Mr Brick Man, மிஸ்டர் செங்கல்வராயன் (Post No.8165)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8165

Date uploaded in London – 13 June 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

செங்கலைத் தின்பவன் செங்கல்வராயன் .மண்ணைத் தின்பவன் மண்ணாங்கட்டி ;

மண்ணுண்ட கண்ண பிரானை நாம் அறிவோம். செங்கல் உண்ணும் பக்கிரப்பா செய்வதைக் கேட்டால் நமக்கு பகீர்  என்ற உணர்ச்சி ஏற்படும். ஒரு நாளைக்கு மூன்று கிலோ செங்கல் சாப்பிடுகிறார். அதுவும் 20  வயது முதல். இப்போது வயது 30 என்று 2014ல் வெளியான லண்டன் மெட்ரோ நியூஸ் பேப்பர் எழுதுகிறது . ஆக 2020ல் அவருக்கு 36 வயது என்று சொல்லலாம். இந்த ‘பகீர்’ அப்பா கர்நாடகத்தில் வசிக்கிறார். முழுப் பெயர் ‘பக்கிரப்பா ஹுனகண்டி’ (Pakkirappa hunagundi) .

இது போன்று மயிர், மட்டை, கல், புல் ஆகியவற்றைத் தின்பதை மருத்துவர்கள் ‘பைகா’  (Pica) என்பர். சிறு குழந்தைகள் இதை அதிகம் செய்யும். தாய்மார்கள் தடுத்தவுடன் அந்த வழக்கம் அறுபட்டுப் போகும். சிலருக்கு வயதானபோதும் நீடிக்கும்.

****

தீ  உண்ணும் அக்கினி  குமாரன்

அக்கினியை அல்வா போல அள்ளி , அள்ளிச் சாப்பிடும் ஒரு மனிதர்

பற்றி தின மலர் வெளியிட்ட செய்தியையும் இணைத்துள்ளேன் .

பெயர் பொன்னரசன்; தொழில் கூலி வேலை ;

ஊர் – கார்த்திகேயபுரம், குடியாத்தம், வேலூர் மாவட்டம்

பிரிட்டிஷ் அசுரன்- அரசன் ஹென்றி

.500 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்தை ஆண்ட Henry VIII எட்டாம் ஹென்றி ஒரு பன்றி. ஆறு பேரைக் கல்யாணம் செய்து 2 பேரைக் கொன்று மற்ற இரண்டு பேரை டைவர்ஸ் Divorce /விவாக ரத்து செய்த  அபகீர்த்தி உடையவன் . ஐந்தாம் மனைவி குழந்தை பிறந்தவுடன் செத்தாள் . ஆறாம் மனைவியை விழுத்தா ட்டுவதற்குள் அவரே ( எட்டாம் ஹென்றி) நோயால் செத்தார்.அப்போது அவருக்கு வயது 56.  அவரைக் கிண்டல் செய்யும் படம் இது . தலை கீழாகத் திருப்பிப் பார்த்தாலும் அதே குரங்கு மூஞ்சி தெரியும்.

tags — மிஸ்டர் செங்கல்வராயன்,அசுரன்- அரசன் ஹென்றி, தீ உண்ணும், அக்கினி குமாரன்

Leave a comment

Leave a comment