Diet Coke Wonder -கொக்கோ கோலா வாண வேடிக்கை (Post No.8152)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8152

Date uploaded in London – 11 June 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

எச்சரிக்கை –

இது போன்ற செய்திகளைப் படித்துவிட்டு பெரியோர் advice ‘அட்வைஸ்’ இல்லாமல் சிறுவர்கள் எதையும் செய்ய வேண்டாம். பெரியவர்கள் செய்தாலும் கூட  கண்களையும், ஆடைகளையும் நாசம் ஆக்காமல்  பாதுகாப்பது  மிகவும் அவசியமானது. சுற்றுப்புற சூழல் பாதுகாப்பையும் மனதிற் கொள்க

டயட் கோக்கில் (Diet Coke) மிட்டாய்க்களைப் போட்டால் என்ன கிடைக்கும் ?

பட்டாசு,  வாண  வேடிக்கை கிடைக்கும்.

இரண்டு லிட்டர் கோக் பாட்டிலில் குறிப்பிட்ட வகை மிட்டாய்/ ஸ்விட்டுகளைப் போட்டால் 16 அடி உயரத்துக்குப் பீச்சி அடிக்கும் கோக் .

அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் 15 ஆண்டுகளுக்கு முன்னர் இது ஒரு பெரிய விளையாட்டு, பொழுது போக்கு.

இதன் விஞ்ஞான பின்னணி என்ன?

நாம் சூட (Mint) மிட்டாய் என்று சாப்பிடுவதை அமெரிக்காவில் மென்டோஸ் (Mentos)  என்றும் பிரிட்டனில் ட்ரெபோர் (Trebor) என்றும் விற்கின்றனர். இந்த இரண்டு வகை மிட்டாய்களும் கோக்கிலுள்ள கார்பன் டை  ஆக்சைட் / கரியமில வாயுவுடன் கலக்கையில் மிட்டாயைச் சுற்றி காற்றுக் குமிழ்கள் உண்டாகின்றன. அவை வெளியேறும் போது 16 அடி உயரத்துக்கு மேலே எழும்புகின்றன. இதுவே நமது வயிற்றுக்குள் நடந்தால் வயிறு கலங்கும். ஆகையால்தான் ‘கன்னா பின்னா’ விஷயங்களைச் (கானா +பீனா = சாப்பிடுதல், குடித்தல்) சாப்பிடாதே என்று பெற்றோர்கள் கூறுவர்.

லாஸ்வேகாஸ் (அமெரிக்கா ) நகரிலுள்ள பெல்லாஜியோ நீர் ஊற்று (Fountain) போல ஒரு கோக் ஊற்றை உருவாக்கினர் இரண்டு அமெரிக்க விஞ்ஞானிகள் . 200 லிட்டர் கோக்கில் 500 மெண்டொஸ் (சூட மிட்டாய்)களைக் கலந்தனர். பிரமாதமான வாண வேடிக்கைதான்.

கோகோ கோலா கம்பெனி இது பற்றி வாயே திறக்கவில்லை. வயிற்றுக்குள்ளும் இதுதான் நடக்கும் என்று சிலர் பிரசாரம் செய்தால் பிஸினஸ் படுத்துவிடுமல்லவா?

இது பற்றி நிறைய You Tube யூ ட்யூப் வீடியோக்களும் உள .

tags – Coke, Mentos, Fountain, கொக்கோ கோலா, வாண வேடிக்கை

Metro Newspaper , June 15, 2006

tags — Coke, Mentos, Fountain, கொக்கோ கோலா,  வாண வேடிக்கை

–SUBHAM–

Leave a comment

Leave a comment