
Post No. 8195
Date uploaded in London – 17 June 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ரிக்வேத எட்டாவது மண்டல அதிசயங்கள் (Rig Veda Eighth Mandala Wonders)

உலகிலேயே பழமையான நூல் ரிக் வேதம். மனித குலத்தின் முதல் அதிகாரப்பூர்வ ரிக்கார்ட் (RECORDS) அதில் உள்ளது. மனிதனின் சிந்தனை எவ்வளவு உயர்ந்தது என்பதை அது காட்டுகிறது. அகர்ந் முதல் எழுத்தில் துவங்கி உலக மஹா தேசீய கீதத்தில் முடிவடைகிறது. பத்தாவது மண்டலத்தின் கடைசி மந்திரம் உலக ஒற்றுமையை வலியுறுத்துகிறது. 5000 ஆண்டுகளுக்கு முன் இதைத் தொகுத்து, பத்துப் பிரிவுகளாக நமக்கு வகைப்படுத்திக் கொடுத்த வியாச மகரிஷி இப்படி முடிக்கிறார்:–
“நம் எல்லோர் இதயங்களும், எண்ணங்களும், குறிக்கோள்களும் ஒன்றாக இருக்கட்டும்” என்ற அற்புதமான மந்திரத்துடன் முடிக்கிறார். இது மனித குலத்தின் உச்சியை இந்தியா பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தொட்டுவிட்டதைக் காட்டுகிறது.
ரிக்வேதத்தின் எட்டாவது மண்டலம் இன்னும் நன்றாக ஆராயப்படவில்லை. இதிலுள்ள செய்திகள் புராண, இதிகாசங்களில் காணப்படவில்லை. இதனால் இது ஈரான் நாட்டுக்கு குடியேறிய இந்திய ரிஷிகள் பாடியது என்று சிலர் கருதுகிரார்கள். தானங்களில் நிறைய ஒட்டககங்கள் தானம் பற்றிய குறிப்பு வருகிறது. ரிக் வேத முனிவர்களோ சரஸ்வதி-சிந்து- கங்கை நதி தீரத்தைக் குறிப்பிடுகிறார்கள். அங்கு பாலைவன ஒட்டகம் இருக்க வா ய்ப்பில்லை . ஆயினும் தானங்களின் எண்ணிக்கை வியப்பூட்டும் டெசிமல் சிஸ்டத்தில் DECIMAL SYSTEM உள்ளது. இந்த தாசாம்ச முறையையும் பூஜ்யம் என்ற ஒன்றையும் இந்துக்கள் கண்டுபிடித்து உலகிற்குக் கற்பித்ததால் இன்று நமக்கு கம்பியூட்டர் , இன்டர்நெட், விண் கலங்கள் , ஏவுகணைகள் கிடைத்துள்ளன.

இதோ சில தானங்கள்:–
1.பத்தாயிரக் கணக்கில் பசுக்களை தானம் கொடுத்ததில் ப்ளயோகாவின் மகன் எல்லோரையும் மிஞ்சிவிட்டான்
ரிக் வேதம் 8-1-33
2.நாலு மடங்கு பத்தாயிரத்தோடு எட்டாயிரம் கூடக்கொடுத்தான் விபிந்து — 8-2-41 (40000+8000= 48,000)
நான் ஒரு ரிஷி; நான் 60,000 பசுக்களை ஓட்டிச் செல்கிறேன் – 8-4-20
3.கஷு சைத்யன் இவ்வாறு 100 ஒட்டகங்களையும் பத்தாயிரம் பசுக்களையும் தானம் கொடுத்தான் – 8-5-37
4.சக்தி வாய்ந்த மந்திர உச்சாடனத்துக்காக , அவர்கள் 300 குதிரைகளையும் 10,000 பசு மாடுகளையும் தானம் அளித்தார்கள்.8-6-47
5.சித்ரன் ஒரு அரசன் .சரஸ்வதி நதி தீரத்தில் எல்லோரும் அரசர் போல வாழ்கிறார்கள்; மழைக்கடவுள் மழை பொழிவது போல அவன் பசு மாடுகளை பத்தாயிரக் கணக்கில் ஆயிரம் தடவை அளித்தான் .8-21-18
பாரி ஒருவன்தான் கொடுப்பவனா? மாரியும் (மழை ) உளதே என்ற கபிலரின் புற நாநூற்றுப் பாடலை நினைவுபடுத்துகிறது இது
6.நான் 60,000 குதிரைகளையும் பத்தாயிரம் பசு மாடுகளையும் மற்றும் 20 நுறு (2000) ஒட்டகங்களையும் வென்றேன் 8-46-22
7.பத்தாயிரக் கணக்கான பசு மாடுகளுடன் த்ரி வ்ரிஷ்ண பிரகாசிக்கிறான் – 5-27-1
8.ருக்ஷமாஸ்களிடையே நான் 4000 பசுமாடுகளை பெற்றே ன் 5-30-15
9.) 60,000 பசுமாடுகள் பின்தொடர்ந்து வந்தன ; கடைசி நாட்களில் கக்ஷி வான் அவைகளை வென்றான் 1-126-3.
இந்தப் பட்டியலை டேவிட் ப்ராலி ‘கடவுளும், முனிவர்களும், அரசர்களும்’ என்ற அவரது புஸ்தகத்தில் எழுதியுள்ளார். அவர் கூறுகிறார்
வேத கால மக்கள் நாடோடிகள் அல்ல. அவர்கள் வசித்த இடம் வறண்ட பாலை வனமும் அல்ல. பிரம்மாண்டமான மேய்ச்சல் நிலங்கள் இருந்தால்தான் இவ்வளவு பசு மாடுகள் இருக்க முடியும் . மேலும் பல தங்க ரதங்களும் பரிசளிக்கப்பட்டன (RV.8-46-24)
பரிசளித்தவர்களின் செல்வ வளத்தை இது காட்டுகிறது; அவர்கள் நாடோடிகள் அல்ல.
***


அள்ளிக் கொடுத்த சொக்கத்தங்கம்
10.ப்ரிதுஸ்ரவஸ் எங்களுக்கு தங்க ரதம் பரிசளித்தான் 8-46-21
11.பூஷன், உன்னுடைய தங்கக் கப்பல்கள் கடலில் நிற்கின்றன 6-58-3
12.மருத் தேவதைகளின் தலையில் தங்கக் கிரீடங்கள் இருக்கின்றன – 5-54-12
13.மருத்துகள் போல வேறு எவருமிலர் ; அவர்கள் உடலில் தங்க ஆயுதங்களுடன் ஜொலிக்கிறார்கள்.
14.இந்திரா உன்னை நான் விட்டுவிட மாட்டேன் ; பணம், ஆயிரம் கிடைத்தாலும் , பத்தாயிரம்
கிடைத்தாலும், நூறு ஆயிரம் கிடைத்தாலும் உன்னை விட்டுப் போக மாட்டேன் 8-1-5
DECIMAL SYSTEM
1000
10,000
100,000
15.எனக்கு திவோதாசனிடமிருந்து பத்துத் தங்கக் கட்டிகள் கிடைத்தன 6-47-23

என் கருத்து
சங்க இலக்கிய நூலான பதிற்றுப்பத்தில் ஒவ்வொரு புலவருக்கும் ஆயிரக் கணக்கில் பொற்காசுகளைக் கொடுத்தது பாடப்பட்டுள்ளது. அவைகளை இத்துடன் ஒப்பிடலாம். இவைகளை மிகைப்படுத்தப் பட்ட ‘எண்’கள் என்று கருதினால் பதிற்றுப் பத்தில் வரும் தானங்களையும் சந்தேகிக்க நேரிடும்.
இந்திரர் அமிழ்தமே கிடைத்தாலும் தனியாக உண்பவர் இலர் என்று கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி புறாநானுற்றில் பாடுகிறார் (182). இங்கு ரிக் வேதத்தில் ஒரு லட்சம் பணம் கிடைத்தாலும் இந்திரன் வழிபாட்டை விடமாட்டேன் என்று ஒரு புலவர் பாடுகிறார்.
மேற்கண்ட ரிக் வேத எண்கள் மிகைப்படுத்தப்பட்டவை என்று சிலர் சந்தேகப்படலாம். மருத் என்னும் காற்று தேவதை பாடலில் வரும் தங்கத்தை உவமை என்றும் கருதலாம். ஆயினும் செல்வ வளம் பொருந்திய இடங்களில் மட்டுமே இத்தகைய எண்ணிக்கையும் உவமைகளும் வர முடியும்.
SOURCE – GODS, SAGES AND KINGS, DAVID FRAWLEY, 1991 (MOTILAL BANARSIDAS, DELHI).
tags. ரிக்வேதம், எட்டாவது மண்டலம், அதிசயங்கள்

–சுபம்–