
Written by London swaminathan
Date: 9 July 2016
Post No. 2955
Time uploaded in London :– 10-00 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
இன்று மரம் நடுதல், நீர்நிலைகளை உருவாக்கல் (ஏரி தூறு எடுத்தல், கிணறு வெட்டுதல்) முதலியவற்றைப் பெரும் விளம்பரத்தோடு செய்வதைக் காண்கிறோம். ஆனால் ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே இந்த புறச் சூழல் விழிப்புணர்வும் இயற்கைப் பாதுகாப்பும் நம் நாட்டில் இருந்தது. குறிப்பாகத் தமிழர்கள் இது பற்றிப் பாடி வைத்துள்ளனர். அதற்கு முன்னர் உலக மஹா கவிஞன் காளிதாசனும் இதைப் பாடிவைத்துள்ளான்.
காவியம் செய்வோம்; நல்ல காடு வளர்ப்போம்
கலை வளர்ப்போம்; கொல்லர் உலை வளர்ப்போம்
ஓவியம் செய்வோம்; நல்ல ஊசிகள் செய்வோம்;
உலகத் தொழில் அனைத்தும் உவந்து செய்வோம்
என்று காடு வளர்ப்பு பற்றி பாரதி பாடும் முன்னரே, வேறு பல கவிஞர்களும் பாடிவைத்தனர்.

குளம்தொட்டுக் கோடுபதித்து வழிசீது
உளம்தொட்டு உழுவயல் ஆக்கி — வளம்தொட்டுப்
பாகுபடுங்கிணற்றோ டென்றிவ்வைம் பாற்படுத்தான்
ஏகும் சுவர்க்கத்து இனிது.
–சிறுபஞ்சமூலம், பதினெண்கீழ்க்கணக்கு நூல்
1)நீர்நிலைகலை உருவாக்கி,
2)அவைகளைச் சுற்றி மரக்கிளைகளை நட்டு,
3)மக்கள நடக்கும் வழியை உண்டாக்கி,
4)தரிசான நிலத்தில் உள்ள இடத்தைச் செம்மைப் படுத்தி வயலாக ஆக்கி வளப்படுத்தி,
5)சுற்றுப்சுறுபுறத்தில் சுவர்களுடன் கிணற்றைத் தோண்டி உதவுபவன் — இந்த ஐந்தையும் செய்பவன் — சுவர்க்க லோகம் புகுவான்.
இன்னும் ஒரு பாடல்
நீரறம் நன்று நிழல் நன்று தன்னில்லுள்
பாரறம் நன்றுபார்த்து உண்பானேல் — பேரறம்
நன்று தளிசாலை நாட்டல் பெரும்போகம்
ஒன்றுமாம் சாலவுடன்.

நீர் அளிக்கும் அறம் நன்று (அப்பூதி அடிகள், 1400 ஆண்டுகளுக்கு முன்அ, ப்பர் பெயரில் தண்ணீர்ப்பந்தல் வைத்தது போல)
தன் வீட்டில் மற்றவர் தங்க இடம் கொடுத்து உதவும் தர்மமும் நல்லது;
மற்ற உயிர்களுக்குப் பகுத்துக் கொடுத்து உண்பானால் அதுவும் நன்று (பஞ்ச யக்ஞம்– ஐவேள்வி — என்பது, இந்துக்கள் தினமும் செய்வது, காண்க குறள் -43);
கோயிலுடன், மரங்கள் அர்டர்ந்த சாலையை அழியாதபடி நிலைபெறச் செய்வது மிக நல்ல தர்மம்;
இந்த ஐந்தையும் செய்தால் பேரின்பம் ஏற்படும் (பேரின்பம் = பிரம்மானந்தம்).
காளிதாசன் சொன்னது:–
திலீபன் என்னும் மன்னன் கிராமப்புறம் வழியாகப் பயணம் செய்தான்; அரசன் வருவதை அறிந்த வயதான இடைக்குலப் பெரியோர்கள், அரசனை வெறும் கையோடு பார்க்கக்கூடாது என்று சாத்திரம் சொல்லுவதால், புத்துருக்கு நெய்யோடு (புதிதாகக் காய்ச்சி உருக்கப்பட்ட நெய்) அவனைச் சந்தித்தார்கள். அரசனோ மஹா அறிவாளி. இடைச் சேரிக்கிழவர்களுடன் என்ன பேசுவது? அவர்களோடு பேசுவதற்கு ஏதேனும் ஒரு சாக்கு வேண்டுமல்லவா? ஆகையால் மரங்களின் பெயர்களை எல்லாம் விசாரித்தானாம். —காளிதாசனின் ரகுவம்சம் 1-45
(என்னைவிட உங்களுக்கு இதில் அறிவு அதிகம் என்று மன்னனே ஒத்துக்கொண்டதால் இடையர்கள் மிகவும் சந்தோஷப்பட்டிருப்பர். மன்னனுக்கு மரங்கள் பற்றிக்கூட அறிந்துகொள்ளும் வழக்கம் அக்கலத்தில் இருந்தது).
இன்னும் ஒரு பாடல்
மரத்தை மகன் போல வளர்த்த குறிப்பு மேகதூதத்தில் வருகிறது. மரத்தை சகோதரி போல நினைப்பது தமிழில் நற்றிணையில் வருகிறது.

செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றாமல் சகுந்தலை சாப்பிட மாட்டாள் என்று சாகுந்தலம் செப்பும்.
முல்லைக் கொடியில் எவனாவது வெந்நீரை ஊற்றுவானா? என்ற உவமையை காளிதாசன் சாகுந்தலத்தில்கு பயன்படுத்துவான்.
விஷமரத்தையும் கூட வெட்டக்கூடாது என்று குமார சம்பவத்தில் பாடுகிறான்.
மரங்களை வெட்டாதே என்று காரிக்கண்ணனார் பாடுகிறார் (புறநானூறு 57)
–சுபம்–
You must be logged in to post a comment.