மோடி ஜி ! தட்டிப் பார்த்தால் தங்கம்!! எதிர் நோக்கும் சவால்கள்!!! (Post No.7785)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7785

Date uploaded in London – – 5 April 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ச.நாகராஜன்

பிரதமர் நரேந்திர மோடி ஜியை தரக்குறைவாக சாய் வாலா என்று ஒருவர் விமரிசனம் செய்தார்.

நாட்டில் உள்ள அனைவருமே ஏழை முதல் பணக்காரர் வரை அதை புகழாரமாக எடுத்துக்கொண்டு ‘உயர்ப்பால் உயர்ந்தவர்’, ‘பேதமற்ற பெருமனிதர்’ என்பன போன்ற பட்டங்களை அள்ளி வீசினர்.

சாய் வாலா என்று பேசியவர் ஙே என்று விழித்தார்; இன்றும் விழித்துக் கொண்டிருக்கிறார்.

மோடி அவர்களைத் தட்டிப் பார்த்தால் அவர் ஒரு தங்கம் – பத்தரை மாத்துத் தங்கம் என்பதை நாட்டு மக்கள் புரிந்து கொண்டனர்.

எந்த ஒரு பிரதம மந்திரிக்கும் இல்லாத, அல்லது எந்த ஒரு அரசருக்கும் இல்லாத வரலாறு காணாத ஒரு சவாலை – கொரானாவை அவர் எதிர் கொண்டிருக்கிறார்.

பேரரக்கன் கொரானாவைக் கண்டு உலகப் பெரும் தலைகள் அரண்டு மிரண்டு போயிருக்கும் இந்த நேரத்தில், ஒன்று கூடி வீட்டிலிருந்தே, நமக்காகத் தம்மை அர்ப்பணிக்கும் போலீஸ், நர்ஸ்கள், டாக்டர்கள், வியாபாரிகள், அரசு ஊழியர்கள், தன்னலம் கருதாத் தொண்டர்கள் உள்ளிட்ட அனைவருக்கும், பாராட்டும் நன்றியும் தெரிவிக்கும் வகையில் கையைத் தட்டச் சொன்னார்; தட்டினோம்.

உலகம் வியந்தது; இந்திய ஒற்றுமையைப் பார்த்து பிரமித்தது.

இது என்ன புது டெக்னிக் என்று! மற்ற நாடுகளும் கைகளைத் தட்ட ஆரம்பித்தன.அடுத்து தமஸோ மா ஜோதிர் கமய என்ற உத்தியை – இருளிலிருந்து ஒளிக்கு இட்டுச் செல்லும் தீப மங்கள ஜோதியை ஏற்றச் – சொல்லி வேண்டிக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்திய மக்கள் ஜோதி ஏற்ற என்றுமே தயங்கவே மாட்டார்கள்!

ஹி ஹி இது என்ன டார்ச் லைட் என்பவர்களுக்கு வரலாறு காண்பிக்கும் உண்மைகள் பல

உப்பால் நாடு ஒன்று படுமா, இது என்ன உப்பு சத்யாக்ரஹம் என காந்திஜிக்கு அருகில் இருந்த பல தலைவர்களே சந்தேகம் கொண்டார்கள்; சிலர் ‘குழந்தைத்தனமானது இது’ என்று கோபமும் கொண்டார்கள்.

ஆனால் நாடே உப்பால் ஒன்று திரண்டது; வெள்ளைக்காரனை அரள வைத்தது.

அந்த உப்பு போல இந்த ஜோதியும் ஒற்றுமையை வளர்க்கும். அனைவரையும் இணைக்கும்.

மோடி ஜி இன்று எதிர் நோக்கும் தலையாய சவால்கள் நூற்றுக் கணக்கில் உள்ளன; வரலாறு காட்டும் தலைவர்கள் எவரும் எதிர் கொள்ளாத சவால் என்று துணிந்து அடித்துக் கூறலாம்.

அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கு பார்க்கலாம்:

  1. ‘பிரமிக்கத்தக்க விதத்தில் நாட்டை ஓரிழையில் கொரானா காலத்தில் இணைத்து விட்டாரே, இந்த நாட்டை எப்படிச் சிதைப்பது’ என்று அரண்டு போயுள்ள பாகிஸ்தான் போன்ற நாடுகள் பல வித கெட்ட உத்திகளைக் கையாளும். இவர்களுக்குத் தக்க பதில் தர வேண்டும்.
  2. அரண்டு போயுள்ள பிரிட்டிஷ் மற்றும் மேலை நாட்டுப் பத்திரிகைகள் கெட்ட செய்திகளை இட்டுக் கட்டி வெளியிடுகின்றன. இப்படிப் பட்ட உலக பத்திரிகைகளின் பொய்களை முறியடித்து  உண்மையை உலகின் முன் வைக்க வேண்டும்.
  3. பிற நாட்டுப் பத்திரிகைகள் ஒரு புறம் இருக்கட்டும், இந்தியத் திருநாட்டில் ஐந்தாம்படை வேலை பார்க்கும் சில ஊடகங்களும், பத்திரிகைகள், குட்டி டிவிக்கள் மணிக்கு ஒரு பொய்ச் செய்தி என்பதை வெளியிட்டு மதக்கலவரம், இனக்கலவரம் ஆகியவற்றிற்கு வித்திடுகின்றன. இதை நீக்க வேண்டும்.
  4. பொருளாதாரச் சரிவு என்பது நினைத்துப் பார்க்க முடியாத அளவு போகும். இதைச் சரி செய்து மீள வேண்டும். ‘மனித உயிர்கள் தான் முதலில், ‘அவர்களுக்கான பொருளாதாரம் அடுத்து’ என்று உறுதியாகக் கூறிய அவர் அன்றாடக் கூலி வேலை பார்த்துப் பிழைக்கும் தொழிலாளிகள், அவ்வப்பொழுது கிடைக்கும் சவாரி கொண்டு வாழ்க்கை நடத்தும் ஆட்டோ ஓட்டிகள் போன்ற பல நூறு துறைகளைச் சார்ந்தோருக்கு உதவ வேண்டும். 130 கோடி பேர் கொண்ட நாடு என்பதை நினைக்கும் போது இது ஒரு பெரிய சவால்.
  5. ஏற்கனவே தீய நோக்கத்திற்காக இந்தியாவிற்குள் பணம் அனுப்பி வந்த என் ஜி ஓக்களைக் கட்டுக்குள் கொண்டுவந்ததற்காகக் கடுப்பில் இருப்போர் கொரானாவை எப்படித் தங்கள் நோக்கத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் திட்டமிடுவர். இதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
  6.  தொழிற்சாலைகள் இயங்காதிருத்தல், போக்குவரத்து முடக்கம், இயல்பான வாழ்க்கை இன்மை, கல்விச்சாலைகள் மூடி இருத்தல் – இவை எல்லாம் தற்காலிக நிறுத்தம் என்றாலும் பழைய தடத்தில் இயல்பாக இயங்க வைக்க வேண்டும். இது ஒரு பெரிய சவால்.
  7.  ஒரே நாடு என்ற சிந்தனை இன்றி, தனி இனம், மொழி, கலாசாரம் என்று பிதற்றி வந்து கொண்டே இருக்கும் சில குரூப்புகள் அயல்நாட்டுப் பணத்திற்கு இரையாகாமல் இருக்க வேண்டும்.
  8. ஒவ்வொரு வளர்ச்சித் திட்டத்திற்கும் தடை போடும் கட்சிகள், தவறான ஆட்களுக்கு பேச்சு சுதந்திரம், தனி நபர் உரிமை என்ற பெயரில்  துணை போகும் அமைப்புகள் தரப் போகும் குடைச்சலை எதிர் கொள்ள வேண்டும்.
  9. குடைச்சலைக் கொடுத்துக் கொண்டே இருக்கும் சீனாவை பல்துறைகளிலும் பாங்காக எதிர்கொண்டு வெல்ல வேண்டும்.

இன்னும் பல, பற்பல!

ஆனால்  மோடி ஜியின் உடலில் ஓடுவது இந்திய மக்களின் அன்பு என்னும் இரத்தம். அந்த உடலைத் தட்டிப் பார்த்தால் தங்கமாக இருக்கிறது. அது மற்ற உலோகங்களை எளிதாக வெல்லும்!

ஒவ்வொரு இந்தியனும் இந்த வரலாறு காணாத ஆபத்துக் காலத்தில் மோடி ஜிக்கு உற்ற துணையாக இருக்க வேண்டும். இருப்போம்; வெல்வோம்

tags- நரேந்திர மோடி, தமஸோ மா ஜோதிர் கமய, கொரானா

***

Leave a comment

2 Comments

  1. கொரோனா வியாதி கோரத் தாண்டவமாடும் இந்த நிலையில் பிரதமர் மோடி அற்புதமான மாற்று சொல்லியிருக்கிறார். நமது ஜனத்தொகையையும், ஜன நெருக்கத்தையும் மனதில் கொண்டால், இதுவரை நாம் கொரொனாவை கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கிறோம் என்பது தெரியும். [ இன்று கொரொனா வியாதி சுமார் 3500 பேரை பாதித்திருக்கிறது. இதில் மூன்றில் ஒரு பங்கு ஒரு முஸ்லிம்களின் கூட்டத்தினால் மட்டுமே விளைந்தது.] இது ஒரு சாதனை-அமெரிக்கா போன்ற ‘வளர்ந்த’ நாடுகளும் இதில் தடுமாறுகின்றன.

    பிரதமர் மோடி எதிர்கொள்ளூம் சவால்களில் முக்கியமானவை இங்கு குறிப்பிடப்பட்டிருக்கின்றன. மேனேஜ்மென்ட் துறையில் SWOT Analysis என்று ஒரு உத்தி சொல்வார்கள். பிரச்சினைகள் என்று வந்தால் அதை எதிர்கொள்ள நம் வலிமை என்ன, நமது பலவீனம் என்ன, இந்தப் பிரச்சினையினால் ஏதாவது ஆதாயம் கிடக்குமா, இதனால் விளையும் அபாயம் என்ன என்பவற்றை நன்கு அலசிப்பார்க வேண்டும்.. இந்த முறையில், இங்கு சொல்லப்பட்ட சவால்கள் நம்மைத் தாக்கும் அபாயங்கள். அடிப்படையில் இவை மூன்றுதான்:
    1. நாட்டின் இறையாண்மை, தேசியம் பற்றியது.
    2. பொருளாதாரம் பற்றியது.
    3. பாதுகாப்பு, வெளியுறவு பற்றியது.

    இந்த மூன்று துறைகளிலுமே நேருவின் காலத்திலிருந்தே நாம் சறுக்கிக்கொண்டே வந்திருக்கிறோம். இதில் வேதனை என்னவென்றால் இந்த சறுக்கலைச் சறுக்கல் என்று உணராமல் சாதனை என்றே பார்த்துப் பழகிவிட்டோம். இந்த சறுக்கலை ஓரளவு தடுத்து நிறுத்தியவர் பிரதமர் நரசிம்ம ராவ். அவரை இன்று மறந்துவிட்டோம். அவர் கட்சியினரே அவரை மறைத்துவிட்டார்கள்.

    மோடிஜியின் பலம் என்ன? அவரது நேர்மை.
    பலவீனம் என்ன? அவர் தனக்கு ஒரு சிறந்த ‘டீம்’ உருவாக்காததுதான். எல்லாவற்றிற்கும் மோடியையே நாடுவதும் சாடுவதும் என இது போகிறது.
    இந்தியாவில் “கேபினட்” முறை என்றுமே இருந்ததில்லை. இந்த முறையில், பிரதமர் சம அதிகாரம் படைத்த நபர்களைக்கொண்ட ஒரு குழுவின் முதல் நபரே தவிற [ Primus inter pares] தனிப்பட்ட தலைவர் இல்லை. ஆனால் இங்கு இது சாத்தியமில்லை. கவிழ்த்துவிடுவார்கள்.

    இந்த நிலையில், பிரதமருக்கு ஆலோசனை சொல்ல தகுந்த நபர்கள் தேவை. இவர்கள் கட்சி, மந்திரிசபை, அதிகார வர்கம் ஆகிய மூன்று பிரிவிலிருந்து வரவேண்டும். இந்த மூன்றிலும் மோடி தவறிவிட்டார்.

    பொருளாதாரத்தை எடுத்துக்கொள்வோம். 6 ஆண்டுகளில் மோடியின் இரு நிதி மந்திரிகள் சாதித்தது என்ன? சரிவுதான்! இது கொரோனாவருகைக்கு முன்பே தொடங்கிவிட்டது. Modi is singularly lacking in economic vision, or initiative. வெளிப்படையாக செலவினங்களை ஏற்றிக்கொண்டு, மறைமுகமாக நிதி தேடுகிறாகள். இருமுறை ரிசர்வ் வங்கியின்மீது கைவைத்து சுரண்டியாகிவிட்டது. கஜினி முகம்மதுவாக மாறாமல் இருந்தால் சரிதான்.

    தேசியம் சார்ந்த விஷயத்தில். உள் நாட்டு நிலைமை சரியாக இல்லை. தேச, தேசிய விரோதச் சக்திகள் வலுவடைந்திருக்கின்றன. தமிழ் நாட்டில் நிலவும் நிலையே இதற்குச் சிறந்த உதாரணம். இதற்கு முக்கிய காரணம் மொழி-இனம் இவற்றின் அடிப்படையில் செயல்படும் கட்சிகள், வெளி நாட்டு பண பலத்தின் அடிப்படையில் செயல்படும் மத வாத அமைப்புகள. இதை நேரடியாக எதிர்கொள்ள மோடி அரசு தயங்குகிறது. இத்தகைய தயக்கம் காந்தி நமக்கு விட்டுச் சென்ற சொத்து!

    நமது சுதந்திரப் போராட்டத்தில், காந்திக்கு முன்பு இருந்த நிலை- தேசியம் நமது சமயம்-பண்பாட்டின் அடிப்படையில் அமைந்திருந்ததேயாகும். வந்தே மாதரம், பாரத் மாதா கீ ஜெய் போன்ற கோஷங்கள் இதன் பிரதிபலிப்புத்தான். திலகர், ஸ்ரீ அரவிந்தர் போன்ற தியாகிகள் அதன் தலைவர்கள். காந்தி வருகைக்குப் பின் திலகரும் அரவிந்தரும் மறைக்கப்பட்டார்கள். வந்தே மாதரமும் பாரத மாதாவும் போய், காந்திஜி கி ஜெய் கோஷம் வந்தது.

    காந்திஜி இஸ்லாம் மதத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. ஒவ்வொரு நிலையிலும் [ மாப்ளா கலவரம் உட்பட] ஹிந்துக்களுக்கு எதிராகவும் முஸ்லிம்களுக்கு ஆதரவாகவுமே நடந்துகொண்டார். முஸ்லிம்களுக்கு ஆதரவு என்பது ‘மதம் சாரா’ அரசியலின் அடிப்படையாகிவிட்டது. முஸ்லிம்களால் தேசிய கீதம் அவமதிக்கபப்டுகிறது. மோடியால் இதைத் தகர்க்க இயலவில்லை! அதனால் அரசியல் சட்டத்தின் நிழலிலேயே தேசீய எதிர்ப்பும் தழைத்துவருகிறது. பொதுவாக இதை யாரும் வெளிப்படையாகச் சொல்வதில்லை.

    முஸ்லிம், கிறிஸ்தவர்களின் தேசீய விரோதப்போக்கை நன்கு உணர்ந்த ஒரே பெரிய தேசீயத் தலைவர் டாக்டர் அம்பேத்கர் மட்டுமே. இது அசைக்க முடியாத சரித்திர உண்மை. Pakistan or The Partition of India என்ற புத்தகத்தில் இதை விரிவாகவே டாக்டர் அம்பேத்கர் எழுதியிருக்கிறார். அதைச் செயலிலும் காட்டினார். 1936 வாக்கிலேயே ஹிந்துமத்திலிருந்து விலகுவது பற்றித் தீர்மானித்தார். ஆனால் எதில் சேருவது? இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் அவருக்கு வலை வீசினர். ஆனால் டாக்டர் அம்பேத்கர் இவ்விரு மதங்களையும் தீவிரமாக ஆராய்ந்தார். அவை இந்தியாவிற்கு வெளியே தோன்றியவை , என்றும் இந்தியாவிர்கு விசுவாசமாக இருக்கமாட்டா என்று கண்டு தெளிந்து அவ்வாறே வெளிப்படையாக எழுதியிருக்கிறார் . அதனால் தான் தர்மம் பேசும் இந்திய மதமாகிய புத்தமதத்தில் சேர்ந்தார்! [ இந்தியாவுக்கு “பாரதம்” என்ற பெயரை நமது அரசியல் சாசனத்தில் சேர்த்தவர் டாக்டர் அம்பேத்கர்தான்!]

    இந்த விஷயங்களை ஏன் சொல்கிறேன் என்றால், இன்று இந்தியாவின் தேசீயத்திற்கு எதிராக இருக்கும் சக்திகளில் மிக வலுவானது இஸ்லாம் , கிடறிஸ்துவ மதங்கள்..
    சொந்த அளவில் தேசீய உணர்வுள்ள பல முஸ்லிம்கள் இருக்கின்றனர். ஆனால் பொதுவாக இஸ்லாம் தேசிய உணர்வை மதிப்பதில்லை! சுதந்திரத்திற்குப் பிறகு இந்த நிலை தீவிரப்பட்டு வந்திருக்கிறது. இதை எதிர்த்துத் தடுக்காத வரையில் நமது தேசீயம் தழைக்காது.

    நமது தேசியத்தின் இன்னொரு எதிரி, மொழிவாரி மாநிலங்கள். இதற்கும் வித்திட்டவர் காந்திஜிதான். காங்கிரஸ் கட்சியையே மொழிவாரியாகப் பிரித்தார். இது இன்று விஶ்வரூபமெடுத்து மாநிலத்திற்குத் தனிக்கொடி, தனி கீதம், பிற இந்திய மொழிகளின் மீது வெறுப்பு வளர்த்தல், வேலையில் மண்ணீன் மைந்தர்களுக்கே முன்னுரிமை/முதலிடம் என்று வளர்ந்துவருகிறது. [ Jobs for the sons of the soil even in the private sector is sought to be implemented in Karnataka by Modi’s BJP party government.This will surely be followed by other States. ] In the language of Tagore, the Nation is being broken up into fragments by narrow linguistic walls. [ I have lived in 7 states speaking as many languages for 35 years, so I know and have experienced what I am writing about.]
    சுதந்திரம் வந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு குடும்பக் கும்பல் சாராத ஆட்சி மலர்ந்திருக்கிறது. நேர்மையான, கை சுத்தமான ஒரு தலவர் வந்திருக்கிறார். பல பிரச்சினைகள் இருந்தாலும் ABC முறையில் சிலவற்றை முக்கியமானதாகக் கருதி அவற்றைத் தீர்ப்பதற்கு முதன்மை தரவேண்டும்.. மோடி இதில் தவறினால் நாடே நிலைகுலையும்.

  2. Santhanam Nagarajan

     /  April 5, 2020

    நன்றி! மிக மிக அருமையான குறிப்புக்ள். குறிப்பாக நாடு நரசிம்மராவை மறந்து விட்டது என்பது எவ்வலவு வேதனைக்குரிய விஷயம்! அவர் காலத்தில் ஏராளமான முன்னேற்றங்கள் ஏற்பட்டன. திட்டமிட்டு அவர் மறைக்கப்பட்டார். அல்லது அவர் பெயர் மறக்க வைக்கப்பட்டது.
    அடுத்து காந்திஜி! முஸ்லீம்களை அவர் ஏன் இவ்வளவு செல்லப் பிள்ளைகளாக நடத்தினார் என்பது தெரியவில்லை.
    அம்பேத்காரின் பல கருத்துக்கள் – சம்ஸ்கிருதத்தை தேசிய மொழி ஆக்குவது உள்ளிட்டவை அற்புதமானவை. ஆனால் அவரும் கூட தலித் போர்வையைக் கட்டப்பட்டு ஆங்காங்கே போர்டில் படம் போட்டு மாட்டி விடப்பட்டார்.
    மோடி ஜி ஜெய் சங்கர் போன்றோரை தைரியமாக அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டார். ககோயிக்கு சீட் தரப்பட்டுள்ளது. பிரச்சினைகள் ஏராளம். எதிர்ப்புகள் ஏராளம். ஊக்குவிக்க வெலீநாட்டு சக்திகளின் பண பலம், ஊடக பலம், ஐந்தாம்படை பலம் என ஏராளம் உள்ளது. ஜெட்லி போன்றவர்களால் அவருக்கு ஈடு கொடுக்க முடியவில்லை.
    இருப்பவர்களுள் நம்பிக்கை வாய்ந்த தேசபக்தி உள்ள அறிவார்ந்த ஒரு டீமை அமைத்திருக்கிறார் என்றே கருதலாம். ஆனால் நிச்சயமாக இது போதாது.
    ஆகவே தான் அவருக்கு ஒவ்வொரு இந்தியனும் பக்க பலமாக அமைய வேண்டும்.
    தீய சக்திகளைத் திடுக்கிட வைத்து விரட்ட வேண்டும்.
    செய்வோம் உயர்வோம்.
    திரும்பவும் எனது மனமார்ந்த நன்றிகள் – பதிவுக்காக

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: