MORE RARE PICTURES FROM ANOTHER OLD GERMAN BOOK -PART 3 (Post No.10,555-A)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,555-A

Date uploaded in London – –    12 JANUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IN MARCH 2020 , I POSTED RARE PTCTURES FROM 100 YEAR OLD GERMN BOOK. NOW I HAVE GOT ANOTHER OLD GERMAN BOOK FROM LONDON UNIVERSITY. SINCE THERE ARE OVER 100 PICTURES, I PUBLISH HALF IN TAMILANDVEDAS.COM AND HALF IN SWAMIINDOLOGY.BLOGSPOT.COM WITH THE SAME POST NUMBER DIVIDING THEM INTO A AND B.

HERE IS PART 3 (PART ONE AND TWO WERE POSTED YESTERDAY)

MORE PICTURES ARE IN SWAMIINDOLOGY.BLOGSPOT.COM

TAGS- GERMAN BOOK, PICTURES- PART 3

பகவத்கீதை சொற்கள் INDEX-36; கீதை மூலம் சம்ஸ்க்ருதம் -36 (Post.10,554)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,554

Date uploaded in London – –    12 JANUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

துமுலஹ   1-13  பெரிதாக

துல்யநிந்தா ஆத்ம ஸம்ஸ்துதிஹி 14-24 தன்னை இகழ்வதையும் புகழ்வதையும் ஒன்றாக கருதுபவன்

துல்யநிந்தா ஸ்துதிஹி  12-19 இகழ்வதையும் புகழ்வதையும் ஒன்றாக

துல்யப்ரியா ப்ரியஹ  14-24 விருப்பையும் வெறுப்பையும் ஒன்றாக கருதுபவன்

துல்யஹ 14-25 சமம்; சம பாவனை

துஷ்டஹ 2-55  மகிழ்ச்சி உடையவன்

துஷ்டிஹி 10-5 போதும் என்ற மனம்

துஷ்யதி 6-20  மகிழ்ச்சி அடைதல்

துஷ்யந்தி 10-9  திருப்தி அடைகின்றனர்

தூஷ்ணிம்  2-9  — மெளனமாக ………….10 words

த்ருப்திஹி 10-18  த்ருப்தி

த்ருஷ்ண சங்க ஸமுத்பவம்  14-7 வேட்கையும் பற்றும் உண்டாக்குவது

தேஜஸ்வினாம் 7-10  தேஜஸ் / வீரம் உடையவர்களின்

தேஜஹ 7-9 ஒளி

தேஜோபிஹி 11-30 கனலால், தீயால்

தேஜோமயம் 11-47 ஒளி நிறைந்ததும்

தேஜோ ராஸிம்  11-17 ஒளிப் பிழம்பாக

தேன  3-38 அவனால்

தேஷாம் 5-16 அவர்களுடைய

தேஷு 2-62 அவர்களிடத்தில் …………..20

தைஹி  3-12 அவர்களால்

தோயம் 9-26 தண்ணீர்

தெள 2-19   அவர்கள்

த்யக்த ஜீவிதாஹா 1-9   உயிரைக் கொடுப்பவர்கள்

த்யக்த சர்வ பரிக்ரஹக 4-21 உடைமைகளை  எல்லாம் உதறித்தள்ளியவன்  ……25

த்யத்தும்  18-11  விடுவதற்கு

த்யக்த்வா 1-33  துறந்து

த்யஜதி 8-6  விட்டால், விடுதல்

த்யஜன் 8-13  விட்டு

த்யஜேத் 16-21 தள்ள வேண்டும் …………….30 words

த்யாக பலம் 18-8 த்யாக பலனை

த்யாகஸ்ய 18-1 தியாகத்தினுடைய

த்யாகம் 18-2 தியாகம்/ துறத்தல்

த்யகாத்  12-12  துறவினால்

த்யாகீ  18-10   த்யாகீ  ———- 35

த்யாகே 18-4 தியாகத்தைப் பற்றி

த்யாஜ்யம் 18-3  தள்ளத்தக்கது

த்ரயம் 16-21  மூன்றையும்

த்ராயதே  2-40  காப்பாற்றும்

த்ரிதா — 18-19    மூவகை  ……40

த்ரிபிஹி 7-13  மூன்று (குண)

த்ரிவிதம் 16-21 மூன்று வகையானது

த்ரிவிதஹ 17-7 மூன்று வகையாக

த்ரிவிதா  17-2 மூன்று வகையாக

த்ரிஷு  3-22  மூன்று …..45

த்ரின் 14-20 மூன்று

த்ரைகுண்ய விஷயாஹா 2-45  முக்குணங்கள் பற்றியவை

த்ரை தர்ம்யம்  9-21 மூன்று வேதம் தர்மங்களை

த்ரைலோக்ய ராஜ்யஸ்ய 1-35 மூன்று உலகங்களை  ஆளும்

த்ரை வித்யாஹா 9-20  மூன்று வேதங்களையும் கற்றவர்கள்…50

த்வக் 1-30   தோல்

த்வத்தஹ 11-2   உன்னிடமிருந்து

த்வத் ப்ரஸாதாத் 18-73  உன் அனுக்ரஹத்தால்

த்வத் ஸமஹ 11-43  உனக்கு சமமானவர்

த்வதன்யஹ  6-39  உன்னைத்தவிர எவரும் ….55

த்வதன்யேன 11-47 உன்னைத்தவிர எவராலும்

த்வயா 6-33  உன்னால்

த்வயி 2-3  உன்னிடத்தில்

த்வரமாணாஹா 11-27 பரபரப்புடையவர்களால்

த்வம்  2-11    நீ  …..60

த்வா 2-2   உன்னை

த்வாம்  2-7  உன்னை

62 WORD ARE ADDED IN PART 36

to be continued……………….

 Gita Word Index 36

Tags— Gita word Index 36

ஸ்வாமி விவேகானந்தர் : அளக்க முடியா, மாபெரும் மஹான்! (10,553)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,553
Date uploaded in London – – 12 JANUARY 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஸ்வாமி விவேகானந்தர் பிறந்த தினம் : ஜனவரி 12.
நினைவைப் போற்றித் துதிக்கும் அஞ்சலிக் கட்டுரை
(அவதார தினம் : 12-1-1863 சமாதி 4-7-1902)

ஸ்வாமி விவேகானந்தர் : அளக்க முடியா, அறிய முடியா, மாபெரும் மஹான்!
ச.நாகராஜன்

அறிய முடியா மாபெரும் மஹான்

வெந்துயரில் வீழ்ந்திருந்த பாரதத்தைக் காக்க வந்த மாபெரும் மஹான் ஸ்வாமி விவேகானந்தர்.
அவரை யாராலும் அளக்க முடியாது; அவரை யாராலும் முழுவதுமாக அறிய முடியாது.
தான் வந்த நோக்கத்தைப் பரிபூரணமாக நிறைவேற்றி விட்டுத் தன் இருப்பிடத்திற்கு மீண்டார் அவர்.
அவரைப் பற்றிய ஏராளமான அனுபவங்களை அவருடன் பாரதத்திலும் மேலை நாடுகளிலும் பழகியவர்கள் நிறைய எழுதி வைத்துள்ளனர்.
ஜோஸபைன் மக்லியாட் ஸ்வாமிஜியின் அணுக்க பக்தை.
அவர் தனது நினைவலைகளில் குறிப்பிடும் சில சம்பவங்களை இங்கு பார்ப்போம்.

ஏன் ஸ்வாமிஜி நீங்கள் தனிப்பட்ட கடவுளைப் புகழ்கிறீர்கள்?
ஆல்பெர்டா ஸ்டர்ஜெஸ் (Alberta Sturges) என்பவர் ஜோஸபைனுக்கு நெருங்கிய உறவுக்காரப் பெண்மணி (Niece). பின்னால் இவர் லேடி சேண்ட்விச் என்ற பெயரால் அறியப்பட்டார். (Lady Sandwich)
அவர் ஸ்வாமிஜியின் அளப்பரிய அறிவைக் கண்டு பிரமித்துப் போனார்.

எதை எடுத்தாலும் அவரை விஞ்ச முடியாது; அப்படி ஒரு பிரம்மாண்டமான பல்துறை அறிவு.

ரோமுக்கு அவருடன் சென்ற ஆல்பெர்டா அங்குள்ள பல்வேறு இடங்களை ஸ்வாமிஜிக்கு விவரித்தார். ஆனால் அவரே அந்த இடங்களைப் பற்றிய ஸ்வாமிஜியின் பேரறிவைக் கண்டு வியந்து போனார். செயிண்ட் பீட்டருக்கு ஸ்வாமிஜியை அழைத்துச் சென்ற அவர் அங்குள்ள ரோமன் தேவாலயத்தில் உள்ள அடையாளச் சின்னங்களையும் நகைகளையும் மகான்களின் மீதிருந்த அற்புதமான அணிகலன்களையும் காண்பித்து விவரித்தார்.
அவர் ஸ்வாமிஜியைப் பார்த்து ஒரு கேள்வியைக் கேட்டார் :”ஸ்வாமிஜி! தனிப்பட்ட கடவுளை நம்பாதவர் நீங்கள். அப்படி இருக்க, இங்கு இப்படி மிகவும் போற்றுகின்றீர்களே”

ஸ்வாமிஜியின் போற்றுதலால் வியந்து இந்தக் கேள்வியைக் கேட்ட ஆல்பெர்டாவை நோக்கி ஸ்வாமிஜி, “ஆனால் ஆல்பெர்டா, நீ இதை நன்கு போற்றித் துதிக்கிறாயே! இதற்கு உரிய மரியாதையைத் தந்து தானே ஆக வேண்டும்”.
ஆல்பெர்டா நெகிழ்ந்து போனார்.

பணமா, நானா, வாங்கவே மாட்டேன்!

இலையுதிர்காலம் வந்தது. ஸ்விட்ஸர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு ஸ்வாமிஜி மிஸ்டர் சேவியர் (Mr and Mrs Sevier) தம்பதிகளுடனும் மிஸ்டர் ஜே.ஜே. குட்வினுடனும் (J.J.Goodwin) வந்தார்.
பிரம்மாண்டமான வரவேற்பு இந்தியாவில் ஸ்வாமிஜிக்காகக் காத்திருந்தது.
குட்வின் தான் ஸ்வாமிஜியின் சொற்பொழிவுகளைச் சுருக்கெழுத்தில் எடுத்த சுருக்கெழுத்தாளர்.
அவர் மிகுந்த திறமைசாலி. கோர்ட்டில் ஸ்டெனோகிராபராக பணியாற்றிக் கொண்டிருந்தார்.

அவரை 54, வெஸ்ட் 33வது தெருவில் நடந்த ஸ்வாமிஜியின் சொற்பொழிவுகளுக்கு அழைத்து அனைத்தையும் பதிவு பெறச் செய்தனர்.
அவை தான் நமக்கு Lectures from Colombo to Almora போன்ற நூல்களில் கிடைத்துள்ளன.
ஒரு நிமிடத்திற்கு 200 வார்த்தைகளைச் சுருக்கெழுத்தாக எடுக்கும் அசகாய சூரர் அவர்.

அவரை இந்த பணிக்கு அழைப்பது என்பது நிறைய செலவாகும் ஒன்று என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.
ஆனால் ஸ்வாமிஜியின் ஒரு வார்த்தையைக் கூட யாரும் இழக்க விரும்பவில்லை. ஆகவே அவர் அழைக்கப்பட்டார்.
ஒரு வாரம் சுருக்கெழுத்துப் பணியில் ஈடுபட்ட குட்வின் பின்னர் பணம் வாங்க மறுத்து விட்டார்.

“என்ன ஆயிற்று, உங்களுக்கு?” என்று அவரைக் கேட்ட போது, குட்வின் கூறினார்; ”விவேகானந்தர் தன் வாழ்க்கையையே கொடுக்கும் போது நான் எனது சேவையையாவது கொடுக்கக் கூடாதா?” என்று கேட்டார்.
ஸ்வாமிஜியுடன் உலகம் முழுவதும அவர் கூடவே சென்றார்.

ஸ்வாமிஜியின் வாயிலிருந்து உதிர்ந்த பொக்கிஷமான வார்த்தைகள் ஏழு தொகுதிகளாக வெளி வந்ததற்குக் காரணம் குட்வின் தான்!

இதென்ன நெற்றியில் செங்குத்துக் கோடு?! (நாமம்)

ஜோஸபைன் இந்தியா வந்தார். பம்பாயில் அவரை அளசிங்கர் வரவேற்றார்.
அவர் நெற்றியில் செங்குத்தான கோடு (நாமம்) இருந்ததைப் பார்த்து வியந்தார் ஜோஸபைன்.
காஷ்மீருக்கு ஸ்வாமிஜியுடன் ஜோஸபைன் சென்ற சமயம் ஒரு முறை அளசிங்கரைப் பற்றி அவர், “ என்ன பரிதாபம் பாருங்கள், அளசிங்கர் வைஷ்ணவ சின்னத்தை நெற்றியில் போட்டுக் கொண்டிருப்பது?” என்று விமரிசித்தார்.

உடனே அவர் பக்கம் திரும்பிய ஸ்வாமிஜி கடுமையாக, “என்ன, என்ன சொன்னாய் நீ? உனக்கென்ன தெரியும் அவரைப் பற்றி!” என்று கூறினார்.
ஜோஸபைனுக்கு ஒன்றும் புரியவில்லை – ஸ்வாமிஜி ஏன் இப்படிக் கடுமையாக வார்த்தைகளைக் கூறினார் என்று.
பின்னால் தான் அவர் தெரிந்து கொண்டார்.

அளசிங்கர் தான் வீடு வீடாகச் சென்று பிச்சை எடுத்துப் பணம் சேர்த்து ஸ்வாமிஜியை மேலை நாட்டிற்கு அனுப்பினார் என்று. அளசிங்க பெருமாள் சென்னையில் உள்ள கல்லூரியில் தத்துவப் பாடம் போதித்தவர். அவருக்கு மாதச் சம்பளம் 100 ரூபாய்கள். தந்தை, தாய், மனைவி, நான்கு குழந்தைகளைப் பேணி குடும்பத்தை அவர் நடத்தி வந்தார்.
“அவர் அப்படிப் பணம் சேர்த்திராவிடில் ஒரு வேளை எங்களைப் போன்றவர்கள் ஸ்வாமிஜியைப் பார்த்திருக்கவே முடியாது” என்று பின்னால் நினைவுக் குறிப்புகளில் எழுதினார் ஜோஸபைன்.

இப்படி ஸ்வாமி விவேகானந்தரைப் பற்றிய நினைவுக் குறிப்புகள் ஏராளம் உள்ளன. படித்தால் வியப்போம், பிரமிப்போம்.
பிரம்மாண்டமான ஒரு அவதாரம் பூமிக்கு வரும் போது அதன் ஒவ்வொரு கணமும் நமக்கு ஒரு பாடத்தை போதிக்கும், இல்லையா!
விவேகானந்தரைப் போற்றுவோம்; அவர் காட்டிய வழியில் செல்வோம்!

tag- விவேகானந்தர்


MORE RARE PICTURES FROM ANOTHER OLD GERMAN BOOK (Post No.10,552-A)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,552-A

Date uploaded in London – –    11 JANUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IN MARCH 2020 , I POSTED RARE PTCTURES FROM 100 YEAR OLD GERMN BOOK. NOW I HAVE GOT ANOTHER OLD GERMAN BOOK FROM LONDON UNIVERSITY. SINCE THERE ARE OVER 100 PICTURES, I PUBLISH HALF IN TAMILANDVEDAS.COM AND HALF IN SWAMIINDOLOGY.BLOGSPOT.COM WITH THE SAME POST NUMBER DIVIDING THEM INTO A AND B.

HERE IS PART 1

FOLLOWING IS THE I THE REFERENCE TO  2020 POST

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7706

Date uploaded in London – 17 March 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

FOLLOWING ARE SOME RARE PICTURES ABOUT INDIA IN AN OLD GERMAN BOOK. PICTURES ARE TAKEN AT BERLIN AND LONDON MUSEUMS. SOME ARE FROM INDIA. THE BOOK WAS PUBLISHED IN 1929.

tags- rare german pictures-1

நான் திருமணப் பெண் போல மணக்க வேண்டும் – புலவன் ஆசை (Post.10,551)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,551

Date uploaded in London – –    11 JANUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பூமி சூக்த ஆராய்ச்சிக் கட்டுரை – 9

நான் திருமணப் பெண் போல மணக்க வேண்டும் – புலவன்  வேண்டுகோள்

மந்திரம் 21

(பாடல் 21;)- அ .வே.12-ஆவது காண்டம் ; முதல் துதி)

அக்னிவாசாஹா ப்ருதிவ்யஸித ஜூஷ்விஷிமந்தம் ஸம்சிதம் மா க்ருணோது — 21

பொருள்  21

கனலை அணிந்துள்ள கருமையான அங்கங்களை உடைய பூமி  எனக்கு அறிவு ஒளியை கொடுப்பாளாகுக; என் அறிவை கூர்மை ஆக்குவாளாகுக -21

எனது கருத்துக்கள் :_

21- கிட்டத்தட்ட காயத்ரீ மந்திரத்தின் பொருள்தான் இது. எனது அறிவை பிரகாசம் ஆக்கு; கூர்மை ஆக்கு  என்று புலவர் வேண்டுகிறார். காயத்ரீ மந்திரத்தை மொழிபெயர்த்த பாரதியாரும்

“செங்கதிர்த் தேவன் ஒளியைத் தேர்ந்த்து தெளிகின்றோம்.

அவன் எங்கள் அறிவினைத் தூண்டி நடந்துக” –என்றே பாடுகிறார்.

இன்னும் ஒரு  இடத்தில் ஒளி படைத்த கண்ணினாய் வா  வா, உறுதி கொண்ட நெஞ்சினாய்   வா வா  என்று பாடுகிறார்.. வேதத்தில் இருந்து பெறப்பட்ட கருத்தே அது.

XXX

மந்திரம் 22

பூம்யாம் தேவேப்யோ தததி  யக்ஞம் ஹவ்யமரங்க்ருதம்

பூம்யாம் மனுஷ்யாம் ஜீவந்தி ஸ்வதயான்னேன மர்த்யாஹா

ஸா நோ பூமிஹி  ப்ராணமாயுர் ததாது ஜரதஷ்டிம்  மா ப்ருதிவீ க்ருணோது – 22

பொருள்  22

எந்த பூமியில்  தேவர்களுக்கு மக்கள் அவியையும் யக்ஞத்தையும் அலங்காரங்களுடன் அளிக்கிறார்களோ , எங்கு மக்கள் உண்டும் குடித்தும் வாழ்கிறார்களோ , அந்த பூமாதேவி எங்களுக்கு நல்ல சுவாசக் காற்றையும் , நீண்ட ஆயுளையும் அளிப்பாள் ஆகுக;  நாங்கள் கிழவர்கள் ஆகும் வரை வாழவேண்டும்  –22

எனது கருத்துக்கள்

யாக மேடை, யூப ஸ்தம்பம்  ஆகியவற்றை அலங்கரித்த செய்தி

ரிக் வேதத்திலேயே வருகிறது. மணப்பெண்ணின் அலங்காரம் பற்றி கல்யாண மந்திரத்தில் வருகிறது .ஒரு குழந்தையை தாயார் அலங்கரிப்பது போல அலங்கரி யுங்கள் என்ற  உவமை RV 9-104-1 மந்திரத்தில் வருகிறது. பெண்கள் நகை அணிந்த காட்சிகளும் உலகின் மிகப்பழைய நூலில் வருவதால், வேத கால  மக்கள் மஹத்தான நாகரீகத்தில்,  செழிப்புடன் வாழ்ந்ததை அறிகிறோம்..

xxx

மந்திரம் 23

யஸ்தே கந்தஹ ப்ருதிவி ஸம்பபூவ யம் பிப்ரத்யோஷ தயோ யமாபஹ

யம் கந்தர்வா அப்சரஸ் ச  பேஜிரே தேன மா ஸுரபிம் க்ருணு  மா நோ த்விக்ஷத கஸ்சன -23

ஓ பூமியே உன்னிடமிருந்து மண் வாசனை வருகிறது.; உன்னிடம் தாவரங்களும் , மூலிகைகளும்  நீரும் வாசனையுடன் மிளிர்கின்றன ; கந்தர்வர்களும், அப்சரஸ்களும் அவற்றைப் பகிர்கிறார்கள்  அந்த இனிமையை எனக்கும் அருள்வாயாகுக; என்னை எவரும் வெறுக்கமால் இருக்கட்டும் -23

எனது கருத்துக்கள்

மண் வாசனை என்பது நல்ல ஒரு கருத்து. கிராமப் புறத்தில் வாழ்வோருக்கு இது நன்கு தெரியும். ரிக் வேதம் முழுதும் கந்தர்வர்கள், அப்ஸரஸ்களை வருணிக்கும்போது அவர்களை வாசனை மிகுந்தவர்கள் என வருணிக்கின்றனர். கந்தம் Good Smell இருப்பதால்தான் அவர்களை கந்தர்வர்கள் என்று அழைக்கிறோம். மேலும் அப்சரஸ் என்றால் சென்ட், பெர்ப்யூம் Scent, Perfume என்றும் பொருள்; அவர்களுடைய பெயர்கள் அனைத்தும் பூக்களின் பெயர்கள்; செடிகளின் பெயர்களே என்றும் வியாக்கியானங்கள் உள்ளன. கந்தர்வர்கள் 6333 பேர் உள்ளதாக  ஒரு அதர்வண வேத துதி பாடுகிறது. அவர்கள் ஆடல், பாடலில் வல்லவர்கள்; பெண்களிடத்தில் பிரியம் உள்ளவர்கள்; தேவர்களுக்கு சோம ரசம் தயாரிப்பவர்கள். ஆடல்-பாடல் கலைகளுக்கே காந்தர்வ வேதம் என்றே பெயர்; புராணங்களில் இவர்கள் பற்றி நிறைய கதைகள் உள்ளன. அப்ஸரஸ் கள் என்னும் அழகிகள் அவர்களுடைய மனைவியர். இந்தப் பின்னணியை நோக்கும்போது இந்தப் புலவன் அத்தைகைய இனிமையை நன்மணத்தை எனக்கும் கொடு என்று வேண்டுவது ஏன் என்பது புரிகிறது .

Xxx

மந்திரம் 24

யஸ்தே கந்தஹ புஷ்கரமாவிவேச யம் சஞ்ஜப்ருஹு ஸுர்யாயா விவாஹே

அமர்த்யாஹா ப்ருதிவி கந்தமக்ரே மா ஸுரபிம் க்ருணு  மா நோ த்விக்ஷத கஸ்சன -24

பொருள்  24

உன்னுடைய எந்த நல்ல மணம் தாமரைப்பூவில் நுழைந்ததோ, எந்த மணத்தை வைத்து திருமணப் பெண் சூர்யாவை கந்தம் உள்ளவராக ஆக்கினார்களோ அந்த இனிமையான மணத்தை எனக்கும் அளிப்பாயாகுக .; என்னை எவரும் வெறுக்கமால் இருக்கட்டும் -24

எனது கருத்துக்கள்

மந்திரம் 24-ம் இதையே மேலும் விளம்புகிறது . இந்தியாவின் தேசீய மலர் தாமரை Lotus. தேவியர் அனைவரும் வீற்றிருப்பது தாமரை; தமிழில் மலர் (பூ) என்றாலே தாமரை. வேதத்தில் நூற்றிதழ் தாமரை என்ற சொற்றோடர் உளது. அதை சங்க இலக்கிய பாடலிலும் காண்கிறோம். அத்தகைய தாமரை மலர் மணமும் உன்னுடையதே என்று புலவன் பூமியைப் போற்றுகிறான்.

இந்த 24 ஆவது மந்திரத்தில் சூர்யாவின் வாசனை வருகிறது. அவள்தான் முன் உதாரணமான மணப்பெண் Exemplary Bride ; ரிக் வேதம் 10-85 ஆவது துதியில் நீண்ட கல்யாண மந்திரம் உளது. அதில் சூர்யாவை காண்கிறோம். அதர்வண வேதத்தில் அந்தக் கல்யாண மந்திரத்தோடு கூடுதல் மந்திரங்களை சேர்த்துள்ளார்கள் ; மணப் பெண் அலங்கா ரம் பற்றி இந்துக்களுக்குச் சொல்லத் தேவையே இல்லை. இந்து மதம் போல நாலு நாள்  திருமணச் சடங்கு உலகில் வேறு எங்கும் இல்லை. மலர்களும் மணப் பெண்ணும் ஒன்று என்னும் அளவுக்கு அவள் மீது வாசனை மலர்கள் இருக்கும். இது தவிர சந்தனம் , குங்குமம், கஸ்தூரீ என்று கூடுதல் வாசனையும் இருக்கும். அதையெல்லாம்  நினைவு கூறும் புலவன் எனக்கும் அந்த மணமும்  இனிமையும் கிடைக்கட்டும் என்கிறான். இவ்வளவு இருந்தால் அவனை வெறுப்பாரும் இருப்பாரோ !! பூமியை வெறுப்பாரும் இல்லை ; மணப் பெண்ணை விரும்பாதவ ரும் இல்லை !!!

ரிக் வேத கல்யாண மந்திரம் குறித்தும், அகநா நூறு கல்யாணப் பாடல்கள்  86, 136  குறித்தும் முன்னரே  விரிவாக எழுதியுள்ளேன்.

தொடரும் …………………………….

xxx

tags–திருமணம், வாசனை, மணப்பெண் , கல்யாணம் , பூமிஸூக்தம்-9

RIG VEDIC DEMON AND DEITY IN ZOROASTER’S ZEND AVESTA (Post No.10,550)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,550

Date uploaded in London – –    11 JANUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Rig Veda, the oldest book in the world, mentioned a demon by name Druh and a Goddess by name Aramati (araamati). Both are in the Zend Avesta of Parsees (Parsi or Zoroastrians). Not much attention is paid to these references by the scholars for some reason. If more research is done, one can pinpoint the age of Zoroaster.

Zoroaster ‘s period, his birth place and etymology of his name are all in utter confusion. Druh is also found in Atharvana Veda (AV).

Another interesting point would be to analyse it with Druids of Europe and Dravidas of South India.

An A V hymn is punning on the word Hari. If Zora is a corrupted form of Hari as some scholars think, then Zoroaster ‘s name would be Golden Camel or Yellow camel or a horse and camel breeder.

AV-20-30, 31 – (618, 619 SUKTAS)

Word Hari is in poet’s name as well (Varu Sarva Harirva)

Five mantras are in the first hymn. The poet plays with the sound Hri, Hari etc

HRI = TO TAKE

HARYATA = DELIGHTFUL

HARYAN = LOVING, DEAR, DARLING

HARI = HORSE IN TAWNY OR BAY COLOUR

HARIT = GOLDEN, YELLOW; ALSO GREEN

(Dictionary meaning of BAY = REDDISH BROWN; TAWNY= ORANGE BROWN; IN SUN LIGHT GOLDEN COLOUR)

DEVAS AND ASURAS

Zoroaster demonised Devas and glorified Asuras. Rig Veda also praise Asuras and give this epithet to Gods Agni, Varuna and Indra. There is nothing new in it. Later scriptures demonised Asuras completely.

Hindu religion revitalizes itself to suit the times and circumstances. Adi Shankara wiped out the unwanted 90 odd Hindu sects and established Shanmatha- Six Sects or Types of worship.

Ramalinga Swamikal and Narayana Guru and others established new type of worship in Tamil Nadu and Kerala respectively.

In the North, Arya Samaj and Brahma Samaj tried newer things. So do Theosophical society in south and north.

Degrading Lord Shiva

In our own days a great saint Bhakti Vedanta Prabhupada who spread Hare Krishna movement throughout world, for no reason belittled Lord Shiva as Demi God. This is also not new. We find such tendency in the Saivite and Vasihnavite Puranas and the Hymns by Tamil Alvars and Tamil Nayanmras . One degrading the God worshipped by another sect or opposite sect.

Buddhists and Jains also did this. They replaced all Hindu Gods in temples and established their own. Later Hindus reversed it. Sri Lankan Buddhists wiped out the Ramayana traces and symbols in Sri Lanka. Now Sri Lanka government is renewing them for tourist money.

Christians and Muslims destroyed all that looked Pagan and Kafir to them . And yet the customs prevailed in one form or another.

If we look at Zoroaster’s demonising of Devas with this in background, we would understand him better.

Armaiti in Avesta = devotion, love, piety, zeal; one of the Amesha Spenta

(in Vedas we see good and bad things are personified as Goddesses or Demons)

Druj in Avesta = Lie

Drujo Demana= House of Lies/ Hell

Please see the attachments showing Aramati and Druh in RV:

Old Articles written by me:–

Who was Zoroaster? Why Did Parsees ‘Return’ to Gujarat?

https://tamilandvedas.com/wp-content/uploads › 2013/12

PDF

25 Dec 2013 — reason for Parsees coming back to Gujarat after the persecution by … Their contribution to the development of India was great in all.

Parsee | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › parsee

19 Apr 2017 — Why did Parses Return to India, I gave 20 points listed by Dattopant Thengadi and what Kanchi Paramacharya (1894-1994) told us about ..


India- Iran Vedic Connection (Post No.3831) | Tamil and Vedas

https://tamilandvedas.com › 2017/04/19 › india-iran-ve…

19 Apr 2017 — Written by London swaminathan Date: 19 APRIL 2017 Time uploaded in London:- 6-55 am Post No. 3831 Pictures are taken from various sources; …


Iran | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › iran

Kanchi Paramacharya (1894-1994) was a great linguistic scholar and he said that word Sourashtra (a region in modern Gujarat of India) gave the word Zoroaster.

tags- Aramati, Druh, in Vedas, in Avesta

PLEASE GO TO SWAMIINDOLOGY.BLOGSPOT.COM IF THE LINKS DONT WORK IN TAMILANDVEDAS.COM

Can Prayer Bend the Time? (Post No.10,549)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,549
Date uploaded in London – – 11 JANUARY 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

Published on Dec 20th 2021 in http://www.ezinearticles.com

Can Prayer Bend the Time?

Santhanam Nagarajan

Prayer is powerful. It brings peace, solutions to the problems and what not?
Miracles do happen by praying!

Take for instance a small incident. A beautiful girl was to return home in the late night after attending a party. She has to go a long way. When she arrives at the bus stand at a stranded place she was bewildered by the silence of the night and the darkness that surrounds the area.

While she is waiting for the bus four or five rowdies are coming towards her. On seeing them the girls starts praying. If some powerful force does not come for help, she will definitely be disturbed to unimaginable heights.

At that exact moment a bus comes and stops at the bus stand. The conductor says that there is only one seat and the bus go to the exact place where the girl wants to go.

The prayer is answered says her parents on hearing her story. She also feels the same way. God has granted her prayer.

But the septics will say that there is no effect because of the prayer and the incident may be called as a mere coincidence.

But Scientists now are coming to the conclusion that the effect of prayer can be seen by many authentic researches.

Leonard Leibocici has published an intriguing study in 2001. It addressed the hypothesis that retroactive prayer for a group of septic patients could affect clinical outcomes, when the prayer was offered four to ten years after the development of the clinical problems.

It was found that the patients were cured unbelievably. The prayer can bend the time and may bring positive results.

In all the religions the importance of prayer is being emaphasised. In Mahabharata, the great Indian Epic, Kunti devi wants many troubles on her way so that she could always remember and Pray to Lord Krishna.

Krishna declares, “ I am the Time”.

When Richard Feynman, the famous Nobel physicist was asked, “What is time?” he replied, “What is time? We physicists work with it every day, but don’t ask me what it is. It is just too difficult to think about.”
True, Nobody could define time.

The famous physicist Paul Davies once said, “ Notions such as ‘the past’, ‘the present’ and ‘the future’ seem to be more linguistic than physical”.

The general idea is that the past influences the present. But modern physics has shown that the time is linked with space. So if by due prayer it may be possible to bend the time. The past may be altered, modified, changed to suit the present situation for one who prays!

The Hindu Puranas reveals the mystery of time through various stories. And we come to know very many instances from the history. The great saint Thirugnana Sambandar has brought back Poombavai from her bones. Another great saint Sundarar brought back a boy who was taken away by a crocodile a few years back.

Arthur Eddington correctly said, “ Something unknown is doing what we don’t know what”.

If we say, God is a mystery, in the same way we may add the power of prayer is also a mystery. Let us always pray and get the benefits.

http://ezinearticles.com/?Can-Prayer-Bend-the-Time?&id=10550022

Key words
Prayer is powerful, it may bend time, it influences space and time

TAGS- Prayer, Time

Q&A ON ‘TAMILS 2500 YEARS AGO’; CRYSTAL CLEAR LITERARY EVIDENCE (Post No.10,548)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,548

Date uploaded in London – –    10 JANUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ANSWER IS GIVEN IN ENGLISH AND TAMIL

ஐயா வணக்கம் , 

உங்கள் பதிவில் “காத்யாயனர்” குறித்து பார்த்தேன் .. வியப்பு !! 

அவர் சேர சோழ பாண்டிய என்று குறிப்பிட்டிருக்கிறார் என்பது விக்கிபீடியா வில் பார்த்தேன் . அது உண்மை தானா ? அதற்கான சான்றுகள் உள்ளனவா ? 

உங்களிடம் இருந்தால் பகிர்ந்து உதவவும் ‌..

அவர் “திராவிட” குறித்து ஏதாவது பேசி இருக்கிறாரா ? என்பதையும் பதிவு செய்யுங்கள் ..

நன்றி ஐயா 🙏 10-1-2022

ஐயா,

காத்யாயனர் குறித்த தகவல்களும் அவர் எங்கே சோட பாண்டிய என குறிப்பிட்டிருக்கிறார் என்பதை பற்றி எல்லாம் எங்கே தேடலாம் …

XXXX

LONDON SWAMINATHAN REPLY

Santhanam Swaminathan <swami_48@yahoo.com>

To:tamil man

Mon, Jan 10 at 5:28 AM

YES. THAT IS CORRECT.

THAT IS THE EARLIEST LITERARY EVIDENCE.

OTHERS MENTION ONLY PEARL/ MUTHU.

PANDYA PEARLS ARE MENTIONED IN ARTHASHASTRA OF KAUTILYA/CHANAKYA

BOTH KATYAYANA VARARUCHI AND KAUTILYA CHANAKYA  BELONG TO 4TH OR 5TH CENTURY BCE. APPROXIMATELY 2500 YEARS AGO.

PEARLS ARE IN RIG VEDA, OLDEST BOOK IN THE WORLD. BUT NO MENTION OF TAMIL NADU OR TAMIL KINGS.

KATYAYANA VARARUCHI IS FROM SOUTH INDIA. HE UPDATED PANINI’S GRAMMAR LIKE BHAVANANTHI UPDATED TAMIL GRAMMAR OF TOLKAPPIAR.

HE MENTIONED ‘CODA’ AND PANDYA DYNASTIES. PATANJALI WHO LIVED 2200 YEARS AGO CONFIRMED IT.

AFTER THAT LITERARY EIDENCE, WE GOT INSCRIPTIONAL EVIDENCE FROM ASOKA’S INSCRIPTIONS.

KHARAVELA OF ORISSA ADDED A DETAIL ABOUT PANDYA’S PEALRS AND GEMS RECEIVED BY HIM.

CHOZA IS TAMIL SPELLING FOR CODA IN ASOKA AND KATYAYANA. EVEN LATER INSCRIPTIONS IN SOUTH INDIA MENTIONED ONLY ‘CODA’.

CHOZA MANDALA COAST WAS CHANGED TO COROMONDAL COAST.

LINGUISTIC RULES ALLOW CHANGES BETWENN

R=L=D.

TAMIL KANDAPURANA’S FIRST VERSE ALSO SHOWS THIS CHANGE

THIKADA CHAKRA = THIKAZ+ THA CHAKRA = THIKADA CHAKRA.

Chozas were not Original Tamils. Like Pallavas they are converted Tamils or Tamilzed North Indians. They themselves said it in Sangam Tamil literature; they claim that their ancestor was Sibi. Rig Veda mentioned a clan in north west India with that name. Puranas also confirmed it; later Tamil inscriptions showed Chozas belong to Surya Kula/ Solar Dynasty like Lord Rama.

Swami
020 8904 2879
07951 370 697

Blog: swamiindology.blogspot.com

10-1-2022

XXXX

சோழ , பாண்டியர்  பற்றி

காத்யாயன வார்த்திகாவில் தமிழ் மன்னர்கள்  பற்றிய தெளி வான குறிப்பு உள்ளது. சோழர்கள் ORIGINAL தமிழர்கள் அல்ல. CONVERTED தமிழர்கள் .புறநானூற்றிலும் சிலப்பதிகாரத்திலும் தாங்கள் சிபிச் சக்ரவர்த்தியின் மரபில் வந்தவர்கள் என்று பெருமை பேசுகிறார்கள் ; பிற்காலக் கல்வெட்டுகளும் அவரை ராமன் முதலியோர் தோன்றிய சூரிய குல மன்னர்களாகவே போற்றுகின்றன.

காத்தியாயனர் வரருசி என்பவர் தென் இந்தியர். அவர் சம்ஸ்க்ருத இலக்கண மன்னன். பாணிணிக்கு 300 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்தவர். இதை கோல்ட்ஸ்டக்கர்  GOLDSTUCKER நிரூபித்துள்ளார்.

காத்தியாயனர் தென்னாட்டவர் என்பதால் தெற்கத்திய எடுத்துக் காட்டுகளையும் காட்டுகிறார். பாணினி எழுதிய 4-1-171 மற்றும் 4-1-174 சூத்திரங்களுக்கு புதிய குறிப்புகள் எழுதுகையில் சோட, பாண்டிய மன்னர்களை சேர்த்துள்ளார் ; அவருக்கு 300 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த பதஞ்சலியும் இதை மேலும் விளக்குகிறார்.

அசோகர் கல்வெட்டிலும், வார்த்திகத்திலும் CODA சோட என்றே உளது. பிற்கால கல்வெட்டுகளிலும் அவர்களை சோட CODA என்றே குறிப்பிடுகின்றன. ட என்பது தமிழில் ழ ஆக மாறுகிறது.

சில அரைவேக்காடுகள், திராவிடர் கலப்பால் ஆரியர்கள் ‘ழ’ – வைக் கற்றுக்கொண்டனர் என்று உளறிக்கொட்டினார்கள். அப்படியானால் அசோகர் கல்வெட்டு மற்றும் அதற்குப் பின்னர் வந்த கல்வெட்டுகளில் ஏன் சோழருக்குப் பதிலாக ‘சோட’ வந்தது என்ற கேள்வி எழும். அவர்கள் வடக்கத்தியர் என்பதால் பிற்கால கல்வெட்டுகளின் ஸம்ஸ்க்ருதப் பகுதியில் அப்படியே எழுதினர் என்று கொள்ளலாம்.

ழ் +த = ட ஆக மாறுவதை திகடச் சக்கர (கந்த புராணம்)விளக்கத்தில் 2014ம்  ஆண்டே எழுதியுள்ளேன்.

இணைப்புகளில் அசோகர் கல்வெட்டு, காரவேலன் கல்வெட்டுகளில் தமிழ் மன்னர்கள் பற்றிய குறிப்புகள் வருவதைக் காண்க

முக்கியக் குறிப்பு
அசோகர், காரவேலன் ஆகிய இரண்டு மன்னர்களும் பயன்படுத்திய எழுத்து – பிராமி; மொழி- பிராக்ருதம் ; டி .சி. சர்க்கார் என்பவர் அவற்றை தேவ நாகரி லிபியில் தந்துள்ளார் .
அசோக மாமன்னன் சோட, பாண்டிய, கேரலபுத்த, சத்யபுத அகியோரைக் குறிப்பிடுகிறான் (சோழ ,பாண்டிய, சேர, அதியமான் ஆகியோர் பற்றிய குறிப்பு அது. சத்தியவான் என்பது தமிழில் அதியமான் என்று மாறும்,)

look at point 9

look at point A in english.

xxxx

Kharavela mentioned Pearls and gem stones.

xxxxxx

சோழர்கள் தமிழர்களா? | Tamil and Vedas

https://tamilandvedas.com › சோ…

15 Jul 2013 — போதாயனர், காத்யாயனர், வால்மீகி, வியாசர், … ஆண்ட சேர, சோழபாண்டியர்கள் ஆகிய …

October | 2014 | Tamil and Vedas | Page 2

https://tamilandvedas.com › 2014/10

29 Oct 2014 — திகடச் சக்கரம் = திகழ் + தச + சக்கரம். விதி 7 (Y — J). ய = ச/ஜ பங்கஜம் = பங்கயம்

tags- Tamils in Asokainscription, Kharavela

பூமிக்குள் நெருப்பு – வேதம் சொல்லும் அதிசய விஞ்ஞானம் (Post No.10,547)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,547

Date uploaded in London – –    10 JANUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பூமி சூக்த ஆராய்ச்சிக் கட்டுரை – PART 8

அதர்வண வேதம் (அ .வே.) சொல்லும் அற்புத அறிவியல் செய்திகளைத் தொடர்ந்து காண்போம் .

சென்ற கட்டுரையில் ‘முனிவர்களா விஞ்ஞானிகளா ?’ என்ற தலைப்பில் பூமியின் வேகம் பற்றி கண்டோம். இன்று பிரபஞ்சம் முழுதும் உள்ள தீ (fire) பற்றி முனிவர்களுக்கு எப்படித் தெரிந்தது என்பதை ஆராய்வோம்.

பூமிக்கு நடுவில் சுமார் 4000 டிகிரி செல்ஸியஸ் வெப்பத்தில் இரும்பும் நிக்கலும் கொதித்துக் கொண்டு இருக்கிறது.

சுனாமி TSUNAMI என்னும் ராட்சதப் பேரலைகள் தீயை உண்டாக்குகிறது. அதாவது கடல் நீரில் தீ மிதந்து வருகிறது.

ஹவாய் (SUBMARINE VOLCANOES IN HAWAI island) முதலிய இடங்களில் கடலுக்கு அடியில் எரிமலைகள் தீயைக் கக்கிய வண்ணம் உள்ளன.

கடலில் தோன்றும் வட முகாக்கினி (Horse shaped Vadamukhagni) , ஆந்திரப் புயலின்போது பிரம்மாண்டமான கடல் அலையில் தோன்றிய தீ (Fire  on top of Giant Waves in 1977 storm), மற்றும் கடலுக்கு அடியில் உள்ள சக்ரவாள மலைகள்  (submarine mountains around the world called Chakravala in Sanskrit) பற்றிப் பல ஆண்டுகளுக்கு முன்னரே இங்கே கட்டுரைகளை எழுதியுள்ளேன். புராணம் சொல்லும் விஷயங்களை எப்படித் தமிழர்களும் பாடல்களில் யாத்தனர் என்பதையும் இயம்பினேன்.

தீ கக்கும் எரிமலையே இல்லாத இந்தியாவில் வாழ்ந்த அ .வே. புலவன் பாடிய 19, 20 (HYMN TO EARTH- BHUMI SUKTAM) மந்திரங்களை முதலில் படியுங்கள்.

மந்திரம் 19 (AV Book 12; Bhumi Suktam; Hymn to Earth)

அக்னிர் பூம்யா மோஷதீஷ்வக்னிமாபோ பிப்ரத்யக்னி ரஸ்மஸு

அக்னிரந்த புருஷேஷு  கோ ஷ்வஸ்வே ஷ்வக்னயஹ —19

பொருள்

பூமிக்குள்தீ இருக்கிறது

தாவரங்களிலும் உளது ,

நீரும் அதை ஏந்திச் செல்கிறது;

கல்லில் தீ உளது .

மனிதர்களின் உடலின் உள்ளே அக்னி உண்டு.

மாடுகளில் தீ, குதிரைகளிலும் தீ இருக்கிறது – 19

XXXXXX

மந்திரம் 20

அக்னிர் திவ ஆ தபத்யக்னேர் தேவஸ் யோர்வ  அந்தரிக்ஷம்

அக்னிம் மதார்ஸ இந்ததே ஹவ்யவாஹம் தூதப்ரியம்  -20

பொருள்

அதே தீதான்  வானத்தில் எரிகிறது

இடைவெளியும் இந்த தெய்வீக அக்னியுடையதே .

மனிதர்கள் அவி கொடுப்பதற்காக தீ வளர்க்கிறார்கள்

உருகிய நெய் விரும்பும் அவி சுமக்கும் தூதன் அவன் (20)

XXX

எனது வியாக்கியானம் – கருத்துரை

வேதங்களை சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் மொழிபெயர்த்த வெள்ளைக்காரர்களில் பெரும்பாலோர் கிறிஸ்தவ வெறியர்கள். அவர்கள் உலகம் என்பதும் மனித இனம் என்பதும் கி.மு.4100ல் தோன்றியதாக நம்பினார்கள். இந்து மதத்தைக் குறை கூறி மொழி பெயர்த்த அவர்கள் வேறு எந்த மதத்துக்கும் எதிராக ஒரு சொல் கூட எழுதவில்லை.அக்காலத்தில் இப்போதுள்ள அளவுக்கு அறிவியல் முன்னேற்றமும் இல்லை . ஆகையால் இந்த மந்திரங்களுக்கு மேம்போக்கான மொழி பெயர்ப்பு செய்தனரேயன்றி இதிலுள்ள விஞ்ஞான உண்மைகள் , அவர்களுக்குப் புலப்படவுமில்லை. இந்துக்களுக்கோ கடலுக்கடியில் தீ, கடலுக்குள் மலைகள், வானத்தில் தீ, உடலுக்குள் ஜடராக்கினி , பிரம்மாவின் ஒரு நாளே கோடிக்கணக்கான ஆண்டுகள் என்பதெல்லாம் அத்துபடி . சின்னக் குழந்தைக்கும் தெரிந்த உண்மை.

பூமிக்குள் நெருப்பு இருக்கிறது என்பது மிகவும் ஆழமான விஷயம். 4000 மைல் தோண்டினால்தான் பூமியின் மையத்தை அடையலாம். ஆனால் பூமியை 100 மைல் கூட தோண்ட முடியாது. அவ்வளவு வெப்பம்; கருவிகளை உருக்கிவிடும். மையத்திலோ 3700 டிகிரி வெப்பத்தில் நிக்கல், இரும்பு (Nickel and Iron in solid state due to pressure) ஆகிய உலோகங்கள் இருக்கின்றன. அதிக அழுத்தம் காரணமாக் கொதிக்காமல் கெட்டியாக நிற்கின்றன. 

நமது உடலில் உள்ள வெப்பம் 37 டிகிரி. நாம் சவம் ஆகிவிட்டால் உடல் ஐஸ்கட்டி போல இருக்கும். குதிரை, மாடு போன்றவற்றுக்கும் இந்த வெப்பம் தேவை.தாவரங்களில் சூரிய ஒளி மூலமே ஒளிச் சேர்க்கை ஏற்படுகிறது இதெல்லாம் இன்று நாம் அறிந்த விஞ்ஞானம்.

ஆதி மனிதன் கல்லையும் மரக்கட்டைகளையும் உரசி தீ எழுப்பினான். இந்த சாதாரண விஷயத்தை மறந்து , ஆழமாகச் சென்றால், ‘நீரில் தீ’ என்பதற்கெல்லாம் விளக்கம் கிடைக்கும்

சுனாமி என்னும் ராட்சதப் பேரலைகளில் தீ வருகிறது. அவை மின்சாரத்தையும் உண்டாக்குகிறது என்பதெல்லாம் 1977ம் ஆண்டு ஏற்பட்ட புயல் தாக்குதலுக்குப் பிறகு விரிவாக பத்திரிகைகளில் விவாதிக்கப்பட்டது. சுனாமி என்னும் ராட்சதப் பேரலைகள் தீயை உண்டாக்கக் காரணம் கடலுக்கு அடியில் செல்லும் பெட் ரொலியக் குழாய்களின் வெடிப்பினால் ஏற்பட்டிருக்கலாம் என்று சொல்லப்பட்டது. ஆயினும் இப்படிக் குழாய்களே இல்லாத இடத்திலும் அக்கினியைக் கண்டுள்ளனர். கடலுக்கு அடியில் தேங்கிக் கிடக்கும் மீத்தேன் (methane ) என்னும் வாயுவை கொண்டுவருதலால் , அது தீப்பிடித்து எரிந்திருக்கலாம் என்ற விளக்கமும்  அளிக்கப்படுகிறது . அறிவியல்  தெரியாத வேத மொழி பெயர்ப்பாளர் இதை ‘மின்னல் ஒளி’ என்று எழுதிவைத்தனர். உண்மையில் வேதங்கள் சொல்லுவது விஞ்ஞான விஷயமே.

நீரானது பிரம்மாண்டமான மின்சார சக்தியில் ஹைட்ரஜனாகவும் ஆக்சிஜனாகவும் கூடப் பிரிந்து ஆக்சிஜன் எரிந்திருக்கலாம் . எதிர்கால ஆராய்ச்சி இதை முடிவு செய்யும்.

உயிருள்ள மனிதர்கள், பிராணிகள் எல்லாம் வெப்ப ரத்தப் பிராணிகள் . நம் உடலுக்குள் நடக்கும் ரசாயனக் கிரியைகளால் உடலில் எப்போதும் வெப்பம் உண்டு.

XXXX

இருபதாவது  மந்திரம், யாக, யக்ஞங்கள் பற்றிப் பேசுகிறது . யாகத்தினால்தான் மழை உண்டாகிறது. அதனால் விளைச்சல் மூலம் உணவு உண்டாகிறது. அதுவே மனிதர்கள், பிராணிகளுக்கு எல்லாம் உயிர் கொடுத்து, இனம்பெருக்கிவிட்டு, மறைந்து, மண்ணாகி விடுகின்றது. இந்த இயற்கைச்  சுழற்சியை பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையில் அழகாக வருணிக்கிறார். இயற்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்த விவசாயிகளான  வேத கால இந்துக்கள் அவைகளை அனுதினமும் இறைவனின் வெளிப்பாடாகவே போற்றி வணங்கினர் ; இதோ பகவத் கீதை ஸ்லோகம் :-

பகவத் கீதை 3-14

அன்னாத் பவந்தி பூதானி பர்ஜந்யாத்தன்ன ஸ ம்பவஹ

யக்ஞாத்  பவதி பர்ஜன்யோ யக்ஞ கர்ம ஸமுத் பவஹ – 3-14

பிராணிகள் அன்னத்தில்/ உணவு  இருந்து உண்டாகின்றன ;

உணவு  மழையில் இருந்து உண்டாகின்றது.;

மழை  வேள்வியில்  இருந்து உண்டாகின்றது.;

வேள்வி  உழைப்பில்/ கர்மத்தில்   இருந்து உண்டாகின்றது.;

अन्नाद्भवन्ति भूतानि पर्जन्यादन्नसम्भव: |
यज्ञाद्भवति पर्जन्यो यज्ञ: कर्मसमुद्भव: || 14||

annād bhavanti bhūtāni parjanyād anna-sambhavaḥ
yajñād bhavati parjanyo yajñaḥ karma-samudbhavaḥ

annāt—from food; bhavanti—subsist; bhūtāni—living beings; parjanyāt—from rains; anna—of food grains; sambhavaḥ—production; yajñāt—from the performance of sacrifice; bhavati—becomes possible; parjanyaḥ—rain; yajñaḥ—performance of sacrifice; karma—prescribed duties; samudbhavaḥ—born of

ஊழித் தீ | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ஊ…

20 Sept 2012 — கடலில் தோன்றும் மர்மத் தீ-1 … சுனாமி போல ராட்சத அலைகள் புகுந்ததில் ஆந்திரக் …

TO BE CONTINUED…………………………………..

tags- பூமி, நெருப்பு, தீ, அக்கினி , நீரில் , சுனாமி

மஹரிஷிகள் யாஜர், உபயாஜர் -2 (Post No.10,546)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,546
Date uploaded in London – – 10 JANUARY 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

மஹரிஷிகள் யாஜர், உபயாஜர் – திருஷ்டத்தும்னன், திரௌபதி பிறப்பு! – 2

ச.நாகராஜன்

யாகம் செய்ய ஒப்புக் கொண்ட யாஜர் யாகத்திற்குத் தேவையான மந்திரங்கள், விதிமுறைகளை முதலில் ஞாபகப்படுத்திக் கொண்டார். யாகத்திற்குத் தேவையான அனைத்துப் பொருள்களையும் கொண்டு வருமாறு துருபதனிடம் தெரிவித்தார்.

யாகம் சற்று சிரமமான ஒன்று என்பதை அறிந்து கொண்ட யாஜர் இதற்கு உதவி தேவைப்படும் என்பதை உணர்ந்து உபயாஜரைத் தனக்கு உதவி செய்யுமாறு அழைத்தார். அவரும் ஒப்புக் கொண்டார்.
யாகத்தை மந்திரபூர்வமாகச் செய்ய ஆரம்பித்த யாஜர் துருபதனின் பத்னியை அழைத்தார்.

“ஓ! ராஹ மஹிஷியே! இங்கு வா! உனக்காக ஒரு புத்திரனும் புத்திரியும் இதோ இங்கே வந்திருக்கிறார்கள்” என்றார்.

உடனே துருபதனின் பத்னி “மஹரிஷியே! நான் என் வாயில் மஞ்சள் உள்ளிட்ட வாசனைத் திரவியங்களைக் கொண்டுள்ளேன். எனது உடலிலும் வாசனை திரவியங்கள் பல உள்ளன. ஆகவே குழந்தைகளை உற்பத்தி செய்யக் கூடிய பரிசுத்தமான நெய்யை இப்போது வாங்கிக் கொள்ளும் நிலையில் நான் இல்லை. எனக்காகச் சற்றுக் காத்திருங்க்ள்” என்றார்.

உடனே யாஜர், “நீ வந்தாலும் வராவிட்டாலும் என்னால் அக்னியில் ஆஹுதி செய்ய வேண்டிய வஸ்து முன்னாலேயே உபயாஜரால் மந்திரங்கள் உச்சரிக்கப்பட்டு பரிசுத்தமாக இருக்கும் இந்த வேளையில் எதை உத்தேசித்து இந்த் யாகம் ஆரம்பிக்கப்பட்டதோ அது நிறைவேறும் தருணத்தில் தயாராக உள்ளது. அதை ஏன் இப்போதே நிறைவேற்றக் கூடாது?” என்று துருபதனின் பத்னியிடம் கூறினார்.

பரிசுத்தமான நெய்யை அவர் அக்னியில் ஆஹுதி செய்த போது தேவனைப் போல மிகவும் பிரகாசமான ஒரு புத்திரன் அக்னி ஜ்வாலையிலிருந்து எழுந்தான். பிரகாசம் பொருந்திய அவன் பார்ப்பதற்கு பயங்கரமாக இருந்தான். அவன் தலையில் கிரீடம் இருந்தது. கவசத்தால் அவன் மூடப்பட்டிருந்தான். அவன் கையில் கத்தி, வில், அம்பு இருந்தன. அழகுடன் திகழ்ந்த அவன் வீராவேசத்துடன் கர்ஜித்தான். கொஞ்ச நேரத்தில் அவன் ஒரு தேரில் ஏறிக் கொண்டு அங்கும் இங்கும் அலைந்தான்.

பாஞ்சாலர்கள் உற்சாக கோஷம் எழுப்பினர். ஆஹா, ஆஹா என்று உரக்கக் கூவினர். அவர்களை பூமியே தாங்காதோ என்று எண்ணுமளவு சந்தோஷ ஆரவாரம் இருந்தது.

அந்தத் தருணத்தில் ஒரு அசரீரி வாக்கு ஒலித்தது.
“இதோ, இந்த ராஜகுமாரன், துரோணரை அழிப்பதற்கென்றே பிறந்திருக்கிறான். பாஞ்சாலர்களுக்கு நேரும் பயத்தையெல்லாம் இவன் போக்குவான். அவர்களுக்கு கீர்த்தி ஏற்படுத்துவான். அரசனின் துக்கத்தையும் போக்குவான்”
இப்படி எழுந்த அசரீரி ஒலியால் அனைவரும் மகிழ்ந்தனர்.

அதற்குப் பின்னர் அக்னி குண்டத்திலிருந்து பாஞ்சாலி என்ற பெயருடைய ஒரு புத்திரி தோன்றினாள். சகல வித சுப லட்சணங்களைக் கொண்டிருந்த அவள் அழகியாகத் திகழ்ந்தாள். அவளது கண்கள் கறுப்பாகவும் தாமரை மலரை ஒத்து விசாலமாகவும் இருந்தன. அவள் நிறம் கறுப்பு. அவளது கூந்தல் நீல நிறமாகவும் நீளமாகவும் சுருட்டையாகவும் இருந்தன. அவளது நகங்கள் நடுவில் அழகாக உயர்ந்து நெருப்பால் சுத்திகரிக்கப்பட்ட தாமரத்தைப் போல பிரகாசமாக விளங்கின. அழகான புருவங்களையும் ஆழ்ந்த மார்பகங்களையும் அவள் கொண்டிருந்தாள். அவள் ஒரு தேவ கன்னிகை. மனிதர்கள் இடையே தோன்றியது போலத் தோன்றினாள். நீலோத்பல புஷ்பத்திலிருந்து வீசும் நறுமணம் போல அவ்ள் உடலிலிருந்து இரண்டு மைல் தூரத்திற்குப் பரவி வீசக்கூடிய நறுமணம் வீசியது. சௌந்தர்ய தேவதையாக விளங்கிய அவளுக்கு நிகராக யாரும் இல்லை என்று சொல்லும் விதத்தில் அவள் ஜொலித்தாள்.
தேவ கன்னிகை போல இருந்ததால் தேவன், தானவன், யக்ஷன் உள்ளிட்ட யாராக இருந்தாலும் சரி அவளை மணம் புரிய விரும்பும் அளவு அழகும் கம்பீரமும் அவளிடம் காணப்பட்டன.

அப்போது ஒரு அசரீரி வாக்கு ஒலித்தது.

“ கரிய நிறமுள்ள இவள் பல க்ஷத்திரியர்கள் இறப்பதற்குக் காரணமாக இருப்பாள். இந்தச் சிற்றிடையாள் தேவர்களின் எண்ணத்தை நிறைவேற்றுவாள். இவளால் கௌரவர்களுக்கு ஆபத்து நேரும்.”

இந்த வாக்கைக் கேட்டு பாஞ்சாலர்கள் ‘ஆ ஆ’ வென்று ஆர்ப்பரித்தார்கள்.

அப்போது துருபதனின் மனைவி யாஜரை அணுகி, “ இக்குழந்தைகள் என்னையே தாய் என்று அறிய வேண்டும்” என்று வேண்டினாள்.

யாஜர், “அப்படியே ஆகுக” என்றார்.

உடனே அங்கு வந்திருந்த பிராமணர்கள் அனைவரும் தமக்குத் திருப்தியாகும் படி தானங்க்ளைப் பெற்றனர்.

குழந்தைகளுக்கு நாமகரணம் செய்யும் வேளை வந்தது. “இந்தக் குமாரன் மிகவும் துடுக்குள்ளவனாக இருப்பதனாலும், தும்னனைப் போல ஆயுதம் மற்றும் கவசங்களுடன் பிறந்திருப்பதாலும் இவனுக்கு “திருஷ்டத்தும்னன்” என்ற பெயர் உண்டாகக் கடவது. கரிய நிறமுடன் இப்பெண் இருப்பதால் இவள் கிருஷ்ணை என்று அழைக்கப்படட்டும்” என்று இவ்வாறு கூறி நாமகரணம் செய்யப்பட்டது.

அடுத்து யாஜரும் உபயாஜரும் விடை பெற்றனர். துருபதன் இவ்விதமாக இரு குழந்தைகளை மஹரிஷிகள் செய்த யாகம் மூலமாக அடைந்தான்.

திருஷ்டத்தும்னன் மற்றும் திரௌபதியின் சரித்திரத்தை மஹாபாரதம் மூலமாக நாம் அறியும் போது மஹரிஷிகளின் வாக்கு எப்படி உண்மையானது என்பதைத் தெரிந்து கொள்கிறோம்.

இந்த மஹரிஷிகளின் சரிதத்தை மஹாபாரதம் ஆதி பர்வம் விளக்குகிறது.


tags–யாஜர், உபயாஜர் – திருஷ்டத்தும்னன், திரௌபதி