கொரானா பற்றிய அறிய வேண்டிய சில உண்மைகள்! (Post No.9831)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9831

Date uploaded in London – 9 JULY   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

திருநெல்வேலியிலிருந்து வெளிவரும் மாத இதழான ஹெல்த்கேர், ஜூலை 2021 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!

கொரானா பற்றிய அறிய வேண்டிய சில உண்மைகள்!

ச.நாகராஜன்

உலகையே ஆட்டிப் படைக்கும் கொரானா பற்றி ஏராளமான தவறான தகவல்களை ஊடகங்கள் வாயிலாகப் பெறுகிறோம். பயப்படுகிறோம்.ஆகவே அதிகாரபூர்வமான அறிவியல் தகவல்களை மட்டுமே அதற்குரிய ஆதாரத்துடன்  அறிந்து கொள்ள வேண்டும்; இதர தகவல்களை ஒதுக்க வேண்டும்.

  1. தடுப்பூசி போடுவது நல்லது. கட்டாயம் போட்டுக் கொள்ள வேண்டும்.

நமது ஊடகங்கள் தடுப்பூசி போடுவது பக்க விளைவை ஏற்படுத்தும் எனு தவறான செய்தியை ஆதாரமின்றிப் பரப்பியது வருந்தத் தக்க ஒரு விஷயம். தடுப்பூசி போட்டால் உயிருக்கு ஆபத்து என்பது போன்ற தகவல்களை, பழைய போட்டோக்களை வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு இடங்களில் எடுக்கப்பட்டவற்றை வெவ்வேறு காரணங்களினால் இறந்தவரைச் சித்தரித்து, கொரானா பற்றிய செய்திகளைச் சொல்ல ஆரம்பித்தன. போட்டோக்களில் உள்ளவர்கள் கொரானாவினால் இறந்தது போன்ற ஒரு மாயத் தோற்றம் சிருஷ்டிக்கப்பட்டது.

உலகில் உள்ள அனைத்து நாடுகளும் தடுப்பூசியை ஆதரிக்கின்றன; அறிவியல் அறிஞர்கள் அனைவரும் இதைக் கட்டாயம் போட்டுக் கொள்ள வேண்டுமென்று பரிந்துரை செய்கின்றனர்.

அமெரிக்காவிலேயே தப்பான தகவல்களை 25 சதவிகித அமெரிக்கர்கள் பரப்புகின்றனர் என்றால் நமது நாட்டில் 100 சதவிகிதம் உடனுக்குடன் வதந்திகளைப் பரப்புவதைப் பற்றிச் சொல்லவா வேண்டும்.

ஒரு தகவலை எப்படி உண்மையா, தவறா என அறிவது? விஞ்ஞானிகள் கூறும் வழி இது.

  1. எந்த ஊடகம் இதைக் கூறியது (Check the Source) 2) யார் கூறியது (Check the author 3)  என்ன சொல்லப்பட்டிருக்கிறது (Check the content) இந்த மூன்றையும் நன்றாக ஆய்வு செய்யுங்கள். பின்னர் நம்புங்கள்.

பிரபல அறிவியல் இதழான ‘ஸயிண்டிபிக் அமெரிக்கன்’ தரும் அறிவுரை இது : தவறான தகவல்களை நம்பாதீர்கள். இப்போது ஒரு தகவல் சரியா இல்லையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள உண்மை அறியும் தகவல் தளங்கள் உள்ளன. அவற்றை உடனடியாகப் பயன்படுத்துங்கள். மற்றவரையும் பயன்படுத்தத் தூண்டுங்கள். தவறான செய்திகளைத் தவறு என்று அனைவருக்கும் தெரிவிப்பதோடு அப்படிப்பட்ட ஊடகங்களைப் பார்க்காதீர்கள்; அவற்றைப் பற்றி அனைவருக்கும் அறிவித்து அப்படிப்பட்ட ஊடகங்களின் செல்வாக்கை (அதாவது டி.ஆர்.பி.ரேடிங்கை) குறையுங்கள். ஸயிண்டிபிக் அமெரிக்கன் தரும் உண்மை அறியும் தளங்கள் இவை:

       Fact-checking organizations such as PolitiFact and FactCheck.org 

  • தடுப்பூசியுடன் முக கவசம் அணிதல் வேண்டும்; சமூக இடைவெளியை இன்னும் சிறிது காலம் கடைப்பிடிக்க வேண்டும்.
  • ஊசியைப் போட்டுக் கொண்ட லக்ஷக்கணக்கானோரில் பத்து சதவிகிதத்திற்கும் கீழானோருக்கு அபாயமில்லாத சாதாரண ஜுரம் வந்திருக்கிறது. இரண்டு டோஸ்கள் ஊசி போட்டுக் கொண்டவர்களுக்கு 95%க்கும் மேலாக பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. இரண்டாவது ஊசியை முதல் ஊசி போட்டுக் கொண்ட 40 நாட்களுக்குப் பின்னர் போட்டுக் கொள்வது அதன் தடுப்புத் திறனை அதிகரிக்கிறது.
  • போலந்து நாட்டு விஞ்ஞானிகள் ஊசி போடுவதற்கு முன்னால் நன்கு உறங்கி, உரிய முறையில் உணவை உட்கொண்டு, சரியானபடி நீரை அருந்தி தக்க உடல்நிலையுடன் செல்வது சிறப்பாகும் என்று அறிவுறுத்துகின்றனர். இது நமது தடுப்புத் திறனை சாதாரணமாகவே அதிகரிக்க வைக்கிறது. பெயின் ரிலீவர் (Pain Reliever) மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டாம் என்பது அவர்கள் தரும் இன்னொரு அறிவுரை. கோவிட்-19 தடுப்பூசி போடும் போது இன்னொரு தடுப்பூசி – ஃப்ளூ போன்றவற்றிற்கானவை- போடுதல் கூடாது.
  • பக்க விளைவு எதுவும் வராது. அப்படி அபூர்வமாக ஒருவருக்கு வருவது என்றால் அது ஊசி போட்ட முதல் பதினைந்து நிமிடங்களுக்குள் தெரிய வரும். ஆகவே இருபது நிமிடங்கள் ஊசி போட்ட மருத்துவ மனையில் இருந்து விட்டுப் பின்னர் அங்கிருந்து திரும்பலாம்.

இவ்வளவு சொல்லியும் நீங்கள் சாலையை எட்டிப் பாருங்கள். முக கவசம் அணிவதில்லை. கூட்டம் கூட்டமாகப் போகின்றனர். தடுப்பூசி பற்றி கவலைப்படுவதுமில்லை.

அரசையும் மருத்துவ மனைகளையும் குறை கூறிப் பயனே இல்லை; நாம் உரிய விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். நமது வீட்டாரையும் அண்டை அயலாரையும் கடைப்பிடிக்க வற்புறுத்த வேண்டும்.

கோவிடை வெல்வோம்; ஆரோக்கியமான வாழ்வைப் பெறுவோம்!

***

tags –  கொரானா , உண்மைகள், முக கவசம், தடுப்பூசி

TAMIL VEDA AND RIG VEDA- PART 2; CLOSE FAMILY RELATIONSHIP (Post No.9830)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9830

Date uploaded in London –8 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

FIRST PART WAS POSTED HERE ON 3RD JULY 2021. HERE IS THE SECOND PART:-

CLOSE RELATIONSHIP BETWEEN FATHER AND SON, AND MOTHER AND HER CHILDREN ARE FOUND BOTH IN THE RIG VEDA AND THE TAMIL VEDAA KNOWN AS TIRUKKURAL. I HAVE COLLECTED SOME MANTRAS FROM THE FIRST 100 MANTRAS OF THE RIG VEDA (RV).

RV 1-26-3

Agni , you are like a father for his son, kinsman for his kinsman and a friend for his worthy friend .

Here in one single mantra we see father, relative and friend. That shows the close-knit society of the Vedic period.

xxx

RV 1-91-20

Skilled in home duties, meet for holy synod, for council meet, a glory to his father .

The meaning is that Lord Soma blesses the worshipper with a worthy son who will shine in the assembly of scholars and bring glory to his father.

Tamil Veda echoes this message in Tiruk Kural:-

The duty of the son to the father is to make others exclaim what penance has he/ father done to be blessed with such a worthy son –KURAL 70

Earlier Valluvar says

What a father expected to do his son is to make him fit to hold the foremost place among the learned – KURAL 67

xxx
Father and son

RV.1-38-1

What now?  when will you take us by both hands , as a dear father his son?

Gods, sacred grass is clipped and spread for you to sit.

This sensual touch of children is also in the Tamil Veda-

The touch of children is delightful to the body, and their voice is pleasing to ear – KURAL 67

The food into which the children’s little hands have been dipped will be far sweeter to the parent than the Amrita – KURAL 64

Sweet is the music of flute and lute to those who know not the melody of their little one’s prattle – KURAL 66

In another Kural couplet Valluvar says that a mother will be happier when she hears that her son is a scholar than the day she gave birth to him.

This shows the approach of Valluvar and Vedic Rishis/seers is same with regard to family duties and relationship.

xxxx

Violence against misers is also found both Tamil Veda Tirukkural and the Rig Veda. Please see the following link:-

VIOLENCE IN RIG VEDA AND TAMIL VEDA AGAINST THE …

https://tamilandvedas.com › 2017/10/21 › violence-in-r…

  1.  

21 Oct 2017 — They went even to the extent of preaching violence against the stingy fellows. The poets of … Break the jaw; Crush him like Sugarcane: Valluvar.

–subham–

tags – Rig Veda-2, Tamil Veda-2

திருவாசகத்தில் ரிக் வேதம்! (Post No.9829)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9829

Date uploaded in London –8 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சைவ சமயப் பெரியோர் நால்வரில் உள்ளத்தை உருக்கும் திருவாசகத்தை நமக்கு அருளியவர் மாணிக்க வாசகர் . திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்பதை எல்லோரும் அறிவர் . இறைவனின் அருள், கல்லைப்பிசைந்து கனியாக்கும் என்பது அவரது வாக்கு.; பால் நினைந்தூட்டும் தாய் என்று இறைவனைப் போற்றுகிறார் . அவர் மதுரைக்கருகில் திருவாதவூரில் அமாத்தியப் பிராமணர் குலத்தில் உதித்தவர் என்பதால்  வேதத்ததில் வல்லவர் ஆக இருப்பதில்  வியப்பில்லை.

அவர் பரியை நரியாக்கிய திரு விளையாடலில் தொடர்புடையவர். அதை அப்பரும் குறிப்பிடுவதால் அவருக்கு சற்று முன்னர் வாழ்ந்தவராக இருத்தல் வேண்டும். அதாவது 1400 ஆண்டுகளுக்கு முந்தையவர். இந்துக்களின் புனித நூலான ரிக் வேதம் உலகிலேயே பழமையான நூல் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமுமில்லை கிமு 6000 முதல் 1500 வரை பலரும் பல தேதிகள் குறிக்கின்றனர்.

ரிக்வேத ரிஷிகளின் பாடல்களிலும் மாணிக்க வாசகரின் பாடல்களிலும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன.. இரு நூல்களும் “அழுதால்  உன்னைப் பெறலாமே ” என்று இறைவனிடம் அழுகின்றன..

மாணிக்க வாசகர் நான்கு வேதங்களும் ஓலம் இடுகின்றன என்கிறார்

வேதங்கள் ஐயா என்று அலறுகின்றன என்றும் பாடுகிறார்.. இதோ சில ஒப்புமைகளைக் காண்போம்.

xxxx

RV 1-25-19

Varuna , hear this call of mine; be gracious unto us this day.

Longing for help I cried to thee.

ரிஷி சுனஸ்சேபன்  பாடுகிறார் –

வருணனே என்னுடைய இந்த அழைப்பைக் கேட்கவும். .எங்களிடம் கருணை காட்டுவாயாக. உன் உதவியை வேண்டி கதறுகிறேன்

நாத நாத என்றழு தரற்றிப்

பாத மெய்தினர் பாத மெய்தவும்-  கீர்த்தித் திரு அகவல் 2-136

வேதங்கள்

ஐயா! எனவோங்கி ஆழ்ந்த கன்ற நுண்ணியனே !

-சிவபுராணம் , வரி 34/35, திருவாசகம்

Xxx

1-34-12

Bring in your triple car, O Asvins, bring us present prosperity with noble offspring.

I cry to you who hear me for protection; you be our helpers where men win the booty.

“அஸ்வினி தேவர்களே! உங்களுடைய முச்சக்கர தேரிலே எங்களுக்கு செல்வத்தையும் வீரம் மிக்க புதல்வர்களையும் கொண்டுவாருங்கள்; என் துதியை செவிமடுக்கும் நீவீர் எங்களைக் காப்பாற்றுங்கள்; போரில் நாங்கள் வெற்றி பெற எங்களுக்கு உதவுங்கள் என்று கதறுகின்றேன்.”

தப்பாமே, தாம் பிடித்தது சலியா,

தழல் அது கண்ட மெழுகு அது போல,

தொழுது, உளம் உருகி, அழுது, உடல் கம்பித்து,

ஆடியும், அலறியும், பாடியும், பரவியும்,

போற்றித்  திரு அகவல்  4-59…..61

Xxx

1-38-2

Now whither to ? what goal of yours you go in heaven and not on earth?

Where else you find cows bellowing (mooing)?

மருத் தேவர்களே! இப்பொழுது நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் ? சொர்க்கத்திலிருந்து வாருங்கள்; பூமியை  விட்டுச் செல்லாதீர்; பசுக்களைப் போல கதறும் வழிபடுவோர் வேறு எங்கே இருக்கிறார்கள்?

வணங்கும் நின்னை, மண்ணும், விண்ணும்; வேதம் நான்கும் ஓலம் இட்டு

உணங்கும், நின்னை எய்தல் உற்று, மற்று ஓர் உண்மை இன்மையின்;

வணங்கி, யாம், விடேங்கள் என்ன, வந்து நின்று அருளுதற்கு,

இணங்கு கொங்கை மங்கை பங்க! என் கொலோ நினைப்பதே? 5-85

Xxx

திருச்  சதகத்தில் மேலும் சில பாடல்களில் ‘கதறுதல், அழுதல் , உருகுதலைக்’ காண்கிறோம் . எவ்வளவுதான் பாவம் செய்தாலும் அழுதால் அவனுடைய அன்பினை, சிவ பெருமானுடைய அன்பினைப் பெறலாம் என்று மாணிக்க வாசகர் உறுதிபடக்  கூறுகிறார்.

ஆக, ரிக்வேதத்திலும் திரு வாசகத்தில் நாம் காணும் ஒற் றமை , மனம் உருகி பிரார்த்தித்தால் இறைவன் ஓடி  வந்து உதவுவான் என்பதே.

ராம க்ருஷ்ண பரம ஹம்சர் இதை ஒரு உவமை மூலம் விளக்குவதை இணைப்பில் காண்க

அழுகேன், நின்பால் அன்பு ஆம் மனம் ஆய்; அழல் சேர்ந்த

மெழுகே அன்னார், மின் ஆர், பொன் ஆர், கழல் கண்டு

தொழுதே, உன்னைத் தொடர்ந்தாரோடும் தொடராதே,

பழுதே பிறந்தேன்; என் கொண்டு உன்னைப் பணிகேனே?

 5-348

In other words they pine, weep, yearn and long for God.

பாடல் எண் : 90 

யானேபொய் என்நெஞ்சும் பொய் என்அன்பும்     பொய்

ஆனால் வினையேன் அழுதால் உன்னைப்   பெறலாமே

தேனே அமுதே கரும்பின் தெளிவே    தித்திக்கும்

மானே அருளாய் அடியேன் உனைவந்    துறுமாறே

5 -357 to 360

xxx

அழுதால் உன்னைப் பெறலாமே | Tamil and …

https://tamilandvedas.com › tag › அ…

  1.  

28 Dec 2016 — அழுதால் உன்னைப் பெறலாமே – மாணிக்க வாசகர் (​Post No.3491). Written by London swaminathan. Date: 28 December 2016. Time uploaded in London:- 11-05 am. Post No.3491. Pictures are …


அழுதால் உன்னை | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › அ…

  1.  

24 Feb 2017 — “அழுதால் உன்னைப் பெறலாமே” என்று மாணிக்கவாசகர், திருவாசகத்தில் சொன்னார். ராமகிருஷ்ண பரமஹம்சரும் பிற்காலத்தில் …

–SUBHAM–

மாணிக்க வாசகர், திருவாசகம், ரிக் வேதம்

“ஏழை படும்பாடு” நாவல் புகழ் பிரெஞ்சு ஆசிரியர் விக்டர் ஹ்யூகோ (Post.9828)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9828

Date uploaded in London –8 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இரண்டு புகழ்பெற்ற கதைகள் மூலம் புகழ்பெற்ற பிரெஞ்சு நாவல் ஆசிரியர் விக்டர் ஹ்யூகோ (VICTOR HUGO) ஆவார். அவருடைய கதை “லே மிஸராபிள் (Les Miserables) ஏழை படும்பாடு)” இன்றும் லண்டனில் நாடக அரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. இது 1985-ல் முதலில் மேடை ஏறியது  இவருடைய மற்றோரு நாவல் ஹஞ்ச்பேக் ஆப் நாத்ர்தாம்  (Hunchback of Notre Dame) .

மிஸராபிள் MISERABLE – பரிதாபத்துக்குரியவர்கள் (ஏழை படும்பாடு)

ஹன்ச் பேக் HUNCHBACK- கூனி, கூன்முதுகு , கூனன்

நாத்ர்தாம் NOTRE DAME CATHEDRAL, PARIS- புகழ்பெற்ற சர்ச் ; பாரிஸ் நகரில் உள்ளது.

இந்த இரண்டு நாவல்களுமே சமுதாயத்தில் வறுமை, இன  வேற்றுமை, அறியாமை , தீண்டாமையால் பாதிக்கப்பட்டவர்களையும் அவர்கள் படும் கஷ்டங்களையும் படம்பிடித்துக் காட்டுகின்றன. பல டெலிவிஷன் தொடர்கள், மேடை நாடகங்கள், திரைப்படங்களாக இவை உருவானதால் மேலை உலகில் விக்டர் ஹ்யுகோவை அறியாதார் எவருமிலர்.

பிரான்சில் பேசன்சோன் என்ற ஊரில் இவர் பிறந்தார். இவருடைய தந்தை நெப்போலியனின் ராணுவத்தில் ஒரு அதிகாரி .அவருக்கு இவர் மூன்றா வது பிள்ளை.அவருடைய தாய் கல்வி கற்ற பெண்மணி. அவரே ஹ்யூகோவுக்கு கல்வி கற்பித்தார். இதனால் 14 வயதிலேயே விக்டர் ஹ் யூகோ பாடல் இயற்றினார். பிரான்ஸ்வா ரெனே சோட்டர்பிரான் (Francois Rene  Chateaubriand) என்ற பிரபல ராஜ தந்திரியும், எழுத்தாளரும் ஆனவர் இவருக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தார்.அவருடைய ஊற்றுணர்ச்சியால் நாடகங்கள், கவிதைகள், நாவல்களை எழுதி அச்சிட்டார்.

இவர் அடில் போச்சர் என்பவரை மணந்தார் ஐந்து குழந்தைகளுக்குத் தந்தை ஆனார்.

29 வயதில் அவர் எழுதி வெளியிட்ட THE HUNCHBACK OF THE NOTREDAME நாத்ர்தாம் கூன்முதுகன் நாவல் இவரை பிரெஞ்சு மக்களுக்கு வெளிச்சம் போ ட்டுக் காட்டியது.

விக்டர் ஹ்யூகோவின் வாழ்வு துயரம் மிக்கது. அவருடைய திருமண நாளன்று, சகோதரனுக்கு பைத்தியம் பிடித்தது. அது தீராத பைத்தியம். இதற்குத் தானே காரணம் என்ற குற்ற உணர்வு அவரை வாழ்நாள் முழுதும் வாட்டிவதைத்தது .அதற்குப்பின்னர் அவர் அன்பைப் பொழிந்த மகள் , ஒரு விபத்தில் இறந்தாள் . இதனால் பத்து ஆண்டுகளுக்கு எழுதாமல் மௌனம் சாதித்தார் விக்டர் ஹ்யூகோ.

தனது பிற்கால வாழ்வில் அரசியலில் ஈடுபட்டு குடியரசு ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்தார். இரண்டாவது பிரெஞ்சு குடியரசு ஆட்சியை மூன்றாவது நெப்போலியன் 1851-ம் ஆண்டில் தூக்கி எறிந்தார். இதப்பினால் விக்டர் சானல் தீவுகளில் நாடுகடந்த வாழ்க்கை நடத்தினார். அப்போதுதான் புகழ்மிகு படைப்புகளை எழுதினார். தி லெஜண்ட் ஆப் தி செஞ்சசுரீஸ் THE LEGEND OF THE CENTURIES நூலை 57 வயதில் வெளியிட்டார். பின்னர் லே மிச்ராபிள் LES MISERABLES அச்சானது. பிரான்ஸில் பிரெஞ்சுப் புரட்சி ஏற்பட்ட காலத்தில் நிலவிய சமூக அநீதிகளை இதில் சித்தரித்தார்.

இவரது இரண்டு கீர்த்திமிக்க நாடகங்களும் இசை வடிவில் பாடல்களுடன் (Musicals) மேடை ஏறி இன்றும் உலகம் முழுதும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. வால் டிஸ்னி படைப்பும் இதில் அடக்கம்.

1870-ம் ஆண்டில் மூன்றாவது நெப்போலியன் ஆட்சி முடிவுக்கு வந்தது. அதற்கு பின்னர் விக்டர், பிரான்சுக்குத் திரும்பிவந்தார் . அவர் இறந்த நாளன்று 20 லட்சம் பேர் பாரிஸ் நகரில் நடந்த இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

பிறந்த தேதி – பிப்ரவரி 26, 1802

இறந்த தேதி – மே 22, 1885

வாழ்ந்த ஆண்டுகள் – 83

படைத்த இலக்கியங்கள் –

1826 – ODES AND BALLADS

1829- LES ORIENTALES

1830- HERNANI

1831 – THE HUNCHBACK OF NOTRE DAME

1859- THE LEGEND OF THE CENTURIES

1862 – LES MISERABLES

1869- BY ORDER OF THE KING

1872 – THE TERRIBLE YEAR

1874 – NINETY THREE

விக்டர் ஹ்யுகோ , ஆவி உலகத்தில் நம்பிக்கைகொண்டவர். இறந்தவர்களுடனும் பிற கிரகவாசிகளுடனும் பேசியதாகச் சொல்லிக்கொண்டவர் .

இவர் ஒரு கட்டத்தில் எழுதுவதை நிறுத்திவிட்டு ஓவியம் வரைவதில் ஈடுபட்டார். இவர் தேர்தலில் நின்று மக்கள் சபைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆரம்ப காலத்தில் பத்திரிகை ஒன்றைத் துவக்கி அதில் தனது கவிதைகளையும் பிறரது படைப்புகளையும் வெளியிட்டார். இவரது எல்லா எழுத்துக்களிலும் மனித நேயமும், சமத்துவமும் தென்படும். இவரது பிரபல நாவல் ஆன “லே மிஸரபிள்” கதையை தமிழில் சுத்தானந்த பாரதியார் மொழிபெயர்த்தார். “ஏழைபடும் பாடு” என்னும் நூலாக அது வெளிவந்தது.

ஆயினும் விக்டர் ஹ்யூகோவின் பிரெஞ்சு மொழி ஒரிஜினலில் அது ஒரு பிராம்மாண்டமான நாவல். ஆறரை லட்சம் சொற்களுக்கு மேல் அதில் உள்ளன. சுமார் 2500 பக்கங்கள். நாற்பதுக்கும் மேலான நாடுகளில் இசை நாடகமாக (Musicals) இது நடைபெறுகிறது. அதை பார்த்து ரசித்தோரின் தொகை 2012ம் ஆண்டிலேயே ஆறு கோடி பேரைத் தாண்டிவிட்டது. இவருடைய சொற்பொழிவுகள் மிகவும் பிரபலமானவை. இவர் பிரான்ஸ் நாட்டின் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்துக்கு எதிரானவர் . இதனால் இவரது புஸ்தகங்களுக்கு போப் Pope தலைமையிலான கிறிஸ்தவர்கள் தடைவிதித்தனர். இவர் கிறிஸ்தவ மத ஊழல்களை எதிர்த்தார். தன்னை சுதந்திர சிந்தனையாளர் என்று சொல்லிக்கொண்டார்.

–SUBHAM-

tags- ஏழை படும்பாடு”,  பிரெஞ்சு ஆசிரியர்,  விக்டர் ஹ்யூகோ, நெப்போலியன், Victor Hugo

தரித்திரமே, இன்று மட்டும் என்னோடு சற்றே இரு, நாளை நீ …….? (Post.9827)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9827

Date uploaded in London – 8 JULY   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தொண்டை மண்டல சதகம் பாடல் 61

தரித்திரமே, இன்று மட்டும் என்னோடு சற்றே இரு, நாளை நீ போகப் போகிறாய் அல்லவா?

ச.நாகராஜன்

திருநின்றவூரில் காளத்தி நாத முதலியார் என்பவர் வாழ்ந்து வந்தார். தமிழின் பால் நல்ல பற்றுக் கொண்டவர். பரோபகாரி. குறிப்பாக புலவர்கள் ஏழ்மையுடன் இருப்பதைக் காண அவர் சகிக்க மாட்டார். அவருடைய புகழையும் மாண்பையும் அறிந்த ஒரு புலவர் தன் தரித்திரத்தைக் கண்டு சகிக்க மாட்டாமல் அவரிடம் வர முடிவு செய்தார். மறு நாள் அவரைச் சந்தித்தால் தன்னுடன் கூட இருக்கும் தரித்திரம் போய் விடுமல்லவா? ஆகவே அதற்கு விடைக் கொடுப்பது போல, “ஓ! தரித்திரமே! என்னோடு நீண்ட நாள் இருந்தாய். நாளை முதல் நீ இருக்க முடியாது. ஆகவே இன்று ஒரு நாள் சற்றே இரு” என்ற பொருள் அமையும் படி ஒரு பாடலைப் பாடினார். மறு நாள் திருநின்றவூர் சென்றார். அங்கு காளத்தி நாத முதலியாரைச் சந்தித்தார். அவரது தரித்திரம் தொலைந்தது. அப்படிப்பட்ட கொடைவள்ளல்கள், தமிழின் பால் அடங்காப் பற்று கொண்டவர்கள் வாழும் மண்டலம் தொண்டை மண்டலம் அல்லவா என்று பெருமிதப்படுகிறது தொண்டைமண்டலச் சதகத்தின் 61ஆம் பாடல்.

பாடல் இதோ:-

நீளத்திரிந்தென்று வெண்பாவினாலன்று நின்றையர்கோன்

காளத்திவாணனனிப் பாடிய பாடல் கருதுமண்ட

கோளத்தினுஞ்சென்று பாதாளம் புக்குக் குலவுசக்ர

வாளத்தினுஞ் சென்றதாலெளிதோ தொண்டை மண்டலமே

இதன் பொருள்:-

திருநின்றையூர்க் காளத்திவாண முதலியார் புலவோரை வறுமை என்னும் கொடுமையான பகை வருத்தாமல் ஆதரவு செய்பவர் ஆதலின், அப்புகழ் தோன்ற ஒரு புலவர், “என்னுடன் நட்பு கொண்ட வறுமையே! நீ என்னோடு நெடுங்காலம்  திரிந்து வருந்தினாய் அல்லவா, நாளை நான் திருநின்றையூர் சென்றால் அப்புறம் நீ என்னுடன் இருக்க முடியாதல்லவா? அதன் பின்னர்  நீ எங்கேயோ, நான் எங்கேயோ! அறிய மாட்டேன். ஆகவே, இன்றைக்கு மாத்திரமாவது என்னுடன் இருந்து விட்டுப் போ” என்ற பொருளை உள்ளடக்கி ஒரு வெண்பாவைப் பாடினார். அந்தப் பாடல் அண்டமுகட்டினும்  சென்று பாதாளத்திலும் புகுந்து அமையாமல் சக்ரவாள மலையையும் சூழ்ந்து கொண்டது. அத்தகைய பிரபுவைக் கொண்டது தொண்டை மண்டலமே அல்லவோ!

புலவர் பாடிய “ நீளந் திரிந்துழன்றாய்” என்று ஆரம்பிக்கும் வெண்பா

இதோ:

நீளந் திரிந்துழன்றாய் நீங்கா நிழற்போல

நாளைக் கிருப்பாயோ நல்குரவே – காளத்தி

நின்றைக்கே சென்றக்கா னீயெங்கே நானெங்கே

யின்றைக்கே சற்றே யிரு.

நெடு நாள் திரிந்து உழன்றாய் என்னுடன் நீங்காத நிழல் போல! நாளைக்கு இருப்பாயோ, மாட்டாயோ, வறுமையே! காளத்தி நாதனைப் பார்க்கச் செல்கிறேன். ஆகவே நாளை முதல் நீ எங்கேயோ, நான் எங்கேயோ, இன்றைக்குச் சற்றே இரு- இது தான் பாடலின் பொருள்.

ஒரு பாம்பானது பகலெல்லாம் புற்றுக்குள் மறைந்திருக்கும். இரவில் அது இரை தேட வெளியில் வரும். அப்போது புற்றுக்குள் மறைந்திருந்து அது  தனது மாணிக்கத்தை வாயு பந்தனம் செய்து துவாரத்தின் வழியே வெளியே கொண்டு வந்து ஒளியை உருவாக்கும். அதனால் இரையைத் தேடி உண்டு பின்னர் பழையபடி இருளைக் காணாமல் தேடி அலைந்து பூர்வ ஞாபகம் வந்து முன் போல சுவாசத்தின் வழியே அந்த மாணிக்கத்தை உள்ளிறக்கிக் கொள்ளும். இருளாகிய தனது இருப்பிடத்திற்குச் செல்லும். அதே போல தற்போதம் உடைய ஒருவன் அந்த போத அறிவு உள்ள வரை சுகம் சித்திக்க மாட்டாது.

இந்த உவமானங்களை ஒழிவிலொடுக்கம் என்னும் சிவஞானசித்தியார் சுபக்ஷம், பரபக்ஷம் ஆகியவற்றில் காணலாம்.

இந்தக் கருத்தை அமைத்து புலவர் பாடிய வெண்பா இருப்பது போல எண்ணி மகிழலாம்.

தரித்திரம் தொலைய வழிகளை நமது சாஸ்திரங்கள் மிகத் தெளிவாகக் கூறுகின்றன.

சனி அஷ்டம ஸ்தானத்திற்குப் புகும் போது பல விஷயங்கள் நேரும். அப்போது நளன், தர்மர், சீதை, புரூரவன், கார்க்கோடகன்,தமயந்தி, ருதுபர்ணன் ஆகியோரை உதய காலத்தில் தியானித்தால் பாவம் தொலையும். கீர்த்தி கூடும். ஆயுள் நீட்டிக்கப்படும். இவர்களை தியானித்தால் சனீஸ்வரன் துன்பம் செய்யக் கூடாது என்பது வரமாகும். அதே போல திருநின்றவூர் காளத்திவாண முதலியாரை ஒரு போது நினைத்தாலேயே வறுமை ஒழியும். அந்த ஊரில் லக்ஷ்மி வாசமாயிருப்பதால் திரு, நின்ற, ஊர் என்ற பெயரைப் பெற்றதல்லவோ!

துடைப்பத் தூசி மேலே படக் கூடாது.

பெண்களின் பாத தூளி மேலே படக் கூடாது.

கழுதை தும்பு, ஆட்டின் தும்பு, மந்தைகள் முன் வரும் தும்பு மேலே படக் கூடாது.

தூணின் நிழல், கட்டிலின் நிழல், இரவில் அரச மரத்தின் நிழல், பகலில் விளா மரத்து நிழல், பனை மரத்து நிழல் ஆகியவற்றில் ஒரு போதும் செல்லக் கூடாது.

உதய காலத்திலும் , சூரியாஸ்தமன சமயத்திலும் தூங்கக் கூடாது.

பிறர் முகந்த சந்தனத்தையும் புஷ்பத்தையும் தான் ஏற்கக் கூடாது.

இப்படி முற்காலத்தில் பல விதிகளை தமிழ் மக்கள் பின்பற்றி வந்ததை தொண்டைமண்டல சதகத்தின் இந்தப் பாடலின் விரிவுரையில் காண முடிகிறது.

***

INDEX

தொண்டைமண்டல சதகம் பாடல் 61

ஏழ்மையை விரட்டும் பாடலும், புலவர் பாடிய வெண்பாவும்

திரு நின்ற ஊர், லக்ஷ்மி வாசம்

காளத்தி நாத முதலியார் என்னும் வள்ளல்

தமிழ்ப் பற்று

தரித்திரம் போக, விலக்க வேண்டிய சில விதிகள்

மாணிக்கத்தைக் கொண்ட நாகம் இருளைத் தேடல்

சிவஞான சித்தியார் சுபக்க உவமை

****

tags- காளத்தி நாத முதலியார், திரு நின்ற ஊர்

RIG VEDA IN TAMIL BOOK ‘TIRU VASAGAM’ (Post.9826)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9826

Date uploaded in London –7 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Manikka vasagar (maanikka vaasagar), one of the four great Tamil Saivite saints, wrote Tiruvasagam. He might have lived just before Sambandar and Appar, which will fix his time around seventh century CE. His masterpiece Tiruvasagam attracted even Christian preachers like Rev.G U Pope. He translated it into English. It contains 51 hymns on Lord Shiva. Manikka vasagar’s another work is Tirukkovaiyar.

Manikka vasagar makes some interesting remarks about the Vedas.

Those remarks are echoes of the mantras found in the Rig Veda, the oldest book in the world ,dated between 6000 BCE and 1500 BCE.

I will compare only a few hymns from the RV.

The common factor between the two is

“Crying and weeping for His grace”.

****

RV 1-25-19

Varuna , hear this call of mine; be gracious unto us this day.

Longing for help I cried to thee.

Manikka vasagar  says in 2-136

நாத நாத என்றழு தரற்றிப்
பாத மெய்தினர் பாத மெய்தவும்

On earth they rolled, they fell, they wailed

They rushed with eager foot to reach the sea;

Our Lord, Our Lord , they wept and called

****

1-34-12

Bring in your triple car, O Asvins, bring us present prosperity with noble offspring.

I cry to you who hear me for protection; you be our helpers where men win the booty.

Manikka vasagar says in 4-59…..61

தப்பாமே, தாம் பிடித்தது சலியா,
தழல் அது கண்ட மெழுகு அது போல,
தொழுது, உளம் உருகி, அழுது, உடல் கம்பித்து,
ஆடியும், அலறியும், பாடியும், பரவியும்,

Lest I should go astray, He laid His hand on me

As wax before the unwearied fire

With melting soul I worshipped, wept, and bent myself,

Danced , cried aloud and sang, and prayed

***

1-38-2

Now whither to ? what goal of yours you go in heaven and not on earth?

Where else you find cows bellowing (mooing)?

Manikka vasagar says 5-85

Thee worship the earth and heaven , with shouts of joy, and Four fold Vedas

They are yearning pine for Thee

Again in the same fifth hymn 5-348

Estranged, a  slave , I wildered weep

  வணங்கும் நின்னை, மண்ணும், விண்ணும்; வேதம் நான்கும் ஓலம் இட்டு
உணங்கும், நின்னை எய்தல் உற்று, மற்று ஓர் உண்மை இன்மையின்;
வணங்கி, யாம், விடேங்கள் என்ன, வந்து நின்று அருளுதற்கு,
இணங்கு கொங்கை மங்கை பங்க! என் கொலோ நினைப்பதே?

(Vedas cry for your help . The words earth and heaven found here– are repeated hundreds of times in the Vedas too. This confirms Manikkavasagar is repeating the Rig Vedic Mantras.

What we find in common between M and RV is that devotees always cry for the help from Gods.

அழுகேன், நின்பால் அன்பு ஆம் மனம் ஆய்; அழல் சேர்ந்த
மெழுகே அன்னார், மின் ஆர், பொன் ஆர், கழல் கண்டு
தொழுதே, உன்னைத் தொடர்ந்தாரோடும் தொடராதே,
பழுதே பிறந்தேன்; என் கொண்டு உன்னைப் பணிகேனே?

In other words they pine, weep, yearn and long for God.

In 5 -357 to 360, Manaikkavasagar says

பாடல் எண் : 90 
யானேபொய் என்நெஞ்சும் பொய் என்அன்பும்     பொய்
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப்   பெறலாமே
தேனே அமுதே கரும்பின் தெளிவே    தித்திக்கும்
மானே அருளாய் அடியேன் உனைவந்    துறுமாறே   

I am indeed false; my heart also is false;
my love too is false;Yet,if ,
I the Karma-ridden one,
weep for You I can secure You.
O Honey,Nectar,Essence of sweet cane

And sweet and great One,grace me,Your slave, to reach You.

xxxx

Thus we see Manikka vasagar echoing the Rig Vedic mantras in his great devotional work. From the Himalayas to Kanyakumari, from the Vedic days to devotional period in Tamil Nadu, the approach was same. Though the Vedas mentioned different gods in different hymns the attributes to Gods were nearly same.

—subham—

Tags -Tiruvasagam, Rig Veda, Crying, Weeping

சிறை சென்ற எழுத்தாளர், படிக்காத மேதை ஜான் பன்யன் (Post No.9825)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9825

Date uploaded in London –7 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

‘பில்க்ரிம்ஸ் ப்ராக்ரஸ்’ PILGRIM’S PROGRESS என்ற நூலை அறியாத ஆங்கில இலக்கிய மாணவர் இரார் .அதை எழுதியவர் ஆங்கில உரைநடை இலக்கியத்தின் முக்கியப்புள்ளியான ஜான் பனியன் JOHN BUNYAN ஆவார். அவர் படிக்காத மேதை; அதுமட்டுமல்ல  11 ஆண்டுகளுக்குச் சிறையில் வாடிய கட்டுரை ஆசிரியரும் ஆவார். தனது  மத நம்பிக்கையை சக்திவாய்ந்த எழுத்தில் வடித்தார் ஜான் பன்யன்.

பெட்போர்ட்ஷயரில் (Bedfordshire in England) ஒரு கிராமத்தில் பிறந்தார். 20 வயதில் முதல் திருமணம் நடந்தது. அவருக்கு 4 குழந்தைகள். முதல் குழந்தை குருடாகப் பிறந்தது.. பெட்போர்ட் சிறையில் இவர் சிறை வாழ்வு நடந்தது. பெட்போர்டில் (Bedford)இவருக்கு ஒரு சிலை உள்ளது.

ஜான் பன்யன் , லண்டனுக்கு அருகிலுள்ள ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தார் .அவரது குடும்பம் தலைமுறை தலைமுறையாக விவசாயம் மட்டுமே செய்துவந்த குடும்பம். ஆகையால் ஜானுக்கு முறையான படிப்பு என்பது கிடையாது. இப்படி பள்ளிக்கூடத்தையே அதிகம் அறியாத ஜான் பன்யனை இரண்டு சம்பவங்கள் புதிய பாதையில் திரும்பிவிட்டன.

***

முதல் சம்பவம்

1642ம் ஆண்டில் இங்கிலாந்தில் உள்நாட்டுப் போர் (Civil War) வெடித்தது. ஆலிவர் கிராம்வெல் OLIVER CROMWELL என்பவர் அப்போதைய  மன்னனை விழுத்தாட்ட போராட்டம் துவங்கினார். அவருடைய படையில் ஜானும் சேர்ந்தார்.

அப்போது அவருக்கு வயது 16 தான். இதுவரை வாழ்க் யில் சந்திக்காத பல புதுமுகங்களைக் கண்டார். விவசாயத்தைத் தவிர ‘வேறொன்றும் அறியேன் பராபரமே’ என்றிருந்த அவருக்கு புதிய எண்ணங்கள் உதித்தன. கிராம்வெல் ஆதரவாளர் இடையே மிகவும் பிரபலமாக இருந்த கிறிஸ்தவ தூய்மை கொள்கை (Puritan) அவருக்குப் பிடித்திருந்தது. கிறிஸ்தவ மதத்திலுள்ள ஏராளமான பிரிவுகளில் ப்யூரிட்டானிஸம் PURITANISM  என்பது கடுமையான விதிகளைக் கொண்டது.

இங்கிலாந்திலுள்ள ப்ராடஸ்டென்ட்  கிறிஸ்தவப் பிரிவில் மிச்சம் சொச்சம் தங்கியுள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ சடங்குளை அடியோடு ஒழிக்க வேண்டும் என்று எழுந்த தூய்மைப் படுத்தும் இயக்கம்தான் பியூரிட்டானிசம் (Puritanism) .

***

இரண்டாவது சம்பவம்

ஜான் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இரண்டாவது சம்பவம் அவர் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பப்பட்ட சம்பவம் ஆகும். உள்நாட்டு யுத்தம் முடிந்து, மன்னர் ஆட்சி (Monarchy) மீண்டும் ஏற்பட்டது. ஜான், தீவிர மத நம்பிக்கை உடையவர். தனக்குப் பிடித்த கிறிஸ்தவக் கொள்கைகளைப் பரப்பிவைத்தார். 1660-ம் ஆண்டில் இங்கிலாந்தில் மன்னர் ஆட்சி மீண்டும் ஏற்பட்டவுடன் , பியூரிட்டன் கிறிஸ்தவப் பிரிவு தடை செய்யப்பட்டது. கொள்கைப்பிடிப்புள்ள ஜான் தனது  பிரச்சாரத்தை நிறுத்தவில்லை. மன்னரின் சேவகர்கள் ஜான் பன்யனைக்கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சிறையில் வாளா இருக்கவில்லை. 11 ஆண்டுக்கால சிறைவாசத்தில் முதல் புஸ்தகம் உருவானது . அதில், தான் எப்படி கிறிஸ்தவ மதக் கொள்கைகளைப் பிடித்துக்கொண்டார் என்ற விஷயம் வருகிறது . அவரைப் புகழ் ஏணியின் உச்சத்துக்கு ஏற்றிய பில்க்ரீம்ஸ் ப்ராக்ரஸ் என்ற நூலை 50ஆவது வயதில் எழுதி முடித்தார். ஒரு ஒரு கிறிஸ்தவ  யாத்ரீகனின்  ஆன்மீகப் பயணம் பற்றியது  இந்த நூல்.. இதற்குள் இரண்டாவது முறை சிறையில் தள்ளப்பட்டார்.

அவரது ‘ஆன்மாவின் முன்னேற்றம் பற்றிய நூலின் கிறிஸ்தவ கதாநாயகன் அழிவு நகரிலிருந்து தேவலோக நகருக்குச் செல்லும் பயணம் இது. இந்தப் பயணத்தை அவர் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் வசன நடையில் எழுதியதால் அக்காலத்தில் மிகவும் பிரபலமானது. 59 ஆண்டுகளே அவர் உயிர் வாழ்ந்தார்.

ஜான் பன்யன் பிறந்த தேதி – நவம்பர் 30, 1628

இறந்த தேதி – ஆகஸ்ட் 31, 1688

வாழ்ந்த ஆண்டுகள் – 59

இலக்கியப் படைப்புகள்—

1666 – GRACE ABOUNDING TO THE CHIEF OF SINNERS

1678 – THE PILGRIM’S PROGRESS

1680- THE LIFE AND DEATH OF MR. BADMAN

1682 – THE HOLY WAR

1684 – THE PILGRIM’S PROGRESS, PART II

1686- A BOOK FOR BOYS AND GIRLS

Following is from Wikipedia

இரட்சணிய யாத்திரிகம் என்ற நூல்  ஆல்பிரட் கிருட்டிணபிள்ளை (எச்.ஏ.கிருட்டினனார்) அவர்களால் எழுதப்பட்ட ஒரு காப்பிய நூல் ஆகும். ஜான் பன்யன் (John Bauyan) ஆங்கிலத்தில் இயற்றிய ‘புனிதப் பயணிகள் முன்னேற்றம்’ என்ற நூலின் தமிழாக்கமான மோட்சப்பிரயாணம் என்னும் நூலைத் தழுவி செய்யுள் நடையில் எழுதப்பட்டதாகும்.(The Pilgrim’s Progress) தழுவல் ஆகும். கம்ப இராமாயண இலக்கிய வழியிலும், தண்டியலங்கார இலக்கண வழியிலும் தமிழ் மரபுக்கேற்ப எழுதப்பட்டுள்ளது.

–SUBHAM—

Tags -ஜான் பன்யன் , பில்க்ரிம்ஸ ப்ராக்ரஸ் , John Bunyan, Pilgrim’s Progress

பிறரிடமும் தன்னைப் போன்ற குணங்கள் இருப்பதைக் கண்டு மகிழ்பவன் அரிது (9824)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9824

Date uploaded in London – 7 JULY   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

டாக்டர் டி.எஸ்.கௌரிபதி திரிபாதி அவர்கள் தேர்வு செய்து வழங்கிய ஐந்து சுபாஷிதங்கள் கட்டுரை எண் 9774 (வெளியான தேதி: 25-6-2021) தரப்பட்டது. அடுத்த ஐந்து சுபாஷிதங்கள் இந்தக் கட்டுரையில் காணலாம்.

பிறரிடமும் தன்னைப் போன்ற குணங்கள் இருப்பதைக் கண்டு மகிழ்பவன் அரிதே தான்!

ச.நாகராஜன்

சம்ஸ்கிருத அறிஞரான டாக்டர் டி.எஸ்.கௌரிபதி சாஸ்திரி (Dr.T.S. Gouripathi Sastri)   அவர்களிடம் ஆந்திரா பல்கலைக்கழகம் நல்ல சில சுபாஷிதங்களைத் தேர்ந்தெடுக்குமாறு (1978இல்) பணிக்க, அவர் 36 சுபாஷிதங்களைத் தொகுத்துத் தந்தார். அதற்கான ஆங்கில மொழிபெயர்ப்பையும் அவரே செய்துள்ளார். அவற்றில் முதல் பத்து சுபாஷிதங்களை சென்ற கட்டுரைகளில் கண்டோம். அடுத்த ஐந்து சுபாஷிதங்கள் இதோ:-

ப்ரக்ஞா விவேகம் லபதே பின்னைராகமதர்ஷனை: |

கியத்தா ஷக்யமுன்னேதும் ஸ்வதர்கமனுதாவத: ||

அறிவு வெவ்வேறு விதமான தர்சனங்களைக் கற்று விவேகத்தை அடைகிறது. தனது சொந்த தர்க்கத்தைப் பற்றி கொண்டே இருந்து ஒருவன் எவ்வளவு தூரம் தான் முன்னேற முடியும்?

Knowledge attains discrimination with the study of diverse disciplines. How far can one proceed on in thinking by clinging to one’s own logic?

*

யத்னேனானுமிதோப்யர்த: குஷலைரநுமாத்ருபி: |

அபியுக்ததரைரன்யைரன்யதைவோபபாத்யதே ||

மிகப்பெரிய தர்க்கவாதிகளின் கூரிய முயற்சியால் அடையப்பட்ட முடிவுகள் கூட மற்ற தர்க்கங்களைக் கொண்டுள்ள இன்னும் சிறந்த அறிஞர்களால் ஒதுக்கி வைக்கப்படுகிறது.

Even the conclusion drawn by great (intellectual) effort by shrewd logicians is set aside by better thinkers of other disciplines.

*

நாகுணீ  குணினம் வேத்தி குணீ  குணிஷு மத்ஸரி |

குணீ  ச குணராகீ ச விரல: ஸரளோ ஜன: ||

நல்ல குணங்களைக் கொண்ட ஒருவனை குணமே அற்ற ஒருவனால் புரிந்து கொள்ள முடியாது. குணங்களைக் கொண்டுள்ள ஒருவன் இன்னொரு அதே போன்ற குணங்களைக் கொண்டுள்ளவனைப் பார்த்து பொறாமைப் படுகிறான்.  எவன் ஒருவன் அரும் குணங்களைத் தான் கொண்டுள்ள போதும் மற்றவர்களிடம் அதே குணங்கள் இருப்பதைப் பார்த்து (மகிழ்கிறானோ) விரும்புகிறானோ அப்படிப்பட்டவனைப் பார்ப்பது அரிது தான்!

The man destitute of merits cannot (even) understand a person endowed with them. The man endowed with merits is jealous of the persons endowed with merits. That person endowed with merits and straight (frank) and likes them (in others) is indeed rare!

*

உபகாரிஷு ய சாது: சாதுத்வே தஸ்ய கோ குண: |

உபகாரிஷு ய சாது: ஸ சாது சாத்பிருச்யதே ||

தனக்கு உதவி செய்யும் ஒருவனிடம் பண்புடன் நடந்து கொள்ளும் ஒருவனிடம் என்ன பெருமை இருக்கிறது? ஒருவன் தன்னிடம் மோசமாக நடந்து கொண்ட போதும் எவன் ஒருவன் அவனிடம் பெருந்தன்மையுடன் நடந்து கொள்கிறானோ அவனே உண்மையில் சாது (பெருமைப்படத்தக்க பிரபு) என்று பெரியோர் கூறுகின்றனர்.

What is great about the decency of a man who is decent towards those who help him? The noble people call such a man as (really) noble who is well disposed towards those who have wronged him.

*

தோஷானபி குணீ கர்தும்  தோஷீகர்தும் குணானபி |

ஷக்தோ வாதீ ந தத்தத்யம் தோஷா தோஷா குணா குணா: ||

 திறன் வாய்ந்த, எப்போதும் குதர்க்கம் செய்யும் ஒருவன் நல்லனவற்றை தோஷம் (குறைகள்)  உள்ளவை என்றும் குறை உள்ளவற்றை நல்லவை என்றும் கூறும் திறன் கொண்டவன். ஆனால் அது சரியில்லை;

எனெனில் நல்லது நல்லது தான்! குறை, குறை தான்.

An  (clever or crafty) argumentator is capable of showing demerits as merits and merits as demerits. But that is not right, ‘because’ demerits are demerits and merits are merits.

***

INDEX

ஸ்லோக ஆரம்பம் : ப்ரக்ஞா விவேகம், யத்னேனானுமிதோப்யர்த, நாகுணீ, உபகாரிஷு, தோஷானபி

அறிவு, சொந்த லாஜிக்

குணம் கொண்டவனைப் பாராட்டல்

உண்மை பிரபு யார்?

தோஷம் தோஷமே, குணம் குணமே

tags-  சுபாஷிதங்கள்

ரிக் வேதத்தில் தமிழ்வேதம் திருக்குறள் – 2 (Post No.9823)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9823

Date uploaded in London –6 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கட்டுரையின்  இரண்டாவது பகுதி இது. முதல் பகுதி ஜூலை 2-ம் தேதி இங்கு வெளியானது

ரிக் வேதத்தின் முதல் மண்டலத்தில் முதல் 25 கவிதைகளில் காணப்பட்ட திருக்குறள் கருத்துக்களைக் கண்டோம். திருவள்ளுவ மாலை பாடிய பல கவிஞர்கள் திருக்குறளை தமிழ் வேதம், தமிழ் மறை என்று போற்றியதையும் நாம் அறிவோம்.

இதோ மேலும் சில ரிக் வேதத் துதிகளில் திருக்குறள் கருத்துக்கள் :-

 (மூன்று எண்களில் முதல் எண் ரிக் வேத மண்டலத்தையும், இரண்டாவது எண் துதியையும், மூன்றாவது எண் துதியிலுள்ள மந்திரத்தின் எண்ணையும் குறிக்கும்)

XXX

தந்தை, தாய், மகவு இவர்களிளிடையே உள்ள அன்பையும் பாசத்தையும் பல குறள்களில்  காண்கிறோம்.

மழலைச் சொல் என்பது குழல், யாழ் இனிமையை வீட மிகவும் இனிமையானது; குழந்தைகள் அளாவிய உணவு அமிர்தத்துக்கு இணையானது.; ஈன்ற பொழுது தாய் பெரிதும் உவப்பாள் ; அதைவிட அவன் சான்றோன் என்று கேட்கும்போது இன்னும் மகிழ்வாள்.; ஒரு மகனை சான்றோன் ஆக்குவது தந்தையின் கடமை. அவன் நல்ல புலமை பெற்று பிரபல ம் ஆகும்போது இத்தைகைய மகனைப் பெற அவனது பெற்றோர்கள் என்ன நோன்பு அனுஷ்டித்தார்களோ ; ஆள் சக்கைப்போடு போடுகிறானே என்று பல குறள்களில் வள்ளுவர் பாடுவதைக் காண்கிறோம். இதே போல ரிக் வேதம் முழுதும் எங்களுக்கு நல்ல குழந்தைகள் பிறக்க வேண்டும், வீரர்கள் பிறக்க வேண்டும் என்று ரிஷி முனிவர்கள் பாடுகின்றனர்.

ஒரு எடுத்துக்காட்டு இதோ :-

RV 1-26-3

அக்கினியே! போற்றத் தகுந்த நீ எனக்குத் தந்தை போன்றவன்; நான் உனக்கு மகன் .நீ எனக்கு பந்து/ உறவினன்; நீ எனக்கு நண்பனுக்கு நண்பன் போன்றவன்.

ஒரே இரண்டு வரி மந்திரத்தில் கடவுளை தந்தை போன்றவன்; சொந்தக்காரன், நண்பன் என்றெல்லாம் அழைப்பது உறவு நெருக்கத்தையும் அவர்கள் மீதான ன்பையும் காட்டுகிறது.

RV 1-91-20

சபைக்குரியனும், தந்தைக்குப் புகழைத் தருபவனுமான புதல்வனை

சோமன்/சந்திரன் தருகிறான் – ரிக் வேதம்

ஒப்பிடுக :- இவன் தந்தை என்நோற்றான் கொல் – குறள்

குறள் 70

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை

என்நோற்றான் கொல்எனும் சொல்

[அறத்துப்பால், இல்லறவியல், மக்கட்பேறு]

பரிமேலழகர் உரை

தந்தைக்கு மகன் ஆற்றும் உதவி – கல்வியுடையனாக்கிய தந்தைக்கு மகன் செய்யும் கைம்மாறாவது; இவன் தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல் – தன்னறிவும் ஒழுக்கமுங் கண்டார் இவன் தந்தை இவனைப் பெறுதற்கு என்ன தவஞ் செய்தான் கொல்லோ வென்று சொல்லுஞ் சொல்லை நிகழ்த்துதல்

XXX

1-26 பாடியது ரிஷி சுனச்சேபன்

கருமிகள் மீது வன்முறையைப் பிரயோகிப்பதை  வள்ளுவர் ஆதரிக்கிறார். கையை முறுக்கி தாடையை நொறுக்கு; கரும்பு போல கசக்கினால்தான், கருமியிடமிருந்து காசு வரும் என்கிறார் வள்ளுவர்.

கன்னத்தில் அடி, கையை முறுக்கு, கரும்பு போல நசுக்கு

அதிகாரம் 108, கயவர்கள் பற்றியது. அதில் கஞ்சர்களையும் சேர்த்துத் திட்டுகிறார். கயவர்களின் கன்னத்தில் அடித்து ஆளை நொறுக்கு என்றும் சொல்வான் வள்ளுவன்.

ஈர்ங்கை விதிரார் கயவர் கொடுறுடைக்கும்

கூன்கைய ரல்லா தவர்க்கு (1077)

பொருள்: கன்னத்தில் அடித்து நொறுக்கினால்தான் கயவர்கள் உதவி செய்வர். அதுவரை சாப்பிட்ட பின்னர் ஈரக் கையால் கூட உதறித் தெறிக்க மாட்டார்கள்.

இன்னொரு குறளில் கரும்பு போல கசக்கி நசுக்கு என்கிறான்.

சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்

கொல்லப் பயன்படும் கீழ் (1078)

பொருள்: சான்றோர்கள் சொன்ன மாத்திரத்திலேயே பிறர்க்கு உதவி செய்வர். கயவர்கள் மட்டும் கரும்பு போல் கொன்று பிழிந்தால்தான் பயன்படுவார்கள்.

இதோ ரிக் வேதக்கருத்து

RV 1-36-16

அக்கினியே உன்னுடைய எரிக்கும் சுவாலைகளால் தானம் அளிக்காத எல்லா பகைவர்களையும்  மண் பாண்டங்களைத் தடியால் அடிப்பது போல அடித்து நொறுக்கு என்கிறார்  கோரனின் புதல்வன் ரிஷி கண்வன் பாடுறார்.

RV 1-84–8

அவியளிக்காதவனை – கருமியை –  தன் காலால் காளானை மிதிப்பது போல எப்போது மிதிப்பான் ? எங்கள் துதிகளை இந்திரன் எப்போது கேட்பான்?

XXX

RV 1-90-9

அடி அளந்தான் என்று விஷ்ணுவின்  வாமன- த்ரிவிக்ரமாவதாரத்தை வள்ளுவர் போற்றுகிறார்.

‘ஓங்கி உகளந்த உத்தமன்’ என்று ஆண்டாளும் பிற ஆழ்வார்களும் விஷ்ணுவைப் பாடுகிறார்கள்.

விஷ்ணு மூன்றடியால் உலகை அளந்த விஷயம் ரிக் வேதத்தில் பல இடங்களில் வருகிறது.

கம்பீரமான கால டியுள்ள விஷ்ணு எங்களைக் காப்பாற்றுவானாகுக.- ரிக் வேதம் -RV 1-90-9

மடிஇலா மன்னவன் எய்தும் அடிஅளந்தான்

தாஅய தெல்லாம் ஒருங்கு (610)

“தன் அடியினால் உலகத்தை அளந்த இறைவன் தாவிய

நிலப்பரப்பு முழுவதையும், சோம்பல் இல்லாத மன்னன் ஒரு சேர அடைதல் கூடும்.”

xxxx

1-48-12

உஷா தேவியே, வானிலிருந்து எல்லா தேவர்களையும் சோமத்தைப்பருக அழைத்து வா..

முதல் பகுதியிலேயே கண்டடோம் – வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் – குறள் 50

XXX

முதல் நூறு  பாடல்களைக் கண்டோம் .

தொடரும் ……………………………….

tags – தமிழ்வேதம்-2, ரிக் வேதம் , தமிழ்மறை

பெண்கள் மீது காதல் கொண்ட பெண் கவிஞர் Lesbian சாஃப்போ (Post No.9822)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9822

Date uploaded in London –6 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லெஸ்பியன் Lesbian என்ற சொல்லைத் தந்த கிரேக்க பெண் சாஃப்போ Sappho.

2600 ஆண்டுகளுக்கு முன்னர் கிரீஸ் என்னும் கிரேக்க நாட்டில் ஒரு பெண் கவிஞர் இருந்தார். அவர் பெயர் சாஃப்போ Sappho. அவரைப் பற்றி நிறைய கதைகள் உண்டு. அவர் எழுதியதாகச் சொல்லப்படும் ஒன்பது கவிதை புஸ்தகங்களில் இன்று நமக்குக் கிடைத்திருப்பது சில துண்டுக் கவிதைகள்தான் . பெண்களே பெண்களுடன் உறவு கொண்டு வாழும் அணியை ஆங்கிலத்தில் லெஸ்பியன் LESBIAN என்பர். இதற்குக்  காரணம் லெஸ்போஸ் என்னும் தீவு ஆகும்; கிரேக்க நாட்டிலுள்ள அந்தத் தீவில்தான் சாஃப்போ Sappho பிறந்தார்.

ஐரோப்பிய இலக்கியத்தில் மிகவும் புகழ்பெற்ற பெண்மணி சாஃப்போ.

இவருக்கு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் வாழ்ந்த 30 ரிக் வேத பெண்மணிகள் புனிதவதிகள் ; அவர்கள் இயற்றிய அல்லது ‘கேட்ட’ (Sruti) கவிதைகள் நமக்கு இன்றும் கிடைக்கின்றன. சாப்போவுக்கு 600 ஆண்டுகளுக்குப் பின்னர் ‘வடவேங்கடம் முதல் தென் குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகில்’ சுமார் 20 தமிழ்ப் பெண்களும் பாடல்களை இயற்றி இலக்கியத்தில் அழியா இடம்பெற்றனர்.

சாஃப்போ, இவர்களிடமிருந்து வேறுபட்டவர்.

இவர் பற்றிய கட்டுக் கதைகள்தான் அதிகம். உண்மைச் செய்திகள் மிகக்குறைவு. இவர் லெஸ்போஸ் தீவில் பிறந்தவர்;திருமணம் ஆனவர், அவருடைய மகளின் பெயர் கிளையஸ் என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.

பிற்கால கிரேக்க எழுத்தாளர்கள் இவரது கவிதைகளை படித்து ரசித்து நமக்கு விட்டுச் சென்ற  செய்திகள் மூலம் மேல்விவரம் கிடைக்கிறது. அதே தீவில் வசித்த அல்கேயாஸ் ALCAEUS  என்பவரை இவர் மணந்து ஒரு மகளைப் பெற்றார் என்றும் சொல்லப்படுகிறது

பேயோன் PHAON என்ற படகோட்டி மீது இவர் காதல் கொண்டதாகவும் அதன் விளைவாக ஒரு மலை உச்சியிருந்து விழுந்து சாஃப்போ தற்கொலை செய்து கொண்டதாகவும் பிற்கால ரோமானியாக் கவிஞர் ஆவிட் OVID  எழுதிவைத்தகத்துள்ளார். ஆயினும் இவைகளை உறுதி செய்யும் வேறு தடயங்கள் கிடைக்கவில்லை.

சாஃப்போ எழுதிய கவிதைகள் எதுவும் நமக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை. துண்டு துண்டாகக் கிடைத்திருக்கின்றன. அவை அனைத்தும் குடும்பம் மற்றும் நண்பர்களைப் பற்றியது. தனக்குத் தோன்றும் உணர்ச்சிகளைக் கவிதையாகக் கொட்டித் தீர்த்த பெண் இவர். ஆகையால் அத்தகைய கவிதைகளை எழுதிய பெண்களின் வரிசையில் இவர் முதலிடம் பெறுகிறார். எளிமையான அழகிய நடை; உணர்ச்சிகளும் புலன் இன்ப உணர்ச்சி கொண்டவை.

பெண்களை நோக்கி சாஃப்போ  பாடியதாக பாடல்கள் தென்படுகின்றன. அவரைச் சுற்றி ஒரு தோழிகள் கூட்டம் இருந்ததும் அவர்கள் இவர் கவிதைகளைப் போற்றிப் புகழ்ந்தும் தெரிகிறது . அந்தத் தோழிமார் கூட்டத்துடன் சேர்ந்து கிரேக்க நாட்டு ரதியை, அதாவது அப்ரதித் APHRODITE தேவதையை வழிபடும் சடங்குகளைச் செய்ததாகவும் சொல்லப்படுகிறது..

இதையெல்லாம் ஆதாரமாகக் கொண்டு சாஃப்போ பெண்களுடன் ஓரினச் சேர்க்கை வாழ்வை அனுபவித்தவர் என்று பிற்காலத்து விமர்சகர்கள் செப்பியதுடன் இவ்வாறு வாழ்க்கை நடத்துவோர் லெஸ்பியன் தீவுப் பெண்களைப் போன்றார் என்றும் சொல்லத்  துவங்கினர். அதிலிருந்து பெண்களே பெண்களை காம நோக்கில் கண்டால்  அவர்களை லெஸ்பியன் என்ற சொல்லால் அழைக்கத்  தொடங்கினர்.

சாஃப்போ

பிறந்த ஆண்டு- கி.மு 610

இறந்த ஆண்டு – கி.மு.580

வாழ்ந்த ஆண்டுகள்- 30

கவிதை நூல்கள் —

ஒன்பது தொகுப்புகளாக அவை இருந்தன என்று கருதப்படுகிறது.

ஆனால் இப்போது நமக்குக் கிடைத்தவை முழுக் கவிதை அல்ல.

இடையிடையே வரும் வரிகள்தான். அவைகளும் எப்போது எழுதப் பட்டன என்ற குறிப்பு இல்லை.

2014-ம் ஆண்டில்கூட அவர் எழுதியதாகக் கருதப்படும் ஒரு கவிதையின் 5 பத்திகள் stanza கண்டு பிடிக்கப்பட்டன. இன்னும் சில தற்கால ஆசிரியர்கள் அவரது கவிதைகளுக்கு கண், காது, மூக்கு வைத்து அவரது துண்டுக் கவிதைகளை முழுக் கவிதை ஆக்கிவிட்டதாகச் சொல்லி முழுக் கவிதை நூல்களையும் வெளியிட்டுவருகின்றனர் .

–SUBHAM–

tags- பெண் கவிஞர், Lesbian, சாஃப்போ,லெஸ்பியன், ஓரினச் சேர்க்கை , Sappho