
WRITTEN BY London Swaminathaan
swami_48@yahoo.com
Date: 29 June 2019
British Summer Time uploaded in London –7-59 AM
Post No. 6614
Pictures are taken from various sources including Facebook, google, Wikipedia. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

பஞ்ச வடி
அஸ்வத்த (அரச மரம்) , வில்வ, வட (ஆல மரம்) , தாத்ரி, அசோக
அஸ்வத்தபில்வவ்ருக்ஷஞ்ச வடதாத்ரீ அசோககம்வடீ பஞ்சமித்யுக்தம்- சப்த கல்ப த்ரும – 3-14
xxx
பஞ்சஸார
ச்ருதம் பயஹ- கொதிக்கவைத்த பால்; சர்காரா- சர்க்கரை; பிப்பலீ – திப்பிலி; மது – தேன்; ஸர்பி- நெய்.
ஸ்ருதம் பயஹ சர்கரா ச பிப்பல்யோ மதுஸர்பிஷீ
பஞ்சஸாரமிதம் பேயம் மதிதம் விஷமஜ்வரே
–சுஸ்ருத சாம்ஹிதை- 39- 251
xxx
பஞ்ச சித்தாந்திகா- கணித விஷயம்
பைதாமஹ, சௌர, வாசிஷ்ட, பௌலிச, ரோமக
பைதாமஹஞ்ச ஸௌரஞ்ச வாசிஷ்டம் பௌலிசம் ததா
ரோமகஞ்சேதி கணிதம் பஞ்சகம் பரமாத்புதம்
–ஜோதிஷ சாஸ்த்ரம்
xxx
பஞ்சாக்னி வித்யா
த்யு – வானம், பர்ஜன்ய- மேகம், ப்ருத்வீ- பூமி, புருஷ – மனிதன், ஸ்த்ரீ – பெண்
-சாந்தோக்ய உபநிஷத் 5-4
xxx

பஞ்சாயதன தேவதாஹா
ஆதித்ய – சூரியன், அம்பிகா- பார்வதி, விஷ்ணு, கணநாத – கணபதி, மஹேஸ்வர – சிவன்
ஆதித்யம் அம்பிகாம் விஷ்ணும் கணநாதம் மஹேஸ்வரம்
க்ருஹஸ்தஹ பூஜயேத்பஞ்ச புக்திமுக்த்யர்தஸித்தயே
xxx
விருந்தில் மரியாதை செய்யப்பட வேண்டியவர்கள்–
சடங்கி- வேத சாஸ்திரத்தில் புலமை பெற்றோர்;
வினயீ- பணிவானவர் (ஆய்ந்தவிந்தடங்கிய சான்றோர்);
யோகீ- யோகி;
ஸர்வதந்த்ர – நூல் வல்லோர்;
யாயாவர- பக்தியுள்ள கிருஹஸ்தன்
ஷடங்கீ விநயீ யோகீ ஸர்வதந்த்ரஸ்ததைவ ச
யாயாவரஸ்ச பஞ்சைதே விக்ஞேயாஹா பங்திபாவனாஹா

xxx
உயிருக்குயிரானோர் ஐவர் (கலியுகத்தில்)
க்ருஹினீ – மனைவி; ஸ்வசுரஹ- மாமனார்; ஸ்வசா- மாமியார்; பகினீ- மனைவியின் சஹோதரி; ஸ்யால- மைத்துனன்
க்ருஹினீ பகினீ தஸ்யாஹா ஸ்வசுரௌ ஸ்யால இத்யபி
ப்ராணினாம் கலினா ஸ்ருஷ்டாஹா பஞ்சப்ராணா இமே பரே
xxx
ஐந்து வாயுக்கள்
ப்ராண, அபான, வ்யான, உதான , ஸமான
–வேதாந்த சம்ஞாவலி
xxx
தவறாகச் செய்தால் உயிருக்கு ஆபத்து-
ராஜாஸ்ரய – அரசனுடைய வேலைகள்;
தஸ்கரதா- திருட்டு வேலைகள்;
அஸ்வபண்யா- குதிரை வியாபாரம்;
ஆதர்வண- பில்லி சூன்யம், மாய, மந்திர வேலைகள்;
ஸமுத்ரயான – கடற்பயணம்.
ராஜாஸ்ரயஸ் தஸ்கரதாஸ்வபண்யமாதர்வணம் சாபி ஸமுத்ரயானம்
ஏதானி ஸித்யந்தி மஹாபலானி விபர்யயே ப்ராணஹராணி பஞ்ச
–சுபாஷித ரத்ன பாண்டாகாரம் – 173-857
சுபாஷித ரத்ன பாண்டாகாரம்= ஸம்ஸ்க்ருதத் தனிப்பாடல் திரட்டு
–subham–
