பாஸ்கரராயரின் ‘சௌபாக்ய பாஸ்கரம்’! -1 (Post No.8859)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8859

Date uploaded in London – – 27 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

லண்டனிலிருந்து 26-10-2020 அன்று இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கு ஞானமயம் நிகழ்ச்சி ஒளிபரப்பட்டது. அதில் கேள்வி – பதில் நிகழ்ச்சியில் இடம் பெற்ற கேள்வியும் பதிலும் கீழே தரப்பட்டுள்ளது.  Facebook.com/gnanamayam

பாஸ்கரராயரின் ‘சௌபாக்ய பாஸ்கரம்’! -1

QUESTION ASKED BY MR SARAVANAN

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம்.

இன்று நம் முன் இருக்கும் கேள்வி : பாஸ்கரராயரின் நூல்களின் சிறப்பு பற்றியும், அவை எங்கு கிடைக்கும் என்பது பற்றியும் தான்.

அம்பிகையின் அனுக்ரஹத்தைப் பெற்ற பெரிய மஹான் பாஸ்கர ராயர். மஹராஷ்டிரத்தில் பாகா என்ற ஊரில் இவர் அவதரித்தார். சிவதத்த சுக்லர் என்ற மகானிடமிருந்து ஸ்ரீ வித்யா உபதேசத்தை பெற்று அம்பிகையை நேரில் தரிசிக்கும் அளவு தவம் செய்தார்; அம்பிகை அவருக்கு தரிசனம் தந்து அருளினாள்.

அவர் வாழ்க்கையில் ஏராளமான மெய் சிலிர்க்கும் சம்பவங்கள் உண்டு. இரு சம்பவங்களை மட்டும் இங்கு பார்ப்போம்.

ஒரு சமயம் அவர் மத்யார்ஜுனம் என்னும் திருவிடைமருதூரில் மஹாதானத் தெருவில் வசித்து வந்தார். அங்கு உள்ள தனது இல்லத்தில் தெருத்திண்ணையின்  மீது மாலை வேளைகளில் சாய்ந்து கொண்டு தனது பாதங்களை தூணிற்கு முட்டு வைத்து உட்கார்ந்து கொண்டிருப்பது அவர் பழக்கம்.

ஒரு சமயம் அந்த ஊருக்கு அருகிலிருந்த வேப்பத்தூரிலிருந்து வந்த ஒரு சந்யாசி தினமும் பாஸ்கரராயரின் வீட்டு வழியே ஸ்ரீ மஹாலிங்க ஸ்வாமியை தரிசிக்க கோவிலுக்குப் போவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். பாஸ்கரராயர் யதிகளுக்குச் செய்ய வேண்டிய மரியாதைப்படி அவர் வரும் போது எழுந்து நிற்பதில்லை. இதை தினமும் கவனித்து வந்த அந்த துறவிக்கு பாஸ்கரராயர் மீது கோபமும் துவேஷமும் ஏற்பட்டது.

ஒரு நாள் பிரதோஷ தினத்தன்று மாலை நேரத்தில் அந்த துறவியும் பாஸ்கரராயரும் நேருக்கு நேர் சந்திக்கும்படி நேரிட்டது. அப்போது துறவியார் பாஸ்கரராயரை இழித்துப் பேச ஆரம்பித்தார்.

பாஸ்கரராயர் அவரை அணுகி மிகவும் சாந்தமான குரலில், மற்ற இல்லறத்தாரைப் போலத் தாமும் அவரை நமஸ்கரித்திருந்தால் அவரது தலை சுக்கு நூறாக வெடித்துச் சிதறி இருக்கும் என்றும் அவரைக் காப்பாற்றவே தான் அப்படி நமஸ்கரிக்கவில்லை என்றும் எடுத்துச் சொன்னார்.

அங்கிருந்தோர் அவர் சொல்வதை நம்பாமல் இருப்பதை அவர் தெரிந்து கொண்டார்.

அந்தத் துறவியின் தண்டம், கமண்டலம், காஷாய வஸ்திரம் ஆகியவற்றை ஓரிடத்தில் வைக்கச் சொன்னார். பின்னர் அவற்றிற்கு அவர் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார். உடனே அந்த தண்ட, கமண்டலம், காஷாய வஸ்திரம் அனைத்தும் சுக்கு நூறாய் வெடித்துச் சிதறின.

அனைவரும் பாஸ்கரராயரின் மஹிமையை உணர்ந்து அவருக்கு நமஸ்காரம் செய்து மன்னிக்குமாறு வேண்டினர். துறவி அவரது மஹிமையை முற்றிலுமாக உணர்ந்தார்.

ஆனால் அன்று முதல் துறவி அந்தத் தெரு வழியே வரும் சமயம் பாஸ்கரராயர் அங்கு இருப்பதில்லை!

இன்னொரு சம்பவம் காசியில் அவர் இருந்த போது நடந்த ஒன்று. அவரது வித்வத் மஹிமையையும் தேவி அவர் மீது காட்டும் கருணையையும் அருளையும் புரிந்து கொள்ளாத சிலர் அவர் மீது மிகுந்த துவேஷம் கொண்டிருந்தனர்.

இதற்கு ஒரு முடிவு கட்ட எண்ணிய பாஸ்கரராயர் தான் ஒரு பெரிய யாகம் செய்யப்போவதாகக் கூறி அதற்கு அனைவரும் வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தார். அங்கு சென்று அவரை அவமானப்படுத்த வேண்டும் என்று எண்ணிய த்வேஷிகள் குறித்த நாளில் யாகசாலையில் குழுமினர். ஆனால் யாகம் நடத்தப்பட்ட நேர்த்தியையும் அவரது தேஜஸையும் தபோபலத்தையும் கண்டு அவர்கள் வியந்து போயினர். என்றாலும் கூட இடக்கு மடக்காக கண்டபடி கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தனர்.

பாஸ்கரராயரோ மந்திர சாஸ்திர விற்பன்னராக இருந்ததால் கேட்ட கேள்விக்கெல்லாம் உடனுக்குடன் தக்க பதிலை அனைவரும் வியக்கும் படி கூறிக் கொண்டே வந்தார். இதையெல்லாம் உடனிருந்து கவனித்துக் கொண்டிருந்த குங்குமானந்த ஸ்வாமி என்ற தேவி உபாஸகர் அனைவரையும் நோக்கி, “இங்கு இருக்கும் இவர் சாமான்யர் இல்லை. இவர் தோள்களில் அம்பாள் ஆரூடையாக அமர்ந்து கொண்டு உங்கள் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறாள்” என்றார்.

அங்கிருந்தவர்களில் நாராயண பட்டர் என்பவர் அப்படி அம்பாள் இருப்பது உண்மை எனில் தான் அம்பாளைத் தன் கண்களால் தரிசிக்க ஆவல் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். குங்குமானந்த ஸ்வாமி அவர் தரிசன பாக்கியத்திற்கு யோக்யதை கொண்டவர் என்பதையும் அவர் நோக்கம் தூய்மையானது தான் என்பதையும் நிச்சயித்துக் கொண்டார். பாஸ்கரராயரால் அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட ஜலத்தால் அவரது கண்களைத் துடைக்கச் சொல்லி விட்டு அவருக்கு சரியான திருஷ்டியை ஏற்படச் செய்தார். நாராயண பட்டர் பாஸ்கரராயர் தோளில் கிளியாய் அமர்ந்திருந்த அம்பாளைக் கண் குளிரக் கண்டு ஆனந்த பரவசம் அடைந்து கண்ணீர் விட்டார்.

பின்னர் அங்கிருந்த அனைவரும் பாஸ்கரராயரிடம் எதைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்வது என்று தமக்குள் விவாதித்தனர்.

எந்தப் புராணத்திலும் இல்லாத ஒரு விஷயத்தைப் பற்றிக் கேட்க ஒருமனதாக அவர்கள் முடிவு செய்தனர்.

*** தொடரும்

S NAGARAJAN OF BENGALURU ANSWERING QUESTIONS ON HINDUISM 

TAGS  பாஸ்கரராய-1 

TAMIL WORDS IN ENGLISH – PART 11 (Post No.8858)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8858

Date uploaded in London – –26 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

H SOUND DOESN’T EXIST IN MANY LANGUAGES INCLUDING TAMIL. SOFT SOUNDED TAMIL WORDS HAVE THESE H SOUND IN ENGLISH; IT MAY BE DUE TO THE ROOT WORD HAVING H SOUND OR THE SPEAKERS OF CERTAIN LANGUAGES USE H SOUND LIKE ARABIC

EXAMPLE-

HORSE- ASVA IN SANSKRIT

HARVEST – ARUVADAI IN TAMIL

தமிழில் ஆயிரம் ஆங்கிலச் சொற்கள் – Part 11

WORDS BEGINNING WITH ‘H’ ARE GIVEN BELOW

H.1.HICCUP – VIKKAL; H=V விக்கல்,

H.2.HEA/VEN- VAANAM; H=V வானம்,

H.3.HALO- SALTY- KALAR NILAM களர் நிலம்

H.4.HERO – VEERA; SANSKRIT WORD; H=V வீரன்

H.5.HEURISKEIN- ARI/KNOW- GERMANஅறி ,

H.6.HORROR ;HORRENDUOS –  ARANDAN; ARATRUஅரண்டான் ,

H.7.HUM/ERE, HUMIDITY – IIRA- ஈர

H.8.HOLO/ WHOLE – MUZU/MULU முழு ,

H.9.HOLLOW- PALLAM; பள்ளம்,OOTTAIதுளை,

H.10.HORTARI; HOST –  AATHARI/SUPPORT ஆதரி/ ஹோதா  /யாகத்தில்

H.11.HONEY / BEE– THEN, THENEE தேனீதேன் தொல்காப்பியம்

H.12.H/ALF- ARAI அரை

H.13.H/ARD – ARITHU அரிதுஅரிஷ்ட/ அரில்

H.14.HARD/SHIP – ARIL IN TOLKAPPIAM; ARISHTA IN SANSKRITகரடு /முரடு

HARD/SURFACE- KARADU கரடு /முரடு

H.15.H/INDU – INDU; HINDU=SINDHU; H=S ஹிந்து=சிந்து= இந்து

H.16.HYPNO – SWAPNA/SOMNAMBULISM- H=S; SWAPNA IS SANSKRIT ஹிப்னோஸ்வப்ன சோம்னாம்புலிசம்;/தூக்க மின்மை 

H.17.HIGGELY PIGGELY – ESAGU, PISAGU இசகு/எசகு/பிசகு

H.18.H/AIR – MAYIR IN TAMIL; H=M மயிர்,

H.19.HONOUR – MAANAM;  H=M மானம் ,

H.20.H/EINOUS – EENATHTHANAM ஈனத்தனம்

H.21.HAUL – IZU/ ILU இழு,

H.22.HOME- A/HOME = AHAM IN TAMIL; IT IS IN SANSKRIT AS WELL அகம்

H.23.((HORSE – HRASVA= ASVA IS IN SANSKRIT. அஸ்வ

H.24.HORA – HOUR = ORAI ஹோரா – ஓரை IN TAMIL AND GREEK; HORA SASTRA IN SANSKRIT

BOTH THESE HORSE/ASVA AND HORA ARE ACCEPTED BY LINGUISTS.

THIS I GIVE AS LOGIC TO DERIVE TAMIL WORDS- IN THE SAME WAY THEY DERIVE SINNDHU/INDUS/HINDU ; IN THE SAME WAY THEY DERIVE HERMES IN GREEK FROM H.25.SARAMA IN RIG VEDA சரமா /ரிக் வேத நாய்= கிரேக்க ஹெர்மிஸ். IF THEIR APPROACH IS RIGHT THEN MY APPRACK IS ALSO RIGHT; H=S.))

H.26.HISTORY- CHARITA; SARITHTHIRAM IN TAMIL)) சரிதசரித்திர

H.27.HARRY – HARI/ HARAN ஹரி ஹரன்

ஹ= ச

ஹ சொற்களும் ச சொற்களும் பழந் தமிழில் தடை செய்யப்பட்டுள்ளது. அவை அ  அல்லது ம / மா – ஆக மாறுவதைக்   காணலாம்

H.28.H/ILARIOUS – ILI/LAUGH இளி / இளிச்சவாயன்

H.29.HARM- HARAAM/ ABACHARAM/ BLASPHEMOUS ஹராம் =மறம் /அதர்மம்

HARAAM IS ACTUALLY MARAAM= ADHARMA= HARMFUL ACT; H=M

H.30.H/ARVEST – ARUVADAI அறுவடை

tags – Tamil words -11

(விஷக்) கடி ஜோக்ஸ் (Post No.8857)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 8857

Date uploaded in London – – 26 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

குடும்பத்திலே குதிரைக்கு பிடித்தவர் யார்???

“கொள்ளு” தாத்தா!!!

Xxx

நிலம் பொய் பேசாது ஏன்???

ஏன்னா அது ரியல் Real எஸ்ட்டேட் !!!

Xxx

தாலிகட்டின நாடு எது ???

இத்தாலி

Xxx

சென்னையில் சூடான இடம் எது ???

சூளை !!!

Xxx

T V வியில் எறும்பு எப்படி வந்தது???

“ANT”TENNA வழியாக……

xxx

அழுமூஞ்சி நாடு எது ???

சிரியா

Xxx

வாசனையான ரயில்வே ஸ்டேஷன் எது???

“சென்ட்” scent ரல் !!!

Xxx

காலே இல்லாத டேபிள் எது???

TIME TABLE

Xxx

கையிலிருக்கிற “கை”எது ???

ரேகை!!!

Xxx

பசுமையான நாடு எது ???

கிரீன் லாந்து !!!

Xxx

இன்பம் எது???

அடுத்த வீட்டு ஜோடி அனுபவிப்பது !!!

Xxx

துன்பம் எது ???

என் மனைவியுடன் நான் அனுபவிப்பது

Xxx

சுகம் எது ???

அடுத்தவன் எனக்குச்செய்யும் வேலை…….

Xxx

சோகம் எது ???

அடுத்தவனுக்கு நான் செய்யும் வேலை….

xxx..

வளமை எது ???

பஸ் ஸ்டாண்டில் பார்த்த பெண்ணின் அழகான மேனி!!!!

Xxxx

வறுமை எது???

என் மேலதிகாரியின் மன இறுக்கம்???

Xxx

எல்லா மொழியும் பேசக் கூடியது எது???

எதிரொலி!!

Xxx

வெய்யில்ல வெளியே வந்தா உருகிடறாரு இந்த மனுஷர்???

யாரு அது???

பெருமாள் “பட்டர்”

Xxxx

சொத்துக்கள் நிறைந்த நாடு எது ???

“ஆஸ்தி”ரேலியா!!!

Xxx

உட்கார முடியாத தரை???

புளியோதரை…….

Xxx

பட்டுப் பூச்சியிலிருந்து எதை எடுக்கிறார்கள்???

உயிரை !!!

Xxxx

இந்திய நாட்டில் ஜனத்தொகை நாளுக்குநாள் பெருகுவதேன்???

இந்தியா தீப ‘கற்ப’மாக இருப்பதால் !!!

Xxx

டாக்டர் ஏன் கோபமா இருக்கார்???

யாரோ அப்பரேஷன் தியேட்டர் வாசலில் “ஒன் வே” எவனோஎழுதி

வச்சிருக்கானாம்!!!

Xxx

tags- (விஷக்) , கடி  ஜோக்ஸ், 

–subham—-

வீர ஜெயத் திருப்புகழும் மந்திரத் திருப்புகழும்! (Post No.8856)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8856

Date uploaded in London – – 26 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

வீர ஜெயத் திருப்புகழும் மந்திரத் திருப்புகழும்!

ச.நாகராஜன்

திருப்புகழ் 1324 பாடல்கள் நம்மிடையே இன்று உள்ளது. இது வரை வெளி வராத சில அரிய பாடல்கள் ஆறைச் சேர்த்து இதை சிலர் 1330 என்று குறள் எண்ணிக்கைக்கு நிகராகக் கொண்டு வருவதும் உண்டு. ‘யாம் ஓதிய கல்வியும் எம் அறிவும் தாமே பெற வேலவர் தந்ததனால்’ என அருணகிரிநாதரே கூறுவதால் அவர் வாக்கு முருகன் வாக்கே என ஆகிறது. ஆகவே இவை மந்திரப் பாடல்களாக அமைந்துள்ளன என்று சொல்வது சத்திய வாக்காகும்.

பல பாடல்களை தங்கள் அனுபவத்தால் கண்டறிந்த பெரியோர்கள், அவற்றின் பயனைத் தெளிவுறச் சொல்லி வைத்துள்ளனர்.

அவற்றில் வீர ஜெயத் திருப்புகழாக, ‘சினத்தவர் முடிக்கும்’ என்ற பாடலும், மந்திரப் பாடலாக ‘இருமலு ரோக’ என்ற பாடலும் அமைந்துள்ளன.

வீர ஜெயத் திருப்புகழ் பகைவரை வென்று எந்தக் காரியத்திலும் வெற்றியைத் தரும் ஒரு அரிய திருப்புகழாகும்.

எந்த வியாதி வந்தாலும் அதைத் தீர்க்க பாட வேண்டிய பாடலாக அமைகிறது

‘இருமலு ரோக’ எனத் தொடங்கும் பாடல்.

அவற்றைக் கீழே பார்க்கலாம்.

சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ்

     செகுத்தவர் ருயிர்க்குஞ் …… சினமாகச்

சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்

     திருப்புகழ் நெருப்பென் …… றறிவோம்யாம்

நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்

     நிசிக்கரு வறுக்கும் …… பிறவாமல்

நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும்

     நிறைப்புக ழுரைக்குஞ் …… செயல்தாராய்

தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந்

     தகுத்தகு தகுத்தந் …… தனபேரி

தடுட்டுடு டுடுட்டுண் டெனத்துடி முழக்குந்

     தளத்துட னடக்குங் …… கொடுசூரர்

சினத்தையு முடற்சங் கரித்தம லைமுற்றுஞ்

     சிரித்தெரி கொளுத்துங் …… கதிர்வேலா

தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்தெண்

     திருத்தணி யிருக்கும் …… பெருமாளே.

பொருள் : முருகனை வழிபடுவோர்களைக் கோபிப்பவர்கள் தலைக்கும், அவர்களைப் பகைத்து இருக்கும் குடும்பத்திற்கும், அவர்களைச் செகுக்கத் துணிபவர் உயிருக்கும், முருகன் அடியாரைக் கண்டு சினத்துடன் சிரிப்பவர்க்க்கும், பழிப்பவர்க்கும் திருப்புகழே நெருப்பாய் அமைந்து அவர்களை அடியோடு அழித்து விடும். இதை நன்கு அறிவோம் நாம்.

முருகனை வழிபடும் அடியவர் என்ன நினைத்து வேண்டுகிறார்களோ அதை அளிக்க வல்லது, மனத்தை உருக்குவது, மீண்டும் மீண்டும் பிறப்பு என்ற நிலையை இல்லாமல் செய்து இருள் நிறைந்த கருப்பையில் வராமல் செய்வது, நெருப்பையே எரிக்க வல்லது, மலைகளையே இடிக்க வல்லது, அனைத்துப் பொருள்களையும் தம்முள் உள்ளடக்கியது ஆகிய திருப்புகழை பாடுகின்ற நல்ல செயலை அருள்வாயாக. தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந்த் தகுத்தகு தகுத்தந்தன என்ற ஒலியுடன் பேரிகைகள் முழங்க, தடுட்டுடு டுடுட்டுண் டென ஒலியுடன் உடுக்கை முழங்க, சேனைகளுடன் போருக்கு அணி வகுத்து வந்த கொடு சூரர் சினத்தையும் அவர்கள் தம் உடலைச் சங்கரித்த (அழித்த) பிண மலைகள் யாவையும் புன்னகை ஒன்றினாலேயே அதில் தோன்றிய அனல் பொறியால் சாம்பலாக்கிய கதிர் வேலா, தினைப்பயிரை விளைவிக்கும் மலைக் குற வள்ளியை மார்புற அனைத்து இன்புற்று எண்ணுகின்ற திருத்தணியில் அமர்ந்து அருள் புரியும்

வேலவனே!

 அநுஷ்டான திருப்புகழ் பாடல்கள் என்று சில திருப்புகழ் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

அவற்றில் நோய் வரின் அதைப் போக்க ‘இருமலு ரோக’ பாடல் பாடி துதிக்கப்படுகிறது.

நோய் வராமல் தடுக்கவும் அன்றாடம் அன்பர்களால் இது ஓதப்பட்டு வருகிறது.

பாடல் இதோ:

     இருமல்  உரோகம் முயலகன் வாதம்

     எரிகுண நாசி ……         விடமேநீர்

இழிவு விடாத தலைவலி சோகை

     எழுகள மாலை …… இவையோடே

பெருவயி றீளை எரிகுலை சூலை

     பெருவலி வேறும் …… உளநோய்கள்

பிறவிகள் தோறும் எனைநலி யாத

     படி உன தாள்கள் …… அருள்வாயே

வருமொரு கோடி அசுரர் பதாதி

     மடியஅ நேக …… இசைபாடி

வருமொரு கால வயிரவர் ஆட

     வடிசுடர் வேலை …… விடுவோனே

தருநிழல் மீதில் உறைமுகில் ஊர்தி

     தருதிரு மாதின் …… மணவாளா

ஜலமிடை பூவின் நடுவினில் வீறு

     தணிமலை மேவு …… பெருமாளே.

இந்த மந்திரத் திருப்புகழைச் சொல்லி திருநீறு அணிந்து கொண்டால் நோய்கள் வராது; வந்த நோய்களும் போகும்.

இப்படி ஏராளமான பலன் தரும் திருப்புகழ் பாடல்கள் அன்றாட வாழ்க்கையின் வெற்றிக்கு உறுதுணை செய்வதை அன்பர்கள் காலம் காலமாக அனுபவித்து உணர்ந்து பயன் அடைந்துள்ளனர்.

நாமும் பயன் பெறலாமே!

***

தென் அமெரிக்காவில் புதிர், மர்மம்- மஹா பாரதத்தில் விடை! (Post.8855)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8855

Date uploaded in London – –25 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

12 angled- 12 adityas

தென் அமெரிக்காவில் பெரு என்ற ஒரு நாடு உள்ளது. அங்குள்ள மர்மம் மீண்டும் பத்திரிகைகளில் அடிபடத் துவங்கிவிட்டது. சென்ற வாரம் ஒரு மிகப்பெரிய பூனை உருவமும் அதில் செல்லும் மலைப்பாதையும் கண்டு பிடிக்கப்பட்டது.. இது உலகம் முழுதும் பத்திரிக்கைகளில் வெளியானது . இது 2300 ஆண்டுகள் பழமை உடைத்து; ஆகையால் அனைவரும் இது எப்படி சாத்தியமானது என்று மீண்டும் வினவத்  துவங்கி விட்டனர் . ஏனெனில் ஏற்கனவே இது போல 300 விதமான உருவங்கள் பெரு நாட்டில் உள்ளன. இதற்கான விடை பாணினி எழுதிய இலக்கணப் புஸ்தக உரையிலும் மஹாபாரத படை ‘வியூஹ’ (Strategic Formations)  அமைப்புகளிலும் உளது.  இதோ முழு விவரம்:–

இதுபற்றி ஆங்கிலத்தில் நேற்றும் அதற்கு முன்தினமும் நீண்ட கட்டுரைகளை வெளியிட்டேன். சுருக்கத்தை மட்டும் அளிக்கிறேன். லண்டன் பழைய புஸ்தக கடையில் 1994-ல் ஒரு புஸ்தகம் வாங்கினேன். அதில் ஆண்டிஸ் மலை அற்புத ஓவியங்கள்– சுவரில் அல்ல – துணியில் அல்ல –  150 சதுரமைல் பரப்பில்- தரையில் வரையப்பட்டது பற்றி நீண்ட ஆராய்சசி உளது. இதில்  படித்த அதிசய விஷயங்கள் :–

எங்கே  உள்ளது?

தென் அமெரிக்க கண்டம் வட அ மெரிக்காவுக்கு கீழே உள்ளது. அங்கும் மத்திய அமெரிக்க நாடுகளிலும் உள்ள மாயா (மயன் Mayan Civilization)  நாகரீக சின்னங்கள் மஹாபாரத கால இந்திய நாகர்களால் உருவாக்கப்பட்டது . இது பற்றி 10 ஆண்டுகளுக்கு முன்னரே இந்த ‘பிளாக்’கில் கட்டுரைகள் எழுதினேன். ஆகையால் பெரு நாட்டு அதிசயம் பற்றி மட்டும் சொல்கிறேன்

***

300 பிரம்மாண்டமான படங்கள்

பெரு நாட்டில் நாஸ்கா (Nazca Lines) என்ற பகுதியில் பல மைல்களுக்கு நேராகச் செல்லும் பாதைகளும் வட்டம், முக்கோணம் போன்ற கணித உருவ (geometrical shapes)  வடிவங்களும் , மீன் பறவை உருவ வடிவங்களும் உள்ளன. நாஸ்கா பகுதி மக்கள் இதைச் செய்ததால் இதை நாஸ்கா (Nazca Culture) கலாசாரம் என்பர்.

***

இதில் என்னஅதிசயம் ?

2300 ஆண்டுகளுக்கு முன் இவை வரையப்பட்டன என்பதை கார்பன் டேட்டிங் (Carbon Dating) முறை உறுதிப்படுத்தியது ; எப்படி ஒரு வித உபகரணமும் இல்லாமல் இப்படி பிரம்மாண்டமான உருவங்களை பூமியில் உண்டாக்கினார்? ஏன் உண்டாக்கினார்கள்?

வேற்று உலக வாசிகளின் (Extra Terrestrials)   விமானங்கள்  தரை இறங்குவதற்காக அயல் கிரக வாசிகளின் உதவியுடன் இதை வரைந்ததாக  ஒரு கொள்கை உண்டு. ஏனெனில் இந்த உருவங்களை விமானத்தில் இருந்து பார்த்தால்தான் காணமுடியும். விமானமும் அதி நவீன வண்டிகளும் இல்லாதபோது இதை எப்படி சாதித்தனர் ?

மற்றும் சிலர் இவை நட்சத்திரங்களுடன் தொடர்புடையவை; வான சாஸ்திர வரை படங்கள் (Astronomical)  இவை என்பர். ஆனால் இவைகளை எல்லாம் அழித்து ஒழித்து நிர்முலமாக்கிய ஸ்பெயின் நாட்டு கிறிஸ்தவ  வெறியர்கள், இவைகள் இந்திய பழங்குடி மக்களின்’ வழிபாட்டுத் தடங்கள்’ ( lines/ routesரூட்ஸ்)  என்று 500 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதி வைத்துள்ளனர் .

இந்த வரைபடக் கோடுகளில் ஆங்காங்கே வாகா (Waqa)  என்ற கற்களை அமைத்தனர். அந்த ‘வாகா’ கற்கள் இருக்கும் இடங்களில் அவர்கள் நின்று வழிபட்டு தியானித்து விட்டுச் செல்லுவார்கள், வீடுகளில் கோணபா (Conapas) என்ற கற்களை வைத்து வழிபடுவர். இவை எல்லாம் இந்துக்கள் வழிபடும் சாளக்கிராமம் , பஞ்சாயதன பூஜையில் வழி படும் பாணலிங்கம், ஸ்படிகலிங்கம் போன்றவை. இவர்களை கிறிஸ்தவ வெறியர்கள் இந்தியர்கள் என்றே 500 ஆண்டுப் புஸ்தகத்தில் எழுதிவைத்துள்ளனர். அசப்பில் பார்த்தால் அஸ்ஸாம் நாகாலாந்து, மணிப்பூர் திரிபுர மக்கள் என்றே நாம் சொல்லுவோம்.

இந்த கல் வழிபாடு இமய மாலையிலும் உண்டு. திபெத்தியர்கள் கருப்பு நிறக் கூழாங்கற்களை அடுக்கிவைத்து கர்மபா (Karmapa stones) என்று வழிபடுவர். சிவலிங்க வழிபாடோ இமயம் முதல் குமரி வரை பல்லாயிரம் கோவில்களில் உண்டு.

இவை அனைத்தும் இந்து மத தாக்கத்தைக் காட்டுகின்றன. இதைவிட பெரிய ஒற்றுமை மச்சுப் பிச்சு (Machu Pichu) வில் இருக்கிறது. உலகம் முழுதுமுள்ள சுற்றுலாப் பயணிகள் செல்லுவது மச்சுப் பிச்சு-வைப்  பார்க்கத்தான். மச்ச புச்சம் – மீன் வால் — என்ற ஸம்ஸ்க்ருதச் (Matsya  Pucha= Fish Tail)  சொல்லை இப்படி மச்சுப் பிச்சு- ஆக்கிவிட்டனர். இமயமலையில் மீன் வால் போன்ற மலைப் பகுதியை ‘மத்ஸ்ய புச்சம்’ (Matsya Pucham)  என்றே அழைப்பர்.

எங்கு நோக்கினும் சம்ஸ்க்ருத சொற்களையும் தமிழ் சொற்களையும் காணலாம். நாசுக்கா பகுதி முழுதும் வறண்ட பாலைப் பகுதி. இதை பம்பா (Pampas)  என்று அழைப்பர். தமிழிலும் பரந்து விரிந்த இடத்தை ‘பம்பை’ என்பர். இது தவிர பம்பா பெயரில் சபரிமலை முதல் இமயமலை வரை பல நதிகளும் உண்டு. நின்று வழிபடும் கற்குவியல் ஒன்றை அவர்கள் தியான (Theana)  என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லால்  அழைப்பர் ; இது போல மூன்று வகை கற்குவியல்கள் உண்டு . நீண்ட கோடுகளை சீக்ஸ் (Ceques)  என்று அழைப்பர். திபெத்திய கர்மபா கற்களை போல வீட்டில் வழிபடும் கற்களை கோனபா என்று அழைப்பதிலும் சப்த ஒற்றுமையைக் காணலாம் ; இப்படி நிறைய ஒற்றுமைகள் காணப்பட்டாலும் முக்கிய ஆராய்ச்ச்சிக்கு  வருவோம்.

மஹாபாரத மர்மம்

மஹாபாரதப் போரில் 18 நாட்களிலும் அமைத்த 18 வகை வியூகங்கள் (Strategic/ Army Formations) இருக்கின்றன. இவை அனைத்தும் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் பாரத பூமியில் நடந்தவை ; இவை பறவை, சக்கரம், முக்கோணம், சதுரம், மீன் வடிவில் அமைந்தவை. இது போல வருண பகவானின் வாகனமான மீன் உருவம் நாஸ்கா பகுதியிலும் உளது. பெரிய சிலந்தி வடிவமும் நாஸ்காவில் உண்டு.

மகாபாரத வியூஹ அமைப்பும் பிரம்மாண்டமானவை. விமானத்தில் இருந்து பார்த்தால்தான் அவை தெரியும். சக்கர வடிவ வியூகத்தில் அபிமன்யு புகுந்து  இறந்ததை உலகமே அறியும். கர்நாடக கோவில் சிற்பங்களிலிலும் உளது.

ஆனால் மஹாபாரதம் சொல்லும் 18 வியூகங்கள் மட்டும்தான் என்று நாம் கருதிவிடக்கூடாது. பாணினி எழுதிய உலகம் போற்றும் இலக்கண புஸ்தகத்துக்கு காத்யாயன வரருசி என்பவர் 2400 ஆண்டுகளுக்கு முன்னர் Marginal Notes நோட்ஸ் – வார்த்திகம் — எழுதினார். அதில் ஒரு இலக்கண விதிக்கு உதாரணம் தருகையில் ‘ஆந்தை வடிவ கட்டிடங்கள்’ , ‘ஆந்தை வடிவ வியூகங்கள்’ என்று எடுத்துக் காட்டுகிறார். ஆக, நாஸ்கா கலாசாரத்துக்கு முன்னரே இப்படி ஆந்தை வடிவ கட்டிடங்கள் இருந்ததையும் அணிவகுப்பு– வியூகங்கள் – இருந்ததையும் இலக்கணப் புஸ்தகத்தில் கூ  ட காண்கிறோம். இதற்கெல்லாம் மூலம் வேதத்தில் உள்ளது.

யாக குண்டங்களை பருந்து வடிவிலும் கொக்கு வடிவிலும் அமைப்பது எப்படி? 10,800 செங்கல்களை என்ன பெயரில் அழைக்க வேண்டும்? என்பனவெல்லாம் வேதத்தில் உள்ளது. கரிகால் சோழன் பருந்து வடிவ யாக குண்டத்தில் யாகம் செய்ததை சங்க இலக்கியத்திலும் படிக்கிறோம். ஆக மஹாபாரத, வேத கால மக்கள் எப்படி பிரம்மாண்டமான உருவங்களை சமைத்தனர்? அவர்கள் ஒவ்வொரு முறையும் விமானத்தில் அல்லது ஹெலிகாப்டரில் சென்று இதைச் செய்யவில்லை. சிறிய வரைபடங்களில் மாதிரிகளை வரைந்து அதை பெரிய அளவில் செய்தனர். இன்றைய சிவில் எஞ்சினியர்கள் பிரம்மாண்டமான கட்டிடம் அணைகள் முதலியவற்றைக் கட்டுவதற்கு முன்னர் ப்ளூ பிரிண்ட் (Blue print Drawings) வரைபடம் வரைந்து அதை செயல்படுத்துவர். வேத நூல்களில்  பிரம்மாணடமான எண்கள் காணப்படுகின்றன. அவர்கள் உலக மஹா கணித மேதைகள். அவர்கள் சொல்லும் சுல்வ சூத்திர  (Sulva Sutra) சொற்களையே எகிப்தியர்களும் பயன்படுத்துவதால் பிரமிடுகள் கட்டவும் நாம்தான் உதவினோம் என்பதை முன்னரே எழுதியுள்ளேன்.

(சுல்வ சூத்ரன் – நூல் பிடிப்போன் . ஒரு நூலில் கீழே உலோக குண்டைக் கட்டி மேலிருந்து கோணங்களை அளப்பது.)

ஆக 10,800 செங்கற்களை பருந்து வடிவிலும் கொக்கு வடிவிலும் அடுக்கி, அடிக்கடி யாகம் செயதோர் தென் அமெரிக்க மக்களுக்கும் சொல்லிக் கொடுத்தனர். அதைக் கொண்டு அவர்கள் நாஸ்கா /பம்பைப் பகுதியில் பிரம்மாண்டமான உருவங்களைச் சமைத்தனர் என்பது என் துணிபு.

இதை உறுதிப் படுத்தும் வகையில் அங்கு சாளக்ராம, பாணலிங்க வழிபாடுகளையும் காண்கிறோம். ஆடு பலி  கொடுக்கும் சித்திரங்களைப் பார்க்கையில் கிராமத்து கோவில்களில் நடக்கும் காட்சிகளும் நம் மனக்கண் முன் வரும்.

ஸ்பெயின் நாட்டு, போர்ச்சுகல் நாட்டு கிறிஸ்தவ வெறியர்கள் தென் அமெரிக்கா முழுதும் இந்திய நாகரிகத்தை அழித்துத் துடைத்து விட்டனர். ஆனால் ஸ்பெயின், போர்ச்சுக்கல் மன்னரிடமிருந்து  பணம் பெறுவதற்காக எத்தனை ஆயிரம் வழிபாட்டுத் தலங்களை ,சிலைகளை உடைத்தோம் என்று பெருமையாக புள்ளி விவரம் எழுதி வைத்துள்ளனர். இவர்கள் 500 ஆண்டுகளுக்கு முன்னர் செய்த அட்டூழியங்களை அவர்கள்  வாய் மூலமாகவே அறிய முடிகிறது . இந்த புள்ளி விவரங்களை ஆங்கிலக் கட்டுரையில் காண்க.

கிறிஸ்தவர்கள் இப்படி அழித்தபோதிலும் காடுகளிலிலும் பூமிக்கடியிலும்  கிடைக்கும் கண்டுபிடிப்புகள் நமக்கு புதிய தகவல்களை அளிக்கின்றன . சென்ற வார பூனை உருவக் கண்டுபிடிப்பு இதை உறுதி செய்கிறது .

மதம்  மாறாத மக்களை எப்படிக் கொன்றோம், கொடுமைப்படுத்தினோம் என்றும் அந்த  மஹா பாவிகள் பட்டவர்த்தனமாக எழுதி வைத்து இருக்கிறார்கள். பெண்களை சூன்யக்காரிகள் என்னு முத்திரை குத்தி எரித்துவிட்டனர். உலகம் போற்றும் ஜோன் ஆப் ஆர்க் எறிந்த கதை அனைவரும் அறிந்ததே.

XXXX

Tags – பெரு, மச்சு பிச்சு, நாஸ்கா, வியூகங்கள், மஹா பாரதத்தில் விடை

Press cutting

2,000 ஆண்டுகள் பழமையான பூனை வடிவத்திலான மலைப்பாதை… பெரு நாட்டில் தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு!

சுமார் 120 அடி நீளம் கொண்ட இந்த மலைப்பாதை இயற்கைச் சீற்றங்கள் மற்றும் கால மாற்றத்தின் காரணமாக மறைந்து போயுள்ளது.

தெற்கு அமெரிக்காவில் உள்ள பெரு நாடு, பழங்கால நாகரீகத்தில் சிறந்து விளங்கும் நாடு. மச்சு பிச்சு போன்ற உலகின் பாரம்பரிய சின்னங்களைக் கொண்ட நாடு, இதற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் பெருவியன் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நாட்டின் புகழ்பெற்ற நாஸ்கா லைன்ஸ் யுனெஸ்கோ பாரம்பரிய தளத்தின் ஒரு சிறிய ஆய்வு செய்யப்பட்ட பகுதியில் 37 மீட்டர் நீளமுள்ள பூனை வடிவிலான பாதையை கண்டுபிடித்துள்ளனர். இது 2,000 ஆண்டுகளுக்கு முன்பானது எனக் கூறப்படுகிறது.

நீளமான உடல், கோடிட்ட வால் மற்றும் தலையில் தனித்துவமான கூர்மையான காதுகளால் ஆன இந்த உருவம், ஹம்மிங் பறவை, சிலந்தி மற்றும் மனிதனை உள்ளடக்கிய சில பிரபலமான புள்ளிவிவரங்களை முன்வைக்கிறது என்று நாட்டின் கலாச்சார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தலைநகர் லிமாவுக்கு அருகே உள்ள மலையில் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பிரம்மாண்ட அளவிலான பூனையின் வடிவம் செதுக்கப்பட்டிருக்கலாம் எனக் கலாச்சார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சுமார் 120 அடி நீளம் கொண்ட இந்த மலைப்பாதை இயற்கைச் சீற்றங்கள் மற்றும் கால மாற்றத்தின் காரணமாக மறைந்து போயுள்ளது. இதனை ஆராய்ச்சி ஒன்றிற்காகச் சுத்தம் செய்யும்போது தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

–subham–

Tags – பெரு, மச்சு பிச்சு, நாஸ்கா, வியூகங்கள், மஹா பாரதத்தில் விடை

கடை – கண்ணி; நகை – நட்டு; ஈவு- இரக்கம் (Post.8854)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 8854

Date uploaded in London – – 25 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அர்த்தமும் அனர்த்தமும்  – அடுக்குத் தொடரும், இரட்டைக்கிளவியும்!-2

கிண்டலும் – கேலியும்

கிண்டல் – ஒருவர் மறைத்த செய்தியை அவன் வாயில் மூலமாகவே

வாங்குவது

கேலி – எள்ளி நகையாடுவது

xxx

ஒட்டு – உறவு

ஒட்டு – ரத்த சம்பந்தம் உடையவர்கள்

உறவு – கொடுக்கல் சம்பந்தமான வகையில் நெருக்கமானவர்கள்

xxx

பட்டி – தொட்டி

பட்டி – கால் நடைகள் வளர்க்கும் இடம் (ஆடுகள்)

தொட்டி – மாடுகள் வளர்க்கும் இடம்

xxx

கடை – கண்ணி

கடை – தனித் தனியாக உள்ள வியாபாரஸ்தலம்

கண்ணி – தொடர்ச்சியாக உள்ள கடைகள், கடை வீதிகள்.

Xxx

பேரும் – புகழும்

பேர் – வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தில் உண்டாகும் சிறப்பு பெருமை

புகழ் – வாழ்வுக்குப் பிறகும் நிலை பெற்றிருக்கும் பெருமை.

xxx

நேரம் – காலம்

நேரம் – ஒரு செயலை செய்வதற்கு நமக்கு வசதியாக அமைத்துக் கொள்வது.

காலம் – ஒரு செயலை செய்வதற்கு பஞ்சாங்க அடிப்படையில் செய்ய முற்படும் கால அளவு.

xxx

பழி – பாவம்

பழி – நமக்கு தேவையில்லாத பொருத்தமில்லாத செயலைச செய்தால் இக்காலத்தில்

உண்டாகும் அவச்சொல்

பாவம் – தீயவை செய்து மறு பிறப்பில் நாம் அனுபவிக்கும் நிகழ்ச்சி

xxx

கூச்சல்– குழப்பம்

கூச்சல் – தன்பத்தில் வாடுவோர் போடும் சப்தம்( கூ- கூவுதல்)

குழப்பம் – துன்பத்தின் மத்தியில் உணடாகும் சத்ததைக்கேட்டு வந்தவர்கள் போடும் சத்தம்

xxx

நகை – நட்டு

நகை – பெரிய அணிகலன்கள்(அட்டியல்,ஒட்டியாணம்)

நட்டு – சிறிய அணிகலன்கள் (மெட்டி, தோடு, மூக்குத்தி)

xxxxx

பிள்ளை – குட்டி

பிள்ளை – பொதுவாக ஆண் குழந்தையை குறிக்கும்

குட்டி – பெண் குழந்தையைக குறிக்கும்

xxxx

பங்கு – பாகம்

பங்கு – கையிருப்பு, பணம், நகை, பாத்திரம் (அசையும் சொத்துக்கள்)

பாகம்- வீடு நிலம் போன்ற அசையா சொத்து

Xxxx

வாட்டம் – சாட்டம்

வாட்டம் – வளமான தோற்றம், வாளிப்பான உடல்

சாட்டம் – வளமுள்ள கனம், தோற்றப் பொலிவான முகம்

xxxxx

காய் – கறி

காய் – காய்களின் வகைகள்

கறி – சைவ உணவில் பயன்படுத்தப் படும் கிழங்கு வகைகள்

xxxx

ஈவு– இரக்கம்

ஈவு – கொடை கொடுத்தல் வறியவர்க்கு

இரக்கம் – பிற உயிர்களின் மேல் அன்பு காட்டுதல்

Xxxx

பொய்யும் – புரட்டும்

பொய் – உண்மை இல்லாததைக் கூறுவது.

புரட்டு – ஒன்றை நேருக்கு மாறாக மாற்றி பொய்யை உண்மை எனக் கூறி நடிப்பது

xxx

சூடு – சொரணை

சூடு. – ஒருவர் தகாத செயல் சொல்லை செய்யும் போது உண்டாகும் மனக்கொதிப்பு

சொரணை – நமக்கு ஏற்படும் மான உணர்வு

                                   ***

tags– கடை – கண்ணி; நகை – நட்டு

சந்தோஷம் அடைவது எப்படி?(Post No.8853)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8853

Date uploaded in London – – 25 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

சந்தோஷம் அடைவது எப்படி?

ச.நாகராஜன்

அருமையான, நல்ல சில கருத்துக்களைத் தரும் சில சுபாஷித ஸ்லோகங்களைக் கீழே  பார்க்கலாம்:

1

சந்தோஷம் அடைவது எப்படி?

லோபமூலானி பாபானி வ்யாத்யயோ ரஸமூலகா: |

ஸ்னேஹமூலாலின் துக்கானி த்ரீணி த்யக்த்வா சுகீ பவ ||

லோபத்தினால் பாவம் ஏற்படுகிறது, ரஸத்தினால் – சாறினால் – வியாதிகள் ஏற்படுகின்றன, ஸ்நேகத்தினால் துக்கம் ஏற்படுகிறது.  இந்த மூன்றையும் துறந்து சந்தோஷமாக இருங்கள்!

Sins are caused by avarice, the diseases are generated from juices, the pain is caused by pleasure – reject these three and be happy. 

                                                                          (Translation by Dr N.P.Unni)

2

பெண் சுதந்திரம்!

பிதா ரக்ஷதி கௌமாரே பர்த்தா ரக்ஷதி யௌவனே |

புத்ரோ ரக்ஷதி வார்தவ்யே ந ஸ்த்ரீ ஸ்வாதந்த்ரயமர்ஹதி ||

குழந்தைப் பருவத்தில் பிதா ரக்ஷிக்கிறார்; யௌவன பருவத்திலோ கணவன் ரக்ஷிக்கிறார்; வயது ஆனவுடன் புத்திரர்கள் ரக்ஷிக்கின்றனர்; ஆகவே ஒரு பெண்ணானவள் ரக்ஷிக்கப்படாமல் இருக்கவே மாட்டாள்.

At the age of childhood she is protected by father, in her youth she is taken care of by husband, in her old age she is looked after by the son – hence a lady should not be left uncared for.

(Translation by Dr N.P.Unni)

3  

ராஜா குலவதுர்விப்ரா மந்த்ரினஸ்ச புரோஹிதா: |

ஸ்தானப்ரஷ்டா ந ஷோபந்தே தந்தா: கேஷா நகா நரா: ||

ஒரு ராஜா, கற்புள்ள குலப் பெண், பிராமணர்கள், மந்திரிகள், புரோகிதர்கள், பொதுவாக மனிதர்கள் அனைவரும் தங்கள் நிலையிலிருந்து இழிந்துவிட்டால். பல், கேசம், நகம் கீழே விழுந்தால் என்ன நிலையை அடையுமோ அதே நிலையை அடைந்து ஷோபிக்க மாட்டார்கள்.

A King, a chase lady, Brahmins, ministers, preceptor, teeth, hair, nails and men in general once they are fallen from their position make no appeal.

(Translation by Dr N.P.Unni)

4

கணஷ: க்ஷணஷச்சைவ வித்யாமர்தமுபார்ஜயதே |

கிம் க்ஷணஸ்ய குதோ வித்யா கிம் கணஸ்ய குதோ தனம் ||

ஒவ்வொரு க்ஷணம் க்ஷணமாக ஒருவன் கல்வியையும் செல்வத்தையும் சேகரிக்க வேண்டும். ஒரே க்ஷணத்தில் கல்வி எப்படி வரும், ஒரே க்ஷணத்தில் செல்வம் எப்படி சேரும்?

By By bits and moments one should acquire knowledge and wealth; how could there be knowledge in a moment and how could there be wealth by bits.

(Translation by Dr N.P.Unni)

tags- பெண் சுதந்திரம், சந்தோஷம்

*

TAMIL WORDS IN ENGLISH – PART 10 (Post No.8852)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8852

Date uploaded in London – –24 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தமிழில் ஆயிரம் ஆங்கிலச் சொற்கள் – Part 10

WORDS BEGINNING WITH ‘G’ ARE GIVEN BELOW

G.1.Games – Gamanam- manam- marriage கமனம் – மணம் – திரு/மணம்

G.2.Gyne- kani , Kanya, kanika கனிகா, கன்யா, கன்னி

G.3.Gymno- ammana அம்மண / அவதூத சந்நியாசி; சமண சந்நியாசி; அலெக்ஸ்சாண்டர் சந்தித்த இந்து சந்நியாசி ஜிம் னோ பொடிஸ்ட் என்று கிரேக்கர்கள் எழுதி வைத்துள்ளனர்

G.4.Grind – arai அரை

G.5.Graph – Varai வரை

G.6.Gr-ace – aasi ஆசி

G.7.Glyph- lipi லிபி

G.8.Garden- kaa, kadam கா/ கடம்

G.9.Garland- haaram in Sanskrit; aaram, Thaar in Tamil தார்,

 ஹாரம். ஆரம்/கடிகாரம் 

G.10.God- gada,Kadavul கடவுள்

G-Inger- inji இஞ்சி

G.11.Gourd – Kaay காய்

G.12.Gorilla- kurangu குரங்கு

G.13.Guard – kaa, kaaththu, kaappaatru கா/காத்து நில்/ காப்பாற்று 

G.14.Giggle – kekkali கெக்கலி

G.15.Gang, gangster- kangkaani கங்காணி

G.16.Gut- Kutal, colon- kuzal குடல்/குழல்

G.17.Garbage – kuppai குப்பை

G.18.Guava Goyya, koyyaa pazam கொய்யா

G.19.Grouse- Kavuthari கவுதாரி

G.20.Guitar – g/kottu vaadhyam; sitar கோட்டு வாத்தியம் /கிதார்/சிதார்

G.21.Globe- kolam கோளம்

G.22.Gain – Keli, jaiyi கெலி/ஜெயி

G.23.Getrink, German- kudu,drink குடி ,

G.24.Growl- kurai sol, Munagu குறைகூறு /முனகு

G.25.Go- jav In Hindi; j= y; Yegu in Tamil போ/ஜாவ்/

G.26.Give – Evu, igai ஈ , ஈகை

G.27.Grab- kaippatru கைப்பற்று

G.28.Grasp – same as above

G.29.Gurgitate – kakku கக்கு

G.30.Gum-gondhu  கோந்து

G.31.Gens/ tribe- ganam in Sanskrit and Tamil கணம்

G.32.Gnome- same as above; ganam, Bhutha ganam பூதகணம்

G.33.Gallon -kol / Kalan கொள்கலன்

G.35.Galleon- kalam/vessel கலம் /மரக்கலம்

G.36.Gavin/ Gwen – Kavin, beautiful கவின் மிகு

G.37.Gwen- ven,white in Welsh வெண் / கவின் மிகு

G.38.Grange – Kalanjiam களஞ்சியம்

G.39.Grime- Karai கரை,

G.40.Goblin/ ghoul- Kuuli கூளி

G.41.Gap – kap/ai, Kavattai, P=v கவட்டை

G.42.Glee- Kali களி

G.43.Gaze – kaatchi, Kaan காண் /காட்சி

G.44.Galvanize – kalakku கலக்கு

G.45. G/OAT – AADU  IN TAMIL ; A/GOAT- AJA IN SANSKRIT

to be continued…..

tags — Tamil words -10

அள்ளிக்குடிக்க தண்ணீர் இல்லை, அவள் பேர் கங்கா தேவி!(Post No.8851)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8851

Date uploaded in London – –24 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அள்ளிக்குடிக்க தண்ணீர் இல்லை, அவள் பேர் கங்கா தேவி  என்பது போல மேலும் 4 வேடிக்கைப் பழ மொழிகள் என்ன என்று கண்டுபிடியுங்கள். அவைகள் கோவணம், ஆண்டி, ஆண்டிச்சி பற்றியவை

1.ஆனைக்கு கோவணம் கட்டினாற்போல

2.ஆண்டி அடித்த பட்டை ஆறு நாள் குளித்தாலும் போகாது

3.ஆண்டிச்சி பெற்றது அஞ்சும் குரங்கு

4.ஆறு காதம் என்கிறபோதே கோவணத்தை அவிழ்த்துக் குடுமியில் கட்டிக்கொண்டானாம்.

tags — கங்கா தேவி, வேடிக்கை, கோவணம், ஆண்டி

HINDUS SOLVE SOUTH AMERICA’S GREATEST MYSTERY-2 (Post No.8850)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8850

Date uploaded in London – –24 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

In the first part of the article posted yesterday we saw the mystery behind Nazca figures and lines. The latest discovery of a huge cat figure last week added one more thing to the mystery. I wrote that there is only one precedence to such huge figures and that is in the oldest and longest epic in the world- Hindu’s Mahabharata. Now I will explain that and add more points from Paninian grammar and Hindu Salagrama worship in South America. When we look at these together with the Mayan civilization’s Hindu connection, we can see the whole of South America and Central America was civilized by the Hindus thousand years before Christopher Columbus. Despite Christian destruction, still we get more and more proofs from dense forests and rom below the earth. (Please read my articles on Mayan civilization – Hindu Naga connection written by me several years ago in this blog).

The strangest and biggest proof comes from Paninian grammar, which itself is a literary wonder . Katyayana’s Vartika on it says that there were owl shaped buildings and owl shaped army formations. When Katyayana commented on Panini’s sutra 4-1-55, he added some examples such as

Uluuka pakshi saalaa- a building constructed in the shape of an owl

Uluuka puchi sena – army formation in the shape of owl tail.

Here I would like to point out a few more interesting facts. Owl is derived from uluka in Sanskrit; budgie is derived from pakshi/bird in Sanskrit.

More interesting coincidence is here Katyayana speaks about Visha puchi – scorpion with poisonous tail. And in South America we have Machu pichu- fish tail. The most famous archaeological site in Peru. We have same Machu pichu in the Himalayas as well . Correct spelling is Matsya Pucha- Fish tail.

So the Sanskrit connection is seen in Matsya Pucha/ Machu pichu in Peru.

In the first part I mentioned the god of the Incas of Peru is Viracocha. Actually he has several titles but the Spaniards gave us only one name.

12 ANGLE REPRESENTS 12 ADITYAS OF VEDAS

Viracocha is called

‘Ilya Tiqsi Wiraquoca  Pacaya caciq’ which means

‘Ancient Foundation, Lord, Teacher of the World’.

He was the supreme Creator Deity of the Incas Actually all these titles go with Lord Vishnu, Brahma and Siva, Hindu Trinity. Incas also has the flood story and creation of human beings from clay. We see such stories in Hindu Puranas.

Vyuhas in Mahabharata

There are at least 18 types of Vyuhas in Mahabharata. To form such huge army formations in bird shapes, geometrical shapes, you need a blueprint/drawing with mathematical precision. Then you execute it in mega scale. Katyayana also speaks of Owl Shaped buildings and army formations that existed before 2400 years ago. That is a few hundred years before the date of Nazca lines and figures. So now the mystery is solved. Like the army engineers and mathematicians of Mahabharata period, Nazca architects or civil engineers did a blueprint/drawing on paper and then made it bigger. They don’t need to fly high at every point to construct such figures.

In short, we may even say that they learnt it from us. Or our people went there and taught them. To support it, I have more evidence from their Saligrama (Fossils with Vishnu’s Chakra figures) worship. Before that let us look at the shapes of Vyuahas/army formations in Mahabharata War:-

Army Formations in Mahabharata


The Mahabharata lists the following 18 battle formations or Vyuhas:

  1. Krauncha vyuha (Heron formation)
  2. Makara vyuha (Crocodile formation)
  3. Kurma vyuha (Tortoise or Turtle formation)
  4. Trishula vyuha (Trident formation)
  5. Chakra vyuha (Wheel or Discus formation)
  6. Kamala vyuha or Padma vyuha (Lotus formation)
  7. Garud vyuha (Eagle formation)
  8. Oormi vyuha (Ocean formation)
  9. Mandala vyuha (Galaxy formation)
  10. Vajra vyuha (Diamond or Thunderbolt formation)
  11. Shakata vyuha (Box or Cart formation)
  12. Asura vyuha (Demon formation)
  13. Deva vyuha (Divine formation)
  14. Soochi vyuha (Needle formation)
  15. Sringataka vyuha (Horned formation)
  16. Chandrakala vyuha (Crescent or Curved Blade formation)
  17. Mala vyuha (Garland formation)

Please go to Mahabharata-research.com for pictures and day to day strategic formations in 18 day war.

My research shows that there were more strategic formations; I have already shown the owl shaped strategic formation from 2400 year old Vartika of Katyayana.

Saligrama – Bana linga Worship

Hindus worship different shaped stones in their Panchayana Puja. In many houses they have Saligrma in their Puja rooms. According to geologists they are ammonite fossils, millions of years old, with different shapes of marine animals. Incas and Tibetan Lamas also worshipped such stones. From Kanyakumari to Amarnath Ice Cave and Kailash in China we see linga shape worshipped for thousands of years. Siva Linga, mostly made up of stone, is the worship of God without form. That is the meaning of round shaped stones.

Nazca people called them Wakas.

Tibetans worshipped smooth black jet stones as Karmapas. We can see many stone piles in the Himalayas even today. Banalinga , Salagrama, crystals are worshipped in orthodox Hindus house even today. In Nazca culture they called them  Wakas. But that is not the only name; they have three different piles of stones . We may not have the same sound as we have in Sanskrit today in their Quecha and Aymara languages. They called them Quontu, Tiyano (Dhyana in Ssnskrit), altipano.

When the villager explained it as the’ place to sit and think’, we understand he meant Dhyana/meditation.

They called the malevolent spirits in mountains as Acasila; achala in Sanskrit means mountain as in Himachala, Venkatachala, Vindhyachala etc.

Household gods were called Conopas (like Sanskrit Ganas or Ganapathy)

One has to study the words in their contexts. We should not just look in dictionary and see the similarities in sound and meaning. When we study them in their contexts, we get full meaning.

My 25 year study

I bought a book on Nazca Lines on 31-3-1994 in a London shop and started marking the similarities when I read other books . Following are my remarks:-

Varuna’s vahana

Varuna ‘s vehicle is a dolphin or fish; we see it among 300 figures in Peru .

Varuna is said to travel on white Makara in the Vedas. It may be a white whale like we see in Moby Dick or a dolphin.

The 140 feet long spider drawing on the Pampa de San Jose is seen on Mycenae pots as well. In fact, lot of similarities are found in Mycenean and Nazca figures, particularly on pots.

Spirals and animals are characteristic deigns of the early phases of Nazca style pottery. More than a hundred spiral patterns are found on potteries.

Ceques

The long lines are called ceques- pronounced as sikh-is. The holy stones called wakas were placed on those lines in an order. Those places were like holy stopping places, to be venerated by all. Hindus also follow an order when they do Parikrama/going round places in a circular route. In Kurukshetra 48  holy places have to be covered. In Kanyakumari district and other places they cover 12 towns running from one place to another within 24 hours. Probably Nazca people also did such Parikramas/Visiting places in a circle. Traditionally Hindus do Rameswaram to Kasi trip in an order.

xxx

Pampa in India and South America

Pampa is a word common in all Indian languages. It refers to rivers in South and North India. And in Tamil it is used for vast dry land. Probably that is the sense in which Incas used the word. Pampa means flat space in their language.

Capuchin

Capuchin monkey figures are seen in Nazca culture; capi/ kapi is a Sanskrit word for monkey.

Christian Atrocities

Christian preachers destroyed most of the old-world artefacts and holy objects. But they have some drawings or descriptions of the things they destroyed or melted if it is made up of gold.

In the early seventeenth  century  the Spanish church in Peru instructed its priests to destroy any symbol of ancient religion, especially the wakas or sacred shrines.

One account from the time of the Viceroy Montesclaros says that 600 idols from Huarochiri were burned in Lima’s public square and an Indian idolater was flogged in viceroy’s presence.

In the years 1617 and 1618, idols and witch hunts were legion. Records show that in one coastal area alone 6000 people confessed to idolatry, 679 sorcerers were discovered and 603 principal wakas were removed with 3418 Conopas.

Conopas are small pebble like things like Banalingas, salagramas of Hindus, worshipped inside the houses.

At the same time Christian priests confiscated 617 mummies as evidence of ancestor worship. All over Peru , the Spanish clergy arrested the native worshippers. Those who refused to become Christians were killed or punished severely. This is from one single report. We have hundreds of reports like this. In short, they destroyed every bit of Nazca culture. South Americans were all called Indians because of their appearance and their idol worship.

A lot of scope is there to compare the Hindu- South American link. Most of the facts are in Spanish and Portuguese books. Some objects and drawings are still available.

Conclusion

Thousands of years before Nazca culture Hindus also formed huge animal figure shaped formation in battle fields; they built animal shaped buildings. The yaga kundas (Fire Altars)  were constructed with 10,800 bricks in eagle shapes in Vedic periods. Saligrama, Banalinga worship of South Americans also is also another proof for Hindu connection. Above all Sanskrit words are seen in South American languages in corrupted forms.

TAGS- NAZCA, PERU, VYUHA, MAHABHARATA, OWL SHAPE

–subham—