அயோத்தியில் புது வகை மரம் கண்டுபிடிப்பு! (Post No.8297)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8297

Date uploaded in London – 6 July 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

உலகில் பல்லலாயிரம் மர  வகைகள் இருக்கின்றன. ஆனால் வேறு எவரும் கண்டு பிடிக்காத மரத்தைக் கம்பன் கண்டு பிடித்தான். அது மட்டுமல்ல அயோத்தியில் ஒரு ஹாலில் (Hall) பட்டிமன்றம் நடப்பதையும் பார்த்துவிட்டான்.; விடுவானா? உடனே இரண்டு பாட்டு எழுதி பிரசுரித்து விட்டான். அப்பொழுது பத்திரிக்கை இருந்திருந்தால் அது தலைப்புச் செய்தியாக வந்திருக்கும் இதோ முழுச் செய்தி:

கம்பன்:–

டேய் பையா , அந்த விதைகளைக் கொண்டுவா

அப்பா, கல்வி மர விதைகளா? ஆமாண்டா, மகனே

******

அப்பா , அப்பா மரம் பெரிசாச்சு; வந்து பாரு!

கிளைகள் முழுக்க கேள்வி/ வேதம் இலைகள் முழுக்க தவம்.

அடடா அரியகாட்சி !

****

அப்பா அப்பா ஓடிவா ; மலர் மொட்டு வந்திருச்சு!

கம்பன் ஒடி வந்து பார்த்தார்; அன்பு என்னும் ‘மலர் மொட்டு’!

உடனே கம்பன், தன்  மகனுக்கு ஒரு விடு கதை போட்டார்.

மகனே! கல்வியை விதைச்சோம் ; இப்ப அன்பு மொட்டு  வந்து விட்டது

ஒரு விடுகதைக்கு பதில் சொல்லு பார்ப்போம்

இந்த மரத்துல என்ன மலர் பூக்கும்? என்ன பழம் கிடைக்கும் ?

கம்பன் மகன் பட்டென பதில் சொன்னான்:–

“என்னப்பா, எனக்கு இது கூட தெரியாதா?

தருமம் மலர் பூக்கும்! பேரின்பம் பழம் காய்க்கும் !!

பேஷ், பேஷ் ; நீ கம்பன் மகன் என்பதை நிரூபித்து விட்டாய்.

என் நண்பன் கூட  நேற்று என்னைப் புகழும்போது ‘கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும்’ என்றான் ; அப்படியே உண்மை ஆகிவிட்டதே!!

கம்பன் உடனே ஒரு பாட்டுப் பாடினான்:-

ஏகம் முதல் கல்வி முளைத்து எழுந்து எண் இல் கேள்வி

ஆகும் முதல் திண் பணை போக்கி அரு ந்தவத்து

சாகம் தழைத்து அன்பு அரும்பித் தருமம் மலர்ந்து

போகம் கனி ஒன்று பழுத்தது போலும் அன்றே

–கம்ப ராமாயணம் , பால காண்டம் , நகரப் படலம்

பொருள் :

“அந்நகரம் கல்வி என்னும் ஒரு விதையானது முளைத்து வளர்ந்து , அளவற்ற கேள்விகள் என்னும் அழகிய, சிறந்த, வலி ய  கிளைகளை வளர விட்டு , செய்வதற்கு அரி ய தவம் என்னும் இலைகள் தழைக்கச் செய்து , அன்பு என்னும் அரும்பினைத் தோற்றுவித்து , தருமம் என்னும் மலரை மலரச் செய்து பேரின்பம் என்னும் பழத்தைப் பழுக்கச் செய்தற்கு ஏற்ற இடமாக உள்ளது”.

******

அயோத்தியில் ஒரே கூச்சல்!!

கம்பன் அயோத்தி நகர தெரு வழியாக நடந்து போனான். ஒரு மண்டபத்தில் இருந்து பெரிய கூச்சல், சப்தம் ; ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தான் ; புலவர்கள் பெரிய பட்டி மன்ற விவாதம் நடத்திக் கொண்டிருந்தனர் ; நமக்கு எதுக்கப்பா இந்த வெட்டி வேலை?

நான் எதாவது சொல்வேன்; அவன் எதாவது சொல்வான்; நேரம்தான் Waste வேஸ்ட் !

நைசாக நழுவிய கம்பன் இன்னொரு ஹாலின் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தான்; அழகிகள் பரத நாட்டியம் ஆடிக்கொண்டிருந்தனர் உடனே  ‘டயரி’ diary யில் குறித்து வைத்துக் கொண்டான் ; இன்னொரு தெரு வழியே நடந்து போனால் ஒரு ஹால் (Hall)  முன்னாடி பெரிய செக்யூரிட்டி (security ) ; ஓஹோ பிரதம மந்திரி ஏதோ துவக்க விழாவுக்கு வந்திருப்பார் போல என்று எண்ணி போலீஸ்காரர்களிடம் கெஞ்சிக் கூத்தாடி ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தான். ஒவ்வொரு மூலையிலும் தங்கக் காசு குவியல், ரத்தினக் குவியல் என்று கணக்கு எழுதிக் கொண்டிருந்தனர் அத்தனையும் சோழ மகாராஜாவுக்கு சிற்றரசர்கள் அனுப்பிய கப்பம்!

இன்னொரு மண்டபத்தில் இருந்து பிராமணர்கள் விண்ணதிர வேத முழக்கம் செய்து கொண்டிருந்தனர்.

கம்பன் அங்கேயே நின்று விட்டான்; இதைக் கேட்டாலாவது ‘போகும் வழிக்குப் புண்ணியம் கிடைக்கும்’ என்று அங்கு தங்கி ஒரு நாலு  வரிப்   பாட்டும் எழுதினான் —

மன்னவர் தரு திறை அளக்கும் மண்டபம்

அன்னம்  மென் நடையவர் ஆடு மண்டபம்

உன்ன அரும் அரு மறை  ஓது மண்டபம்

பன்ன அருங்கலை தெரி பட்டி மண்டபம்

-கம்ப ராமாயணம் , பால காண்டம் , நகரப் படலம்

பொருள்

பிற நாட்டு வேந்தர்கள் கொண்டுவந்து கொடுக்கும் கப்பம் மூலம் வந்த பொருள்களை அளந்து கணக்குப் பார்க்கும் மண்டபம் / ஹால் ; அன்னம் போல நடக்கும் மென்மையுடைய மங்கையர் ஆடல் நிகழ்த்தும் மண்டபம் ; நினைவில் கொள்வதற்கு அரிய — ஓதுவதற்கு அரிய வேதங்களை ஓதுகின்ற மண்டபம் ; ஆராய்வதற்கு அரியதான பல்வேறு கலைகளை ஆராய்வதற்கு உரிய பட்டி மண்டபம் ஆகியன அந்நகரில் எண்ணற்றவை உள்ளன .

(பட்டி விக்கிர மாதித்தன் என்ற பெரிய அரசன் சிறந்த அறிவாளி; ஜனக மாமன்னன் அகில இந்திய தத்துவ அறிஞர்கள் மஹா நாடு நடத்தியது போல இவன் பல கலைகளை விவாதிக்கும் மண்டபம்/ மன்றம் உண்டாக்கினான்.அதுவே பட்டி மன்றத்தின் தோற்றம் )

tags- அயோத்தி, புது வகை மரம், கண்டுபிடிப்பு, பட்டி மன்றம், பட்டி மண்டபம்

–சுபம் —

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: