
Post No. 8384
Date uploaded in London – 22 July 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
சுமார் 65 ஆண்டுகளுக்கு முன்னர் என்னுடைய தாயார் திருமதி ராஜலெட்சுமி சந்தானம், இரவில் எங்களைத் தூங்க வைப்பதற்குப் பாடிய பாட்டு இது. நீண்ட காலத்துக்குப் பின்னர் அவர் கைப்பட எழுதி வாங்கியதாக ஞாபகம். நாங்களே தூங்குவதற்கு முன்னர் , “அம்மா , கண்ணனைக் கண்டதுண்டோ பாட்டுப் பாடு” என்று கேட்போம் .
இன்னும் சில சமயங்களில் கோபால கிருஷ்ண பாகவதர் அல்லது அவர் மகன் சஞ்சீவி பாகவதர் பஜனை வீட்டில் நடக்கும் அல்லது அருகில் வசிக்கும் லெட்சுமண அய்யர் அல்லது சங்கர அய்யர் வீட்டில் நடக்கும். சரணு சரணு ஹரே என்ற பாடல் வருவதற்குள் அண்ணன் , தம்பி எல்லோரும் தூங்கி விடுவோம். இரவு 2 அல்லது மூன்று மணிக்கு எங்களை எழுப்பி சுண்டலும் பாலும் தருவார்கள் . தூக்க கலக்கத்தில் சாப்பிட்டுவிட்டு மீண்டும் குறட்டை விடுவோம்.
இவை அனைத்தும் மதுரையில் நடந்தவை.
இந்தப் பாடல் யாருடையது என்று நாங்களும் கேட்டதில்லை; அவரும் சொன்னதாக நினைவில்லை!!
பழைய குப்பைகளைத் தூக்கி எறிகையில் கிடைத்த பாடலும் மலரும் நினைவுகளும்!





tags- அம்மா, பாட்டு, கண்ணனை , கண்டதுண்டோ
–subham–
santhanam srinivasan
/ July 23, 2020Dear Sama,Even now it is raining in my ears!!!!Thanks for sharing!!!!
Sent from Yahoo Mail for iPad
Suyamprabha Kamalakkannan
/ August 30, 2021My periyamma also used to sing this song. I remember up to anu pallavi and was looking for lyrics and found your post. Does anyone remember how the saranam goes?