தமிழில் ரிக் வேத கவிதைகள் -Part 1 (Post No.7991)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7991

Date uploaded in London – 17 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

தமிழில் ரிக் வேத கவிதைகள்

பேராசிரியர் எஸ் . வையாபுரிப்பிள்ளை அவருடைய ‘இலக்கிய உதயம்’ புஸ்தகத்தில் சில ரிக் வேத கவிதைகளையும் அதர்வ வேத கவிதைகளையும் மொழி பெயர்த்துள்ளார் . புஸ்தகம் 1952-ல் வெளியானது. அவர் சென்னை ஸர்வ கலாசாலைத் தமிழ் லெக்சிகன் பதிப்பாசிரியராகவும், தமிழ் ஆராய்ச்சித் துறை தலைவராகவும் திருவிதாங்கூர்  ஸர்வ கலாசாலைத் தமிழ்ப் பேராசிரியராகவும் பணியாற்றினார்.1956ம்- ஆண்டு இறந்தார்.

உலகின் பழமையான நூல் ரிக்வேதம். அதில் மிகவும் புதிரான ,பொருள் விளங்காத கவிதை தீர்க்க தமஸ் (அவர் பெயர் -திருவாளர் நீண்ட இருள்) ; பாடிய கவிதை ஆகும் ; இந்தக் கவிதையில் நிறைய எண் – நம்பர்  (Number Symbolism) புதிர்கள் உள்ளன . அதையெல்லாம் வீட முக்கியமான வரி- மேற்கோள் – கடவுள் ஒருவரே- அவரை அறிஞர்கள் பல்வேறு விதமாக விளிப்பார்கள் என்ற பேருண்மை வருகிறது.

ஏகம் சத், விப்ராஹா பஹுதா வதந்தி

அதை வையாபுரிப்பிள்ளை அழகாக மொழிபெயர்த்துள்ளார்-

இந்திரனே மித்திரனே  வருணனே ஈண்டு

எரிகின்ற அக்கினியே என்று நல்லோர்

தந்தமக்குத் தோற்றியவாறு ரைப்பர் , தெய்வத்

தனிப்புள்ளாம் கருத்தமனும் அவன் காண் ; சார்ந்து

பந்தமுறு பெயர்பலவும் இயல்பினொன்றாய்ப்

பாரித்த ஒருபொருட்கே  பகர்வராலோ

விந்தையொரு பெருங்கவிஞர் ; இதனால் சான்றோர்

விளிப்பர் எரி , எமன், மாதரிசுவான்  என்றே

–ரிக் வேதம் 1—164-

इन्द्रं॑ मि॒त्रं वरु॑णम॒ग्निमा॑हु॒रथो॑ दि॒व्यः स सु॑प॒र्णो ग॒रुत्मा॑न् ।

एकं॒ सद्विप्रा॑ बहु॒धा व॑दन्त्य॒ग्निं य॒मं मा॑त॒रिश्वा॑नमाहुः ॥ १.१६४

46. They call him Indra, Mitra, Varuna, Agni, and he is heavenly nobly-winged Garutman.

     To what is One, sages give many a title they call it Agni, Yama, Matarisvan.

****

உஷஸ் என்னும் அழகி

சூரியோதயமும் ஒரு பெண் தெய்வமாகப் பாவிக்கப்பட்டது. அப்பெண் தெய்வத்திற்கு உஷஸ் என்று பெயரிட்டார்கள் . அதன் அழகு புராதன ஆரியர்களுடைய மனோபாவனையைக் கவர்ந்து, பல இனிய காதற் பாடல்களுக்குக் காரணமாயிற்று.

நீராடி யொளிர்மேனி யழகு நோக்கி

நிற்ப நாம் , செருக்குடனே நிற்கின்றாளால்

காராரும் இருள்நீங்க உதய கன்னி

ககனத்தின் புதல்வி இன்று காட்சி தந்தே

கற்பரசி ஆடவர்முன் தலையிறைஞ்சிக்

கவிழ்ந்து நிற்கு நிலைபோலக்  ககனச் செல்வி

நிற்றல் கொண்டு தொழுவார்க்கு வரங்கள் நல்கும்

நேரிழை போல் ஒளி நல்கி நிழற்று மாலோ

ரிக் வேதம் 5-80-5/6

5. As conscious that her limbs are bright with bathing, she stands, as ’twere, erect that we may see her.

     Driving away malignity and darkness, Dawn, Child of Heaven, hath come to us with lustre.

6. The Daughter of the Sky, like some chaste woman, bends, opposite to men, her forehead downward.

     The Maid, disclosing boons to him who worships, hath brought again the daylight as aforetime.

ए॒षा शु॒भ्रा न त॒न्वो॑ विदा॒नोर्ध्वेव॑ स्ना॒ती दृ॒शये॑ नो अस्थात् ।

अप॒ द्वेषो॒ बाध॑माना॒ तमां॑स्यु॒षा दि॒वो दु॑हि॒ता ज्योति॒षागा॑त् ॥ ५.०८०.०५

ए॒षा प्र॑ती॒ची दु॑हि॒ता दि॒वो नॄन्योषे॑व भ॒द्रा नि रि॑णीते॒ अप्सः॑ ।

व्यू॒र्ण्व॒ती दा॒शुषे॒ वार्या॑णि॒ पुन॒र्ज्योति॑र्युव॒तिः पू॒र्वथा॑कः ॥ ५.०८०.०६

****

தாயின் முந்தானையில் ஒளிந்து கொள்ளும் குழந்தை

இறந்தோரைப் பூமியில் புதைக்கும் பழைய வழக்கத்தைக் குறித்தது பின்னரும் செய்யுள் —

நிலமகளே , புகலிடம் நீ நன்கு விரிந்தளிப்பாய் ,

நெருக்கி அழுத்தா தெளிதில் நீ இவனை ஏற்பாய்;

குலமகனை அன்னை தன்முன் றானையினால்  அணைத்துக்

கொள்ளுதல்போல் நீ இவனை மறைத்திடுவாய் , அன்னே

ரிக் வேதம் 10–80-5/6

Open up earth; do not crush him. Be easy for him to enter and burrow in .

Earth wrap him up as a mother wraps up  a son  in the edge of her skirt

RV 10-18-11

Edge of her skirt is sari pallu.

This shows that the Vedic women wore saris.

10-11-12 talks about 1000 pillared hall.

We see 1000 pillared halls in most of the big South Indian Temples

E.g. Madurai ,Sri Rangam , Tiruvannamalai Temple

சடலத்தைப் புதைத்தலும் எரித்தலும் வழக்கத்தில் இருந்தன . சங்கத் தமிழ் நூல்களிலும் இந்த இரு வழ க்கங்களையும் காண்கிறோம்.

முதுமக்கள் தாழி பற்றி புறம் 228,237,238,256, 364 முதலிய பாடல்களில் காணலாம்

उच्छ्व॑ञ्चस्व पृथिवि॒ मा नि बा॑धथाः सूपाय॒नास्मै॑ भव सूपवञ्च॒ना ।

मा॒ता पु॒त्रं यथा॑ सि॒चाभ्ये॑नं भूम ऊर्णुहि ॥ १०.०१८.११

tags — தமிழில் , ரிக் வேத கவிதைகள்,வையாபுரிப்பிள்ளை

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: