தான்.

ஏனெனில் அதீதமாகப் புகழ்வது என்ற வரிசையில் இந்த மொழி உரைக்கப்படவில்லை என்பதை நிரூபிக்க வேண்டியது சொல்பவரின் கடமை அல்லவா?

 

 

இதற்கு இரண்டு விஷயங்களை எடுத்துக் கொள்ளலாம் – ஒரு பானை சோறுக்கு ஒரு பதம் என்பது போல.

 

முதலாவது யோகவாசிஷ்டத்தில் சொல்லப்பட்டுள்ள அபூர்வமான விஷயங்கள்.

 

இவற்றை அறிவியல் கண்டுபிடித்து நிரூபிக்க பல ஆயிரம் ஆண்டுகள் ஆகலாம்!

 

இரண்டாவது யோக வாசிஷ்டத்தில் சொல்லப்பட்டுள்ள பல்வேறு கருத்துக்களை உலகின்  மாபெரும் மேதைகள் என்று கருதப்படுபவர்கள் அப்படியே எடுத்துரைப்பது தான்.

இப்படிப்பட்ட மேதைகள் தனித்தனியே வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு சொற்கள் வெவ்வேறு நாட்டில் வலியுறுத்திக் கூறியிருப்பதை ஒரே நூலில் அழகாக, கோர்வையாக படிக்க முடிகிறது என்றால் அந்த நூலின் மகிமையை வேறு எப்படிச் சொல்ல முடியும்.

 

 Six Major Sections of Yoga Vasis

அது சந்தேகமில்லாமல் அதிசய நூல் தானே!

எந்தெந்த மேதைகள் எந்தெந்த கருத்துக்களைக் கூறியுள்ளார் என்று ஆராயப் புகுந்தால் அது ஒரு பெரிய புத்தகமாக மிளிரும்.

 

 

அப்படிப்பட்ட அரிய ஆராய்ச்சியை ஒருவர் செய்து புத்தகமாகவும் வெளியிட்டு விட்டார் என்பது அரிய ஒரு சுவையான செய்தி தானே!

 

 

பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் தத்துவப் பேராசிரியராகப் பணியாற்றிய திரு பி.எல். ஆத்ரேயா யோகவாசிஷ்டா அண்ட் மாடர்ன் தாட் (Yoga Vasistha and Modern Thougtu by B.L.Atreya) என்ற அரிய ஒரு நூலை எழுதியுள்ளார். 1934ஆம் ஆண்டு வெளிவந்துள்ள இந்த நூலைப் பாராட்டாதோர் கிடையாது; மேற்கோள் காட்டாத அறிஞர்கள் இல்லை.

 

 

இந்த நூலில் சுமார் 158 பேரறிஞர்களின் கருத்துக்களை யோக வாசிஷ்டக் கருத்துக்களுடன் பி. எல் ஆத்ரேயா ஒப்பிட்டுக் காட்டியுள்ளார்.

 

 

ஜேம்ஸ் ஆலன், அன்னி பெஸண்ட், பால் ப்ரண்டன், அலெக்ஸாண்டர் கானான், பெர்சி கால்ஸன், வீட்லி கேரிங்டன்,எட்வர்ட் கார்பெண்டர், ஜாகுவஸ் கார்னோவா, ஈ.எஸ்.காங்க்ளின்,எஃப் .சி. கான்ஸ்டபிள்,   ஜெரால்டின் காஸ்டர், டேம்பியர் வேதம், சார்லஸ் ஜில்பெர்ட்  டேவின், ஷா டெஸ்மாண்ட், சர் ஆர்தர் எடிங்டன், எமர்ஸன்,எட்வ்ர்ட் டக்ளஸ் ஃபாசெட், ஜே.ஜி.     ஃபிட்ஸே, ஃபின்லே, சிக்மண்ட் ஃப்ராய்ட், ஹிக்கின்ஸன் ஆலிவர் லாட்ஜ். சி.ஈ.எம் ஜோட், ஆரிஸான் ஸ்வெட் மார்டன்,டபிள்யூ, மக்டொனால்ட் என்று இப்படி அறிஞர்களின் பட்டியல் நீளுகிறது.

 

 

43 அரிய தலைப்புகளில் ஆத்ரேயா, யோக வாசிஷ்ட கருத்துக்களையும் இந்த அறிஞர்களின் கருத்துக்களையும் ஒப்பிடுகிறார். யோக வாசிஷ்டம் கூறும் சில கருத்துக்களை சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். இவற்றை விரிவாக இந்த நூலில் பார்க்கலாம்.

 

 

இந்த நூலை ஒரு தடவை படித்தாலும் போதும், யோக வாசிஷ்டம்  மிக அதிசயமான நூல் தான் என்று யார் வேண்டுமானாலும் ஒப்புக் கொள்வர்.

 

 

சரி, யோக வாசிஷ்டம் கிடைக்குமா என்ற கேள்வி கேட்போருக்கு பதில் இது தான்:

 

யோக வாசிஷ்டத்தை இலவசமாகப் படிக்கலாம்; பெறலாம்.

அடுத்த கட்டுரையில் எங்கு பெறலாம எப்படி பெறலாம் என்பதை பார்க்கலாம்!

 

                                                -தொடரும்

 

Leave a comment

Leave a comment