

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,069
Date uploaded in London – 8 September 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
திருவிசைநல்லூர் ஸ்ரீதர வெங்கடேச ஐயாவாள்! – 2
சதகம் என்றால் நூறு என்று பொருள் நமக்கு தயா சதகத்தில் இன்று அதனுடைய பலஸ்ருதியையும் சேர்த்து 102 ஸ்லோகங்கள் கிடைத்துள்ளன. அவற்றின் அருமை சொல்லுக்கு அப்பாற்பட்டது. எடுத்துக் காட்டாக ஒரே ஒரு ஸ்லோகத்தைப் பார்ப்போம்.
தயா சதகத்தில் 91வது ஸ்லோகம் இது:-
ஸ்மரணம் ப்ரணாமகரணம் ததாமிதா, கதனம் ச ஜாதுசிதனங்கவைரிண: !
பரமம் பவாதிர்ஹரமன்ப தேஹினாம், த்வதயே கதிஸ்தவ தயே கரியஸி ||
ஜாதுசித் – எப்போதோ ஒரு கணம், அனங்கவைரிண: ஸ்மரணம் – சிவனுடைய நினைவு, ப்ரணாம் கரணம் – சிவனுடைய வணக்கம், ததா அபிதாகஹனம் -சிவனுடைய பேரைச் சொல்வது – ஆகிய இவை அயே அம்ப – ஏ தாயே!, த்வத் – உன் காரணத்தால், தேஹினாம் – மனிதருக்கு, பரமம் – மேலான, பவ ஆர்த்தி ஹரம் – பிறவிக் கஷ்டத்தைத் தவிர்ப்பதாக ஆகின்றன. ஹே தயே – ஹே, சிவ தயா தேவியே! த்வ – உன்னுடைய, கதி: – போக்கே, கரியஸி – மேலானது
ஒரு முறை கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணரை அலங்கரித்து அவர் வாழ்ந்த வீதி வழியே சென்ற ஊர்வலத்தில் இருந்தவர்கள் அவரை அவமதிக்கும் விதத்தில் அவர் வீட்டில் நிற்காமல் அவர் வீட்டை வேகமாகக் கடந்து சென்றனர். ஆனால் அடுத்த வீட்டிற்குச் சென்ற ஊர்வலத்தினர் கிருஷ்ணரின் படத்தைக் காணாமல் திகைத்தனர். அது ஐயாவாளின் வீட்டில் இருந்தது. அவர் தாயார் பாவத்தில் இருந்து, டோலா நவரத்னமாலிகா என்ற துதியை இயற்றிப் பாடினார்.
ஒரு முறை வேஷதாரியாக வந்து கோவிந்தசாமி என்பவர் அவரை அவமதித்தார். அவரைக் காவேரிக் கரையில் இறைவன் சொப்பனத்தில் விரட்டவே, அவர் மனம் திருந்தி அவரை வணங்கிப் போற்றி அவரது பக்தராகவே ஆனார்.
ஒரு சமயம் திருட்டுக் கொள்ளைக்காரர்களுக்காக அவர் பஜனை செய்ய அவர்கள் திருடிய நவரத்னக் குவியலை அவர்கள் ஐயாவாளிடம் கொடுத்துச் சராணகதி அடைந்தனர். அவற்றை மஹாலிங்க மூர்த்திக்கு நாகாபரணமாகச் செய்து அணிவித்தார்.
இப்படிப்பட்ட அற்புதங்கள் எல்லாம் எங்கும் பேசப்படவே அவர் புகழ் பரவியது.
தனது வாழ்நாளில் அவர் சம்ஸ்கிருதத்தில் ஏராளமான நூல்களை இயற்றியுள்ளார். காவேரியின் எல்லையற்ற மஹிமையை அவர் அருமையாக விவரித்துள்ளார்.


“காவேரி கங்கையை விடப் புனிதமானது. காவேரி திருமாலின் தலை, இடை, கடை என்ற மூன்று இடங்களிலும் பெருமை பெற்று விளங்குகிறாள். மைசூர் ஸ்ரீரங்கபட்டணம், ஸ்ரீரங்கம், கொள்ளிடக்கரை அரங்கம் எனற மூன்று அரங்கங்களும் காவேரி நதியைப் புனிதமாக்குகின்றன. காவேரி நீரானது அன்பையும், அறிவையும், அருளையும் பெருக்குகின்றது. உலகில் உள்ளோர் தொடர்ந்து செய்யும் எல்லா பாவங்களையும் காவேரியில் ஸ்நானம் செய்த ஒரு நொடிப்பொழுதில் இறைவன் அருளே காவேரியாக இருந்து நீக்கி விடுகிறது.” என்று இப்படி அவர் காவேரியின் மஹிமையைப் பாடிப் போற்றுகிறார்.
ஒரு சமயம் திருவிசைநல்லூரும் அதைச் சுற்றி இருந்த பகுதிகளும் மழையின்றி பெரிதும் வறண்டிருந்த போது மக்கள் நீரின்றி வருந்தினர். உடனே ஐயாவாள் திருவிசைநல்லூரில் எழுந்தருளியிருக்கும் கர்கடேஸ்வர மீது குளீராஷ்டகம் என்ற ஸ்துதியை இயற்றிப் பாட மழை கொட்டோ கொட்டென்று பெய்து அனைவரையும் மகிழச் செய்தது.
ஐயாவாளின் மனைவி அவருக்கு முன்னமேயே இறைவன் திருவடி சேர்ந்தார்.
தனது 85ஆம் வயதில் ஒரு நாள் தனது இறுதிக் காலம் நெருங்குவதை தனது சீடர்களுக்குக் குறிப்பால் உணர்த்தினார் ஐயாவாள்.
ஒருநாள் வழக்கம் போல மஹாலிங்க ஸ்வாமியை வழிபடச் சென்ற ஐயாவாள் சந்நிதியில் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்யும் போது மறைந்து பகவானுடன் ஐக்கியமானார். இறைவனுடன் இப்படி அவர் ஐக்கியமானதைக் கண்ட உலகம் வியந்து பிரமித்தது.
ஸ்ரீ ஸ்ரீதர ஐயாவாள் மடம் கங்காவதரண மஹோத்ஸவத்தை பத்து நாள் உற்சவமாக ஆண்டு தோறும் தொடர்ந்து நடத்தி வருகிறது. கார்த்திகை மாதம் அவரது இல்லத்தில் அமாவாசை தினத்தை ஒட்டி பெருந்திரளான பக்தர்கள் குழுமுவது வழக்கம்.
வடமொழியில் வல்லவரான ஐயாவாளின் முக்கியமான நூல்களுள் ஆக்யாசஷ்டி, சிவன் மீது பாடப்படும் தயா சதகம், மாத்ருபூத சதகம், ஸ்துதி பத்ததி, சிவ பக்தி கல்பலதிகா, சிவ பக்த லக்ஷணம், தாராவலீ ஸ்தோத்ரம், ஆர்த்திஹர ஸ்தோத்ரம், குளீ ராஷ்டகம், ஜம்புநாதாஷ்டகம், தோஷ பரிஹாராஷ்டகம், க்ருஷ்ண த்வாதச மஞ்சரி, அச்சுதாஷ்டகம், டோலா நவரத்ன மாலிகா, நாமாம்ருத ரஸாயனம் உள்ளிட்டவை குறிப்பிடத் தகுந்தவையாகும். இவை அனைத்தையும் அன்பர்கள் https://www.sriayyaval.org/works.html என்ற தளத்திலிருந்து தரவிறக்கம் – டவுன்லோட் – செய்து கொள்ளலாம். அவர் இயற்றிய பகவன் நாம பூஷணம் இன்று நமக்குக் கிடைக்கவில்லை.
காவேரி தீர மஹான்களில் பெரிதும் போற்றப்பட்ட மஹான்களில் ஸ்ரீதர வெங்கடேச ஐயாவாள் மிக உயர்ந்த உன்னத ஸ்தானத்தைப் பெற்றிருக்கும் மஹான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை! நன்றி, வணக்கம்.

***
முற்றும்
Tags- தயா சதகம், ஸ்ரீதர வெங்கடேச, ஐயாவாள், சிவ பக்தி,
நவரத்ன மாலிகா, கோவிந்தசாமி
Kannan B
/ September 8, 2021அன்புடையீர்,
வெகு ரசனையுடன் சுருங்கச் சொல்லி விளங்க வைத்துள்ளீர்கள்.
அருமை. கூடுதல் தகவல் ஒன்று: ஐயாவாளின் “பகவந்நாம பூஷணம்
நூல் தற்சமயம் ‘டவுண்லோடு’ செய்துகொள்ள ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது என்று அதிஷ்டானத் தகவல் தெரிவிக்கிறது.
தமிழில் மொழிபெயர்த்து உரை எழுதியிருப்பவர் “பயனூர் ஶ்ரீஶ்ரீ அண்ணா” அவர்கள் (கிருஷ்ணப்ரேமி ஸ்வாமிகள்).
புத்தகம் கிடைக்குமிடம்:
ஶ்ரீபகவந்நாம பப்ளிகேஷன்ஸ், மேற்கு மாம்பலம், சென்னை
முதற் பதிப்பு நவம்பர் 2019 ரூ 160/-
நன்றி.
santhanam nagarajan
/ September 8, 2021ஐயாவாள் இயற்றிய பகவன் நாம பூஷணம் இன்று நமக்குக் கிடைக்கவில்லை என்று எனது கட்டுரையில் எழுதியிருப்பதைச் சுட்டிக் காட்டி
.https://www.sriayyaval.org/works.html என்ற தளத்தில் இந்த நூலும் இருக்கிறது என்ற செய்தியை திரு பா.கண்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார். அவருக்கு எனது நன்றி. இது 16வது நூலாக இந்தத் தளத்தில் கிடைக்கிறது. அன்பர்கள் இதையும் படித்துப் பயனடையலாம்.
Kannan B
/ September 9, 2021ஸ்ரீதரவேங்கடேச ஐயாவாள் அருளிச்செய்த
பகவந்நாமபூஷணம்
(தமிழாக்கம் ஸ்ரீஅண்ணா)
Scanned by CamScanner
விலை ரூ.160/
காபிகள் 500
முதற்பதிப்பு தவம்பர் 2019
Copy Right Reserved
ஸ்ரீஹர்
முகவுரை
ஜகத்ருவான ஆதிசங்கரர் ப்ரஸ்தானத்ரய பாஷ்யத்தாலும் வேதாந்தனித்தாந்தம் செய்தார், பிறகு விஷ்ணுஸஹஸ்ரதாம பாஷ்யத்தால் நாமஸித்தாந்தம் செய்தார். பூர்வபக்ஷக்ஷ்ம் இருந்தால்தான் ஸித்தாந்தம் ஏற்படும். வர்ணாச்ரம தர்மங்களும், யக்ஞயாகாதி க்ரியைகளும், யோகாப்யாஸமும், ஸந்யாஸ் பூர்வகமான வேதாந்த ச்ரவனமும் இருக்கும்போது இது என்ன நாம்பஜனை ? இதை ஏன் செய்ய வேனும் ? என்பது பூர்வபக்ஷம். இந்த ஸாதனைகள் கலியில் நஷ்டமாகிவிட்டதாலும், சீரமஸாத்யமாக இருப்பதாலும், பகவானின் நாமகீர்த்தனம் ஒன்றே
போதும், ஸ்ரீஆதிசங்கரர் ஸஹஸ்ரநாமபாஷ்யத்தில் हिंसाद्रव्यान्तरपुरुषान्तरदेशकालनियमसामान्य
निरपेक्षत्वमाधिक्यकारणम्
தேசம் வேணும், காலம் வேணும், த்ரய்யம் வேனும் நடத்திவைக்க வாத்தியார் வேணும், தனக்கும் தகுதி வேணும் என்கிற சிறு நியமம்கூட இல்லாமல் ஸ்வதேசத்திலோ, மிலேச்ச தேசத்திலோ, பாலியோ, அர்த்தராத்ரியிலோகூட நாமகீர்த்தனம் செய்யலாம். ஸ்த்ரீகள், புருஷர்கள், சூத்ரர்கள், பாலர்கள், முதியோர்கள், துறவிகள் யாவரும் நாமகீர்த்தனம் செய்யலாம். ஆசௌச காலத்தில்கூட நாமம் சொல்லலாம். ஒரு ஸாமான்ய நியமம்கூட கிடை டயாது. விரும்பிய எல்லா பலனும் தரும். கடைசியில் அபரோக்ஷஞானமுண்டாகி மோக்ஷம் கிடைக்கும் என்று ஸித்தாந்தம் செய்துள்ளார். இந்த வாக்யமே நாமஸித்தாந்தத்துக்கு ஆதாரம்,
வெளியிடுவோர் ஸ்ரீபசுவத்தாம பப்ளிகேஷன்ஸ் மேற்குமாம்பலம் சென்னை
அச்சிட்டோர்
ஸ்ரீஸ்ரீப்ரஸ் கமலாநகர், கொள்ளிடக்கரை ரோடு, வடக்குவாசல், ஸ்ரீரங்கம்
From: B.Kannan, Delhi
ASHOK KUMAR
/ September 12, 2021.https://www.sriayyaval.org/works.html – I got wonderful slokas from here thankyou.