தாயுமானவர்! – 2 (Post No.10,500)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,500
Date uploaded in London – – 29 DECEMBER 2021

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

தாயுமானவர்! – 2
ச.நாகராஜன்


ஒரு நாள் திருச்சிக்கு சுவாமி தரிசனம் செய்ய திருமூலர் மரபிலே தோன்றி, மெய்கண்ட தேவ நாயனாரது வழி வந்த குரவரிடத்தில் ஞானோபதேசம் பெற்ற மௌனகுருசாமிகள் என்பார் வந்தார்.

அவரைக் கண்டவுடன் உளம் மிக மகிழ்ந்தார் தாயுமானவர். அவர் கையில் வைத்திருந்த புத்தகம் யாதோ என்று அவருக்கு ஆர்வம் மேலிட்டது. கேட்டார். ஆனால் சுவாமிகளோ பதில் சொல்லாமல் எல்லா இடங்களுக்கும் சென்று ஊர் அடங்கிய பின் தாயுமானவர் சந்நிதிக்குச் சென்று பத்மாசனத்தில் அமர்ந்தார். தொடர்ந்து அந்தப் புத்தகம் யாது யாது என்று தாயுமானவர் கேட்ட கேள்விக்கு இப்போது பதில் வந்தது.
சிவஞான சித்தி என்றார் ஸ்வாமிகள். பின்னர் தாயுமானவரின் கேள்விகளுக்கெல்லாம் அவர் தக்க விடையிறுத்தார். பதியிலக்கணம், பசுவிலக்கணம், பாசவிலக்கணம், ஞானாஞ் ஞான இலக்கணம், அத்துவித இலக்கணம் உள்ளிட்ட அனைத்தையும் மௌன குரு ஸ்வாமிகள் விவரிக்க அவரைத் தன் குருவாக ஏற்றார் தாயுமானவர்.
“இன்னும் சிறிது காலம் இல்லறம் நடத்தி, புத்திரனைப் பெறுக; பின்னர் யாம் வந்து நிஷ்டை கூடும் உபாயத்தை உமக்கு அளிப்போம்” என்று கூறி விட்டுச் சென்றார் மௌனகுரு ஸ்வாமிகள்.


தாயுமானவருக்குத் திருமணமும் நடைபெற்றது. மட்டுவார் குழலம்மை என்ற மாட்சி வாய்ந்த நங்கையை மணந்தார். ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அதற்கு கனக சபாபதி என்ற பெயர் இடப்பட்டது. காலம் சென்றது. மட்டுவார்குழலியார் சிவபதம் அடைந்தார்.
இல்வாழ்க்கையில் ஈடுபாடில்லாத தாயுமானவர் தலம் தலமாகச் சென்றார். ஒரு முறை சேது தரிசனம் செய்த பின்னர் குமரிக் கடலில் நீராடி அங்கிருந்து பொதிய மலை சென்றார். அங்கே அகத்திய மஹரிஷியின் தரிசனம் பெற்று பெரும் ஞான நிலையை அடைந்தார்.


அவரது அருள் சக்தியைக் கண்டு வியந்த அரசன ஒரு நாள் அவரை அழைத்து, “இனீ நீர் எனக்குச் சேவை செய்ய வேண்டாம். நான் தான் உமக்குச் சேவை செய்ய வேண்டும்” என்று கூறி அவரை அரசுப் பணியிலிருந்து விடுவித்தான்.
அவருக்கு ஏவல் செய்ய ஆரம்பித்து, “எனது அரசு மற்றும் உடைமைகளை ஏற்று அருள்க” என்று அவரிடம் வேண்டினான். தாயுமானவரோ அவருக்கு அரிய உபதேசங்களை அருளித் தன் குருநாதரை அடைந்தார். அவரிடம் ஞானாவுத்திரி என்னும் தீட்சை செய்யப்பெற்று துறவறம் பூண்டார்.


அன்று முதல் ஆடைகளைத் துறந்து கௌபீனதாரியாகத் திகழலானார். ஜோதிடர்கள் கூற்று மெய்யாகும்படி அரசர்களிலிருந்து சாமானியர் வரை அவரை நாடி அவர் அடி பணிந்தனர். ஒரு பெரிய அரசனுக்குரிய, ஒரு பெரியவருக்கான, தச அங்கங்களான நாமம், நாடு, நகர், ஆறு, மலை, ஊர்தி, படை, முரசு, தார், கொடி ஆகிய பத்தும் அவருக்கு இயல்பாகவே அமைந்தன.

அவர் மெய்யரசராக விளங்கியமையால் அவாவின்மை, மெய்யுணர்வு துறவு ஆகியவை குணம் என்னும் மலையாக அமைந்தன.


நித்தியானந்தம் நதியாக ஆனது. வேதம் முதலிய கலைகளாலும் அறிய முடியாத சிற்சத்தித் தானம் நாடாக ஆனது..அநுபூதி அவருக்கு ஊராகவும் அருள் அவருக்கு மாலையாகவும் வியாபகத்வம் என்பது குதிரையாகவும் சிவஞானம் யானையாகவும் அமைந்தன. வைதிக சைவ சித்தாந்தம் அவரது வெற்றிக் கொடியாக ஆனது. நாதம் என்னும் முரசும், அறிவித்தல் என்னும் ஆணையும் கூடிய தசாங்கங்கள் அவருக்குக் கிட்டின. பேரறிவு பெருஞ்சுடர் முடியாக ஆனது. அந்தண்மை வெண்கொற்றக் குடையாக ஆக, சமாதி சிம்மாசனம் ஆனது. மனம் புத்தி சித்தம் அகங்காரம் ஆகிய நான்கும் அவருக்கு நால்வகைச் சேனைகளாக ஆயின. நிஜமாகவே தவ அரசராக அவர் ஆனார்.
அவர் வாயிலிலிருந்து அருட் பாடல்கள் மழையெனப் பொழிய ஆரம்பித்தன. அருகே இருந்த அவர் மாணாக்கர்கள் உடனுக்குடன் பாடலைப் படி எடுத்தனர்.
நீண்ட நாள் வாழ்ந்த அவர் இராமநாதபுரம் சென்று சிவத்தோடு கலக்க எண்ணினார். அவர் ஒரு தைமாதம் விசாக நட்சத்திர நாள் அன்று சமாதி எய்தினார். அவரது சமாதி இராமநாதபுரத்தில் லக்ஷ்மிபுரம் வெளிப்பட்டினம் பகுதியில் அமைந்துள்ளது. தவறாமல் குருபூஜை வருடந்தோறும் அங்கு நடைபெறுகிறது.


ஸ்வாமி சித்பவானந்தர் அண்மைக் காலத்தில் அந்தர்யோகங்களை ஆங்காங்கே நடத்தி தாயுமானவர் பாடல்களுக்கான விரிவுரை தந்து வந்தார்; பல நூல்களையும் அவர் படைத்துள்ளார். அவரது திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனமே தாயுமானவரின் சமாதியை பரிபாலித்து நிர்வகித்து வருகிறது.


தாயுமானவரின் காலம் 1705ஆம் ஆண்டு முதல் 1742 முடிய என்று வரலாறு கூறுகிறது.
இதுவே தாயுமானவரின் திவ்ய சரித்திரமாகும்.
தாயுமானவர் பாடல்களில் நமக்கு இன்று கிடைத்துள்ளவை 1452 பாடல்கள் ஆகும். இவை 56 தலைப்புகளில் உள்ளன.


திருவருள் விலாசப் பரசிவ வணக்கம் என்ற தலைப்பில் உள்ள மூன்று பாக்களின் விளக்கவுரையே பல அறிஞர்களால் மிகப் பரந்து விரித்துரைக்கப்பட்டிருக்கிறது.


அங்கிங் கெனாதபடி யெங்கும் பிரகாசமா
யானந்த பூர்த்தியாகி
யருளொடு நிறைந்ததெது தன்னருள் வெளிக்குளே
யகிலாண்ட கோடி யெல்லாந்
தங்கும்படிக்கிச்சை வைத்துயிர்க் குயிராய்த்
தழைத்ததெது மனவாக்கினிற்
றட்டாம னின்றதெது சமய கோடிகளெலாந்
தந்தெய்வ மெந்தெய்வ மென்
றெங்குந் தொடர்ந்தெதிர் வழக்கிடவு நின்றதெது
எங்கணும் பெருவழக்காய்
யாதினும் வல்லவொரு சித்தாகி யின்பமா
யென்றைக்கு முள்ள தெது மேற்
கங்குல் பகலற நின்ற வெல்லை யுள தெதுவது
கருத்திற்கிசைந்த ததுவே
கண்டன எல்லாம் மோன உருவெளியது ஆகவும்
கருதி அஞ்சலி செய்குவாம்
இந்தப் பாடல் எல்லாம் வல்ல மன வாக்கிற்கு எட்டாத பெரும் சக்தியைப் பற்றிச் சொல்லி வியக்கிறது.

“எண்ணரிய பிறவி தனில் மானுடப் பிறவிதானியாதினும் அரிது காண். இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ ஏது வருமோ அறிகிலேன்” என்று மானுடப் பிறவியின் சிறப்பைக் கூறி அதில் மெய்யுணர்வு நாட்டம் இருக்க வேண்டும் என்று அவர் வற்புறுத்துகிறார்.


**

தொடரும்

tags- தாயுமானவர் 2

BIOLOGY AND EXTRA TERRESTRIALS IN VEDIC HYMN TO EARTH (Post No.10,499)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,499

Date uploaded in London – –   28 DECEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Let me continue with the ‘Hymn to Earth’ found in the 12th book of Atharva Veda (AV)

4 out of 63 (AV.12-1- 4)

The fourth stanza/mantra is almost a repetition of third stanza. Here the poet prays for more cattle and crops from earth. Vedic society was an agricultural society mainly based in villages; Rig Veda (RV), the oldest book in the world, shows us the oldest democracy in the world. We come across names of scores of kings in the RV in addition to Sabha (elected assembly) and Samiti. ‘Sabha’ is used throughout India and Samiti=Committee (correct pronunciation is Samittee and not Kamilttee) throughout the world. We also come across Gramani= Village chief. The word Grama=village is known to every Indian.

xxx

Mantra 5/63

Moving to fifth stanza /mantra, we hear the old stories ; Devas defeated the demons; this shows there has been an opposition party from the very beginning. Like we have positive and negative nodes in electricity, a society must always have an opposition party. Otherwise, the rulers will go berserk. This opposition party is supported in the Upanishadic story as well; Kanchi Shankaracharya (1894-1994) spread the story throughout the world through United Nations where his Sanskrit song was sung by most famous musician of India MS Subbulakshmi. There he incorporated the  ‘D D D’ story from the oldest Upanishad. Damyata, Dayatva and Datta

Damyata = CONTROL yourself; advice to Devas

Datta = don’t keep everything for you ; share it; GIVE; advise to greedy mankind.

Dayatva = be MERCIFUL; advise to Asuras/Demonic forces.

This story of 3 DDD sounds from the Thunder show that Hindus used Nature to Teach and to Learn.

This story shows Opposition Party/ Asura will always be there. But such demonic forces will be defeated says stanza five of AV 12-5

The same stanza prays for magnificence and lustre.

The words used are Bhagam and Varchas

Varchas is Spiritual quality.

Bhaga means six types of treasures/ virtues.

God is called Bhagavan in Sanskrit because He is the source of Six Bhagas. They are

1.Vairagya (no worldly desire or passion)

2.Aiswarya (prosperity)

3.Kirti (fame)

4.Gnana (wisdom, knowledge)

5. Bhala (Strength) and

6.Sree/Lakkshmi (Wealth)

So the Sanskrit words BHAGA and VARCAS in the fifth mantra are very important.

Xxx

GOLD BREASTED AND SWEET HEARTED EARTH

Mantra 6 out of 63

Here the poet describes Mother Earth as gold breasted and sweet hearted. Breast feeding is encouraged throughout the world. All credits go to Hindus for two reasons:-

1.Vedas encourage breast feeding. We have similes showing loving mothers feeding babies; here Mother earth’s breasts are praised as Golden

2.Hindus discovered cow’s milk is the closest alternate to mother’s milk. They  domesticated that animal and made it mother of human race and called it Go Matha (Cow Mother; both English words are actually Sanskrit words! Go=cow, Matha=mother)

So, earth’s breasts are praised gold breasted, treasure bearing, firm staying. Indra, who is like bull, is requested to shower wealth on us.

Xxx

Mantra 7/ 63

Here the earth is praised as sweet hearted. Sweet honey MADHU is referred here and HEART (hrudaya) is mentioned  in the 8th stanza.

Here we come across the word UNSLEEPING Devas. This is reference to Extra Terrestrials (ET). Throughout Hindu spics and Puranas/mythologies, we have following qualities attributed to ETs.

1.They are in the form of Light; Devas meaning Light Emitting.

2.They don’t wink their eyes; like fish they don’t close their eyes. Even Tamil poet Tiru Valluvar compared Devas with Thieves ; he humorously refers to thieves as Devas because thieves also never sleep during night (Kural 1073) .This is my interpretation of Kural. Other old interpreters said both are same because they can do whatever they want to do; It doesn’t look right to me. Moreover, Valluvar used the Sanskrit word Devas instead of God (Iraivan).

3.They cant have sex in the heaven. (they come to earth for it)

4.They can travel to Earth with the speed of Mind (faster than Light; Einstein is only 50 % right)

5.Their feet don’t touch earth/ground (always flying)

6.Their garlands never wither away (because of metals like gold ?)

7.They are always happy

8.They enjoy Dance and Music of Gandharvas and Apsaras

9.Even the Indus/Harappan symbol of Fish is compared to Devas by some scholars because both ‘Shine’ and both ‘never close their eyes’.

The seventh mantra says Devas protect earth without erring. This mean aliens are always watching us. Intergalactic traveller NARADA visits earth now and then. Poet prays to earth to shower sweets on us. Madhu used here is Honey used in all poems on Asvins in the RV. Name of Narada appears fro the first time in AV.

Xxxx

Biology and Theory of Evolution in 8th Mantra (8/63)

Eighth stanza, mantra begins with the line ‘Earth, at first which was in the water of the ocean’  — all the biologists agree that the earth was full of water for some time and then slowly life evolved in water in the form of Phyto planktons. Its heart was eternal heaven, and it was wrapped in Truth. That is beautiful. Vedic poets always emphasises the earth is still there because of Truth and Rhythm.

Dasavataras is in line with Theory of Evolution.

Please see the attachments of English and Sanskrit verses: –

mantras 4 and 5 .

mantras 6,7,8 given below

mantras 6,7,8

–subham–

tags- extra terrestrials, biology, in Atharva veda,

விவேக சிந்தாமணி பொன்மொழிகள் (Post 10,498)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,498

Date uploaded in London – –   28 DECEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஜனவரி 2022 நற்சிந்தனை காலண்டர்

31 விவேக சிந்தாமணி பொன்மொழிகள்

xxxx

பண்டிகை நாட்கள் – ஜனவரி 13 போகிப் பண்டிகை; 14- பொங்கல், மகர சங்கராந்தி; 15- மாட்டுப் பொங்கல்; 16- திருவள்ளுவர் தினம் ; 18 தைப்  பூசம், வடலூர் ஜோதி தரிசனம் ; 22- தியாகராஜ ஆராதனை ,23-சேஷாத்ரி சுவாமிகள் ஜெயந்தி;26 குடியரசு தினம்; 31- தை  அமாவாசை.

அமாவாசை-ஜனவரி 2,31; பெளர்ணமி – 17, ஏகாதசி விரத நாட்கள் -13, 28;

சுபமுஹுர்த்த  நாட்கள் – ஜனவரி 20

XXXX

ஜனவரி 1 சனிக் கிழமை

நன்மானம் வைத்தெந்த நாளுமவர் தங்களுக்கு நன்மை செய்வோர்
மன்மானி யடைந்தோரைக் காக்கின்ற வள்ளலென வழுத்த லாமே. (96)

xxx

ஜனவரி 2 ஞாயிற்றுக் கிழமை

கற்பூரப் பாத் திகட்டிக் கஸ்தூரி எருப்போட்டுக் கமழ்நீர் பாய்ச்சிப்
பொற்பூர வுள்ளியினை விதைத்தாலு மதன்குணத்தைப் பொருந்தக் காட்டும்

Xxxx

ஜனவரி 3 திங்கட் கிழமை

நோய்கொண்டா லுங்கொளலாம் நூறுவய தாமளவும்
பேய்கொண்டா லுங்கொளலாங் பெண்கொள்ள லாகாதே. (85)

Xxxx

ஜனவரி 4 செவ்வாய்க் கிழமை

மெய்யதைச் சொல்வ ராகில் விளங்கிடு மேலும் நன்மை
வையக மதனைக் கொள்வார் மனிதரிற் றேவ ராவார்

Xxx

ஜனவரி 5 புதன் கிழமை

நன்மனை தோறும் பெண்களைப் படைத்து நமனையு மென்செயப் படைத்தனையோ! (82)

Xxxx

ஜனவரி 6 வியாழக் கிழமை

பொய்யதைச் சொல்வா ராகில் போசன மற்ப மாகும்
நொய்யரி சியர்க ளென்று நோக்கிடா ரறிவுள் ளாரே. (67)

xxxxx

ஜனவரி 7 வெள்ளிக் கிழமை

அந்தணர் கருமங் குன்றில் யாவரே வாழ்வர் மண்ணில் – 125

Xxx

ஜனவரி 8 சனிக் கிழமை

வெட்டையிலே மதிமயங்கும் சிறுவருக்கு மணம்பேசி விரும்பித் தாலி
கட்டையிலே தொடுத்து நடுக் கட்டையிலே கிடத்துமட்டுங் கவலை தானே

Xxxx

ஜனவரி 9 ஞாயிற்றுக் கிழமை

மறையோர் மன்னர் வணிகர்நல் லுழவோ ரென்னுங்
குலங்கெடும் வேசை மாதர் குணங்களை விரும்பு வோர்க்கே. (122)

Xxx

ஜனவரி 10 திங்கட் கிழமை

பரிவிலாச் சகுனி போலப் பண்புகெட்டவர்கள் நட்பால்
ஒருமையி னரக மெய்து மேதுவே யுயரு மன்னோ. (119)

Xxx

ஜனவரி 11 செவ்வாய்க் கிழமை

மங்கை கைகேசி சொற்கேட்டு மன்னர்புகழ் தசரதனும் மரண மானான்
செங்கமலச் சீதைசொல் ஸ்ரீராமன் கேட்டவுடன் சென்றான் மான்பின்

xxxxx

ஜனவரி 12 புதன் கிழமை

நிலமதிற் குணவான் தோன்றி னீள்குடித் தனரும் வாழ்வார்
தலமெலாம் வாசந் தோன்றும் சந்தன மரத்திற் கொப்பாம்

xxx

ஜனவரி 13 வியாழக் கிழமை

தங்கையவள் சொற்கேட்ட ராவணனும் கிளையோடு தானு மாண்டான்
நங்கையர்சொற் கேட்பதெல்லாங் கேடுவரும் பேருலகோர் நகைப்பர் தாமே. (117)

xxxxx

ஜனவரி 14 வெள்ளிக் கிழமை

புலவர்கள் சபையில்கூடிப் புன்கவி யாளர் சார்ந்தால்
நலமென்றே கொள்வதல்லால் நவில்வரோ பெரியோர் குற்றம். (102)

Xxx

ஜனவரி 15 சனிக் கிழமை

நலமிலாக் கயவன் றோன்றின் குடித்தனம் தேசம் பாழாம்
குலமெலாம் பழுது செய்யுங் கோடரிக் காம்பு நேராம். (112)

xxxx

ஜனவரி 16 ஞாயிற்றுக் கிழமை

மின்னலைப்போல் மனையாளை வீட்டில்வைத்து வேசைசுகம் விரும்புவோரும்
அன்னைபிதா பாவலரைப் பகைப்போரு மறிவிலாக் கசடராமே. (97)

Xxx

ஜனவரி 17 திங்கட் கிழமை

நன்மானம் வைத்தெந்த நாளுமவர் தங்களுக்கு நன்மை செய்வோர்
மன்மானி யடைந்தோரைக் காக்கின்ற வள்ளலென வழுத்த லாமே. (96)

Xxxx

ஜனவரி 18 செவ்வாய்க் கிழமை

அறிவுளோர் தமக்கு நாளு மரசருந் தொழுது வாழ்வார்
நிறையொடு புவியிலுள்ளோர் நேசமாய் வணக்கஞ் செய்வார்–64

Xxxx

ஜனவரி 19 புதன் கிழமை

கோளினர் தமக்கு நன்மை செய்வது குற்ற மாமே.–63

Xxx

ஜனவரி 20 வியாழக் கிழமை

முடவனை மூர்க்கன் கொன்றால் மூர்க்கனை முனிதான் கொல்லும்
மடவனை வலியான் கொன்றால் மறலிதா னவனைக் கொல்லும்-59

Xxx

ஜனவரி 21 வெள்ளிக் கிழமை

வேம்புக்குத் தேன்வார்த் தாலும் வேப்பிலை கசப்பு மாரா
தாம்பல நூல்கற் றாலுந் துர்ச்சனர் தக்கோ ராகார். (61)

Xxx

ஜனவரி 22 சனிக் கிழமை

பொல்லார்க்குக் கல்விவரில் கெருவமுண்டா மதனோடு பொருளுஞ் சேர்ந்தால்
சொல்லாதுஞ் சொல்லவைக்குஞ் சொற்சென்றால் குடிகெடுக்கத் துணிவர் கண்டாய்- 99

Xxxx

ஜனவரி 23 ஞாயிற்றுக் கிழமை

சந்திர னில்லா வானந் தாமரை யில்லாப் பொய்கை
மந்திரி யில்லா வேந்தன் மதகரி யில்லாச் சேனை

Xxx

ஜனவரி 24 திங்கட் கிழமை

சுந்தரபு புலவ ரில்லாத் தொல்சபை சுதரில் லாவாழ்வு
தந்திக ளில்லா வீணை ஸ்தனமிலா மங்கை போலாம். (57)

Xxxx

ஜனவரி 25 செவ்வாய்க் கிழமை

ஆசாரஞ் செய்வா ராகி லறிவொடு புகழு முண்டாம்
ஆசாரம் நன்மை யானா லவனியிற் றேவ ராவார்

xxxx

ஜனவரி 26 புதன் கிழமை

ஆசாரஞ் செய்யா ராகி லறிவொடு புகழு மற்றுப்
பேசார்போற் பேச்சு மாகிப் பிணியொடு நரகில் வீழ்வார். (50)

xxxxx

ஜனவரி 27 வியாழக் கிழமை

புத்திமான் பலவா னாவான் பலமுளான் புத்தி யற்றால்
எத்தனை விதத்தினாலு மிடரது வந்தே தீரும்– 47

xxxx

ஜனவரி 28 வெள்ளிக் கிழமை

பொருளிலார்க் கின்ப மில்லை புண்ணிய மில்லை யென்று
மருவிய கீர்த்தி யில்லை மைந்தரிற் பெருமை யில்லை– 60

Xxx

ஜனவரி 29 சனிக் கிழமை

ஊழ்வினை வந்த தானால் ஒருவரால் விலக்கப் போமோ
ஏழையா யிருந்தோர் பல்லக் கேறுதல் கண்டி லீரோ. (41)

Xxxx

ஜனவரி 30 ஞாயிற்றுக் கிழமை

அத்தன்மால் பிர்ம தேவனா லளவிடப்பட் டாலுஞ்
சித்திர விழியார் நெஞ்சந் தெரிந்தவ ரில்லை கண்டீர்-44

Xxxxx

ஜனவரி 31 திங்கட் கிழமை

மதன லீலையில் மங்கையர் வையினும்
இதமுறச் செவிக் கின்பம் விளையுமே. (46)

xxxx

Bonus quote

அற்பர்தம் பொருள்க டாமு மவரம ரிறந்த பின்னே
பற்பலர் கொள்வா ரிந்தப் பாரினி லுண்மை தானே—32

–SUBHAM—

TAGS –விவேக சிந்தாமணி, பொன்மொழிகள் , ஜனவரி 2022, நற்சிந்தனை ,காலண்டர்

பகவத்கீதை சொற்கள் INDEX-32 கீதை மூலம் சம்ஸ்க்ருதம் -32 (Post.10,497)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,497

Date uploaded in London – –   28 DECEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பகவத் கீதை சொற்கள் தமிழ் இன்டெக்ஸ் 32

சாந்த்ர மஸம்  8-25  சந்திர மண்டலம்

சாபம் 1-47  வில்

சிகீர்ஷு 3-25 செய்ய விரும்பி

சித்தம்- 6-18  சித்தம் (மனம்)

சித்ரரதஹ 10-26 —— சித்ரரதன்  …5 WORDS

சிந்தயன்தஹ 9-22 சிந்திப்பவராய்

சிந்தயேத் 6-25  நினைத்தல்

சிந்தாம் 16-11  கவலையை

சிந்தயஹ 10-17  சிந்திப்பதற்குரியவன்

சிராத் 12-7  தாமதம் ………. 10 WORDS

சிரேன 5-6   தாமதம்

சூர்ணிதை ஹி 11-27 துண்டிக்கப்பட்ட , நசுக்கப்பட்ட

சேகிதானஹ  1-5   பாண்டவ வீரன் சேகிதானன்

சேத் 2-33  IF ஆவிட்டால் (செய்யா விட்டால் )

சேதனா 10-22  அறிவு ……….. 15 WORDS

சேதஸா 8-8 சித்தத்தால்

சேஷ்டதே 3-33  நடந்திடுவான்

சேஷ்டாஹா 18-14 செயல்களும்

சைலாஜின குசோத்தரம் 6-11 தர்ப்பையின் மீது (மான்  அல்லது புலித்) தோல், துணி விரிக்கப்பட்ட (ஆசனம்)

ச்யவந்தி  9-24 – நழுவுகின்றனர் …20 WORDS

சந்தஸாம் 10-35 சந்தங்களுள்

ச்சந்தாம்ஸி  15-1 வேதங்கள்

சந்தோபிஹி  13-4 வேதங்களால்

சலயதாம் 10-36  வஞ்சகர்களுள்

சித்வா 4-42  வெட்டி —– 25 WORDS

சிந்தந்தி 2-23 சிதைத்தல்

சின்ன த்வைதாஹா  5-25 சந்தேகங்கள் நீங்கினவோ

சின்ன சம்சயஹ  18-10 சந்தேகம் தெளிந்தவன்

சின்னாப்ரம்  6-38 சிதறுண்ட மேகம் (போல)

சேதா  6-39 சிதைப்பவர், நீக்குவோர்  ……………….30

சேதும் 6-39 அறுக்க, நீக்க

XXXX

ஜ – சொற்கள்

ஜகதஹ 7-6 உலகத்துடைய

ஜகத் 7-5 உலகம்

ஜகத் பதே 10-15 உலகை ஆள்வோனே

ஜகன்னிவாச  11-25  உலகத்திற்கு உறைவிடமானவனே ———- 35

ஜன்ய குண வ்ருத்தஸ்தாஹா 14-18 கீழான குணம் உடையோர்

ஜனகாதயஹ 3-20 ஜனகன் முதலானோர்

ஜனயேத்  3-26 உண்டாக்குதல்

ஜனஸம்சதி  13-10 ஜனக் கூட்டத்தில்

ஜனஹ  3-21 ஜனங்களும் ……………………….. 40

ஜனாதிபாஹா 2-12 அரசர்கள்

ஜனானாம்  7-28 ஆட்கள், மக்கள்

ஜனார்தன  1-36 கிருஷ்ணனின் பெயர்

ஜனாஹா  7-16 மக்கள், ஜனங்கள்

ஜந்தவஹ  5-15 பிராணிகள், ஜந்துக்கள்  45 WORDS

ஜன்ம  2-27  பிறப்பு

ஜன்ம கர்மபலப்ரதாம்  2-43 ஜன்மத்தையே தொழிலின் பயனாகக் கொண்டதும்

ஜன்மனாம் 7-19 பிறப்புகளில்

ஜன்மனி ஜன்மனி 16-20 பல பிறப்புகளில்

ஜன்ம பந்த விநிர்முக்தாஹா 2-51 …… பிறவித்  தளையினின்று விடுபட்டு ……………………………50

ஜன்ம ம்ருத்யு  ஜராத்துக்கைஹி – 14-20 பிறப்பு, இறப்பு, மூப்பு, துன்பம் இவற்றினின்று

ஜன்ம ம்ருத்யூ ஜரா வ்யாதி துக்க தோஷ அனுதர்சனம் 13-8 பிறப்பு, இறப்பு, மூப்பு, பிணி, துன்பம்  — இவைகளில் உள்ள தீமைகளைச் சிந்தித்தல் …………….

 52 WORDS ARE ADDED FROM PART 31 OF GITA TAMIL WORD INDEX

TO BE CONTINUED……………………………..

TAGS- பகவத் கீதை, சொற்கள், தமிழ், இன்டெக்ஸ் 32

தாயுமானவர்! – 1 (Post No.10,496)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,496
Date uploaded in London – – 28 DECEMBER 2021

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

வாரந்தோறும் திங்கள் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 27-12-2021 அன்று ச.நாகராஜன் ஆற்றிய உரை.
எந்த நேரமும் ஞானமயம் நிகழ்ச்சிகளை யூ டியூபிலும் facebook.com/gnanamayam என்ற இணைய வழித் தொடுப்பிலும் காணலாம். இந்த உரை மூன்று பகுதிகளாகத் தரப்படுகிறது.

தாயுமானவர்! – 1
ச.நாகராஜன்

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம். நமஸ்காரம்.

என்றுமுள செந்தமிழில் அழகிய வேதாந்தக் கருத்துக்களையும் இறைவனின் இயல்புகளையும் அனைவருக்கும் புரியும்படி எளிய இனிய சொற்களால் பாக்களைப் பாடியவர் தாயுமானவர். மாபெரும் வேதாந்தி அவர்.

சோழ நாட்டின் தென் கோடியில் அமைந்துள்ள வேதாரண்யம் என்னும் திருமறைக்காடு தலத்திலே அவர், வேளாளர் குலத்திலே கேடிலியிப்ப பிள்ளை- கெஜவல்லி தம்பதியினருக்குப் பிறந்தார்.
கேடிலியப்ப பிள்ளை சிவத்தல விசாரணைக் கர்த்தராக இருந்தார். அச்சமயம் 1704ஆம் ஆண்டு முதல் 1731 முடிய திருச்சியை ஆண்ட முத்து விஜய ரகுநாத சொக்கலிங்க நாயகர் கேடிலியப்ப பிள்ளையின் அருமை பெருமைகளை அறிந்து அவரைத் தன்னிடம் பணியாற்றுமாறு அழைப்பு விடுத்தார். அதை அவரும் ஏற்றார்.

அவருக்கு சிவ சிதம்பரம் என்ற அருமைக் குமரன் பிறந்தான். ஆனால் அந்தக் குமாரனை சந்ததியின்றி இருந்த தனது தமையனாருக்கு சுவீகாரமாகக் கொடுத்து விட்டார்.
தனக்கு ஒரு பிள்ளை இல்லையே என்று வருந்திய அவர் திருச்சி தாயுமானவரை வேண்ட அவர் அருளால் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.

குழந்தையின் ஜாதகத்தைக் கணித்த ஜோதிடர்கள் வியந்தனர். ஐந்து கிரகங்கள் உச்சமாய் இருப்பதையும் அவை சுப ஹோரையில் இருப்பதையும் கண்ட அவர்கள் தேவாம்சமாகப் பிறந்த இந்தக் குழந்தை உலகை ஆளும் நரேந்திரனாக நிலவும் என்று கூறினர்.

திருச்சி தாயுமானேஸ்வரரின் அருளால் பிறந்த அந்தக் குழந்தைக்கு தாயுமானவர் என்ற பெயர் சூட்டப்பட்டது.
குழந்தை அறிவில் சிறந்து விளங்கியதோடு தமிழையும் வடமொழியையும் கற்றுத் தேர்ந்தது.

தாயுமானவருக்கு இலக்கிய இலக்கணம், இதிஹாஸ புராணம், சிவாகமம், உபநிடதம், பன்னிரு திருமுறை, மெய்கண்ட சாஸ்திரம், அருணகிரிநாதரின் திருப்புகழ் உள்ளிட்ட சகலமும் அத்துபடியாயின.

அரசன், தந்தைக்கு வயதானதையொட்டி மகன் தாயுமானவரை அரசுக் கணக்கராகப் பணி புரிய அழைத்தான். பதினான்கு வயதே ஆன தாயுமானவர் அந்தப் பொறுப்பை ஏற்றார்.

அப்போது ஒரு நாள் அரசவையில் முக்கியமான ஆவணம் ஒன்றை அனைவருக்கும் முன்பாக, இறைவனுடன் இறை தியானத்தில் ஒன்றி இருந்த நிலையில், கசக்கித் தூக்கி எறிந்தார்.
இதைப் பார்த்துத் திடுக்கிட்ட அவையினர் இது அரசனை அவமதித்த செயலாகும் என்று கூறினர்.

ஆனால் அதே சமயத்தில் திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி கோவிலில் அம்பாளின் ஆடையில் நெருப்புப் பிடிக்க, சிவாசாரியர்கள் அதைக் கவனிப்பதற்குள் தாயுமானவர் அங்கே நுழைந்து ஆடையைத் தன் கையால் கசக்கி நெருப்பை அணைத்தார். இதைக் கண்ணுற்ற அவர்கள் அதிசயித்து நடந்ததை மன்னரிடம் தெரிவிக்க அனைவரும் வியப்படைந்தனர். தாயுமானவரின் சக்தியையும் உணர்ந்தனர்.

ஒரு நாள் அவர் அரசனைக் காண்பதற்காக வந்தார். அப்போது அரண்மனையில் புதிய மணல் கொட்டப்பட்டிருந்தது. அதில் தாயுமானவரது காலடிச் சுவடுகள் பதிந்தன. அரசனும் இதர முக்கியஸ்தர்களும் அந்த வழியே வந்த போது அந்தக் காலடிச் சுவடுகளைக் கண்டனர். பத்ம ரேகை படிந்து காணப்பட்ட அந்தச் சுவடுகள் அவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தின.
“யார் இவ்வழியில் வந்தது?” என்று அவர்கள் கேட்க, “தாயுமானவர்” என்று பதில் வந்தது.

உடனே அவரை அழைத்து அது உண்மை தானா என்பதை அவர் காலடிகளுடன் ஒப்பிட்டு அரசன் ஐயம் தீர்ந்தான்.
சங்கப்பாட்டியியலில் கூறப்பட்ட சாமுத்திரிகா லக்ஷணங்கள் இவை:

அகவடி யுகிர்விரல் புறவடி கரடே
கழலே கணைக்கான் முழந்தாள் குறங்கே
கடிதங் கொப்பூழ் வயிறதின் வரையே
யிடையே மயிரி னொழுக்கே முலையுகிர்
விரலே முன் கை யங்கை தோளிணை
கழுத்தே முக நகை செவ்வாய் மூக்குக்
கண்ணே காது புருவ நுதலெனு
மாறைந் துறுப்பு யனிரண்டும் பாதம்

ஆக இப்படி முப்பத்திரண்டு உறுப்புகளும் தெய்வத்தன்மை சிறந்து விளங்க அமைந்திருப்பதை அனைவரும் கண்டு வியந்தனர்.
இதனால் அரசனுக்கு அவர் மேல் பெரு மதிப்பும் மிகுந்த அன்பும் ஏற்பட்டது.

அரசனிடத்தில் கவிஞர், கவி ராயர், கவிச் சக்கரவர்த்தி, பண்டிதர், பாவலர், பாரதி, நாவலர், வித்துவான், மகா வித்துவான் , வித்வ சிரோமணி, புலவர் உள்ளிட்ட பல பட்டங்களைத் தரித்து வருவோரிடம் தாயுமானவர் யதார்த்தமாக வாதம் செய்து அவர்களைத் தோற்க அடிப்பார். பின்னர், “உண்மையைக் காண்பீர்களாக” என்று உரைத்து அவர்களை அனுப்புவார்.

TAMIL FILM ON THAAYUMAANAVAR


**

தொடரும்

TAGS- தாயுமானவர்

Water is Medicine : Quotations from the Atharvana Veda! (Post no.10,495)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,495

Date uploaded in London – –   27 DECEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxx

January 2022 Good Thoughts Calendar

Festival Days- January 13 -Bogi Pandikai,14- Pongal/Makara Sankranti, 15- Cattle Pongal; 16-Tiruvalluvar day/Kanum Pongal,  18-Thai Pusam, Vadalur Jothi Dharsanam,22- Thiagaraja Aradhana, 23– Seshadri Swamikal Jayanti, 26 Republic Day, 31-Thai Amavasai

Full moon Day/ Purnima -Jan.17; New Moon day/Amavasya – Jan.2, 31; Ekadasi Fasting Days- 13, 28

Auspicious Day- 20

31 Quotations from the Atharvana Veda

xxx

January 1 Saturday

May now Vāchaspati assign to me the strength and powers of
  those  who, wearing every shape and form, the triple seven, are
   wandering round. AV- 1-1-1

xxxx

January 2 Sunday

Come you again, Vāchaspati, come with divine intelligence.
  Vasoshpati, repose you here. In me be Knowledge, yes, in me AV.1-1-2

xxxx

January 3 Monday

I call the Waters, Goddesses, hitherward where our cattle
   drink:
  The streams must share the sacrifice.
Amrit is in the Waters, in the Waters balm.AV.1.4.3/4

xxxx

January 4 Tuesday

You, Waters, truly bring us bliss: so help us to strength and
   power  That we may look on great delight
. AV 1-5-1

xxxx

January 5 Wednesday
Here grant to us a share of dew, that most auspicious dew of
   yours, Like mothers in their longing love. AV 1-5-2

xxx

January 6 Thursday

The Waters be to us for drink, Goddesses, for our aid and
   bliss: 
  Let them stream health and wealth to us. – AV.1- 6- 1

xxx

January 7 Friday

Within the Waters—Soma thus hath told me—dwell all balms
   that heal
, And Agni, he who bless all. – AV.1- 6- 2

xxxx

January 8 Saturday
O Waters, teem with medicine to keep my body safe from harm,
  So that I long may see the Sun.
AV.1- 6- 3

Xxx

January 9 Sunday
The Waters bless us, all that rise in desert lands or marshy
   pools!

  Bless us the Waters dug from earth, bless us the Waters brought
   in jars, bless us the Waters of the Rains! -AV.1- 6- 4

xxx

January 10 Monday

May Indra, Pūshan, Varuna, Mitra, Agni, benignant Gods,
   maintain this man in riches.
  May the Ādityas and the Visve Devas set and support him in
   most supreme lustre. AV.1-9-1

Xxx

January 11 Tuesday
May light, O Gods, be under his dominion, Agni, the Sun, all;
   that is bright and golden.
  Prostrate beneath our feet his foes and rivals. Uplift him to the.
   loftiest cope of heaven. AV.1-9-2

xxxx

January 12 Wednesday
Whatever falsehood you have told, much evil spoken with the
   tongue,
  I liberate you from the noose of Varuna the righteous King. AV 1-10-3

Xxx

January 13 Thursday

I free you from Vaisvānara, from the great surging flood of sin.
  Call you your brothers, Awful One! and pay attention to our
   prayer. AV 1-10-4

Xxxx

January 14 Friday

Four are the regions of the sky, and four the regions of the
   earth:
  The Gods have brought the babe; let them prepare the woman
   for the birth. AV 1-11-2

xxx

January 15 Saturday

Well be it with my upper frame, well be it with my lower parts.
  With my four limbs let it be well. Let all my body be in health
. AV 1-12-4

xxx

January 16 Sunday

Homage to you, the Lightning’s flash, homage to you, the
  Thunder’s roar!
  Homage to you, the Stone which you hurl against the
   undevoted! AV 1-13-1

Xxx

January 17 Monday
Homage to ou, Child of the Flood whence you collect fer-
   vent heat!
  Be gracious to our bodies, give our children happiness and
   joy
. AV.1-13-2

xxx

January 18 Tuesday

Lord of the clans, giver of bliss, fiend-slayer, mighty o’er the
   foe,
  May Indra, Soma-drinker, go before us, Bull, who brings us
   peace. AV 1-21-1

Xxx

January 19 Wednesday
Indra, subdue our enemies, lay low the men who fight with
   us:

  Down into nether darkness send the man who shows us enmity: AV 1-21-2

Xxx

January 20 Thursday

Strike down the fiend, strike down the foes, break you asunder
  Vritra’s jaws.
  O Indra, Vritra-slayer, quell the wrath of the assailing foe. : AV 1-21-3

Xxx

January 21 Friday

  Grant us your great protection
; keep his deadly weapon far
   away. AV 1-21-4

xxx

January 22 Saturday

Further us rightly, favour you our bodies with your gracious love.
  Give (you) our children happiness.AV.1-26-4

xxx

January 23 Sunday 29

With that victorious Amulet which strengthened Indra’s power-
   and might
  Do you, O Brāhmanaspati, increase our strength for kingly
   sway. AV.1-29-1

Xxx

January 24 Monday


Slayer of rivals, vanquisher, may that victorious Amulet
  Be bound on me for regal sway and conquest of my enemies
. AV 1-29.4

XXX

January 25 Tuesday
Yon Sun hath mounted up on high, and this my word hath
   mounted up
  That I may smite my foes and be slayer of rivals, rival less. AV.1.29.5

XXXX

January 26 Wednesday

Guard and protect this man, all Gods and Vasus. Over him keep-
   ye watch and ward, Ādityas.


  Let not death reach him from the hands of brothers from hands
   of aliens, or of human beings.AV.1-3-1

XXXX

January 27 Thursday

Listen, one-minded, to the word I, utter, the sons, O Gods,
   among you, and the fathers!
  I trust this man to all of you: preserve him happily, and to
   length of days conduct him
.AV.1-30-2

XXX

January 28 Friday
All Gods who dwell on earth or in the heavens, in air, within.
   the plants, the beasts, the waters,
  Grant this man life to full old age, and let him escape the
   hundred other ways of dying
. AV.1.30.3

XXXX
January 29 Saturday


You, Guardians of the regions, Gods who keep the quarters of
   the heavens,
  Rescue and free us from the bonds of Nirriti, from grief and
   woe! -AV. 1-31-2

Xxx

January 30 Sunday

Well be it with our mother and our father, well be it with our
   cows, and beasts, and people.
  Ours be all happy fortune, grace, and favour. Long, very long
   may we behold the sunlight.
-AV. 1-31-4

xxxx

January 31 Monday

Homage to the supreme Brahman

Of whom the sun is the eye,

And the moon that becomes new again and again,

And who has made Agni his mouth – AV.10-7-33

RIVER TUNGABHADRA, Mantralaya 

—subham—

Tags –  Atharvana Veda,  Wwater, Medicine, Quotations, January 2022, calendar

LONDON CALLING GNANAMAYAM BROADCAST SUMMARY 26, 27 DEC.2021 (10,494)

MR. KAVI.MURUGABARATHI, TRICHY 

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,494

Date uploaded in London – –   27 DECEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

PROGRAMME ON  SUNDAY 26-12-2021

USUAL TIME- LONDON TIME ONE PM ; INDIAN TIME 6-30 PM

USUAL PLACE- FACEBOOK.COM/ GNANAMAYAM

IF U HAVE OUR ZOOM LINK, PLEASE USE OUR ZOOM LINK.

XXX

TAMIL THUNDER /THAMIL MUZAKKAM (Part of Gnanamayam Channel) BROADCAST from London

OPENING ANNOUNCEMENT & PRAYER – 5 MTS

Prayer –  SINGER SHOBIKA MURUKESAN

MRS BRAHANNAYAKI SATHYANARAYANAN ON   — TIRUTTANI MURUGAN TEMPLE12 MTS

THIIRUPPUGAZ BY  MRS JAYANTHI SUNDAR’S GROUP- LANGLEY DEVOTEES, ROMFORD  DEVOTEE  — 12 MINUETS

xxx

WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH BY MRS NITHYA SOWMY

AND

WORLD HINDU NEWS ROUNDUP IN TAMIL BY MRS VAISHNAVI ANAND

–25 MINUTES

TALK ON ALVAR CHARITHRAM BY THIRUKKUDAL MUKUNTHA RAJAN – 15 MTS.

DR KANNAN’S TALK ON ALVAR PASURAMS

XXXX

APPR. 70 MINUTES

XXXX

PROGRAMME ON  MONDAY  27-12-2021

USUAL TIME- LONDON TIME ONE PM ; INDIAN TIME 6-30 PM

USUAL PLACE- FACEBOOK.COM/ GNANAMAYAM

IF U HAVE OUR ZOOM LINK, PLEASE USE OUR ZOOM LINK.

27 -12– 2021 MONDAY PROGRAMME

GNANA MAYAM- GNANA SUDAR BROADCAST FROM LONDON

Title song – Maitrim Bhajata by Kanchi Paramacharya sung by MS

OPENING ANNOUNCEMENT & PRAYER -5  MTS

PRAYER –  MRS RANJANI DASARATHI, CHENNAI

TALK BY BENGALURU Mr. S. NAGARAJAN  ON SAINT  Thayumanavar — 15 MTS

Interview with Poet MR. KAVI. MURUGABARATHI of Nalla Seythi Magazine-25 MTS

EDITOR, AUTHOR, TRAINER AND SPEAKER FROM TIRUCHIRAPALLI

INTERVIWED BY LONDON SWAMINATHAN

DR N KANNAN’S TALK from Chennai—SCIENCE IN  ALVAR VERSES 10 mts.

APPR. 60 MINUTES

XXXXX

பூமாதேவிக்கு தங்க முலைகள், அமுத இதயம் – புலவன் வருணனை (Post. 10,493)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,493

Date uploaded in London – –   27 DECEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பூமி சூக்த ஆராய்ச்சிக் கட்டுரை -4

அதர்வண வேத பூமி சூக்தத்தை மேலும் காண்போம் .

தாய்ப்பாலின் மஹிமையை அறியாதோர் உலகில் இல்லை; குழந்தைகளுக்கு தாய்ப் பால் கொடுப்பது ஏன் அவசியம் என்று மேலை நாடுகளில் சுகாதாரத் துறைகள் துண்டுப்  பிரசுரம் அச்சிட்டு வழங்கி வருகின்றன . தாய்ப் பாலின் மஹத்துவத்தை விளக்கும் உவமைகள், உலகிலேயே மிகவும் பழைய புஸ்தகமான ரிக் வேதத்திலேயே உள்ளது. அது மட்டுமல்லாமல் தாய்ப்பாலுக்கு நிகரான பால் கொடுக்கும் ஒரே பிராணி பசு மாடுதான் என்று கண்டுபிடித்து அதை உலக மக்களுக்கு அறிமுகப்படுத்தியதும் இந்துக்களே.

பூமா தேவியை வருணிக்க முயன்ற புலவன், அவளுக்கு தங்க முலைகள், அமுத இதயம்; அவள் கொடுப்பதோ தேன் போன்ற இனிமையான பொருள் என்கிறான். 3000 ஆண்டுகளுக்கு முன்னர் இப்படி கவி பாட வேண்டும் என்றால் அந்த சமுதாயம் எவ்வளவு உன்னத நிலையை அடைந்திருக்க வேண்டும் ? எண்ணிப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது. நான்கு வேதங்களில் 20,000 மந்திரங்களில் உள்ள உன்னத கருத்துக்களை நோக்குங்கால்  உலகில் வேறு எந்த கலாசாரமும் அடையாத  உயர்ந்த நிலைக்கு இந்து கலாசாரம் சென்றதைக் காணமுடிகிறது

xxxx

இதோ ஆறாவது மந்திரம்

பொருள்

எல்லாம் உடையவளே , செல்வம் சுமப்பவளே, உறுதியாக நிற்வளே, தங்க முலைகள் தாங்கியவளே , உயிரினங்களின் உறைவிடமே , வைச்வானர அக்கினியை அணிபவளே ; இந்திரனும் ரிஷபனும் எங்களுக்கு செல்வத்தை அளிக்கட்டும்

விஸ்வம்பரா வசுதானீ பிரதிஷ்டா ஹிரண்யவக்ஷஆ ஜகதோ நிவேசனீ

வைச்வாநரம் பிப்ரதீ பூமிரக்னி மிந்த்ரக்ருஷபா த்ரவிணே நோ ததாது – 6

எனது வியாக்கியானம்

விஸ்வ என்றால் ‘எல்லாம்’; ‘உலகம் அளவு வியாபித்த’; விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் முதல் சொல்லே இதுதான். இது ஒரு மங்கலச் சொல்;. கவிதைகளைத் துவங்கும்போது ‘அ’  அல்லது ‘உலகம்’ போன்ற மங்கலச் சொற்களுடன் துவக்க வேண்டும் என்பது மரபு. ‘உலகம் உவப்ப’ என்று திரு முருகாற்றுப் படை துவங்கும்; ‘உலகெ லாம்’ என்று பெரிய புராணம் துவங்கும். அதற்குச் சமமான சொல் ‘விஸ்வ’ .

பூமி என்பவள் தாய்; உலகம் முழுதும் இந்தக் கருத்தை இந்துக்களிடம் கற்றது. தாய் தன குழந்தைகளை எப்படிப் பாலூட்டி வளர்க்கிறாளோ அப்படி பூமாதேவியும் மனித குலத்தை வளர்க்கிறாள். பத்தாவது மந்திரத்தில் வரும் உலகப் புகழ்பெற்ற வரிகள் இதை உறுதி செய்யும் ..

இங்கு அக்கினியின் ஒரு பெயரான ‘வைச்வானர’ வருகிறது. உடலில் அக்நி ; அது அணைந்தால் நாம் வெறும் ஜடம்; உலகில் அக்கினி- அதாவது சூரியன் ; அது அணைந்தால் நம் கதி — சகதி .

பூமியில் பத்து மைல் தோண்டினாலே கடும் வெப்பம்; 4000 மைல் தோண்டினால்தான் நடுப்பகுதிக்குச் செல்ல முடியும். எவராலும் தோண்ட முடியாது; ஏனெனில் அக்கினிக் குழம்பு! இதை எல்லாம்  அறிந்தவர்கள் வேத காலப் புலவர்கள் என்பது வேறு பல மந்திரங்களில் தொனிக்கிறது.

இன்னொரு சொல் ‘ரிஷப’  ; இதை ரிஷpa என்று அப்படியே மொழிபெயர்த்து விளக்காமல் விட்டுவிட்டார்கள். இதை காளை (ரிஷப வாஹனம்) என்று பொருள் கொண்டு அதை இந்திரனுக்கும் அடை மொழி ஆக்கலாம். ஆனால் வியாக்கியனக்காரர்கள் ஒன்றும் சொல்லவில்லை ; முக்கியமான சொற்கள் “ஹிரண்ய வக்ஷ = தங்க முலைகள்” என்பதாகும் . செல்வத்துக்கு ‘த்ரவிணம்’ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. திரை கடல் ஓடியும் ‘திரவியம்’ தேடு என்று தமிழிலும் சொல்கிறோம். த்ரவிணம், திரவியம் எல்லாம் ஒரே சம்ஸ்க்ருத மூலம் உடையனவே. அதிலிருந்து வந்ததுதான் ட்ரெஷர் TREASURE  என்ற ஆங்கிலச் சொல்.

‘நிலை குலையாத’, ‘பொறுமையான’ என்ற இரண்டு அடைமொழிகளை  பூமிக்கு வழங்குவது இந்துக்களின் சிறப்பு. ‘அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல’ பொறுமை என்பார் வள்ளுவர். பூமாதேவி பொறுமையின் உறைவிடம்; செல்வத்தின் பிறப்பிடம் ; நோ = நஹ = எங்களுக்கு; முன்னரே விளக்கிவிட்டேன்; வேத காலப்  புலவர்கள் ஒருமையில் பேசுவது குறைவு; பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் அவர்கள் கண்ட பெருநோக்கு; ஆகவே எப்போதும் எங்களுக்குக்  கொடு என்பர்;  எனக்குக் கொடு என்று பேசமாட்டார்கள்

xxxx

இதோ ஏழாவது மந்திரம்

யாம் ரக்ஷந்த்யஸ்வப்னா விஸ் வதானீம்  தேவா பூமிம்  ப்ருதிவீமப்ரமாதம்

ஸா நோ மதுப்ரியம் துஹா மதோ அக்ஷது  வர்ச்சஸா –7

ஏழாவது மந்திரத்தைக் காண்போம்

பொருள்:-

எப்போதும் தூங்காத தேவர்கள், சிறிதும் பிசகாமல் ,  காக்கும் இடம் பூமி! அவள் எங்கள் மீது தேன் மழை பொழியட்டும் . எங்களுக்கு வர்ச்ச ஸ் என்ற ஆன்மீக ஒளியை அளிக்கட்டும்

எனது வியாக்கியானம் _

வெளி உலக மக்கள் குறித்து இந்துக்கள் வியப்பான செய்திகளை சொல்லுகிறார்கள்; அவர்கள் ஒளி உருவத்தில் உலாவுவார்கள் ; எப்போதும் இன்பத்தில் திளைப்பார்கள்; ஆடல் பாடல் உண்டு; ஆனால் பார்வதியின் சாபத்தால் அவர்கள் செக்ஸ் sex செய்ய முடியாது; பிள்ளை பெற வேண்டுமானால் அவர்கள் பூமிக்கு வரவேண்டும்; ஐன்ஸ்டைன்  சொன்ன விதிகளையும் ஒதுக்கிவிட்டு அவர்கள் மனோவேகத்தில் பயணம் செய்ய முடியும். அவர்களுடைய கால்கள் நிலத்தில் படியாது; கண்கள் இமைக்காது.; அவர்களுடைய மாலைகள் வாடாது. (நள தமயந்தி சரிதத்தில் இதை நன்றாக விளக்குகின்றனர் ) திருவள்ளுவரும், திருடர் பற்றி கிண்டல் செய்கையில் அவர்களும் தேவர்களும் ஒன்று; ஏனெனில் இரவில் தூங்குவதில்லை என்று (காண்க குறள் 1073) நக்கல் செய்கிறார்.

இதில் வரக்கூடிய ‘மது’ என்ற சொல்லைக் கவனிக்க வேண்டும்; இதன் பொருள் தேன் அல்லது தேன் போன்ற இனிமை. அஸ்வினி தேவர்களைப் போற்றும் துதிகளில்  ரிக் வேதம் இந்தச் சொல்லைப் பயன்படுத்துகிறது. மதுரம் என்றால் இனிமை; பாரதியார் கூட “மது நமக்கு ,மது நமக்கு , மதுரமிக்க தமிழ்   நமக்கு” என்று ஆடிப்பாடி கூத்தாடுவதைக் காண்கிறோம் .

Xxxx

எட்டாவது மந்திரத்தில் விஞ்ஞான உண்மை

இது மதத்தில் தசா வ தாவதாரத்தில் முதல் அவதாரம், மச்சாவதாரம். உலகம் முழுதும் முதலில் உலகம் முழுதும் நீரில் மிதந்தது ; நீரிலிருந்தே உயிரினங்கள் தோன்றின. இந்தக் கருத்து உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதத்திலும் உளது. இதை முதலில்  உலகிற்குச் சொன்னவர்கள் இந்துக்கள். அதன் பிறகு உயிரினம் பரிணாமம் அடைந்த அதே வரிசையையையும் தசாவதாரத்தில் காண்கிறோம். இந்த எட்டாவது மந்திரத்தில் உலகம் எப்படி இருந்தது என்பதை முனிவர் காட்டுகிறார்.

பொருள்

எந்த பூமியானது முதலில் தண்ணீர் மயமாக இருந்ததோ, எந்த பூமியை புனிதர்கள் அபூர்வ சக்தியோடு நாடினார்களோ , எந்த பூமியின் அமுத இருதயம் உயர்ந்த நிலையில் உள்ளதோ அந்த பூமி, உண்மையாலும்

அழிவற்ற தன்மையாலும் மூடப்பட்டுள்ள்ளதோ எந்த பூமாதேவி ஒளியையும் பலத்தையும் எங்களுக்கு அளிக்கட்டும்

யார்ண வே அதி ஸலிலமக்ர ஆஸீத்யாம் மாயாபிரன்வ சரன் மனீஷின ணஹ 

யஸ்யா ஹ்ருதயம் பரமே வ்யோ அ மந்த் ஸத்யேனாவ்ருதமம்ருதம் ப்ருதிவ்யாஹா

 ஸா நோ பூமிஸ்த் வஷிம்  பலம் ராஷ்டே ததாதூத்தமே  – 8

எட்டாவது மந்திரத்திலுள்ள ஸத்யம் ஆர்ணவம் = கடல் நீர், ஹ்ருதயம் ராஷ்ட்ரம் =தேசம் பலம், பூமி, பிருத்வீ,  உத்தம, மனித = மனீஷின—-Man ஆகியன இன்றும் புழக்கத்திலுள்ள எளிய ஸம்ஸ்க்ருத்ச் சொற்கள் ஆகும்.

Xxxxx

To be continued ……………………………..

tags-பூமி சூக்த,  ஆராய்ச்சிக் கட்டுரை 4, 

திருத்தணி – ஆலயம் அறிவோம்! (Post No.10,492)

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 10,492

Date uploaded in London – – 27 DECEMBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 26-12-2021 அன்று ஒளிபரப்பான உரை!

திருத்தணி
நினைத்த தெத்தனையில் தவறாமல்
நினைத்த புத்திதனைப் பிரியாமல்
கனத்த தத்துவமுற் றழியாமல்
கதித்த நித்திய சித்தருள்வாயே
மனித்தர் பத்தர் தமக்கெளியோனே
மதித்த முத்தமிழிற் பெரியோனே
செனித்த புத்திரரிற் சிறியோனே
திருத்தணிப் பதியில் பெருமாளே
அருணகிரிநாதர் திருவடி போற்றி!

ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது  முருகனின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாவது படை வீடாக அமையும் சிறப்புத் தலமான திருத்தணி திருத்தலம் ஆகும். தமிழகத்தில், சென்னைக்கு மேற்கே 88 கிலோமீட்டர் தொலைவில் இது அமைந்துள்ளது.

மூலவர் : ஸ்ரீ சுப்ரமண்யர்
தனி சந்நிதி : தெய்வானை தனி சந்நிதி : வள்ளி
தல விருக்ஷம் : மகுட மரம்

இந்தத் தலம் முருகப் பெருமான் வள்ளியைத் திருமணம் செய்து கொண்ட தலமாகும். வள்ளியம்மையைக் கரம் பிடிக்க வேடர்களுடன் சிறு போர் நடத்தி சினம் தணிந்து முருகன் ஓய்வு பெற்ற தலம் இது என்பதால் இது தணிகை ஆகும். இந்தத் தலத்தைப் பற்றிய புராண வரலாறு ஒன்று உண்டு. தேவர்களுக்கு ஓயாத தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த சூரபன்மனை வதம் செய்த முருகப்பிரான் தன் கோபம் தணிந்து அமர்ந்த தலம் இது. ஆகவே தணிகை என்ற பெயரைப் பெற்றுள்ளது. தேவர்களின் பயம் நீங்கப் பெற்ற இந்தத் தலத்தில் காம வெகுளி பகை தணியும். பக்தர்களின் துன்பம், கவலை உள்ளிட்டவை தணியும்.

முருகன் சினம் தீர்ந்து அருள் பாலிக்கும் திருத்தலம் என்பதால் இந்த ஒரு முருகன் கோவிலில் மட்டும் சூர சம்ஹாரத் திருவிழா நடை பெறுவதில்லை.

இந்தத் தலத்தில் ஆண்டு தோறும் நடைபெரும் திருத்தணிப் படித் திருவிழா சிறப்பு மிக்க ஒன்றாக விளங்குகிறது. 365 நாட்களைக் குறிக்கும் விதத்தில் இங்கு 365 படிகள் உள்ளன. பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் திருப்புகழை ஓதி படி ஏறி முருகனைத் துதிக்கின்றனர். வள்ளிமலை சுவாமிகளால் இந்த திருத்தணித் திருப்படி திருவிழா 1917ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி மற்றும் 1918 ஜனவரி முதல் தேதியன்று துவங்கப்பட்டது. ஆண்டுக்கு ஆண்டு பக்தர்கள் எண்ணிக்கை பெருகி இப்போது வெகு விமரிசையாக நடந்து வருகிறது.

அருணகிரிநாதர் இங்கு முருகனை வழிபட்டு 64 திருப்புகழ் பாடல்களைப் பாடி அருளியுள்ளார். அவற்றுள், ‘நிலையாத சமுத்திரமான’ என்று தொடங்கும் திருப்புகழில் ‘பலகாலும் உனைத் தொழுவோர்கள் மறவாமல் திருப்புகழ் கூறி படிமீது துதித்துடன் வாழ அருள் வேளே’ என்று கூறுவது குறிப்பிடத் தகுந்தது.
கர்நாடக சங்கீத மும்மணிகளுள் ஒருவரான ஸ்ரீ முத்துசாமி தீக்ஷிதரும் இங்கு வந்து பாடி முருகனின் அருளைப் பெற்றுள்ளார்.

கடல் மட்டத்திலிருந்து 700 அடி உயரத்தில் அமைந்துள்ள சிறிய குன்று இது. இரு பக்கங்களிலும் மலைத் தொடர்ச்சி பரவியுள்ளது. வடக்கே வெண்மை நிறமாக உள்ள மலை பச்சரிசி மலை என்றும் தெற்கே உள்ள மலை கருநிறமாக இருப்பதால் புண்ணாக்கு மலை என்றும் அழைக்கப்படுகிறது. மலை அடிவாரத்தில் புகழ் பெற்ற குமார தீர்த்தத் திருக்குளம் அமைந்துள்ளது. இந்தக் குன்றில் முருகன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். கோவிலில் ஐந்து அடுக்கு கோபுரமும் நான்கு வளாகங்களும் உள்ளன.

இத்தலத்தில் முருகனின் வலது கையில் சக்தி ஹஸ்தம் எனப்படும் வஜ்ர வேல் அமைந்துள்ளது. இது, இடி போன்ற ஒலி எழுப்பும் சூலக் கருவி. இடக்கையைத் தொடையில் வைத்து ஞானம் பெற்ற கோலத்தில் முருகன் இங்கு காட்சி அளிக்கிறார். அவர் கையில் வேல் இல்லை. அலங்காரத்தின் போது மட்டும் சேவலும் வேலும் வைக்கப்படுகிறது.

இங்கு வரும் பக்தர்கள் அனைத்து சந்நிதி தரிசனங்களையும் முடித்து விட்டு கடைசியாக இங்குள்ள ஆபத்சகாய விநாயகரை வணங்க வேண்டும் என்பது ஐதீகம்.

இங்குள்ள இன்னொரு சிறப்பு, விஷ்ணு ஆலயங்களில் தலையில் சடாரி வைக்கப்படுவது போல், இங்கு முருகனின் திருப்பாதச் சின்னம் பக்தர்களின் தலையில் வைக்கப்பட்டு முருகனின் ஆசி அளிக்கப்படுகிறது.
மும்மூர்த்திகள், நந்திதேவர், வாசுகி உள்ளிட்ட ஏராளமானோர் முருகனை வழிபட்ட தலம் இது.

இங்கு முருகப்பிரான் பிரணவத்தின் உட்பொருளை ஈசனுக்கு உணர்த்த, அவர் மகிழ்ந்து, வீ ர அட்டகாசமாகச் சிரித்தார். அதனால் அவருக்கு ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் என்ற பெயர் வந்தது. அவரது திருக்கோவில் திருத்தணிக்குக் கிழக்கே நந்தியாற்றின் வட கரையில் அமைந்துள்ளது.

இந்திரன் இந்தத் தலத்திற்கு வந்து சுனை ஒன்று அமைத்து முருகனை வழிபட்டான். அந்த இந்திர நீலச் சுனையில் நீலோற்பலக் கொடியை வளர்த்து அந்த மலர்களால் மூன்று வேளைகளிலும் முருகனை பூஜித்து சங்க நிதி பதும நிதி உள்ளிட்ட அனைத்து நிதிகளையும் பெற்றான். ஆகவே முருகனுக்கு இந்திர நீலச் சிலம்பினன் என்ற பெயர் ஏற்பட்டது. அபிஷேகத்திற்கு இந்த சுனை தீர்த்தமே பயன்படுத்தப்படுகிறது.

வசிஷ்டர் முதலான சப்த ரிஷிகள் இங்கு மலையின் தென்புறத்தில் ஏழு சுனைகளை அமைத்து முருகனை வழிபட்டனர். அந்த சுனைகளும் கன்னியர் கோவிலும் இப்பகுதியில் உள்ளன. இது இப்போது ஏழுசுனை கன்னியர் கோவில் என்று அழைக்கப்படுகிறது.

காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் முருகப் பிரான் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.

நீறது இட்டு நினைப்பவர் புத்தியில்
நேசமெத்த அளித்தருள் சற்குரு
நீல முற்ற திருத்தணி வெற்புறை பெருமாளே!
என்ற அருணகிரிநாதரின் வாக்கால் முருகனை நாளும் துதிப்போமாக

நன்றி, வணக்கம்!

                         ***
tags- திருத்தணி

திருலோகம் கண்ட மஹாகவி! (Post No.10,491)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,491
Date uploaded in London – – 27 DECEMBER 2021

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

திருலோகம் கண்ட மஹாகவி!
ச.நாகராஜன்

மஹாகவி பாரதியாரை பல்வேறு அறிஞர்கள் நேரில் கண்டு வியந்து அவரது கவித்வத்தைப் போற்றிப் பாராட்டியுள்ளனர். அது போலவே அவரை நேரில் காணவிட்டாலும் கூட அவரின் கவிதைகளில் அவரை தரிசனம் செய்து பிரமித்தவர்களும் ஆயிரக்கணக்கில் உண்டு.

ஆனால் மஹாகவியை நேரில் காணாவிட்டாலும் கூட அவரைத் தனது தந்தையாகப் பாவித்து மானசீக புத்திரனாக மாறி அவருக்கு ஆண்டு தோறும் திதி கொடுத்த ஒரு “அற்புத மகனைப்” பற்றி உலகம் அறியுமா?
உலகிலேயே இப்படி ஒரே ஒரு அபூர்வ மகனாகத் திகழ்ந்தவர் திருலோக சீதாராம் அவர்கள்.

அவர் கண்ட மஹாகவி அவருக்குத் தந்தையாய் தாயாய், ஆசானாய் ஏன் எல்லாமாய் இருந்தார்.

மஹாகவி பாரதியார் பிறந்தது 1882ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ஆம் தேதி. அவர் மறைந்தது 1921 செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி.
திருலோக சீதாராம் பிறந்தது 1917ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தேதி. அவர் மறைந்தது 1973ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி.


அதாவது மஹாகவி மறைந்த போது அவர் நான்கு வயதுக் குழந்தை!

இந்த நான்கு வயதுக் குழந்தை மஹாகவியைப் பார்க்காவிட்டாலும் கூட
அவனது கவிதைகள் மூலம் அவனையும் அவன் உளத்தையும் நன்கு தரிசித்து விட்டது!

இளம் பருவத்திலேயே கவிதா ஆர்வம் கொண்டு கவிதா ஆவேசம் பெற்ற அவர் தமிழில் தன்னைத் தோய்த்துக் கொண்டார்.
அவரது தாய் மொழி தெலுங்கு என்றாலும் கூட தமிழின் அமுதச் சுவையைக் கண்டு அதில் மூழ்கிப் போனார். அமிர்தத்தின் ஒரு சொட்டு நம் நாக்கில் பட்டாலும் கூட சாவே வராது. அவரோ தமிழ் அமிர்தத்தில் முழுகியே விட்டார் என்றால் அவருக்கு மறைவு என்பது ஏது?

அத்துடன் மட்டுமல்லாமல் கவிதையை ரசிக்க (தாய்)மொழி ஒரு தடை இல்லை என்பதைத் தான் வாழ்ந்து காண்பித்து நிரூபித்தும் விட்டார் அவர்.

‘நவசித்தன் பாரதி என்ற நற்பொருளை நானே பயின்று கொண்டேன்’ என்று தன்னிலை விளக்கம் கொடுத்த அவர் அந்த பாரதி பல்கலைக் கழகத்தில், கல்வியில் உயர் பட்டம் பெற்று அதற்கும் மேலான ஆய்வுக்குரிய டாக்டர் பட்டத்தையும் தானே பெற்றுக் கொண்டார்.

மக்களிடையே அவர் பாரதியை எடுத்துச் சென்ற போது மக்கள் வியந்தனர்.
பாரதியாரின் கவிதைகளைத் தனது பாணியில் நீண்ட நேரம் விளக்கி உரை ஆற்றும் அவர் பாணியில் சொக்கிப் போனவர்கள் ஏராளம்.
பாரதியாரின் மனைவி செல்லம்மாள் பாரதி நோய்வாய்ப் பட்டிருக்கிறார் என்ற தகவலைக் கேட்டதும் தன் பணியை நிறுத்தி நேராக செல்லம்மாள் பாரதியைப் பராமரிக்கும் பணியை விரும்பி மேற்கொண்டார்.

அவரது மடியிலேயே செல்லம்மாள் பாரதி தன் உயிரை விட்டார் என்பது மனதை உருக வைக்கும் ஒரு செய்தி.
பாரதியைப் படித்துப் படித்து அவரது வசன கவிதை நடை போலவே தனது நடையையும் அவர் பெற்று விட்டாரோ என்று எண்ணத் தோன்றும் அவரது கட்டுரைகளைப் படிக்கும் போது!
எடுத்துக் காட்டாக அவரது எழுத்திலிருந்து ஒரு அருமையான பகுதியை மட்டும் இங்கு மேற்கோளாகப் பார்க்கலாம்.

‘இலக்கியப் படகு’ என்ற அவரது நூலில் ‘கடமை உணர்ச்சி’ என்ற கட்டுரையில் வருவது இந்தப் பகுதி.
“சங்கற்பம் இல்லாமலேயே ஒருவன் வாழ்வாங்கு வாழும் இயல்புடையவனாகி விடுவது தான் ஒவ்வொருவனுக்கும் உலகத்தில் ஏற்பட்டுள்ள உண்மையான கடமை. அப்படி வாழ்வது தான் பலனை எதிர்பாராமல் செய்கின்ற கரும யோகம்.

பாரதி இதற்கு அருமையானதொரு விளக்கம் கொடுக்கிறார்.

சூரியன் உதிப்பதால் உலகத்தில் இருள் விலகுகிறது. ஒளி வருகிறது, உஷ்ணம் தோன்றுகிறது. மழை பொழிகிறது. உயிர்க்கு அமுதாகிறது. உயிர்கள் வாழ்கின்றன. உலகுக்கு இவ்வளவு நலன்களை இடையறாமற் செய்து கொண்டிருந்த போதிலும் தான் செய்யும் நன்மையும், அந்த நன்மையை அடைபவர் யார் யார் என்ற தகவலும், இதொன்றும் சூரியனுக்குத் தெரியாது. அவன் தருகின்ற ஒளியின் மேன்மையைப் பாராட்டி அவனைப் புகழ்ந்து அவனுக்கு வாழ்த்து மடல் வாசித்தளிப்பதாக இருந்தால் இதெல்லாம் அவனுக்கு விளங்குமா என்பதை எண்ணிப் பாருங்கள்.

முதலில் அவனிடம் உள்ள, வேறு எவரிடமும் இல்லாத பேரொளியே அவனுக்குத் தெரியாது.

இருள் என்பது இதுவென்று அவனுக்குத் தெரிந்திருந்தாலல்லவோ, ஒளியென்பதொன்று உண்டு என்று அவனுக்கு விளங்கப் போகிறது. ஆயினும் அவனிடமிருந்து ஒளி வருவதும் அதனால் உலகுய்வதும் எவ்வளவு மகத்தான உண்மை. அதைப் பற்றிய அறிவு சிறிதுமின்றி – ஆனால், அதன் பயனை அனைத்துலகும் பெறத்தக்க ஓய்வற்ற இயக்கம் அவனுடையதாக அமைந்திருக்கிறது.

எவன் ஒருவன் பிறந்ததனால், வாழ்வதனால், பேசுவதால், செய்வதால் உலகமே நலன் பெறுமோ, அத்தகையவன் தனது செயலின் விளைவைப் பற்றிச் சிறிதும் எண்ணமற்றவனாக இருந்து கொண்டே பெரும் பயன் விளையக் காரணனாக இருக்கின்றானோ அவனே நிஷ்காம்ய கர்மி.

ஞாயிற்றை எண்ணி – என்றும்
நடுவு நிலைபயின்று
ஆயிரம் ஆண்டு – உலகில் – கிளியே
அழிவற்று இருப்போமடி

கடமையென்று ஒன்று நம்மை அச்சுறுத்திக் கொண்டிருப்பது போன்ற பாவனையில் நாம் எப்பொழுதும் எச்சரிக்கையாக இருந்து கடமையாளனாக விளங்க முயல்வது வீண் தொல்லை. நம் செயல்கள் எல்லாம் கடமையல்லாது வேறில்லை என்றாகி விடுகின்ற இயல்பு வசமாவது போல மானிட வெற்றி பிறிதொன்றில்லை.
கடமையுணர்ச்சி சுமையாகும். கடமை இயல்பே இனிதாகும்”.

இப்படி அழுத்தம் திருத்தமாக அற்புதமான ஒரு கருத்தை, பாரதியில் தோய்ந்து, எளிய நடையில் இனிய தமிழில் தருபவரை “பாரதியைக் கண்டவர்” என்று தானே கூற முடியும்!

பாரதியை நினைக்கும் போதெல்லாம் அவரது பக்தர்களின் நினைவும் கூட வருவது இயல்பே.
அந்த பக்தர்களின் பட்டியலில் முதலிடம் பெறுகிறார் திருலோக சீதாராம்!

tags– திருலோக சீதாராம், பாரதி