3000 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள்! – Part Two (Post No.7855)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7855

Date uploaded in London – 20 April 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ராமாயண , மஹாபாரதம்

ராமாயணத்தில் கபாடபுரம் என்ற இடை ச்சங்க கால நகரம் குறிப்பிடப்படுகிறது. மேலும் ராமன் இலங்கை வரை வந்துள்ளார். அங்கே ஒரு ஆட்சியும் நடந்து இருக்கிறது. ஆக இலங்கையில் ஆட்சி நடந்த போது தமிழ் நாட்டில் ஒரு அரசு இல்லாமலா போயிருக்கும்? ஆனால் ராவணன்- அகத்தியன் இசைப்போட்டி கதைகள் எல்லாம் பிற்கால எழுத்துக்களில்தான் உள்ளன. ஆகையால் இவைகளை வரலாறு என்று ஏற்பது இல்லை.

ராமர் வந்தது உண்மையே. கிஷ்கிந்தா என்னும் குகை நிறைந்த  கர்நாடகா ஹம்பி நகர குகைப் பகுதியில்  அரைகுறை (Semi Civilized) நாகரிக நிலையில் இருந்த வாலி, சுக்ரீவன், அனுமனை சந்தித்ததும் உண்மையே . அவர்கள் குரங்கு சின்னங்களை அணிந்ததால் பிற்காலத்தில் அவர்களைக் குரங்கு போல சித்தரித்து எழுதிவிட்டனர்.

மஹா பாரதத்தில் அர்ஜுனன் தென்னகம் வந்தது, சித்ராங்கதை என்னும் அல்லி ராணியை மணந்தது , பாண்டிய மன்னன் ஆட்சி ஆகிய குறிப்புகள் உள . இருந்தபோதிலும் இராமாயண மஹாபாரத்தக் குறிப்புகள் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்றும் சொல்லலாம். இந்துக்களுக்கு ஒரு குணம் உண்டு. வேத கால இலக்கியாயத்தில் மட்டும் கை வைக்கமாட்டார்கள் மற்ற எல்லா நூல்களையும் அப்டேட் UPDATE செய்துவிட்டனர் . ஆகையால் இவைகளையும் ஒதுக்கிவிடலாம். ஏனெனில் அவை குறிப்பிடும் காலங்கள் கி.மு. 3100 மற்றும் அதற்கு முன் நடந்தவை என்று காட்டுகின்றன . நமக்கு வரலாற்று, தொல்பொருள் ஆதாரம் இல்லை.

இதற்குப் பின்னர் தர்ம சாஸ்திரங்கள் வந்தன. மனு நீதி நூல் முதலியன தெற்கில் வாழ்ந்த திராவிடர்களைக் குறிப்பிடுகின்றன. வேத நூல் இயம்பும் சடங்குகளைப் பின்பற்றாத  50 பிள்ளைகளை விஷ்வாமித்திரர் தென்னக த்துக்கு நாடு கடத்தியதாகவும் அவர்களே திராவிடர், யவனர், சகரர், ஹுனர், சூத்திரர்கள் என்றும் பிற்கால நூல்கள் உரைக்கின்றன . அதாவது க்ஷத்ரிய நிலையில் இருந்து தாழ்ந்து சூத்திரர் ஆனவர்கள். விஸ்வமித்ரரோ க்ஷத்திரியனாகப் பிறந்து பிராமணன் ஆக மாறி ‘வசிஷ்டர்  வாயால் பிரம்மரிஷி’ பட்டம் பெற்றவர்.

ஆனால் தர்ம சாத்திரங்கள் அவ்வப்போது அப்டேட் UPDATE செய்யப்பட்டவை. 1950-ல் அம்பேத்கார் தலைமையில் எழுதப்பட்ட அரசியல் சட்டத்தையே நாம் ஆண்டுதோறும் பார்லிமெண்ட் திருத்தங்கள் மூலம் அப்டேட் UPDATE (CONSTITUTIONAL AMENDMENTS) செய்கிறோம்.

கி.மு.700ல் தமிழர்கள் தலையில் பூ!

ஆயினும் கி.மு 700 என்று கணக்கிடப்படும் போதாயன தர்ம சூத்திரம் முதலியவற்றில் ‘தென்னிந்திய தட்சிணபதம்’ (Grand South Road) , ‘தலையில் பூச்சூடும்  வழக்கம்’ முதலியன வருவதால் அப்போது தென் இந்தியாவில் நாகரீகமுள்ள மக்கள் வாழ்ந்தது உறுதியாகிறது.

பாணினி சூத்திரம்

சுமார் 2700 ஆண்டுகளுக்கு முன்னர் உலகின் முதல் இலக்கண புஸ்தகத்தை – அஷ்டாத்யாயியை — எழுதிய பாணினி , மிளகு பற்றிக் குறிப்பிடுகிறார். கிரேக்க ஹெரோடோட்டஸ் போன்றோர் அரிசியைக் குறிப்பிடுகின்றனர். ஆக 2700 ஆண்டுகளுக்கு முன்னர் தென்னகம் மிளகு அனுப்பியதை ஊகித்தறியலாம்  கோதாவரி வரை அஸ்மாக நாடு இருந்த குறிப்புகளும் உள . ஆனால் ராமர் போல கடற்கரை ஓரமாக நடந்து வந்தனரா அல்லது காடுகள் அடர்ந்த தண்டகாரண்யத்தையும் விந்திய மலையையும்கடந்து வந்தனரா ?

இதற்குப் புராணத்தில் விளக்கம் இருக்கிறது.

புராணங்கள் அனைத்திலும் மூன்று முக்கிய விஷயங்கள் அகத்தியரைப் பற்றி வருகின்றன.

1.வடக்கில் ஜனத்தொகை பெருகியது. (Population Explosion in North India) ஆகையால் சிவன் அவரைத் தெற்கே அனுப்பினார். அவர் 18 குடிகளை தன்னுடன் அழைத்து வந்ததாக பிற்காலத்தில் தமிழ் உரை ஆசிரியர்களும் எழுதினார்கள். உலகில் முதல் ஜனத்தொகைப் பிரச்சினை பற்றிய குறிப்பு இதுதான் .

2. அகத்தியர் விந்திய மலையை ‘கர்வபங்கம்’ செய்தார். நான் திரும்பிவரும் வரை தலை நிமிரக்கூடாதென்றார் . ஆனால் திரும்பி வரவே இல்லை. இதன் பொருள் முதல் முதலில் ஒழுங்கான சாலைப் பாதை அமைத்த என்ஜினீயர் (Engineer)  அகஸ்தியர். கர்வ பங்கம் என்பது மலையை மட்டம் தட்டுவது. பிற்காலத்தில் கி.மு மூன்றாம் நூற்றாண்  டில் இந்த வழியாக மௌரியப் படைகள் சாலை அமைத்து தென்னகத்துக்கு வந்ததை மாமூலனாரும் சங்க இலக்கியப் பாடல்களில் பாடி இருக்கிறார்.

3.அகஸ்தியர் கடல் நீரைக் குடித்தார் என்று புராணங்கள் செப்பும். அதாவது முதல் முதலில் தமிழர்களைக் கடல் கடந்து அழைத்துச் சென்று தென் கிழக்காசிய நாடுகளில் இந்து நாகரீகத்தை நிலை நாட்டினார் என்பதை கடலைக் குடித்தார் என்று புராணங்கள் மொழியும்.

வடக்கில் இமய மலையைத் தகர்த்து கங் கை நதி நீரை உத்தரப் பிரதேசத்துக்குள் திருப்பிவிட்ட உலக மஹா என்ஜினீயர் பகிரதன் போனறவர் அகஸ்தியர் . அதே பாணியில் கேரளக் கடலில் விழுந்து வீணாகி வந்த காவிரி நதியை தமிழ் நாட்டுக்குள் திருப்பிவிட்டார். அடர்ந்த தண்டகாரண்ய காடுகளை சீர்படுத்தி விந்திய மலையை மட்டம்தட்டி சாலை அமைத்தது அகஸ்தியரை மஹா பெரிய (Great Civil Engineer) சிவில் என்ஜினியர் என்றும் ஸ்ரீ மாறன் என்ற பாண்டியனை வியட்நாமுக்கு அழைத்துச் சென்று முதல் இந்து ஆட்ச்சியை நிறுவியதால் சிறந்த ‘மரைன் எஞ்சினியர்’ (Great Marine Engineer)  என்றும் காட்டுகிறது.

அதுமட்டுமல்ல. அவர் பெரிய மொழியியல் (Great Linguist)  வித்தகர். ஆகையால் அவரை அழைத்து ‘தமிழ் மொழிக்கு புதிய இலக்கணம் செய்’ என்று சிவபெருமான் கட்டளையிட்டு தன் மகன் முருகனை அழைத்து ‘இவருக்குத் தமிழ் கற்பி’ என்றும் கட்டளையிட்டார். இதை பாரதியார் பாடல்வரை பல நுல்களிலும் காண்கிறோம் .

அகஸ்தியரின் காலம் என்ன?

அகஸ்தியர், குட முனி, கும்ப முனி, தமிழ் முனிவன் போன்றவற்றை கம்பராமாயணம் ஆகியவற்றில் காண்கிறோம். ஆயினும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சங்க இலக்கியத்தில் அவர் வாழ்ந்த பொதிய மலையையும் இமய மலையையும் ஒரே இடத்தில் ஒப்பிட்டுப் புற நானுற்றுப் புலவர் பாடுவதால் அது அகஸ்தியர் பற்றியதே என்று கருதலாம். பிற்காலத்தில் நச்சினார்க்கினியர் முதலிய உரைகாரர்கள் அகத்தியன்– பாண்டியன் — இராவணன் ஆகியோரை தொடர்புபடுத்தி கதைகள் புனை ந்துள்ளனர் . இவைகளுக்கு வரலாற்று, தொல்பொருட் துறை சான்றுகள் கிடைக்கும் வரை நம்புதற்கில்லை.

ஆனால் பாண்டியர் செப்பேடுகளும் கல்வெட்டுகளும் அகஸ்தியரைக் குறிப்பிடுகின்றனர். 2200 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த காளிதாசன்தான் (Second Century BCE) முதல் முதலில் பாண்டிய மன்னரையும் அகஸ்தியனையும் தொடர்புபடுத்தி சம்ஸ்கிருதத்தில் கவிபாடியுள்ளார்.

இப்பொழுது நாம் சங்கராச்சார்யார்கள், போப்பாண்டவர்கள் , தலாய் லாமாக்கள் என்று பரம்பரை பரம்பரையாக (Titles) அழைப்பது போல, அகஸ்திய கோத்திரத்தில் வந்த அத்தனை பெயரையும் அகஸ்தியர் என்றே எழுதினர் .

அப்படியானால் முதல் அகஸ்தியர் யார்? புறநானுற்றுப் பாடலில் கபிலர் இருங்கோவேள் என்னும் மன்னரைப் பாடுகையில் “உன்னைத் தெரியாதா, என்ன? நீ உன் வம்சத்தில் வந்த 49 ஆவது மன்னர் என்பதும் எனக்குத் தெரியும்” என்று பாடுகிறார். கபிலர் பாடியது 2000 ஆண்டுகளுக்கு முன்னர். ஒரு தலைமுறைக்கு 20 முதல் 25 ஆண்டு கொடுப்பது உலக வழக்கு. அதன்படி அவருக்கு 1000 ஆண்டுகளுக்கு முன்னர் அவருடைய முன்னோர் தமிழ் நாட்டுக்கு வந்திருக்க வேண்டும். அப்படியானால் கி.மு. ஆயிரத்தில் (1000 BCE) அகஸ்தியர் வந்தார். ஏனெனில் இப்பாட்டுக்கு உரை எழுதியோர் அகஸ்தியர் தலைமையில் 18 இன மக்கள், அதாவது 18 குடிகள் தமிழ் நாட்டுக்குள் (3000 ஆண்டுகளுக்கு முன்னர்) வந்தனர் என்கின்றனர்  . அதற்கு முன்னரும் மனிதர்கள் வாழ்ந்தது பழங்கற்கால, புதிய கற்கால கருவிகள் மூலம் (Palaeolithic, Neolithic Tools)  தெரிகிறது. நாம் பேசுவதெல்லாம் தமிழர் நாகரீகம் (Civilized Tamils) பற்றிப்பேசுவதாகும்.

மஹாவம்சமும் சங்க இலக்கியமும்

இலங்கை வரலாற்றை மஹாவம்சம் என்னும் பாலி மொழி நூல் பகரும். பிராமணர்களும் க்ஷத்ரியர்களும் பெரிய தவறு செய்தாலும் மரண தண்டனை கிடையாது. ஆனால் நாடு கடத்தி விடுவார்கள். வங்காளத்தில் துஷ்டத்தனம் செய்த விஜயனைக் கப்பலில் ஏற்றி நாடு கடத்தியபோது அவன் 2600 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் கரை இறங்கினான். அங்கு குவேனி என்ற நாக கன்னிகை அரசாண்டாள் . அவளை மணந்தால் அது க்ஷத்திரிய வம்சத்துக்கு ஒவ்வாது என்றும் அருகிலுள்ள பாண்டிய நாட்டில் பெண் எடுப்பதே நலம் என்றும் பிராமணர்கள் ஆலோசனை வழங்கினர் . உடனே மதுரை மாநகரில் தண்டோரா போட்டு “மன்னரை மணக்க பெண்கள் தேவை” என்று அறிவித்தனர். பாண்டிய மன்னன் தன் மகளையும் மந்திரிகள் தங்கள் பெண்களையும் அனுப்பி விஜயன் கோஷ்டியை மணந்து பெங்காலி- தமிழ் கலப்பு இனத்தை உருவாக்கியது இவர்களே சிங்களவர்கள். இது மஹா  வம்சம் சொல்லும் செய்தி. அதில் குறிப்பிடப்படும் ‘பாண்டியர் மதுரை’ கடலில் மூழ்கிய தென் மதுரையாக இருக்கவேண்டும் . ஆக 2600 ஆண்டுகளுக்கு முன்னர் பாண்டிய ஆட்சி தென்னாட்டில் புகழுடன் விளங்கியது தெரிகின்றது

காளிதாசன் எழுத்துக்குப் பின்னர் வந்த மகாவம்ச எழுத்தைக் கண்டோம் (Mahavamsam ‘written’ later). இதற்கிடையில்  சந்திர குப்த மௌரியன் ஆட்சி காலத்தில்  இருந்த மெகஸ்தனீஸ் என்ற கிரேக்க தூதனும் மதுரையில் ‘பாண்டேயா’ என்ற மஹாராணி இருந்ததாக, ‘இண்டிகா’ என்னும் நூலில்  எழுதிவைத்துள்ளார். அது பாண்டிய ராணி மீனாட்சி அம்மனின் கதை என்பது அறிஞர் பெருமக்களின் துணிபு.

சங்க இலக்கியத்தில் ‘பெருஞ்சோறு’

இதற்குப்பின் எழுந்த சங்க இலக்கியத்தில் இமயமலை, கங்கை பற்றி சுமார் 20 குறிப்புகள் இருப்பதால் அவர்களுக்கு இமயம் முதல் குமரி வரை தெரிந்து இருந்ததை நாம் அறிந்து கொள்கிறோம். அங்கே சில கதைகள் பேசப்படுகின்றன . ஒரு சேர மன்னன் பாண்டவர் படைக்கும் , கவுரவர் படைக்கும் சோறு கொடுத்ததாக உரை கார்கள் எழுதியுள்ளனர். செய்யுளில் வரும் சொல் பெருஞ்சோறு’ என்பதாகும். தமிழர்கள் மகாபாரதம் நிகழ்ந்த கி.மு.3138 ஆம் ஆண்டு ஆட்சி செய்தற்கான சான்றுகள் இல்லை. மாபாரதப் போரே கி.மு.1500 என்று சொல்லும் அளவுக்குத்தான் தொல்பொருட்துறை சான்றுகள் கிடைக்கின்றன. ஆகவே பெருஞ்சோறு என்பது அவர் நினைவாக படைக்கப்படும் படையலாக இருக்க வேண்டும். இப்போதும்கூட சைவ நாயன்மார்கள் சிவபதம் எழுதிய குருபூஜை நாட்களில் தமிழர் கோவில்களும் மடங்களும் அன்னதானம் செய்வதைப் பார்க்கிறோம்

மூன்று தமிழ்ச் சங்கங்கள் 10, 000 ஆண்டு வீச்சில் இருந்தது என்பது  எகிப்திய சுமேரிய நாகரிகங்களை எல்லாம் சாப்பிட்டு ஏப்பம் விடுவதை போன்றதாகும் . அதற்குச் சான்று என்பது உலகில் எங்கும் கிடைக்காது. பாபிலோனிய சுமேரிய நாகரிகங்களில் கிடைத்த சொற்களும்  சம்ஸ்கிருத சொற்களே (கபி = குரங்கு , மரிச = மிளகு, துகி =சிகி =மயில் ; அகில்).

சங்க இலக்கியம் காட்டும் தெளிவான தொடர்பு இத்தாலியின் ரோம் (Roman Contacts) நகருடையதே

அசோகன் காரவேலன்

மௌரிய மன்னர் அசோகனின் 2300 ஆண்டுப் பழமையான பிராமி லிபி கல்வெட்டுக்களும் 2130 ஆண்டுப் பழமையான ஒரிஸ்ஸா மன்னன் — சமண மத ராஜா – காரவேலன் கல்வெட்டுகளும் மூவேந்தர் பற்றிக் குறிப்பிடுவதால் இவற்றையே முதல் தொல்பொருட்துறை (Earliest Historical, Archaeological) சான்று  என்று கற்றறிந்தோர் கொண்டாடுவர்.

இதற்கு சற்று முந்தைய சாணக்கியனின் — கௌடில்யரின் — அர்த்த சாஸ்திர பொருளாதார நூலும் ‘பாண்டிய  கவாடம்’  என்று முத்துக்களைக் குறிப்பிடுவதால் தென்பாண்டி முத்து மகத சாம்ராஜ்யம் வரை புகழ் பரப்பியதை அறிகிறோம்.

முடிவுரை

வேத கால இலக்கியம் கரை படாதது- பிறர் கைபடாதது – இடைச் செருகல் இல்லாதது – என்று அறிஞர் உலகம் போற்றுவதாலும், அகஸ்திய முனிவர் இருங்கோவேளுக்கு 49 தலை முறைக்கு முன்னர் தமிழ் நாட்டுக்கு வந்ததை உரைகார்கள் செப்புவதையும் கொண்டு  3000 ஆண்டுக்கு முன் தமிழர்கள் என்று புஸ்தகம் எழுத முடியும். பாணினி சொல்லும் மிளகும், ஹெரொடோரோட்டஸ் சொல்லும் அரிசியும். போதாயனர் சொல்லும் தமிழர்களின் தலைகளில் சூடும் பூவும், கௌடில்யர் சொல்லும் கபாட முத்தும் இதற்குத் துணையாக நிற்கும்.

ஒரு காலத்தில் சிந்து-சரஸ்வதி முத்திரைகளை எவரேனும் படித்தாலும் அது சம்ஸ்கிருத – தமிழின் மூல மொழியாக இருக்குமேயன்றி நாம் அறிந்த தமிழ், சம்ஸ்கிருதமாக இராது என்பதே நான் கண்ட உண்மை.

வாழ்க  தமிழ்.

tags – 3000 ஆண்டு, தமிழர்கள், part 2

–சுபம்—

ஹிந்தி படப் பாடல்கள் – 12 – காதல் பாடல்கள்! (Post No.7854)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No.7854

Date uploaded in London – – 20 April 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஹிந்தி படப் பாடல்கள் – 12 – காதல் பாடல்கள்!

R. Nanjappa

 பழைய  இசை அமைப்பாளர்கள்

சினிமா பாடல் ஒரு குறிப்பட்ட கதைச் சூழ் நிலையில் உருவாக்கப்படுவது. அதற்கேற்பத்தான்  மெட்டு அமையும். மெட்டிற்கு  ராகமே  அடிப்படை. ராகம்  bhaavaத்தை உணர்த்த வேண்டும் . கச்சேரியில் ஒரு தேர்ந்த வித்வானுக்குக்கூட ராக ‘பாவத்தை ‘ வெளிப்படுத்த சில நிமிஷமாகும். ஆனால் சினிமா பாட்டில் ஒரு 78rpm ரெகொர்டில் 3-4 நிமிஷங்களுக்குள் இதைச்  சாதிக்கவேண்டும்! இது எப்படி இயலும்?

நம் பழைய இசையமைப்பாளர்கள் இதில் தேர்ந்தவர்கள். ஜீனியஸ் என்றுதான் சொல்லவேண்டும்.    ஒரு பெரிய ராகத்தின் சாரத்தை மூன்று நிமிஷங்களில் பிழிந்து தருகிறார்கள்!. தடுமாற்றமே இல்லை! இத்தகைய பாடல்கள் காலத்தைக் கடந்து நிற்கின்றன. சில உதாரணங்கள்;

மன் தட்பத் ஹரி தர்சன் கோராகம்மால்கோஷ் படம்:பைஜு பாவ்ரா – இசை: நௌஷத்

ஏஜிந்தகீ உஸி கி ஹை  ராகம்: பீம்பலாசி, பட்தீப் ?  படம்: அனார்கலிசி.ராம்சந்த்ரா

நைன் ஸோ நைன்  ராகம்: மால்குஞ்சி படம்: ஜனக் ஜனக் பாயல் பாஜே –வசந்த் தேசாய்

மதுபன் மே ராதிகா  ராகம்: ஹமீர்    படம்: கோஹினூர்நௌஷத்

ஆகே பீ ஜானேன தூ  ராகம்: பாஹடி     படம்: வக்த்ரவி

ப்ருந்தாவன் கா கிஷ்ண கனையா–  ராகம் பாஹடி படம்: மிஸ்மேரிஹேமந்த் குமார்

மாலிக் தேரே  ராகம்பைரவ்   படம்: தோ ஆங்கேன் பாரஹ் ஹாத்வசந்த் தேசாய்

அல்லாஹ் தேரோ நாம் ராகம்: கௌட ஸாரங்க்     படம்: ஹம் தோனோஜய்தேவ்

தூ ப்யார் கா ஸாகர் ஹை ராகம்: தர்பாரி கானடா   படம்: ஸீமாஷங்கர் ஜெய்கிஷன்

– மன் ரே து காஹே ந  ராகம்: யமன்   படம்: சித்ரலேகா   இசை- : ரோஷன்

மேலும் இந்தமேதாவிகள் ஒரே ராகத்தின் அடிப்படையில் பல மெட்டுகள் அமைப்பார்கள்நௌஷத், சங்கர்ஜெய்கிஷன்  ஒரே பைரவி ராகத்திலிருந்து டஜன் கணக்கில் மெட்டுகள் அமைத்துள்ளனர்

[ இந்த வித்தைக்கு முன்னோடியாக இருப்பவர் நமது முத்துஸ்வாமி தீக்ஷிதர். சங்கராபரணத்தின் அடிப்படையில்பாண்ட்இசைக்காக பல மெட்டுக்கள் அமைத்திருக்கிறார்!]

இந்த இசையமைப்பாளர்களின் இன்னொரு திறமை, பாடலுக்கேற்ற   பாடகரைத்   தீர்மானிப்பதாகும். கோரஸ் பாடல்கள் பலர் குரலில் இருந்தாலும், சோலோ. டூயட் பாடல்களில் குரலின் தனித்தன்மை  அவசியமானது. இதைச் சரியாக நிச்சயித்ததால்தான் இன்றுவரை ஒருவர் பாடி பிரபலமான பாடலை வேறொருவர் பாடினால் ரசிக்கமுடியவில்லை!

ஹாலிவுட்டில் ஒருவர் பாடி பிரபலமான பாடலை பிறகுகவர் வர்ஷன் Cover Version  என்ற பெயரில் வேறு பலர் பாடுவார்கள்நமக்கு இது ஒத்துவரவில்லை.

இதில் ஒரு கிறுக்குப்பிடித்த நிலைக்கே போனவர் எஸ்.டி பர்மன். ரிகார்டிங்கிற்குமுன் பாடகருக்கு ஃபோன் செய்வார். பாடகர் குரல் சரி என்று தோன்றினால்தான் அவரைப் பாடவைப்பார்!

இங்கு ஒரு செய்தி. ஜி.ராமனாதன் தமிழ் திரையிசைத் துறையில் ஒரு ஜீனியஸ். முறைப்படி சங்கீதம் பயின்றவரல்லகேள்வி ஞானம்தான். கோமதியின் காதலன் என்ற படத்தில் “வான மீதில் நீந்தியோடும் வெண்ணிலாவேஎன்ற பாடல் வருகிறது. இது சீர்காழி, திருச்சி லோகநாதன்  இருவர் குரலிலும் பதிவாகி இருக்கிறது! படத்தில் சீர்காழி குரல்தான் , ரெகார்டில்  திருச்சியார் குரல்! இரண்டும் நன்றாகவே அமைந்திருக்கின்றன. இது அருமையான காதல் பாட்டு! கு.மா.பாலசுப்ரமணியன் எழுதியது.

இசையும் காதலும்!

If music be the food of love, play on.

Give me excess of it that, surfeiting,

The appetite may sicken, and so die.

   -Shakespeare, Twelfth Night

இங்கே ஷேக்ஸ்பியர் பொடி வைக்கிறார்இங்கு வரும் பாத்திரத்திற்கு காதல் நோய். அது விருப்பமில்லை. அதனால் இசை அதிகம் கேட்டால் இது குணமாகிவிடும்  (காதல் மறைந்துவிடும் ) என்று நினைக்கிறான்.

நமது சினிமாவில் நிலை வேறு! இங்கு காதலுக்கு தூபம் போடுவதே இசை தான்! காதல் தோல்வி என்றாலும் இசைதான்!

ஹிந்தி சினிமாவில்அதன் பொற்காலத்தில் எத்தனையோ அருமையான காதல் பாடல்கள் உள்ளன.

பொறுக்குவது அசாத்யம் இருந்தாலும் ஒரு பாடகருக்கு ஒன்று என்று சொல்லப் பார்க்கிறேன். 

दिल से तुझको बेदिली है मुझको है दिल का गुरूर
तू ये माने के माने लोग मानेंगे ज़ुरूर

தில் ஸே துஜ் கோ பேத்லீ ஹை,முஜ் கோ ஹை தில் கா சுரூர்

தூ மானே யா மானே லோக் மானேங்கே ஜுரூர்

மனது பற்றிய விஷயங்கள் உனக்குப் பிடித்தமில்லை

அனால் நான் அவற்றை மிகவும் மதிக்கிறேன்!

நீ இதை ஒப்புக்கொண்டாலு சரி, இல்லையென்றாலும் சரி,

இந்த உலகம் இதனை ஒப்புக்கொள்ளும்.


ये मेरा दीवानापन है या मुहब्बत का सुरूर
तू पहचाने, तो है ये तेरी नज़रों का क़ुसूर
ये मेरा दीवानापन है

யே மேரா தீவானாபன் ஹை, யா முஹப்பத் கா சுரூர்

தூ பஹசானே தோ ஹை யே தேரீ நஃஜ்ரோ9ன்) கா குஸூர்

இது தான் என் பைத்தியக்காரத்தனம்அல்லது தீவிரக் காதல்!

இது உனக்குத் தெரியவில்லையென்றால் , அது உன் கண்களின் தவறே, தவிர வேறென்ன!

இது தான் என் பைத்தியக்காரத்தனம்….

दिल को तेरी ही तमन्ना दिल को है तुझसे ही प्यार
चाहे तू आए आए हम करेंगे इंतज़ार
ये मेरा दीवानापन है.

தில் கோ தேரீ ஹீ தமன்னா, தில் கோ  ஹை துஜ் ஸே ஹீ ப்யார்.

சாஹே தூ ஆயே ஆயே, ஹம் கரேங்கே இன்தஃஜார்.

யே மேரா தீவானா பன் ஹை

என் மனதில் உன் மேல் தான் ஆசை, உன்னிடம் தான் காதல்

நீ வந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி

நான் காத்திருப்பேன்.

இது தான் என் பைத்தியக்காரத் தனம்

ऐसे वीराने में इक दिन  घुट के मर जाएंगे हम
जितना जी चाहे पुकारो फिर नहीं आएँगे हम
ये मेरा दीवानापन है…  

ஐஸே வீரானே மே இக் தின் குட்கே மர்ஜாயேங்கே ஹம்

ஜித்னா ஜீ சாஹே புகாரோ, ஃபிர் நஹீ ஆயேங்கே ஹம்

யே மேரா தீவானா பன் ஹை..

இந்த இடிந்த நிலையில் மூச்சுமுட்டும், ஒரு நாள் உயிர் பிரிந்துவிடும்

நீ எவ்வளவுதான் விரும்பி அழைத்தாலும் , நான் திரும்பி வரமாட்டேன்!

இது தான் என் பைத்திய நிலமை!….

Song: ye mera diwana pan hai. Film: Yahudi 1958  Director: Bimal Roy Lyricist: Shailendra

Music: Shankar-Jaikishan Singer: Mukesh 

மிகப் பிரபலமான பாடல்  முகேஷின் முத்திரைப் பாடல்களில் ஒன்று. அவர் குரலில் ஒரு லேசான சோகம் இழையோடும். Pathos. துயரச் சூழ்நிலை, மனத் துன்பம் ஆகிய நிலைகளில் வரும் பாடல்களுக்கு இவர் குரல் மிகவும் பொருந்தும். குரலை மாற்றிப் பாடத் தேவையில்லை! இது அப்படிப் பட்ட பாடல்.

ஷைலேந்த்ராவின் பாடல் எளிய சொற்களால் ஆனதுஆனால் உணர்ச்சிகள ஆழப் பதிப்பது. இது ஷைந்த்ராவின் விசேஷத் தன்மை. இந்தப் பாடலுக்கு அவருக்கு ஃபிலிம்ஃபேர் அவார்டு கிடைத்தது. (First award in the year it was instituted.)

இசை அமைப்பாளர்கள் சங்கர் ஜெய்கிஷன் அப்போது கொடிகட்டிப் பறந்தார்கள்.

இந்தப் பாடல் முகேஷுக்குப் பாடக்கிடைத்தது தற்செயல்தான். படத்தின் ஹீரோ திலீப் குமார் இந்தப் பாட்டை தலத் மஹ்மூத் பாடவேண்டுமென்று விரும்பினார். ஆனால் இசைஅமைப்பாளகள் முகேஷை மனதில் கொண்டு இந்த மெட்டை அமைத்தார்கள். இறுதியில் டைரக்டர் முகேஷையே பாடச்செய்தார்டைரக்டரும் இசை அமைப்பாளரும் இதை பூவாதலையா முறையில் முடிவுசெய்தார்கள் என்பவர்களும் உண்டு இன்னும் ஒரு விளக்கமமும் இருக்கிறது. அந்த சமயத்தில் முகேஷுக்கு மார்கெட் சரிந்திருந்தது. நடிப்புதயாரிப்பு ஆசையால் அவர் சில காலம் அதில் செலவிட்டார். அந்த ஒப்பந்தப்படி , படங்கள் வெளிவரும் வரை அவர் வேறு யாருக்கும் பாடக்கூடாது என்பது நிபந்தனை! படமும் தோற்கவே, முகேஷ் கஷ்ட தசையில் இருந்தார். அவர்  நண்பரான தலத் முஹம்மத் தனக்கு வந்த சந்தர்ப்பத்தை முகேஷுக்குக் கொடுத்தார். ( அதே போல் தான் மதுமதியிலும் செய்தார்அதுவும் பிமல் ராய் படம்அதே வருஷத்தில் வந்தது.) 

This is an iconic song for Shankar Jaikishan, Mukesh, Shailendra, the actor ,and director Bimal Roy. One of the best songs expressing the pangs of love in simple language.

இந்தப்பாடல் மிஸ்ர யமன் ராகத்தில் இருப்பதாகக் கருதப்படுகிறது.

சலே ஜா ரஹே ஹை(ன்)


chale ja rahe hain mohabbat ke maare
kinaare kinaare kinaare kinaare
chale ja rahe hain

காதலில் அடிவாங்கியவன்கரையோரமாகவே திரும்பிப்போகிறேன்

கரையயோரமாகவே  போகிறேன்

na saahil ki parwaah na toofan ka dar hai
na zulmo ka shiqwa na gam ka asar hai
umeedon ke bal par dilon ke sahaare
chale ja rahe hain kinaare kinaare
chale ja rahe hain

கரையைப் பற்றிய கவலை யில்லை; புயல் பற்றிய பீதி இல்லை!

குற்றம் பற்றிய புகார் இல்லை; வருத்தத்தின் வேலை இல்லை

நம்பிக்கையின் பலத்தில், மனதின் துணைகொண்டு

கரையோரமாகவே போகிறேன்


tammana yahee hai ke lahron se khelen
naseebon ki gardish ko hans hans ke jhelen
umangon ki raah mein bichhaakar sitaare
chale ja rahe hain kinaare kinaare
chale ja rahe hain  

அலைகளோடு விளையாடவேண்டும் என ஆசையிருக்கிறது

விதியின் பிடியைச் சிரித்துச் சிரித்தே சமாளிக்கவேண்டும்!

என் நம்பிக்கையின் பாதையில் நட்சத்திரங்களை விரித்து

கரையோரமாகவே போகிறேன் .

Song: Chale ja rahe(n) hai(n) Film: Kinare Kinare 1963 Lyricist: Nyay Sharma

Music : Jaidev  Singer: Manna Dey

இங்கு உணர்ச்சிகள், எண்ணங்களை  நேரடியாகச் சொல்லவில்லைஇதில் வந்திருக்கும் சொற்கள் ( ஸாஹில், பர்வா, ஃஜுல்ம், உம்மீத், தமன்னா, நசீப், உமங்க் போன்ற சொற்கள் ஆழ்ந்த கருத்துள்ளவைஇவற்றைக் கதையின் போக்கைக்கொண்டே விளக்கிக்கொள்ளவேண்டும் இதைச் சிறந்த முறையில் படமாக்கியிருக்கிறார் டைரக்டர் சேதன் ஆனந்த். கடலில் அலை வீசுகிறது–  நாயகன் ஓரமாக நடந்து போகிறான்இதை உருவகப்படுத்திப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இங்கு கடலலையின் ஓசையுடன், காற்றின் போக்குடன் இசை எப்படி ஒத்துப்போகிறது என்பது fantastic.

ஜெய்தேவின் அருமையான இசை. பிரமாதமான இசை இருந்தும் தோல்வி தழுவிய படம்பத்து வருடம் தாமதமாக வந்தது முக்கிய காரணம்.

ஜெய்தேவ் அதிகம் அலட்டிக்கொள்ளாத அமைதியான மனிதர். எஸ்.டி. பர்மனுக்கு அஸிஸ்டன்ட் ஆக இருந்தார். பாரம்பரிய இசையில் பிடிப்புள்ளவர். இந்தப் பாடல்ஜெய்ஜெய்வன்தி‘ ராகத்தில் அமைந்தது

பாடியவர் மன்னாடே. கிஷோர் குமார் சங்கீதப் பயிற்சியே இல்லாமல் பாட வந்தார்-அது ஒரு துருவம் என்றால், மன்னா டே முழுப் பயிற்சியுடன் வந்தவர்- இன்னொரு துருவம்! ஆனாலும் இவருக்கு பெரிய வாய்ப்புகள் அதிகம் வரவில்லை- பெரிய ஹீரோக்கள் இவர் குரலை முதல் சாய்ஸாக எடுத்துக்கொள்ள வில்லை. சாதுக்கள், தெருப்பாடகர்கள், அனாமதேயங்கள், காமெடி கேரக்டர்கள் -இப்படிப் பட்டவர்களுக்கே இவர் குரலை பயன்படுத்தினர். இதையும் மீறிய பல பாடல்களில் இந்தப் பாடலும் ஒன்று.

யே ராத் யே சாந்த்னீ

ये रात ये चाँदनी फिर कहाँ
सुन जा दिल की दास्ताँ
ये रात

யே ராத் யே சாந்த்னீ ஃபிர் கஹா(ன்)

ஸுன் ஜா தில் கீ தாஸ் தா(ன்)

இந்த இரவு, இந்த நடசத்திரங்கள்பின் எப்பொழுது திரும்ப வருமோ?

வந்து என் மனம் சொல்வதைக் கேட்டுச் செல்

पेड़ों की शाखों पे सोई सोई चाँदनी
तेरे खयालों में खोई खोई चाँदनी
और थोड़ी देर में थक के लौट जाएगी
रात ये बहार की फिर कभी आएगी
दो एक पल और है ये समा, सुन जा

பேடோ(ன்) கீ ஷாகோ(ன்) பே  ஸோயீ ஸோயீ சாந்த்னீ

தேரே கயாலோ(ன்) மே கோயீ கோயீ சாந்த்னீ

ஔர் தோடீ தேர் மே தக் கே லௌட் ஜாயேகீ

ராத் யே பஹர் கீ ஃபிர் கபீ   ஆயேகீ

தோ  ஏக் பல் ஔர் ஹை யே  ஸமா,

ஸுன் ஜா திகல் கீ…..

 நட்சத்திரங்கள்  பதிந்த இந்த இரவு மரக்கிளைகளில் தூங்குகிறது!

நட்சத்திரங்கள் பதிந்த இந்த இரவு உன் சிந்தனைகளில்  மறைந்துவிட்டது!

இன்னும் சிறிது நேரத்தில் களைத்து அவள் ( இரவு) திரும்பிப் போய்விடுவாள்!

வஸந்தத்தின்  இந்த இரவு இனி என்றும் திரும்ப வராது!

இந்த மகத்தான  நேரம் இன்னும் ஓரிரு க்ஷணங்கள் தான் இருக்கும்

நீ வந்து என் மனம் சொல்வதைக் கேட்டுச் செல்!

लहरों के होंठों पे धीमा धीमा राग है
भीगी हवाओं में ठंडी ठंडी आग है
इस हसीन आग में तू भी जलके देखले
ज़िंदगी के गीत की धुन बदल के देखले
खुलने दे अब धड़कनों की ज़ुबाँ, सुन जा

லஹரோ(ன்) கீ ஹோடோ(ன்) பே தீமா தீமா ராக் ஹை

பீதி ஹவாவோ(ன்) மே டன்டீ டன்டீ ஆக் ஹை

இஸ் ஹஸீன் ஆக் மே தூ பி ஜல்கே தேக் லே

ஃஜிந்தகீ  கே கீத் கீ துன் பதல் கே தேக் லே

குல் நே தோ அப் த்ட்கனோ(ன்) கீ ஃஜுபான்

ஸுன் ஜா தில் கீ தாஸ்தா(ன்)

இந்த அலைகளின் உதடுகளில் இனிய இசை திகழ்கிறது!

குளிர்ந்து வீசும் காற்றில்  குளிர்ந்த   நெருப்பு திகழ்கிறது!

இந்த அழகிய நெருப்பில்  நீயும் வந்து விழுந்து எரிந்து பார்!

வாழ்க்கை என்னும் கீதத்தின் மெட்டை மாற்றிப் பாடிப் பார்!

உன்னுடைய மனமானது இப்பொழுதுதாவது திறக்கட்டும்!

வந்து என் மனம் சொல்வதைக் கேட்டுச் செல்!

जाती बहारें हैं उठती जवानियाँ
तारों के छाओं में क् हले कहानियाँ
एक बार चल दिये गर तुझे पुकारके
लौटकर आएंगे क़ाफ़िले बहार के
आजा अभी ज़िंदगी है जवाँ, सुन जा  

ஜாதீ பஹாரே ஹை உட்தீ ஜவானியா(ன்)

தாரோ(ன்) கே சாவோ(ன்) மே கஹ்லே கஹானியா(ன்)

ஏக் பார் சல் தியே கர் துஜே புகார் கே

லௌட் கர் ஆயேங்கே காஃபிலே பஹார் கே

ஆஜா அபீ ஃஜிந்தகீ ஹை ஜவா(ன்)

ஸுன் ஜா தில் கீ தாஸ்தான்.

வஸந்த காலம் கழிந்து போய்விடும், இளமை மறைந்துவிடும்

இந்த தாரகைகளின் நிழலில் உன் கதையைச் சொல்

இந்த வஸந்தம் ஒரு முறை உன்னை அழைத்துவிட்டுச் சென்றுவிட்டால்

பின்னர் திரும்பி  வராது!

வாழ்க்கை இளமையாக இருக்கும் இப்பொழுதே வா,

என் மனம் சொல்வதைக் கேட்டுச் செல்.

Song: Ye raat ye chandni Film: Jaal 1952 Director: Guru Dutt  Lyricist: Sahir Ludhianvi

Music: S.D.Burman Singer: Hemant KUmar.

This is a landmark song. Hemant Kumar sings his heart out! The picturisation is superb, with excellent camera work by the famed V.K.Murthy. Burman’s music is scintillating, pulling our heart strings. The melody has a haunting quality, and lingers in our minds and memory for long.

Sahir Ludhianvi’s poetry is superb, his imagination is fertile. See how he stresses time, and makes use of Nature to express his point.

இயற்கையுடனான இத் தொடர்பு நமக்கு சங்க இலக்கியத்தை நினைவூட்டுகிறது. அங்கும் அகத்துறைப் பாடல்களில் இயற்கைக்கு முக்கிய இடம் உண்டு

முன் பார்த்த பாட்டில் உணர்ச்சிகள், எண்ணங்கள் மறைமுகமாகச் சொல்லப்பட்டன. இங்கு எல்லாம் தெளிவாகநேரடியாக இருக்கிறது! இந்த விஷயத்திலும் இது நம் சங்க இலக்கியத்திற்கு ஒத்துப்போகிறது! காதல் இலக்கியத்திற்கு இங்கு இலக்கணம் வகுக்கிறார் ஸாஹிர்!

இது குருதத் டைரக்ட் செய்த முதல் படம்இசை அருமையானது. இந்தக் காட்சியைப் பதிவுசெய்த விதம் அபாரம். இதே பாடல் சில மாற்றங்களுடன் டூயட்டாகவும் லதா மங்கேஷ்கருடன் சேர்ந்து பாடப்படுகிறது.

இந்தப் பாடல் ஹிந்துஸ்தானி காஃபி ( kafi) ராகத்தில் அமைந்துள்ளது. நம் சங்கராபரணம்போல் சம்பூர்ணராகம். சிருங்கார ரசத்திற்கும் வஸந்த காலத் தொடக்கத்திற்கும் ( ஹோலி  பண்டிகை சமயம்) உகந்தது. இரவில் பாடவேண்டிய ராகம். எப்படிப் பாட்டின் கருத்துக்குப் பொருந்துகிறது பாருங்கள்! இது நம் அன்றைய இசையமைப்பாளர்களின் திறமைக்கு ஒரு சான்று!

இது நீண்டுவிட்டது. பெண்பாடகர்களின் பாட்டை தனியாகத்தான் பார்க்கவேண்டும்!

tags ஹிந்தி படப் பாடல்கள் – 12 , காதல் பாடல்கள்

****

மனிதர்கள்! (Post No.7853)

gossip well

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7853

Date uploaded in London – – 20 April 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ச.நாகராஜன்

ஒரிஸா மாநிலத்தில் குண்டுபரஸி (Gunduparasi) என்பது ஒரு சின்னஞ்சிறு கிராமம். அங்கு குடிக்க நீரே இல்லாத அவல நிலை. குடிநீருக்காக வெகு தூரம் நடந்து சென்று நீரை எடுத்து வர வேண்டிய கஷ்டமான சூழ்நிலையில் மக்கள் வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையை மாற்ற உறுதி கொண்டார் ஒரு மனிதர். அவர் பெயர் துர்லவ நாய்க்.(Durlava Naik)

ஒரு கிணறு கிராம மக்களுக்கென இருந்தால் இந்த அவல நிலை இருக்காது என்று அவர் எண்ணினாலும் கிராமத்தார் அனைவரும் ஒன்று கூடி கிணறை வெட்டப் போவதில்லை என்பதையும் அவர் உணர்ந்தார்.

அவர் சொல்லி யார் கேட்கப் போகிறார்கள்?

ஆகவே தானே ஒரு கிணறை வெட்டி விடுவது என்ற முடிவுக்கு அவர் வந்தார்.

கிணறு வெட்டுவதற்காக ஒரு இடத்தையும் அவரே தேர்தெடுத்தார். தினமும் காலை அந்த இடத்திற்குச் சென்று வேலையை ஆரம்பிப்பார். மாலை பொழுது சாயும் வரை கிணறு வெட்டும் வேலை தொடரும்.

ஒரு நாள் அல்ல, இரு நாள் அல்ல, இருபத்தைந்து வருடங்கள் அவர் வெட்டிக் கொண்டிருந்தார்.

கடைசியில் ஒரு குளமே உருவாகி விட்டது.

அதை கிராம மக்களுக்கு அவர் இலவசமாக அளித்தார்.

தினமும் குளம் வெட்ட வேண்டிய வேலை இருந்ததால் அருகேயே ஒரு குடிசை ஒன்றைப் போட்டு அதில் அவர் வசித்து வந்தார்.

ஏழை என்றாலும் கூட குளத்தை வெட்டி கிராம மக்களுக்கு அதை அர்ப்பணித்த பின்னர் அவர் வேறு விதமாகப் பார்க்கப்பட்டார். அவரை அனைவரும் அன்புடன் பார்த்தனர்; மதித்தனர்.

ஒரு முக்கிய விஷயம் இருக்கிறது : துர்லவ நாயக் ஒரு பிறவிக் குருடர்!!

village well, google

இதே போல உத்தர கன்னட மாவட்டத்தில் லேடி பகீரதா என்று அழைக்கப்பட்ட பெண்மணியான கௌரி எஸ் நாயக் தண்ணீர் இல்லாத சிர்சியில் இருந்த கணேஷ் நகர் பகுதியைச் சேர்ந்தவர்.

தக்குச் சொந்தமான 150 பனை  மரங்கள், 15 தென்னை மரங்கள் மற்றும் வாழை மரங்கள் உள்ள பகுதியில் நீரே இல்லை என்பது அவருக்கு வருத்தமாக இருந்தது. கிணறை வெட்டப் பணமும் இல்லை. ஆகவே ஒரு இடத்தைத் தானே தேர்ந்தெடுத்து அங்கு கிணறு ஒன்றை வெட்ட ஆரம்பித்தார். தினமும் ஐந்து முதல் ஆறு மணி நேரம் கிணறு வெட்டும் வேலையில் ஈடுபட்டார் அவர். மூன்று மாதங்களில் 60 அடி ஆழக் கிணறு ஒன்று உருவாக அதிலிருந்து நீர் சுரந்தது.

கடைசியில் கிணறு அடியில் சேர்ந்திருந்த குப்பை கூளம், சேறு சகதியை நீக்க மட்டும் மூன்று பெண்களின் உதவியை அவர் நாடினார். கிணற்றில் 7 அடி நல்ல நீர் இருந்தது.

மனதில் உறுதி இருந்த இந்த பகீரதப் பெண்மணியை அனைவரும் பாராட்டினர் என்பதில் வியப்பில்லை.

துர்லவ நாயக் போன்றவர்கள் இருப்பதால் தான் மனிதன் என்ற சொல்லுக்கு உண்மையான அர்த்தம் நமக்குத் தெரிகிறது, இல்லையா!

tags கிணறு,மனிதர்கள்

***

Swami Crossword 1942020 (Post No.7852)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7852

Date uploaded in London – 19 April 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

across

1. – (8) – Sanskrit poet who composed Gita Govindam

4. — (6) – Early ancestor of Kuru Dynasty, Son of Nahusha

6. – (5)  – Tooth; English word Dental is derived from this Sanskrit word;elephants have it as tusk.

9. -(4) – noise; loud cry; roar; also coarse particles applied to grains

10. – (7)- three in one; three braids; holy confluence of Ganga, Yamuna and Sarasvati

11.—(4) –fame, splendour, majesty

12– (4)- Sun in Sanskrit; also Calotropis gigantea plant

13. (4)- bone; osteology came from this Sanskrit word

XXX

down

1.J- (10)- – King of Sindhudesa, Husband of Dushala, Sister of Duryodhana

2. – (10)—Son of Atri and Anasuya; Lord of Yoga; shown with three heads to mean he is an avatar/incarnation of Trimurtis

8.  –(5)- Mind in Sanskrit ; word mind is derived from this word

3. (10) –  Sanskrit hymns in Gita Govinda  aarranged eight couplets

5. –(4) – Muslims are called by this name in Sanskrit works and inscriptions

7. — (5)- Ghee with rice offered in Sacrificial fire

–subham–

More Banks Anecdotes (Post No.7851)

Compiled  BY LONDON SWAMINATHAN

Post No.7851

Date uploaded in London – 19 April 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

Cleaning out the bank!

Upon being questioned as to the occupation of his father, the young man replied,

He cleans out the bank.

Janitor or President? was the final question.

Xxx

Identification, Please!

Pausing for a moment before completing the final transaction before him, the teller in the bank peered at the young lady and asked ,

I am sure that this check is alright, but could you show me some positive identification?

The young lady seemed about to turn away: then in a faltering tone, she said,

I have a mole on my thigh just above the knee.

Xxx

Your loving wife Ethel!

A young bride walked into a bank to cash a cheque. She was somewhat taken aback when the clerk informed her that the cheque would have to be indorse d before by her before it could be cashed.

Why, it is a good cheque. My husband sent it to me. He is away on business.

Yes, Madam, it is perfectly alright. But please sign it on the back so that your husband will know that you got the money.

The bride walked to the writing desk, seemed to be lost in deep contemplation for a moment, and then returned to the tellers window and handed the cheque to him.

Great was his surprise when he saw scrawled across the back of the cheque,

Your loving wife Ethel.

Xxx

No Funds, Madam!

Returning home one evening a father was accosted by his daughter in the hallway of their home.

Indignantly the daughter said,

Father, why in the world, did you tell me to put my money in such a bank? Why it is absolutely on the rocks?

What, said her father, why that is one of the strongest banks in the country. What do you mean by such a statement?

Waving a cheque in the air, his daughter replied,

Look at this. It is my cheque for $25 and it was returned today by the bank and marked,

No Funds.

tags– banking, jokes

Xxx Subham Xxx

3000 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள்! – Part one (Post No.7850)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7850

Date uploaded in London – 19 April 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

நுறு ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் விஸ்வநாதன் கனகசபைப்பிள்ளை ஒரு புகழ் பெற்ற ஆங்கில நூலை எழுதினார். அதன் தலைப்பு 1800 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்கள் The Tamils 1800 Years Ago. முதல் முதலில் ஆங்கிலத்தில் தமிழின் பெருமையை உலகறியச் செயத பெருமை கனகசபைப்பிள்ளையைச் சாரும். இதைவிட அருமையான கட்டுரைகள், நூல்கள் அதற்கு முன்னரே தமிழில் உண்டு. ஆங்கிலத்திலும் கட்டுரைகள் உண்டு; ஆயினும் உருப்படியான ஒரு புஸ்தகத்தில் கொண்டு வந்த பெருமை இவருடையதே. இவர் சென்னையில் பிறந்தாலும் இலங்கை வம்சாவளியில் வந்தவர் என்பதால் அவர்களும் இவர்தம் பெருமையை விதந்தோதி மகிழவர்.

திராவிடர்கள் மத்தியதரைக் கடல் பேர்வழிகள் ; வந்தேறு குடிகள் என்று கால்டுவெல்கள் (Caldwell)  கதைத்த காலத்தில் இவர் தமிழர்கள் மங்கோலியாவிலிருந்து வந்த குடியேறிகள் ; மண்ணின் மைந்தர் அல்ல என்று புஸ்தகத்தில் எழுதினார். இதனால் சில புருவங்கள் உயர்ந்தன . ஒட்டு மொத்தத்தில் புஸ்தகம் தமிழன் பெருமையை முரசு கொட்டியது என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை .

இப்பொழுது நமக்கு கிடைக்கும் சான்றுகளைக் கொண்டு “3000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்கள்”  என்று புஸ்தகம் எழுத முடியும்.

சான்றுகளை ஒவ்வொன்றாகக் காண்போம் .

இந்தியாவில் மனித வாடை

ஆப்பிரிக்காவிலிருந்து மனிதர்கள் 40, 000 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியேறத் துவங்கினர் என்று முன்னர் கருதினர். ஆ னால் இந்தியாவில் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னரே மனிதர் வாழ்ந்த தடயங்கள் கிடைத்துள்ளன இதைவிட அதிசய விஷயம் நாட்டின் மத்திய பகுதியிலுள்ள மத்திய பிரதேசத்தில்  பிம்பேட்கா (Bhimbeta Caves) குகைகளில் 40,000 ஆண்டுகளுக்கு முன்னரே பழங்குடி மக்கள் வாழ்ந்து வண்ண ஓவியங்கள் வரைந்ததும் விக்கிபீடியா முதலிய என்சைக்ளோபீடியாக்களில் இருக்கின்றன. தமிழ் நாட்டில் சென்னைக்கு அருகிலுள்ள அச் சிரப்பாக்கம் முதிய இடங்களில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு மன்னர் மக்கள் வாழ்ந்த தடயங்களும் கிடைத்துள்ளன. அதாவது இமயம் முதல் குமரி வரை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மக்கள் வசித்துள்ளனர் . ஆனால் இவையனைத்தும் நாகரிகம் அடைவதற்கு முன்னுள்ள நிலை.

தென்னாடு / தமிழ் நாடு எப்போது நாகரீகம் எய்தியது?

ரிக் வேதம் :-  1.Rig Veda 10-61-8 and 1-179-6

ரிக் வேதம் பழமையான நூல் ; ஜாகோபியும் பாலககங்காதர திலகரும் ரிக் வேதம். 6000 முதல் 8000 ஆண்டு பழமையானது என்பர் ; மாக்ஸ் முல்லர் 3500 ஆண்டு பழமையானது என்பர் . இதில் இரண்டு இடங்களில்  தென் பகுதி பற்றிய குறிப்புகள் வருகின்றன. ஓரிடத்தில் ‘தக்ஷிண பாத’ என்பது விந்தியமலைக்குத் தெற்கிலுள்ள தென்பகுதியைக் குறிக்கும் என்பர்  சிலர். இன்னொரு இடத்தில் அகஸ்திய மகரிஷியை அவருடைய மனைவி லோபாமுத்திரை புகழ்ந்து கவி பாடி இருக்கிறார். அதில் அவரை ‘இரு வகுப்பினரின் நண்பர்’ என்று பாடுகிறார் . இந்த இரு வகுப்பினர் தமிழர்களும் வடக்கத்தியரும் என்று ஜம்புநாத அய்யர் மொழிபெயர்த்தார். ஆனால் வேதத்தை மொழிபெயர்த்த அனைவரும் இதை ஏற்கவில்லை அவர்கள் வெவ்வேறு அர்த்தம் கற்பிக்கிறார்கள். மேலும் இவ்விரு கவிதைகளும் அதி பயங்கர செக்ஸ் கவிதை என்பதால் Griffith க்ரிப்பித் மொழிபெயர்க்காமல் பிற்சேர்க்கைக்குத் தள்ளிவிட்டார் கவிதைகளை. அதுமட்டுமல்ல ‘செக்சி’ (Sexy) பகுதிகளை லத்தின்  மொழியில் மட்டும் கொடுத்துவிட்டார். சுருக்கமாக்ச் சொன்னால் இரண்டும் நமக்குப் பயன்படாது.

தமிழர் நாகரீகம் எப்போது துவங்கியது ?

மூன்று வகையான தமிழ் கிறுக்கர்கள் , வெறியர்கள் உளர் ; அவர்கள் அதிகம் படித்தறியாத தமிழ் ஆர்வலர்கள் ; அவர்களுடைய மூன்று வாதங்கள்:-

1. ‘கல்தோன்றி மண் தோன்றாக்காலத்தே வாளொடு முன் தோன்றிய முத்த குடி’ – என்று ஆடுவர், பாடுவார்கள். இது உயர்வு நவிற்சி அணி; இதை அறியாத பாமரர் இதை அப்படியே சொல்லுக்குச் சொல் பொருள் (literal meaning) கொள்வர். அதாவது நாஸா (NASA) வெளியிடும்  செவ்வாய், புதன் கிரக பரப்பைப் பார்த்தால் பிரம்மா ண்டமான பாறைகளைப் பார்க்கலாம். பலகோடி ஆண்டுகளுக்கு முன்னர் அப்படித்தான் பூமியும் இருந்தது. பின்னர் கோடிக்கணக்கான ஆண்டுகளில் பெய்த மழை , அடித்த வெப்பத்தில் அவை சிறிதாக உடைந்தன; மணற்பரப்பும் உருவானது. தமிழர்கள் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் உருவானதாக நம்பும் ஜீவன்களும் நமது நிலப்பரப்பில் இப்போதும் உள .

2.இரண்டாவது அணி சிந்து- சரஸ்வதி நதி தீர நாகரீகம் தமிழர் நாகரீகம் என்று நம்பி எதைச் சொன்னாலும் சிந்து சமவெளி நாகரீக போர்வைக்குள் மறைந்து கொண்டு கதைப்பார்கள். இவர்களை அப்பா அடிக்க வரும்போது அம்மாவின் புடவைக்குள் ஒளிந்து கொள்ளும் சின்னக் குழந்தைகளுக்கு ஒப்பிடலாம். சிந்துவெளியில் கண்டுபிடிக்கப்பட்ட 4000++++ முத்திரைக்ளுக்கு ஐம்பதுக்கும் மேலான வியாக்கியானங்கள் உண்டு. இன்றுவரை அதை எவரும் படிக்க முடியவில்லை. இது பற்றி கதைப்போர் எவரும் ஐராவதம் மஹாதேவன், அஸ்கோ பர்போலா, சர்மா முதலிய பெருமக்கள் 100 பேர் எழுதிய புஸ்தகங்களைப் பார்த்திருப்பார்களா என்பதே சந்தேகம். சிந்து என்ற சொல்லே சங்க இலக்கியத்தின் 30,000 வரிகளில் இல்லை என்பது இந்த மண்டூகங்களுக்குத் தெரியாது. 20 முறை கங்கை நதியையும் இமயமலையையும் புகழ்ந்து பாடிய சங்க புலவர்களுக்கு சிந்து நதி தெரியாது!! அது மட்டுமல்ல பிற்காலத்தில் சிந்து என்பதையும் கொடி , துணி என்ற பொருளில்தான் பயன்படுத்தினர்.

(தொல்காப்பியம் 3-363-1; சிலப்பதிகாரம் 16-138)

GHOSTS IN INDUS SEALS

1960-களில் பின்லாந்து, சோவியத் மொழியியல் அறிஞர்கள் நடத்திய ஆய்வில் திராவிட மொழி அமைப்பு இந்த முத்திரைகளின் மொழியில் இருப்பதாகக் கூறினர் . உடனே திராவிடர்களும் மார்கசியங்களும் ஆகாசத்துக்கும் பூமிக்கும் குரங்குகள் போல தாவிக் குதித்தன . அதற்கு முன்னும் பின்னும் வேறு 50 விளக்கங்களும் இருக்கின்றன. அண்மையில் அமெரிக்க அறிஞர்கள் “டேய் , மண்டுகளா ! இது மொழியே இல்லை, வெற்று வரைபடங்கள்” என்று சொன்னவுடன் திராவிடர்களும் மார்கசியங்களும் பொங்கி எழுந்தன; காரசாரமாக எதிர்த்துப் பேசின. ஆனால் அந்தப் பரிதாப கேசுகளுக்கு ஒரு அரிய  வாய்ப்பு இந்த தடவை கை  நழுவிப்போனது. இது அமெரிக்க அறிஞர் குலாத்தில் இருந்து வந்ததால் ‘ஆரிய சூழ்ச்சி’, ‘பார்ப்பன சதி’  என்று கொக்கரிக்க முடியவில்லை  இன்னும் சில அரைவேக்காடுகள் “பார்த்தியா? ஊர்ப்பெயர்களை” என்று எல்லாவற்றின் ஸ்பெல்லிங் Spellingsகுகளையும் தவறாக எழுதிக்காட்டி குதூகலிக்கின்றன. உலகில் 30 பெர்லின்கள் உண்டு; அமெரிக்காவில் சேலம், மதராஸ் என்ற நகரங்கள் உண்டு; உலகில் பத்து மதுரைகள்  இருக்கின்றன. இவைகளையெல்லாம் வைத்து இது அதுவேதான் ; அது இதுவேதான் என்று சொல்லுவது போன்றது இது.

அப்படியானால் உண்மைதான் என்ன ?

INDRA OR BHARATA IN INDUS SEAL

அது எனக்குத் தெரிந்தால் இவ்வளவு நேரம் நோபல்பரிசு வாங்கியிருப்பேன் . இதை முதலில் உலகிற்கு வெளிப்படுத்திய அயோக்கிய வெள்ளைக்காரர்கள் இதற்கு ஆரம்பத்திலேயே ஆரிய – திராவிடம் பூசி ஆராய்ச்சியை மழுங்கடித்து விட்டனர். அந்த ஆரிய- திராவிட வாதம் அப்போதே 100 ஆண்டுப் பழமையான வாதம். இதை எல்லாம் மறந்து விட்டு ஒருவர் ஆராய்ந்தால் உண்மை வெளிப்படலாம். முதலில் இது பற்றிய 100 விளக்கங்களைப் படித்தால் வாய் வி ட்டுச் சிரிக்கலாம். ஹீராஸ் பாதிரியார் படித்த/ அடித்த ‘ஜோக்’ முதல் சோவியத்- பின்னிஷ் ‘ஜோக்’ வரை படித்து மகிழலாம். அதி வேக, பிரம்மாண்ட சூப்பர் கம்பியூட்டர்களில் இந்த முத்திரைகளைக் கொடுத்தும் விடை காண முடியவில்லை. ஆக, இன்று வரை சிந்து ஒரு புரியாத புதிரே ! இதை யாராவது படித்து தமிழ் எழுத்து, தமிழுக்கு தொடர்புடைய எழுத்து என்று நிரூ பித்தால் முதலில் மகிழ்வது நான்தான்.

அஸ்கோ பார்போலா (Asko Parpola)  லண்டன் பல்கலைக் கழகத்தில் பேசி முடித்தவுடன், “என்ன உங்கள் அருமையான புஸ்தகத்தில்(Deciphering the Indus Script) , நமது காலத்தில் இதை எவராவது படித்தறிய முடியும் என்பது சந்தேகமே என்று முடித்துவிட்டிர்களே ; அதற்குப் பின்னர் ஏதேனும் புதிய செய்தி உண்டா?” என்று வினவினேன். ‘இல்லை’ என்று முடித்துவிட்டார். ஆனால் எல்லோரும் அவ்வப்போது ஆராய்சசிக்கட்டுரைகளை எழுதிக் குவிக்கின்றனர். அதில் தவறில்லை. எல்லோரும் லாட்டரி டிக்கெட் வாங்குகிறோம்; யாருக்கோ ஒருவருக்குப் பரிசு கிடைக்கிறதல்லவா! யார் கண்டார்? 1973 முதல் ஆராயும் எனக்கே பரிசு கிடைத்தாலும் கிடைக்கலாம்.

மூன்றாவது போலி கோஷ்டி – குமரிக்கண்ட – லெமூரியா கோஷ்டி.

3.கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் கண்டங்கள் ஒட்டி இருந்தன. பின்னர் அவை தாமரை மலர்வது போல (Continental Drift) விரிந்து பரவின. இதை பங்கேயா(Pangaea) என்று கிரேக்க மொழியில் அழைப்பர். அது உண்மையில் பங்கஜ (Pankaja = Lotus + Pangea) என்ற சொல்லாகும் தமிழில் கூட பங்கய என்றுதான் எழுதுகிறோம். அந்தக் காலத்தில் ஒட்டியிருந்த ஒரு நிலப்பரப்பு குமரிக் கண்டம். அப்போது மனித இனம் தோன்றியதா என்பதே சந்தேகம் .

ஆனால் பஃறுளி ஆறு, குமரிக்கோடு ஆகியன கடலில் மூழ்கியது உண்மையே. சிலப்பதிகாரமும் இறை யனார்  அகப்பொருள் உரையும் கூறியதில் உண்மை உளது. அவை எல்லாம் இரண்டு மூன்று நூற்றாண்டுகளில் (BCE) நிகழ்ந்தவையாக இருக்கலாம். அங்கு தமிழினம் தோன்றியது நல்ல கற்பனையே. கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் ஒரு பெரிய சுனாமி (Tsunami) ஏற்பட்டதை பூகர்ப்ப வியலாளரும் (Geologists) உறுதிப்படுத்துகின்றனர் .

இரண்டாம் தமிழ் சங்க கவிதை என்று சேர்க்கப்பட்ட பாடல்களும் மொழி நடையில் மாற்றம் இல்லாததால் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் இடைவெளி இருக்க முடியாது. ஆகையால் களவியல் உரை சொல்லும் 10,000 ஆண்டுக்கு கணக்கு என்பது நம்புதற்கில்லை. அதை எழுதியவர் சங்கேத மொழியில் (Coded language)  எழுதியள்ளனர். இவை எல்லாம் பாண்டிய நாட்டின்  பழமையை இற்றைக்கு 2500 ஆண்டுக்கு முன் தள்ளும். அவ்வளவுதான்.(500 BCE)

இந்த மூன்று கற்பனைகளையும் ஒதுக்கிவிட்டு ராமாயண மஹாபாரதக் கூற்றுகளைக் காண்போம்.

TAGS — 3000 ஆண்டு, தமிழர்கள், PART 1

To be continued ………………………

ஹிந்தி படப் பாடல்கள் – 11 – சினிமா இசையின் பொற்காலம்! (Post 7849)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No.7849

Date uploaded in London – – 19 April 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஹிந்தி படப் பாடல்கள் – 11 – சினிமா இசையின் பொற்காலம்!

R.Nanjappa

சினிமா ஒரு பொழுதுபோக்கு அம்சமாகத்தான்  கருதப்படுகிறது. பணம் ஈட்டுவதே அதன் குறிக்கோளாக இருக்கிறது.. ஆனாலும் சில டைரக்டர்கள் தங்கள் ஈடுபாடு, திறமை, அறிவாற்றல், கலை நோக்கு , உலகம்வாழ்க்கை பற்றிய தங்கள் அடிப்படைத்  தத்துவம், அணுகுமுறை ஆகியவற்றால் அதைக் கலையம்சம் மிக்கதாகச் செய்கிறார்கள். வி.சாந்தாராம், பிமல் ராய், ரிஷிகேஷ் முகர்ஜி போன்றவர்கள் இதற்குச் சிறந்த எடுத்துக் காட்டாக இருக்கிறார்கள். ‘கலைப்படம்என்றே  வருபவை  தோல்வி யடைகின்றன, ஆனால் கலையம்சம் மிக்க சாதாரணப்படங்கள் வெற்றி பெறுகின்றன.

இதில் இசைக்கு முக்கிய பங்கு இருக்கிறது. இந்திய சினிமா 30களிலிருந்தே இசைக்கு இன்றியமையாத ஒரு சிறப்பு இடம் கொடுத்து வந்திருக்கிறது. மிகை அம்சம் என்று இல்லாமல் கதைப்போக்குடன் கலந்தே இசை

மலர்ந்தது. இது ஹாலிவுட்டிலும்  நடக்காதது.  40களில் வளர்ந்தது. 50களில் மிகச்சிறந்த உயர்ந்த நிலையை எய்தியது. 60களுக்குப் பிறகு வீழ்ச்சி கண்டது. இன்று இசை என்ற பெயரில் ஏதோ சப்தம் எழும்புகிறது, அவ்வளவுதான்

1950- 65 க்கு இடைப்பட்ட ஆண்டுகளை நமது சினிமா இசையின் பொற்காலம் என்று கருதுகிறார்கள்.

யோசித்துப் பார்த்தால் இதற்கு சில  முக்கிய  காரணங்கள் புலப்படும். பாடலாசிரியர்களின் பணி பற்றிப் பார்த்தோம்  இன்று வேறு ஒரு கோணத்தில் பார்ப்போம்.

பாரம்பரிய சங்கீதத்தின் புதிய பரிணாமம்பரிமாணம்: Evolution -Dimension

இந்திய சினிமா இசை நமது பாரம்பரிய சங்கீதத்தின் அடிப்படையிலேயே எழுந்ததுதான். இது சாஸ்த்திரீயம், நாட்டுப்புறம், பக்திபஜனை என்ற பல பிரிவுகளை உள்ளடக்கியது.

இதில் 50 முதல் ஒரு புதிய சகாப்தம் தோன்றியது. சுதந்திரத்திற்குப் பிறகு மேலை இசையில் தேர்ந்த பல கோவாக்காரர்கள் பம்பாய்க்கு வந்தனர். அங்கிருந்த கிளப்புகளில் சேர்ந்தனர். மேற்கத்திய இசையை முறைப்படிக் கற்றிருந்த இவர்கள், பல மேற்கத்திய இசைக்கருவிகளில் தேர்ந்திருந்ததோடு, பல மேற்கத்திய உத்திகளில் சிறந்திருந்தனர்.

Chord, counter-melody, arrangement, orchestration, prelude,interlude, notation என்று பற்பல உத்திகளில் தேர்ந்திருந்தனர்

நமது இசை அமைப்பாளர்கள் இவர்களை  Assistant, Arranger  என்ற பெயர்களில் அமர்த்திக்கொண்டனர். [[இவர்களில்   Anthony Gonsalves, Chic Chocolate, Frank Fernand, Sebastian D’Souza,  Alfred Rose, Remo Fernandes போன்றோர் முக்கியமானவர்கள்.ஆனால் இவர்கள் பெயர் அதிகம் வெளியில் வரவில்லை! ]  

இவர்கள் வரவினால் 50களில் ஹிந்தி திரை இசை புதுப் பொலிவு பெற்றது. பாடல்களின் மெட்டு நமது பாரம்பரிய சங்கீதத்தின் அடிப்படையில்  இருந்தாலும் Background, interlude, countermelody, orchestration போன்ற அம்சங்களில் மேற்கத்திய உத்திகளும் நுணுக்கங்களும்  புகுந்தனதிரை இசை புத்துயிரும் புதிய பரிமாணமும் dimension பெற்றது! அவற்றின் ஈர்ப்பு மிகுந்ததுஇந்த மேற்கத்திய அம்சங்களை நீக்கிவிட்டுக்கேட்டால் பல பாட்டுக்கள் ‘சப்பென்று போய்விடும்Mitti Mein Sona  என்ற படத்தில்பூசோ ஹமே ஹம் உன் கேலியேஎன்று ஆஷா போன்ஸ்லே பாடும் அருமையான பாடல் வரும்.இதில் பியானோ இசை கூடவே வரும். இதில் பியானோ இசையை நீக்கிவிட்டுக் கேளூங்கள்– ‘சப் ‘தான்!   Everybody praises O.P.Nayyar for the tune but the piano  was played by  Castelino senior who is forgotten.

[குறிப்பு: இந்த அந்தோனி கொன்ஸால்வஸ் இசை அமைப்பாளர் (லக்ஷ்மிகாந்த்-)பியாரேலாலுக்கு வயலின் ஆசிரியராக இருந்தவர். அவருக்கு மரியாதை செய்யும் விதத்தில்தான் அவர் பெயரில் “My name is Anthony Gonsalves” என்ற Amar Akbar Anthony படப் பாடல் அமைந்தது.

சிக் சாக்லேட்  (  இயற் பெயர் Antonio Vazஆக்ரி கத்என்ற படத்தில் ஒரு சீனில் வருவார் plays Trumpet. சில படங்களுக்கு இசை அமைத்தார்.]]

Film music acquired a modern face with an ancient base!

மேல்  நாடு வேறுகீழ் நாடு வேறு; இரண்டும் சேரின் பேறுஎன்று 50களில் எழுதினார்  தமிழறிஞர் .சிதம்பர நாதன் செட்டியார், திரை இசை விஷயத்தில் எவ்வளவு உண்மையாகி விட்டது!

காதல் இல்லாமல் சினிமா இல்லை!

நமது சினிமாவின் ஜீவனாடியாக இருப்பது காதல்! இபோது அடி தடி யெல்லாம் அதிகமாகிவிட்டாலும், போக்கிரி கேரக்டர்களை  பெருமைப்படுத்திக் காட்டினாலும், காதல் என்ற அம்சம் இல்லாமல் சினிமா கதை இல்லை. 50 களில் வெளிவந்த காதல் அம்சம் இல்லாத பூட் பாலிஷ், தோ ஆங்கே பாரஹ் ஹாத்  போன்ற லட்சியப் படங்கள் இன்று ஓடுமா என்பது சந்தேகமே.

காதல் கதையுடன் நல்ல இசை சேருவது பாலும் தேனும் கலப்பது போலாகும்.

இது நம் மரபுடன் நன்கு ஒத்துப் போகும் விஷயம்! சிருங்கார ரசம் என்று இது நம் இலக்கியங்களில் புகழப்படும் . நாயகநாயகி  பாவம் என்று பக்தி இலக்கியத்தில் இது முக்கிய இடம் பிடித்து விட்டது!

ஜயதேவரின் மஹாகாவியமானகீத கோவிந்தம்இதற்குச் சிறந்த எடுத்துகாட்டு, உலகப் புகழ் பெற்றுவிட்டது.

நமது ஹிந்துமதம் வாழ்க்கையை வெறுத்து ஒதுக்குவது அல்ல. To run away from life is not the way to lead life!அறம், பொருள், இன்பம் வீடு என மனித வாழ்க்கைக்கு நான்கு லட்சியங்களை வகுத்து வைத்திருக்கிறது. இதில் இன்பம் என்பது இவ்வுலக இன்பம் அனைத்தையும் குறிக்கிறது. இதில் காதலும் அடங்கும். தமிழ்  தொல்காப்பியமும் திருக்குறளும் இதற்கு இலக்கணம் வகுத்திருக்கின்றன. சம்ஸ்கிருதம், தமிழ்  இரு மொழி இலகியத்திலும் காதல் உயர்வாகவே பேசப்பட்டிருக்கிறது

நமது சமய இலக்கியமும் இதைப் புகழ்ந்தே வந்திருக்கிறது. உலகின் முதல் காதல் கடிதம் ருக்மிணி ஸ்ரீ கிர்ஷ்ணருக்கு எழுதியதாகத்தான்  இருக்கும்! இது ஸ்ரீமத் பாகவத்தில் வருகிறது. கீதையில் ஸ்ரீ கிருஷ்ணரே சொல்கிறார்:

தர்ம அவிருத்தோ  பூதேஷு  காமோஅஸ்மி  7.11

உயிரினங்களில் தர்மத்திற்கு விரோத மில்லாத காமமாக நான் இருக்கிறேன்

சாஸ்திரங்களீன் நோக்கம் மனிதனின் நியாயமான ஆசைகளை நிராகரிப்பதல்ல, அவற்றை முறைப்படுத்துவதே ஆகும்இக பர சௌபாக்யம் அருள்வாயே” என அருணகிரி நாதர் வேண்டுகிறார்.. எனவே நம் படங்களில் காதல் இடம்பெறுவது தவறல்ல, அது சித்தரிக்கப்படும் முறையே  பல சமயங்களீல் வரம்பு மீறியும் முறை தவறியும் போகிறது.

காதல் பற்றி நம் சினிமாவில் எண்ணிலடங்காத அளவில் பாடல்கள் இருக்கின்றன. இவை பல நிலைகளில் வருபவை. சிலவற்றை இங்கு  பார்ப்போம்.

ஸுஹானீ ராத்

सुहानी रात ढल चुकी, ना जाने तुम कब आओगे
जहां की रुत बदल चुकी, ना जाने तुम कब आओगे

ஸுஹானி ராத் டல் சுகீநா  ஜானே துப் கப் ஆவோகே

ஜஹா(ன்) கீ ருத் பதல் சுகீ, நா ஜானே தும் கப் ஆவோ கே

அழகிய இரவு கழிந்துவிட்டது, நீ எப்பொழுது வருவாய் என்று தெரியவில்லையே!

உலகில் பருவங்களும் மாறிவிட்டன, நீ எப்பொழுது வருவாய் என்று தெரியவில்லையே!

नज़ारे अपनी मस्तियाँ, दिखादिखा के सो गये
सितारे अपनी रोशनी, लुटालुटा के सो गये
हर एक शम्मा जल चुकी, ना जाने तुम कब आओगे
सुहानी रात ढल

நஃஜாரே அப்னீ மஸ்தியா(ன்திகா திகா கே சோ கயே

ஸிதாரே அப்னீ ரோஷ்னீ , லுடா லுடா கே ஸோ கயே

ஹர் இக்  ஷம்மா ஜல் சுகீநா ஜானே தும் கப் ஆவோகே

ஸுஹானீ ராத்…..

அழகிய காட்சிகளும் தங்கள் தோற்றத்தைக் காட்டிவிட்டு மறைந்து விட்டன.

தாரகைகளும் மின்னி மின்னிப் பின் உறங்கச் சென்று விட்டன!

ஒவ்வொரு விளக்கும் எரிந்துத் தீர்ந்துவிட்டது!

நீ எப்பொழுது வருவாயோ, தெரியவில்லையே!

ஸுஹானீ ராத்

तड़प रहे हैं हम यहाँ, तुम्हारे इंतज़ार में
खिजां का रंग, चला है, मौसमबहार में
हवा भी रुख बदल चुकी, ना जाने तुम कब आओगे
सुहानी रात ढल… 

தடப் ரஹே ஹை ஹம் யஹா(ன்), தும்ஹாரே இன்தஃஜார் மே 

கிஃஜா கா ரங்க், சலா ஹை, மௌஸ்ம்பஹார் மே

ஹவா பீ ருக் பதல் சுகீ, நா ஜானே தும் ஆவோ கே

ஸுஹானீ ராத்.

நான் மனது துடிக்க இங்கே உனக்காகக்  காத்திருக்கிறேன்

வஸன்த காலத்தின்  நிறம் இங்கே   அழகான  இந்தப் பருவத்தில் வந்துவிட்டது

காற்றும் திசை மாறி வீசத்தொடங்கி விட்டது

நீ எப்பொழுது  வருவாயோ, தெரியவில்லையே 

Song: Suhani Raat Film: Dulari 1949 Lyrics: Shakeel Badayuni

Music Naushad Singer: Mohammad Rafi.

உள்ளினும் தீராப்  பெருமகிழ் செய்தலால்

கள்ளினும் காமம் இனிது.     1201

ஒருநாள் எழுநாள்  போல் செல்லும் சேண்சென்றார்

வருநாள் வைத்(து) ஏங்குபவர்க்கு. 1269

One of the most beautiful melodies in Hindi movies, in the young, sweet voice of Rafi. This song catapulted Rafi to the top and became one of his most iconic, trademark songs. Even after 70 years it has not lost its appeal. One of the masterpiece creations of Naushad. He is one of our old veterans.

In those days, Naushad was not above using Western techniques, though later he championed the cause of Hndustani and folk Indian music. Even then he continued to use Western instruments. In fact, he composed on the piano. In one meeting, he was extolling the virtues of Indian music. Some one in the audience asked him why then was he using Western instruments liberally in his songs? Naushad could not answer! 

வோ மேரீ தரஃப்

वह मेरी तरफ यूं चले रहे हैं
वह मेरी तरफ यूं चले रहें हैं
की अरमान धड़कन से टकरा रहे हैं
वह मेरी तरफ यूं  

வோ மேரீ தரஃப் யூ(ன்சலே ரஹே ஹை(ன்) 2

கீ அர்மான் தட்கன் ஸே டக்ரா ரஹே ஹை

 அவள் என்னை நோக்கி நடந்துவருகிறாள்

இதயத்  துடிப்புடன்  எதிர்பார்ப்பும் துடிக்கிறது!

उन्हें देखने को उठी मेरी नज़रें
मुझे देखते ही झुकी उनकी पलकें
जाने वह क्यों हम से शर्मा रहें हैं

உன்ஹே தேக் நே கோஉடீ மேரீ  நஃஜ்ரே(ன்)

முஜே தேக் தே பீ ஜுகீ உன்கீ பல்கே(ன்)

ஜானே வோ க்யோ(ன்) ஹம்ஸே ஷர்மாரஹே ஹை(ன்)

அவளைப் பார்க்க என் பார்வை உயர்ந்தது

என்னைப் பார்த்ததும் அவள் கண்கள் தாழ்ந்து கொண்டன!

என்னைக் கண்டதும் ஏன் அவள் வெட்கப்பட வேண்டும்?

जाने वह क्यों हम सेशर्मा रहें हैं
की अरमान धड़कन से टकरा रहे हैं
वह मेरी तरफ यूं  

  ஜானே வோ க்யோ(ன்) ஹம்ஸே ஷ்ர்மா ரஹே ஹை

கீ அர்மான் தட்கன் சே டக்ரா ரஹே ஹை

வோ மேரீ தரஃப்……..

என்னைக் கண்டதும் ஏன் அவள் வெட்கப்படவேண்டும்?

மனதுத் துடிப்புடன் எதிர்பார்ப்பும் துடிக்கிறது!

जो कलियाँ खिली हैं तो गुल भी खिलेंगे
निगाहे  मिली है तो दिल भी मिलेंगे
की साँसों में पैगाम जा रहें हैं
की अरमान धड़कन से टकरा रहे हैं
वह मेरी तरफ यूं  

ஜோ கலியா(ன்) கிலீ ஹை தோ குல் பி கிலேங்கே

நிகாஹே(ன்) மிலீ  ஹை  தோ தில் பீ மிலேங்கே

கீ ஸா(ன்) ஸோ மே பைகாம் ஜா ரஹே(ன்) ஹை

கீ அர்மான் தட்கன்  ஸே டக்ரா ரஹே ஹை

வோ மேரீ தரஃப் …….

மொட்டு வந்துவிட்டது எனில் மலரும் பூத்துவிடும்!

கண்கள் கலந்துவிட்டன, எனில் மனமும் கலந்துவிடும்!

ஸ்வாசத்திலேயே செய்திகள் வருகின்றனவே!

இதயமும் எதிர்பார்ப்பும் துடிக்கின்றனவே!


उन्हें देख कर दिल लगा रंग लाने
है दिल क्या कहीं बात माने माने
की हम दिल की हरकत से घबरा रहे है

की अरमान धड़कन से टकरा रहे हैं

वह मेरी तरफ यूं चले रहें हैं
की अरमान धड़कन से टकरा रहे हैं
वह मेरी तरफ यूं.  

உன் ஹே தேக் கர் தில் லகா ரங்க் லானே

ஹை தில் க்யா கஹீ பாத் மானே மானே

கீ ஹம் தில் கீ ஹர்கத் ஸே கப்ரா ரஹே ஹை(ன்)

கீ அர்மான் தகன் ஸே டக் ரா ரஹே ஹை(ன்)

வோ மேரீ தரஃப் யூ சலே ஆரஹே ஹை (ன்),

கே அர்மான் தட்கன் ஸே   டக் ரா ரஹே ஹை(ன்)

அவளைப் பார்த்ததும் மனதில் புதிய உற்சாகம் பிறந்துவிட்டது!

ஆனால்  மனது என் சொல்லைக் கேட்குமோ,கேட்காதோ!

மனதின் இந்த நிலை கண்டு பயம் வந்து விட்டதே!

மனதுடன் சேர்ந்து எதிர் பார்ப்பும் துடிக்கிறதே!

அவள் என்னை நோக்கி நடந்து வருகிறாள்!

Song: Wo meri taraf yun  Film: Kaafila 1952 Lyricist: Vrajendra Gaud

Music: Husnlal Bhagatram  Singer: Kishore Kumar.

 One of the best ever songs of Kishore, before he became the singing sensation of the 70s. In fact some of his earlier songs are superb, but he went unrecognised for twenty years, even though he sang some of his best songs in the earlier period. This is a very fine composition and the lyrics are sublime. The song will have magical effect on serious listeners due to the fusion of melody, lyrics and the fantastic voice quality of early Kishore. LIstening is believing.

Pandits Husnlal Bhagat Ram were popular and successful composers of the late 40s and early  50s but ran out of luck. They had to work in the orchestra of Laxmikant-Pyarelal later for a living!

Please do listen to this gem on YouTube. 

இந்தப் பாடல் ஒரு  சீரிய கவிதை! எளிய சொற்கள், ஆனால்  magical effect!  கம்பதாசன் போன்ற கவிதான் இதை மொழிபெயர்க்க முடியும்!

என்ன இனிய  கருத்துக்கள், எத்தனை பண்பட்ட உணர்ச்சிச் சித்திரம்.

இதில் பயன்படுத்தியுள்ள சொற்கள்  இலக்கிய  பாரம்பரியத்தில் ஊறியவை. eg armaan அர்மான்  என்ற பெர்ஷிய மொழிச் சொல்.. Excellent poem and excellent romantic song. 

நோக்கினாள்நோக்கி இறைஞ்சினாள்; அஃதவள்

யாப்பினுள் அட்டிய நீர்.       1093

யான் நோக்குங் காலை நிலன்நோக்கும்நோக்காக்கால்

தான் நோக்கி மெல்ல நகரும்  1094

மை தில் ஹூ(ன்)

मैं दिल हूँ एक अरमान भरा तू के मुझे पहचान ज़रा
एक सागर हूँ ठहरा ठहरा तू के मुझे पहचान ज़रा
மை தில் ஹூ(ன்) எக் அர்மான் பரா, தூ ஆகே முஜே பஹசான் ஃஜரா

ஏக் ஸாகர் ஹூ (ன்) டஹ்ரா டஹ்ரா, தூ ஆகே முஜே பஹசான் ஃஜரா

நான் ஆசைகளும் எதிர்பார்ப்பும்  நிறைந்த ஒரு இதயம்

இங்கு வந்து என்னிடம் பரிச்சயம் செய்துகொள்

நான் ஓர் அசையாத கடல்; நீ இங்கு வந்து என்னை அறிந்துகொள்


खुद मैने हुस्न के हाथों में शोखी का छलकता जाम दिया
गालों को गुलाबों का रुतबा  कलियों को लबों का नाम दिया
आँखों को दिया सागर गहरा तू के मुझे पहचान ज़रा

குத் மை நே ஹுஸ்ன் கே ஹாதோ(ன்) மே,

ஷோ கீ கா சலக்தா ஜாம் தியா

காலோ(ன்) கோ குலாபோ(ன்) கா ருத்வா,

கலியோ(ன்) கோ லபோ(ன்)கா நாம் தியா

ஆன்கோ கோ தியா ஸாகர் கஹரா

தூ ஆகே முஜே பஹசான் ஃஜ ரா

நான் தானே அவள் அழகை பெரிதாகப் புகழ்ந்தேன்!

அவள் கன்னங்களை ரோஜாவுக்கு நிகராகச்சொல்லி பெருமைப் படுத்தினேன்!

அவள் உதடுகளை மொட்டுக்கள் என்றேன்!

அவள் கண்களை ஆழ்ந்த நீலக் கடல் என வருணித்தேன்!

வா, இங்கே வந்து என்னை அறிந்துகொள்!

ये सच है तेरी महफील में मेरे अफ़साने कुछ भी नहीं
पर दिल की दौलत के आगे दुनिया के खजाने कुछ भी नहीं
यूँ मुझसे निगाहों को ना चुरा  तू के मुझे पहचान ज़रा  

யே ஸச் ஹை தேரீ மஹஃபில் மே

மேரே அஃப்ஸானேகுச் பீ நஹீ

பர் தில் கீ தௌலத் கே ஆகே,

 துனியா கே கஃஜானே குச் பீ நஹீ

யூ(ன்) முஜ் ஸே நிகாஹோ(ன்) கோ சுரா

தூ ஆகே முஜே பஹ் சான் ஃஜரா

ஆம், இது உண்மைதான்: உன்னுடைய களியாட்டக் கூட்டத்தில்

நான் ஒரு பொருட்டே அல்ல!

ஆனல் ஒன்று: மனதின் செல்வத்திற்கு முன்பு

இந்த உலகத்தின் பணப்பெருக்கெல்லாம் துச்சமே! ( என்று அறிந்துகொள்)

நீ என்னிடமிருந்து உன் பார்வையைத் திருப்பிக் கொள்ளாதே

நீ இங்கு வந்து என்னை அறிந்துகொள்!

இப்பாட்டிற்கு இணையே இல்லை

Song: Main dil hun  Film: Anhonee 1952 Lyricist: Satyendra Athaiyya

Music: Roshan Singer: Talat Mahmood

This is one of the best ever love songs in our movies. Sublime melody and superb poetry elevate it to the status of supreme flower of sentimental love. Belonging to the genre Ghazal, it is rendered by Talat, the King of Ghazals. No one can match him in rendering expressive Urdu words with great feeling, sensitivity, imagination and art. Listen to the way he renders ” “mere afsaane kuch bhi nahi” – the heart will miss a beat or two! Such artists are born, gift of the heavens. Beyond imitation.

Roshan was a sensitive composer, but not the pushy type. Unfortunately, he died rather early. This is one of his most memorable creations.

This was conceived as a piano song- one of the popular ways of picturising a love song in Hindi movies, but was wasted on Raj Kapoor in the movie, whose film persona did not match the lofty sentiments of this Ghazal. Yet, the mastery of Talat was such that the song soared above all limitations of filmy faults and reigns even today as a great example of Ghazals in our movies. Such songs just happen, do not appear even once in a decade!

Ghazal: ” is a form of amatory poem or ode, originating in Arabic poetry. A ghazal may be understood as a poetic expression of both the pain of loss or separation and the beauty of love in spite of that pain.”

மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்

பலர்காணும் பூவொக்கும் என்று.   1112

முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்

வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு. 1113

 I have given some passages from our great Tirukkural. See how such images, thoughts and feelings are universal! This is how our literary forms and traditions are carried on by great poets, may be unconsciously,  nevertheless effectively!

In love, the world is One.

……  ஆதலினால் காதல் செய்வீர்:   உலகத்தீரே!
     
அஃதன்றோ இவ்வுலகத் தலைமை  யின்பம்;
காதலினால் சாகாம லிருத்தல் கூடும்;
     
கவலைபோம், அதனாலே மரணம் பொய்யாம்.
……………
மஹாகவி பாரதியார்.

[ மேலும் பார்ப்போம் ] 

tags – ஹிந்தி படப் பாடல்கள் – 11 , Kaafila, Anhonee, Dulari

மஹரிஷி ஜாபாலி! -3 (Post No.7848)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7848

Date uploaded in London – – 19 April 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

மஹரிஷி ஜாபாலி பற்றிய மூன்று கட்டுரைகளில் இது கடைசிக் கட்டுரை

மஹரிஷி ஜாபாலி! -3

(ஜாபாலியின் நாத்திக வாதத்திற்கு ராமரின் பதில்!)

ச.நாகராஜன்

ஜாபாலி ராமரைப் பார்த்துக் கூறிய நாத்திக வாதத்தை, ராமர் வெறுத்து ஒதுக்குவதை வால்மீகி ராமாயணம் அயோத்யா காண்டம் 109வது ஸர்க்கம் விரிவாகச் சொல்கிறது. இந்த ஸர்க்கம் 40 ஸ்லோகங்களைக் கொண்டது.

அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கு சுருக்கமாகப் பார்ப்போம்.

ஜாபாலியின் நாத்திக வாதத்தைக் கேட்ட ராமபிரான் தனது சுபுத்தியாலேயே இப்படிச் சொல்ல ஆரம்பித்தார் என்று முதல் ஸ்லோகம் கூறி இயல்பாகவே ராமர் ஆத்திகர் என்பதைக் கூறுகிறது. (இறைவன் ஒரு ஆத்திகன்!)

நீர் சொல்வது செய்யக் கூடாதது (அகார்யம்!), இதமளிக்காதது (அபத்யம்).

ஒருவன் சுசியா அல்லது அசுசியா என்பதை ஒழுக்கம் ஒன்றே உரைக்கின்றது. (சாரித்ரம் ஏவ வ்யாக்யாதி)

ராஜானுஷ்டானம் சத்யம் மட்டுமே தான்! (ராஜவிருத்தம் சத்யம் ஏவ!)

சத்யம் ஏவ பஜேத்! (ஒவ்வொருவனும் சத்யத்தையே சர்வமுமாகக் கொள்ள வேண்டும். சத்யத்தை  மேற்கொண்ட நான் அதன்படியே நடப்பேன்!)

பரலோக நம்பிக்கை கொண்டவனாக இருந்து கொண்டு உலக வாழ்வை நடத்துவேன். (ச்ரத்ததான: சன் லோகயாத்ராம் ப்ரவர்த்தயே)

ஒரு புத்திமானானவன் ஜனங்களுக்கு நாத்திகவாதத்தால் சந்தேகப்படுபவனாக எவன் ஒருவன் இருக்கிறானோ அவனுக்கு முகமே கொடுக்க மாட்டான். (நாத்திகவாதியை முகத்தாலும் பார்க்க மாட்டான்!)

     கோபத்துடன் (சரோஷம்) இப்படிக் கூறிய ராமரைப் பார்த்து தணிந்த குரலில் ஜாபாலி கூறினார் இப்படி : நான் நாத்திகர்களுடைய வசனத்தைச் சொல்லவில்லை. (அஹம் நாஸ்திகானாம் வசனம் வ்ரவீமி ந). நான் நாத்திகனும் இல்லை. (அஹம் நாஸ்திக: ச ந) எதுவும் இல்லை என்பதும் இல்லை (கிஞ்சன ந அஸ்தி ந). சமயத்திற்கேற்றபடி ஆத்திகனாய் இருப்பேன். (காலம் சமீக்ஷய ஆஸ்திக: பவேய). இச்சமயத்தில் சமயத்திற்கேற்றபடி நாஸ்திகனாய் இருந்தேன். (காலே புன: ஏவ நாஸ்திக: அபவம்)

இப்படி  ஒரேயடியாக மாறிய (பல்டி அடித்த) மஹரிஷி ஜாபாலி ராமரை திருப்பி அழைத்துப் போவதன் பொருட்டே தனது வார்த்தைகள் சொல்லப்பட்டது என்பதை ஒப்புக் கொள்கிறார்.

இப்படியாக ஜாபாலியின் போலி வாதம் ஒரு முடிவுக்கு வந்தது.

*

இனி பல முனிவர்கள் ஜாபாலி என்ற பெயருடன் இருந்ததால் ராமாயணத்தில் வரும் ஜாபாலி முனிவர் பற்றிய விஷயங்களை மட்டுமே இது வரை பார்த்தோம்.

ஜாபால உபநிடதம் போன்றவற்றை இங்கு நாம் சொல்லவில்லை.

அடுத்து ஜபல்பூர் நகரமே ஜாபாலி மஹரிஷியின் பெயரால் அமைந்தது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நர்மதை நதிக் கரையில் ஜாபாலி வெகு காலம் தவம் புரிந்ததாகவும் நாம் காண்கிறோம்.

*

திருப்பதியில், கோவிலிலிருந்து சுமார் இரண்டு மைல் தூரத்தில் ஜாபாலி தீர்த்தம் என்று ஒரு அழகிய தீர்த்தம் உள்ளது. இந்த இடத்தில் தான் மஹரிஷி ஜாபாலி தவம் செய்து முக்தி அடைந்தார் என்று சொல்லப்படுகிறது.

இங்கு ஒரு ஆஞ்சனேயர் ஆலயமும் அஞ்சனா தேவி தீரத்தமும் உள்ளன.

திருப்பதியில் உள்ள இன்னொரு பிரசித்தி பெற்ற தீர்த்தமான பாபவினாசன தீர்த்தமும் கூட ஜாபாலி மஹரிஷியுடன் தொடர்பு படுத்தப்பட்டு இங்கு ஜாபாலி தவம் புரிந்ததாகக் கூறப்படுகிறது.

*

சென்னையிலிருந்து சுமார் எட்டு கிலோ மீட்டர் தூரத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள தலம் சிங்கப்பெருமாள் கோவில். முன்னொரு காலத்தில் இது காடாக இருந்தது. அப்போது ஜாபாலி மஹரிஷி விஷ்ணு எடுத்த நரசிம்ம கோலத்தை இங்கு காண விரும்பியதாகவும்  அதன்படி விஷ்ணு அவருக்கு அருள் பாலித்து தன் நரசிம்ம கோலத்தைக் காண்பித்ததாகவும் இந்தத் தலத்தின் தல வரலாறு கூறுகிறது.

 இதே போல வட நாட்டிலும் ஜாபாலி மஹரிஷியை தொடர்பு படுத்திக் கூறப்படும் தலங்களும் உள்ளன.

மஹரிஷி ஜாபாலி விஷ்ணு பக்தர் என்பதையும் ராமரின் அரசவையில் இடம் பெற்றவர் என்பதையும் இராமாயணம் மற்றும் புராணங்கள், தல வரலாறுகள் ஆகியவற்றால் அறிந்து கொள்ள முடிகிறது.

பெரும் மஹரிஷிகளில் இடம் பெறும் ஜாபாலி வித்தியாசமான ஒரு மஹ ரிஷி!

***

ஜாபாலி மஹரிஷியைப் பற்றிய இந்தத் தொடர் நிறைவு பெறுகிறது.

tags — ஜாபாலி! -3 ,ராமரின் பதில்

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி1842020 (Post No.7847)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7847

Date uploaded in London – 18 April 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

குறுக்கே

1. – 6 எழுத்துக்கள் – ராமனின் முன்னோர் சரிதை ; காளிதாசனின் காவியம்

4 –3- மரத்தடியில் காவி உடையில் கண்ணை மூடி பிரார்த்திப்பார்

5. – 4- மின்சாரத்தை செலுத்தப் பயன்படும் உலோகம்

7.  – 3- வைத்தியருக்கு  பித்தம் , சிலோத்துமம் ஆகியவற்றுடன் இதுவும் தெரியும் / வலமிருந்து இடம் செல்க

8. – 3- பாட்டின் தாளத்துடன் இதையும் சொல்லுவர் / வலமிருந்து இடம் செல்க.

8. – 3- சீதையின் புருஷன்

கீழே

1. – 6 எழுத்துக்கள் – மருத்துவத்தில் சிறந்த தானம்

2. -3-  சேரர் தலைநகர்

9. – 3– யானைக்குப் பிடிப்பது / கீழிருந்து மேல் செல்க

3.– 6– சாவித்ரியின் கணவன்

10.– 6–உலகப் புகழ்பெற்ற நாடகம்/ கீழிருந்து மேல் செல்க

-subham–

அகஸ்தியர் பற்றி தென் கிழக்காசிய நாடுகளில் கல்வெட்டுகள் (Post No.7846)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7846

Date uploaded in London – 18 April 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

அய்யாசாமி கல்யாணராமன் எழுதிய ஆர்யதரங்கிணி என்ற ஆங்கில நூலின் இரண்டாவது பாகத்தில் தமிழ் முனிவன் அகஸ்தியர் பற்றிய அதிசயச் செய்திகள் உள்ளன. நம்மில் பெரும்பாலோர் அறிந்திராத செய்திகள் அவை.

சிராத்த மந்திரத்தில் அகஸ்தியர் :-

உயிர் நீத்த முன்னோர்களுக்கு ஆண்டுதோறும் பிராமணர்கள் சிராத்தம் அளிப்பர். இதில் கடவுளர் 12 பேருடன் இரண்டு மனிதர்களுக்கும் சேர்த்து 14 பேருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவது வழக்கம். அவ்விருவர் காஷ்யப ரிஷி, அகஸ்திய ரிஷி . அதாவது இறைவனுக்கு சமமாகப் போற்றப்படுவர் இராண்டே மனிதர்கள். அதிலும் ஒரு சிறப்புள்ளது என்கிறார் அய்யாசாமி கல்யாணராமன்.

காஷ்யப ரிஷி ,காஷ்மீர் மாநிலத்துக்குப் பெயர் கொடுத்த ரிஷி. அகஸ்திய ரிஷி தென்  தமிழ் நாட்டின் பொதிய மலைக்குப் பெயர் ஈ ந்தவர் ; இமயம் முதல் குமாரி வரை ஒரே நிலப்பரப்பு பாரத நாடு என்பதையும் இது காட்டுகிறது.

இதுதான் அந்த மந்திரம்-

ஈசான விஷ்ணு கமலாசன கார்த்திகேய

வன்னித்ரயார்க்க  ராஜனிஸ கணேஸ்வரானாம்

கிரௌஞ்சமரேந்த்ர  கலசோத்பவ

காஸ்யபனாம் பாதம் நமாமி

சிவன், விஷ்ணு, பிரம்மா, கார்த்திகேயன், மூன்று அக்நிக்கள், சூர்யன், சந்திரன், கணேஸ்வர, கிரௌஞ்ச, இந்திர , அகஸ்திய காஸ்யபர் ஆகியோரின் பாதங்களை நான் வணங்குகிறேன் — என்பது மந்திரத்தின் பொருள் .

கலச உத்பவ = கும்ப முனி = அகஸ்தியர்

இந்திய இலக்கியத்தில் அகஸ்தியர் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு கோணங்களில் தோன்றுகிறார். ரிக்வேதத்தில் ஒரு துதியில் மனைவி லோபாமுத்ராவின் வேண்டுகோளின்படி இல்லறக் கடமைகளை நிறைவேற்றியதைக் காண்கிறோம்.  ராமாயணத்தில் ராமனுக்கு வீரமும் வெற்றியும் தரும் ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரத்தை உபதேசித்து ‘வெற்றி நமதே’ என்று உறுதியளிப்பதைக் காண்கிறோம். மஹாபாரதத்தில் அவர்க்கு  ஒரு புதிய பணி  தரப்படுகிறது. பெருங்குடி மக்களை தென்னகத்துக்கு அழைத்துச் சென்று பூ பாரத்தை சீர்செய்வதைப் பார்க்கிறோம் .

புராணங்களில் அவரது சாதனைகள் – கடல் நீரைக் குடித்தார்; விந்திய மலையின் கர்வத்தை பங்கம் செய்தார். வாதாபி இல்வலன் என்ற கொடிய  அரக்கர்களின்  கொட்டத்தை ஒடுக்கினார் . இது பாதாமி ஆர்யபுரத்தில் /ஐஹோல் ஆண்ட இரண்டு அசுரர் ஆட்சியை வீழ்த்திய வரலாற்று நிகழ்ச்சிகளாக இருக்கலாம் .பின்னர் வந்த புராணங்கள் இவர் நட்சத்திரமாக தென் வானத்தில் ஜொலிப்பதாய்க் குறிப்பிடுகின்றன. ரோமானியர்களும் இதை ‘கனோபஸ்’  CANOPUS என்று அழைத்தனர். அதற்கும் கூட

கலசத்தில் உதித்தவர் என்றே பொருள்.

தென்னிந்தியாவில் இவருக்கு கோவில்கள் உள . இவருடன் தொடர்புகொண்ட கோவில்களும் அதிகமுள .

‘மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது’ என்று அவை காட்டும். மகத்தான சக்தி, துணிவு, கனிவு , பரந்த நோக்கம் உள்ளவராக அவரை சித்தரிக்கின்றனர். ரிக்வேதத்தில் அவரை ‘இருவகுப்பினாருக்கும் நண்பர்’ என்று ஒரு மந்திரம் கூறுகிறது. அதாவது தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் சகாயம் செய்தவர். தென்னிந்தியாவில் இவர் தர்மத்தைப் பரப்பினார்.

இவருடைய சேவை அலைகடலுக்கு அப்பாலும் சென்றது. அகஸ்தியர்தான்  கடலோடிகளின் தெய்வம். ‘அகஸ்த்யோதயே  ஜலானி ப்ரசிதந்தி’ — என்று சம்ஸ்க்ருதத்தில் ஒரு பழமொழி உண்டு. அகஸ்திய நட்சத்திரம் உதயமாகிவிட்டால் கடல் நீர் சா ந்தமாகிவிடும் என்பது இதன் பொருள்.

தென் கிழக்காசிய நாடுகளில் இவரைப் போற்றும் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

இந்தோனேஷியாவிலுள்ள மத்திய ஜாவா தீவில்  ஒரு கல்வெட்டில்,

விஹிதே கலசஜ நாம்நா

பத்ரலோகஹ்வயே  விபுதகேஹே

தஸ்யத புத்ர பௌத்ர :

பவந்து லப்தே சதபத ஜீவ:

பொருள்

பத்ரலோகம் என்ற பெயரில் இங்கே எழுந்தருளியுள்ள கும்ப  முனியானவர் புத்ர பவுத்திர சந்ததியினரின் ஆசை அபிலாஷைகள் நிறைவேற அருள்வாராகுக

இன்னொரு கல்வெட்டில் காணப்படும் வாசகம் –

சக ஆண்டு 682, மார்கழி மாதம் வெள்ளிக்கிழமை, கிருஷணபக்ஷ அஷ்டமி , கும்பலக்கினம் கூடிய சுப தினத்தில் , அதி மேதாவியான நமது மன்னர், வேத பண்டிதர், சாது சன்யாசிகளின்  உதவியுடன் , செவ்வனே பணியாற்றும் சிற்ப சாஸ்திர வல்லுநர்கள் உதவியுடன் கலச முனிவரின் சிலையைப் பிரதிஷ்டை செய்தார்.

கிழக்கு ஜாவாவில் கி.பி.760 கல்வெட்டு சொல்லும் …

தானியமும் , நெல்லும், தங்கச்  சுரங்கங்களு ம்  நிறைந்த தீவு யவத் தீவு – ஜாவா- இங்கு அற்புதமான தெய்வீக சம்பு — சிவன் – கோவில் கொண்டுள்ளார் .குஞ்சரகுஞ்ச என்ற வளமான தேசத்தின் வம்சத்தில் வந்தவர் இதை உருவாக்கினார்

அகஸ்த்யரின் சிலைகள் குள்ளமாகவும், சடைமுடியாலான மகுடத்துடனும் தொந்தியுடனும் படைக்கப்பட்டுள்ளன. கைகளில் கமண்டலம், மணி/ ஜப மாலை, த் ரிதண்டம்  என்னும் குச்சி உளது. இது போல இலங்கையிலும் இருக்கிறது

கல்யாண ராமன் கொடுத்த ஒரு அடிக்குறிப்பில்– அகஸ்தியர் ஒரு கம்போடிய மன்னரின் மகளை  திருமணம் செய்த

செய்தியைக் கம்போடிய கல்வெட்டு கூறுகிறது. இதை நாலாவது  அத்தியாயத்தில் காண்க என்று எழுதியுள்ளார்.

தமிழ் இலக்கியத்தில் அகஸ்தியர் பெருமை மிகு இடத்தைப் பெறுகிறார்  அகத்தியம்  என்ற இலக்கண நூலைப்  படைத்தவர் அவர். ஆனால் இப்போது அந்த நூல் கிடைக்கவில்லை.

இவரது மாணரான தொல்காப்பியர் பா ணினியைப் போல  சூத்திரங்கள் வடிவில் ஒரு நூலைப்  படைத்தார். அவரது இயற்பெயர் த்ருண பிந்து . அவர் அகஸ்தியரின் சீடர்  என்ற பெயரில் ஜாவானிய கல்வெட்டுகளிலும் காணப்படுகிறார். தொல்காப்பியர் கி.மு மூன்றாம் அல்லது நாலாம் நூற்றாண்டில் வா ழ்ந்தார்  என்று இதுகாறும் கருதப்பட்டு வந்தது இப்போது அதற்கும் 200 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர் என்று கருதப்படுகிறது —

இவ்வாறு அவர் தனது ஆங்கிலப் புஸ்தகத்தில் எழுதியுள்ளார். இது வெளியான வருடம் 1970.

SOURCE – ARYATARANGINI, IN TWO VOLUMES, A.KALYANARAMAN, ASIA PUBLISHING HOUSE, LONDON, 1970.

tags – அகஸ்தியர் , கல்வெட்டுகள், , த்ருண பிந்து, சிராத்தம்

–SUBHAM —