Post No. 10,770
Date uploaded in London – – 22 MARCH 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அவஸ்தன் (Avestan) மொழி என்பது ஒரு காலத்தில் ஈரான் (பாரசீக Persia) நாட்டில் பேசப்பட்டது. இப்பொழுது அழிந்துவிட்டது. பல புதிய மொழிகளாக உருவெடுத்து ஈரானிலும் ஆப்கானிஸ்தானிலும் வழங்கி வருகின்றன. அவஸ்தன் மொழியில் உள்ள ஒரே இலக்கியம் ஜராதுஷ்டிரரின் (ஜொராஸ்டர்) பார்சி மத நூலான ஜெண்ட் அவஸ்தா (Zend Avesta) ஆகும். இதில் பிற்கால துதிகளும் சேர்ந்துள்ளன . காதா (Gatha) எனப்படும் பழைய பகுதிக்கு, கி.மு 600 முதல் 1000 வரை தேதி குறிப்பிடப்படுகிறது.
தமிழ் மொழியில் காணப்படும் பல சொல் இலக்கணம் இதிலும் காணப்படுவதால், பழைய மொழிக்கொள்கைகள் தவிடுபொடி ஆகின்றன. ஸம்ஸ்க்ருதத்தையும் அவஸ்தன் மொழியையும் ஆராய்ந்த பலருக்கு தமிழ் மொழி பற்றிய ஞானமே இல்லாததால் புளுகு மூட்டைகளை அவி ழ்த்துவிட்டனர் ; கால்டுவெல் கும்பல், திராவிடர்கள் வந்தேறு குடி ; அது மத்திய தரைக் கடல் பகுதியிலிருந்து வந்தது என்றது; மாக்ஸ்முல்லர் கும்பல் ஆரியர்கள், காஸ்பியன் கடல் பகுதியிலிருந்து வந்தவர்கள் என்றது. இரண்டு கும்பல்களும் இந்தியாவையும் இந்து மதத்தையும் துண்டாட வந்ததால் பல உண்மைகளைக் காணாதது போல நடித்தன.
தமிழில் மிகப்பழைய நூல் தொல்காப்பியம் என்று பெரும்பாலோர் நம்புகின்றனர் . சங்க இலக்கியங்களில் உள்ள 18 மேல் கணக்கு நூல்களில் இகவும் பழமையானது புறநானூறு. இந்த இரண்டிலும் உள்ள ஸம்ஸ்க்ருதச் சொற்கள் ஈரான் என்னும் பாரசீக நாட்டில் தமிழுக்கும் 1000 ஆண்டுகளுக்கு முந்திய அவஸ்தன் மொழியில் எப்படி மாறியதோ அப்படியே தமிழிலும் மாறி இருக்கின்றன. இந்தத்துறையில் எவரும் இதுவரை ஆராய்சசி செய்யவில்லை. இவை அனைத்துக்கும் மூலம் அவஸ்தன் மொழிக்கும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நிலவிய ரிக் வேத சம்ஸ்க்ருதத்தில் உள்ளன.
ஒரு மிகப்பெரிய அதிசயம் என்ன வென்றால் யார் அவஸ்தன் மொழிக்கும் தமிழ் மொழிக்கும் ஒரே இலக்கணம் செய்தார் ? எப்படி அவை ஒரே இலக்கணத்தைப் பின்பற்றுகின்றன? என்பதே. ஒரு சில எடுத்துக்கட்டுகளால் இவற்றை விளக்குகிறேன்.
xxxx
சில விஷயங்களை மட்டும் இங்கே காண்போம்
சங்க காலத்தில் ‘வண்டி’ என்று சொன்னால் யாருக்கும் தெரியாது. ‘பண்டி’ , ‘பாண்டில்’ என்று சொன்னால்தான் தெரியும். ‘பாண்டில்’ என்பது பண் டம் ஏற்றிவரும் வாஹனம். பண்டம் என்பதும் சம்ஸ்க்ருதம். சீவக சிந்தாமணியில் ‘பண்டி’ என்ற சொல்லைக் காண்கிறோம் இப்போது ப= வ ஆக மாறிவிட்டது.
இதே போல ரிக் வேதம், காளிதாசன் நூல்களில் உபமா என்ற சொல்லைக் காண்கிறோம். இதை தொல்காப்பியரும் புறநானூற்றுப் புலவர்களும் உ/வ/மை ஆக்கிவிட்டனர். அதாவது ‘ப= வ’ ஆகிவிட்டது.
இதே ‘ப= வ’ மாற்றம் அவஸ்தன் மொழியிலும் உள்ளது. ரிக் வேதம் ‘அஸ்/வ’ என்று குதிரைக்குச் சொன்னால் அவர்கள் ‘அஸ்/ப’ என்றனர். அதாவது ‘வ= ப’ ஆகிவிட்டது.
ப=வ ஆனாலும் வ= ப ஆனாலும் சரி; யார் இவர்களுக்கு இப்படி ஒரே இலக்கணத்தைச் சொல்லிக்கொடுத்தனர் ; தமிழை விட 1000 ஆண்டு பழமையானது அவஸ்தன். தமிழை விட 2000, 3000 ஆண்டு பழமை உடையது ஸம்ஸ்க்ருதம் . ஆனால் ஈரான் வரை கன்யாகுமரி வரை ஒரே மாற்றம்!! இன்றும் பங்களா தேஷ் என்பதை வங்க தேசம் என்கிறோம்.
இந்த மாற்றத்துக்கு காரணம் நாம் அறியாத ஒரு இலக்கணம் (அகத்தியம், ஐந்திரம்) இருந்ததைக் காட்டுகிறது .
இது ஒன்றை வைத்து மட்டும் நான் சொல்லவில்லை. பரி / குதிரை வரை பல பாரசீக சொற்கள் சங்கத் தமிழ் நூல்களிலேயே உள்ளன.
xxxx
வஜ்ராயுதம் என்பது இந்திரனின் ஆயுதம் என்பதை எல்லோரும் அறிவோம்.
உலகில்’ ஜ’ J என்னும் எழுத்து சம்ஸ்க்ருதம் தவிர வேறு எந்த மொழியிலும் கிடையாது ; அவஸ்தன் மொழியிலும் கிடையாது. ஆக இந்த ஜ J – எழுத்து செல்லும் பாதையை ஆராய்ந்தால் இந்துக்கள் உலகம் முழுதும் குடியேறிய காலமும் பாதையும் தெரிந்து விடும். இன்று ஜ வர்க்க எழுத்துக்கள் காணப்படும் எல்லா சொற்களையும் அவர்கள் ‘ய’ என்றே உச்சரிக்கின்றனர்
ஜோசப் = யூசூப் ; ஜு= யூத, ஜீசஸ் = ஏசு
வஜ்ர என்ற எழுத்தை பழைய அவஸ்தன் பாரசீக மொழிகளில் ‘வஸ் ஸ ர’ (Wassara) என்றே உச்சரிப்பர்; ஜ -வர்க இல்லாத குறை ; தமிழிலும் அவஸ்தன் போல ‘ ஜ ‘ கிடையாது. ஆகையால் புறநானூற்றுப் புலவர் வச் சிர தடக்கையோன் என்றே பாடுகிறார் ; அவஸ்தன், சங்கத் தமிழ் இரண்டிலும் ஒரே அணுகுமுறை.
ஆர்ய என்பது ப்ராக்ருதத்தில் அஜ்ஜ ஆனது; தமிழில் அது ‘ஐயர்’ ஆனது
ர்ய =ஜ்ஜ= ய்ய (ஜ=ய )
யார் இப்படி தமிழுக்கும் அவஸ்தனுக்கும் ப்ராக்ருதத்துக்கும் இலக்கணம் செய்தனர்?
எனது பதில் – ஸம்ஸ்க்ருதம் மூல மொழி; அது பேச்சு வழக்கில் எப்படி ப்ராக்ருதத்தில் மாறுகிறதோ அப்படியே அவஸ்தனிலும் மாறுகிறது . இவை எல்லாம் காலத்தால் பிந்தியவை.
xxx
அஹம் (நான்) என்ற சொல் அஸம் (Aham- Azam) என்று அவஸ்தனில் மாறுகிறது . இது அஹம் /நான் என்ற சொல்லிலும் பிரதிபலிக்கிறது
அஹம் என்பது நம்மைப் பற்றியது Personal; குடும்ப விஷயம் ; தமிழில் அக த் துறைப் பாடல்களே அதிகம். புறம் என்பது வெளி உலக (external) விஷயம்.
xxxx
தழிழ் மொழியில் ர அல்லது ல எழுத்துக்களில் சொற்கள் துவங்காது. உடனே ஒரு உயிர் எழுத்தைச் சேர்த்து ,
அ +ரங்கம், உ+லோகம் , இ + லண்டன், இ+ ராமாயணம் என்கிறோம். இதே போல அவஸ்தன் மொழியிலும் அ – என்ற எழுத்தைச் சேர்க்கின்றனர்.
xxxxx
ஆயிரம் இல்லை!!
அவஸ்தன் மொழியில் சம்ஸ்க்ருத எண்களை அப்படியே காணலாம். ஆயிரம் என்பது இல்லை; பத்து நூறு என்று சொல்லுவார்கள். தமிழில் ஆயிரம் என்பது, சஹஸ்ரம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லின் திரிபு என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவஸ்தன் மொழி போல ‘பத்து நூறு’ உண்டு
xxxx
வாய்மை , மெய்மை, உண்மை
உள்ளத்தால் பொய்யாது ஒழுகுவது உண்மை
சொல்லால் பொய்யாது ஒழுகுவது வாய்மை
உடலால் பொய்யாது ஒழுகுவது மெய்மை!
தமிழர்களைப் போல இவ்வளவு தெளிவாக மனம், மொழி, மெய் ஆகியவற்றின் தூய்மையை விளக்கியவர் எவருளர்?
காயேன, வாசா, மனஸேந்த்ரியைர்வா என்று சொல்வதை – த்ரிகரண சுத்தியை – மிக அழகாக விளக்கிவிட்டனர் தமிழர்கள்!
இதை பார்சி மதத்தினர், பின்வருமாறு சொன்னார்கள்
சு மத = நல்ல மனம்/புத்தி
சு உக்த = நல்ல சொல்/ சூக்தம்
சு வ்ரஷ்ட = சு வரிஷ்ட/ நல்ல செயல்
பாரசீக மொழியில் தமிழ் போலவே துவக்கத்தில் ‘ச ‘ இல்லை. அது ‘ஹ’ ஆகிவிடும். அதனால்தான் ‘சிந்து’ வெளி மக்களை ‘ஹிந்து’க்கள் என்று அழைத்தனர்.
HUMATA= SU MATHI IN SANSKRIT (H=S)
HUKHTA= SU UKTA IN SANSKRIT
HVRASHTA = SU VARISHTA IN SANSKRIT
VOHU MANO or BAHMAN = GOOD MIND
இது பகவத் கீதையின் 17 ஆவது அத்தியாயத்தில் 4 ஸ்லோகங்களில் உள்ளது (14-17)
ஆக இரண்டு ஒற்றுமைகள்- 1. தமிழ் போலவே ‘ச’ எழுத்து இல்லை. தொல்காப்பியருக்கு ‘ச’- எழுத்தைக் கண்டால் பிடிக்காது. அதனால் தடை போட்டார். அதையும் மீறி தமிழர்கள் தமிழ் “சங்கம்” வைத்தனர். இது பாணினி 2700 ஆண்டுகளுக்கு முன்னர் பயன்படுத்திய சொல். அதை தமிழர்கள் ‘காப்பி’ அடித்தனர். புத்தர்களும் ஜைனர்களும் பாணினி இறந்து 1000 ஆண்டுகளுக்குப் பின்னர் இதைப் பயன்படுத்தினர். ஆண்டாளும் (திருப்பாவை) அப்பரும் (தேவாரம் கி.பி.600) சங்கம் பற்றிப் பாடியுள்ளனர்; அப்பர், தருமி என்ற பிராமணப் புலவன் , நக்கீரனுடன் போட்ட சண்டை பற்றிப் படியிருப்பதால் சமணர்களுக்கும் முன்னதாகவே தமிழ்ச் சங்கம் இருந்தது தெரிகிறது. இது தெரியாத அரை வேக்காடுகள் வஜ்ர நந்தியின் கி.பி.470 சமண சங்கத்தை மட்டும் குறிப்பிடுவர்.
Xxx
குதிரை, பரி , புரவி என்பன தமிழ்ச் சொற்கள் இல்லை. பாரசீக, ஸம்ஸ்க்ருதச் சொற்களைத் தழுவியவை. அதை வேறு ஒரு கட்டுரையில் காண்போம்.
–subham–
Tags- தமிழ்- அவஸ்தன் , மொழி தொடர்பு ,TAMIL-AVESTAN LINK,