கருவூர்ச் சித்தர் வரலாறு! (Post No.8895)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8895

Date uploaded in London – – 6 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

கருவூர்ச் சித்தர் வரலாறு!

ச.நாகராஜன்

கருவூர்ச் சித்தரின் வரலாறு பல அதிசய சம்பவங்களைக் கொண்ட ஒன்று.

கருவூரில் வேதியர் குலத்தில் பிறந்த இந்த சித்தர் பல சமய உண்மைகளை ஆராய ஆரம்பித்தார். பின்னர் சைவ சமயமே சமயம் என்ற முடிவுக்கு வந்தார்.

வேதம் மற்றும் ஆகமங்களின் சாரமான திருவிசைப்பாக்களை பல தலங்களுக்கும் சென்று ஓதி அருளினார். உலகப் போக்கில் வாழ்ந்து வந்த இந்த சித்தர் மாதவம் செய்தாலும் மாதர் பால் இருந்தாலும் தாமரை இலைத் தண்ணீர் போலவே இருந்து வந்தார்.

தல யாத்திரையாகச் சென்ற சித்தர் பாண்டிய நாட்டில் உள்ள திருக்குருகூரைச் சென்றடைந்தார்.

திருக்குருகூரில் எழுந்தருளியுள்ள திருமால் தன் பக்தரின் கனவில் தோன்றி சித்தரை எதிர்கொண்டு அழைத்து வருமாறும் தக்கபடி உபசரிக்குமாறும் கட்டளையிட்டார்.

பக்தர் அவரை எதிர்கொண்டழைத்து உபசரித்தார். மது வேண்டும் என்று சித்தர் சொல்ல காளி அதைக் கொணர்ந்தாள். பின்னர் வன்னி மரத்தை மீன் மழை பொழியச் செய்தார்.

பின்னர் பொதிகை மலை சென்று அகத்தியரைச் சந்தித்தார்.

தஞ்சாவூரிலே பெரிய கோவில் கட்டப்பட்டு வந்த காலம் அது. சிவ பிரதிஷ்டைக்கு மருந்து இளகி இறுகாமல் இருந்தது. இதை எண்ணி எண்ணி மன்னன் வருத்தப்பட்டான்.

கருவூர்ச் சித்தர் வந்தாலன்றி காரிய சித்தி பெற முடியாது என ஆகாயவாணி ஒலி எழுந்தது.

அங்கிருந்த போகநாதர் உருவத்தை மாற்றிக் கொண்டு ஒரு காக்கையின் காலில் சீட்டு ஒன்றை எழுதிக் கட்டினார்.

அதைப் பார்த்த கருவூர்ச் சித்தர் ஆலயத்தினுள் புகுந்தார். தனது தாம்பூல எச்சிலை உமிழ்ந்தார். மருந்தை பந்தனம் செய்தார். அட்டபந்தனம் முடிந்தது.

பல்லாயிரம் பேருக்கு அன்னதானம் செய்வதற்காக அன்னம் தயாரானது. அதைத் தனி ஒருவராக சித்தர் தானே உண்டார். அனைவரும் பிரமித்தனர். ஆனால் அவர்கள் வயிறு அனைத்தும் நிரம்பி விட்டது.

பின்னர் ஸ்ரீரங்கம் சென்றார் சித்தர்.  அங்கு ஒரு பெண் இவரைக் கண்டு காமுற்றாள். அவளையும் சித்தர் திருப்தி செய்தார்.

பின்னர் ரங்கநாதரை அழைத்து விலை மதிக்கவே முடியாத ஒரு மாணிக்க மாலையை வாங்கி அந்தப் பெண்ணுக்கு அவர் கொடுத்தார். கோவிலில் இருந்தோர் இறைவனின் மாலையை தாசி வைத்திருப்பதைக் கண்டு அவளைப் பிடித்தனர். அவளோ ரங்கநாதர் தான் அதைக் கொடுத்தார் என்று கூறினாள்.

அங்கிருந்த அந்தணர்கள் கருவூர் சித்தர் மது, மாமிசம் அருந்துவதாக அரசனிடம் சென்று புகார் செய்தனர். அரசன் தானே நேராக சித்தர் வசிக்கும் இடத்திற்கு வந்தான்.அங்கு பெரியோர் வைத்திருக்கும் உபகரணங்கள் இருந்தன.

அவற்றை உற்று நோக்கும் படி அவர் கூற அவற்றில், அந்தணர்கள் கூறிய படியே அங்கே மதுக் குடங்களும் புலால் உணவும் இருந்தன. இப்படி பல அரிய சித்துகளை அவர் காட்டியருளினார். அனைவரும் அவர் பெருமையை உணர்ந்தனர்.

என்றாலும் கூட, இவரை பெரிய சித்தர் என்று அறியாத அந்தணர்கள் அவரை ஆம்பிரா நதிக்கரைக்குத் துரத்தினார்கள்.

அவர் வெகு வேகமாக ஓடி அங்கிருந்த ஆலயத்துள் புகுந்து சிவபிரானைக் கட்டித் தழுவிக் கொண்டார்.

ஒரு பெரும் ஜோதி தோன்றி அவரைத் தன்னுள் இழுத்துக் கொண்டது.

இந்த வரலாறுகளைப் பல புராணங்களும் தெரிவிக்கின்றன.

திருவாவடுதுறைப் புராணம் கூறும் பாடல் இது:

வாகுறு சோழன் மனமகிழ்ந் திறைஞ்ச வளமிகு மாவுடை யாளோ

டேர்கெழு சிவலங் கம்புணர்ந் தருள வெழில்பேறு மட்டபந் தனநற்

பாகிலை சுவைத்த பசையினை யுமிழ்ந்து பண்பொடு மிறுகிடப் பயிற்றி

மோகமோ டரச நாக்கிய வமுத முழுதுமுண் டுயிர்தோறு நிரப்பி  ..

                 -திருவாவடுதுறைப் புராணம்

கரூர்ப் புராணம் கூறும் பாடல் இது:

என்றவர் கவலித் துட்க வேய்ந்து சிற்றிலைக டுற்று

நின்றதோர் வன்னி தன்னை நீதரு கென்ற போழ்தின்

மின்றறு வானம் பூத்த மீனில மெய்த லேய்ப்ப

வன்றளித் ததுயார் மேலோர் கருத்தினை யளவு காண்பார்

  • கரூர்ப் புராணம்

இப்படிப்பட்ட பெரும் சித்து விளையாடல்கள் செய்து அருளிய கரூர்ச் சித்தர் கொங்குமண்டலத்தைச் சேர்ந்தவரே எனப் பெருமையுடன் கூறுகிறது கொங்கு மண்டல சதகத்தின் பாடல் எண் 34.

பாடல் இதோ:-

வாய்த்தம் பலவெச்சி லாலட்ட பந்தன மாண்புறமீன்

காய்த்து மாஞ்சொரி யச் செய்து பத்தி கனிந்து செந்தேன்

தோய்ந்த திருவிசைப் பாப்பா டொருசித்தர் தோன்றிவர

வாய்த்த கருவூர்ப் பதிசேர்வ துங்கொங்கு மண்டலமே

பாடலின் பொருள் :

தம்பல எச்சிலால் அட்ட பந்தனம் இறுகவும், மரம் மீன் காய்த்துச் சொரியவும், பக்தி கனிந்த திருவிசைப்பா ஓதி அருளிய கரூர்ச் சித்தர் பிறந்ததற்கு வாய்ப்புற்ற கருவூர் சேர்வதும் கொங்குமண்டலமே என்பதாம்.

கருவூர் கொங்கு மண்டலத்தை சேர்ந்த ஊர் என்பதில் தான் எத்தனை பெருமை அடங்கியுள்ளது!

tags–கருவூர்ச் சித்தர்

***

மரத்துக்கான மனிதர் யார்? கடவுள் யார்?(Post No.8894)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8894

Date uploaded in London – –5 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இதோ சில மரங்களும் தாவரங்களும்- அவைகளு டன்  தொடர்புடைய மா மனிதர்கள் அல்லது கடவுளர் யார் யார் ? விடைகள் கீழே உள்ளன ?

1.மகிழ மரம் —

2.குருந்த மரம் —

3.வன்னி மரம்

4.அசோக மரம் –

5.கோவிதார மரம்/ ஆத்தி–

6.பனை மரம் –

7.ஆல மரம்—

8.புளிய மரம், வட இந்தியா–

9.புளிய மரம், தென் இந்தியா

10.அரசமரம்

11.வில்வ மரம்

12.இலந்தைமரம்

13.கடம்ப மரம்

14.மாமரம் , தென் இந்தியா

15.அருகம்புல், எருக்கு

16.வெற்றிலை

17.வேப்பமரம்

18.மாமரம் , வட இந்தியா

ANSWERS—

1.சுந்தரர் ; 2.மாணிக்க வாசகர் ; 3.பாண்டவர் ; 4.சீதை;  5. பரதன், சோழர்கள்

6.பல ராமன் ; 7.தக்ஷிணாமூர்த்தி ; 8.தான்சேன்; 9.நம்மாழ்வார் ; 10.புத்தர்;  11.சிவன் ; 12.சபரி ;13.முருகன், மதுரையில் சிவன் ; 14.ஏகாம்பரேஸ்வர், காஞ்சி ; 15.விநாயகர் ;16.ஆஞ்சனேயர் ; 17.மாரியம்மன்;  18.ஆம்ர பாலிகா , மாந்தோப்பை புத்தருக்கு தானம் செய்த நடன மங்கை

 tags — மரம் மனிதர், யார், கடவுள்

—subham—

MEEN/FISH IN RIG VEDA IS NOT A TAMIL WORD!! HINDUS DID NOT COME FROM WEST!!(Post.8893)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8893

Date uploaded in London – –5 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

I WANT TO EXPLODE TWO HYPOTHESES.

1.MIN OR MEEN/A IN THE RIG VEDA IS NOT A TAMIL WORD; I HAVE ALREADY SHOWN NEER/WATER IS NOT A TAMIL WORD BECAUSE IT IS IN ANCIENT GREEK (NEREIDS- WATER NYMPHS; NARAYANA- GOD WHO HAS ABODE IN WATER IS IN HINDU SCRIPTURES)

2.THE ACCEPTED THEORY IS THAT MEN MARCHED FROM WEST TOWARDS EAST AND FROM NORTH TOWARDS SOUTH.

THESE TWO ARGUMENTS MUST BE BINNED AND THE REASONS ARE GIVEN BELOW:-

Greek is an ancient Indo- European language closely related to its oldest sister Sanskrit; Latin comes next. So any word found in them is of Sanskrit origin. Nereids has the root Neer, the word for water in Tamil

And I found now, from 2700 year old Ashtadhyayi of Panini , that the root word for Meena is also there in Sanskrit.

Sutra 5-4-6 says ‘visaarino matsye’

Vaisaarinah – fish (Poissons in French; pronounced ‘pwaason’)

Visaarin- slippery, slip from your hand

V= P or F

Visarinah= Pisces

Pisces – fish

Fish- Mish, Meen

When there is no hissing S or H or G or J, Tamil takes different sounds to replace it. It takes liberty to form its own phoneme.

Tamil is a defective language because one can’t bring out the same sound that exists in other languages. It may be true with other languages as well. But Tamil lacks lots of Phonemes and so they can’t express all the sounds in Indo European or Semitic languages.

Sanskrit is the only ancient language that can express all the  sounds up to 95 %. It lacks only short ‘e’ and short ‘o’

Xxx

How Visarinah becomes Pisces and Pisces becomes Meen?

V = F or P and V=M (some are Sanskrit words; but my thesis  is Tamil and Sanskrit belong to the same Language family and Sanskrit is the closest relative of Tamil)

V= M (Tamil Words)

Viruga – Miruga (Manikkavasagar’s Thiruvasagam)

Maari – vaari (Mare in Latin is sea, Vaaridhi in Sanskrit also sea)

Maanam – Vaanam/sky

Muli/muzi- Vizi, Vili (pupil of the eye)

Melaa – Vizaa / vilaa/festival

In short, apply the rule M=V=P/F

Poison – Visham

Pan- Vaanali (pan for frying)

Pose – Vesha

Palliative/ Pain – Vali in Tamil

Fridge – Viraittal (get frozen)

Worm/ Vermi – Puzu/pulu/worm

Vogue – Pazakkam also Vazakkam (habit, custom)

xxx

FUTURE TENSE IN TAMIL

Not only this ; in Tamil future tense can only formed either with P or V.

Tamil Root stem takes either P or V and form future tense.

Ex . Varu’V’aan- he will come

Un’P’aan- he will eat.

So my argument is Vaisarina and Visarin becomes Fish and Pisces (Fish) that becomes Min/ Meen.

Xxx

EAST OR WEST??

Men might have originated in Africa millions of years ago and might have moved in different directions.

But civilisation moved from East to West.

Indra is the foremost God in the Rig Veda, the oldest book in the world. It means leader, a title like Pope, Dalai Lama, King, leader.

1.He is allocated East; it means he belongs to East

2. When the Vedic Hindus listed all the rivers, they begin from Ganga and comes up to Sindhu. This shows their Eastward March

3.Above all, Purva (First, Original, Fore father) dik means East. It is not because Sun rises in the East. They call Purana= old myth; pre- purva- fore(noon) as First.

Purveeka means ancestry

2700 year old Ashtadhyayi of Panini also talks about it with the above meanings. 30,000 to 40,000 year old paintings have been discovered in Bhimbetka which is deep inside India and deep inside thick forest. That shows humans lived and developed civilization from Central India.

Here are two Panini Sutras:

Puurvi –  one who has gone there first 5-20-86

xxx

Sutra 5-4-8 is about dik or directions

Praacheena is Old and  East

One example is also given by commentators-

Praacheena dik ramaneeyam – eastern direction is beautiful.

That shows the appreciation of East

All these roots pura, puurviika, praacheena show that they held East in high esteem.

Hindus marched towards West from East and spread civilization to Middle East, Iran and Europe.

They went downwards towards South and established Mayan, Aztec, Olmec, and Inca civilizations in the Americas both North, Central and South Americas.

Mr Wakankar has shown the customs of Red Indians and Hindus are similar in many respects.

tags– fish, meen, meena, Hindu March, East to West

— subham—

இரண்டு கை தட்டி பாராட்டினான் – இறந்தான் கலைஞன் கொசு! (Post.8892)

COMPILED  BY KATTUKKUTY

Post No. 8892

Date uploaded in London – – 5 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

புத்தி புகட்டும் பொன் மொழிகள்

Compiled by Kattukutty

ஏழைக்கும் பணக்காரனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன???

ஏழை நம்ம வீட்டுக்கு வந்து கடன் கேட்பான்

பணக்காரன் அவன் வீட்டுக்கு நம்மை வரவழைத்து கடன் கேட்பான்!!!

XXXX

வாழ்க்கை என்பது அளவு போதாத போர்வை……

தலைக்கு மேல் இழுத்தால் கால் குளிரும்,

காலை போர்த்திக் கொண்டால் தலை சில்லிட்டு விடும்…..

புத்திசாலி போர்வைக்குள் உடம்பை சுருட்டிக் கொண்டு

சுகமாய் தூங்குவான்!!!

XXXX

கைகளைக் கொண்டு உழைப்பவன் பாட்டாளி!!!

கைகளையும் மூளையையும் பயன்படுத்தி உழைப்பவன்

தொழில் வினைஞன்!!!

கைகள், மூளை, இவற்றுடன் இதயத்தையும் செலுத்தி

உழைப்பவன் கலைஞன் !!!

XXXX

இருவரை ஒருவராக்கும் அறை எது???

பெட் ரூம் !!!

ஒருவரை இருவராக்கும் அறை எது ???

பிரசவ அறை !!!

XXXX

நீண்ட நாள் உயிரோடு இருக்க என்ன வழி!!!

வேறென்ன, சாகாமல் இருப்பதுதான்!!!

XXX

பேருந்தில் சிதறியது நாணயங்கள்,

தேடலுக்குப் பின் கிடைத்து சில நாணயங்கள்,

தொலைந்தது சிலர் நாணயங்கள்……….

XXX

C B I

எனக்கு எப்ப விடுதலை என்று கேட்டது கூண்டுக்கிளி

பக்கத்து ஜோசியக் கூண்டுக் கிளியிடம்!!!

XXX

எவரொருவர் ஊதியத்தில் வியர்வை வாடை வீசுகிறதோ

அதுவே உழைப்பூதியம்!!!

மற்றதெல்லாம் ஏய்ப்பூதியம்………

XXXX

வாழ்க்கையில் வெற்றி பெற நண்பர்கள் தேவை…..

ஆனால் வாழ்க்கை முழுவதும் வெற்றி பெற எதிரிகள் தேவை!!!!

XXXX

இரண்டு கைகள் தட்டி

பாராட்டியதில்

இறந்து போனது

இம்சைக் கலைஞன் கொசு!!!

XXX

வெட்டுப்பட்ட கடாவைப் பார்த்தது

அய்யனாரின் நிமிர்ந்த வாள்!!!

XXXX

வீட்டிற்குப் பெயரோ அன்னை இல்லம்

அன்னை இருப்பதோ முதியோர் இல்லம்

XXXX

மாங்கல்யத்தின் மகிமையை

மனைவி அறிவாள், மணவாளன் அறிவான்,

மார்வாடியே அதிகம் அறிவான் !!!

XXXX

ரேஷன் கடைக்காரருக்கு

குழந்தை பிறந்தது எடை குறைவாக……..

XXXX

மகனின் மாற்றத்தை திருமணத்திற்கு பிறகு உணரலாம்,

மகளின் மாற்றத்தை வாலிப வயதில் உணரலாம்,

கணவனின் மாற்றத்தை மனைவியின் நோயின் போது உணரலாம்,

மனைவியின் மாற்றத்தை கணவனின் வறுமையில் உணரலாம்,

நண்பனின் மாற்றத்தை துன்ப காலத்தில் உணரலாம்,

சகோதரனின் மாற்றத்தை சண்டையில் உணரலாம்,

சகோதரியின் மாற்றத்தை சொத்துப் பரிமாற்றத்தில் உணரலாம்,

பிள்ளைகளின் மாற்றத்தை நமது முதுமை காலத்தில் உணரலாம்.

COMPILER KATTUKUTY

tags-  கலைஞன் கொசு, புத்தி ,பொன்மொழிகள்

***

OCTOBER 2020 S. NAGARAJAN’S TAMIL ARTICLES INDEX (Post No.8891)

WRITTEN BY S NAGARAJAN                                    

Post No. 8891

Date uploaded in London – – 5 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

அக்டோபர் 2020 இல் வெளியாகியுள்ள ச.நாகராஜன் கட்டுரைகள் பற்றிய குறிப்பேடு.

October 2020

1-10-20     8758  மஹரிஷி ஆபஸ்தம்பர் – 2

1-10-20     8759 தலையாய ஹிந்து மகனை – முன்னணி தலைவரை

             இழந்தோமே! 

2-10-20     8763   மஹாத்மா போற்றிய கீதையும், காயத்ரியும், ஈசோபநிஷத்தும்

3-10-20     8767   Index of articles of S Nagarajan September 2020

4-10-20     8771   பதினெட்டு புராணங்களின் சாரம் இரண்டே வரிகளில் (சுபாஷித

             ஸ்லோகங்கள்)

5-10-20     8774  ஜோதிடர் இல்லாத ஊரில் வசிக்காதே!

6-10-20     8780   கோயில், கோவில் இரண்டில் எது சரி – ஞானமயம்  5-10-20

               உரை

7-10-20    8784   மந்திரங்களைத் தவறாக உச்சரித்தால் பாதிப்பு வருமா –

             ஞானமயம் 5-10-20 உரை

8-10-20    8788   விரத காலங்களில் ஏன் அசைவ உணவை உண்ணக் கூடாது?

             (ஞானமயம் 5-10-20 உரை)

9-10-20    8791   ஜோதிடம் பற்றி யுதிஷ்டிரருக்கு நாரதர் கூறியது என்ன?     

10-10-20  8794  வாலிப காசி எங்குள்ளது? (கொங்குமண்டல சதகம் பாடல் 14)

11-10-20  8798  ஹிந்து விரோத செகுலரிஸம் தேவையில்லை!

12-10-20  8801  கண் திருஷ்டியைத் தவிர்க்க என்ன செய்வது – 1 -ஞானமயம்

             12-10-20 உரை

13-10-20  8804  கண் திருஷ்டியைத் தவிர்க்க என்ன செய்வது – 2 -ஞானமயம்

            12-10-20 உரை

14-10-20  8810  தமிழில் பகவத்கீதையைப் படிக்க எந்த நூல் சிறந்தது? ஞானமயம்

            12-10-20 உரை)

15-10-20   8813   இந்தியாவே, லெபனானிடமிருந்து பாடம் கற்பாயா?

16-10-20  8817  ஒரு திருப்புகழில் இரு திருப்புகழ் பாடல்கள் – 2

17-10-20  8821 வறுமையை ஒழிக்க உலக வறுமை ஒழிப்பு தினம் – கோகுலம்

            கதிர் அக்டோபர் 2020 கட்டுரை

18-10-20 8824  ஒரு திருப்புகழில் இரு திருப்புகழ் பாடல்கள் – 3

19-10-20 8827 நோய்களைத் தீர்க்கும் நவரத்தினங்கள் – ஹெல்த்கேர் அக்டோபர்

            2020  கட்டுரை

20-10-20  8830 பாரதியார் பாடல்களில் ஆரிய என்ற சொல் – 1 ஞானமயம்

            19-10-20 உரை

21-10-20 8833  பாரதியார் பாடல்களில் ஆரிய என்ற சொல் – 2 ஞானமயம்

            19-10-20 உரை

22-10-20 8838 மஹரிஷி அபாந்த்ரதமஸ் (ஸரஸ்வத் என்ற வியாஸர்)

23-10-20  8843  பாரத ஸ்தலங்கள் – 12   (மொத்த ஸ்தலம் 2380)      

24-10-20  8848 முட்டை என்று தன் பெயரைச் சொன்ன முருகனின் அருள்

             விளையாடல் (கொங்கு மண்டல சதகம் பாடல் 97)

25-10-20  8853  சந்தோஷம் அடைவது எப்படி? (சுபாஷித ஸ்லோகங்கள்)

26-10-20  8856  வீர் ஜெயத் திருப்புகழும் மந்திரத் திருப்புகழும்!

27-10-20  8859  பாஸ்கரராயரின் ‘சௌபாக்ய பாஸ்கரம்’ – 1 (ஞானமயம் 26-10-20   

            உரை)

27-10-20  8862 தேசத்துக்கு உழைத்த ஒரு நல்ல தேசபக்தரின் மறைவு! 

28-10-20  8864  அன்றாட வாழ்க்கை – சம்பாதிக்க வழிகள் இதோ! (மாலைமலர்

              10-10-20இல் வெளியான கட்டுரை)

29-10-20  8868 பாஸ்கரராயரின் ‘சௌபாக்ய பாஸ்கரம்’ – 2 (ஞானமயம் 26-10-20   

            உரை)

30-10-20 8871  சுபாஷித நூல்களின் பட்டியல் – 1 (15873 ஸ்லோகங்கள்)

31-10-20 8874  அயோத்யா – சில உண்மைகள் – 1

 tags- October2020, Nagarajan

***

JOIN US TODAY- THURSDAY 5TH NOVEMBER 2020

TAMIL SCHOLAR OF PROJECT MADURAI AND A SCIENTIST, LAUSANNES, SWITZERLAND

JOIN US TODAY- THURSDAY 5TH NOVEMBER 2020

PLEASE JOIN US FOR THAMIZ MUZAKKAM  LIVE BROADCAST VIA ZOOM AND FACEBOOK.COM/GNANAMAYAM AT 1 PM LONDON TIME, 6-30 PM INDIAN TIME FOR

DR K KALYANA SUNDARAM’S TALK ON ‘PROJECT MADURAI’- A GREAT WEBSITE WITH ALL THAT IS IN TAMIL LITERATURE; HE IS A SCIENTIST FROM SWITZERLAND

THIRUPPUGAZ BY MRS JAYANTHY SUNDAR AND GROUP

ALVAR PASURAM BY MRS DAYA NARAYANAN

TAMIL AND BHARATI SONGS FROM MRS HARINI RAGHU, MR SATHYARTHEE CHANDRASEKARAN, MRS SARASWATHY CHANDRASEKARAN

DEVOTIONAL PRAYER FROM LONDON BALASUBRAHMANYAN

WITH CO PRODUCERS OF THAMIZ MUZAKKAM MRS VAISHNAVI ANAND, SRI KALYANASUNDARA SIVACHARYAR, HARROW SRIDHAR

–LONDON SWAMINATHAN, PRODUCER, GNANA MAYAM, LONDON

பெரிய கப்பலை சிறிய ஓட்டையே மூழ்கடிக்கிறது (Post No.8890)

COMPILED  BY KATTUKKUTY

Post No. 8890

Date uploaded in London – – 4 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

புத்தி புகட்டும் பொன் மொழிகள்

Compiled by Kattukutty

புத்திமதி என்பது விளக்கெண்ணெய் போல……..

சொல்வது சுலபம், உள்ளே எடுத்துக் கொள்வது தான் கஷ்டம்…….

XXX

உலகில் மகிழ்ச்சியைப் பெருக்க ஒரே வழி, அதை அனைவருடனும்

பகிர்ந்து கொள்வது தான் !!!

XXX

முதுமை தான் மனிதனுக்கு ஏற்படக்கூடிய மிகப் பெரிய கொடுமை…..

பிற கொடுமைகளெல்லாம் நாளாக நாளாக மறைகிற போது

இது மட்டும் வளர்ந்து கொண்டே போகிறது……….

XXX

வராந்தாவிலிலிருந்த வயதான தந்தை

ஹாலுக்கு வந்தார் புகைப்படமாய், இறந்த பின் !!!

XXX

ஒரு ரகசியத்தை ரகசியமாக வைத்திருக்கும் வழி, அது ரகசியமான

விஷயம் என்பதை ரகசியமாக வைத்திருப்பதுதான்!!!!

XXXX

பறித்த மலரை ஆண்டவனுக்கு வைத்தாலென்ன,

கல்லறையில் வைத்தாலென்ன,

மலருக்கென்னவோ பறித்தவுடன் வந்தது மரணம்!!!

XXX

பெரிய கப்பலை சிறிய ஓட்டையே மூழ்கடிக்கிறது.

சில்லறைச செலவுகளில் எச்சரிக்கையாய் இரு….

XXXX..

கடவுள் பாவத்தை மன்னித்து விடுகிறார்…….

இல்லாவிட்டால் சொர்க்கம் முழுக்கவே காலியாக இருக்கும்!!!!

XXX

நாம் இளமையின் ரகசியத்தை புரிந்து கொள்ளுமுன் அது நம்மை

கடந்து போய் விடுகிறது …………

XXX

வானத்தில் நட்சத்திரமாக ஜொலிக்கா விட்டாலும் உன் அறையில்

சிறிய விளக்காகவாது இரு………….

XXXX

சர்க்கரை இல்லை, கொழுப்பு இல்லை

எஜமானோடு வாக்கிங் போகுது ஜிம்மி (DOG) !!!

XXX

இந்த உலகத்திலேயே மிகவும் மலிவாக கிடைக்கும் சரக்கு

அன்பு தான்!!!

அது வாங்குபவனைக் காட்டிலும்,கொடுப்பவனுக்கே

பல மடங்கு லாபம்!!!

XXX

பிறர் உன்னைப் பார்க்க வேண்டுமானால், எழுந்து நில்,

கேட்க வேண்டுமானால் பேசு,

உன்னைப் பாராட்ட வேண்டுமானால், வாயை மூடு!!!!

XXXX

பெரிய மனிதனாக பிறப்பது ஒரு நிகழ்ச்சி

பெரிய மனிதனாக இறப்பது ஒரு முயற்சி

XXX

களை – வயலில் இருந்தால் பிடுங்கி எறிகிறோம்

களை – முகத்தில் இருந்தால் சந்தோஷப்படுகிறோம்!!!

XXX

ஐந்நூறு பக்கங்கள் உடைய ஒரு புத்தகத்தைப் படிக்க

எவ்வளவு நாளாகும்???

எழுத்தாளர் – ஓரு வாரம்

மருத்துவர் – இரண்டு வாரங்கள்

வக்கீல் – ஒரு மாதம்

மாணவன் – ஓரே இரவு போதும்

(அதுவும் பரிட்சைக்கு முதல் நாளிரவு)

XXXX

நேற்றை விட நாளை நன்றாக இருக்க வேண்டுமானால்,

இன்று ஏதாவது உருப்படியாகச் செய் !!!

XXX

பணமும் சந்தோஷமும் ஜன்ம விரோதிகள்

ஒன்று இருக்கும் இடத்தில் மற்றொன்று இருப்பதில்லை!!!!

XXX

சாதம் சமைக்க இது அவசியம் தேவை ,

“அ “வில் ஆரம்பிக்கும் அது எது???

நீங்கள் நினைத்தது தப்பு………

விடை- அப்பா!!!!

PICTURE OF KATTUKUTY

XXXX XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

TAGS– பொன்மொழிகள், பெரியல்,  சிறிய ஓட்டை

TAMIL WORDS IN ENGLISH – PART 18 (Post No.8889)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8889

Date uploaded in London – –4 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தமிழில் ஆயிரம் ஆங்கிலச் சொற்கள் – Part 18

Words beginning with – M continued………………………..

M.27. MATIN, MATINEE SHOW – AFTERNOON PERFORMANCE

MATHIYAM, MATHYAANAM IS COMMONLY USED IN TAMIL AND OTHER INDIAN LANGUAGES. IT IS A TAMIL-SANSKRIT WORD. SEE THE NEXT WORD MIDDLE.

மதியம் , மத்தியானம்

M.28. M/ IDDLE- MADHYA IN SKT. AND IDAI IN TAM. , மிடில்= மி/ இடை

IDAI MEANS MIDDLE. THIS IS HOW THE SAME ROOT GIVES TAM. AND SKT. WORDS

M.29. MATHES IN POLYMATH; IT IS A TAM-SKT WORD IN GREEK LANGUAGE

POLY – PALA/ MANY; PALA IS TAMIL பாலி .கிரேக்க மொழி- பல

மாத்- மதி/அறிவு (தமிழ்/சம்ஸ்க்ருதம்)

பாலி = பல = மெனி /ஆங்கிலம் ; ப = ம, வ

MATHES – MATHI/KNOWLEDGE; MATHI IS IN TAM. AND SKT MEANING KNOWLEDGE AND MOON (IN TAMIL)

IN TAMIL ‘PALA KATRUM’ MEANS STUDIED MANY (SUBJECTS)

M.30. MEDI TERRANEAN – MATHYA/MIDDLE; TERRA- THARAI, DHARANI IN TAM. SKT மத்திய- தரை – கடல் = மத்திய (முன் விளக்கம் காண்க); தரை – தமிழ்; தரணி /சம்ஸ்க்ருதம்

M.31. MENSES – MONTHLY PERIOD; MENSES COMES FROM MAASA WHICH BECOMES MAA’THA’M IN TAM.

IN TAMIL AND ENG. IT GETS TH SOUND

VAYASA – BEOMES VAYA’THU’ IN TAM.

IN SHORT, YOU CAN SEE ALL SION BECOME TION VICEVERSE

TION – SION IN ALL ENG. WORDS TION IS PRONOUNCED AS SION.

மென்சஸ், மென்ஸ்ட்ருவேஷன் – மாத விலக்கு . இதிலும் மாதம் என்ற சொல்லிலும் மாத = மாச என்பதைக் காண்க. சம்ஸ்கிருதத்தில் S ச- தமிழிலும் ஆங்கிலத்திலும் T த — வியப்பான ஒற்றுமை!

ஆங்கிலத்தில் TION தி ஐ ஓ என் என்று எழுதினாலும் SION ஷன் என்றே படிக்கவேண்டும்; T த = S ச  ; இதை வயது என்பதிலும் காணலாம். –வயஸ – சம்ஸ்கிருதம் – வயது- தமிழ் ; மாச- சம்ஸ்கிருதம் – மாத தமிழ்; MONTH மந்த் ஆங்கிலம்.ச=த்

M.31. MENSTRUATION, MENSES ALL CONNECTED MONTH

M.32. MERGE – MULGU/ DROWN, SINK AS IN SUB MERGE மூழ்கு ,

M.33. METRE – MAATRA= MEASUREMENT; USED IN TAM AND SKT. GRAMMAR  மாத்ரை – தமிழ், சம்ஸ்க்ருதம்= அளவு ;

மாண – அளவு; இரு மொழிகளிலும்;

மான = பண = மணி /ஆங்கிலம்.

மனா – சுமேரிய நாணயம்;

மணங்கு – தமிழ் அளவு; ப =ம =வ

M.34. MICERE/ MIX – EGYPT IS CALLED MISRA/ MXED DESA/COUNTRY BECAUSE OF LOT OF RACES IN EGYPT. மிஸிர நாடு – எகிப்து (பாரதி பாடல் காண்க)

மிஸிர – மிக்ஸ்/ஆங்கிலம்; கலப்பின மக்கள் வாழும் நாடு

M.35. MELODIOUS/MELLIFLUOUS – MENMAI/ SOFTNESS

M36. MELLOW, MOLLIS MELODY – ALL MEL/LLIYA, MEN- MAIYANA

மெல்லிய, மென்மையான, மெலிந்த

M.37. MORI/DEAD; TAMIL MARI மறி , மறித்தான்; ம்ருத்யூ /சம்ஸ்க்ருதம்; மார்ட ல் /ஆங்கிலம் ; மரணம்/ சம்ஸ்க்ருதம்

M.38. MORTAL/DEAD ; TAMIL MARI AND SKT. MRTYU

IT IS FROM MRTYU IN SKT; IN TAMIL IT BECOMES – MARI/DEAD

MARITTAN = DEAD, MARANAM ATAI- DEAD

M.39. MOAT – MATHAKU, MATHIL மதில், மதகு

M.40.MONKEY – MANTHI மந்தி

KAPI IS ALSO MONKEY K/APE BECOMES APE DROPPING K

MANTHI BECOMES MANTHI

மந்தி, கபி = கவி ; K/ APE ஏப் /ஆங்கிலம்; முதல் க மறைவு

M.41. MOURN – MUNAKU, MUNU MUNU முனு முனு , முனங்கு,, மௌனமாகு

M.42. – MANICURE – PAANI/ HAND CURE; MANIKKATTU மணிக்கட்டு IS WRIST.

THAT SHOWS TAM. HAS ALSO GOT MANI/ HAND

MANI/HAND IS DERIVED FROM PAANI/HAND OF SKT. மாணி = பாணி= கை

பாணிக்ரஹணம்= கைப்பிடித்தல்= கல்யாணம்

பண்ணு /செய்/ கையால் செய் என்னும் தமிழ் வினையுடன் தொடர்புடையது

PANI GRAHANA IS ‘HOLDING HAND’ WHICH MEANS MARRIAGE.

M.43. MURMUR, MOAN- MUNU MUNU, MUNAGU, முனு முனு , முனங்கு

M.44- MAGI – MAHASAYA ;LAHIRI MAHASHAYA WAS A HINDU SAINT மாகி= மஹாசய (புகழ் பெற்ற லாகிரி மகா சய );

M.45. MUNIR/ MUNICIPHANT/  MUNIFICIENT – BOUNTIFUL; MONEY FULL?? முனி = மணி/பண ; பண உதவி; தாராள???

M.46. MANUAL BECONES PANUAL IN TAMIL; BOTH MEANS BOOK; COLLECTION OF MANUSCRIPTS மானுவல்= பனுவல் ; மான்ஸ்க்ரிப்ட்- கையால் எழுதிய ஓலைச் சுவடிகளின் கட்டு / புஸ்தகம் ; நூலால்/ சூத்ர கட்டப்பட்டது = நூல்

M.47.MANUSCRIPT – SEE ABOVE

M.48. MANGO – MAANGAI; மாங்காய்

M.49. MAN- URE – MAN- URAM மண் உரம்

M.50.MUD – MRD IN SKT.; MANN IN TAM மண்- ம்ருத் -MUD மட்/ஆங்கிலம்

M.51. MUCH, MORE – MIKA, MELUM; R=L மிக, மேலும்

M.52.MUTE – MUTA/DISABLED IN TAM; MUKA IN SKT; UUMAI IN TAM. முட /மூட ; மூக்கை /மூங்கை /சம்ஸ்க்ருத மூக = ஊமை

M.53. M/UNDANE – MANPATHAI IN TAM. ANDA IN SKT; M DROPPED மண்டேன் – மன்பதை, ம/அண்ட

M.54. MARIGOLD – MARI KOLUNTHU மரிக்கொழுந்து

M.55. MILAGU TANNI IN OXFORD DICTIONARY- MILAKU= BLACK PEPPER; TANNI= THANNEERR/WATER மிளகு தண்ணீர்= ரசம்

M.56. MILD- MELLIYA, MRDU IN SKT; MEN, MEL IN TAMIL மெல்லிய, மெது, மெத்து, 

M.57. MAIGIC- MAYIK; G/J= Y; MAAYA IN BOTH TAM. AND SKT

IT IS IN TIRUKKURAL AND SANGAM TAMIL LITERATURE மாஜிக்- மாய ஜ =ய

M.58.MA/TRIMONY –  TIRUMANAM திருமண

M.59.MATURE – MUTHIR; MUTHIRCHI முது, முதிர்ச்சி , மெத்தூசலா /பைபிள்

M.60.MACHO – MACHAAN IN TAM; MAITHUNA IN SKT.

AGGRESSIVE, PROUD MAN IN MACHO IN ENGLISH

TAMILS CALL OTHER MEN AS MACCHHAAN IN A FRIENDLY, TEASING WAY.

VAANGA MACHAAN VAANGA, UNGA VAZIYAIP PAARTHU PONGA IS A FAMUS FILM SONG. மச்சான்; மைத்துன /சம்ஸ்க்ருதம் .

வாங்க மச்சான் வாங்க ; வந்த வழியைப் பார்த்துப் போங்க – சினிமா பாட்டு

M IS A LONG LIST

TO BE CONTINUED………………………………………

tags–  Tamil words -18

பாணினியும் கரிகால் சோழனும் (Post No.8888)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8888

Date uploaded in London – –4 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கரிகால் சோழன் பற்றிய அதிசய விஷயங்களை சுமார் 20 ஆங்கில, தமிழ் கட்டுரைகளில் எழுதிவிட்டேன். பத்து ஆண்டுக்காலத்தில் எழுதிய கட்டுரைகளின் இணைப்புகளை அடியில் காண்க.

புதிய விஷயம் என்ன?

2700 ஆண்டுகளுக்கு முன்னர் பாணினியும் அதை செப்பிச் சென்றார் என்பதே.

இந்து திருமணங்களில் ‘சப்தபதி’ என்னும் 7 அடி நடக்கும் சடங்கு உலகம் முழுதும் அறிந்ததே. அது நடந்தால்தான் கல்யாணம் சட்டபூர்வமானது ஆகும் என்பதும் எல்லோருக்கும் தெரியும். ஊடக வசதிகள் அதிகரித்த, வீடியோ கிராபர்கள் பெருகிய இவ்வுலகத்தில் ‘சப்தபதி’ படங்களுக்கு குறைவில்லை.

சிந்து-சரஸ்வதி நதி தீர நாகரீகத்தில்  எண் 7 ம், எண் 3 ம் தான் அதிகம் இருப்பதும் அது வேத கால இந்து நாகரிகம் என்பதை மெய்ப்பிக்கிறது.

கரிகாலன் பற்றிய அதிசய விஷயங்கள் என்ன?

1.கரிகால் சோழன்,  பருந்து வடிவ யாக குண்டம் அமைத்து யாகம் செய்தது,

2.கரிகால் சோழன் நண்பர்களுக்கு ‘குட் பை’  GOOD BYE சொல்லும்போது ஏழு அடி நடப்பது,

3.கரிகால் சோழன் பருவக் காற்று மூலம்,( பாய் மரக் கப்பல் மூலம்) இந்து மஹா சமுத்திரத்தில் கொடி கட்டிப் பறந்தது

4.கரிகால் சோழன் கல்லணை (Grand Anicut) கட்டியது

5.கரிகால் சோழன் உலகிலேயே அதிக ஆண்டுகள் ஆட்சி செய்தது

6.கரிகால் சோழனின் மகள் ஆதிமந்தி காவிரி ஆற்றோடு ஒடி கணவனை மீட்டது .

இதில் பெரும்பாலான விஷயங்கள் புறநாநூற்றிலும் , பொருநர் ஆற்றுப்படையிலும் உள்ளது (கீழே இணைப்புகளில் மேல் விவரம் உளது)

கரிகாலனுக்கு முன்னர் ராவணனும் பருவக் காற்றைப் பயன்படுத்தி பாட்னா (Patna= Pataliputra in Bihar, India) சென்று அங்கிருந்து இமய மலை வரை எளிதில் சென்று கைலாயத்திலும் காஷ்மீரிலும் அட்டூழியம் செய்தான். அதே எதிர்திசைப் பருவக்காற்றை — (Returning Monsoon) திரும்பிவரும் பருவக்காற்று) பயன்படுத்தி காஷ்மீர் மன்னன் இலங்கை மீது படை எடுத்ததையும் மஹாவாம்சம், ராஜதரங்கிணி மூலம் அறிவோம். கரிகாலன் 2100 ஆண்டுகளுக்கு முந்தையவன்

இதோ பாணினீயம்

பாணினீயம் 2700 ஆண்டுகளுக்கு முந்தைய நூல் !

சூத்திரம் 5-2-22

“ஸாப்த  பதீனம் ஸக்யம் “

இதற்கு வியாக்கியானம் —

நட்பு என்பதைக் குறிக்கும்போது ஸாப்த பதீனம் ஒரு நிபாதனம் ஆகும்.

ஸாப்த  பதீன- ஏழு அடி சேர்ந்து நடப்பதால்  அடைவது அல்லது ஏழு வார்த்தைகள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதால் அடைவது

-பக்கம் 177, பகுதி 2, பாணினியின் அஷ்டாத்யாயி , தமிழாக்கம் -கு.மீனாட்சி , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை 600 113, ஆண்டு 1998

ரிக் வேதம் சொன்னதை, பாணினி சொன்னதை, செய்து காட்டிய  செயல் வீரன் கரிகாலன் என்பதை பொருநர் ஆற்றுப்படை மூலம் அறிகிறோம்

Xxx

இணைப்புகளில் சங்க இலக்கிய செய்யுள்களைக் கொடுத்துள்ளேன்:–

References

Purananuru verse 224 – Eagles Shaped Yaga Kunda

Porunar Atruppadai – lines 165-167 Walking Seven Steps during Farewell Ceremony

Purananuru verse 66 – Using Wind for sailing ; knowledge of Sailors and Monsoon.


Seven Steps | Tamil and Vedas

tamilandvedas.com › tag › seven-steps

  1.  

20 Jul 2016 — Posts about Seven Steps written by Tamil and Vedas. … The seven steps are the seven grades of life. Compare this with the seven ages of life …


walking 7 steps | Tamil and Vedas

tamilandvedas.com › tag › walking-7-steps

  1.  

8 Nov 2016 — Posts about walking 7 steps written by Tamil and Vedas. … The next ceremony is called saptapadi or seven steps. This is the most important …


கரிகால் சோழன் | Tamil and Vedas

tamilandvedas.com › tag › கரிக…

  1.  

18 Jan 2012 — கரிகால் சோழன் வேத நெறி தவறாது ஆண்டவன். 2000 ஆண்டுகளுக்கு முன் ஆண்ட இவன் சோழ மன்னர்களில் மிகவும் புகழ்பெற்றவன். இவன் …


கரிகாலன் வரலாறு கூறும் …

tamilandvedas.com › 2015/01/23

  1.  
  2.  

23 Jan 2015 — காண்க: கரிகால் சோழனின் பருந்து வடிவ யாக குண்டம், ஜனவரி 18, 2012. 2.கரிகாலன், ரிக் வேத மந்திரத்தில் சொன்னபடி, ஏழு அடி …


கரிகாலன் | Tamil and Vedas

tamilandvedas.com › tag › கரிக…

  1.  

29 May 2018 — பாடலின் பொருள் : சோழ மண்டலத்தை ஆண்ட மன்னர்களுள் திறமை வாய்ந்த மன்னனான கரிகால் சோழன் தன் உயிர் பிழைத்தல் காரணமாக …


கரிகாலன் மகள் | Tamil and Vedas

tamilandvedas.com › tag › கரிக…

  1.  

8 Mar 2017 — ஆதி மந்தி என்பவள் கரிகால் சோழனின் அருந்தவப் புதல்வி; அவள் ஒரு … சோழன் மகள் ஆதி மந்தியும், சேர நாட்டரசனும், ஆதியின் …


நீண்ட காலம் ஆண்ட மன்னன் …

tamilandvedas.com › 2015/01/21

  1.  
  2.  

21 Jan 2015 — இவர்களில் யார் காவிரியில் அணை கட்டிய கரிகாலன் என்பது … ஏனெனில் சோழர்களின் தலை நகராக தஞ்சாவூர் உருவாநது மிகவும் …


கரிகாலச் சோழன் | Tamil and Vedas

tamilandvedas.com › tag › கரிக…

  1.  

30 Apr 2018 — கரிகாலன் என்ற சோழனின் மகளுக்கு பெரிய வலிப்பு நோய் வந்தது. எத்தனையோ வைத்தியர்கள் தம்மால் இயன்ற வைத்தியம் செய்து …


சோழர்கள் | Tamil and Vedas

tamilandvedas.com › tag › சோழ…

15 Jul 2013 — சேரர்களுக்கு முன்பாக பாண்டியர் பெயரும் சோழர் பெயரும் … கரிகால் சோழன் பருந்து (கழுகு) வடிவ யாக குண்டம் அமைத்து …


தாம்ரலிப்தி | Tamil and Vedas

tamilandvedas.com › tag › தாம்…

  1.  

22 Sep 2014 — இந்தியர்களுக்குப் பருவக் காற்றின் ரகசியம் தெரியும். … உனது முன்னோர்கள் காற்று இயக்கும் திசையை அறிந்தே அதற்கான …

tags- கரிகால் சோழன், ஏழு அடி, சப்த பதி , பாணினி

—–subham—-

கிறிஸ்தவப் பிரசாரத்துக்கு எதிர்ப் பிரசாரம் (Post No.8887)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8887

Date uploaded in London – – 4 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

கிறிஸ்தவ மதம் பற்றி…….

லண்டனிலிருந்து இந்திய நேதம் மாலை 6.30 மணிக்கு 2-11-2020 அன்று ஞானமயம் சேனல் ஒளி பரப்பில் ஒளி பரப்பப்பட்ட உரை.

IF YOU WANT TO LISTENT TO TALK, PLEASE GO TO FACEBOOK.COM/GNANAMAYAM

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம்.

இன்று நம் முன் இருக்கும் கேள்வி, “கிறிஸ்தவ மதம் பற்றியும் அவற்றின் கொள்கைகளை நிராகரிக்கும் புத்தகங்கள் பற்றியும் படித்தேன். இது போல இன்னும் பல தகவல்களைத் தர முடியுமா, அவற்றை எப்படிப் பெறலாம் என்பதாகும்.”

யாழ்ப்பாண கிறிஸ்தவ மத கண்டன சபையின் சார்பில் உடுப்பிபட்டி ஆறுமுகபிள்ளை எழுதியுள்ள நூல்  1890ஆம் ஆண்டு பிரிட்டிஷ் நூலகத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது. மிகத் தெளிவான பல காரணங்களைக் கூறி அவர் கிறிஸ்தவத்தை நிராகரிக்கிறார். கிறிஸ்தவத்தின் பல உட்பிரிவுகளையும் அவர் சுட்டிக் காட்டுகிறார். இது பற்றி ஆய்வு செய்யும் ஒரு அன்பர் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறார்.

கடந்த 2000 ஆண்டு உலக வரலாற்றை எடுத்துப் பார்த்தால் மத பிரசாரத்தின் பெயரால் இறந்தோரின் எண்ணிக்கை சொல்லி மாளாது.

ஜெசூட் கத்தோலிக்க கிறிஸ்தவ பாதிரிகள் எடுக்கும் கடுமையான உறுதி மொழியை அப்படியே சொல்ல நா கூசுகிறது, மனம் நடுங்குகிறது என்பதால் அவற்றைச் சொல்லாமல் விடுவதே மேல்.

கிறிஸ்தவ பாதிரிகளுக்கு எதிராக ராபர்ட் கிரீன் இங்கர்ஸால் பொங்கி எழுந்தார். அவரது உரைகளும் எழுத்துக்களும் The Works of Robert Green Ingersoll என்று பன்னிரெண்டு தொகுதிகளாக வெளி வந்துள்ளன. அவற்றில் அனைத்தையும் படிக்கலாம்.

ஸ்வாமி விவேகானந்தரின் உரைகள் -The Complete Works of Swami Vivekananda  -ஒன்பது தொகுதிகள் கொண்டதாகும். ஆகாயத்திலிருந்து விழும் நீர்த்துளி எப்படி கடலை அடைகின்றதோ அதே போல எப்படி வழிபட்டாலும் அது இறைவனை அடைகிறது என்று அவர் தனது சிகாகோ உரையில் குறிப்பிட்டார். ஸ்வாமிஜியின் உரைகளுக்கான தமிழ் பதிப்பு ஞானதீபம் என வெளி வந்துள்ளது. அதில் எட்டாம் தொகுதியில் அவர்  அமெரிக்காவில், டெட்ராய்ட்டில் ஆற்றிய உரை ஒன்று உள்ளது.

அதில் அவர் கூறினார் இப்படி: “நீங்கள் சம்பளம் கொடுத்து ஆடை கொடுத்து பாடம் சொல்லிக் கொடுத்து பயிற்சி கொடுத்து பலரை உருவாக்குகிறீர்களே, எதைச் செய்வதற்காக? என்னுடைய நாட்டிற்கு வந்து, என்னுடைய முன்னோர்களையும் என்னுடைய மதத்தையும் எல்லாவற்றையும் கேவலப்படுத்தி தூற்றுவதற்காகவா? இவர்கள் எங்களது கோவில் அருகே வந்து, “ஏ! விக்ரஹ ஆராதனைக்காரர்களே! நீங்கள் நரகத்திற்குத் தான் போவீர்கள்.” என்கிறார்கள். ஆனால் இதை இந்தியாவில் உள்ள முஸ்லீம்களுக்கு எதிராக அவர்கள் சொல்லத் துணிவதில்லை. ஏனென்றால் உடனே வாள்கள் உருவப்பட்டு விடும்… ஆனால் உங்களது பிரதிநிதிகள் எங்களை ஏளனம் செய்யும் போது அவர்கள் நினைவில் வைத்துக் கொள்ளட்டும். இந்தியா முழுவதும் ஒட்டு மொத்தமாக எழுந்து நின்று ஹிந்து மஹா சமுத்திரத்தின் அடியிலே கிடக்கும் அத்தனை சேற்றையும் வாரி மேலை நாடுகளின் மீது எறிந்தாலும் அது நீங்கள் செய்கின்ற காரியத்தின் கோடியில் ஒரு பகுதியாகக் கூட ஆகாது.”

இந்த மதமாற்றத்திற்கான பணம் எப்படி கணக்கிடப்படுகிறது என்பதை இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியராகப் பணியாற்றியவரும், முன்னாள் மந்திய மந்திரியுமான திரு அருண் ஷௌரியின் புத்தகத்தில் காணலாம்.

அவர் கிறிஸ்தவ மதமாற்றம் பற்றி Harvesting our Souls – Missonaries, their design, their claims  மற்றும் Missionaries in India ஆகிய இரு புத்தகங்களில் மிக விரிவாக எழுதியுள்ளார். முதல் புத்தகம் 432 பக்கங்கள். இரண்டாவது புத்தகம் 305 பக்கங்கள்.

எத்தனை லட்சம் டாலர்கள் இந்தியாவிற்கு வந்தது, எத்தனை தலைகள் கிறிஸ்தவத்திற்கு மாற்றப்பட்டன என்பதைக் கணக்கிட்டு ஒரு தலைக்கு ஆகும் டாலர்கள் இவ்வளவு என்று கணக்கிடப்படுகிறது. அடுத்த வருடத்திற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டு எவ்வளவு டாலர்கள் வேண்டுமோ அவ்வளவு திரட்டப்படுகிறது.

மதமாற்றம் பற்றி 1951ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட நியோகி கமிஷன் மிகத் தெளிவாக மிஷனரிகளைப் பற்றி எடுத்துரைக்கிறது. எடுத்துக்காட்டிற்கு ஒரு வரியைக் காணலாம்.

Now as to Christian Orphanages, they are undoubtedly being run to multiply the population of Christians.

கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவே சந்தேகமின்றி கிறிஸ்தவ அனாதை இல்லங்கள் நடத்தப்படுகின்றன.

காந்திஜியை ஹார்வெஸ்ட் செய்து விட்டால் இந்தியாவையே ஹார்வெஸ்ட் செய்தது போலாகும் என்று நினைத்தார் க்ரென்ஸ்கி என்ற போலந்து புரபாஸர்.

 1937ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி போலந்திலிருந்து வந்த தத்துவ பேராசிரியரான க்ரென்ஸ்கி, மஹாத்மாவைச் சந்தித்தார்.

அவர்கள் உரையாடலை அப்படியே ஆங்கிலத்தில் பார்ப்போம்:

க்ரென்ஸ்கி :

Catholicism is the only true religion

G : Do you therefore say that other relgions are untrue?

K : If others are convinced that their religions are true they are saved.

G: Therefore you will say that everyone would be saved even through untruth.

K: But I have studied all religions and have found that mine is the only true religion.

G: But so have others studied their religions. What about them?

K: I have examined the arguments in favour of other religions.

G: But it is an intellectual examination. You require different scales to weigh spiriual truth.. My submission   is that your position is arrogant. But I suggest you a better position. Accept all religions as equal, for all have the same root and the same laws of growth.

அவ்வளவு தான புரபஸர் தான் வந்த நோக்கம் நிறைவேறாது என்பதைத் தெரிந்து கொண்டு பேச்சைத் திசை மாற்றினார். காந்திஜியிடம்  ஸ்டான்லி ஜோன்ஸ் உள்ளிட்ட இன்னும் பலர் வாதம் செய்து தங்கள் முயற்சியில் தோல்வி அடைந்துள்ளனர்.

அடுத்து பைபிளில் ஏசு கிறிஸ்து பதிமூன்றாம் வயதிலிருந்து முப்பதாம் வயது வரை எங்கிருந்தார் என்பதற்கான விவரம் இல்லை. இந்த காலகட்டத்தில் ஏசு கிறிஸ்து இந்தியாவில் இருந்தார் என்று அன்னிபெஸண்ட் அம்மையார் கூறுகிறார். இது பற்றி பலரும் எழுதியுள்ள புத்தகங்களும், ஆய்வுக் கட்டுரைகளும் உள்ளன.

மறு பிறப்பு தத்துவம் மற்றும் கர்ம பலனுக்குத் தக பிறவி ஏற்படும், அவை பிறவிகள் தோறும் தொடரும் என்பன உள்ளிட்ட பல தத்துவங்களை கிறிஸ்தவம் மறுக்கிறது: ஹிந்து மதம் வலியுறுத்துகிறது. ஹிந்து மதம் கூறுவது சரி தான் என்பதை நிரூபிக்க பல்லாயிரம் சம்பவங்கள் உள்ளன. இவற்றில் ஆதாரபூர்வமான சம்பவங்களை The Encyclopeadia of Parapsychology and Psychical Research என்ற அதீத உளவியல் பற்றிய கலைக்களஞ்சியத்தில் படிக்கலாம்.

நூற்றுக் கணக்கில் உள்ள இப்படிப்பட்ட புத்தகங்களில் பலவற்றை இணைய தளத்திலிருந்து இலவசமாக டவுன் லோட் செய்து கொள்ளலாம்.

ஹிந்து மதத்தைச் சேர்ந்த ஒரு ஹிந்து, மற்றவர் எந்த ஒரு மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் அவரை மத ரீதியாக புண்படுத்துவதில்லை; தன் மதத்திற்கு மதம் மாற்றவும் முயலுவதில்லை. ஒரு ஹிந்து தனது பிரார்த்தனையில் சர்வே ஜனா சுகினோ பவந்து – அனைத்து மக்களும் சுகமாக வாழட்டும் என்றே பிரார்த்திக்கிறான்.

இந்த வழியே சரி என்று ஏராளமான அறிஞர்கள் எழுதி வந்துள்ளனர்; எழுதி வருகின்றனர். குறிப்பாக ஒரே ஒருவர் கூறியதை மட்டும் இங்கு பார்க்கலாம்.

ஆர்னால்ட் டாய்ன்பி என்ற வரலாற்றுப் பேரறிஞர் A Study of history  என்பதை பன்னிரெண்டு தொகுதிகளில் எழுதி வெளியிட்டுள்ளார். சுமார் 30 லட்சம் வார்த்தைகள் கொண்ட நூல் இது. பல மதங்களையும், பல கொள்கைகள் மற்றும் தத்துவங்களையும் ஒப்பிட்ட அவர் தனது பத்தாம் தொகுதியின் இறுதியில் கூறுவது இது தான்.

The Catholic minded Indian religious spirit is the way of salvation for human beings of all religions in an age in which we have to learn to live as a single family if we are not to destroy ourselves.

நம்மை நாமே அழித்துக் கொள்ளாமல் நாம் அனைவரும் ஒரே குடும்பமாக வாழக் கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு காலத்தில் இருப்பதால், பரந்த மனப்பான்மை கொண்ட இந்திய மதத்தின் உணர்வே எல்லா மதங்களைச் சார்ந்த மனிதர்களுக்குமான உய்யும் வழியாகும்.

சர்வே ஜனா சுகினோ பவந்து! நன்றி வணக்கம்.   ***

tags –  கிறிஸ்தவப் பிரசாரம்,  எதிர்ப் பிரசாரம்

கிறிஸ்தவ மதத்துக்கு எதிரான …

tamilandvedas.com › 2015/07/16

  1.  

Translate this page

16 Jul 2015 — கிறிஸ்தவ மதத்துக்கு எதிரான இரண்டு பழந்தமிழ் நூல்கள்– பகுதி 1 · IMG_5071. எழுதியவர்:-உடுப்பிட்டி ஆறுமுகபிள்ளை … I found three very old Tamil books in the British Library,London, which were in very bad condition. Two of them are Anti- Christian booklets published in 1829 or 1889 from Jaffna, …



பகுதி-2: கிறிஸ்தவ மதத்துக்கு …

tamilandvedas.com › 2015/07/17

  1.  

Translate this page

17 Jul 2015 — பகுதி-2: கிறிஸ்தவ மதத்துக்கு எதிரான இரண்டு பழைய தமிழ் நூல்கள் · IMG_5060. Article No.1999. Compiled by London swaminathan. Date 17th July 2015. Time uploaded in …


Part two – Diamond Axe- Hindus’ Reply to Christian Attacks …tamilandvedas.com › 2020/03/18 › p…

Translate this page18 Mar 2020 — … Axe– Hindus‘ Reply to Christian Attacks கிறிஸ்தவர் புகார்களுக்கு ஆப்பு 1888 நூலில்!-2(Post No.7709).
Diamond Axe- Hindus’ Reply to Christian Attacks …tamilandvedas.com › page

Translate this page18 Mar 2020 — Part two – Diamond Axe– Hindus‘ Reply to Christian Attacks கிறிஸ்தவர் புகார்களுக்கு ஆப்பு 1888 நூலில்!-2(Post No.7709) … புகார்களுக்கு ஆப்பு 1888 நூலில்!-1(Post … வஜ்ர டங்கம் , கிறிஸ்தவ மதம், ஆப்பு …

–SUBHAM–