பகவத் கீதையில் சுவையான சொற்கள் – ‘முத்து மாலை’ (Post No.10,712)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,712

Date uploaded in London – –    4 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பகவத் கீதையில் சுவையான சொற்கள் – ‘முத்து மாலை’

பகவத் கீதையின் சொல் நயத்தை ரசித்துப் படித்தால் , கிருஷ்ண பரமாத்மா சொல்லும் கருத்துக்களை நினைவு வைத்துக் கொள்வதும் எளிதாக இருக்கும். கீதையின்(7-7) ஏழாவது அத்யாய  ஏழாவது ஸ்லோகம் சுவையான விஷயத்தை முத்து மாலை உவமையுடன் சொல்கிறது

ஸூத்ரே மணிக³ணா

मत्तः परतरं नान्यत्किञ्चिदस्ति धनञ्जय।
मयि सर्वमिदं प्रोतं सूत्रे मणिगणा इव॥७॥

மத்த: பரதரம் நாந்யத்கிஞ்சித³ஸ்தி த⁴நஞ்ஜய|
மயி ஸர்வமித³ம் ப்ரோதம் ஸூத்ரே மணிக³ணா இவ ||7-7||

த⁴நஞ்ஜய = தனஞ்ஜயா
மத்த: அந்யத் கிஞ்சித் = என்னைக் காட்டிலும் வேறு ஒன்றும்
பரதரம் ந அஸ்தி = உயர்ந்த பொருள் இல்லை
இத³ம் ஸர்வம் = இவ்வையகமெல்லாம்
ஸூத்ரே மணிக³ணா இவ = நூலில் மணிகளைப் போல்
மயி ப்ரோதம் = என் மீது கோக்கப்பட்டது

தனஞ்ஜயா, என்னைக் காட்டிலும் உயர்ந்த பொருள் வேறெதுவுமில்லை. நூலில் மணிகளைப் போல் இவ்வையகமெல்லாம் என் மீது கோக்கப்பட்டது.

ஒரு நூலில் கோர்க்கப்பட்ட முத்துக்களைப் போல (ரத்ன மணிகளைப் போல) இந்த அண்ட சராசரங்கள் அனைத்தும் என்னுள்ளே உள்ளன என்பது பொருள்.

xxxxxx

இதில் பல சுவையான விஷயங்கள் உள்ளன. இது பாஷா (Basha)  எழுதிய நாடகத்திலும் திருக்குறளிலும் உளது. காளி தாசனும் புறநானூற்றுப் புலவனும் இதை ‘தோரண மாலை’ என்னும் உவமையால் விளக்குவார்கள்.

1.முதலில் சூத்ரம்= நூல் என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். இதற்கு தமிழ், சம்ஸ்க்ருத மொழிகள் இரண்டில் மட்டும் ஒரே பொருள்; காரணம் இவை இரண்டும் ஒரே மூலத்தில் பிறந்த மொழிகள். கால்ட்வெல் கும்பல், மாக்ஸ்முல்லர் கும்பல் கதைப்பது போல ஆரிய- திராவிட மொழிக் குடும்பம் வேறு வேறு அல்ல.

சூத்ரம் = புஸ்தகம்  = நூல்

சூத்ரம் =  நூல் = துணி தைக்கும் நூல்

தொல்காப்பியத்தில்  சூத்திரம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல் உளது.

2.இரண்டாவது சுவையான விஷயம் மணி என்பதை வியாக்கியான கர்த்தர்கள் முத்து (Pearl)  என்றோ உருண்டையான மணி (gem beads) என்றோ விளக்கி அதை நூலில் கோர்த்த மாலை என்கின்றனர். 2300 ஆண்டு பழமையான புத்தமத சிற்பங்களிலும் (Barhut, Sanchi, Saranath, Amaravati) அதைக் காண்கிறோம். அதாவது பூமி முதலிய கிரகங்கள் உருண்டையானவை. (Globe) கோள வடிவில் ஆனவை. இதை குப்தர் கால வராஹ அவதார சிலைகளிலும் காண்கிறோம் . ஆக அந்த சராசரங்கள் கோள வடிவு கொண்டவை என்பதைக் கண்டுபிடித்ததும் நாம்தான்.

Xxx

குறள் 1273

திருக்குறளிலும் முத்து மாலை உவமை இருக்கிறது

“( கோத்த) மணியினுள் விளங்கும் நூலைப் போல் என் காதலியின் அழகினுள் விளங்குவதான குறிப்பு ஒன்று இருக்கின்றது.”

மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
அணியில் திகழ்வதொன்று உண்டு– குறள் 1273

பொருள்
மணியாரத்திற்குள் மறைந்திருக்கும் நூலைப்போல இந்த மடந்தையின் அழகுக்குள்ளே என்னை மயக்கும் குறிப்பு ஒன்று உளது.

Xxx

1500 ஆண்டுகளுக்கு முன்னர் வராஹமிஹிரர் என்னும் வானசாஸ்திரி, ஜோதிட நிபுணர் எழுதிய இரண்டு நூல்களில் ஒன்றான பிருஹத் சம்ஹிதையில் (13-1-6) சப்தரிஷி மண்டல நட்சத்திரக் கூட்டத்தை  முத்து மாலை என்றும் தாமரை மாலை என்றும் வருணிக்கிறார்.

அவருக்கு 700 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய பாஷாவும் (ஸ்வப்ன வாசவ தத்தம் 4-2) , அவரை ஒட்டி வந்த காளிதாஸ மஹா கவியும் இதே போல பற வைக் கூட்டத்தை தோரண மாலை, முத்து மாலை என்று வருணிக்கின்றனர். அதை சங்க காலப் புலவர்களும் அப்படியே எழுதியுள்ளனர் (பறவைகள் குடியேற்றம் பற்றிய கட்டுரையில் முன்னரே கொடுத்துள்ளேன் )

இவர்கள் எல்லோருக்கும் ஊற்றுணர்ச்சி கொடுத்தது பகவத் கீதை ஸ்லோகமே.

இமயம் முதல் குமரி வரை ஒரே சிந்தனை என்பதற்கு பாஷா 2200 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய நாடகங்களை எடுத்துக் காட்டலாம். சம்ஸ்க்ருத மொழியில் தோன்றிய முதல் நாடகங்கள் இவை. பாஷா எழுதிய ஸ்வப்ன வாசவ தத்தம் என்னும் அவருடைய நாடகம்,  காளிதாசனின் சாகுந்தலத்துக்கு இணையானது.

Xxx

My Old articles

பறவைகள் குடியேற்றம்

Bird Migration in Kalidasa and Tamil Literature

https://tamilandvedas.com › 2012/02/05 › bird-migratio…

5 Feb 2012 — Bird Migration in Kalidasa and Tamil Literature … Migration of birds is one of nature’s mysteries and wonders. Birds migrate to warmer places …


Bird Migration in Kalidasa and Tamil Literature – South Indian …

http://www.sisnambalava.org.uk › articles › others › bir…

8 Aug 2012 — Migration of birds is one of nature’s mysteries and wonders. Birds migrate to warmer places from cold countries for food and breeding.

ஒத்து | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ஒ…

·

28 Sept 2020 — tamilandvedas.com, swamiindology.blogspot.com … பகவத் கீதை யில் கண்ணனும் ‘ சூத்ர மணி கணா‘ இவ (7-7 ) …


pearl | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › pearl

·

4 Jan 2017 — … சர்வமிதம் ப்ரோதம் ஸூத்ரே மணிகணா இவ … சம்ஸ்கிருதத்தில் உள்ள சூத்ரம் என்ற …

Kalidasa’s references of swan, cranes and Himalayan geese: Mega. 11,23, 59, 70,81.

Vikra. IV 2,3,4,6,20;31,32,33,3441,54

BIRD MIGRATION :Vikra IV 14 to 17

Kumara. 1-30 (Hamsa mala)

Ragu. IV 19,VIII 59, XIII-33, XVI 33, 56, XVII-75

Malavika.II-2

Rv 1-41

–SUBHAM–

TAGS— பகவத் கீதை, சுவையான சொற்கள் ,முத்து மாலை

Leave a comment

Leave a comment