
Post No. 8860
Date uploaded in London – – 26 OCTOBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Compiled by Kattukutty
கணவனின் வாயைப் பூட்டி அதன் சாவியை வைத்திருப்பவளின்
பெயர் மனைவி!!!
XXX
பேன்களின் குடியிருப்பான கூந்தலைப் பிடித்துக் கொண்டு
இயற்கை மணம் உண்டு தானே இதில் என்று அதட்டிக்
கேட்பவளே மனைவி !!!
XXXXX
பணத்தைச் செலவழிப்பது எப்படி என்ற கேள்விக்கு
இலக்கணமாவாள் மனைவி!!!
XXXX
ஒரு பொய் உண்மையாக வேண்டுமா? மனைவியிடம் அதை
ரகசியம் வெளியே சொல்லிவிடாதே என்று சொன்னாலே போதும்
XXX
கணவன் என்ற போட்டோவிற்கு மனைவியே நான்கு பக்கமும்
சட்டமாவாள்!!!
XXXX
மனைவி என்பவள் சுவற்றில் ஆணியில்லாமல் தொங்கும்
கேலண்டர்!!!
XXXX
மனைவியிடம் அதிக உண்மையும் சொல்லக் கூடாது
அதிக பொய்யும் சொல்லக் கூடாது
XXX
மனைவி என்பவள் நான்கு பக்கமும் வீடியோ கேமிரா பொருத்தப்பட்ட உருவம்
உண்மை வீரன் யார் தெரியுமா???
மனைவியின் பீரோவை அவள் முன்பே திறப்பவன்!!!
நல்ல கணவன் யார்????
சரி, சரி, சரி, சரி, சரி, சரி…………….(என்பவனே!)
XXXX
வாஷிங் கம்பெனிகாரர்கள் சர்வே எடுக்க வந்தார்கள்
மனைவியைக் கேட்ட கேள்வி – நீங்கள் துணி துவைக்க எதை உபயோகிக்கிறீர்கள்????
பதில் – என் கணவனை!!!
XXXX
மனைவி ஒரு மந்திரி
என்ன நான் சொன்னது சரியா???
மந்திரியை அடிக்கடி மாற்றலாமே???
XXXX
உன்னைப் பற்றித் தெரியவேண்டுமா???
உன் மனைவிடம் கேட்டுப்பார் உன் யோக்யதையை….
உன் மனைவியைப் பற்றித் தெரிய வேண்டுமா???
பக்கத்து வீட்டுக்காரியிடம் கேட்டுப்பார் அவள் யோக்யதையை!!!
XXXX
மனைவி புரட்டிப் புரட்டி செலக்ட் பண்ணினா புடவை
செலக்ட் பண்ணிட்டு புரட்டி புரட்டி எடுத்தா புருஷன்!!!
XXXX
நீ மனைவி வேணும்ன்னு நினைச்சா அது ஆசை
அதற்கு பிறகு சந்தோஷமா இருக்கணும்னு நினைச்சா
அது பேராசை!!!!
XXXX
மனைவி கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுத்து
சமாளிப்பவன் புத்திசாலி !!!
வாங்கி கொடுக்கிறேன் என்று சொல்லியே
சமாளிப்பவன் திறமைசாலி!!!
XXXX
அரசன் அன்று கொல்வான்!
தெய்வம் நின்று கொல்லும்!
மனைவி பேசியே கொல்வாள்!!!
XXXX
கல்யாணம் ஆகி மனைவி வந்த பின்
ஒண்ணு அடி விழும்,
இல்லேன்னா முடி விழும்…..
அவ்வளவுதாங்க வாழ்க்கை……..
XXXX
மனைவி சொன்னால் கணவனுக்கு மகிழ்ச்சி,
கணவன் சொன்னால் மனைவிக்கு வருத்தம்
“ஊரிலிருந்து என் தங்கச்சி வரா”
XXX
பட்டுச்சேலை கட்டினா மனைவி உள்பட
எல்லா பெண்களுக்கும் எடுப்பாத்தான் இருக்கும்,
அதை வாங்கித்தர புருஷனுக்கு கடுப்பாத்தான் இருக்கும்
XXX
மூக்கும் முழியுமா இருக்கிற பொண்ணை விட,
நாக்குக்கு நயமா சமைக்கற பொண்ணுங்க தான்
ஆண்களுக்குத் தேவையாம் !!!
XXXX
யாரோ பெத்த பொண்ண மனைவியா ஏத்துக்கிட்டு,
காலம் முழுவதும் சோறு போடும் உயர்ந்த உள்ளமே “ஆண்”
XXXX
ஒரு பக்கம் ஷார்ப்பா இருந்தா KNIFE
இரு பக்கமும் ஷார்ப்பா இருந்தா WIFE!!!
(இத புரிஞ்சுகிட்டா நல்லா இருக்கும் LIFE)
TAGS – KNIFE AND WIFE, பெண்களை நம்பாதே

***