புதிய சேனலில் காணொளிக் காட்சிகளைப் பார்க்க அழைப்பு இது! ( (Post No..5822
Written by S Nagarajan
Date: 24 DECEMBER 2018
GMT Time uploaded in London – 8-02 am
Post No. 5822
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
ச.நாகராஜன்
டிசம்பர் 14, 2019 அன்று www.youtube.com இல் ‘ASacredSecret’ (ஒரே வார்த்தை, மூன்று காபிடல் லெட்டர்ஸ்- இதை மறக்காமல் பதிவு செய்ய வேண்டும்; சப்ஸ்க்ரிப்ஷன் இலவசம்) என்ற சேனல் துவங்கப்பட்டுள்ளது.
இதில் அறிவியல் அறிவோம், ஆன்மீக அறிவியல் அறிவோம், ஆங்கிலம் அறிவோம், படப் பாடல்களோடு ஒரு பயணம் செய்வோம் உள்ளிட்ட ஏராளமான பகுதிகள் இடம் பெறத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
14-12-18 முதல் 21-12-18 முடிய 12 காணொளிக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.இவற்றில் இரண்டு ஆங்கிலத்திலும் மற்ற பது தமிழிலும் உள்ளன.
முதல் அணுகுண்டு வெடிக்கப்பட்ட சோதனையில் ஒப்பன்ஹீமர் என்ன சொன்னார்?
அணுகுண்டு சோதனையில் அணுகுண்டு வெடிக்கப்பட்ட போது பத்திரிகையாளர்கள் ஓப்பன்ஹீமரிடம் எப்படி இருந்தது என்று கேட்ட போது அவர் என்ன சொன்னார்? அருகில் இருந்த ஜெனரல் என்ன சொன்னார்? இதில் காணலாம்.
கணித மேதை காஸின் வாழ்க்கையில் நடந்த மேலும் இரு சம்பவங்கள்
கணித மேதை காஸ் பள்ளியில் படித்த போது ஆசிரியர் ஒன்று முதல் 200 வரை உள்ள எண்களைக் கூட்டச் சொல்ல காஸ் உடனே பதில் சொன்னார்? எப்படி? ஐஸக் அஸிமாவ் அவர் பற்றிக் கூறும் இன்னொரு சம்பவமும் உண்டு. இதில் காணலாம்.
பிரபல பி.பி.சி. நேருக்கு நேர் நிகழ்ச்சி ஒன்றில் ஃப்ரீமேன் உளவியலாளர் கார்ல் ஜங்கைப் பேட்டி கண்டார். அப்போது நீங்கள் கடவுளை நம்புகிறீர்களா என்று அவர் கேட்ட போது ஜங் சொன்ன பதிலை இதில் காணலாம்.