108-ல் பதினான்கு காஞ்சியில்! கோவிலில் தங்க மழை! (Post No.6228)

Written by london swaminathan


swami_48@yahoo.com


Date: 5 April 2019


British Sumer Time uploaded in London – 7-33 am

Post No. 6228

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

subham

உடல் நலத்தைப் பாதிக்கும் பிளாஸ்டிக்! (Post No.6227)

Written by S Nagarajan


swami_48@yahoo.com


Date: 5 April 2019


British Summer Time uploaded in London – 6-59 am

Post No. 6227

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் ஏ அலைவரிசையில் 2-3-2019 அன்று காலை சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பகுதியில் ஒலிபரப்பட்ட உரை

உடல் நலத்தைப் பாதிக்க வைக்கும் பிளாஸ்டிக் பொருள்கள்!

ச.நாகராஜன்

பிளாஸ்டிக் பொருள்கள் அபாயம் என்பதை உணர்ந்தால் மட்டும் போதாது. அது ஏன் அபாயம் என்பதையும் நன்கு புரிந்து கொண்டோமானால் அதைத் தவிர்ப்பது சுலபமாகி விடும்.

பிளாஸ்டிக்கில் உள்ள இரசாயனப் பொருள்கள் மனித உடலில் உள்ள தைராய்ட் ஹார்மோன்களைப் பாதிக்கின்றன; இது வயதானவர்களையும் சரி, குழந்தைகளையும் சரி பாதிக்கவே செய்கிறது.

பிளாஸ்டிக்கில் உள்ள நச்சுப் பொருளானது தைராய்டை அடைப்பதால் தைராய்டின் சமச்சீர்த்தன்மை பாதிப்புக்குள்ளாகிறது. அத்தோடு  எஸ்ட்ரோஜென், டெஸ்டோஸ்டெரோன் ஆகியவையும் பாதிப்புக்குள்ளாகின்றன. ஆகவே அதிக பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துவோரின் உடலில்  அதிக பாதிப்பு  ஏற்படுகிறது. இயற்கையாக ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டிய இரத்தத்தில் நச்சுப் பொருள்களான பி.பி.ஏ மற்றும் தாலேட் (BPA, & Phthalates) ஆகியவை சேர்கின்றன.

மைக்ரோவேவ் சாதனங்களில் பிளாஸ்டிக் பொருள்களை வைக்கலாம் என்பது பொதுவாகக் கூறப்படுகிறது. அவை பத்திரமானவை என்றும் கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் பார்க்கப்போனால் எந்த பிளாஸ்டிக் பொருளும் பாதுகாப்பு இல்லாதது; பத்திரமாகப் பயன்படுத்துக் கூடியது அல்ல. இதை நன்கு புரிந்து கொள்ளல் இன்றைய வாழ்க்கை முறையில் அவசியம்.

இதை ஆய்வுகள் உறுதிப் படுத்துகின்றன.

கர்ப்பிணிப் பெண்கள் பிளாஸ்டிக் பொருள்களில் பாக் செய்யப்பட்ட ப்ரெட், வறுத்த கொரிக்கும் பண்டங்கள், பிளாஸ்டிக் பாட்டில்களில் வைக்கப்படும் நீர், ஜுஸ், ஆகியவற்றைச் சாப்பிடுகின்றனர். அத்துடன் மட்டுமல்லாது இளம் குழந்தைகளுக்கு பிளாஸ்டிக் பாட்டில்களில் திரவ உணவைத் தருகின்றனர்.

பாட்டில்கள் சுத்தம் செய்யப்படுகின்றன என்று சொல்லப்பட்ட போதிலும் கூட, வெந்நீரால் அந்த பிளாஸ்டிக் பாட்டில்கள் ஒவ்வொரு முறை சுத்தம் செய்யப்படும் போதும் பிளாஸ்டிக் பொருள்கள் சூட்டினால் இளகி குழந்தைக்குத் தரப்படும் உணவுடன் சேர்கின்றன.

ஆகவே இதைக் கருத்தில் கொண்டு பிளாஸ்டிக்கை கர்ப்பிணிகள் தவிர்ப்பதோடு தங்களுக்குப் பிறக்கும்  இளம் குழந்தைகளுக்கும்  பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தலைத் தவிர்த்தல் வேண்டும். இதற்குப் பதிலாக ஸ்டீல் அல்லது கிளாஸ் டம்ளர்களைப் பயன்படுத்தினால் மூன்றே நாட்களில் மிகப் பெரும் மாறுதலைக் காணலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆகவே பிளாஸ்டிக்கைத் தவிர்ப்போம்; உடல் நலம் காப்போம்; சுற்றுப்புறச் சூழலை மேம்படுத்துவோம்!

***

14 IMPORTANT VISHNU TEMPLES IN KANCHIPURAM! (Post No.6226)

Written by london swaminathan


swami_48@yahoo.com


Date: 4 April 2019


British Sumer Time uploaded in London – 21-29

Post No. 6226

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

There are 108 Divya Desams, i.e. holy temples of Lord Vishnu in India. Out of the 108, 14 temples are in Kanchipuram. This is the highest number in a singe place.  There is another fact which place Kanchi ahead of other holy places. There are over 108 temples in Kanchipuram alone. It was the capital city of the mighty Pallava Dynasty who ruled for 600 years. They were the pioneers of cave temples in Tamil Nadu. The temple is under the control of archaeology department.

The Palava Temples can be easily identified by their lion pillars. In Kanchipuram there are two famous Pallava Temples and one of them is Vaikunta Perumal temple. Since I have already visited other famous temples such as Kailasanatha, Kamakshi Amman, Ekmpareswar, Chitra Gupta, kumara kottam , Sankaracharya Mutt, I made it a point to visit only temples not seen before during my March 2019 visit,

I will give some interesting information in bullet points:-

Location:-

Not far from Kanchipuram Railway station and Bus stand.

Names of God and Goddess:-

God-Sri Vaikunta Perumal

Goddess – Vaikunha valli Thayar

Vimanam Type- Mukunda Vmanam

Shrine is in three tiers with Lord Vishnu in three poses.

Architecture and Sculptures

There are beautiful sculptures of Pallava Period. It is also known as Parameswara Vinngaram

Inscriptions and sculptures here tell us the story of Palava Dynasty. It gives full information of King Nandivarman of Pallava dynasty.

Mythological story:-

King Virosana of Vidarbha Desa had no issues for a long time. He prayed to Lord Kailasanatha of Kanchi and he had two sons. Lord Vishnu’s gate keepers/ Dwara Palakas were born as Pallavan and Villvan as sons to the king. They did Aswamedha yajna and Lord Vishnu appeared before them and the same pose can be seen even today.

Golden Rain

An amazing amount of gold is donated to gods in this shrine:-

The temple has inscriptions of eighth century .

Abhimanasiddhi alias Pallavan donated a bowl and image made up of 1000 gold coins.

During Dantivarman period (812 CE) a bowl weighing 10,000 kazanju was donated to the god.

Avani Chandra donated 3000 kazanju gold to the temple.

Thiruvarangan Manikkam donated lands to feed the  Vaishnavas attending a festival.

This temple was Sung by Tirumangai Azvar – Verses 1128-1137

–subham–

பிளாஸ்டிக் பொருள்களினால் உடலில் ஏற்படும் அபாயங்கள்! (Post No.6225

Written by S Nagarajan


swami_48@yahoo.com


Date: 4 April 2019


British Summer Time uploaded in London – 9-14 am

Post No. 6225

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

by      ச.நாகராஜன்

ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் ஏ அலைவரிசையில் 1-3-2019 அன்று காலை சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பகுதியில் ஒலிபரப்பட்ட உரை

நாம் அறிந்தோ அறியாமலோ விரும்பியோ விரும்பாமலோ நமது அன்றாட வாழ்க்கையில் பிளாஸ்டிக் புகுந்து விட்டது.

அன்றாடம் அலுவலகத்திற்கு மதிய உணவைக் கொண்டு செல்வதற்கான பாக்ஸ், நாம் பருகும் நீரை வைத்திருக்கும் பாட்டில், அன்றாட தானியம் மற்றும் இதர பொருள்களை பாக்கிங் செய்ய உபயோகப்படுத்தப்படும் பைகள், பழங்கள், பூ மற்றும் பிஸ்கட் ஆகியவற்றை வைக்கப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் ஷீட்டுகள் என இப்படி பட்டியலிட்டால் பிளாஸ்டிக் எப்படி நமது வாழ்க்கையில் ஊடுருவி இருக்கிறது என்பது புரியும்.

இந்த பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துவதில் மதம், நாடு, இனம், பால், அந்தஸ்து, வயது என்ற பேதமே இல்லை. எங்கும் பிளாஸ்டிக். எதிலும் பிளாஸ்டிக். ஆனால் இதனால் நமது உடல்நிலை பாதிக்கப்படுகிறது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? ஆம், நமது உடல்நலம் இந்த பிளாஸ்டிக்கால் பாதிக்கப்படுகிறது என்பதை ஆய்வாளர்கள் உறுதிப் படுத்தியுள்ளனர்.

டாக்டர் சௌம்யா பிரசாத் (Dr Soumya Prasad) என்னும் Ecologist – சுற்றுப்புறச் சூழல் வல்லுநர் நமது உடலில் 3 விழுக்காடு பிளாஸ்டிக் இப்போதே கலந்து விட்டது என்று கூறுகிறார்.

எல்லா பிளாஸ்டிக் பொருள்களும் பிபிஏ- BPA, தாலேட் – Phthalates போன்ற நச்சுப்பொருள்கள் அடங்கிய அடிடிவ்ஸ் (Additives) எனப்படும் கூட்டுப்பொருள்களைக் கொண்டுள்ளன. இந்தக் கூட்டுப்பொருள்கள் பல்வேறு வண்ணங்களுக்காகவும், மிருதுத் தன்மை மற்றும் வலு அடையவும், transparency எனப்படும் ஒளிபுகும் தன்மைக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன.

மிகவும் பளிச்சென்ற வண்ணத்துடன் ஒரு பிளாஸ்டிக் பாட்டில் இருக்கிறது என்றால் அதில் அதிக நச்சுடைய கூட்டுப்பொருள் கலக்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம். அது மட்டுமல்ல, பிஸ்கட், ஜூஸ், பருகும் நீர் ஆகியவை சிறிய அளவில் சிறிய பாக்கிங் வடிவத்தில் வருகிறது எனில் அதில் அதிக நச்சுத்தன்மை அடங்கி இருக்கிறது என்று பொருள். தாலேட் என்னும் இரசாயனப் பொருள் உடலில் டெஸ்டோஸ்டெரோன் அளவைக்(testosterone levels) குறைக்கும்; இதன் விளவாக விந்து எண்ணிக்கையும் (sperm count) குறையும்.

ஆகவே பிளாஸ்டிக் பொருள்களைத் தவிர்ப்போம். கடைகளுக்குச் செல்லும் போது   பேப்பரினால் ஆன அல்லது துணிகளினால் ஆன நமது பைகளைக் கூடவே கொண்டு செல்வோம்.

உடல் நலம் காப்போம்; அத்துடன் சுற்றுப்புறச் சூழலையும் காப்போமாக!


****

6 நாட்களில் 30 கோவில்கள்! சூறாவளி சுற்றுப் பயணம்! புதிய உண்மைகள்! (Post No.6224)

6 நாட்களில் 30 கோவில்கள்! சூறாவளி சுற்றுப் பயணம்! புதிய உண்மைகள்! (Post No.6224)


 Written by london swaminathan


swami_48@yahoo.com


Date: 4 April 2019


British Sumer Time uploaded in London – 5-49 am

Post No. 6224

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

மார்ச் 23, 2019  அன்று இந்தியாவுக்குச் சென்றேன். சென்னையிலிருந்து திண்டிவனம் வழியாக நாலு நாட்களுக்கு கோவில் விஜயம். பின்னர் 29-ம் தேதி காஞ்சீபுரம் விஜயம். லண்டனுக்கு விமானம் ஏறும் முதல் நாள் இரவில் ஏப்ரல் 2-ம் தேதி சென்னையில் கோவில்களுக்கு விஜயம். ஆக ஆறே நாட்களில் கண்டது என்ன?

30+ கோவில்கள்

செஞ்சி கோட்டை

கல்லணை

சகுந்தலா ஜகந்நாதன் மியூசியம், காஞ்சீபுரம்

சித்தர் , முனிவர் சமாதிகள்

புதிய அதிசயங்கள்

இந்த முறை நான் கண்ட புதிய அதிசயங்கள்:

1.கோவிலுக்குள் தங்கப் பல்லி தரிசனம்

2.கல் நடராஜர்- கிட்னி ஸ்டோன் Kidney Stone நோய் நீக்கும்

3.நமது விதியைத் திருத்தி (Fate Changing Horoscope Temple) எழுதும் ஜாதகக் கோவில்

4.செய்வினை, பேயை ஓட்டும் பேய் விரட்டும் (Ghost busters) மேடை

5.ஆண்டாள் பாடிய மணிக் கதவம் (Bell Door)

6.ஸ்ரீ பெரும்புதூரில் சினிமா போஸ்டர் ஸைசுக்கு 108 திவ்ய தேச ஓவியங்கள்

7.கருவூர் சித்தர், சாங்கு சிவலிங்க சித்தர், சானு முனிவர், நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் ஜீவ சமாதிகள்

8.தேர்தல் (Election Inscription)  கல்வெட்டு- உத்தரமேரூர்

9.சகுந்தலா ஜகந்நாதன் மியூசியத்தில் மீன் வடிவ மகர யாழ்

10.உறையூர் கோவிலில் கோழி யானை சண்டையிடும் சிலை

500 புகைப்படங்கள்

இவை ஒவ்வொன்று பற்றியும் படங்களுடன் கட்டுரை எழுதுவேன்.

டாக்டர் நாகசாமி சொன்ன அதிசய விஷயங்கள்!

லண்டனுக்கு விமானம் ஏறுவதற்கு சில மணி நேரத்துக்கு முன்னால் தொல்பொருட்  துறை பேரறிஞர் டாக்டர் நாகசாமியைச் சந்தித்து 90 வயது மூதறிஞருக்கு பணிவான வணக்கம் செலுத்தினேன். அவர் கர்நாடக இசைக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது என்ற அதிசயத் தகவலை  (ஆராய்ச்சிச் சொற்பொழிவில் கூறியதைச்) சொன்னார். தமிழ்நாட்டின் பெயரில் ஒரு ராகம் (திராவிடி),  ஆப்கனிஸ்தான் (காந்தாரி) பெயரில் ஒரு ராகம், வங்க (கௌலை)தேசம் சார்பில் உள்ள ராகம், மத்தியப்பிரதேசம்( மாளவம்) பெயரில் உள்ள ராகங்கள்  பற்றி விளக்கினார். தொல்காப்பியம் ஒரு இலக்கண நூல் மட்டுமன்று; அது ஒரு இசை நூல் என்றும் தொல்காப்பியர் சொல்லும் நாடக வழக்கு, உலகியல் வழக்கு என்பது ஸம்ஸ்க்ருத நாடக/இசை நூல்களில் உள்ள சொல் வழக்கு என்றும் விளக்கினார்.

தி. மு. க. தலைவர் ஸ்டாலின் உளறல் பற்றி நான் கேட்டபோது, டாக்டர் நாகசாமியை இது விஷயமாக ஒரு தமிழ் டெலிவிஷன் சானல் பேட்டி கண்டதாகவும் அதில் அவர் ஜி.யூ.போப் முதலிய மதப் பிரசாரகர்களின் விஷமங்கள் பற்றி கேட்ட கேள்விகளுக்கு இது வரை எவரும் பதில் சொல்லவில்லை என்றும் சொன்னார். டாக்டர் ஜி. யூ. போப் ஒரு தமிழ் அறிஞர் மட்டுமன்று; பெரிய ஸம்ஸ்க்ருத அறிஞரும்கூட; ஆனால் சாகும்போது தான் இதைச் செய்ததெல்லாம் கிறிஸ்தவ மதப் பிரசாரகத்துக்குத்தான்; மற்றவரும் இது போல மொழிகளைக் கற்று மதப் பிரசாரம் செய்ய வேண்டும் என்று சொன்னதையும் ஆதாரத்துடன் கூறினார்.

டாக்டர் நாகசாமியுடன் மோத எவரும் முன்வரார். அப்படி வந்தால் அவர்களது வாதம் கல்பாறையில் மோதிய மண்ணாங்கட்டி போல சிதறி உதிரும்.

ஒவ்வொரு கட்டுரையிலும் புதிய தகவல்களை அளிப்பேன்

கதவு ஆராய்ச்சி

கோவில்களின் கதவுகள் பிரம்மாண்டமானவை. அவைகள் பல வடிவங்கள் கொண்டவை. அவை பற்றி தனி விதி முறைகள் உள்ளன. மணிகள் பொருத்திய கதவுகளைச் சில கோவில்களில் கண்டேன். அப்போதுதான் ஆண்டாளின் திருப்பாவை  வரிகளின் முழுப் பொருளும் விளங்கியது.

எல்லாக் கோவில்களிலும் உள்ள கதவுகள் மற்றும் மணிகளைப் புகைப்படம் எடுத்தேன்; கட்டுரைகளில் படங்கள் வரும்.

திருப்பாவை பாடல் 9

துாமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய

துாபம் கமழத் துயிலணை மேல் கண்வளரும்

மாமான் மகளே! மணிக்கதவம் தாழ் திறவாய்!

பார்த்த கோவில்களைப் பார்ப்பதில்லை

குலதெய்வம் வைதீஸ்வரன், திருப்பதி வெங்கடாசலபதி, மதுரை மீனாட்சி, திருப்பரங்குன்றம் துர்கை, முருகன் தவிர வேறு எந்தக் கோவிலையும் ஒரு முறைக்கு மேல் பார்ப்பதில்லை என்ற சங்கல்பத்துடன் சென்று இதுவரை மூன்று இந்திய விஜயங்களிலில் பல புதிய விஷயங்களை அறிந்தேன்.

படங்கள் தயாரானவுடன் கட்டுரைகள் வரும்!

இந்த முறை நான் சென்ற ஊர்கள்

1.சென்னை

2.திண்டிவனம்

3.மலை வையாவூர் கோவில்

4.உத்தரமேரூர் கோவில்

5.செஞ்சி கோட்டை

6.மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோவில்

7.சிறுவாச்சூர் காளி கோவில்

8.திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில், உச்சிப் பிள்ளையார் கோவில், பல்லவர் குகை, மலை அடிவார மாணிக்க விநாயகர் கோவில்.

9.திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி -ஜம்புகேஸ்வரர் கோவில்

10.ஸ்ரீங்கம் பெருமாள் கோவில்

11.உறையூர் கோவில்

12.வயலூர் முருகன் கோவில்

13.திருப்பட்டூர் பிரம்மா கோவில்

14.திருவாசி சிவன் கோவில்

15.ஊட்டத்தூர் கல் நடராஜர்

16.கற்குடி கோவில்

17.திருவெறும்பூர்

18.கல்லணை

19.குணசீலம்

20.திருப்பராய்த்துறை

21.கருவூர் கோவில்

22.நாமக்கல் நாமகிரித் தாயார்

23.நெரூர் சதாசிவ பிராம்மேந்திர அதிஷ்டானம்

24.காஞ்சீபுரத்தில்…………………..

அஷ்டபுஜ பெருமாள் கோவில்

யதோத்தகாரி கோவில்

உலகளந்த பெருமாள் கோவில்

வைகுண்டப் பெருமாள் கோவில்

தேவராஜ பெருமாள் கோவில்

பாண்டவ தூதர்/ பெருமாள் கோவில்

கச்சபேஸ்வரர் சிவன் கோவில்

25.திருப்பருத்திக் குன்றம் சமணர் கோவில்

26.சகுந்தலா ஜகநாதன் மியூஸியம்

ஸ்ரீபெரும்புதூர் கோவில்

சென்னையில்…………….

வெங்கீஸ்வரர் கோவில்

சாங்கு சிவலிங்க சித்தர் ஜீவா சமாதி

யாத்ரிகர்களுக்கு எச்சரிக்கை 1

எங்கெங்கு வைஷ்ணவ கோவில்கள் (நாமம் போட்ட பெருமாள் கோவில்கள்) உளதோ அங்கெங்கெல்லாம் அவர்கள் இஷ்டப்படி கோவில்களை மூடுவார்கள்; திறப்பார்கள் (irregular opening hours

); ஆகையால் சேவை நேரம் தெரியாமல் போனால் மணிக்கணக்கில் திரை முன்னாலோ கதவு முன்னாலோ தவம் கிடக்கவேண்டும்.

சிவன் கோவில்கள் (விபூதிப்பட்டை) அனைத்தும் முறையாக காலை 6 மணி முதல் மதியம் 11-30 வரையும் மாலை 5 மணி முதல் 9 மணி வரையும் திறந்திருக்கும்.

சுருங்கச்சொல்லின் திரை போடும் நேரம், கோவில் திறக்கும் நேரம் தெரியாமல் போகாதீர்கள்; ஏமாறாதீர்கள்

எச்சரிக்கை 2

செஞ்சி, உத்தரமேரூர், காஞ்சீபுரம் கோவில்களில் சில, திருச்சி பல்லவர் குகை முதலியன தொல்பொருட்      துறையினரின் கட்டுப்பாட்டில் உளதால் காலை பத்து மணிக்குத் திறப்பார்கள்;

மாலை 4 மணிக்கு மூடிவிடுவார்கள். .

ஆகையால் முன்கூட்டி தகவல் அறிந்து திட்டமிட்டுச் செல்லவும்.

சுபம்—

MORE TAMIL TEMPLE WONDERS (Post no. 6223)

 Written by london swaminathan


swami_48@yahoo.com


Date: 3 April 2019


GMT Time uploaded in London – 16-43

Post No. 6223

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

I travelled to Tamil Nadu (India) on 23rd March 2019 and spent 11 days there . I was back in London this afternoon. I visited over 30 temples, Sidddhar Samadhis and Museums in the following towns. Each temple gave me some interesting new information. Some puzzles were solved during this visit. I will write about each temple, samadhi, museum separately with pictures. Here are some bullet points to kindle your interest.

During this visit I made it a point to take pictures of huge temple doors. No one has done research on temple doors.

Tamil saint Andal sang in Thiruppavai about the bell door, i.e .door with bells. Only when I saw bell doors in a few temples I understood the meaning and significance of those words.

In Siruvachur I saw ghost busing platform. Those who are possessed by evil spirits are cured when they stand on it.

In Oottathur I saw stone Nataraja. In other temples the Nataraja idol is made up of metals. Though we have a huge beautiful and smiling Nataraja in Gangai konda chozapuram it is only a decorative sculpture on the outer wall. Devotees believe this stone Nataraja will cure kidney stones.

In Thiruppattur I saw Brahma who will rewrite your fate giving you benefits. So devotees came with the horoscopes of their near and near.

In Srirangam I saw two golden lizards carved on the roof. There was no explanation. But when I visited Kanchipuram I saw a big Queue for seeing golden lizards! I will give you the full story.

At Nerur I had the darshan of Sadashiva Brahmendra Samadhi, who did miracles.

In Chennai I visited a Samadhi of a Siddhar (Tamil Mystic) who did meditation by splitting his bodies into nine parts. The same story is told about Kuzandaiyananda Swami of Madurai and Pandrimala Swami of Dindigul.

In Kacnhipuram I visited Sakunthla Jagannatham Museum where I saw Makara yaz (Fish shaped Lyre).

Last night I met Dr R Nagaswamy, renowned archaeologist and historian. He gave me interesting information about Tolkppaiam, Ragas from different Desas/states and Why Carnatic music is called Karnatic music.

There are more surprises ; please wait for the articles:

Following are the places I visited in March, 2019:-

Tindivanam

Malai vaiyavur Vishnu temple

Uththira merur temples

Chenji forts

Siruvachur Vakrakali amman temple

Mel Malaiyanur Angala parameswari temple

Thiruppattur brahma temple

Thiruvasi shiva temple

Uraiyur temple where cock fought with an elephant

Vayalur Murugan temple

Karkudi temple

Uuttaththur stone Nataraja temple

Thiruverumpur ant temple

Kallanai dam across Kaveri river

Thiruchi rockfort Uchipillaiyar temple

Foothill Manikka vinayakar teple

Thayumanavar siva temple

Srirangam Vishnu temple

Thiruvanakkaval shiva temple

Gunaseelam Vishnu temple

Thirupparaithurai shiva temple

Namakkal Namagiri thayar temple

Nerur adhistanam

Karur temple

Kanchipuram –seven temples

Sakunthala Jagannathan museum

Thirupparuthik kundram (Jain) Mahaveerar temple

Chennai Venkiswarar temple

Chennai siddhar samadhi

I have taken hundreds of pictures.

–subham–

2018ஆம் ஆண்டின் சில விநோதமான கண்டுபிடிப்புகள்! – 2 (Post No.6222)

 Written by S Nagarajan


swami_48@yahoo.com


Date: 3 April 2019


GMT Time uploaded in London – 15-39

Post No. 6222

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

பாக்யா 15-3-2019 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள ஒன்பதாம் ஆண்டு இரண்டாம் கட்டுரை – அத்தியாயம் எண் 418

2018ஆம் ஆண்டின் சில விநோதமான கண்டுபிடிப்புகள்! – 2

ச.நாகராஜன்

ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான விஞ்ஞான விநோதங்களை அறிவியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். 2018இல் அவர்கள் கண்ட விநோதங்களின் தொடர்ச்சி இது:

வெப்ப அலையால் வேக வைக்கப்பட்ட வௌவால்கள்!

ஒவ்வொரு ஆண்டும் பூமியின் வெப்பநிலை கூடிக் கொண்டே போகிறது. 2018, ஜனவரியில் ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸில் வெப்பம் 111.5 டிகிரி பாரன்ஹீட்டைத் தொட்டது. அதாவது 44.2 டிகிரி செல்ஸியஸ்! பறந்து கொண்டே இருந்த 200 வௌவால்கள் இந்த வெப்பத்தால் ஆகாயத்திலேயே உயிருடன் வறுத்தெடுக்கப்பட்டு தொபேரென்று  தரையில் இறந்து வீழ்ந்தன. கேட் ரையான் என்ற பெண் விஞ்ஞானி, “இவை உயிருடன் வறுக்கப்பட்டன. அவற்றின் மூளையை வெப்பம் தாக்கவே அவைகளால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. இறந்து வீழ்ந்தன” என்கிறார்.

தீயைத் திருடும் ஆஸ்திரேலிய பறவைகள்!

ப்ரோமெதியஸ் என்னும் ஹீரோ கடவுளரிடமிருந்து தீயைத் திருடி மனிதர்களுக்கு அளித்தான் என்று கிரேக்க நாட்டில்  பழம் பெரும் கதை ஒன்று உண்டு. இந்தக் கதையைப் போலவே இப்போது ஆஸ்திரேலியப் பறவைகள் தீத் துண்டுகளை (தீ கங்குகள்) ஏற்கனவே காட்டுத் தீ பரவிய இடத்திலிருந்து தூக்கிக் கொண்டு இதர இடங்களில் சென்று போட்டு அங்கும் தீயைப் பற்ற வைக்கின்றன. ஃபயர்ஹாக் (firehawks) என்னும் பறவைகள் கூட்டாகவும் சில சமயம் தனியாகவும் இப்படி தீயைப் பற்ற வைக்கின்றன. அவை ஏன் இப்படிச் செய்கின்றன என்று விஞ்ஞானிகள் ஆராயப் புகுந்தனர். புல்வெளிகளில் ஒளிந்து கொண்டிருக்கும் அவற்றின் இரைகள், இப்படித் தீயைப் பற்ற வைப்பதால் வெப்பம் தாங்காமல் வெளியிடங்களுக்கு ஓடும். அப்போது அவற்றை அந்தப் பறவைகள் பிடித்துத் தங்களுக்கு உணவாக்கிக் கொள்ளும்.

தும்மலைத் அடக்காதீர்கள்!

தும்மலை அடக்கவே அடக்காதீர்கள் என்பது விஞ்ஞானிகளின் அறிவுரை. இதற்கான சம்பவம் ஒன்றை அவர்கள்  கூறுகின்றனர். இங்கிலாந்தைச் சேர்ந்த 34 வயதான ஒருவர் தன் தும்மலை அடக்கப் பார்த்து மூக்கைப் பிடித்துக் கொண்டு வாயையும் மூடிக் கொண்டார். கழுத்தில் தோல் பகுதியில் குமுறுவது போன்ற உணர்வு ஏற்படவே டாக்டரிடம் ஓடினார். கழுத்துப் பகுதியில் தோலின் கீழ் காற்றுக் குமிழிகளைக் கண்ட அவர்கள் மேல் தொண்டைப் பகுதியில் அவை ஒரு ஓட்டையையும் போட்டு விட்டதைக் கவனித்தனர். நல்ல வேளையாக உயிருக்கு ஆபத்து இல்லாமல் அவர் பிழைத்தார். இரண்டு மாதங்களில் அவர் பூரண குணமடைந்தார். இதை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் தும்மலை அடக்காதீர்கள் என்ற அறிவுரையைப் பத்திரிகை வாயிலாகத் தெரிவித்துள்ளனர்.

விசித்திரமாக ஸ்பூனை விழுங்கியவர்!

‘Born with a Silver Spoon’ என்று அதிர்ஷ்டசாலிகளைச் சொல்வது வழக்கம். ஸ்பூனை விழுங்கிய ஒருவரைப் பார்த்த டாக்டர்கள் ஆச்சரியத்தால் அயர்ந்து போன சம்பவம் ஒன்றும் அக்டோபர் 2018இல் நடந்திருக்கிறது. மிஸ்டர் ஜாங் என்று அவரை அழைக்கின்றனர். சீனாவில் ஜின்ஜியாங் மாகாணத்தில்  உள்ள ஜெனரல் ஹாஸ்பிடலுக்கு அவர் வந்தார். ஒரு ஸ்டீல் ஸ்பூனை தான் விழுங்கி விட்டதாகவும் ஒரு வருடமாக அது உள்ளே இருப்பதாகவும் இப்போது வலி ஏற்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவிக்கவே மூன்று டாக்டர்கள் சேர்ந்து இரண்டு மணி நேரம் ஆபரேஷன் செய்து மார்புக்கூட்டின் நடுவில் உள்ளே போய் மாட்டிக் கொண்டிருந்த ஸ்பூனை எடுத்தார்கள். அதன் நீளம் எட்டு அங்குலம். இப்படி ஒரு நபரை இதுவரை தாங்கள் கண்டதே இல்லை என்று கூறிய டாக்டர்கள் அவரை உயிர் பிழைக்க வைத்து பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

கராத்தே கிக் கரப்பான்கள்

ஒட்டுண்ணிக் குளவிகள் என்னும் ஒருவகை உயிரினம் கரப்பான்களைப் பொறுத்த வரையில் அபாயகரமான உயிரினம் என பிஎம்சி ஈக்காலஜி (BMC Ecology)என்ற அறிவியல் இதழ் தெரிவிக்கிறது. மரகதமணி குளவி (Emerald Jewel Wasp) என்ற இந்த உயிரினம் கரப்பான்களின் கால்களின் மீது ஒருவகை திரவத்தைப் பாய்ச்சுகின்றன. அது கரப்பான்களின் ரத்த ஓட்டத்தைத் தடுத்து மூளையைத் தாக்கவே அது செயலிழந்து உயிர் இருந்தும் ஜோம்பி போல அசையாமல் இருந்து அந்தக் குளவிகளுக்கு இரையாகுமாம். ஆனால் இப்போது இதை ஆராய்ந்து வரும் விஞ்ஞானிகள்,”இது வரை கரப்பான்கள் தப்பிக்கவே தப்பிக்காது என எண்ணி இருந்தோம்.ஆனால் ஒரு கராத்தே கிக்கைக் கொடுத்து தங்கள் மூளை செயலிழந்து போவதைச் சில கரப்பான்கள் தடுப்பதைப் பார்க்கிறோம். இந்த கராத்தே கிக் அவற்றின் நரம்புகள் செயல் இழப்பதைத் தடுக்கிறது” என்று ஆச்சரியத்துடன் கூறுகின்றனர்.

மேட் மைக்கின் சாகஸம்!

2018 மார்ச் மாதம் 61 வயதான ஒருவர் தானே செய்த ராக்கெட்டை விண்ணில் ஏவினார். அவர் பெயர் மேட் மைக்(Mad Mike- பைத்தியக்கார மைக்).பூமி தட்டையானது தான் என்பதை நிரூபிப்பதற்காக இதை அவர் ஏவினாராம். பூமி உருண்டை என்று சிறு குழந்தை கூடச் சொல்லும்! ஆனால் அதை நம்ப மறுக்கும் பைத்திய மைக்கின்  ராக்கெட் 1900 அடி உயரம் வரை பறந்தது.’எனது அடுத்த ராக்கெட் இன்னும் அதிக உயரம் பறக்கும்’ என்கிறார் பைத்தியக்கார மைக்!

இப்படி எண்ணற்ற விநோதச் செய்திகளை 2018இல் கண்டதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சாம்பிளுக்காகச் சில சுவையான செய்திகளை மட்டும் இங்கு பார்த்தோம்.

Marc and Fielding

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

ஹோவர்ட்           ஃபீல்டிங் (Howard Fielding) ஐந்து வயது குழந்தையாக இருந்த போது அப்பா ஆல்ஃப்ரெட் (Alfred) கொண்டு வந்த பிளாஸ்டிக் பப்பிள் ஷீட்டை கைகளால் நோண்டி ஒவ்வொரு பப்பிளாக டப் டப் என்று உடைத்துக் கொண்டிருந்தது. ஆனால் இன்றோ பப்பிள் ராப் (Bubble Wrap) பாக்கிங் ஷீட்டைத் தயாரிக்கும் அவரது நிறுவனம் உலகளாவிய விதத்தில் உயர்ந்து நிற்கிறது. ஆல்ப்ரெட் பப்பிள் ராப் பிளாஸ்டிக் ஷீட்டை தற்செயலாகத் தான் கண்டுபிடித்தார். அவர் கண்டுபிடிக்க முனைந்தது வால்பேப்பர் எனப்படும் சுவரொட்டி பேப்பர்களில் விதவிதமான டிசைனைப் போட்டு டெக்ஸர்ட் வால்பேப்பரைத் (Textured Wallpaper) தயாரிக்க வேண்டும் என்பது தான். 1957இல் இரண்டு பிளாஸ்டிக் திரைச்சீலைகளை வெப்பத்தினால் ஒட்டிப் பார்த்த போது அவர் நினைத்தது வரவில்லை. மாறாக காற்றுக் குமிழிகள் ஆங்காங்கே அடைக்கப்பட்ட பிளாஸ்டிக் ஷீட் தான் வந்தது. அதை என்ன செய்வது என்று முதலில் அவருக்கும் அவரது நண்பருக்கும் புரியவில்லை. என்றாலும் கூட அதற்குக் காப்புரிமை பெற்றனர். 1961இல் அது மிகப்பெரிய பாக்கிங் மெட்டீரியல் என்ற அந்தஸ்தைப் பெற்றது. முக்கியமாக கம்ப்யூட்டர் நிறுவனமான ஐ.பி.எம் அதை ஒரு வரபிரசாதமாகக் கருதியது.

bubble wrap

வெளிநாடுகளுக்குக் கம்ப்யூட்டர்களை அனுப்பும் போது அது உடையாமல் இருக்க நியூஸ்பேப்பர்களை உருண்டைகளாக்கி அவற்றைச் சுற்றி வைப்பது அதுவரை வழக்கமாக இருந்தது. ஆனால் நியூஸ்பேப்பர்களின் மோசமான தரமற்ற மை பாக்கிங் செய்யப்பட்ட பொருள்களின் மீது பட்டு அவற்றின் தரத்தைக் கெடுத்தது. இந்த நிலையில் பப்பிள் ராப் வந்தவுடன் அதை பயன்படுத்த ஆரம்பித்தவுடன் ஒரு வித புகாரும் வரவில்லை. இதைப் பார்த்த சிறு நிறுவனங்கள் அனைத்தும் பப்பிள் ராப் பிளாஸ்டிக் ஷீட்டை பயன்படுத்த ஆரம்பித்தன.இன்று உலகெங்கும் பப்பிள் ராப் ஷீட் சக்கை போடு போடுகிறது.

தற்செயல் கண்டுபிடிப்பு பாக்கிங் செய்யும் விதத்தில் பாதுகாப்பை உறுதி செய்தது ஆச்சரியம் தானே!

**