Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
DON’T FORGET TO READ 43 PARTS – “TAMIL WORDS IN ENGLISH” THAT ENDED ON SIXTH DECEMBER 2020; THIS SERIES STARTED ON NINTH DECEMBER 2020.
ALL THE NUMBERS BELOW ARE SUTRA NUMBERS FROM 2700 YEAR OLD ‘ASHTADHYAYI’ OF PANINI, WORLD’S FIRST GRAMMAR BOOK .
XXX
2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், ஆங்கில சொற்கள் – பகுதி -26
3-2-96
Saha is Co in English
We have lot of Co prefixed words in English.
Sahayudhwa in Sanskrit is co fighter
Sahakrtwa in Sanskrit is coworker
‘ஸஹ’ என்பது ஆங்கிலத்தில் Co/கோ என்னும் முன்னொட்டு ஆக வருகிறது
Xxx
3-2-97
Buddhija- born out of knowledge
புத்திஐ = அறிவிலிருந்து பிறந்த
Buddha was enlightened
புத்தா – ஞானம் பெற்றவர்.
சங்கத் தமிழ் இலக்கியத்தில் புத்தர், மஹாவீரர் என்ற பெரியோர்கள் பற்றிய குறிப்பே கிடையாது !!
ஐந்தாம் நூற்றாண்டு அல்லது அதற்குப் பின்னர் எழுதப்பட்ட சிலப்பதிகாரம் மணிமேகலையில்தான் (Post Sangam Literature) அப்படிப்பட்ட குறிப்புகள் வருகின்றன.
Strangely ancient Sangam literature never mentioned Buddha or Ma-havira by name.
Tamil epics , dated between 5th and 7th centuries only mention them. Silapaadikaram and Manimegalai, twin epics, are dated between those two centuries. But the stories mentioned there happened around Sangam period, that is first three centuries of CE.
Xxx
3-2-99
Prajaah- citizens
Used in all indian languages.
Words used by commentators
பிரஜா- பிரஜைகள் = குடிமக்கள்
Xxx
3-2-101
Ajah- one who has no birth
Dwijah – one who has two births
Ancient Tamil literature called Brahmins with this term.
After initiation, sacred thread ceremony, they are born second time.
In very old days it was applied to first three castes.
அஜஹ = பிறப்பற்றவன்
அஜன் என்பது அயன் என்று தமிழ்மயமாக்கப்படும்.
தமிழில் ஜ- முதலிய சப் தங்கள் இல்லாத குறையே இதற்கு கா ரணம்.; மேலும் ஜ – என்னும் எழுத்து ய- ஆனதையும் காண்கிறோம்.
Another interesting factor is J becomes Y in Tamil, because Tamil has no
J, SH, SHA, SA AND HA
XXX
3-2-104
Jara – old age
ஜரா – மூப்பு , நரை
Gerontology- study of ageing
Jeerana is derived from Jru
‘ஜ்ரு’ என்ற வேர்ச் சொல்லில் இருந்து ஜீரணம், ஜரா முதலியன பிறந்தன.
Old, gone, dilapidated etc
Jeerana is used in all medical books in Indian language s
Also temple renovations- Jeernodhdhaarana
கும்பாபிஷேகம், திருப்பணியின்போது ‘ஜீர்ணோத்தார’ என்ற சொல்லையும் பயன்படுத்துவர்.
Xx
3-2-110
Awaatsam – wide awake
அவாசம் – விழிப்பு நிலை
Aham atra awaatsam means
I was wide awake
Xxx
3-2-11
Yavana is mentioned by Patanjali
யவன என்பது தமிழ்ச் சங்க இலக்கியத்தில் 6 இடங்களில் வந்த போதிலும் அவை பெரும்பாலும் ரோமானியர்களையே குறிக்கும்.
யவனர்கள், அலெக்ஸாண்டர் படை சென்றபின்னர் , தனித்தனி இந்திய-கிரேக்க ராஜ்யத்தை உண்டாக்கினர். சாகேதம் மாத்யாமிகம் ஆகிய இடங்களை யவனர்கள்/கிரேக்கர்கள் .முற்றுகையிட்டனர் .
Sangam Tamil literature mentioned Yavanas six times. But they were Romans, not Greeks
Patanjali talked about the siege laid by the Greek s around Saketam and Maadhyamikam
Xxx
3-2-112
Abignaa- remembering
Abignjana Sakuntalam made this word know
N to everyone
Also living in Kashmir also remembered
Apignanamintum ninaivupatuththa.
அபிக்ஞானந்த சாகுந்தலம் – நினைவு கூறல்
Xxx
3-2-114
In the commentary of the sutra we come across two words
Lakshya
Lakshana
Tamil Ilakkiyam and Tamil Ilakkanam are derived from these two words
இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI ANAND
எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 1 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம். உலக இந்து சமய செய்தித் தொகுப்புடன் நேயர்களின் கேள்விகளுக்கு விடைகளும் அளிக்கப்படுகிறது.
எங்களை எந்நேரமும் தொடர்பு கொள்ள Facebook.com / Gnana mayam முகவரியில் அணுகவும்
அன்பர்கள் கவனிக்கவும்
சென்ற வாரம் வரை திங்கட்கிழமைகளில் ஒலி பரப்பப்பட்டு வந்த உலக இந்து சமய செய்தி அறிக்கை இனிமேல் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒலி பரப்பாகும் .
xxxx
முதலில் நல்ல செய்தியுடன் துவக்குவோம்……..
ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெள்ளிக்கிழமை ரூ.5 லட்சம் நன்கொடை அளித்தார்.
உத்தர பிரதச மாநிலம் அயோத்தியில் சுமார் 1,100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ராமர் கோயில் கட்டப்படுகிறது. இதற்காக இந்தியா முழுவதும் 5.2 லட்சம் கிராமங்களுக்கு சென்று மக்களிடம் நிதி திரட்டும் திட்டம் தொடங்கியுள்ளது. பிப்ரவரி 27-ல் இப்பணிகள் முடிவடையும். இதனை ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை கவனிக்கிறது. ரூ.20,000-க்கு மேல் நன்கொடை கிடைத்தால் அவற்றை காசோலையாக பெறுவது என முடிவு செய்துள்ளனர். நன்கொடையாக பெறும் பணத்தை 48 மணி நேரத்திற்குள் வங்கி கணக்கில் சேர்க்கப்படும் என்று அறிவித்துள்ளனர். இதுவரை ஆன்லைன் நன்கொடை மூலமாக சுமார் 100 கோடி ரூபாய்க்கு மேல் நிதி சேர்ந்துள்ளது.
இந்நிலையில் ராமர் கோயில் கட்டுமான இயக்கத்தின் முன்னணி அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத்தின் சர்வதேச செயல் தலைவர் அலோக் குமார் தலைமையில் ஒரு குழு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தது. அவர்களிடம் 5 லட்சத்து 100 ரூபாயை தனது பங்களிப்பாக ஜனாதிபதி வழங்கினார்.
உத்தரப் பிரதேச முதல் அமைச்சர் யோகி ஆதித்ய நாத் 2 லட்சம் ரூபாயும்,
மத்தியப் பிரதேச முதல் அமைச்சர் சிவராஜ் சிங் செளஹான் 1 லட்சம் ரூபாயும்
கன்னட, தெலுங்கு, தமிழ் திரைப்பட நடிகை பிரனீதா சுபாஷ் 1 லட்சம் ரூபாயும்
கோவில் கட்ட நன்கொடை அளி த்துள்ளனர்
Xxxxx
பொன்னம்பல மேட்டில் மூன்று முறை காட்சி தந்தது மகரஜோதி
சபரிமலை ஐப்பன் கோவில் மகரவிளக்கு பூஜையின் முக்கிய நிகழ்வான மகரவிளக்கு விழா ஜனவரி 14ம் தேதி நடைபெற்றது. பந்தளத்திலிருந்து புறப்பட்ட திருவாபரண பவனி மாலை 5.30 மணிக்கு சரங்குத்தி வந்தடைந்தது. அங்கு திருவிதாங்கூர் தேவசம்போர்டு அதிகாரிகளின் வரவேற்புக்கு பின்னர் சன்னிதானத்துக்கு கொண்டுவரப்பட்டது.
18-ம்படி வழியாக சோபானத்திற்கு வந்ததை தந்திரியும், மேல்சாந்தியும் திருவாபரணத்தை வாங்கி நடை அடைத்து சிலையில் ஆபரணங்கள் அணிவித்தனர். தொடர்ந்து நடை திறந்து தீபாராதனை நடைபெற்றது.
தீபாராதனை முடிந்து சில வினாடிகளில் பொன்னம்பல மேட்டில் மூன்று முறை மகர ஜோதி காட்சி தந்தது. அப்போது சபரிமலையையே அதிர வைக்கும் சரண கோஷம் எழுப்பினர் பக்தர்கள்.
இந்த ஆண்டு பந்தளம் மன்னர் குடும்பத்தில் குழந்தை பிறந்துள்ளதால், ராஜ பிரதிநிதியாக யாரும் பவனியில் வரவில்லை.முக்கிய திருவாபரண பெட்டியை, குருசாமி கங்காதரன் சுமந்து வந்தார். வரும் 18ஆம் தேதி வரை ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் நடைபெறுகிறது. 19ஆம் தேதி வரை யில் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். மகரவிளக்கு பூஜை முடிந்து 20ஆம்தேதி காலை 6.30மணிக்கு கோவில் நடை அடைக்கப்படுகிறது. இத்துடன் இந்த ஆண்டிற்காக மண்டல பூஜை, மற்றும்மகர விளக்கு பூஜைக்காலம் முடிவடைகிறது.
Xxxx
ஆசியாவிலேயே மிகப்பெரிய அன்னதான மண்டபம் சபரிமலையில் திறப்பு
ஆசியாவிலேயே மிகப்பெரிய அன்னதான மண்டபம் சபரிமலையில் திறக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 5,000 பேருக்கு குறையாமல் அமர்ந்து சாப்பிடும் அளவுக்கு இட வசதி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக கட்டப்பட்டுள்ள அன்னதான மண்டபத்தை அமைச்சர் சுரேந்திரன் திறந்து வைத்தார்.
Xxxxx
“இந்தியா முழுவதிலும் வாழும் இளைஞர்கள் திருக்குறளைப் படிக்க வேண்டும்” – பிரதமர் மோடி
எக்காலமும் மாறாத அறத்தை எடுத்துரைக்கும் உலகப் பொதுமறை நூலான திருக்குறளை இவ்வுலகிற்கு வழங்கிய திருவள்ளுவரை போற்றும் வகையில் தை மாதம் 2 ஆம் நாள் திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்படுகிறது.
இதையடுத்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் திருவள்ளுவர் தினத்திற்கு தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். சமீப காலமாக பிரதமர் மோடி பல்வேறு இடங்களில் பேசும் போது. திருக்குறளின் பெருமைகள் குறித்தும், அதை அனைவரும் படிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த வகையில் இன்று அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்தியா முழுவதிலும் வாழும் இளைஞர்கள் திருக்குறளைப் படிக்க வேண்டும் என தான் வலியுறுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். போற்றுதலுக்குரிய திருவள்ளுவரை அவரது பிறந்தநாளில் வணங்குவதாகவும், அவரது சிந்தனைகளும் படைப்புகளும் அவரது மகத்தான அறிவையும் அவருக்கு வாய்த்த ஞானத்தையும் பிரதிபலிப்பதாகவும் மோடி கூறியுள்ளார்.
பாகிஸ்தானின் கைபர் மாகாணம் பாட்டன்குவா அரசு 12 பாகிஸ்தான் போலீசாரை இடைக்கால பணி நீக்கம் செய்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி அப்பகுதியில் உள்ள ஓர் இந்துக் கோவில் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பினரால் எரிக்கப்பட்டு சேதமாக்கப்பட்டது. டெரி என்கிற கிராமத்தில் உள்ள இந்த இந்து கோவில் மிகவும் பழமையானது. இதற்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான இந்துக்கள் வருகை தருவர்.
இந்த கலவரத்துக்கு 33 பாகிஸ்தான் போலீசார் உதவிகரமாக இருந்ததற்காக இவர்கள்மீது ஓராண்டுக்கு நடவடிக்கை பாய்ந்துள்ளது. இந்த மாகாணத்தின் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் கோகட் ரீஜன் இதுகுறித்து விசாரணை செய்துவந்தார். இந்த வன்முறை சம்பவம் நடந்தபோது அதனை தடுக்க முயலாமல் அஜாக்கிரதையாக இருந்த 73 பாகிஸ்தான் போலீசார் மீது விசாரணை கமிஷன் வைக்கப்பட்டது. இதில் 12 போலீசார் மீது குற்றம் சுமத்தப்பட்டு அவர்களுக்கு இடைக்கால பணிநீக்கம் அளிக்கப்பட்டது.
XXX
திருவாவடுதுறையில் பொற்கிழி விழா
திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரா் ஆலய ரதசப்தமி விழாவில், … இறைவன் பொற்கிழி அளித்த புராண நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை .நடந்தது
மயிலாடுதுறை -கும்பகோணம் சாலையில் சென்று இத்தலத்தையடையலாம். திருவாவடுதுறை ஆதீனக் கோயில்.. இறைவி பசுவடிவில் வழிபட்ட பதி. ஆதீனமும் கோயிலும் ஒன்றையன்று அடுத்துள்ளன.
ஞானசம்பந்தர், தன் தந்தையின் வேள்விக்காக இறைவனிடம் பொற்கிழி பெற்றது. 2) சுந்தரர் உடற்பிணி தீரப் பிரார்த்தித்தது, 3) திருவிடைமருதூரின் பரிவாரத் தலங்களுள் நந்தித் தலமாக விளங்குவது, 4) தேவர்கள் ‘படர் அரசு’ ஆக விளங்க அதன்கீழ் இறைவன் எழுந்தருளியது, 5) திருமூலர் தங்கியிருந்து தவம்செய்து திருமந்திரம் அருளியது, 6) போகசித்தருடைய மாணவராகிய திருமாளிகைத் தேவர் பல அற்புதங்களை நிகழ்த்தியது, முதலிய எண்ணற்ற சிறப்புக்களையுடைய தலம்.
இரண்டாங் கோபுர வாயிலில் பெரிய நந்தியுள்ளது. பின்னால் உள்ள பலிபீடமே ஞானசம்பந்தருக்குப் பொற்கிழி அளித்த இடமாகும்
”அனைவரும் பயன்பெறும் விதமாக கோவில்களை ஆன்மிக மையங்களாக மாற்ற வேண்டும்,” என, ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு கூறினார்.
ஈஷா யோகா மையத்தில் நடந்த மாட்டுப் பொங்கல் விழா நிறைவில் சத்குரு ஜக்கி வாசுதேவ் நிருபர்களிடம் கூறியதாவது:உயிர் நாடியான காவிரி தமிழகம் உட்பட மூன்று மாநிலங்களில் ஓடுகிறது. மூன்று மாநிலங்களும் சேர்ந்து, அறிவியல் குழு அமைத்து, தண்ணீர் பெருக்கெடுப்பதற்கான ஆலோசனை அறிக்கையை ஆறு மாதத்துக்குள் பெற்று தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் நெல் வளர்ந்தால் அண்டைய மாநிலங்களில் விற்கமுடியாது. விவசாயிகளுக்கு இதில் விடுதலை அளித்து, எங்கும் விற்கும் நிலை உருவாக வேண்டும். அனைத்து இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பு என்ற நிலை வர வேண்டும். கோவில்கள் ஆன்மிக மையங்களாக மாற வேண்டும். ஜாதி, மதம், பாலினம் பாகுபாடின்றி ஆன்மிக நோக்கத்துடன், கற்றுக்கொள்ளும் உணர்வுடன் வருபவர்களுக்கு இந்த மையம் பயனுள்ளாக இருக்க வேண்டும். 36 ஆயிரம் கோவில்கள் தமிழக அரசிடம் உள்ளது.
இதை படிப்படியாக செய்தால், எட்டு ஆண்டுகளில் சாதிக்க முடியும். அரசுதான் கோவில்களை நிர்வகிக்க வேண்டும் என நினைப்பது தவறானது. இவற்றுக்கு உறுதி கொடுப்பவர்களுக்குதான் எனது ஓட்டு. இவ்வாறு, ஜக்கி வாசுதேவ் கூறினார்.
XXXXXXXXXXXXXXXXXXX
கடைசியில் ஒரு சுவையான செய்தி
கோயில் வாசலில் பக்தர்களுக்கு ஆசி வழங்கும் நாய்: வைரலாக பரவும் வீடியோ
மஹாராஷ்டிராவில் விநாயகர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு நாய் ஆசி வழங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.
மஹாராஷ்டிரா மாநிலம் அகமத்நகர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சித்திவிநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் விநாயகரை தரிசித்து விட்டு வெளியே வரும் போது நுழைவு வாசலில் அமர்ந்து கொண்டு நாய் ஒன்று பக்தர்களுக்கு ஆசி வழங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சாமி கும்பிட்டு விட்டு வெளியே வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்குவதும், சிலரிடம் கை குலுக்குவதுமாக அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இதனை அருண் லிமாடியா என்பவர் மொபைலில் வீடியோவாக படம் எடுத்து முகநூலில் பதிவேற்றினார். அதன் வீடியோவை பலரும் பகிர்ந்துள்ளனர்.
XXXX
இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த்………………………… நன்றி, வணக்கம்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
17-1-2021 WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH
Namaste , Namaskaram to Everyone
This is a weekly ‘HINDU NEWS ROUND UP’ from around the world.
Read by SUJATHA RENGANATHAN .
XXX
This is a broadcast coming through ZOOM and FACEBOOK.COM / GNANA MAYAM live at
ONE pm London Time and 6-30 PM Indian Time Every SUNDAY.
Even if you miss our live broadcast on SUNDAYS
, you can always visit us on FACE BOOK.COM – slash- Gnana Mayam 24 hours a day.
Here is the WEEKLY HINDU NEWS BULLETIN from ‘Aakaasa Dhwani’
– Read by SUJATHA RENGANATHAN .
XXX
Please Note that
The World Hindu News Roundup is moved to Sundays from this week. Here afterwards the WORLD HINDU NEWS ROUNDUP will be broadcast on SUNDAYS.
HERE IS A SUMMARY FROM INDIAN NEWSPAPERS-
FIRST , NEWS ABOUT RAM TEMPLE IN AYOGHYA
President Kovind donates Rs 5 lakh for Ram temple
President Ramnath Kovind made the first contribution towards the construction of the Ram temple in Ayodhya by donating a sum of Rs 5,01,000. The President made the contribution to the Ram Janmabhoomi Teerath Kshetra Trust, set up by the government to look after the construction and management of the temple.
A delegation comprising Vishva Hindu Parishad’s international working president Alok Kumar, and others had come to DELHI to seek the President’s contribution for the construction to the temple.
“He is the first citizen of the country so we went to him to initiate this drive. He donated a sum of Rs 5,01,000,” ANI quoted VHP’s Alok Kumar as saying.
Uttar Pradesh chief minister Yogi Adityanath donated Rs 2 lakh for construction of the proposed Ram temple in Ayodhya on the inaugural day of the funds-raising drive of Vishwa Hindu Parishad.
Madhya Pradesh Chief Minister Shivraj Singh Chouhan also handed over a cheque of Rs 1 lakh to VHP as a contribution to the construction of Ram temple. Former Bihar Deputy CM Sushil Kumar Modi also led a fund drive cause in Patna.
Film Actress Pranitha Subhash who predominantly appears in Kannada, Telugu and Tamil cinema has announced an initial pledge of Rs 1 lakh for the construction of the Ram Mandir in Ayodhya.
Pranitha made this announcement in a twitter video.
The RSS will reach out to 5 lakh villages and ten crore families for collection of funds for Ram Temple in Ayodhya.
The construction of the grand temple of Lord Ram at the ancient city of Ayodhya is estimated to cost around Rs 1,100 crore, of which around Rs 300-400 crore will be the cost of building the main temple structure.
XXX
Kumbh Mela in Haridwar
Hindu pilgrims descended on the banks of the Ganges river in HARIDWAR ON Thursday, shrugging off Covid-19 risks for the start of the Kumbh Mela, a religious festival that regularly attracts millions.
“The pandemic is a bit of a worry, but we are taking all precautions,” said organiser Siddharth Chakrapani, who expected between 800,000 and a million people to attend on FIRST DAY alone.
“I’m sure Maa Ganga will take care of their safety,” he added, referring to the river considered holy by the faithful.
According to Hindu mythology, gods and demons fought a war over a sacred pitcher containing the nectar of immortality. Drops fell at four different locations, which now alternate as hosts for the immense gatherings. Every four years Mini Kumbha Melas are held in different locations
Maha Kumbh Mela is recognised as a piece of intangible cultural heritage by UNESCO, and its last edition — in Prayag in 2019 — attracted around 55 million people over 48 days. That is held once in 12 years.
This year, beginning Thursday, Haridwar is the host, and several million people are expected to throng the holy city in Uttarakhand state over the coming seven weeks.
Holy men known as ‘sadhus’ are a regular feature at the Kumbh Mela, camping by the river and offering blessings to those who come for the holy immersion.
This week brings several other religious festivals in India, including the Gangasagar in Kolkata where officials expect around 15,000 people.
Madurai in the southern state of Tamil Nadu hosted a bull-chasing carnival known as Jallikattu, where revellers grab hold of the beasts’ horns as they run through crowds of people.
XXXX
Kamadhenu puja held at Kanaka Durga temple in Vijayawada
Andhra Pradesh Chief Minister YS Jagan Mohan Reddy participated in the Kamadhenu Puja in Guntur district on Friday
The authorities of Sri Durga Malleswara Swamy Varla Devasthanams conducted Kamadhenu puja atop Indrakeeladri on the occasion of Kanuma on Friday.
The ‘go puja’ was simultaneously held at 2,679 temples across the State by Tirumala Tirupati Devasthanams as part of promoting Sanatana Hindu Dharma.
Speaking to the media, temple executive officer MV Suresh Babu said the gopuja will be conducted daily from now onwards and the devotees can also participate in the ritual.
The Executive Officer said that Chaturveda Homam will be performed at the temple from January 18 to 25. He also explained the importance of cow worship in the Hindu religion
IN THE MEANTIME……………………………….
Telugu Desam leaders met Governor Biswabhusan Harichandan on Thursday and submitted a representation seeking a CBI probe into the series of attacks on temples in ANDHRA PRADESH in recent days. They also sought removal of the Jagan-led government and imposition of President’s rule in the state.
THEY informed the governor that 140 temples were attacked since the YSR Congress came to power. This, they said, was a violation of fundamental rights of the people and dilution of Articles 25 and 26 providing religious freedom to the people.
The Telugu Desam leaders alleged allotment of shops in Srisailam temple in violation of GO No. 426 to non-Hindus. The presence of these non-Hindus was affecting the sanctity of the temple as they sold meat, liquor and drugs, it was alleged
HERE IS ANOTHER NEWS ITEM FROM ANDHTRA………………….
Goda Devi Kalyanam performed
Goda Kalyanam was performed in a traditional manner at Venkateswara Swamy temple in Dokiparru of Krishna district on Wednesday. The celestial wedding was performed to mark the conclusion of Dhanurmasam festivities by temple trustee PV Krishna Reddy and his wife Sudha Reddy.
Along with Krishna Reddy’s family members, a large number of villagers and people from surrounding villages also participated in the event. The wedding known as Andal Kalyanam in Tamil Nadu, was performed in a mandap decorated with colourful flowers.
XXXX
Makaravilakku IN Sabari Malai
Lakhs of Ayyappa devotees witnessed ‘Makara jyothi’ in Sabarimala on 14th January.
Sabarimalai hill temple, which used to witness a heavy rush on the occasion every year, was thronged by only a few thousand pilgrims due to the strict safety guidelines in place in the wake of the virus outbreak.
As per the government directive, only 5,000 pilgrims were permitted to climb the holy hills to offer prayers on the day, according toTravancore Devaswom Board (TDB) officials .
The portals of the shrine was thrown open after the ”deeparadhana” which was performed to the idol of Lord Ayyappa adorned with the holy jewels, ”Thiruvabharanam”.
The jewels were brought here, moments before the ”arti”, in a ceremonial procession, which started its journey a couple of days earlier from the Pandalam palace, where, according to legend, Lord Ayyappa was born and spent his childhood.
The ”Saranam Ayyappa” chants intensified when the ”makara jyothi”, considered a divine light by devotees, flickered across the eastern horizon above the Ponnambalamedu soon after the arti.
Meanwhile, state Devaswom Minister Kadakampally Surendran earlier said here that the Left government was prepared to extend all support for the developmentof Sabarimala.
Indicating the fall in revenue collection at the hill temple, he said only Rs 16 crore was collected till Tuesday in this season compared to the revenue of Rs 260 crore last year.
The minister also requested devotees to extend all help to the hill shrine.
xxxx
“VRINDAVANA MALIKA” CD Released
Vaishnavite Saint Andal’s ‘Naachiyar Thirumozhi’ Music CD by Vidushi Yamini Ramesh ,was released at Sri Ahobila Matam by His Holiness Srimath Azaghiyasingar. The function was held on 11th evening.
செம்பருத்தி பூவின் நிறம் உடையவன். காஸ்யபரின் புதல்வன். மிகவும் ப்ரகாசம் உடையவன். இருட்டின் பகைவன். எல்லா பாவங்களையும் அழிப்பவன். அந்த சூரியனை நமஸ்கரிக்கிறேன்.
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது சூரிய தேவன், உஷாதேவி, பிரத்யுஷாதேவியுடன் வீற்றிருக்கும் புகழ் பெற்ற தலமான சூரியனார் கோவில். சென்னையிலிலிருந்து இது 312 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கும்பகோணத்திலருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும் ஆடுதுறையிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
இந்த தலத்தைப் பற்றி ஏராளமான புராண வரலாறுகள் உண்டு.
முன்னொரு காலத்தில் காலவ முனிவர் என்னும் முனிவர் தனக்கு குஷ்ட நோய் வரப்போவதை உணர்ந்து நன்மை தீமைகள் ஏற்படுவதற்கு காரணமாக இருப்பது நவ கிரஹங்களே என்பதால் நவ கிரஹங்களைக் குறித்துக் கடும் தவம் மேற்கொண்டார். தவத்திற்கு இரங்கி நவ கிரஹங்களும் முனிவர் முன் தோன்ற, முனிவர் தனது குறையைக் கூறி தொழு நோய் வராமல் தன்னைக் காக்க வேண்டினார். நவகிரஹங்களும் அவருக்கு தொழுநோய் அணுகாத வண்ணம் வரம் அளித்தனர். இதை அறிந்த பிரம்மதேவன், காலதேவனின் துணை கொண்டு அனைத்து உயிர்களுக்கும் பாவ புண்ணிய பலன்களைக் கொடுக்காமல், இப்படி வரம் அளித்தது தவறு என்றும் கூறி, முனிவரது தொழுநோய், நவகிரஹங்களுக்குப் பிடிக்குமாறு சாபம் அளித்தார்.
நவகிரஹங்களும் அவரது அருள் வேண்ட, அவர் கூறிய படியே காவிரியின் வடகரையில் அமைந்துள்ள அர்க்கவனம் என்னும் வெள்ளெருக்கு வனத்தை அடைந்து மும்மூர்த்திகளை நோக்கிக் கடும் தவம் புரிந்தனர். மனம் மகிழ்ந்த மஹேஸ்வரன் அவர்கள் முன் தோன்றி தொழுநோய் நீங்குமாறு அருள் புரிந்தார். ‘இன்று முதல் இந்தத் தலம் உங்களது தலமாக விளங்கட்டும்’, என்றும் அருள் பாலித்தார்.
அன்று முதல் சிவபிரானது சூலத்தால் தோற்றுவிக்கப்பட்ட சூரிய புஷ்கரணி உள்ளிட்ட நவ தீர்த்தங்களில் நீராடி வழிபடுவோருக்கு நவகிரஹங்களின் அனுக்ரஹம் உண்டாகிறது என்கிறது சூரியனார் கோவிலின் தல புராணம்.
சூரியனின் எதிரே அவரது உக்கிரத்தைத் தணிக்கும் வண்ணம் குரு பகவான் இருக்க அவரையும் வணங்கும் பாக்யத்தைப் பக்தர்கள் பெறுகின்றனர். குருபகவானுக்கு முன்னே வலப்புறமுள்ள படிகளின் வழியே வந்து சனி, புதன், செவ்வாய், சந்திரன், கேது, சுக்கிரன், ராகு ஆகியோரையும் வணங்கி அவர்களின் அருளையும் பக்தர்கள் பெறுகின்றனர்.
இங்குள்ள நவகிரஹங்கள் ஆயுதமும் வாகனமும் இல்லாமல் இரண்டு கரங்களுடன் சாந்தமான, புன்னகை தவழும் முகத்துடன் அனுக்ரஹ மூர்த்திகளாகக் காட்சி அளிப்பதைப் பார்க்கலாம்.
இங்கு சூரியனை வலம் வருபவர்கள் அப்ரதக்ஷிணமாகவே வலம் வருகின்றனர். அதே முறையில் தான் நவ கிரஹங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
இங்கு சூரியனை வழிபட்டு அவன் அருள் பெற்றோரில், நள மஹாராஜன், பரீட்சித் மஹாராஜன், சித்திராங்கத பாண்டியன், புரூரவசு, சோமசன்மன், இந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் அடங்குவர்.
சிவபிரானின் அருளால் இங்குள்ள நவகிரஹங்களும், பரிவார தேவதைகளாக இல்லாமல், முதன்மை தேவதைகளாக இருப்பது இந்தத் தலத்தின் தனிச் சிறப்பாகும்.
இங்குள்ள மூலவரான சூரிய பகவான் அமைக்கப்பட்டுள்ள விதம் அறிவியல் வியக்கும் ஒன்றாகும். வானவியல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு, சூரியன் கிழக்கே தோன்றி வடக்கு நோக்கிச் செல்லும் உத்தராயண காலத்திலும், தெற்கு நோக்கிச் செல்லும் தட்சிணாயன காலத்திலும் ஆண்டுக்கு இரு முறை மூன்று மூன்று நாட்கள் சூரியனுடைய ஒளிக்கதிர்கள் இக்கோயிலின் மூலவரின் பாதங்களில் விழுமாறு அமைக்கப்பட்டுள்ளது.
தென்னகத்தில் சூரியனுக்காக உள்ள தனிக்கோயில் இது ஒன்று தான். ஒரே கோயிலுக்குள் நவகிரஹங்களுக்கு தனித் தனிக் கோயில்கள் கொண்டுள்ள தலமும் இது தான். சூரியனை வழிபடும் போதே குருபகவானையும் வழிபட வைக்கும் தலமும் இது தான். இரு அசுப கிரஹங்களுக்கு இடையே ஒரு சுப கிரஹம் என்ற முறைப்படி அமைக்கப்பட்டுள்ள அதிசய தலமும் இது தான்.
நவகிரஹங்களும் ஒன்று சேர்ந்து விநாயகரை பிரதிஷ்டை செய்து தங்கள் தோஷங்களை நீக்கிக் கொண்ட தலமும் இது தான். பக்தர்களுக்கு களத்திர தோஷம், பிரதிபந்த தோஷம், புத்திர தோஷம் உள்ளிட்ட அனைத்து தோஷங்களையும் நீக்கும் அற்புத தலம் இது. தோல் வியாதிகள், குஷ்டம் உள்ளிட்ட கொடூரமான வியாதிகள் அனைத்தும் போக பக்தர்கள் இங்கு வந்து வழிபட்டு அவை நீங்கப் பெறுவது அனுபவபூர்வமான உண்மையாகும்.
கோள்வினை தீர்த்த விநாயகருக்கு முன்னே நர்த்தன மண்டபமும், இதற்கு கிழக்கே உற்சவ மூர்த்திகள் எழுந்தருளியுள்ள சபாநாயகர் மண்டபமும், இதற்குக் கிழக்கே காசி விஸ்வநாதர் – விசாலாட்சி எழுந்தருளியுள்ள ஸ்தபன மண்டபமும், இதற்குக் கிழக்கே குரு பகவான் எழுந்தருளியுள்ள மஹா மண்டபமும் உள்ளன. தல விருக்ஷம் வெள்ளெருக்குச் செடியாகும்.
காலம் காலமாக கோடானு கோடி பக்தர்கள் வணங்கி வழிபட்டும் வரும் சூரிய தேவன் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். வேதத்தில் சூரிய பிரார்த்தனையாக உள்ள மந்திரங்கள் இவை: பஸ்யேம சரதஸ் ஸதம். சூரிய மண்டலத்தை நூறாண்டுகள் கண்டு வணங்குவோம்.ஜீவேம சரதஸ் ஸதம். அவ்வண்ணமே நூறாண்டு வாழ்வோம். நந்தாம சரதஸ் ஸதம். நூறாண்டு உற்றார் உறவினர்களுடன் கூடிக் குலாவி வாழ்வோம். மோதாம சரதஸ் ஸதம். நூறாண்டு மகிழ்வோம். பவாம சரதஸ் ஸதம். நூறாண்டு கீர்த்தியுடன் விளங்குவோம். ஸ்ருணவாம சரதஸ் ஸதம். நூறாண்டு இனியதைக் கேட்போம். ப்ரப்ரவாம சரதஸ் ஸதம். நூறாண்டு இனியதையே பேசுவோம். அஜீதாஸ்யாம சரதஸ் ஸதம். நூறாண்டுகளும் தீமைகளால் ஜெயிக்கப்படாதவர்களாகவே வாழ்வோம். ஜ்யோக்ஸ ஸூர்யம் த்ருசே. இவ்வாறாக, நீண்ட காலம் சூரிய தேவனைப் பார்த்து அனுபவிக்க ஆசைப்படுகிறோம். நன்றி வணக்கம்.
எவன் ஒருவன் அழகாக இருக்கிறானோ அவனுக்கு அவலக்ஷணமான மனைவி வாய்க்கிறாள்; எவள் ஒருத்தி அழகியாக இருக்கிறாளோ அவளுக்கு அவலக்ஷணமான புருஷன் வாய்க்கிறான். இருவருமே சரிசமமாக இருந்தால் அவர்கள் ஏழைகளாகக் காணப்படுகிறார்கள்! விதியின் விளையாட்டு எப்படி இருக்கிறது, பாருங்கள்!
He who is beautiful has a wife with an ugly form; She who has a beautiful form has an ugly husband; where both qualities are equal they are seen to be poor; see how different are the designs of fate.
(Translation by Dr N.P.Unni)
*
ஏழை சொல் அம்பலம் ஏறாது!
ஹேதுப்ரமாணயுக்தம் வாக்யம் ந ச்ரூயதே தரித்ரஸ்ய |
அப்யதிபருஷமஸத்யம் பூஜ்யம் வாக்யம் சம்ருத்தஸ்ய ||
அதிகாரபூர்வமானதாகவும் முறையானதாகவும் இருந்தாலும் கூட ஒரு ஏழையின் சொல்லை யாரும் கேட்க மாட்டார்கள். ஆனால் முறையற்ற, உண்மையல்லாத வாக்கியங்களை ஒரு பணக்காரன் கூறினால் அது மிகுந்த மதிப்புடன் வரவேற்கப்படுகிறது!
One does not lend one’s ear to the words of a poor man though they are properly authoritative, whereas coarse, untruthful words of the rich are considered with great merit.
சலுகைகளை ஒருவன் கொடுத்துக் கொண்டிருக்கும் வரையில் தான் அவன் மதிப்புமிக்க மொழிகளால் புகழப்படுகிறான். மேகங்களிலிருந்து மழை பொழிவது நின்று விட்டால் மயிலின் ஓசை நின்று விடுகிறது!
As long as one distributes favours one is praised in laudable terms. Once the rains from the clouds are stopped the sounds of peacock come to an end.
One among hundred becomes a brave man: one among a thousand become a scholar and a spokesman in ten thousand may be there or not as also a giver of gift.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கிரேக்க மொழி நாடகங்களில் பல சுவையான விஷயங்கள் வருகின்றன யூரிபிடிஸ் – கி.மு.431- என்பவர் சர்ச்சைக்குரிய பல செய்திகளை சொல்லுவார். அவர் எழுதிய ஒரு நாடகத்தின் பெயர் ‘மெடியா’ .
கொல்சிஸ் என்னும் இடத்திலிருந்து வந்த மெடியா (MEDEA) என்னும் சூன்யக்காரி கிரேக்க வீரன் ஜேசன் (JASON) மீது காதல் கொள்கிறாள். . பறக்கும் செம்மறி ஆட்டின் தங்கத் தோலை (GOLDEN FLEECE) கொண்டுவர அவனுக்கு உதவுகிறாள். கொரிந்த் (CORINTH) நகருக்கு வந்து குடும்ப வாழ்வு நடத்தி இரண்டு குழந்தைகளையும் பெறுகிறார்கள். இந்த கால கட்டத்தில் இருவரிடையே பிணக்கு ஏற்பட்டு விவாக ரத்தில் முடிகிறது.காரணம்
ஜேசன் கொரிந்தியன் மன்னன் க்ரினோனின்(CRENON) மகள் கிளாஸைக் (GLAUCE) காதலித்து திருமணம் புரிகிறான்.
மெடியா விடுவாளா?
ஒரு திருமண ஆடை (WEDDING DRESS) தைத்து அதை கிளாசுக்கு அனுப்புகிறாள். அது மணப்பெண்ணையும், காப்பாற்ற வந்த தந்தையையும் எரித்துக் கொன்று விடுகிறது ; ஜேசன் மூலம் இரண்டு குழந்தைகளையும் கொன்று விட்டு பறக்கும் ரதத்தில் (FLYING CHARIOT) சிட்டாகப் பறந்து போய்விடுகிறாள்.
கிரேக்க (GREECE) நாட்டில் ஆண்டுதோறும் நடைபெறும் நாடகப் போட்டியில் ‘மெடியா’ நாடகத்துக்கு மூன்றாம் பரிசுதான் கிடைத்தது. நாடகத்துக்குப் பொருத்தமில்லாத, ஆனால் அக்காலத்தில் நிலவி வந்த சர்ச்சசைக்குரிய விஷயங்களை, அவர் கதாபாத்திரத்தின் வாயிலாக வெளிப்படுத்தினார் . இதோ மெடியாவின் திருமணம் பற்றிய சூளுரை
“உயிர்வாழும்,சிந்திக்கும் படைத்த பிராணிகளில் பெண்களாகிய நாங்கள்தான் பரிதாபத்துக்குரியவர்கள். முதலாவது, நாங்கள் பெருந்தொகை கொடுத்து கணவனை வாங்க வேண்டியிருக்கிறது”.
(அந்தக் கால இந்தியா போல பெண்கள்தான் வரதட்சிணை கொடுக்க வேண்டும். சங்கத் தமிழ் நூல்களிலும் சம்ஸ்க்ருத நாடகங்களிலும் இதைக் காண்கிறோம்.)
“எங்கள் உடல் மூலம்தான், கொடுங்கோல் மன்னன் போல, ஆண்களை ஆட்டிப் படைக்கமுடியும். மேலும் கிடைக்கும் ஆள் நல்லவனா, கெட்டவனா என்றும் கண்டுபிடிக்க முடியாது.
விவாக ரத்தானது ஒரு பெண்ணுக்கு அவப் பெயரை ஈட்டித்தருகிறது. இதற்கிடையில் கணவனைப் புறக்கணிக்கவும் முடியாது. முன்பின் தெரியாத, அறியாத பழக்க வழக்கங்களுக்கு இடையே சிக்கும்போது, அவள் தீர்க்கதரிசியாக இருந்தால்தான் வரப்போகும் கணவன் எப்படிப்பட்டவன் என்று அறிய முடியும் . வீட்டில் கிடைத்த அனுபவம் இங்கே பயன்தராது. . இதில் வெற்றி கிடைத்தால் , மற்றவர் பொறாமைப்படும் அளவுக்கு எங்களுக்கு நல்வாழ்வு கிடைக்கும் .
வெற்றி பெறவில்லையானால், சாவதே மேல். மண வாழ்க்கையில் திருப்தி கிடைக்காத கணவமார்கள், வெளியே பொழுதைக் கழிப்பதன் மூலம் தங்கள் ஏமாற்ற உணர்வைக் காட்டுகிறார்கள். ஆனால் நாங்களோ ஒருத்திக்கு ஒருவனே என்ற கொள்கையைக் கடைப்பிடிப்பதால் வேறு ஒன்றும் செய்யமுடியாது.
நாங்கள் வீட்டுக்குள் இருப்பதால், ஈட்டி வீசிப் போரிடும் ஆண்களைப் போல அவதிப்படுவதில்லை என்றும் பாதுகாப்பாக இருப்பதாகவும் ஆண்கள் செப்புவர். அவர்கள் எவ்வளவு முட்டாள்கள் ! என்னைப் பொருத்த மட்டில், நான் ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்வதைவிட மூன்று முறை போர்க்களம் சென்று பகைவரைச் சந்திப்பேன்”.
இது 2400 ஆண்டுகளுக்கு முன்னர் கிரேக்க நாட்டு நாடகத்தில் ஒரு பெண்மணி பேசிய பேச்சு !
நல்ல வேளையாக 2000 ஆண்டுகளுக்கு முன்னர் நம் இந்தியாவில் உருவான நாடகங்களில் இப்படிப்பட்ட அவல நிலை இல்லை. எல்லாம் சுப விஷயங்களே .
—subham —
tags — குழந்தை , போர்க்களம் , செல்வேன், கிரேக்க பெண், புலம்பல்
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
50 ஆண்டுகளுக்கும் மேலாகச் சேர்த்து வைத்த , தமாஷ் கள் – ‘ஜோக்’ jokes குகளை எடுத்தபோது தூள் தூளாக உதிர்ந்தது. குப்பை டப்பாவுக்குள் போடுவதற்கு முன்னர் , கொஞ்சம் ‘பிளாக்’கிலும் போட்டு விடுகிறேன்.
“அட , நீங்க ஒன்னு, குப்பைக் கூடையும் , ‘பிளாக்’குகளும் ஒண்ணுதான் சார்”– என்று சொல்லி விடாதீர்கள்.
நகைச் சுவைத் துணுக்குகளை பார்த்து ரசித்த பின்னர் உங்கள் எண்ணம் — தவறான எண்ணம்- பறந்தோடிப் போகும் .