Post No. 8940Date uploaded in London – – 17 NOVEMBER 2020 Contact – swami_48@yahoo.com Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.com,
swamiindology.blogspot.com
மீன் சாப்பிட வேண்டாம் என நினத்தேன், எண்ணத்தை மாற்றிக்கொண்டேன், மீனவன் சாப்பிட வேண்டாமா??? Xxxxx
ஒருஹோட்டல் அறிவிப்பு வீட்டு சமையலுக்கு ஒருநாள் விடுமுறை அளியுங்கள்!!! இன்னொரு அறிவிப்பு மனைவிக்கும், சமையலறைக்கும் ஒரு நாள் விடுமுறை அளிக்கவும்!!!
xxxx ஒரு ஆட்டோவின் பின்புற வாசகங்கள் உங்களின் வழிச் செலவு , எங்களின் வாழ்க்கைச் செலவு !!!
XXX டீக்கடை வாசகம் இரு வடை எடுத்து ஒரு வடை என்பார், திருவோடு ஏந்தி, தெருவோடு போவார் !!!!
xxxx
முத்தம் – ஒருமணி நேரத்திற்கு ஒரு முறையேனும் கட்டிப்பிடித்து, முத்தம் சிந்தி, இன்பம் தூய்க்காவிட்டால், உயிர் மூச்சே நின்றுவிடும் கடிகார முட்களுக்கு !!! At what times do clock hands overlap? Thus, the hands of a clock overlap 22 times a day. Thus the hands of the clock overlap at 12:00, ~1:05, ~2:10, ~3:15, ~4:20, ~5:25, ~6:30, ~7:35, ~8:40, ~9:45, ~10:50. Note that there is no ~11:55. xxxx
நேர்ததிக் கடனாக பலியாகும் எந்த கடாவிற்கும் உயிர்ப்பிச்சை கொடுப்பதில்லை சாமிகள்!!!
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறும் தலம் – மாயன், தூய பெருநீர் யமுனைத் துறைவன், ஆயர் குலத்தினில் தோன்றிய மணி விளக்கு, தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரன், வடமதுரை மைந்தனான, கண்ணபிரானின் ஜென்ம ஸ்தானமான, மதுரா ஆகும்.
தூயோமாய், தூ மலர் தூவித் தொழுது, வாயினால் பாடி, மனதினால் சிந்திக்க, போய பிழையும் புகு தருவான், நின்றனவும் தீயினில் தூசாகும், செப்பேலோ என்று, சூடிக் கொடுத்த சுடர்க் கொடி ஆண்டாளால், போற்றப்படும், கண்ண பிரானின் தலத்தை, மதுரா என உச்சரிக்கும் போதே, உள்ளம் சிலிர்க்கிறது.
108 வைணவ திவ்ய தேசங்களில், நூறாவது திருத்தலமாக அமையும் இது, டெல்லியிலிருந்து சுமார் 161 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
ஒருத்தி மகனாய் பிறந்து, ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர, தருக்கிலான் ஆகி, தான் தீங்கு நினைந்த, கருத்தைப் பிழைப்பித்துக், கஞ்சன் வயிற்றில், நெருப்பென்ன நின்ற நெடுமால், கண்ணனாக அவதரித்த இந்தத் திருத்தலம், உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ளது.
மூலவர் பாலகிருஷ்ணன், நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். தாயார் சத்தியபாமா. தீர்த்தத்தின் பெயர் கோவர்த்தன தீர்த்தம்.
பெரியாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப்பொடி ஆழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் என ஐந்து ஆழ்வார்கள் 50 பாசுரங்கள் பாடிப் போற்றி வணங்கிய தலம் மதுரா.
மதுரா நகரம் தோன்றியது பற்றிய புராண வரலாறு ஒன்று உண்டு. ஒரு சமயம் இலவணாசுரன் என்னும் அரக்கன் கொடுமைகள் பல செய்து வரவே முனிவர்கள் இராமபிரானை அணுகினர். இராமர் தனது இளவலான சத்ருக்னரை அனுப்பி மது என்னும் நகரத்தின் அரசனாக இருந்த இலவணாசுரனை அழிக்கச் செய்தார். அசுரனை வதம் செய்த சத்ருக்னர் அங்கு யமுனா நதி தீரத்தில் அர்த்த சந்திர வடிவத்தில் மதுரா நகரை உருவாக்கினார். இந்த நகரத்தை சத்ருக்னரின் வமிசாவளியினர் ஆண்டு வந்தனர். பின்னர் யது வம்சத்தினர் இதை ஆளத் தொடங்கினர்.
அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகா
புரி த்வாராவதி சைவ சப்தைதே மோக்ஷதாயிகா:
என்று குறிப்பிடப்படும் ஏழு மோக்ஷம் அருளும் தலங்களில் மதுராவும் ஒன்று. இங்கிருந்து 11 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பிருந்தாவனில் தான் கிருஷ்ணரின் இளமைப் பருவம் கழிந்தது. 22 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இன்னொரு புனித யாத்திரை தலம் கோவர்தன் ஆகும்.
ரிக் வேதம் குறிப்பிடும் ஐந்து வமிசங்களில் யது வம்சமும் ஒன்று. அதில் அவதரித்தவர் கிருஷ்ணர்.
கிருஷ்ணரின் ஜென்ம பூமியில் கிருஷ்ண ஜென்மபூமி ஆலயம், துவாரகாநாத் ஆலயம், கீதா மந்திர் உள்ளிட்ட பல ஆல்யங்கள் உள்ளன.
உலகில் உள்ள மிகப் புனிதமான இடங்களில் தலையாய இடமான இங்குள்ள கர்பக்ருஹத்தில் தான் சிறையில் கிருஷ்ணர் அவதரித்தார். காலப் போக்கில் இந்த ஜென்மஸ்தானம் ஒரு அழகிய ஆலயமாக உருவாகி விட்டது.
கம்ஸனுக்கும் கிருஷ்ணருக்கும் நடந்த இறுதிப் போர் நடந்த இடமும் இங்கு தான் உள்ளது.
யமுனை நதி தீரத்தில் அமைந்துள்ள விஷ்ராம் கட்டில் (Vishram Ghat) தான் கம்சனை வதம் செய்த பின்னர் கிருஷ்ணர் வந்து ஓய்வு எடுத்தார்.
ஆண்டு தோறும், ஜென்மாஷ்டமி எனப்படும் கிருஷ்ணரின் அவதாரத் திருநாள், இங்கு வெகு விமரிசையாக, கோலாகலமாகக் கொண்டாடப் படுகிறது.
ஏராளமான அசுரர்களையும் கொடுங்கோலர்களையும் கிருஷ்ணர் அழித்ததை, பாகவதம் நன்கு கூறும். அறம் பிறழ்ந்த கௌரவர்களை அழிக்கும் பொருட்டு, பாண்டவர்களுக்கு உற்ற துணையாக இருந்து, அவர்கள் வெற்றி பெற அருளியவர் கிருஷ்ணர்.
உலக மக்கள் உய்யும் பொருட்டு, பகவத் கீதையை போர்க்களத்தில் அர்ஜுனனுக்கு உபதேசித்து அருளினார் அவர்.
பாரதத்தில் இன்று நாம் அஸ்ஸாம் என அழைக்கும் அஸாம் மாநிலப் பகுதி, பழைய காலத்தில், காமாக்யா என அழைக்கப்பட்ட பகுதியாகும். காமாக்யாவில் இருந்த ஜோயோதிஷபுரத்தை ஆண்டு, தேவர்களை துன்புறுத்தி வந்தான் கொடிய அசுரனான நரகாசுரன். அவனையும் கிருஷ்ணரே வதம் செய்தார். அவர் வதம் செய்த நாளையே தீபாவளி தினமாக உலகம் கொண்டாடி வருகிறது.
பாரதத்தில் ஏராளமான கிருஷ்ணர் கோவில்கள் உள்ளன. ஆனால் அனைத்துக் கோவில்களுக்கும் தலைமை இடமாக கருதப்படும் மோக்ஷபுரியான, அறம் காக்கும் பூமியான மதுராவின் மஹிமையே தனி தான்.
காலம் காலமாக கோடானு கோடி பக்தர்கள் பயபக்தியுடன் வணங்கி வரும் ஸ்ரீ கிருஷ்ண பகவான் அனைவருக்கும் சர்வ மங்களத்தை தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
15873 சுபாஷிதங்களைச் சுட்டிக் காட்டும் கட்டுரையின் முதல் பகுதியைப் படித்து விட்டவர்கள் அடுத்த இந்தக் கட்டுரையைப் படிக்கலாம். (முதல் கட்டுரை எண் : 8871 ; வெளியான தேதி : 30-10-2020) இந்தக் கட்டுரையில் உள்ள முதல் நூலிலேயே பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சுபாஷிதங்கள் உள்ளன. ஆக 25873 என்ற எண்ணிக்கையைக் கடந்த பின்னர் அடுத்து சுட்டிக்காட்டப்படும் நூல்களில் ஆயிரமாயிரம் சுபாஷிதங்கள் உள்ளன. எண்ணிக்கை கடந்த நிலைக்குச் செல்லும் ஒரு அற்புத சுபாஷித பயணமாக அமைவது இந்தத் தொடர். அனைத்தையும் இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்!
சம்ஸ்கிருதத்தில் அமைந்துள்ள இந்த நூலில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சுபாஷித ஸ்லோகங்கள் உள்ளன.
7 பிரகரணங்கள் (பகுதிகள்) கொண்ட நூல் இது.
மங்களாசரண ப்ரகரணம்
சாமான்ய ப்ரகரணம்
ராஜ ப்ரகரணம்
சித்ர ப்ரகரணம்
அன்யோக்தி ப்ரகரணம்
சங்கீர்ண ப்ரகரணம்
நவரஸ ப்ரகரணம்
காசிநாத் சர்மா (Kashinath Sharma) அவர்களால் வெளியிடப்பட்டுள்ள நூல் இது.
முதல் பிரகரணமான மங்களாசரண ப்ரகரணத்தில் கணேசர், சரஸ்வதி, சிவபிரான், பார்வதி, விஷ்ணு, லக்ஷ்மி, ப்ரம்மா, தசாவதாரம், ந்ருசிம்ஹ,ராம்சந்த் ர, க்ருஷ்ண, சூர்ய, சந்திரன், பிருத்வி உள்ளிட்ட பல தலைப்புகளில் அழகிய சுபாஷித ஸ்லோகங்கள் உள்ள்ன.
அடுத்த ப்ரகரணமான சாமான்ய ப்ரகரணத்தில் மிகப் பெரும் கவிஞர்களின் நூல்களில் உள்ள மிக மிக அருமையான ஸ்லோகங்கள்/கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளன.
மஹாகவி காளிதாஸ், அமரசிம்மன், கணேஷ்வர், ஜயதேவர், நரஹரி, பவபூதி,மயூரர், முராரி, வியாஸர், சாதவாஹனர், சுபந்து உள்ளிட்ட கவிஞர்களின் படைப்புகள் இந்த பிரகரணத்தில் காணலாம்.
ராஜ ப்ரகரணத்தில் அரசர்கள் சம்பந்தப்பட்ட கவிதைகள் அடங்கியுள்ளன.
கிருஷ்ணன், கர்ணன், போஜன், அக்பர், அர்ஜுன தேவ்,ஜன்கர் உள்ளிட்ட மன்னர்கள் இதில் இடம் பெறுகின்றனர்.
சித்ர ப்ரகரணம் புதிர்கள் அடங்கிய ஒரு பெரிய தொகுப்பு. அபூர்வமான எங்கும் காண முடியாத கவிதைகளின் தொகுப்பு இது. வெவ்வேறு சித்ர பந்தங்களின் அமைப்பை இதில் காண முடியும்.
அன்யோக்தி ப்ரகரணத்தில் சூர்யான்யோக்தி, சந்திரான்யோக்தி, மேதான்யன்யோக்தி, மேரு, மலய, மந்தர போன்ற ஏராளமான தலைப்புகளில் அமைந்துள்ள ஸ்லோகங்கள் அபூர்வமானவை.
சங்கீர்ண ப்ரகரணத்தில் ரத்னானி, ஜலசரான்யோக்த்ய, விருக்ஷான்யோக்த்ய உள்ளிட்ட தலைப்புகளில் ஸ்லோகங்கள் உள்ளன.
நவரஸ ப்ரகரணத்தில் பெயருக்குத் தக்கபடி நவ ரஸங்களைக் காண்பிக்கும் அபூர்வ ஸ்லோகங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. சிருங்கார ரஸம் என்று எடுத்துக் கொண்டால் கண், நெற்றி, காது, கழுத்து, கைகள், நாபி, என இப்படி அங்கம் அங்கமாக வர்ணனைகளைக் காணலாம். காதல் சம்பந்தப்பட்ட கவிதைகள் படிப்பவர்கள் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும்.
புகழ்பெற்ற கவிஞர்கள் மன்னர்களின் சபைகளில் பாடிப் பரிசு பெற்ற கவிதைகள் தொகுத்துக் கொடுக்கப்பட்டிருப்பதால் ஒவ்வொன்றுமே சிறப்பான கவிதை என்று தான் சொல்ல முடியும்.
இதை கீழ்க்கண்ட தளத்திலிருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
15-11-2020 அன்று லண்டனிலிருந்து இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பப்பட்ட தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் கேள்வி-பதில் பகுதியில் ஒளிபரப்பப்பட்ட உரை
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம்.
இன்று நமக்கு முன் இருக்கும் கேள்வி பாரதத்தின் புராதனக் கலைகள், சாஸ்திரங்கள் யாவை என்பதாகும்.
ஏராளமான வியக்க வைக்கும் கலைகளை சாஸ்திரங்களைக் கொண்ட புண்ய பூமி பாரதம். அனைத்தையும் விளக்க முடியாது என்றாலும் கூட இவற்றின் ஒரு துளியைக் காண்பித்தவர் சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த சுப்பராய சாஸ்திரி அவர்கள்.
சுப்பராய சாஸ்திரியின் சரித்திரம் மிகவும் ஆச்சரியமூட்டும் ஒன்று.
புராதன சாஸ்திரங்களை எல்லாம் அவர் அறிமுகப்படுத்திய போது இந்தியாவே வியந்தது.
விமான சாஸ்திரம் பற்றி அவர் தந்த விவரங்களைக் கொண்டு ரைட் சகோதரர்கள் விமானத்தைக் கண்டுபிடிக்கும் முன்னரே பம்பாயில் விமானம் ஒன்று செய்யப்பட்டு அதன் சோதனை ஓட்டம் ஒன்று நடந்ததை சமீப காலத்தில் பலரும் பல கட்டுரைகளின் வாயிலாகத் தெரிவித்துள்ளனர்.
சுப்பராய சாஸ்திரியின் இளமைப் பருவம் மிகவும் சோகமான ஒன்று.
இளமையிலேயே அனாதரவாக கைவிடப்பட்ட அவர் கொடூரமான ஒரு தோல் வியாதியால் பாதிக்கப்பட்டார்.
வியாதியுடன் ஒவ்வொரு இடமாகத் தவழ்ந்து தவழ்ந்து சுற்றி அலைந்தார்.
ஒரு நாள் தாகத்தைத் தணிக்க நீரை அருந்துவதற்காக ஒரு குளத்திற்குச் சென்றார். தவறி அந்தக் குளத்தில் அவர் விழுந்த போது ஒரு அற்புதம் நிகழ்ந்தது.
அவர் ஒரு குகைக்குள் இருந்தார். ஒரு சாது அவரைக் கண்டு இரக்கப்பட்டு அவரது வியாதியைத் தனது தபோ சக்தியின் மூலம் குணப்படுத்தினார்.
அத்துடன் அவர் நிற்கவில்லை. பாரதத்தின் புராதன சாஸ்திரங்கள் பலவற்றைச் சொல்லலானார். அவற்றை சுப்பராய சாஸ்திரியின் நினைவில் தக்க வைத்தார். அவற்றை நன்கு கற்பித்தார்.
நினைத்த போது அந்த சாஸ்திரங்கள் அனைத்தும் அவருக்கு நினைவுக்கு வரும் படி அவர் அனுக்ரஹித்தார்.
அம்சுபோதினி என்று ஒரு சாஸ்திரம். சூரிய கிரணங்களின் சக்தி பற்றிய சாஸ்திரம் அது.
வைமானிக சாஸ்திரம் என்ற சாஸ்திரம் விமானங்களை எப்படி அமைப்பது என்பதைச் சொல்லும் சாஸ்திரம். இது பரத்வாஜ முனிவரால் இயற்றப்பட்டது.
இவை அனைத்தையும் நன்கு கற்றுக் கொண்ட சுப்பராய சாஸ்திரி பெங்களூர் வந்தார்.
அங்கு இவரது ஞானத்தைக் கண்ட பலரும் வியந்தனர்.
மஹா சங்கல்பம் என்ற ஒன்றை பெரிய காரியம் ஒன்றைச் செய்யும் முன்னர் ஹிந்துக்கள் செய்வது வழக்கம்.
இந்த மஹா சங்கல்பம் மிக அழகிய சொற்களால் ஆனது. ஒசை நயம் கொண்டது. அதில் மனித குலத்தின் மொத்த ஞானமும் அடங்கிய பல்வேறு சாஸ்திரங்கள் உள்ளடங்கியுள்ளன.
இதைச் சற்று உன்னிப்பாக ஆராய்ந்தாலேயே போதும் புராதன பாரதம் எப்படிப்பட்ட் ஆன்மீக ஞானத்தைக் கொண்டிருந்தது, எத்தனை கலைகளில் சிறந்திருந்தது என்பது தெரிய வரும். அனைத்து விஞ்ஞானமும் அதில் உள்ளது.
இதை ஆராய்ந்த மஹரிஷி அனகல் சுப்பராய சாஸ்திரி அதன் மஹிமையை உலகிற்கு எடுத்துரைத்தார்.
சாஸ்திரி அவர்கள் பல சாஸ்திரங்களையும் சொல்லச் சொல்ல அவற்றை அப்படியே பங்களூரைச் சேர்ந்த ஜி.வெங்கடாசல சர்மா எழுதலானார்.
சாஸ்திரங்களின் விவரங்களையும் சாஸ்திரி எடுத்துரைத்தார்.
அவரே கன்னடத்திலும் தெலுங்கிலும் அவற்றை விவரித்தார்.
அதை அப்படியே ஆங்கிலத்தில் வெங்கடாசல சர்மா மொழி பெயர்த்தார்.
இந்த சாஸ்திரங்களின் பட்டியல் மிக நீண்ட ஒன்று. அவற்றில் சிலவற்றின் சுருக்கத்தை இங்கு பார்ப்போம்:
அக்ஷரலக்ஷண சாஸ்திரம் : இந்த சாஸ்திரம் அகர முதலான எழுத்துக்கள், அதற்குரிய எண், அல்ஜீப்ரா, ஜாமெட்ரி, மற்றும் இதர கணிதங்கள்,குறியீடுகள் ஆகியவற்றை விளக்கும் ஒன்று. பதினான்கு லோகங்களிலும் உள்ள வெவ்வேறு மொழிகளை எப்படி அமைப்பது என்பன உள்ளிட்ட விவரங்களையும் இது விளக்குகிறது.
லிகித சாஸ்திரம் : இது எல்லா ஸ்லோகங்களையும் எப்படி எழுதுவது என்பதை விளக்கும் கலை.
கணித சாஸ்திரம் : சகல லோகங்களிலும் உள்ள கணிதங்களை விளக்கும் சாஸ்திரம் இது. இதில் 18 சாஸ்திரங்கள் அடங்கி உள்ளன.
ஜோதிட சாஸ்திரம் : இது 64 விதமான வானவியல் மற்றும் ஜோதிட ரகசியங்களை விளக்கும் சாஸ்திரமாகும்.
நிருக்த சாஸ்திரம் : வேதங்களின் பாஷ்யங்களாக விளங்கும் ஆறு அங்கங்களை விளக்கும் சாஸ்திரம் இது.
வைசேஷிக சாஸ்திரம் : இதில் ஏழு சாஸ்திரங்கள் உள்ளன. நியாய சாஸ்திரத்துடன் தொடர்புள்ள சாஸ்திரம் இது.
வேதாந்த சாஸ்திரம் : இதில் 132 வேதாந்த சித்தாந்தங்களை விமரிசித்து அல்லது மறுத்துரைத்துச் சொல்லும் உரைகள் உள்ளன.இது பூர்வ பக்ஷம் எனப்படும். மேலும் இதில் பிரஸ்தான த்ரயம் எனப்படும் வேதாந்தம் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்றாக சித்தரிக்கப்படுகிறது.
பட்ட சாஸ்திரம் : இதில் 5 விதமான வெவ்வேறு சாஸ்திரங்கள் விளக்கப்படுகின்றன.இவை நியாய சாஸ்திரத்துடன் தொடர்பு கொண்டவை.
ப்ரபாகர சாஸ்திரம்: மூன்று விதமான ப்ரபாகர சித்தாந்தங்கள் உள்ளன. இவை நியாய சாஸ்திரத்துடன் ஒப்பிடக் கூடியவை.
நியாய சாஸ்திரம் : இதில் 84 சாஸ்திரங்கள் உள்ளன. இவை கதாதரி என்ற ஐந்து வேதங்களைச் சொல்பவை.வைகானஸ தர்க்கத்தில் உள்ள 42 வேதங்கள் மற்றும் கௌட தர்க்கத்தில் உள்ள 60 வேதங்கள் ஆகியவற்றின் விளக்கத்தை இதில் காணலாம்.
வியாக்ரண சாஸ்திரம் :இலக்கணம் பற்றியது. ஒன்பது விதமான வியாகரணங்கள் உள்ளது.பாணிணீயம்,மஹா வியாக்ரணம், ஐந்திரம்,சந்திரா,சகதவனம், ஸ்போத்தயானம் போன்றவை இதில் அடங்கும்.
சப்த சாஸ்திரம் :ஒலியின் நுணுக்கங்களை கூறும் சாஸ்திரம் இது. இதில் ஆறு சாஸ்திரங்கள் உள்ளன.
தர்க்க சாஸ்திரம் : லாஜிக் என ஆங்கிலத்தில் கூறப்படும் சாஸ்திரம் இது. தர்க்கம் பற்றிய எட்டு சாஸ்திரங்கள் உள்ளன. விவாதம் பற்றிய 84 சாஸ்திரங்கள் இதில் உள்ளன.
மீமாம்ஸ சாஸ்திரம் : கர்மத்தின் இயற்கை பற்றி விளக்கும் சாஸ்திரம் இது. “அதாதோ தர்ம ஜிஞ்ஞாஸா” என்று ஆரம்பிக்கும் இது, “அன்வாஹார்யேச தர்மா:” என்று முடிகிறது. இதில் 12 அத்தியாயங்கள் உள்ளன. இதை அருளியவர் ஜைமினி ரிஷி.
ஜைமினியின் மீமாம்ஸ சாஸ்திரத்தில் உள்ள 12 அத்தியாயங்கள் வருமாறு:
1) தத்வ தர்மப்ரகரணம்
2) தர்மாபேத அப்ஹேதௌ
3) சேஷாசேஷீபாவ
4) ப்ரயோஜக ப்ரயோஜக பாவ
5) கர்மா
6) அதிகாரிநிரூபணம்
7) சமன்யாதிதேச
8) விசேஹதிதேச
9) ஊஹா
10) பாதா
11) தந்த்ரம்
12) ப்ரசங்கம்
இது தான் இப்போதுள்ள மீமாம்ஸ சாஸ்திரம்.
ஆனால் இது போல இன்னும் மூன்று மீமாம்ஸ சாஸ்திரங்கள் உள்ளன. அவை பல சாஸ்திர ரகசியங்களை விவரிக்கின்றன.
சந்தஸ் சாஸ்திரம் : அதாவது யாப்பிலக்கணம். இது யதியை விளக்குகிறது. எழுத்துக்களின் இசைவையும் நிறுத்த வேண்டிய இடங்களையும் விளக்குவது யதி.
கணம் : சீரான கவிதைக்கான சந்தம்.
இவை போன்றவற்றை விளக்கும் சாஸ்திரம் இது. இதில் மட்டும் 12 சாஸ்திரங்கள் உள்ளன.
அலங்கார சாஸ்திரம் : கவிதையில் உள்ள வெவ்வேறு அணிகள், மற்றும் எழுத்து நடை பற்றிய சாஸ்திரம். உபமானம், உபமேயம், அர்த்தபதி,தண்டபூபிகா, திலதண்டுலா,ரூபகம், போன்றவற்றை விரிவாக விளக்கும் சாஸ்திரம் இது. இதில் ஒன்பது சாஸ்திரங்கள் உள்ளன.
இதிஹாஸம்: இதில் இதிஹாஸத்தை விளக்கும் 32 நூல்கள் உள்ளன.
புராணம் : மொத்தம் 18 புராணங்கள் உள்ளன. 1) ப்ரஹ்ம 2) பத்ம 3)வைஷ்ணவ 4) சைவ 5) பாகவதம் 6)நாரதீயம் உள்ளிட்டவை இதில் அடங்கும். உப புராணங்களும் கூட உள்ளன.
சில்ப சாஸ்திரம் : இதில் 32 சாஸ்திரங்கள் உள்ளன.384 சிற்ப வகைகளை இவை விளக்குகின்றன.
சுப சாஸ்திரம் : இதில் 13 சாஸ்திரங்கள் உள்ளன.116 வகையான சமையலை இது விளக்குகிறது.
மாலினி சாஸ்திரம் : இரகசிய காதல் செய்தி பரிமாற்றத்தை விளக்கும் சாஸ்திரம் இது. மலர்கள், மாலைகள், பூங்கொத்து ஆகியவற்றின் மீது ரகசியமாக எப்படி எழுதுவது என்பதை இது விளக்குவதோடு அந்தப்புரத்திற்கு செய்திகளை எப்படி அனுப்புவது என்பதையும் நுணுக்கமாக விளக்குகிறது. இதே போல அந்தப்புரத்திலிருந்து காதலர்க்கு எப்படி செய்தி அனுப்புவது என்பதையும் இது தருகிறது. இது மட்டுமல்ல. தாதிகள் எப்படி ஆடை ஆபரணங்களை அழகுற உருவாக்குவது, ராணிமார், இளவரசிகளை எப்படி அழகுற அலங்கரிப்பது (இன்றைய மேக்-அப்) போன்றவற்றை விளக்கும் சாஸ்திரம் இது. இதில் ஐந்து சாஸ்திரங்கள் உள்ளன. மேல் தட்டில் உள்ள பிரபுக்களின் மனைவிமார்களை எப்படி அலங்கரிப்பது உள்ளிட்டவை இதில் அடங்கும்.
ஜரிஹர சாஸ்திரம் : யுத்தங்களில் பயன்படுத்தப்படும் வெடி மருந்து, துப்பாக்கி குண்டு, துப்பாக்கி, பீரங்கி, அம்புகள் போன்றவற்றை எப்படி தயாரிப்பது என்பதை விளக்கும் ஒன்பது சாஸ்திரங்கள் இதில் உள்ளன.நூறு மற்றும் ஆயிரம் ரவுண்டுகள் சுடுவது எப்படி என்பதையும் இது விளக்குகிறது.
ப்ரளய சாஸ்திரம் : இதில் 13 சாஸ்திரங்கள் உள்ளன. படைப்பில் ஒவ்வொன்றிற்கும் எவ்வளவு காலம் உண்டு என்பதை இது விளக்குகிறது. எப்போது அழிவு ஏற்படும், எந்த சமயத்தில் எப்படிப்பட்ட அழிவு வரும் போன்றவற்றை இது விளக்குகிறது.
கால சாஸ்திரம் : வெவ்வேறு படைப்புகள் எப்போது உருவாகும் எப்போது மறையும் என்பதை விளக்குவது கால சாஸ்திரம். எப்போது விதை விதைப்பது, விவசாயம் எப்படி செய்வது, எப்போது அறுவடை செய்வது, தாதுக்கள் உள்ள இடம், மலைகளில் உள்ள தாதுக்கள் ஆகியவற்றை இது விளக்குகிறது. ஒவ்வொன்றின் தோற்றம், வளர்ச்சி பற்றி இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
மய வாத சாஸ்திரம் : 20 வகை நூல்களின் மூலம் மாயாஜாலம் விளக்கப்படுகிறது. பொருள்களை அந்தரத்திலிருந்து எடுப்பது உள்ளிட்ட மாஜிக் வேலைகளை விளக்குவது இது.
இது போல ஏராளமான சாஸ்திரங்களை சுப்பராய சாஸ்திரி விளக்கியுள்ளார்.
இவற்றில் சில ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
ஒரு கேள்வி எழலாம். இந்த சாஸ்திரங்களின் ஒரிஜினல் அதாவது மூலம் எங்குள்ளது என்பதே நமக்கு எழும் சந்தேகம். டாக்டர் வி.ராகவன் உலகெங்கும் சுற்றி பல்லாயிரக்கணக்கான சம்ஸ்க்ருத சுவடி நூல்களைக் கண்டு அந்த நூல் பட்டியலை தயாரித்துள்ளார். இவற்றில் என்ன உள்ளன என்பது யாருக்கும் தெரியாது. படிக்க, ஆராய பல நூறு அறிஞர்கள் பல்லாண்டுகள் உழைக்க வேண்டும்.
WORLD FAMOUS HISTORIAN AND ARCHAEOLOGIST DR R NAGASWAMI EXPLAINS THE MEANING OF ‘UDAIYA’ IN “TENNAATTUDAIYA SIVANE POTRI” OF SAINT MANIKKAVASAGAR PLUS THIRUPPUGAZ, NEWS AND VIEWS AND OTHER DEVOTIONAL MATTERS.
EVERY SUNDAY FOR TAMIL
EVERY MONDAY FOR HINDUISM
XXX
SAME TIME ONE PM LONDON TIME
6-30 PM INDIAN TIME
WHERE ? AT FACEBOOK.COM/GNANAMAYAM
Facebook.com/gnanamayam
XXX
MR SRINIVASAN, MRS BRHANNAYAKI SATHYANARAYANAN AND DR KANNAN PRESENT THEIR USUAL FEATURES PLUS TIRUPPUGAZ SONGS BY MRS JAYANTHI SUNDAR AND GROUP.
XXX
WE R THERE EVERY SUNDAY, EVERY MONDAY; PLEASE JOIN US LIVE
IF U MISS OUR LIVE BROADCAST, VISIT OUR SITE AFTER ONE OR TWO HOURS ON THHE SAME DAY, U CAN WATCH US.
SAME PLACE, SAME TIME EVERY SUNDAY, EVERY MONDAY
WE WELCOME U ALL TO BECOME BROADCASTERS AND TELECASTERS, PRESENTERS AND READERS.
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Thuban is a famous star in the sky. It has become famous because of its link with the greatest Pyramid in Egypt. Thuban was the pole star 5000 years ago. And the shafts in Khufu Pyramid align with this star. But the name Thuban is wrong. Dhruvan in Hindu mythology is misspelt, and mis pronounced as Thuban.
If one reads the story of Thuban in different websites, one will see the report is a bundle of contradictions.
What are the contradictions?
Latin name of the star DRACON is attributed to Latin meaning ‘dragon’. But the name THUBAN of the star is attributed to Arabic word which means dragon’s head. It is strange that only the head gets Arabic name body gets Latin name!!
The second contradiction is that even the country which has dragon as its symbol- china, has its own interpretation. But none would fit in here.
Arabs took all the Hindu numerals and mathematics to the West, and the half -baked westerners dubbed it as ‘Arabic’.
But the fact of the matter is Dhruva means ‘Firm, Static and Strong’ in Sanskrit. Hindus gave this epithet to the pole star. Now it is Polaris which is pointed by Sapta rishi stars near North pole (Ursa Major, Big Dipper, Great Bear) constellation; this is known as Dhruva Nakshatra today.
When Thuban became poll star around 3600 BCE, it also had the same meaning ‘Dhruva’= firmly standing . But it was confused with the word Dhruva and changed it from Dhruva to Dracon and then to Thuban. All mean the same name Dhruva.
Giving new stories or new explanations to old words are quite common. If we look at the sthala Puranas of every temple in Tamil Nadu we have at least one new story attached to it. Sometimes they may even be correct. During the course of several thousand years of long history many things might have happened around a particular time or period.
Why do Pole Stars change?
Change of pole star occurs because of earth’s axis rotation. The earth rotates on its axis and one complete round takes 26,000 years. It may have several pole stars before one complete round. Hindus are the only ones who aptly named it as Firm Star/ Dhruva.
Later it was told that Dhruva was made a pole star because of the little boy’s fight with his step mother. This star helped sailors to find their way during their trip around the world. Hindus named the Great Bear as Sapta Rishis/ Seven Seers. In the same way they named Tri Shanku (Southern Star) and Agastya (Canopus) in the Southern Hemisphere. That also helped people to sail round the world.
Neither Dracon/Dragon nor Thuban is right. Dhruva nakshatram (Star) is right.
Dhruva= Firm star.
Dhruva – Dracon—Thuban
Whatever the star that stands aligned to the axis of the earth that star becomes a pole star. That is ‘firm star’ which means Dhruva.
Arabic has nothing to do with the name. Like it stole the name of Hindu Numerals it has done one more theft!
Look at what other sources say…………… Thuban, Dhruva, Dracon, Dragon, Pole star, Earth axix
The encyclopaedias say,
Thuban/ˈθjuːbæn/,[7] designation Alpha Draconis (α Draconis, abbreviated Alpha Dra, α Dra), is a star (or star system) in the constellation of Draco. A relatively inconspicuous star in the night sky of the Northern Hemisphere, it is historically significant as having been the north pole star from the 4th to 2nd millennium BCE.
The traditional name Thuban is derived from the Arabic word ثعبان thuʿbān, ‘large snake’ (e.g. a python or a legendary draconian serpent). It is sometimes known as the Dragon’s Tail and as Adib/əˈdiːb/.[7] In 2016, the International Astronomical Union organized a Working Group on Star Names (WGSN)[8] to catalog and standardize proper names for stars. The WGSN’s first bulletin of July 2016[9] included a table of the first two batches of names approved by the WGSN; which included Thuban for this star. It is now so entered in the IAU Catalog of Star Names.[10]
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
வானவெளியில் ஒளிரும் நக்ஷத்திரங்கள் மனித குலத்தின் கவனத்தை ஈர் த்ததில் வியப்பில்லை . இன்றுவரை உலகிலுள்ள ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். வேதகால குறிப்புகளைப் பார்க்கையில் அதில் 25,000 ஆண்டுப் பழமையான குறிப்புகள் உள
. ஒருவேளை அவர்கள் ஆதிகால மனிதர்களின் குறிப்புகளை அப்படியே வழி வழியாக வாய் மொழியாகப் பரப்பி பாதுகாத்து வந்திருக்கலாம். அல்லது அவர்கள் உண்மையிலேயே 25,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்திருக்கலாம். ஆனால் நான் முதலில் சொன்னதைத்தான் ஏற்பேன். இன்றும் கூட விண்வெளி அறிஞர்கள் பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட நக்ஷத்ர வெடிப்புகள் பற்றிப் பேசுகின்றனர். உடனே அவர்களைப் பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர்கள் என்று சொல்லமாட்டோம்.
மஹாபாரதப் போரில் பிரம்மாண்டமான வியூகங்களை (ARMY FORMATIONS) பார்க்கிறோம். எப்படிச் செய்தனர்? மண்ணில் சிறிய படங்களை கணிதரீதியில் வரைந்து அதைத் துல்லியமாகப் பெரிதாக்கினர். இப்படி தென் அமெரிக்காவில் பெரு (PERU IN SOUTH AMERICA) நாட்டில் 300 பிரம்மாணடமான வரைபடங்கள் 2000 ஆண்டுகளாக உள்ளன. அவர்களுக்கும் நாமே கணித ரீதியில் வரைபடங்களை மண்ணில் சிறிய அளவில் வரைந்து அதையே கணித அடிப்படையில் பெரிதாக்கக் கற்பித்தோம். அதனால் அந்த நாடே இன்று பெரு= பேர் உரு (PER+URU= PERU) என்று அழைக்கப்படுகிறது. உரு என்பது சம்ஸ்கிருதம். ‘ப்ருஹத் ரூப’ என்பது பேர் உரு ஆயிற்று. இதே போல இன்றைய வரைபடங்களைக் கொண்டு 25,000 ஆண்டுகளுக்கு முன்னர் என்று ரிஷிகளும் தற்கால விஞ்ஞானிகளும் அறிகின்றனர்.
பூமியின் அச்சு 26,000 ஆண்டுகளுக்கு ஒரு முறை (EARTH’S AXIS) பம்பரம் போல வட்டமடித்து நிற்கும். அப்போது எந்தெந்த நக்ஷத்திரத்துக்கு மேல் பூமியின் அச்சு நிற்கிறதோ அந்தந்த நக்ஷத்ரத்தை துருவ நக்ஷத்ரம் (POLE STAR= DHRUVA) என்பர். துருவ என்றால் உறுதியான நிலையான என்று பொருள். த்ருவ (DHRUVA) என்ற சம்ஸ்கிருதத் சொல் உறுதி என்று தமிழில் மாறியது.
5000 ஆண்டுகளுக்கு முன்னர் துபன் (THUBAN) என்ற நக்ஷத்ரம் துருவ நக்ஷத்திரமாக இருந்தது. இதைப் பற்றி கலைக் களஞ்சியங்களில் (ENCYCLOPAEDIAS) பார்த்தால் தூ பன் (THUBAN) அல்லது துபன் என்பது பாம்புத் தலை என்று பொருள்படும் என்றும் அது அராபியர் சூட்டிய பெயர் என்றும் எழுதியிருப்பார்கள். அத்தனையும் தவறு என்பது அந்த கலைக்களஞ்சியக் குறிப்புகளில் இருக்கும் முரண்பாடுகளைக் கொண்டே அறியலாம்.
ட்ராகன் (DRAGON = DRACON/LATIN) என்றால் ராட்சத மிருகம் என்று லத்தின் மொழியில் அர்த்தம் என்றும் எழுதியிருப்பர். நக்ஷத்ரக் கூ ட்டத்துக்கு பெயர் வைத்தது லத்தின் மொழியில்! அதன் தலைக்குப் பெயர்வைத்தது அரேபிய மொழியில் என்பதெல்லாம் தவறு!
இந்துக்கள் கண்டு பிடித்த 1, 2, 3, 10 என்ற வரி வடிவங்களையே அராபிக் எண்கள் (ARABIC NUMERALS= HINDU NUMERALS) எழுதிவிட்டு அவை உண்மையில் இந்துக்கள் கண்டுபிடித்த இந்து நியூமெரல்கள் (HINDU NUMERALS) என்று என்சைக்ளோபீடியாக்கள் எழுதும் அல்பெரூணி (ALBERUNI) போன்ற அரேபிய அறிஞர்களும் எழுதிவைத்துள்ளனர்.
5000 ஆண்டுகளுக்கு முன்னர் எகிப்தியர் பிரமிடுகள் கட்டினார்கள் என்றும் அப்போது தூபான் (THUBAN) துருவ நக்ஷத்ரமாக இருந்தது ; அதனால் எகிப்திய பிரமிட்டின் சாளரம் அந்த விண்மீனை நோக்கி இருந்தது என்றும் சொல்லி வியப்பர். உண்மையில் தூபன் என்பது துருவன் என்பதன் (THUBAAN= DRUVAN) திரிபே. . இடை விடாது தவம் செய்து இறைவனைக் கண்ட சிறுவன் துருவன் என்றும் அவனது பெயர் இந்த நக்ஷத்ரத்துக்குச் சூட்டப்பட்டது என்றும் புராணங்கள் விளம்பும். இதற்கு மற்றொரு
சான்று – இப்போதைய துருவ நடசத்திரத்தை நோக்கி நிற்கும் 7 நட்சத்ரங்களையும் இந்துக்கள் சப்த ரிஷிக்களின் பெயர் சூட்டி வணங்கி வருகின்றனர் (SAPTA RISHI CONSTELLATION = URSA MAJOR= GREAT/BIG DIPPER). இது 2000 ஆண்டுப் பழமையானது என்றும் அறிவோம்.
லத்தின் மொழியில் உள்ள ட்ராகனும் (APHA DRACONIS) துருவ என்பதன் திரிபே! அது திரிந்து துபன் ஆகியது . சீன மொழியில் இதற்கு வேறு பெயர் இருப்பதும் குறிப்பிட்டது. ஆக முரண்பாடுகள் வெட்ட வெளிச்சத்துக்கு வந்துவிட்டன.
இன்றும் கூட இலங்கை , மொரிஷியஸ் , மலேசிய தமிழர்களிடம் த்ருவ (DRUVA) என்று எழுத சொன்னால் அவர்கள் இந்தியத் தமிழர் மாதிரி எழுதாமல் இதே ஸ்பெல்லிங்கில்தான் (THURUVAN; V=B; THURBAN)எழுதுவார்கள்.
மற்றொரு சான்று தெற்கிலுள்ள பெரிய- பிரகாசமான நக்ஷத்திரங்களுக்கும் கூட அகஸ்தியர் (CANOPUS) திரிசங்கு (SOUTHERN CROSS) பெயர்களை சூட்டியது ஆகும். இந்துக்களால் புகழடைந்த இந்த திரிசங்கு நக்ஷத்ரத்தை இன்றுவரை ஆஸ்திரேலிய, நியூசிலாந்து பசிபிக் தீவு கொடிகளிலும் அஞ் சல்தலைகளிலும் காணலாம்.
அக்கால இந்துக்களே முதலில் வான சாஸ்திரத்தையும் கணித சாஸ்திரத்தையும் உலகிற்கு சொல்லிக்கொடுத்தார்கள் என்பதே உண்மை.