

இந்தத் தொடரில் கடைசிக் கட்டுரை
ஸ்ரீ வேதாந்த தேசிகரின் ஸ்தோத்திரங்கள்! – 77436 (Post No.)
Written by S NAGARAJAN
Uploaded in London on – 9 JANUARY 2020
Post No.7436
contact – swami_48@yahoo.com
pictures are taken from various sources; thanks.
ச.நாகராஜன்
வேதாந்த தேசிகர் இயற்றியுள்ள நூல்கள் பற்றிய விவரங்களின் தொடர்ச்சி இங்கு தரப்படுகிறது. இந்த ஸ்தோத்திரங்களின் மூலமும் ஆங்கிலத்தில் அர்த்தமும் கிடைக்காதா என எண்ணுபவர்கள் கட்டுரையின் கடைசி பாராவைப் பார்க்கவும்.
இத்தொடரில் இறுதிக் கட்டுரை இது.
24) சுதர்சனாஷ்டகம்
8 + பலஸ்துதி, ஆக 9 சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் அடங்கிய சுதர்சனாஷ்டகம் மிகவும் பிரசித்தமான ஒன்று. விஷ்ணுவின் சுதர்சன சக்ரத்தை நோக்கி செய்யப்படும் துதிகள் இவை. விஷ்ணுவின் மிகச் சக்தி வாய்ந்த ஆயுதங்களில் முதலாவதானது சுதர்சனம். சில ஆலயங்களில் சுதர்சனருக்குத் தனி சந்நிதி உண்டு. திருமோகூரில் குறிப்பிடத்தகுந்த சுதர்சன சந்நிதி உள்ளது.
பாஞ்சராத்ர ஆகமத்தின் பழைய சம்ஹிதையான அஹிர்புத்ன்ய சம்ஹிதையில் சுதர்சனத்தின் பெருமை பல அத்தியாயங்களில் விளக்கப்படுகிறது.
கவிதை ஜாலங்களுடன் சக்தி வாய்ந்த வார்த்தைகள் மூலம் தேசிகர் இந்த அஷ்டகத்தில் சுதர்சனரைப் போற்றுகிறார்.
திருப்புட்குழியில் வாழ்ந்து வந்தோரின் கொடிய ஜுரம் போக இந்த அஷ்டகத்தை தேசிகர் இயற்றியதாகக் கூறப்படுகிறது. இன்னொரு சாரார் தேசிகர் வாதுக்குச் செல்லு முன் இதை இயற்றி வாதுக்குச் சென்றதாகவும் மற்ற தத்துவங்களை முன்வைத்தோர் தோற்று விட்டதாகவும் கூறுகின்றனர்.
இதில் உள்ள எட்டு ஸ்லோகங்களை அர்த்தத்துடன் மனதில் ஊன்றிப் படிப்பவர்களின் ஆசைகள் நிறைவேறும் என்று உறுதி கூறுகிறார் ஒன்பதாவது ஸ்லோகத்தில், ஸ்ரீ வேதாந்த தேசிகர்.
25) ஷோடசாயுத ஸ்தோத்ரம்
19 சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் அடங்கியது ஷோடசாயுத ஸ்தோத்ரம். ஒரு சமயம் திருப்புட்குழியில் வாழ்ந்தோர் கொடிய ஜுரம் ஒன்றினால் பாதிக்கப்பட்டு வருந்த, அப்போது தேசிகர் இதை இயற்றி அவர்களின் ஜுரத்தைப் போக்கடித்ததாகக் கூறப்படுகிறது.
சுதர்சனருக்கு ஆயுதேஸ்வரன் – ஆயுதங்களின் ஈஸ்வரன் – என்று பெயர். 16 ஆயுதங்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சுதர்சனர் இடது கையில் எட்டையும் வலது கையில் எட்டையும் வைத்திருக்கிறார். மிக முக்கியமான சுதர்சன சக்கரத்தை அவர் தன் கையில் வைத்திருக்கிறார்.
18வது ஸ்லோகத்தில் தேசிகர் இந்த 16 ஆயுதங்களுடன் சுதர்சனர் இந்த உலகத்தைக் காத்து வருவதாகக் குறிப்பிடுகிறார்.
19வது ஸ்லோகத்தில் 16 ஆயுதங்களையும் போற்றித் துதிக்கும் இந்த ஸ்லோகங்களை யார் ஒருவர் சொல்கிறாரோ அவருக்கு நலமும் வளமும் கூடும் என்கிறார்.
26) ஸ்ரீ கருட தண்டக:
4 + 3 ஆக 7 சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் அடங்கியது ஸ்ரீ கருட தண்டகம்.
விஷ்ணுவின் வாகனம் கருடன். நித்யசூரிகளில் ஒருவரான கருடர் வேதத்தில் புகழப்படுபவர். அவருக்கு ருத்ரா மற்றும் சுகிர்தி என இரு மனைவிகள் உண்டு. விஷ்ணுவின் வியூக தோற்றங்களில் அவர் சங்கர்ஷண அம்சமாக கருதப்படுகிறார்.
ஒரு சமயம் சர்வதந்த்ர சுதந்த்ர பட்டம் கொண்ட வேதாந்த தேசிகரை பாம்பாட்டி ஒருவன் சவாலுக்கு அழைத்தான். தன்னால் கட்டவிழ்த்தப்படும் பாம்பை அவரால் அடக்க முடியுமா என்று கேட்டான்.
உடனடியாக தேசிகர் கருட மந்திரத்தை உச்சரிக்க பாம்பு கட்டுண்டது. உடனடியாக ஒரு கருடன் வந்து அதைக் கொத்திக் கொண்டு போனது. இதைக் கண்டு திடுக்கிட்டு வியந்த பாம்பாட்டி தேசிகரிடம் மன்னித்து அருளுமாறும் அது ஒன்று தான் தன் பிழைப்புக்கான சாதனம் என்றும் வேண்ட தேசிகர் இரக்கம் கொண்டு இந்த தண்டகத்தைப் பாட கருடன் திரும்பி வந்து பாம்பைக் கீழே போட்டது.
இதில் உள்ள சந்தச் சிறப்பை சம்ஸ்கிருத ஆர்வலர்கள் வெகுவாகப் போற்றுவர்.
27) ஸ்ரீ கருட பஞ்சாஷத்
52 சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் அடங்கியது ஸ்ரீ கருட பஞ்சாஷத்.
கருடரை தியானித்த தேசிகருக்கு கருடன் தரிசனம் தந்து ஹயக்ரீவ மந்திரத்தை உபதேசித்தார்.
வர்ணகா என்று கூறப்படும் ஐந்து பகுதிகள் கொண்ட இது, கருட மந்திரத்தின் ஐந்து அக்ஷரங்களைச் சுட்டிக் காட்டுகிறது.
முதல் பகுதி பர வ்யூஹ வர்ணகம். இரண்டாவது பகுதி அம்ருதாஹரண வர்ணகம். மூன்றாவது பகுதி நாகதமன வர்ணகம். நான்காவது பகுதி பரிஷ்கார வர்ணகம். ஐந்தாவது பகுதி அத்புத வர்ணகம்.
கருடர் விஷ்ணுவுக்கு பல அம்சங்களில் சமமானவர் எனக் கூறும் தேசிகர் தனது இறுதி ஸ்லோகத்தில் பாம்பினால் ஏற்படும் உடல் மற்றும் மனோ பாதிப்புகள், வியாதிகள்,விதியின் தீய விளைவுகள் அனைத்தும் இந்த ஸ்லோகங்களைப் படிப்பதால் போய் விடும் என்று கூறி அருள்கிறார்.
28) ஸ்ரீ யதிராஜ சப்ததி
74 சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் அடங்கியது ஸ்ரீ யதிராஜ சப்ததி. ஸ்ரீ ராமானுஜரைப் போற்றித் துதிப்பவை இந்த ஸ்லோகங்கள். தயா சதகம் போலவே வெவ்வேறு சந்தங்களில் அமைந்திருக்கிறது இந்த சப்ததி. இதில் அனைத்து ஆசாரியர்களையும் குறிப்பிடுகிறார் தேசிகர். விஷ்ணுவில் ஆரம்பித்து பெரிய நம்பியில் முடிக்கிறார்.
ராமானுஜரின் மஹத்தான அருமை பெருமைகள் தேசிகரால் விரித்துரைக்கப்படுகின்றன.
முராரியின் பஞ்ச ஆயுதங்கள் ஓருரு எடுத்து ராமானுஜராக அவதரித்ததாக தேசிகர் 12ஆம் ஸ்லோகத்தில் கூறுகிறார்.
இதைப் படிப்பவர்கள் உள்ளங்கை நெல்லிக்கனியென – கரதல ஆமலகம் போல – தர்ம வழியைக் காண்பர் என்றும், அவர்களது அறிவு சார்ந்த வார்த்தைகள் ஏனையோருக்கு பகல் நேர நக்ஷத்திரம் போலத் திகழுமென்றும் தேசிகர் 74வது ஸ்லோகத்தில் கூறுகிறார்.
என்னுரை
இதுவரை தேசிகரின் பரந்த இலக்கியத்தில் 28 முத்துக்களைக் கண்டோம்.
இதை மூலத்துடன் முழுவதுமாகப் படிக்க ஆசை கொண்டோர் ஸ்லோகங்களின் ஆங்கில மொழிபெயர்ப்பையும் போனஸாக சேர்த்துப் பெறலாம்.
மறைந்த மேதை ஸ்ரீமான் எஸ்.எஸ். ராகவன் மற்றும் டாக்டர் எம்.எஸ். லக்ஷ்மிகுமாரி, டாகர் எம்.நரசிம்ஹாசாரி ஆகியோர் Sri Vedanta Desika’s Stotras (with English Translation) என்ற புத்தகத்தில் மேலே கண்ட 28 ஸ்தோத்திரங்களைத் தொகுத்து வழங்கியுள்ளனர். அரிய இந்த புத்தகத்தின் முதல் பதிப்பு 1995இலும் இரண்டாம் பதிப்பு 2002இலும் வெளியாகியுள்ளன.
இதை வெளியிட்டு பெரும் சேவையைச் செய்திருப்போர் : Sripad Trust, 19, Second Main Road, C.I.T.Colony, Chennai – 600 004. பக்கங்கள் 351.
ஆர்வமுள்ள அன்பர்கள் இந்த நூலைப் படித்துப் பெரும் பயன் பெறலாம்.
இந்தக் கட்டுரைத் தொடர் வழங்க உத்வேகமூட்டியது இந்த நூலே.
நமது நன்றியை இவர்களுக்குப் பதிவு செய்து இந்தத் தொடரை முடிக்கிறேன்.
ச.நாகராஜன்

Old articles on Vedanta Desika
அறுபது நகரங்களுக்குச் சென்ற மணி …
https://tamilandvedas.com › 2019/10/21 › அறுபத…
21 Oct 2019 – அறுபது நகரங்களுக்குச் சென்ற மணி-சுவையான சம்பவங்கள் (Post No.7121). WRITTEN BY London …
வேதாந்த தேசிகரின் … – Tamil and Vedas
https://tamilandvedas.com › 2019/10/28 › வேதாந…
வேதாந்த தேசிகரின் வாழ்க்கை வரலாறும் அவர் செய்த அற்புதங்களும்- 1 (Post No. 7149). Compiled by …
https://tamilandvedas.com › 2019/10/29 › வேதாந…
29 Oct 2019 – வேதாந்த தேசிகரின் வாழ்க்கை வரலாறும் அவர் செய்த அற்புதங்களும்- 2 (Post No. 7152).
Kalki Purana | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › kalki-purana
3 Apr 2015 – The title of the book is ‘KALKI PURANA’. The Sanskrit text was … Vedanta Desika in his famous hymn ‘Daya Satakam’ says. Maa saahasokti …
STORY OF THE BELL THAT TRAVELED TO 60 TOWNS! (Post …
https://tamilandvedas.com › 2019/10/20 › story-of-the-b…
20 Oct 2019 – Vedanta Desikan wrote over 100 books. He was considered the incarnation of The Bell that Brahma used in the worship of Lord Venkateswara …
100 year life | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › 100-year-life
6 Dec 2017 – … such as Facebook friends, Books, Google and newspapers; thanks. … Sri Ramanuja lived for 120 years and Vedanta Desika lived for 101 …
Foot Prints worship | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › foot-prints-worship
15 Aug 2012 – Vedanta Desika, one of the Vaishnavaite Acharyas of Tamil Nadu wrote 1000 slokas on Lords Padukas (shoes)in one night! An amazing feat.

You must be logged in to post a comment.