

WRITTEN BY KATTUKKUTY
Post No. 8681
Date uploaded in London – –14 SEPTEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ட்ரிங்கர்ஸ் கிளப் part-2 தண்ணியும் கிண்ணியும்-2
அசுர குருவான சுக்கிராச்சாரியாரியாரிடம் சேர்ந்த கசன்
தினசரி குருவுக்கு பூ பறிப்பது, பூஜைக்கு வேண்டிய தீர்த்தம்
கொண்டு வர வேண்டியது போன்ற கார்யங்களை கூடப்படிக்கின்ற அசுர சிறுவர்களை
விட வேகமாகவும் அழகாகவும் செய்தான்.
அது மட்டுமல்லாமல் அவருக்கு கை, கால் பிடிப்பது போன்ற
வேலைகளை விறுவிறுப்பாகச் செய்தான்.
தேவயானியின் காதல்…….
அந்த அசுர குருவுக்குஒரு அழகான பெண் .ரதி போன்ற
அவள் பெயர் தேவ யானி.

கரு கரு முண்டங்களான அசுரர்களிடையே பளிச்சென்று
“செக்கச் செவேல்”என ஒரு செவத்த பையன்,வாலிபன் அப்பாவிற்கு
ஓடி ஆடி வேலை செய்வதைக் கண்டவுடன் அவளுக்கு ஒரு “கண்”
இப்படி ஒரு செவத்த ஆள் நமக்கு கிடைக்க மாட்டானா என
ஏங்கியது அந்த இளம் உள்ளம்….காதல் மலர்ந்தது. அப்பாவிடம்
சொல்லி தான் சொல்லும் வேலையையும் செய்யும்படி செய்தாள்
தேவயானி. அவள் நெருங்க இவன் ஓட , கசன் பயந்தான்.
வில்லன்கள் வருகிறார்கள்
பார்தத்தார்கள் அசுர சீடர்கள். அவர்கள் தங்கள் தகப்பனிடம் முறையிட்டார்கள். வில்லன்கள் உருவானார்கள்.
ஒருநாள் அவன் தேவயானிக்கு பூ பறிக்கச் சென்ற அவனை கண்ணைக் கட்டி
கிணற்றில் தள்ளி விட்டார்கள். வெகு நேரம் ஆகியும் தனக்கு பூ
பறிக்கச்சென்ற உங்க சிஷ்யனைக் காணோம் என தேவ குருவிடம்
முறையிட ஞான திருஷ்டியில் பார்த்தார் குரு. பாழும் கிணற்றில்
தவித்த அவனை காப்பாறினார். ஏக சந்தோஷம் தேவயானிக்கு!!!!
மறுநாள் பார்த்தார்கள் அசுர சீடர்கள்………நேற்று கிணற்றில் தள்ளி
விட்ட ஆள் இன்று உயிருடன் வந்து கிளாசில்
உட்கார்ந்திதிருக்கிருக்கானே???? ஆச்சரியப்பட்டனர் ……சரி

இது சரிப்படாது…இவனை “குளோஸ்” செய்ய வேண்டியதுதான்
மறு நாள்அவனை வெட்டினார்கள், நாய்க்கு போட்டு விட்டார்கள்…..
எல்லா அசுரப் பயல்களும் “கிளாசில்” உட்கார்ந்திருக்க “நம்ம
ஆளை “மட்டும் கணோம்?.?.? அப்பாவிட முறையிட்டாள் அவள்
“கிடக்கான் ஆளை விடு , அவன் எதிரியின் பையன். போனால்
போகிறான்” என்றார் அவர்.
முற்றிய காதல் போராட்டம்
அப்பா, அவன் இல்லை யென்றால் நான் இல்லை……
தாயில்லாப் பெண்ணை உயிருக்குஉயிராக வளர்த்து அவள்
கண்ணீரைக் கண்டதும் கலங்கினார் குரு. ஞான திருஷ்டியில்
பார்த்தார், சரி இது “நம்ம பசங்களோட”வேலை என்று புரிந்து
கொண்டார். இருக்கவே இருக்குசஞ்சீவினி மந்திரம்.
மறுநாள் எல்லா சீடர்களும் “தொலைந்தான்” என
மகிழ்ந்திருக்க, கம்பீரத்துடன் வந்து அமர்ந்தான் கசன்!!!
அதிர்ந்தார்கள் அசுரப்பயல்கள்……..சரி,

PLAN “C”தான்
இனிமேல்…….
இந்த குரு முழுக்க முழுக்க மதி இழந்து போவது எப்போது???
அப்போது PLAN. “C”யை “இம்ப்ளிமெண்ட் “ implement செய்வோம்.
இரவு நேரத்தில் “சுரா பானம்” அருந்தி விட்டு அவர் உளற
உளறலையையும், போடற ஆட்டத்தையும் கண்டு ரசிக்காத
அசுரர்களே கிடையாது.
கசனை பிடித்து , கொன்று, எரித்து , சாம்பல் ஆக்கி அவர்
குடிக்கும் “ட்ரிங்சில்” drinks கலந்து விட்டார்கள்.
(தொடரும்)
Tags- கச்ச தேவயானி, ட்ரிங்கர்ஸ் கிளப் part-2 தண்ணியும் கிண்ணியும்-2

Xxxxx subham xxxxxxxxxx