எல்லாம் நாலு எழுத்துச் சொற்கள். நான் கடைசி இரண்டு எழுத்துக்களைக் கொடுத்துவிட்டேன். வண்ணப் பகுதியில் மீதமுள்ள எழுத்துக்களைப் போட்டு நிரப்புங்கள். விடை கீழே உளது.
விஜய
நகர சாம்ராஜ்ய ஆளுகைக்கு உட்பட்ட கம்பளத்தார் பசுமாடுகளுடன் தென் திசை நோக்கிப்
புறப்பட்டனர். கூடையில் குல தெய்வமான ஜக்கம்மாளை மட்டும் எடுத்துக்கொண்டு
அவ்வப்போது தேவியின் அருள் வாக்கின்படி செயல்பட்டனர். ஒரு முறை
வெள்ளப்பெருக்கெடுத்த ஆறு குறுக்கிடவே ஆற்றின் இருபுறமுள்ள மரங்களை ஒடித்து
ஜக்கம்மாளே பாலம் கட்டிக் கொடுத்ததாகவும் அவர்களை விரட்டி வந்த நவாப்பின் படைகள்
பின்தொடராதபடி பின்னர் ஆறு மூடிக்கொண்டதாகவும் இவர்கள் வரலாறு கூறுகிறது.
இப்பொழுது
ஓட்டப்பிடாரம் என்று அழைக்கப்படும் இடம் அக்காலத்தில் அழகிய வீரராஜபாண்டியபுரம்
என்று அழைக்கப்பட்டது அதை ஆண்ட அழகிய வீரராஜ பாண்டியன் ஒரு இழிகுல மந்திரவாதியால்
துன்பமுற்றான். அவனைக் கட்டபொம்மு தலைமையிலான கம்பளத்தார் கொன்று அதற்குப் பரிசாக
நிலம் பெற்றார்கள். அவரள் கேட்ட இடம் ஒரு அதிசய இடம். வேட்டை நாய்களை முயல்
துரத்திய வீர பூமி. அங்கே கோட்டை கட்ட மன்னனும் மந்திரியும் தடைக் கல்லாக நிற்கவே, மன்னனைக் கொன்று மந்திரியைச் சிறைப்பிடித்தான்
கட்டபொம்மு நாயக்கர். பின்னர் மந்திரியை சிரச் சேதம் செய்யும் முன்பாக அவன் தன்
பெயரான பாஞ்சாலம் பிள்ளை என்பதை ஊருக்கு இடவேண்டும் என்று கேட்கவே பாஞ்சாலம்
குறிச்சி தோன்றியது. 26 மைல்களுக்கு
ஆட்களை நிறுத்தி வைத்து செங்கற்களையும் கல்லையும் கொண்டுவந்து கட்டிய கோட்டை இது.
இதோ முயல் துரத்திய வேட்டை நாய் முதல் பாஞ்சாலம் பிள்ளை மன்றாடியது வரையான வரலாறு:
கிளிக்கூட்டு
அலங்கம்
கட்டபொம்முவின் ஆட்கள் கட்டிய கோட்டையில் கிளிக்கூட்டு அலங்கம் என்ற ஒரு அமைப்பு உண்டு. இதில் 40 பேர் வரை நிற்கலாம். இங்கிருந்து வெளியே உள்ளவர்களைத் தாக்க முடியும் ஆனால் எதிரிகளின் வேல் கம்பு, ஈட்டிகள் இங்கே வரமுடியாது அப்பேற்பட்ட அற்புதக் கோட்டை –கட்ட பொம்மன் கோட்டை!