Image of Roman Wine
Research Article Written by London Swaminathan
Date: 30 DECEMBER 2017
Time uploaded in London- 7-54 am
Post No. 4564
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks
யவனர்களைத் தமிழர்களும் சாணக்கியனும் தாக்கியது ஏன்? (Post No.4564)
யவனர்கள் யார்?, மிலேச்சர்கள் யார்? என்று மூன்று ஆண்டுகளாகச் சில ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதிவிட்டேன். இப்பொழுது இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் போலவே சாணக்கியன் காலத்திலும் ‘யவன வெறுப்பு’ இருந்ததைக் காட்டும் பாடல் கிடைத்துள்ளது அதையும் பார்ப்போம். காளிதாசன் கவிதைகளைக் கண்ட போது ஒரு புதிய எண்ணமும் மனதில் உதித்தது. அதையும் சொல்லுவேன்.
எனது துணிபு
யவனர் என்பது கிரேக்க, ரோமானிய, பாரசீக, அராபிய இனங்களைக் குறித்தது.
யவனர் மீது இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் காலம் வரை இருந்த வெறுப்பு பின்னர் சிறிது சிறிதாகத் தணிந்தது.
யவனர்களை கடும் சொல் பேசுவோர், அவர்கள் காவல் வேலைக்கு உகந்தோர், அந்நாட்டு அழகிகள் அந்தப்புரத்தைக் காக்க உதவுவர்; நம் மொழி தெரியாததால் அரசு ரஹஸியங்களைப் பாதுகாக்க அவர்களை அரசனுக்குக் காவலாக வைக்கலாம், மதுபானம் கொடுத்து உபசரிக்க அந்த அழகிகளை அருகில் வைத்துக் கொள்ளலாம் என்ற தகவல்கள் தமிழ் , ஸம்ஸ்க்ருத நூல்களில் இருந்து தெரிகின்றன.
Image of Persian Wine
முதலில் சாணக்கியன் சொல்லும் செய்தியைக் காண்போம்:-
சாண்டாலானாம் ஸஹஸ்ரைஸ்ச ஸூரிபிஸ்தத்வதர்சிபிஹி
ஏகோ ஹி யவனஹ ப்ரோக்தோ ந நீ சோ யவனாத் பரஹ
“உண்மை நிலையை உணர்ந்த அறிஞர்கள் செப்பியது என்ன? ஒரு யவனன் ஆயிரம் சண்டாளர்களுக்குச் சமமானவன். யவனனை விடத் தாழ்ந்தது உலகில் எதுவுமே இல்லை”.
சாணக்கிய நீதி, அத்தியாயம் 8, ஸ்லோகம் 5
ஏன் இந்த வெறுப்பு? சாணக்கிய நீதி நூலை மொழி பெயர்த்த ஸத்ய வ்ரத சாஸ்திரி பகர்வது யாதெனில், இவர்கள் ஆட்சியைப் பிடிக்க வந்தவர்கள். மேலும் வெறுக்கத் தக்க பழக்க வழக்கங்களை உடையவர்கள் என்பதாகும்.
உண்மைதான் இந்துக்கள் வெறுக்கும் பசு மாமிசத்தைப் புசித்திருப்பர். அலெக்ஸாண்டர் இறந்தவுடன் 2300 ஆண்டுகளுக்கு முன்பு, வடமேற்கு இந்தியாவில் இந்திய-கிரேக்க வம்ஸத்தினரின் ஆட்சி நிலவியது. அவர்கள் படை எடுப்பும் ஒரு காரணமாக இருக்கலாம்.
மேலும் அவர்கள் படுத்துக் கொண்டே உணவு உண்பார்கள் என்பதும் ஸம்ஸ்க்ருத ஸ்லோகங்களில் உள்ளது; ‘’சயானா முஞ்சதே யவனாஹா’’ என்று ஸ்லோகம் உள்ளதால் அவர்களுக்கு ‘’துர்யவனம்’’ என்ற அடைமொழி (கெட்ட யவனன்) கொடுக்கப்பட்டது. மேலும் இந்த ‘’துர் யவனம்’’ என்பதை ஸம்ஸ்க்ருத வியாகரணத்தில் ஒரு குறிப்பிட்ட அம்சத்தை விளக்க எப்போதும் பயன்படுத்தினர். ஆக பழக்க வழக்கங்களாலும் கடும் சொற்களாலும் (மிலேச்ச பாஷை பேசியதாலும்) இவர்கள் தீண்டத் தகாதவர்கள் (சண்டாளர்) ஆனார்கள்.
நான் இன்னும் ஒரு கருத்தையும் சேர்ப்பேன். ஆரம்ப காலத்தில் இவர்கள் மேலைக் கடற்கரையில் சென்ற நமது வணிகக் கப்பல்களைத் தாக்கிக் கொள்ளை அடித்திருப்பர். சந்திர குப்த மௌர்யன், அவனுக்குப் பின்னால் இமய வரம்பன் நெடுஞ் சேரலாதன் ஆகியோர் இவர்களை அடக்கி ஒடுக்கி வழிக்குக் கொண்டுவந்த பின்னர் கடுமை குறந்து இருக்கும்.
பாரஸிக மதுபானம்
என்னுடைய இன்னும் ஒரு ஆராய்ச்சி தமிழகத்துக்குப் பாரஸிக மதுபானம் வந்த செய்தியாகும். யவன அழகிகள் தமிழ் மன்னர்களுக்கு தங்கக் கிண்ணங்களில் மது பானம் வழங்கிய செய்தி சங்க இலக்கியத்தில் உள்ளது (கீழே எனது பழைய ஆய்வுக் கட்டுரைகளுக்கான லின்க் LINK உள்ளது. அவைகளில் சங்க இலக்கியம் பற்றிய விரிவான செய்திகள் காணக் கிடைக்கும்.
காளிதாசன் அவனது நாடகங்களான சாகுந்தலம், மாளவிகா அக்னிமித்ரம், விக்ரம ஊர்வஸீயம் ஆகியவற்றிலும் ரகு வம்ஸத்திலும் யவனர் பற்றிய பல காட்சிகளைத் தருகிறான்:
ரகுவம்ஸ ஸ்லோகம் இதோ:–
யவனீ முக பத்மானாம் ஸேஹே மதுமதம் ந ஸஹ
பாலாமிவாப்ஜானாம் அகால ஜலதோதுயஹ
—ரகுவம்ஸம், அத்யாயம் 4, ஸ்லோகம் 61
பொருள்:
காலை வேளையில் சூரியன் உதயமானவுடன் தாமரை மலர்கின்றது. முன்பே செந்நிறம் பெற்றுள்ள தாமரை மலர்கள், சூரியனது இளம் வெய்யில் படும் பொழுது மேலும் அழகு பெறும். ஆயினும் மேகக் கூட்டம் வந்து ஒளியைத் தடுத்தால் அவை ஒளி குறைந்து காணப்படும் பாரஸீகப் பெண்களின் முகம் செக்கச் செவே என்று தாமரை போல உள்ளன. அந்த அழகிகள் மதுபானம் செய்து மேலும் அழகு பெற்றனர். ஆயினும் ரகு மன்னன், பாரஸீகம் (ஈரான் நாடு) மீது படை எடுத்து வருகிறான் என்ற செய்தியைக் கேட்டவுடன் வாடினர். ஏனெனில் மது பானம் செய்வதைத் தவிர்த்தனர்.
யவன என்பதற்கு வியாக்கியானம் செய்தவர்கள் கொடுக்கும் பொருள் பாரஸீகம்
இந்த பாரஸீக மதுதான் சங்கத் தமிழ் நூல்களிலும் பயிலப்பட்டது என்பது எனது துணிபு.
Yavana in Barhut Sculpture; 2300 year old.
ஸாகுந்தலம் என்னும் உலகப் புகழ் பெற்ற நாடகத்தில், இரண்டாம் காட்சியிலும் ஆறாம் காட்சியிலும் யவன ஸ்த்ரீகள் நடமாடுகின்றனர். மாமன்னன் துஷ்யந்தனின் படைகளுடன் வந்த பரிவாரத்தில் யவன அழகிகளும் இருந்தனராம் (இதைத் தமிழிலும் காண்கிறோம்). மன்னன் எங்கு எங்கெல்லாம் சென்றானோ அங்கெல்லாம் யவன மாது ‘வில்’லை எடுத்து வந்தாளாம்.
முற்கால மன்னர்களின் சபைகளிலும், அரண்மனைகளிலும் யவன மகளிருக்கு வேலைக்காரி வேலை கொடுக்கப்பட் டத்தை ஏனைய நாடகங்கள் காட்டுகின்றன. இதைத் தில் இலக்கியத்திலும் காண்கிறோம்.
ஆக யவனர்கள் என்பது கீழ் மட்ட வேலைக்காரர் அல்லது வேலைக் காரி என்ற பொருளிலேயே சாணக்கியனும் தமிழரும் பயின்றனர்.
காளிதாசனின் 200-க்கும் மேலான உவமைகள் சங்கத் தமிழ் நூல்களில் உபயோகிக்கப்பட்டதால் காளிதாசன், சங்க காலத்துக்கு முந்தையவன் என்பதைப் பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலம் காட்டினேன். இந்த பாரஸீக மது, யவன வேலைக்காரிகள் என்பதை இன்னும் ஒரு சான்றாகக் கொள்க!
Persia (Iran)
யவனர்கள் யார் | Tamil and Vedas
https://tamilandvedas.com/tag/யவனர்கள்-யார்/
ஆராய்ச்சிக் கட்டுரை வரைபவர்: லண்டன் சுவாமிநாதன் கட்டுரை எண்.:–1207; தேதி:- ஆகஸ்ட் 1, 2014. சங்க இலக்கியத்திலும் பிற்காலத்தில் எழுந்த சிலப்பதிகாரத்திலும்யவனர்கள் பற்றிய சில குறிப்புகள் உள்ளன. இவை பெரும் புதிராக உள்ளன. யார் இந்த யவனர்? எப்போது இந்த சம்பவங்கள் நடந்தன …
சங்க இலக்கியத்தில் யவனர் மர்மம்! | Swami’s …
swamiindology.blogspot.com/2014/08/blog-post.html
1 Aug 2014 – சேரர்கள் – யவனர் மோதல் மர்மம் நீடிக்கிறது. சேர மன்னர் ஆண்ட யவனர் நாடோ, கைகளைப் பின்னால் கட்டி தலையில் நெய் ஊற்றப்பட்ட யவனர்கள் யார் என்பதோ தெரியவில்லை.இதே போல புராணங்களும் சகர மன்னன், யவனர்களைப் பிடித்து மொட்டை அடிக்கச் செய்தான் என்று …
“மிலேச்ச” என்றால் என்ன? | Tamil and Vedas
https://tamilandvedas.com/2012/…/மிலேச்ச-என்றால…
- 6 Sep 2012 – பலுச்சிஎன்பது மிலேச்ச என்று மாறியது என்று சில மொழி இயல் அறிஞர்கள் வாதிடுவர். கிரேக்கர்களும் கூட தங்கள் இனத்தைச் சேராதோரை ‘பார்பேரியன்ஸ்’ என்று அழைத்தனர்.
மிலேச்சர்களை அழிக்கும் கல்கி …
https://tamilandvedas.com/…/மிலேச்சர்களை-அழி…
21 Mar 2015 – … ‘மிலேச்ச பாஷை’யும் அல்ல என்பது இக்கட்டுரையின் துணிபு. முந்தைய கட்டுரைகள்:–. MLECHA: Most Misunderstood Word (Posted on 3 September,2012). “மிலேச்ச”என்றால் என்ன? (Posted on 6 September,2012) …
—சுபம்–