நியோடைமியம் (NEODYMIUM) பற்றிய சுவையான தகவல் (Post No.10073)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,073

Date uploaded in London – 9 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இதுவரை 36 தனிமங்கள்/மூலகங்கள் குறித்த சுவையான வரலாற்று, ரசாயன, மருத்துவ, தொழில் பயன்பாடு , புவியியல் செய்திகளைக் கண்டோம். மூலகம் (ELEMENT)  என்பது இந்தப் பிரபஞ்சம் என்னும் கட்டிடத்தின் 118 செங்கற்கள் ஆகும். அதில் ஒன்றை எடுத்து அதன் அணுவைப் பிளந்தால் பகவான் கிருஷ்ணன் , தனது விஸ்வரூப தரிசனத்தில் காட்டியது போல பிரம்மாண்ட  சக்தி  வெளிப்படும். முதல் அணுகுண்டு சோதனை நடந்தபோது அந்தக் காட்சியைக் கண்ட அணுசக்தி விஞ்ஞானி  ஜே .ராபர்ட் ஓப்பன்ஹைமர் (J.ROBERT OPPENHEIMER) பகவத் கீதை ஸ்லோகத்தைச் சொல்லிக் காட்டினார் .( திவி சூர்ய ஸஹஸ்ரஸ்ய = ஆயிரம் சூரியன்கள் ஒரே நேரத்தில் உதித்தது போன்ற; எல்லாம் என்னுள்ளே அடக்கம். ;நீ அழிப்பதற்கு முன்னரே அவை மரணம் என்னும் பள்ளத்தில் விழுவதைக் காண் )

ஆக, எல்லா மூலகங்களையும் பிரித்துக் கொண்டே சென்றால் எஞ்சுவது அதன் அணு.

இப்போது நியோடைமியம் (NEODYMIUM)  என்னும் உலோகம் (மூலகம் ) பற்றிய சுவையான செய்தியைக் காண்போம்.

நியோடைமியம் (NEODYMIUM ) , இரும்பு (IRON) , போரான் (BORON), ஆகிய மூன்றையும் கலந்து உருவாக்கும் (NIB ) காந்தம் மிகவும் சக்தி வாய்ந்தது. அதைக் கையாளுவோர் கண்களைப் பாதுகாக்க பாதுகாப்புக் கண்ணாடிகளை அணிந்து கொண்டுதான் அதைத் தொடவேண்டும்.அந்த காந்தம் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொள்ளும்போது அவை சேரும் வேகத்தில் தூள் பறக்கும். அவை கண்களின் உள்ளே செல்லமுடியும். இந்த நியோடைமியம் (NEODYMIUM)  காந்தத்தில் மிகச் சிறிய காந்தத்தை வாயில் வைத்துக்கொண்டால் கன்னத்தில் பலவகை நகைகளை ஒட்டிக் கொள்ளும் தந்திர வித்தைகளைக் காட்டலாம் .அப்படிச் செய்த பலர் அதை பிரிக்க முடியாமல் தவித்து, இறுதியில் ஆஸ்பத்திரிக்கு ஓடும் நிலையும் ஏற்பட்டது. ஏனெனில் அவை அவ்வளவு சக்தியுடன் ஒட்டிக் கொள்கின்றன. எளிதில் பிரிக்கமுடியாது .

அமெரிக்கா போன்ற நாடுகளில் இதை போலி கரன்ஸி நோட்டுக்களைக் கண்டுபிடிக்கவும் பயன்படுத்துகின்றனர். உண்மையான கரன்ஸி (ரூபாய் நோட்டு) அச்சடிக்கும் மை (INK)யில் இரும்புத்துகள் உண்டு. ஆனால் போலி நோட்டு அடிப்பவர்கள் பயன்படுத்தும் மையில் அது இராது. ஆக காந்த சக்தியைப்  பயன்படுத்தி எது அசல், எது போலி என்று கண்டுபிடிக்க நியோடைமியம் (NEODYMIUM ) உதவும்.

சரியான உச்சரிப்பு நீயோடைமியம்.கிரேக்க மொழியில் ‘புதிய இரட்டையர்’ (NEW TWINS) என்று பொருள். ஏனெனில்  ஒரே மாதிரியான குணம் உடைய அபூர்வ  (RARE EARTHS ELEMENTS) மூலக குடும்பத்தைச் சேர்ந்தது இது. மூலக அட்டவணை எனப்படும் பிரியாடிக் டேபிள் (PERIODIC TABLE) அட்டவணையில் லாந்தனம் முதல் லுடேஷியம் (LANTHANUM TO LETETIUM 57 முதல் 71 வரை) வரையுள்ள லாந்தனைட்ஸ் ( LANTHANIDES) என்னும் அணியில் இதுவும் அடக்கம் .

மனித உடலில் இதற்கு அதிக வேலை இல்லை. இதன் தூசி கண்களைப் பாதிக்கும் .பொதுவாகச் சொன்னால் லாந்தனைட்ஸ் அணியிலுள்ள மூலகங்கள் மனித உடலில் மிகச் சிறிய அளவில் எலும்பு, சிறுநீரகம் , கல்லீரலில் இருக்கிறது. தாவ்ரங்ககளின் வேர்கள் இதை கிரகிக்காததால் மனித உடலில் இது சேர்வதும் குறைவே.

மருத்துவத்தில்

காந்த சிகிச்சை, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் சாதனங்களில் இது உபயோகப்படுத்தப்படுகிறது .

எலியின் உடலில் இதைச் செலுத்தி ஆராய்ந்தனர். இரத்தம் உறைவதை (Blood clotting) அது தடுப்பதைக் கண்டு மகிழ்ந்தனர். ஆயினும் இதை மனித உடலில் ஏற்றி  இரத்தம் உறைவதைத் தடுக்க முடியுமா என்று ஆராய்ந்தனர். அதில் வெற்றிகிட்டவில்லை. எலி செத்தால் , கேட்பதற்கு நாதி இல்லை; மனிதன் செத்தாலோ……………………………

ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னாவில் 1885ம் ஆண்டில் கார்ல் ஆவர் (Carl Auer) என்பவர் இதைக் கண்டுபிடித்தார்.அப்போது அவர் ராபர்ட் புன்செனின் ஆராய்ச்சி மாணவர். புன்சென் பர்னரை (Bunsen Burner)  அறியாத ரசாயன மாணவர் இருக்கமுடியாது

சீனா , அமெரிக்கா , இந்தியா , இலங்கை, ஆஸ்திரேலியா , பிரேசில் ஆகிய நாடுகளில் நியோ டைமியம் கலந்த தாதுக்கள் பெருமளவில் பூமிக்கடியில் உள்ளன. அவைகளை அவர்கள் வெட்டி எடுத்த்து பயன்படுத்துகின்றனர். இதை சுத்தப்படுத்தி பிரிப்பது கடினமானதால் விலையை அதிகரிக்கிறது; ஆகையால் குறைவான அளவே உற்பத்தி செய்யப்படுகிறது . முதலில் இதை மக்னீஷியத்துடன் சேர்த்தால் அதன் பலத்தை அதிகரிப்பது கண்டு மகிழ்ந்தனர். பின்னர் அதை போரான் , இரும்புடன் சேர்த்து சக்திவாய்ந்த காந்தங்களை உருவாக்குவது 1983-ல் கண்டுபிடிக்கப்பட்டது. கார்களின் பல பாகங்களிலும் , கம்பியூட்டர் தகவல் சேமிப்பு விஷயத்திலும் ஒலிபெருக்கியிலும் நியோடைமியம் பயன்படுகிறது .

கண்ணாடியில் ஊதா (Purple)  நிறத்தை ஏற்றவும் இது உதவுகிறது . அது பாதுகாப்புக் கண்ணாடிகள் (GOGGLES)  செய்வதற்கு பயன்படுகிறது. நியோடைமியம் ஆக்ஸைடை கிரியா ஊக்கியாகவும் (CATALYSTS ) பயன்படுத்துகின்றனர்

காற்று விசையைப் பயன்படுத்தி மின்சார சக்தி உற்பத்தி செய்யும் டர்பைன்களிலும் நியோடைமியம் காந்தம் உள்ளது

உலோகம்

இரசாயனக் குறியீடு – Nd  (என் டி)

அணு எண்- 60

உருகு நிலை 1021  டிகிரி சி

கொதி நிலை – 3070 டிகிரி சி

இது ஒரு வெள்ளி போன்று பளிச்சென காணப்படும் உலோகம் ஆகும். காற்றில் பட்டால் கருத்துக் போகும் என்பதால் இதை எண்ணைக்கு அடியிலோ பிளாஸ்ட்டிக் பெட்டியிலோ பாதுகாத்து வைக்கிறார்கள். தண்ணீரில் மெதுவாகவும் வெந்நீரில் வேகமாகவும் செயல்படும்.  இதற்கு ஏழு ஐசடோப்புகள் (Isotopes) இருக்கின்றன

Uses in bullet points

1. Magnetic Resonance Imaging System 

2. Magnotherapy

3. Audio Equipment

5. Permanent Magnet Motors

6. Magnetic Separation Technology

7. Microwave Communication Technology

8. Magnetization Technology

tags- நியோடைமியம், NEODYMIUM,  காந்தம்

—subham—

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: