
WORLD’S FIRST FLYING DOCTOR; HANUMAN WITH HIMALAYAN HERBS
WRITTEN BY KATTUKKUTY
Post No. 8811
Date uploaded in London – – 14 OCTOBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

வாதம் அதிகமானால் உடலில் தோன்றும் மாற்றங்கள்
உடல் இளைத்து கறுத்தல்
சூடான பொருள்களில் விருப்பம்
உடல் நடுக்கம்
உடல் உப்பல்
மலக்கட்டு
தூக்கம் கெடல், தலை சுற்றல்
வாய் பித்தம்
எதிலும் ஊக்கமின்மை

வாதம் குறைந்தால்
உடலில் நோய்
தாழ்ந்த குரல்
அறிவு மங்கல்
உடலில் வேகக் குறைவு.
மூர்ச்சை உண்டாகுதல்
பித்தம் அதிகமானால் உடலில் உண்டாகும் மாற்றங்கள்
கண், மலம், சிறு நீர், தோல், முதலியவற்றில் மஞ்சள் நிறம் காணுதல்
பசி, நீர் வேட்கை அதிகமாகுதல்
உடலில் எப்பொழுதும் ஒரு எரிச்சல்
குறைந்த தூக்கம்

பித்தம் குறைந்தால்
மந்தாக்கினி
உடலில் குளிர்ச்சி
நிறக்குறைவு
கபம் அதிகமானால் உடலில் தோன்றும் மாற்றங்கள்
அக்னி மந்தப் படல்
வாயில் நீர் ஊறுதல்
உடலில் ஊக்கம் குறைதல்
உடல் கனமாகத் தோன்றுதல்
உடல் வெண்ணிறமடைதல்
உடல் குளிர்ச்சியடைதல்
இரைப்பு,இருமல் உப்பிசம்
மிகு தூக்கம்

கபம் குறைந்தால்
தலை சுற்றல்
மூட்டுகளில் பசை நீங்கி வலி
நுரை ஈரலில் நீர் குறைதல்
மயிர்கால்களில் வியர்வை
நெஞ்சில் ஒரு படபடப்பு
இப்பொழுது நீங்கள் கண்டு பிடித்தருப்பீர்கள் நீங்கள் வாத சரீரமா,
பித்த சரீரமா, கப சரீரமா என்று. நீங்கள் என்னன்ன உணவுகள்
உட்கொள்ளலாம் , உடகொள்ளக் கூடாது என்பதை கீழ்கண்ட
அட்டவணை மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

சித்த மருத்துவத்தினால் உள்ள பயன்கள்
சித்த மருந்துகள் பெரும்பாலானவை தாவர வர்கத்திலுள்ள இலை,
தழை,மரம்,காய், கனி, பூ, வேர் முதலியவற்றால் ஆனது.
ஆகையினால் விலை மலிவு.
பொருள்கள் கிடைப்பது வெகு சுலபம்
மருந்து செய் முறையும் மிக சுலபம்
ஒரு மருந்தை பல வியாதிகளுக்கும் பயன்படுத்தலாம். அதற்கு பெயர் “அனு பானம்”
உதாரணமாக கடுக்காய் தூளை வெறம் தண்ணீருடன் சாப்பிட்டால்
ஒரு வியாதியும், மோருடன் சாப்பிட்டால் மற்றொரு வியாதியும்,தேனுடன் கலந்து
சாப்பிட்டால், வேறு வியாதியும் குணமாகும்.
சுலபமாகவும், குறுகிய காலத்திலும், மருந்துகளைத் தயாரிக்க முடியும்
மருந்துகளைத் தயாரிக்க ஆங்கில அறிவோ, இஞ்சினீயரிங், டெக்னாலஜியோ
தேவை இல்லை.
தயாரிக்க மின்சாரமோ, விலை அதிகமுள்ள கருவிகளோ தேவையில்லை.
தேவை- ஒரு அம்மி, ஒரு குழவி அல்லது ஒரு உரல், ஒரு உலக்கை
அவ்வளவுதான்!!!
மனிதர்களுக்கு வரக்கூடிய மொத்த வியாதிகளின் எண்ணிக்கை
4 4 4 8.!!!.இதற்கு மேல் கிடையாது. எல்லாவற்றிற்கும் மருந்து
உண்டு.வேறு எந்த மருத்துவமும் இப்படி ஆணித்தரமாக சொல்லவில்லை.
சித்த மருத்துவ முறையில் தயாரிக்கப் பட்ட மருந்துகள் பல ஆண்டுகள் கெடாது
சித்த மருத்துவ மருந்துகளுக்கு “புற விளைவுகள்” (SIDE EFFECTS) கிடையாது
அதிகமாக அறுவை சிகித்சைகள் கிடையாது.
மருந்து வாங்க டாக்டர் பிரிஸ்கிரிப்ஷன் தேவை இல்லை

இவ்வளவு சுலபமாக கிடைக்கக்கூடிய, விலைகுறைந்த, சித்த மருத்துவப்
பொருள்களிருந்தும், சித்த மருத்துவம் ஏன் இன்னும் பிரபலமடையவில்லை????
காரணங்கள்
சித்த மருத்துவர்கள் தமக்குத் தெரிந்த சிறந்த மருத்துவ முறைகளை
மற்றவர்களுக்குக் கூறாமல் மறைத்து வருகின்றனர்.
சித்தர்களின் ஆராய்ச்சிகள் அடங்கிய ஓலைச்சுவடிகள் அருமை
தெரியாதவர்களிடம் சிக்கி சீரழிந்து சீந்துவாரின்றி கிடக்கிறது.
ஓலைச் சுவடிகள் சாதாரணமாக புரியக்கூடிய நடையில் எழுதப் படவில்லை.
மருத்தவ ரகசியம் தெரிந்தவர்கள் முன்வந்து விளக்கம் கூறாமல் இருக்கிறார்கள்.
சித்த மருத்துவர்கள் ஒருவரை ஒருவர் குறை கூறிக் கொள்கின்றனர்.
நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலித்தல்
கடுமையான பத்தியங்களை விதித்தல்
இவற்றையெல்லாம் கண்ட அரசாங்கம் சித்த மருத்துவர்களிடம்,
சித்த வைத்தியத்திலும் நம்பிக்கையில்லாமல்
இதை பரப்புவதில் ஊக்கமின்மையுடன் இருத்தல்.
பரம்பரை மருத்துவர்கள் தனக்குத் தெரிந்த மருதுவத்தை வெளிப்படுத்தாமல் இருத்தல்
வெளி நாட்டினர் நமது மருத்துவத்தின் சிறப்பையும், குணமாக்கும் தன்மை அறிந்து
அந்தப் பொருள்களை நமது அரசாங்கத்திடம் பணம் கொடுத்து உரிமை வாங்கி
நம்மை செய்யவிடாமல் தடுத்ததுடன், அதிக விலையில் நம்மிடமே. விற்கிறார்கள்.


நாம் நமது மருத்துவத்தின் பெருமையை உணர்ந்து, சித்த மருத்துவத்தின்
பொருள்களை வாங்கி, உடல் ஆரோக்கியத்துடன்
வாழ்ந்து,நம்தமிழ் நாட்டின் பெருமையை உலகிற்கு உணரச்செய்ய
எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
***

TAGS- சித்த மருத்துவம்- PART 2
R Nanjappa
/ October 14, 2020சித்த மருத்துவத்தில் பொதுவாக தாவரப்பொருள்களைக்கொண்டே மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் இன்றைய நிலையில் இத்தாவர வகைகள் செயற்கை ரசாயனக் கலப்பிற்கும் தாக்குதலுக்கும் உள்ளாகின்றன. அதிக விளைச்சலுக்காகப் பல ரசாயனப்பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன. இப்படி ரசாயனங்களின் வழியில் விளையும் பொருள்களின் சத்தோ வீர்யமோ திரிந்தோ, குறைந்தோதான் இருக்கிறது என்பதை கண்டறிந்திருக்கிறார்கள். இதைப் பற்றிய ஒரு ரிபோர்ட் Times of India-Bangalore இதழில் இரண்டாண்டுகளுக்குமுன் வெளியானது. இன்று பால் என்ற பெயரில் வழங்கும் திரவமும் அசல் பால் இல்லையே! பின், வெண்ணையும் நெய்யும் எப்படி அசலாக இருக்க முடியும்? இன்னும் இஞ்சி, மஞ்சள், கரும்பு, லவங்கம், மிளகு போன்ற பொருள்களின் நிலையை எண்ணீப் பாருங்கள்! பல பொருள்களில் GM என்னும் அசுரன் புகுந்துவிட்டான்!
சில மருந்துகளில் steroids போன்ற ரசாயனப்பொருள்களை சிலர் கலந்துவிடுகின்றனர் என்ற பயமும் இருக்கிறது.
சில ஆயுர்வேத மருந்துகள் organic என்ற முத்திரையுடன் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன! இது எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போலல்லவா ஆகிறது!
மருத்துவம் தர்மம் சார்ந்த விஷயம் என்பது மாறி வணிக நோக்கத்துடன் செயல்படுவது பல கோளாறுகளுக்கு அடிப்படையாகிறது!