நான் ஏன் வடலூருக்குச் சென்றேன்? (Post No.4849)

Written by London Swaminathan 

 

 

Date: 25 MARCH 2018

 

 

Time uploaded in London – 7-11 am

 

Post No. 4849

Pictures shown here are taken by london swaminathan

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

 

வடலூர் வள்ளலாரின் சத்ய ஞான சபைக்கு விஜயம்

 

சமீபத்தில் மார்ச் முதல் வாரத்தில் (2018) திருக்கோவிலூர் ஞானானந்த தபோவனத்துக்குச் சென்றபோது அங்கு வாங்கிய மலரில் ஒரு சுவையான சம்பவத்தைப் படித்தேன்.

 

சுவாமி ஞானானந்தா சுமார் 150 ஆண்டு வயது வரை வாழ்ந்ததவர். ஆனால் அவர் தனது வயதையோ சுய சரிதையையோ பெருமையாகச் சொல்வதில்லை. அவ்வப்போது அவர் சொல்லும் விஷயங்களில் இருந்தே பழைய வரலாற்றை ஊகிப்பர்.

 

தானும் வடலூர் ராமலிங்க சுவாமிகளும் உடனிருந்தபோது நடந்த ஒரு சம்பவத்தை அவர் சொன்னார்:

“நான் ராமலிங்க சுவாமிகளுடன் இருந்த போது, ராமலிங்கம் கட்டிடத்தின் வெளியே ஒரு பந்தல் அமைக்கச் சொன்னார். பந்தல், பல தோரணங்களுடன் அமைக்கப்பட்டது. மீண்டும் அந்த இடத்துக்கு ராமலிங்க சுவாமிகள் வந்தபோது, அட! பந்தல் நன்றாக இருக்கிறதே! யார் அமைத்தார்கள்? என்று வினவினார்.

அங்கிருந்த தொண்டர்கள் திருவாளர்………………….. அமைத்தார் என்று பந்தல் போடப் பண உதவி செய்தவர் பெயரைச் சொன்னார்கள்.

 

அவரா ? திரு……………… வா அமைத்தார்??????

என்றார்.

வள்ளார் இப்படிக்கூறிய  அடுத்த நொடியில் அந்தப் பந்தல் எரிந்து சாம்ப லாகியது.

ஏனெனில் அந்தப் பந்தல் அமைக்கப் பணம் கொடுத்தவர்– மாமிச உணவு சாப்பிடுபவர். வள்ளளாரோ அதி தீவிர சைவர். புலால் உண்ணுவோரை கடுஞ் சொற்களால் விமர்சிப்பவர்.

 

வடலூர் சிதம்பரத்துக்கு அருகில் இருக்கிறது.

வள்ளலார் வாழ்ந்த காலம்-  1823- 1874

 

வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் சமரச சுத்த சன்மார்கத்தைப் பரப்பினார். வடலூரில் சத்திய ஞான சபையை நிறுவினார். இங்கு ஏழு திரை கொண்ட ஒரு அறை இருக்கிறது வடலூர் வள்ளலார், தைப்பூசத் திருநாளில் ஜோதி வடிவில் மறைந்ததால் தைப்பூச விழாவின்போது மக்கள் லட்சக் கணக்கில் வருவர். வள்ளலாரின் பாடல்கள் திருவருட்பா என்னும் நூலாக மிளிர்கிறது.

 

எல்லாக் கடவுளர் மீதும் அமைந்த இந்த தெய்வீகத் துதிகள் எளிய தமிழில் எதுகை மோனையுடன் அமைந்துள்ளன.

 

ராமலிங்க சுவாமிகளின் முக்கியப் பாடல்கள், அவரது அற்புதச் செயல்கள், அவருக்கும் ஆறுமுக நாவலருக்கும் இடையே நடந்த வழக்கு விவகாரம், வள்ளலார் போலவே ஜோதி வடிவில் மறைந்த தமிழ் சாது சந்யாசிகள் ஆகியன பற்றி ஏற்கனவே எழுதிவிட்டேன். வடலூர் ஆஸ்ரமம் பற்றி மட்டும் இப்பொழுது சொல்லுவேன்.

 

 

சத்திய ஞான சபையின் சிறப்புகள்:

 

சுமார் 150 ஆண்டுகளாக இங்கு அணையா அடுப்பு உளது; அதாவது எல்லோருக்கும் எப்போதும் உணவு படைக்கப்படும்.

வள்ளாலாரின் சீடரான கல்பட்டு சுவாமிகளின் சமாதியும் இங்கே இருக்கிறது. அங்கே வள்ளலாரின்  வாழ்க்கை வரலாற்றை வருணிக்கும் பெரிய ஓவியங்கள் உள்ளன.

 

வள்ளலாருக்கு இயற்கை வைத்தியத்தில் அதிக நம்பிக்கை இருந்ததால் மூலிகை மருந்துகளையும், மூலிகை உணவுகளையும் பரப்பினார். இன்றும் நூற்றுக் கணக்கான மருந்துகளையும் மூலிகை உணவுகளையும் வடலூரில் விலைக்கு வாங்கலாம்

நானும் என் தம்பியும் மாலைக் கதிரவன் மலை வாயிலில் விழுமுன் வடலூர் அடைந்தோம்.

எதேச்சையாக ஒருவர் வந்து தன்னை ‘நம சுதாமா’ என்று அறிமுகப் படுத்திக் கொண்டார். நெற்றியில் விபூதிக் கீற்று. வள்ளலார் பிராமணர் அல்ல; வந்தவரும் பிராமணர் போலத் தோன்றவில்லை. ஆகையால் ‘’நம சுதாமா’’ என்ற பெயர் விநோதமாக இருக்கிறதே என்று வினவினோம்.

அவர் சொன்னார்- என் பெயர் சுதாமா; எனக்கு நமசிவாய என்பது பிடிக்கும் என்பதால் நம சுதாமா என்று வைத்துக் கொண்டேன் என்றார்.

முதலில் அவர் பணமோ டொனேஷனோ Donation எதிர்பார்த்து எம்மைச்  சூழ்ந்தாரோ என்று எண்ணினோம். ஆனால் நேரம் ஆக ஆக  அவர் ஒரு உண்மை ஊழியர் என்று தெரிந்தது.

 

எங்களை எல்லா இடங்களுக்கும் அழைத்துச் சென்றார். சமையல் அறைக்கு அழைத்துச் சென்று அணையா அடுப்பையும், விளக்கையும் காட்டினார். அருகில் இருந்த பானையில் இருந்து சுக்கு மல்லிக் காப்பி கொடுத்தார்; எவ்வளவு பணம் தரவேண்டும்? என்று கேட்டபோது- இது எல்லோருக்கும் பயன்படுத்துவதற்காக தினமும் இந்த இடத்தில் வைக்கப்படுகிறது என்றார்.

 

நீங்கள் இந்த இடத்தில் வேலை பார்க்கிறீர்களா? என்று கேட்டபோது, தான் அருகாமை கிராமத்தில் வசிப்பதாகவும் முடிந்த போதெல்லாம் சைக்கிளில் வந்து உதவி செய்வதாவும் சொன்னார்.

என்னுடைய திருவருட்பா புஸ்தகத்தை ஒருவருக்குக் கொடுத்துவிட்டதால் புத்தகக் கடை எங்கே? என்று கேட்டேன். அங்கு சென்றவுடன் ஒரு திருவருட்பா புஸ்தகம் வாங்கினேன்.

 

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமருடன்……. என்ற, பாடலைப் புகழ்ந்து பேசினேன். “சார் ஒரு கேள்வி– யார் உத்தமர்? யாராவது இருந்தால் சொல்லுங்கள்” என்றார். வாயடைத்துப் போனேன். துணிச்சலாக இவர் ஒரு உத்தமர் என்று எவர் பெயரையும் சொல்லும் துணிவில்லை. அந்தக் காலத்தில் ரமணர், ராமகிருஷ்ணர், சுவாமி விவேகாநந்தர், அண்மையில் காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994) போன்ற உத்தமர்கள் இருந்தனர். அவர்கள் வாழ்வு, குடிசையில், எல்லோரும் பார்க்கும் வாழ்வாக இருந்தது ஆனால் மற்ற சாமியார்கள் எல்லோரும் மூடிய கட்டிடங்களில் மறைவான வாழ்க்கை வாழ்வதால் சொல்லும் துணிவில்லை என்றேன். அவர் கேட்ட கேள்வி என் சிந்தனையைத் தூண்டியது.

 

யார் உத்தமர் இல்லை? என்று மட்டும் அவர் கேட்டிருந்தால் அன்று இரவு முழுதும் நீண்ட பட்டியலைக் கொடுத்திருப்பேன்.

 

எனது தம்பிக்கு மூலிகை மருந்துகளில் ஆர்வம் இருந்ததால், இங்குள்ள கடைகளில் தைரியமாக வாங்கலாமா? என்று கேட்டேன்.

அவர் சொன்னார்:

இந்த ஸத்திய ஞான சபை எல்லைக்குள் எல்லோரும் ஸத்தியமே பேசுவர் என்றார். ஆனால் இங்கு இலவச உணவு அருந்த வருவோர் எல்லோரையும் ஆன்மிக    நாட்டம் உடையோர் என்று சொல்வதற்கில்லை என்றும் சொன்னார்.

நான் உடனே காஞ்சி பரமாசார்ய  சுவாமிகள் அன்ன தானப் பெருமை பற்றி ஆற்றிய சொற்பொழிவினை சுட்டிக் காட்டினேன். நல்லவர் ஒருவர் உணவு உண்டால் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை.

 

அவரிடம் பிரியாவிடை பெற்று மூலிகைக் கடைக்கு வந்தோம்.

நான் ஏன் வடலூர் சென்றேன்?

 

நான் இங்கிலாந்தில் சிறைச் சாலையில் உள்ள இந்துக் கைதிகளை வாரம் தோறும் சந்தித்து பிரார்த்தனை செய்வேன். ஒரு கைதி அதிசயமாக திருவருட்பா வேண்டும் என்றார். என்னிடம் லண்டனில் வைத்திருந்த புஸ்தகத்தை அவரிடம் கொடுத்து விட்டேன். ஆக வடலூர் சென்று புஸ்தகம் வாங்கத் தீர்மானித்தேன். இது கடந்த ஓராண்டுக்குள் நடந்தது. ஆனால் நானோ 40 ஆண்டுக்கும் மேலாக வடலூர் செல்ல ஏங்கினேன். காரணம்:-

  1. சிறு வயதில், ஐந்து வயதில், மதுரை வடக்குமாசி வீதியில் உள்ள யாதவர் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு சேர்ந்தேன். முதல் நாள் முதல் ஐந்து வருடத்திற்கு தினமும் பாடிய பாடல் வள்ளலாரின்- ‘கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே’ – என்ற பாடல்தான்.

2.என் தந்தை ‘ம்ருத்யுஞ்சய மந்திரம்’ முதலியன சொல்லிக் கொடுத்ததோடு வள்ளலாரின் கணபதி துதியான ‘முன்னவனே யானை முகத்தவனே’– துதியையும் சொல்லிக் கொடுத்ததால், சிறு வயது முதல் அதுவும் பரிச்சயம்.

 

பஜனையில் ‘அம்பலத்தரசே அருமருந்தே’ பாடலையும் அவர் பாடுவார். நாங்களும் உடன் பாடுவோம்.

 

  1. மதுரை சம்பந்த மூர்த்தித் தெருவில் மஹாதேவன் என்பவர் நாடகங்களில் நடிப்பார். அவர் எங்கள் வீட்டுக்கு வரும்போதெல்லாம் ‘அருட் ஜோதி தெய்வம்– எனை ஆண்டு கொண்ட தெய்வம்’ என்ற பாடலை உருக்கமாகப் பாடுவார். பிற்காலத்தில் நாங்கள் சங்கீத மேதை டாக்டர் எஸ். ராமநாதன் வசித்த கட்டிடத்தில் குடியிருந்தோம். அவரும் அவரது புதல்விகளும் இந்தப் பாடலை பாடுவர்.

 

4.எஸ் எஸ் எல் சி —-படிப்பில் மனப்பாடப் பகுதியில் ‘ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம்’—என்ற பாடல் வந்தது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் வள்ளலார் பற்றிப் பல கட்டுரைகள் எழுதினேன்.

 

இவை அனைத்தும் சேர்ந்து என்னை வடலூருக்கு உந்தித் தள்ளியது.

ஒவ்வொரு முறை லண்டனில் இருந்து சென்னைக்கு வந்து வைதீஸ்வரன் கோவிலுக்குச் செல்லுகையில் வடலூரைத் தாண்டி ‘கார்’ பறக்கும். அப்போதும் வடலூர் மீது ஆர்வம் எழும்.

 

இந்த முறை வைதீஸ்வரன் கோவிலுக்குச் செல்லும் இரண்டு நாட்களுக்கு முன்னரே,  வடலூருக்குத் தனியாகச் சென்று வந்தேன்.

 

அமைதி தவழும் வடலூர் ஆஸ்ரமத்துக்கு நீங்களும் சென்று வாருங்கள்.

வாழ்க ராமலிங்க சுவாமிகள்! வளர்க  வடலூர் வள்ளலாரின் புகழ்!!

–சுபம், சுபம்—

 

 

ஓடுங்கள், ஓடுங்கள், உலகத்தோடு ஓடுங்கள்! – 2 (Post No.4848)

Date: MARCH 25, 2018

 

 

Time uploaded in London- 6-32 am

 

 

WRITTEN by S NAGARAJAN

 

 

Post No. 4848

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

 

நகைச்சுவை நடைச்சித்திரம்

 

ஓடுங்கள், ஓடுங்கள், உலகத்தோடு ஓடுங்கள்! – 2

 

ச.நாகராஜன்

 

 

T.Q.C.!  T.Q.C.!!

அப்படி என்றால்?

TOATAL QUALITY CONTROL!!!

ஜப்பானின் முன்னேற்றத்திற்குக் காரணம் தரம்!

தரம், தரம்,தரம்.

நிரந்தரம் வேண்டும் தரம்!

ஆஹா, கடைக்கு ஓடினேன்.

அள்ளினேன், அனைத்து டி.க்யூ.சி. புத்தகங்களையும்!

எல்லா ஜப்பானிய வார்த்தைகளையும் கற்றுக் கொண்டு அவ்வப்பொழுது அதை விடுவேன்.

அனைவரும் அசந்து விட்டனர்.

சற்று பயபக்தியுடன் பார்த்தனர்.

ஏதாவது சந்தேகம் என்றால் கூட என்னை வந்து பார்க்க ஆரம்பித்தனர்.

நிர்வாகம் சிந்தித்தது.

அப்போது தான் வந்தது க்யூ.சி.

அதாவது க்வாலிடி சர்க்கிள்.

தர வட்டம்.

தரத்தைக் கொண்டு வர தொழிலாளர்களின் சிறு குழுக்களை அமைத்து அவர்களுக்குப் பயிற்சி கொடுப்பது தர வட்டத்தின் நோக்கம்.

 

அனைத்து மானேஜர்களுக்கும் தர வட்டம் அமைக்க உத்தரவானது.

எனது தொழிலகத்தில் சுமார் ஆயிரம் பேர் பணி புரிகின்றனர்.

அதிகமான தர வட்டம் யாருக்குக் கிடைத்தது?

ஊகிக்கவே வேண்டாம், எனக்குத் தான்!

 

மாலை 4 மணி முதல் இரண்டு ஷிப்டு தொழிலாளர்களையும் சந்தித்து இரவு 8 மணி வரை க்ளாஸ் எடுத்து அதற்கு மேல் அலுவலக பெண்டிங் வேலையைக் கவனித்து…

சுமார் 800 மனித மணிகள் (மேன் ஹவர்ஸ்) க்ளாஸ் எடுத்தேன்.

பாரடோ சார்ட் என்பது முக்கியம்.

சார், பரோடா கிடைக்குமா சார்!

 

பரோடா இல்லை, பாரடோ சார்ட்.

அதன் மூலம் உடனடியாக ஒரு பிரச்சினையை இனம் கண்டு தீர்த்து விடலாம்.

 

சார், அதற்கு என்ன செய்ய வேண்டும்?

ஃபிஷ் போன் டயாகிராம் வரைய வேண்டும்.

சார், ஃபிஷ் என்ன ஃபிஷ் சார்? தருவார்களா, சார்!

அதில்லை, அப்படி ஒரு படம்.

வைடல் ஃபியூ, ட் ரிவியல் மெனி. (VITAL FEW TRIVIAL MANY)

அதாவது முக்கியமான காரணம் சில தான். குட்டி குட்டி வேண்டாத காரணங்கள் பல.

 

சார், புரியவில்லை.

உங்கள் வீட்டில் உள்ள ஒரு பிரச்சினையைச் சொல்லுங்கள்.

சார், பையன் படிக்கவே மாட்டேன் என்கிறான்.

சரி, அதற்கான காரணத்தை படத்தில் வரைவோம்.

ஏராளமான காரணங்களை படத்தில் ஏற்றினோம்.

வைடல் காரணம்,பணம் இல்லை!

அதை எப்படி சார் கொண்டு வருவது?

அவசரம் அவசரமாக க்ளாஸை முடித்தேன்.

தர வட்ட மாஸ்டர் ஆனதால் எல்லோரும் என்னை மதிப்புடன் பார்த்தனர். தங்கள் பிரச்சினைகளை மனம் விட்டுப் பகிர்ந்து கொண்டனர்.

 

அதற்குள் நிர்வாகம் அதிரடியாக உத்தரவைப் போட்டது.

ஜஸ்ட் இன் டைம்! JUST IN TIME – JIT

ஜே ஐ டி வந்து விட்டதால் அந்தந்த சாமானை அன்றன்று வரும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டாக் என்ற பேச்சே இருக்கக் கூடாது.

ஜப்பானில் அப்படியே மூலப் பொருள்கள் லாரி லாரியாக வருகிறதாம். அது லைன் அசெம்பிளிக்கு நேராகப் போய் வண்டியாக – மோட்டார் சைக்கிளாக, காராக மாறுகிறதாம்!

சரி, ஜே ஐ டி வாழ்க.

 

 

ஆனால், துரதிர்ஷ்டம் ஆங்காங்கே வண்டிகள் முடியாமல் அலங்கோலமாக அரைகுறையாக நின்றன.

பல ஆண்டு வாடிக்கையாளர்கள் திகைத்தனர். என்ன சார், இது?

நிர்வாகம் அலறியது.

உடனடி மீட்டிங்!

 

 

லாரி ஸ்டிரைக், ஆகவே பல பொருள்கள் வரவில்லை.

வந்ததில் ஒரு ஷீட் உடைந்து விட்டது.

கூடவும் வாங்கக் கூடாது, அன்றன்று வந்து சேர்வது போல ஆர்டர் செய்ய வேண்டும்!

சப்ளை மானேஜர் அழுதார்.

வேண்டாம், ஜஸ்ட் இன் டைம்.

 

 

இனி அட்வான்ஸ்ட் ப்ளானிங் செய்யுங்கள்.

அப்பாடா, மள மளவென்று வண்டிகள் முடிந்தன.

அடுத்தாற் போல வந்தது – ஃப்ளெக்ஸிபிள் மானுபாக்சரிங் சிஸ்டம்! FLEXIBLE MANUFACTURING SYSTEM!

அதாவது எல்லா அசெம்பிளி பார்ட்டுகளும் நெகிழ்வாக இணைய வேண்டும்.

 

ஓடு, ஒரு கோர்ஸுக்கு.

ஓடினோம்.

என்ன செய்யலாம்?

ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் கஸ்டம் பில்ட் வண்டி நம்முடையது. அதில் இது ஒத்து வருமா?

 

முட்டி மோதி, வாடிக்கையாளர்களிடம் கேட்டது ஒண்ணு, தர்றது ஒண்ணு என்று வசவு வாங்கி, முழித்துக் கொண்டோம்.

அப்போது தான் எனக்கு வந்தது அபாயம்!

தேர்ந்தெடுத்த டாப் மானேஜர்கள் சுமார் நூறு பேரைக் கொண்ட ஒரு கூட்டம் மாதாமாதம் எங்கள் குழுமத்தில் நடக்கும்.

அதில் நான் புது டெக்னிக்கைப் பற்றிப் பேச வேண்டும்.

எனக்கு வந்தது – ரீ எஞ்சினியரிங்.

 

 

அதாவது இருக்கும் ஆதார வளத்தைக் கொண்டு போட்டியாளர்களை முந்திச் செல்வதோடு அவர்கள் நம்மை எளிதில் அணுகாதவாறு ஒரு தடையையும் ஏற்படுத்த வேண்டும்.

நூறு பேர்களும் புத்திசாலிகள். கேள்வி நேரத்தில் கொத்திக் கொத்தி குலை உயிரும் குற்றுயிருமாக ஆக்கி விடுவார்கள்.

தைரியமாக எனது பேப்பரை தயார் செய்தேன்.

கேள்விகளை குதர்க்கமாக நானே தயார் செய்து அதற்கு நகைச்சுவையுடன் கூடிய பதில்களைத் தயாரித்து முன்னதாகவே வைத்துக் கொண்டேன்.

 

வெற்றி, மாபெரும் வெற்றி.

இதற்கு நடுவில் ஐ ஆம் ஓகே, யூ ஆர் ஓகே வேறு.

I AM OK, YOU ARE OK!!!

 

பார்ப்பவர்கள் எல்லாம் ஐ ஆம் ஓகே, ஆர் யூ ஓகே என்று கேட்டுத் திரிந்தோம்.

 

அடுத்து வந்தது ஆடோ கேட்! கம்ப்யூட்டர் மானுபாக்சரிங்!

ஓடுங்கள், கம்ப்யூட்டர் கோர்ஸுக்கு. படியுங்கள் ஆட்டொ கேட்!

ஆக, இப்படியாக பல்லாண்டுகள் ஓடி விட்டன.

அடுத்தடுத்து ஒரு அலை!

 

கடைசியாக ஒரு முடிவுக்கு வர முடிந்தது.

புத்தியை உபயோகித்து, நிர்வாகத் தலைமையை அனுசரித்து, வாடிக்கையாளர்களின் தேவையை ப்ளான் செய்து அதைப் பூர்த்தி செய்வதே நமது இந்திய சூழ்நிலைக்கு உகந்தது.

ஆஹா, அருமையான ஞானோதயம் சார்!

 

 

ஆனால் அதற்குள் ரிடையர்மெண்ட் வந்து விட்டது.

இருந்தாலும் சொல்கிறேன். ஓடுகின்ற உலகத்தோடு ஓடுங்கள்.நீங்கள் நின்றால் தேக்கம். ஓடினால் சர்வைவல். அதிக ஸ்பீடுடன் ஓடினால் களைப்பீர்கள் அல்லது மற்றவரிடம் திட்டு வாங்குவீர்கள்!

 

 

ஓடுங்கள், சார், ஓடுங்கள்! உலகத்தோடு ஓடுங்கள்!!!

எனது ரிடையர்மெண்ட் காலத்தில் உங்களை வேடிக்கை பார்க்கிறேன்!

****

முற்றும்

MY VISIT TO VADALUR VALLALAR ASHRAM (Post No.4847)

Written by London Swaminathan 

 

 

Date: 24 MARCH 2018

 

 

Time uploaded in London – 15-00

 

Post No. 4847

Pictures shown here are taken by london swaminathan

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

 

Recently I read one interesting anecdote in the Tirukkovilur Tapovanam (year 1999)  magazine about Vallalar Ramalinga Swamigal, who established Sathya Gnana Sabhai in Vadalur.  Swami Gnanananda of Tapovanam was said to have lived for 150 years. He never boasted about his age or  his personal matters. Casually he remarked to his Bhaktas/ devotees the following incident:

 

“ When I  was with Ramalinga Swamikal, he asked his devotees to erect a Pandal (thatched shed) in front of the building. It was erected beautifully well with lot of decorations, more than what he expected. So when Vallalar came to that spot again, he asked who erected it. Someone mentioned the name of the gentleman.

Vallalar was surprised and asked did Mr…………… erect it?

The next minute the thatched shed was burnt to ashes.

The reason being the man who erected the shed was a non-vegetarian. Sri Ramalinga Swamikal, who is known as Vallalar was a strict vegetarian and he advocated Vegetarianism more than the Jains.

Who is Ramalinga Swamikal?

He was born in 1823 in Chidambaram and attained immortality in 1874. He went into a room and dis appeared as a flame (Jyoti). I have explained the phenomena called spontaneous combustion of Hindu saints in another article written some years ago in this blog. Many famous Tamil saints have become fire and merged with God.

 

Vallalar established his Ashram called Sathyagnana sabhai in Vadalur in Cuddalore district of Tamil Nadu. It is not far from Chidambaram. He was attributed with various miracles, which I have already dealt with in my articles. His book of hymns known as Thiru Arutpa is in very simple Tamil and beautiful rhythmic language. He has sung about all the Hindu gods. He was an epitome of his teachings.

 

He was a great believer in herbal medicines and herbal food. He taught his disciple that one could live a longer life with such herbs. Hundreds of different herbal preparations are sold in Vadalur.

In the temple or Ashram, every day prayer is held in front of the seven curtains. During Thai Pusam day (the full moon day in January) lakhs of people visit Vadalur to have the Jyoti darsan. Vallalar disappeared on a Thai Pusam day.

 

Free Food 24 Hours!

The Sikh Gurudwaras have Langar where one can have food at any time of the day. There is no bar on caste or creed. In the same way Vallalar Centre at Vadalur serve food to anyone all through the day. The ovens in the kitchen have been burning for about 150 years and they have never been put off. Whether one believes in his miracles or not, this can be seen with our own eyes.

I met an interesting Man

 

When I and my brother entered the Ashram, one person with Vibhuti  on his forehead came to us voluntarily and started talking about the greatness of Vallalar. We thought he was going to ask for money or donation. But he was very nice and  introduced himself as Nama Sudhama. Vallalar was not a Brahmin and this gentleman was also not a Brahmin. I was wondering about his name. He explained his name that was  in pure Sanskrit. Sudhama was his name and had added the prefix ‘Nama’ later  because he liked Nama Sivaya very much. He took us around the centre, the kitchen and the ever- burning oven. He gave us herbal coffee (sukku Malli Coffee) which is placed in a public place and anyone can drink it. He told us a fact that not all the people taking food there are after Vallalar’s teaching, but some came there just for the food.

 

My brother who was interested in herbal products asked the gentleman whether he can buy herbal products from any shop. Nama Sudhama explained beautifully well that there satya (truth) rules and so no one tells a lie. When we asked him whether he was working in the centre he said he used to cycle all his way to the centre from a nearby village to serve the people coming to the Ashram. We thanked him and asked  to  take us to the book shop. I bought a Thiru Arutpa book (see the details below) and said good bye to him.

When we were discussing Vallalar’s hymn where the word ‘Uttamar’ (good people) occurs, he asked us to name one Uttamar. We were dumbfounded and could not answer his question. We told him that Ramana Maharishi, Rama Krishna , Swami Vivekananda and Kanchi Paramacharya (1894-1994) belonged to that category. But we dare not name anyone now because they live in closed buildings unlike the great old Rishis.

 

We went around the centre and the nearby Samadhi of Vallalar’s devotee (Kalpattu swami). We tasted some sample of food. The atmosphere there was serene and lot of elderly people were waiting for food. We can see many boards explaining the merits of the herbal medicine and there are many shops selling them.

 

About the Seven Curtains (from Wikipedia)

Around 1872 he established the Sathya Gnana Sabai, hall of True Wisdom Forum and ensuring it was entirely secular . This place is not a temple; fruits, flowers are not offered, and no blessings were given. It was open to people of all castes except those who ate meat, who were only allowed to worship from the outside. He wrote in detail about the pooja to be performed in Gnāna sabai. Those who are below 12 years or those who are above 72 years alone were expected to enter Gnāna sabai and do poojas. The oil lamp lit by him is kept perpetually burning. He said that our soul is blinded by seven veils.[11]

There are seven cotton fabric screens, representing the seven factors that prevent a soul from realizing its true nature. The entire complex is bound by a chain with 21,600 links, said to represent 21,600 inhalations[12] by a normal human being. He said intelligence we possess is Maya intelligence which is not true and final intelligence. Path of final intelligence is “Jeeva Karunyam”. He advocated a casteless society. Vallalār was opposed to superstitions and rituals. He forbade killing animals for the sake of food. He advocated feeding the poor as the highest form of worship. He condemned inequality based on birth. Today there are spiritual groups spread out all over the world who practice the teachings of Swāmi Rāmalingam and follow the path of Arul Perum Jothi.

 

Why did I go to Vadallur?

I went to Vadalur Vallalar Ramalinga Swamigal centre in the first week of March, 2018.  I have been waiting to visit Vadalur for several decades. The reason being the very first prayer I learnt at the age of five in the primary school was a poem from Vallalar Arutprakasa Ramalinga Swamikal. The second reason is my father taught me along with several Sanskrit slokams, Vallalar’s Tamil poem on Lord Ganesh (munnavane, yaanai mukaththavane). The third reason is one Mr Mahadevan in Sambadhamurthy Street of Madurai, who was a drama actor used to come to our house now and then and used to sing ‘Arut Jothi Deivam enai andukonda Deivam’ in beautiful Raga. The same was repeated by Musicologist and Musician Dr S Ramanathan and his daughters when we lived in the same building in Goodshed Street of Madurai. Last but not the least was my SSLC examination text book had his poem ‘Orumaiyutan Ninathu……………

 

Recently, when I visited the Hindu prisoners in one of the prisons in England, one prisoner, to my surprise, asked for the Tiru Arutpa hymn book of Vallalar. So my copy in London was given to him as a gift. Now the prisoner is released. I wanted to get one more copy.

 

The poem I was taught at the age of five in Yadavar School, North Masi Street, Madurai was Kallaarkkum Katravarkkum Kalipparulum Kalippe……………… Whatever you learn at that tender age remains ever green in your mind; still I can repeat it. But the Vishnu Sahasranama and Rudram (Yajur Veda), Pursha Suktam (Rig Veda) etc have not entered into my mind; I could not have recite them without book.

 

Long Live Vallalar’s Name and Fame!!!

–Subham—

 

 

பின்னு செஞ்சடையாள், பேரழகி சிலை உடைய திருமுட்டம் (Post No.4846)

Written by London Swaminathan 

 

 

Date: 24 MARCH 2018

 

 

Time uploaded in London – 7-15 am

 

Post No. 4846

Pictures shown here are taken by london swaminathan

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

திருமுட்டம் என்றும், ஸ்ரீமுஷ்ணம் என்றும் அழைக்கப்படும் தலம் வைணவக் கோவிலும் சிவன் கோவிலும் இடம்பெற்ற தலம் ஆகும். இங்குள்ள வராஹ அவதாரக் கோலம் கொண்ட பூவராக- அம்புஜவல்லி தாயார் கோவில் மிகவும் பிரபமானது. இதே கோவிலில் குழந்தை அம்மன் சந்நிதி என்று ஒன்றும் இருப்பதும் வேறு எங்கும் காணாத புதுமை ஆகும்.

 

மார்ச் மாத (2018) முதல் வாரத்தில் இக்கோவிலுக்குச் சென்றேன். சில முக்கிய விஷயங்களை மட்டும் காண்போம்:-

கண்டவர் வியக்கும் அற்புதமான அழகிகளின் சிலைகள் உடைய கோவில் இது. ஒரு பெண்ணின் ‘பின்னல்’ தத்ரூபமாகக் காட்சி அளிக்கிறது. தமிழகத்தில் வேறு எங்கும் இது போலச் சிலை ஒன்றைக் கண்டதில்லை.

இன்னும் ஒரு புதுமை– அரச மரம், நித்ய புஷ்கரணி என்னும் குளம், பூவராஹ சுவாமி ஆகிய மூன்றும் விஷ்ணுவின் அம்சமாகக் கருதப்படுவதாகும்.

வராஹ அவதாரம், விஷ்ணுவின் பத்து முக்கிய அவதாரங்களில் ஒன்று. இங்கே இரண்டு கைகளையுமிடுப்பில் வைத்துக் காட்சி தருகிறார்.

 

திரு என்ற அடைமொழி இருந்தும் ஆழ்வார்களால் பாடப்பெறாத தலம் இது.

 

 

பெரிய சாது சந்யாசிகளுடன் தொடர்புடையது இத்தலம். காஞ்சி காமகோடி பீடத்தின் 25-ஆவது சங்கராசார்யார் இந்த ஊரில் அவதரித்தார்; அஹோபில மடத்தின் மூன்றாவது பட்டத்து அழகிய சிங்கர் இவ்வூரில் சமாதி அடைந்தார்

 

மத்வாசார்யார் தண்ட தீர்த்தத்தை இவ்வூரில் தோற்றுவித்தார். இங்கு நடக்கும் விழாவுக்கு கர்நாடகத்தில் இருந்து பக்தர்கள் வருகின்றனர்.

 

திருமுட்டத்திலும் விருத்தாசலம் சிவன் கோவிலிலும்  வாசல் அருகில் உள்ள சிறிய நாட்டிய சிலைகள் சிதம்பரம் 108 நடன கரணங்களை நினைவு படுத்துவதோடு இரண்டும் ஒரே சிற்பி கட்டியவை என்பதையும் காட்டி நிற்கிறது.

 

நாயக்கர், ஹோய்சாள (புலிகடிமால்) மன்னர்களின் பேராதரவு பெற்ற இக்கோயில் அவர்களுடைய கால கட்டிடக் கலையை காட்டுகின்றன.

 

எல்லா நாயக்கர் கோவில்களிலும் உள்ளதைப் போலவே ஆயிரம் கால் மண்டபம் 16 கால் மண்டபம் ஆகியனவும் உண்டு.

 

வேப்பமரத்தடியில் அமர்ந்திருக்கும் சப்த மாதர் சந்நிதியும், அரச மரமும் குழந்தைப் பேறு இல்லாதோருக்கு வரமளிக்கும் இடமாகக் காட்சி தருகிறது.

 

வானளாவிய கோபுரத்தின் ஏழு நிலை மாடங்களும் ஒன்பது கலசங்களும் வண்ணச் சிலைகளும் வருவோரை ‘வா வா’ என்று அழைப்பது போல உள்ளது.

 

புருஷசூக்த மண்டபம் எனப்படும் 16 கால் மண்டபத்தில் உள்ள குதிரை வீரர்களும் யாளியும் மெருகூட்டுகின்றன.

 

இங்கு செல்லுவோர் ஆற அமர இருந்து சிலைகளைச் சுற்றிச் சுற்றிப் பார்க்க வேண்டும். வாசலில் சதுரம் சதுரமான கட்டங்களில் உள்ள நடன மாதர் கோலங்களை கொஞ்சம் கொஞ்சமாக ரசிக்க வேண்டும்.

 

இங்குள்ள மூலவரின் சிறப்பு– அது சாளக்கிராமத்தினால் ஆன ஸ்வயம்பு என்பதாகும்

ஸ்வயம்பூ என்றால் – மனிதனால் செதுக்கப்படாத- ‘தான் தோன்றி’ என்று பொருள்.

சாளக்கிராமம் என்பது கடல் வாழ் உயிரினங்களின் வடிவம் பதிந்த கல் படிமங்கள் (fossils) ஆகும். இவை பல கோடி ஆண்டுகள் பழமை உடைத்து என்பதும் இதனால் பூமியின் வரலாறு துலங்கும் என்பதும் விஞ்ஞானம் படித்தோருக்கு விளங்கும்

கடல் வாழ் உயிரினங்களான சங்கு நத்தை முதலியவற்றின் சின்னங்களைத் திருமாலின் சங்கு சக்கரத்துடன் பக்தர்கள் ஒப்பிடுவர். இயற்கையிலும் ஒவ்வொரு மனிதரிடத்திலும் இறைமையைக் காண்பது இந்து மதத்தின் ஒப்பற்ற ஈடு இணையற்ற மஹத்தான தத்துவம்.

 

கோரைக் கிழங்கால் செய்யப்பட்ட லட்டு இந்தக் கோவிலின் சிறப்புப் பிரசாதம்- ஒவ்வொரு கோவிலிலும் ஒரு விநோதமான, சிறப்பான பிரசாதம்-  இருப்பது இந்து மதக் கோவில்களின் சிறப்பு அம்சம்.

 

விருத்தாசலம் அருகில் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இக்கோவில் விழாக் காலத்தில் அதிகமான பக்தர்களைக் கவர்ந்திழுக்கிறது. ஆண்டு தோறும் திருவிழாக் காலத்தில் சுவாமி எழுந்தருளி ஒரு மசூதியின் முன் நிற்கும்போது அவர்களும் மரியாதை செய்யும் சிறப்புடைத்து; இது ஆற்காட்டு நவாப் காலத்தில் துவங்கியது.

ஆண்டாள் சந்நிதி, உடையவர் சந்நிதி ஆகியன வைஷ்ணவர்கள் கொண்டாடும் சிறப்பு பெற்றவை.

இந்த ஊரில் ராமர், சிவன் கோவில்களும் உஅள.

 

திருமுட்டம் / ஸ்ரீமுஷ்ணம் என்றால் என்ன?

 

கேரளத்தில் ஒரு திருமுட்டம் கோவில் உளது; சபரிமலையில் திருமுட்டம் என்ற சொல் உளது. ஆனால் சம்ஸ்க்ருதத்தில் முஷ்ணம் இல்லை; ஆகவே முற்றம்= முட்டம்= என்பதே முஷ்ணம் ஆயிற்றோ என்று எண்ண வேண்டியிருக்கிறது.

 

சபரி மலையில் புனித முற்றம் (open, sacred court yard) உள்ள பகுதியை திரு முட்டம் என்பர்.

 

முற்றம்:– ஒரு கட்டிடம் அல்லது வீட்டுக்குள் இருக்கும் திறந்த வெளிப்பகுதி முற்றம் எனப்படும்.

 

 

–Subham–

ஓடுங்கள், ஓடுங்கள், உலகத்தோடு ஓடுங்கள்! (Post No.4845)

Date: MARCH 24, 2018

 

 

Time uploaded in London- 6-16 am

 

 

WRITTEN by S NAGARAJAN

 

 

Post No. 4845

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

நகைச்சுவை நடைச்சித்திரம்

 

ஓடுங்கள், ஓடுங்கள், உலகத்தோடு ஓடுங்கள்! – 1

 

ச.நாகராஜன்

 

நிர்வாகம் என்ன எதிர் பார்க்கிறது என்பதை எல்லா மேனேஜர்களும் அறிவது அவசியம் என்பதன் அடிப்படையில் எங்கள் அனைவருக்கும் புரிய வந்தது  தாரக மந்திரமான ஒரே வார்த்தை என்பது தான்!

 

எஃபிஸியன்ஸி – EFFICIENCY

ஆம், அது தான் வேண்டும்!

 

உடனடியாக ஒரு நண்பரைப் பார்க்கப் போனேன்.

அவர் நான் போனவுடன் ஒரு புத்தகத்தை ஓரமாக ஒளித்து வைத்துக் கொண்டார்.

 

எட்டிப் பார்த்தேன். ஊஹூம், ஒன்றும் தெரியவில்லை.

என்ன புத்தகம் என்று கேட்டேன். ஒன்றுமில்லை என்று மழுப்பி விட்டார். மண்டை குடைந்தது! என்ன புத்தகம்?!

 

எஃபிஸியன்ஸி பற்றிப் பேசி விட்டுக் கிளம்பினேன்.

எங்கும் இதே தான் பேச்சு என்றார்.

அடுத்த நாளும் அவர் ரூமுக்குச் சென்றேன் – தேவையில்லாவிட்டாலும் கூட!

அவர் ஒரு நிமிடம் என்று பாத்ரூமுக்குச் சென்ற போது புத்தகங்களைக் குடைந்தேன்.ஆஹா, கிடைத்தது அவர் படித்த புத்தகம்.

 

ஒன்று டேல் கார்னீகி எழுதிய ‘ஹௌ டு வின் ஃப்ரண்ட்ஸ் அண்ட் இன்ஃப்ளூயன்ஸ் பீபிள்’ இன்னொன்று நெப்போலியன் ஹில் எழுதியது – தி சக்ஸஸ்.

 

ஆஹா, வந்த காரியம் முடிந்தது.

குட்டி அரட்டையுடன் அங்கிருந்து கிளம்பினேன்.

டேல் கார்னீகி புத்தகத்தை முதலில் வாங்கினேன்.

அட்டை டு அட்டை படித்தேன். அற்புதம்.குறிப்புகள் எடுத்துக் கொண்டேன்.

 

என்ன கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறீர்கள் என்று நண்பர்களே கேட்டு விட்டனர்.

 

எஃபிஸியன்ஸி.

ஆனால் இது ரொம்ப நாள் ஓடவில்லை.

இன்னும் அதிக எஃபிஸியன்ஸி தேவையாம்.

ஓடினேன் கடைக்கு. நெப்போலியன் ஹில்லின் புத்தகத்தை வாங்கினேன். அடடா,சக்ஸஸ் ஃபார்முலா, எப்படித் தருகிறார்!

ஆழ்மனதை உபயோகியுங்கள்.

 

சரி, உபயோகிக்கிறேன்.

 

எல்லா டெக்னிக்கையும் அத்துபடி செய்து கொண்டு அலுவலகத்தில் ஆழ்மன எக்ஸ்பர்ட் போல நடந்தேன்.

சற்று விசித்திரமாக என்னப் பார்த்தார்கள்!

எல்லாம் ஆழ் மனம் பார்த்துக் கொள்ளும்!

இல்லை என்றது நிர்வாகம்.

சோம்பி இருக்கிறீர்களே!

 

வாருங்கள், தெரிந்து கொள்ளுங்கள் எம்.பி.ஓ -ஐ என்றது!

M.B.O.?!

 

MANAGEMENT BY OBJECTIVE!

ஆஹா, குறிக்கோளின்றிக் கெட்டேனே என்று அப்பர் பிரான் சும்மாவா பாடினார்?

 

இலக்கு என்ன?

எழுதி எழுதி நிர்வாகத்தின் குறிக்கோளை நோக்கி நடை பயில ஆரம்பித்தோம்.

 

அடடா, அதற்கு வந்தது அல்பாயுசு!

ஒரு நிமிடத்தில் ஒரு மேனேஜர் எல்லாவற்றையும் முடிக்க வேண்டுமாம்.

 

எப்படி ஐயா சாத்தியம் அது?!

ஒரு மேனேஜர் இருக்கிறார், அவர் டேபிளில் பேப்பரே கிடையாது. க்ளீன்! அவர் மாதிரி ஆகு!

யார் ஐயா அவர்? வியப்புடன் கேட்டேன்.

ஒன் மினட் மேனேஜர்!

ONE MINUTE MANAGER!

ஓடினேன் கடைக்கு!

சார், ஒன் மினட் மேனேஜர் புக் கொடுங்கள்.

சார், ஒரு சீரிஸே இருக்கிறது.

எல்லாவற்றையும் கொடுங்கள்.

 

இரவு முழுவதும் ஒன் மினட் மேனேஜர் ஆக ஐந்து மணி நேரம் – 300 நிமிடங்கள் செலவழித்தேன்.

டேபிளை க்ளினாக வைத்ததன் பலன், “அவருக்கு வேலையே இல்லை போல இருக்கிறது.இன்னும் கொஞ்சம் லோடை ஏற்றுங்கள்” என்று நிர்வாகம் கூற நான் முழி பிதுங்கி ‘ஙே’ என்று ஆனேன்.

 

ஒன் மினட்டைக் கழட்டி விட்டேன்.

மானேஜர்களுக்கு ஆரோக்கியம் தான் முக்கியம். ஓடுங்கள் ஒரு கோர்ஸுக்கு என்று துரத்தவே ஆரோக்கிய கோர்ஸுக்கு ஓடினேன்.

 

ஒரு நாள் முழுவதும் கேள்விகளால் துளைத்தனர்.

கடைசியில் கோர்ஸ் முடிய இன்னும் முப்பது நிமிடமே இருக்கும் சமயம் அரிய ஆரோக்கிய ரகசியத்தை அருளினர்.

இரு கைகளையும் விரல்களால் நன்கு மூடித் திறக்க வேண்டும்.

இதனால் ரத்தம் சீராக உடலில் பாயும்.

சீராக ரத்தம் பாய்ந்தால் ஆரோக்கியம் மேம்படும்.மன நலம் உயரும்!

 

அடடா, ஆரோக்கிய ரகசியத்தைக் கேட்டு அனைவரும் அலுவலகம் திரும்பினோம்.

வந்தது பாருங்கள், ஒரு ஜப்பானிய அலை!

அதில் மூழ்கியவன் பல ஆண்டுகளுக்கு அம்பேல் ஆகிப் போனேன்.

 

அது என்ன ஜப்பானிய அலை என்கிறீர்களா?

உலகின் டாப் நிறுவனங்களான டொயோடோ, சுஸுகி ஆகியவை மற்ற மேலை நாடுகளை விட அதிகம் உற்பத்தித் திறன் கொண்டுள்ளது.

 

அதன் டெக்னிக்குகளைக் கற்றுக் கொள்ளுங்கள்.

நிர்வாகத்தின் உத்தரவால் எல்லோரும் ஜப்பான் வாழ்க என்று கோஷம் போட்டோம்!

 

டசாடா இஷ்கு, குமுட்டி பஷ்கோ,கஸ்வாகி ..

என்ன, குழம்புகிறீர்களா?

 

பழைய ஜப்பானிய வார்த்தைகள் மனதில் நிழலாட ஒரு நிமிடம் குழப்பமாகி விட்டது.

 

வாருங்கள், ஜப்பானிய அலையில் மிதப்போம்.

 

ஓடுங்கள், ஓடுங்கள், உலகத்தோடு ஒடுங்கள் – வெற்றி பெற என்பதல்லவா நமது தாரக மந்திரம்!

 

அடுத்த கட்டுரையுடன் முடியும்

***

 

BEAUTIFUL SRIMUSHNAM TEMPLE (Post No.4844)

Written by London Swaminathan 

 

 

Date: 23 MARCH 2018

 

 

Time uploaded in London – 15-22

 

Post No. 4844

Pictures shown here are taken by london swaminathan

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

I visited Sri Mushnam temple in the first week of March 2018 and amazed to see the beautiful sculptures.

Some facts about the temple for future visitors:

 

Where is it?

Very near Vridhachalam (Virudhachalam) in Tamil Nadu. Easy to travel from Chidambaram.

 

Who is the presiding deity?

Sri Bhuvaraha swami/ Vishnu in Varaha avatara- with Goddess Ambujavalli (Lakshmi).

 

Varaha Avatara (boar incarnation) is one of the Ten famous Avataras of Lord Vishnu.

Whose temple is this?

Though it is very ancient, we have records from Vijayanagara Empire and Hoysala times.

 

What is the special features of this temple?

Beautiful sculptures with women’s hair do. The plait of the hair in some of the statues are very natural.

Devotees believe Lord Vishnu in three forms in this temple—Bhuvaraha, Bodhi/ Asvatta tree- Ficus religiosa and Nitya pushkarani- the tank.

 

During festival times, the deity is taken to a mosque in a nearby village and the Muslims pay respects to the god.

 

Colourful Tower

 

The tower is a seven storeyed one with colourful sculptures and on the top there are nine Kalsas.

The murti/ staue is accompanied by Bhdevi and Sridevi

 

The temple entrance has lot of carvings identical to Vridhachalam temple. Both must be constructed by the same sculptors.

Danda Theertham (water source) was made famous by Madhavacharya and people from Karnataka and other states visit this place during special festival the Theertham.

 

Significance of the Statue

The main statue is believed to be a Swayambhu (spontaneous appearance). It is made up of Salagrama. The meaning is fossil stone with the impressions of sea creatures. Hindus—particularly Vaishnavites—respect all the fossil stones with when and conch impressions as the form of Vishnu. In other parts of the world, these fossils are valued by the geologists and palaeontologists. They tell the story of the earth.

 

Here in Srimushnnam, it might have been an ancient stone with such symbols and later sculpted in to Bhuvaraha.

 

Another significance of this place is the birth place of one of the  Shankaracharyas of Kanchi Kamakoti peetam, samadhi of one of the Ahobilam jeeyars and the theertham established by Sri Madhwacharya.

There is a Shiva temple as well.

Geologically, historically and by religious Sthala puranas (local religious history) this is a very ancient place.

 

But it is not sung by the famous Tamil Vaishnavite saints- Alvars.

 

The sculptures at the gate show several dancing postures, which reminds one of Chidambaram temple.

 

One must do some research comparing these dance mudras in Chidambaram, Virudhachalam and Srimushnam.

 

 

Kuzanthai Amman Shrine

Another unsual thing about the temple is there is one Goddess shrine called Kuzanthai amman shrine (kuzanthai = baby).

Those who wish for issues pray here. There are seven goddesses (sapta matas) under a neem tree.

 

Every temple as some special features. The idol in the main shrine itself is unique. In other places Lord Vishnu appar with four hands with Conch and Wheel (Sanga, Chakra). Here he holds both of his hands on his waist reminding Panduranga.

 

You may hear many more specialities from the Bhattacharya/ priest when you visit the temple.

 

Every temple has a special prasada (eatable) and this temple has special laddu.

 

Like all the Nayak temples of Madurai, Tiruvannamalai, we have 1000 pillar Mandap/hall here.

16 Pillar Mandap

In all the Nayak temples we have 16 pillar mandap; here we have one Purushasukta mandap where Vedic recitation is held. It is aid that like the music pillars of Nayak temples, we can hear musical sound here with the help of stones. There are beautiful Yali (mirror image of Leo= leonine= lion like) and knights. All the sculptures in the temple are unique and beautiful.

Mandapa= hall

 

-subham–

 

 

இந்துக் கடவுள் மீது மாணவர் ‘தாக்குதல்’ (Post No.4843)

Srimushnam Temple– Stone slab on the ancient statues.

 

Written by London Swaminathan 

 

 

Date: 23 MARCH 2018

 

 

Time uploaded in London – 13-08

 

Post No. 4843

Pictures shown here are taken by london swaminathan

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

இந்த முறை இந்திய விஜயத்தில், முன்னர் பார்க்காத பத்து கோவில்களையும், முன்னர் பார்த்த மூன்று கோவில்களையும் தரிசித்தேன்; வைதீஸ்வரன்கோவில் எங்கள் குல தெய்வம் என்பதால் லண்டலிருந்து பயணம் செய்யும் ஒவ்வொரு முறையும் குல தெய்வ தரிசனம் உண்டு; சிதம்பரம், மயிலை கபாலீஸ்வரரைத் தரிசிக்க நேரம் இருந்ததால் மீண்டும் சென்றேன்.

 

பார்க்காத இரண்டு கோவில்களில் பார்த்த இரண்டு தாக்குதல்களை மட்டும் இதில் சொல்வேன்; கோவிலின் சிறப்புகளைத் தனியாகப் பகர்வேன்.

 

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் சிவன் கோவிலுக்குச் சென்றேன். அங்கு பிரகாரத்தில் பல ஓவியங்கள் மிகவும் பரிதாப நிலையில் இருந்தன. எல்லாவற்றுக்கும் ஒரு கும்பிடு போட்டுவிட்டு வேக நடையில் வந்தேன். அதில் ஒரு படம் என்னை SUDDEN STOP ஸடன் ஸ்டாப் – நிறுத்த– வைத்தது. படம் முழுதும் ஒரே எண்கள்.

உடனே நான் என் தம்பியிடம் சொன்னேன்:

அடக் கடவுளே! இவர்களுக்கு லாட்டரி டிக்கெட் நம்பர்களை எழுத வேறு இடமே இல்லையா? இப்படி எழுதினால், விழக்கூடிய பரிசுகளையும் ஆண்டவன் விழாமல் செய்து விடுவானே! என்றேன்

 

என் தம்பி- மதுரையில் கல்லூரி பிரின்ஸிபாலாக இருந்தவன். மாணவர்களின் நாடியைப் பிடித்துப் பார்த்தவன். அவன் சொன்னான்-

இல்லை, இல்லை- இவை அனைத்தும் ஹால் டிக்கெட் எண்கள் HALL TICKET NUMBERS  என்று; பரீட்சையில் குறுக்கு வழியில் பாஸாக இப்படியெல்லாம் முயற்சி!

 

நிற்க- சாகர டயத்துல (இறக்கும் நேரத்தில்) சங்கரா, சங்கரா என்றால் கூட உதவுவான். ஆனால் படிக்காமலேயே ஹயக்ரீவர் படத்தில் எழுதினால் உதவுவானா?

பிரகாரத்தில் இருந்த ஹயக்ரீவர் படத்தில் இப்படி ஹால் டிக்கெட் HALL TICKET (பரீட்சை மண்டபத்தில் நுழைவதற்கான- அனுமதிச் சீட்டு) என்களை எழுதி இருந்தனர்.

 

சிவன் கோவிலில் ஹயக்ரீவர் இருந்தது அதிசயமே. ஆனால் அங்கு கண்டதெல்லாம் தற்கால ஓவியங்களே.

யார் அந்த ஹயக்ரீவர்?

 

விஷ்ணுவின் அவதாரங்கள் பத்து — என்பது பொதுவான கணக்கு; ஆனால் பாகவதம் முதலிய பரந்தாமன் புகழ் பாடும் நூல்களில் இருபதுக்கும் மேலான அவதாரங்களின் பட்டியல் உள்ளது. வான் புகழ் வள்ளுவனோ — திருவள்ளுவ ஐயங்காரோ–

(திருவள்ளுவர் ஐயரா, ஐயங்காரா? என்ற எனது ஆராய்ச்சிக் கட்டுரையில் மேல் விவரம் காண்க)

ஆயிரக்கணக்கான அவதாரங்கள் உண்டு என்கிறான்.

 

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப்படும்  – குறள் 50 என்பான்.

 

யாரெல்லாம் அறவழியில் நின்றனரோ அவர்கள் எல்லோரும் ஆகாயத்தில் (உச்சியில்– நமக்கும் மேலே) இருக்கும் கடவுள் என்பான்.

 

ஆகையால்தான் இந்துக்கள் நட்சத்திரங்களுக்குக்கூட ஸப்தரிஷி, அகஸ்தியர், துருவன் என்று பெயர் சூட்டியுள்ளனர். நிற்க- SUBJECT-ஸப்ஜெக்டுக்கு வருவோம்.

 

குதிரை முகக் கடவுள்  ஹயக்ரீவர் — விஷ்ணுவின் அவதாரங்களில் ஒருவர். அறிவுக்கும், விவே கத்துக்கும் உறைவிடமானவர். அவரை வணங்குவோருக்கு ஸரஸ்வதி தேவியின் பரிபூர்ண கடாக்ஷம் (கடைக்கண் பார்வை) இருக்கும்.

 

ஹயக்ரீவரை வழிபடுவது சாலச் சிறந்தது; ஆயினும் அவர் படம் மீது இப்படித் தாக்குதல் — கிறுக்கல்– நடத்துவது நலம் பயக்காது.

 

ஸ்ரீமுஷ்ணம் கோவிலிலும் இப்படி ஹயக்ரீவரைப் படாதபாடு படுத்தி இருந்ததாக நினைவு. நிற்க

 

பல கோவில்களில் மாணவ, மாணவியர் கூட்டம் கூட்டமாகக் கும்பிட்டுக் கொண்டிருந்தனர். அட! பக்தி பெருகிவிட்டதே என்று மெய் சிலிர்த்தேன். பிறகுதான் புரிந்தது இது பகவத் கீதையில் கண்ணன் சொல்லும் ‘’கர்மண்யேவாதிகாரஸ்தே, மா பலேஷு  கதாசன’’- வகையறா அல்ல என்பது.

‘செயலைச் செய்; அதன் பலன் மீது பற்று வைக்காதே’ – என்பது பகவான் கிருஷ்ணன் பகவத் கீதையில் அருளிய முக்கியப் பொன்மொழி.

 

கோவிலிலோ குழந்தைகள், கருமத்தின் பலனை எதிர்பார்த்துத் தொழுதனர்– பரவாயில்லை- இது முதல்படிதானே- முன்னேறட்டும்.

Virudhachalam Sivan Temple

 

காதலர் தினமும் சிவராத்ரியும்

 

இத்தருணத்தில் வேறு ஒரு விஷயத்தையும் உங்களுடன் பகிர்வது சாலப் பொருந்தும். ‘’இடமாறு தோற்றப் பிழையாக இராது’’– என்றே எண்ணுவேன்.

 

எனது அண்ணன் குடும்பத்தின் இனிய நண்பர் ரமேஷ் ராமசாமி. அவருடன் பல்வேறு விஷயங்களைக் கதைத்தபோது ஒரு துணுக்கு வெளியானது.

 

“அண்ணா, எனக்கு ஒரே ஆச்சர்யம். ஆண்டுதோறும், சிவராத்ரி இரவில் சென்னையிலுள்ள எல்லா சிவன் கோவில்களுக்கும் செல்லுவேன்; இவ்வாண்டு சிவராத்ரியின் போது எல்லாக் கோவில்களிலும் கூட்டம் மிகமிகக் குறைவு. ஏன் என்றே தெரியவில்லை”.

 

நான் சொன்னேன்

“நீ பசி மயக்கத்தில் இருந்திருப்பாய். சிவராத்ரி உபவாசத்தில் கண்ணை மறைத்திருக்கும்:

 

இல்லை அண்ணா- எல்லா கோவில்களிலும் பிரசாதமும் கிடைக்கும்.

 

அடக் கடவுளே! இது தெரிந்தால் நானும் இரவு முழுதும் கண்விழித்து சிவராத்ரி ”உபவாஸம்” இருப்பேனே என்று JOKE ஜோக் அடித்துவிட்டு வேறு ஸப்ஜெக் SUBJECTSட்கள் பற்றிப் பேச ஆரம்பித்தோம்.

 

 

அவரிடன் சிங்கப் பெருமாள் கோவில், மயிலம், திருவக்கரை, ஸ்ரீமுஷ்ணம் போன்ற பல கோவில் தலங்கள் பற்றி யோஜனைகள் பெற்று மறுநாள் நானும் என் தம்பியும் காரில் ஏறினோம். எனக்கு திடீரென்று தூக்கிவரிப்போட்டது- புத்தர் போல ஞானோதயம் ஏற்பட்டது.

 

காரில் சென்றவாறே என் தம்பியிடம் சொன்னேன்;

அடக் கடவுளே ரமேஷ் சொன்ன விஷயத்தில் பெரிய தாத்பர்யம் இருக்கிறது. இப்பொழுது ஞாபகத்துக்கு வருகிறது. பிப்ரவரி 13 செவ்வாய்க் கிழமை சிவராத்ரி-  பிப்ரவரி 14, 2018 புதன்கிழமை செயின்ட் வாலன்டைன் டே ST VALENTINE’S DAY– காதலர் தினம். அதனால்தான் சிவராத்ரிக்குக் கூட்டம் குறைவு. எல்லோரும் காதலர் தினத்துக்கு லீவு போட்டு டிக்கெட் புக் பண்ணியிருப்பர். ஆகையால் சிவ பெருமானை இரண்டாம் இடத்துக்குத் தள்ளிவிட்டனர் போலும் – என்றேன்

 

இது எனக்கு திடீரென்று எப்படி ஞாபகத்துக்கு வந்தது என்றால்– வாரம்தோறும் லண்டன் நார்த் விக் பார்க் ஹாஸ்பிடலில் NORTHWICK PARK HOSPITAL, LONDON இந்துக்களுக்கு 20 நிமிடம் ஒதுக்கியுள்ளனர். புதன் கிழமை தோறும் பிராரத்தனை நடத்துவோம்; பிப்ரவரி 14 புதன் மட்டும் உங்கள் கூட்டத்தை ரத்து செய்துவிடுங்கள் என்று கிறிஸ்தவ குருமார் எங்களிடம் வேண்டிக்கொண்டார். நாங்களும் அதை ஏற்றுக்கொண்டோம்; அவர்களைப் பொருத்தவரை வாலன்டைன் ஒரு புனிதர். அதற்கும் காதலுக்கும் சம்பந்தமில்லை.

 

 

கோவில் மீது அதிகாரிகள் தாக்குதல்!

 

நாங்கள் சென்ற சில கோவில்களில், எலெக்ட்றிகல் பிட்டிங்க்ஸ், கற்பலகைகளை வைத்து, ஓவியங்களையும் அழகிய சிலைகளையும் மறைத்து எழுப்பி இருந்தனர்.

யார் டொனேஷன்/ DONATION கொடுத்ததில் இது வந்தது அல்லது யார் இதை என்று திறந்து வைத்தனர் என்றெல்லாம் கற்பலகை  , எழுப்பி, சிமென்ட் பூசி உறுதியாகச் சிலைகளை மறைத்தனர். சில கோவில்களில் ட்யூப் லைட்டின் வெளிச்சத்தையும் மறை க்கும் அளவுக்கு உபயதாரரின் பெயர்கள் பிரகாஸித்தன!!

 

கடவுள் எல்லோருக்கும் நல்ல புத்தியைக் கொடுப்பாராக..

 

சென்ற ஆகஸ்ட் மாதம் இந்தியாவுக்கு வந்தபோது தஞ்சை ஜில்லாவில் ஒரு பிரபல கோவிலுக்குச் சென்று இருந்தோம். பட்டர் எங்கே என்று கேட்டோம்; இதோ வீட்டுக்குப் போயிருக்கிறார்; சில நிமிடங்களில் வந்துவிடுவார் என்று கோவில் சிப்பந்தி உரைத்தார்.

சொன்னபடியே பட்டர் விரைந்து வந்தார்; கையில் பிளாஸ்க் FLASK- கூடவே ஒரு டம்ப்ளர். அழகாக சந்நிதியின் ஒரத்தில் சுவாமிக்கு முன்னால் சம்மணம் போட்டு அமர்ந்தார். கொஞ்சம் கொஞ்சமாகக் காப்பியை– ஆவி பறந்தது– என் நாக்கிலும் ஜலம் ஊறியது– ரசித்து, ருசித்துக் குடித்தார். சுமார் பத்து நிமிடங்கள் உருண்டு ஓடின. கையைக் கொஞ்சம் ஜலம் வைத்துத் துடைத்துக் கொண்டார்.

 

யார் யாரெல்லாம் அர்ச்சனைக்கு வந்துள்ளீர்கள்? தட்டையும் அர்ச்சனை சீட்டையும் கொடுங்கோ என்றார். நாங்களும் பயபக்தியுடன் தட்டைக் கொடுத்தோம்

 

கடவுளே இவருக்கு நல்ல புத்தியைக் கொடு- என்றும் பிரார்த்தித்தோம்.

 

திராவிட ரவுடியுடன் சந்திப்பு

பல ஆண்டுகளுக்கு முன்னர் குல தெய்வ தரிசனத்துக்காக வைதீஸ்வரன் கோயிலுக்குச் சென்றபோது இதைவிடக் கொடுமையான சம்பவம் நடந்தது–

 

கோவில் உண்டியல் பணத்தை எண்ணும் ஒரு பெரிய “கும்பல்” வட்டமாக உட்கார்ந்து இருந்தது. பணம் எண்ணுவதை ஆவலோடு நானும் வேடிக்கைப் பார்த்தேன்; திடிரென்று பணம் எண்ணும் ஒருவர் வாயில் இருந்த ரத்தச் சிவப்பான வெற்றிலை எச்சிலைத் துப்பினார்- பிரகாரத்திலேயே–!!! பக்கத்தில் பார்த்தால் அவர் துப்பிய எச்சல் நிறையவே இருந்தது- அருவெறுப்பின் சிகரம்- அசிங்கத்தின் உச்சம்! ஒரு முறை…. முறைத்தேன். அவரும் பூனை முறைப்பது போல என்னைப் பார்த்து ஒரு முறை….. முறைத்தார். எனக்குப் பயம் வந்துவிட்டது நைஸாக நழுவிவிட்டேன். இது என்ன அக்கிரமம்? கடவுளுக்கு முன்னாலேயே இப்படித் துப்புகிறானே – என்று

 

அதைக் கேட்டுக் கொண்டிருந்த யாரோ ஒருவர் அஸரீரி குரல் கொடுத்தார்.

 

கண்ட கண்ட தோழான் துருத்தி,  பள்ளன் பறையனை எல்லாம் கோவில் அதிகாரியாகப் போட்டால் இப்படித்தான் ஸார் நடக்கும் என்று.

 

என்று திராவிட ரவுடிகள் கோவிலில் புகுந்தார்களோ அன்றே கடவுள் வெளியேறிவிட்டார் போலும்; இல்லாவிடில் அவர்கள் கோவில் நகைகளை எல்லாம் மாற்றி, கோவில் சிலைகளை எல்லாம் விற்று, போலிகளை வைத்ததால் கடவுளுக்கு பவர் POWER போய்விட்டதோ என்னவோ.

“அரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்” என்ற தமிழ்ப் பழமொழியில் நம்பிக்கை கொண்டு விடை பெற்றேன்

 

–சுபம், சுபம் —

 

பாரதி போற்றி ஆயிரம் – 64 (Post No.4842)

PICTURE OF ACTORS FROM BHARATIYAR DRAMA (ACTED BY RAMANAN AND DIRECTED BY RAMAN)

Date: MARCH 23, 2018

 

 

Time uploaded in London- 7-36 am

 

 

COMPILED by S NAGARAJAN

 

 

Post No. 4842

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

 

  பாடல்கள் 464 முதல் 475

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

கலைமாமணி கவிஞர் கே.பி.அறிவானந்தம் பாடல்கள்

பாரதி பத்துப்பாட்டு

நூலில் பத்து அத்தியாயங்கள் உள்ளன. இங்கு மூன்றாம் அத்தியாயமான பராசக்தி பார்வையில் பாரதி தொடர்கிறது.

மூன்றாம் அத்தியாயம்: பராசக்தி பார்வையில் பாரதி

10 முதல் 21 வரை உள்ள பாடல்கள்

 

 

பக்தி யிலக்கியம் என்றே தமிழைப்

    பாரே போற்றிடினும்

சக்தி என்புகழ் பாடிய நூல்கள்

   சாற்றும் படியில்லை

இக்க ணம்வரையில் எனக்கோர் காவியம்

    ஏனோ எழவில்லை

தக்கநற் பட்டியல் இட்டுப் பார்த்தால்

    தமிழ்நூல் அதிகமில்லை

 

சங்க இலக்கியத்துள் – சிவத்தைச்

சார்ந்தெனைச் சிலவரிகள் பாடிவைத்தார்

தங்கும் சிலம்பினிலே – இளங்கோ

தகவறு கொற்றவைத் துதியுரைத்தான்

 

கலிங்கத் துப்பரணி – கூத்தன்

கவித்துவ தக்கயா கப்பரணி

வலிமையைத் தருகின்ற – காளியாய்

வடித்தென் பெருமையைச் சாற்றினவே

 

குமர குருபரனோ – என்னைக்

குழந்தையாய் கண்டினிய கவிபாடினான்

அமர்ந் ததனைப்போலே – புலவோர்

அரும்பிர பந்தங்கள் சிலபாடினார்

 

தாயுமா னவனென்மேல் – செய்ய

தமிழ்ப்பதி கம்சில வடித்திட்டான்

ஏயும் வடிவுடைமாலை – வடலூர்

இராம லிங்கமும் கொடுத்திட்டான்

 

அபிராமி பட்டன்தான் – அரிய

அந்தாதி ஒன்றினைச் சூட்டிநின்றான்

அபிமானத் துடனதனை – இந்நாள்

அனைவரும் ஒருமனதாய் ஓதுகிறார்

 

என்புகழ் பாடயிவை போதுமோ?

  இனியொரு வரைத்தமிழ் காணுமோ?

என்றயென் ஏக்கத்தைத் தீர்க்கவே

   இங்குவந் தாய்நீயும் பாரதி

உன்செயல் யாவுமென் செயலதாய்

   உரைத்திட்ட நீசக்தி தாசனாய்

என்றுமென் புகழ்தனைத் தீட்டினாய்

   எண்ணற்ற கவிமலர்கள் சூட்டினாய்

 

எந்தன்மேல் அரியநற் காவியம்

    ஏதும்நீ இயற்றாமல் போயினும்

செந்தமிழ்க் கூறிடும் பிரபந்தம்

    சிறப்பாக உருவாக்கா திருப்பினும்

சந்தங்கள் நிறைந்தநற் பாக்களால்

    சக்தியென் புகழ்நாளும் பாடினாய்

இந்நாளுக் கேற்றபடி தந்ததால்

    எல்லோரும் என்புகழைப் பாடினார்

 

தேசவிடு தலைக்குந்தன் பாடல்கள் யாவும்

தேவையென்ற நிலை தொடர்ந்திட்ட போதும்

நேசமுடன் தேவியாவும் தனக்கெனவே கேட்டாள்

நறுமலர்கள் நாளுமிங்கு சூட்டிடுவேன் என்றாய்

 

பாசமுள்ள நின்வாழ்வில் சோதனைகள் யாவும்

பதைத்திடவே வந்திடினும் பலகவிதை தந்தாய்

பூசலற இக்கவியைச் செய்ததுநா னல்ல

புகலரும் பராசக்தி தானென்று சொன்னாய்

 

மூன்றுகா தலெனும் அரியநற் பாட்டில்

முளரிமா திருவரை முன்னுரைத் தாலும்

தோன்றிடும் காளியே அருளுவாள் யாவும்

தோத்திரம் செய்வமென என்திறம் கண்டாய்

 

ஆயிரம் தெய்வமென அறிவிலிகள் செல்வார்

அறிவொன்றே தெய்வமென சொன்னாய்நீ என்பார்

ஆயினதை பராசக்தி பூணுநிலை யென்றே

அறுதியிட்டுத் தெளிவுறவே ஆங்கதனில் சொன்னாய்

பராசக்தி பார்வையில் பாரதி தொடரும்

 

தொகுப்பாளர் குறிப்பு:
கவிஞர் கே.பி. அறிவானந்தத்தைக் கடிதம் மூலம் தொடர்பு கொண்ட போது, பாரதிப் பத்துப்பாட்டை வெளியிட மகிழ்ச்சியுடன் அனுமதி தந்தார். அவருக்கு எமது நன்றி

 

–Subham–

SUPERSTITIOUS STUDENTS’ ‘ATTACK’ ON HINDU GOD!! (Post No.4841)

Exam Fever- Student devotees inside Sri Mushnam Temple

Written by London Swaminathan 

 

 

Date: 22 MARCH 2018

 

 

Time uploaded in London – 20-46

 

Post No. 4841

Pictures shown here are taken by london swaminathan

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

When I went to India to attend the fifth World Saiva Siddhanta Conference held in Chennai in the first week of March, 2018, I visited a few temples which I had never seen. A friend of mine Ramesh Ramasamy of Chennai gave us some ideas.

 

Casually he mentioned that he used to visit all the Siva Temples the whole night on Shivratri day and to his surprise there was less crowd in all the temples this year. I told him probably it was only his illusion. But he insisted again that the difference in the number of devotees was very visible. I couldn’t give him any reasonable explanation.

 

When we were going in the car it suddenly flashed on my mind that this year Shivaratri fell on Tuesday the 13th February. The next day was St.Valentines day! So now I knew why there was less crowd the previous night. They have already decided to use 14th  night instead of 13th for something else!

Hayagrivar inside Virudhachalam Sivan Temple

This shows that for many, Bhakti or devotion to god is very seasonal or flexible. The reason I am writing about this is, I was surprised to see students’ scribbling on a picture in the Vridhachalam Shiva temple. It was God Hayagreeva’s picture. I told my brother, “what is this nonsense? people even started writing lottery ticket numbers on God’s picture?”. My brother who was the principal of a college told me, “No they are hall ticket numbers of the students. They believe that by writing the hall ticket numbers on the picture would get them good marks since Hayagriva is considered the God of Wisdom and Knowledge!”

 

Hayagriva is considered one of the Avatars (incarnations) of Lord Vishnu. There is nothing wrong in believing in the power of Lord Hayagriva—the horse faced God. But writing the hall ticket numbers on the picture of Lord Hayagriva and spoiling the temple painting is a wrong thing.

I also saw lot school students frequenting Sri Mushnam Vishnu (Bhuvaraha) temple. Then only I realised that it was Exam time in Tamil Nadu. A group of girls were going from one shrine to another with great devotion. Like elders looking for a short cut to solve their problems, youngsters also try to get good marks in the easy way.

Sivan Temple, Virudhachalam

What to do next?

Temple authorities must erect some fence or barrier around Goddess Sarasvati and Hayagriva. I saw this in Sri mushnam temple as well.

 

–subham–

 

மயிலம் முருகன் கோவில் தரிசனம் (Post No.4840)

Written by London Swaminathan 

 

 

Date: 22 MARCH 2018

 

 

Time uploaded in London – 13-23

 

Post No. 4840

Pictures shown here are taken by london swaminathan

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

நாங்கள் மதுராந்தகம், வடலூர்திருக்கோவிலூர், வைதீஸ்வரன் கோயில் ஆகிய நான்கு இடங்களைக் காண திட்டம் இட்டோம்; அது நிறைவேறியது; அத்தோடு போனஸாக மேலும் சில இடங்கள் கிடைத்தன (March 7 to 11, 2018)

சில நண்பர்களின் ஆலோசனைப்படி சிங்கப் பெருமாள் கோவில், மயிலம், திருவக்கரை, ஸ்ரீமுஷ்ணம், விருத்தாசலம், சிதம்பரம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொண்டோம்; எல்லா இடங்களிலும் இறையருள் கிடைக்கப் பெற்றோம்.

 

உண்டோ குரங்கேற்றுக்கொள்ளாத கொம்பு?’

 

அருணகிரிநாதரின் பாடல் (திருப்புகழ்) பெற்ற தலம் மயிலம். இது திண்டிவனத்தில் இருந்து 15 கிலோமீட்டர், புதுச்சேரியில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கோவில் ஒரு சிறிய மலை மீது அமைந்துள்ளது; ‘கார்கள் கோவிலின் வாசல் வரை செல்லும். பல படிகள் ஏறி சந்நிதியை அடையலாம். நாங்கள் சென்றபோது கூட்டம் இருந்தது.

 

மயிலம் என்பது மயில் என்னும் பறவையின் காரணமாகத் தோன்றியது. முருகனிடம் தோற்ற சூரபத்மன் முருகனின் வாஹனமான மயிலாகத் தன்னை ஏற்றுக்கொள்ள தவம் செய்த இடம் என்பது ஒரு வரலாறு.

 

மயில் வடிவத்தில் தோன்றும் மலை என்பதால் மயிலம் என்று பெயர் பெற்றது என்பது மற்றொரு வரலாறு.

மயிலம் கோவில் சுவரில் நல்ல ஓவியங்கள் (தற்காலத், தவை) இருந்தன. ஆனால் கோவிலுக்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லததால் எடுக்கவில்லை. ஒரு அழகிய சிலயை மட்டும் படம் எடுத்தேன்.

 

இது பொம்மபுர ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்

மயிலம் வரலாறு, பொம்மபுர ஆதீன வீர சைவ மடத்தின் வரலாறு ,இங்கு இருந்த பாலசித்தர் வரலாறு, பரம்பரையாக வந்த ஆதீனகர்த்தர் வரலாறு ஆகியவற்றைக் கூறும் விஷயங்கள் விக்கி பீடியாவில் உள்ளது .

 

இங்கு முருகன், வள்ளி-தெய்வானை திருமண கோலத்தில் காட்சி தருகிறார். வெளியில் ஒரு கடையில் தேனும்- தினை மாவும் கிடைக்கும் என்று எழுதி இருந்தது பழங்காலக் கதைகளை நினைவுபடுத்தியது. ஒரே பகற் பொழுதில் பல கோவில்களைக்  குறிவைத்ததால் ஆழ்ந்து ஆராய முடியவில்லை.

 

திருப்புகழ் பாடல் 546 ( மயிலம் ) 

தனதந்த தானன தானா தானா
தனதந்த தானன தானா தானா
தனதந்த தானன தானா தானா …… தனதான

கொலைகொண்ட போர்விழி கோலோ வாளோ
விடமிஞ்சு பாதக வேலோ சேலோ
குழைகொண்டு லாவிய மீனோ மானோ …… எனுமானார்

குயில்தங்கு மாமொழி யாலே நேரே
யிழைதங்கு நூலிடை யாலே மீதூர்
குளிர்கொங்கை மேருவி னாலே நானா …… விதமாகி

உலைகொண்ட மாமெழு காயே மோகா
யலையம்பு ராசியி னு஡டே மூழ்கா
வுடல்பஞ்ச பாதக மாயா நோயா …… லழிவேனோ

உறுதண்ட பாசமொ டாரா வாரா
எனையண்டி யேநம னார்தூ தானோர்
உயிர்கொண்டு போய்விடு நாள்நீ மீதா …… ளருள்வாயே

அலைகொண்ட வாரிதி கோகோ கோகோ
எனநின்று வாய்விட வேநீள் மாசூ
ரணியஞ்ச ராசனம் வேறாய் நீறா …… யிடவேதான்

அவிர்கின்ற சோதிய வாரார் நீள்சீ
ரனலங்கை வேல்விடும் வீரா தீரா
அருமந்த ரூபக ஏகா வேறோர் …… வடிவாகி

மலைகொண்ட வேடுவர் கானு஡ டேபோய்
குறமங்கை யாளுட னேமா லாயே
மயல்கொண்டு லாயவள் தாள்மீ தேவீழ் …… குமரேசா

மதிமிஞ்சு போதக வேலா ஆளா
மகிழ்சம்பு வேதொழு பாதா நாதா
மயிலந்தண் மாமலை வாழ்வே வானோர் …… பெருமாளே.

(Thiruppugaz from tamilvu)

 

 

–SUBHAM–