
மன்னர் எவ்வழி மக்கள் அவ்வழி
Date uploaded in London – – 18 JANUARY 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
Second part ;first part was posted yesterday.
மன்னர்களையே அல்லது தலைவர்களையே மக்களும் பின்பற்றுவார்கள் என்ற கருத்து மிகவும் புராதனமானது
சங்க இலக்கிய காலத்துக்கு முன்னர் வாழ்ந்த உலக மஹா கவிஞன் காளிதாசன் சொல்கிறார்,
உதயமான சூரியன் போல காண்பதனாலேயே ஜனங்களின் பாவத்தை அழித்தான் (மன்னன் அதிதி). உண்மைப்பொருளைச் சொல்லுவதால் மக்களின் அறியாமை என்னும் இருளை அகற்றினான். இதனால் மக்கள் தன்னிச்சைப்படி நடக்க வாய்ப்பு கொடுத்தான் .
துரிதம் தர்சனேன க்னஸ் தத்வார்த்தேன
ப்ரஜாஹா ஸ்வதந்த்ர யாஞ் சக்ரே சஸ்வத் ஸூர்ய இவோதிதஹ —ரகுவம்சம் 17-74,
இந்தப் பாடலில் ‘ஸ்வதந்த்ர யாஞ் சக்ரே‘ என்பதை வேறு சில உரைகாரர்கள் ஜனங்களைத் தன வசத்தில் இருப்பவர்களாகச் செய்தான்;அதாவது மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி என்பதாகும்
XXXX
ரகுவம்சம் 15-98 முதல் வரும் மூன்று ஸ்லோகங்களில் ராமர் தனது மகன்களான குச , லவர்களை ஆட்சியில் அமர்த்திவிட்டு வடக்கு நோக்கி நடந்தார். . அவரை அயோத்தி மக்களும் பின்தொடர்ந்தனர். அவர் சரயூ நதியில் மூழ்கி சுவர்க்கம் செல்வதற்கு முன்னர் எல்லோரையும் மூழ்கச் செய்து அவர்களுக்காக சாந்தாநிகம் என்ற புதிய சுவர்க்கத்தை ஏற்படுத்தினார். சரயூ நதியானது , சுவர்க்கத்தின் ஏணிப்படியாகத் திகழ்ந்தது என்று காளிதாசர் சொல்கிறார். இதேபோல கோப்பெருஞ்சோழன் வடக்கு நோக்கி தவமிருந்து உயிர்நீத்த போது அவரை முன்பின் பார்த்திராத புலவர் பிசிராந்தையாரும் வந்து அவருடன் அமர்ந்து உயிர்நீத்தார். அவரோடு மட்டுமில்லாமல் வேறு பல புலவர்களும் இறந்தனர். பொத்தியார் என்னும் புலவரை மட்டும் புதல்வர் பிறந்த பின்னர் வா என்று திருப்பி அனுப்பியதை புறநானூற்றில் காண்கிறோம். மன்னர் எவ்வழி மக்கள் அவ்வழி என்பதை இந்த நிகழ்ச்சிகள் உறுதி செய்கின்றன.
Xxxxx
திரு வள்ளுவரும் யதா ராஜா ததா ப்ரஜா –என்ற கருத்தைக் குறைந்தது இரண்டு குறள்களிலாவது கொண்டு வந்து விடுகிறார் :–
குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு- திருக்குறள் 544
பொருள்
குடியைப் பொருந்தி முறைமை செலுத்துகின்ற பெரிய நில மன்னன் அடியைப் பொருந்தி நிற்கும் உலகு.
இது முறைமை செய்யும் அரசன்கண்ணதாம் உலகு என்றது.
XX
இன்னொரு குறளில் (542)
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி.–542
பொருள்
உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நம்பி வாழ்கின்றன, அதுபோல் குடிமக்கள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர்.
XXX

திருமூலர் செப்பியது :–
உறுதுணையாவது உயிரும் உடம்பும்
உறுதுணையாவது லகுறு கேள்வி
– திருமூலர் 294 ,திருமந்திரம்
நம்முடைய உயிர் உய்வதற்கு முதலில் உதவி செய்வது நம்முடைய உடல் ஆகும். சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய முடியும். அடுத்தாற் போல நமக்கு துணையாக நிற்பது பெரியோர்கள் நமக்களித்துள்ள வழி முறைகள்; கேள்வி என்பது ச்ருதி என்பதன் தமிழாக்கம். அதாவது வேதம்.. அல்லது வேத வழிவதை நடைமுறைகள். இதை மனுவும் வேதமே தர்மத்தின் ஆணிவேர் என்று சொன்னார்.
Xxxx
மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி; மன்னன் எப்படி, மன்னுயிர் அப்படி
From my old articles
யதா ராஜா ததா பிரஜா = மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி
வால்மீகி
யதா ஹி குருதே ராஜா ப்ரஜாஸ்தமனுவர்ததே – ராமாயணம்
ராஜா எப்படிச் செய்கிறாரோ மக்களும் அப்படியே செய்வர் என்று வால்மீகி யும் கூறியுள்ளார்
XXXXX
எவ்வழி நல்லவர் ஆடவர்,
அவ்வழி நல்லை; வாழிய நிலனே! (ஔவையார், புறம் 187)
(பொருள்: மக்கள் நல்லவராக இருந்தால் நிலமும் நல்லதாக இருக்கும்!!)
XXXX
சாணக்யன்
யதா ராஜா ததா ப்ரஜா:- சாணக்ய நீதி தர்பணம்
யதா ராஜா ததா ப்ரஜாஹா (As the Ruler, So the Ruled) என்பது ஸம்ஸ்க்ருதத்தில் உள்ள இணையான பழமொழி.
சாணக்கியன் நுவல்வதும் அஃதே!
ராக்ஞி தர்மிணி தர்மிஷ்டாஹா பாபே பாபாஹா ஸமே ஸமாஹா
ராஜானம் அனுவர்தந்தே யதா ராஜா ததா ப்ரஜாஹா- 13-7
பொருள்
அரசன் நேர்மையாளனாக இருந்தால் மக்களும் அப்படியே இருப்பர்; அவன் பாபம் செய்தால், மக்களும் பாவம் செய்வர்; அவன் நடு வழியில் சென்றால் அவர்களும் நடு வழியில் செல்லுவர்; மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி.- 13-7
மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி – என்பதைப் பொது வாழ்விலும் காணலாம். ஆட்சியாளர்களே ஊழல் செய்தால் மக்களும் கெட்டுப் போவார்கள்.
Xxx

மோசிகீரனார் சொல்கிறார் மன்னர் உயிர்த்தே மலர்தலை உலகம்
நெல்லும் உயிர் அன்றே! நீரும் உயிர் அன்றே!
” நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே;
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;
அதனால் யான்உயிர் என்பது அறிகை
வேன்மிகு தானை வேந்தர்க்குக் கடனே.”–(புறநானூறு : பாடல் : 186
பாடியவர் : மோசிகீரனார்)
பொருள்
பரந்துகிடக்கும் நாட்டுக்கு அரசனே உயிர்; நெல்லோ, நீரோ அல்ல ; வேற்படையுடைய மன்னனும் இதை அறிந்து செயல்படுவது கடமை ஆகும் , மோசிகீரனார் எனும்புலவர் வெளியிட்ட கருத்து இது
மன்னன் என்பவன் மக்கலுக்குத் தலைவன் என்ற கருத்தும், அவன் குடிமக்களை தன்னுயிர் போல காக்கவேண்டும் என்றும் நாம் அறிகிறோம். மன்னன் எப்படியோ, அப்படியே மக்களின் வாழ்வும் இருக்கும் என்ற கருத்தும் தொனிக்கும்.
xxxxx
தொல்காப்பியத்தில் பகவத் கீதை உவமை! (Post No …
https://tamilandvedas.com › தொ…
4 Jan 2017 — தொல்காப்பியத்தில் பகவத் கீதை உவமை! (Post No.3513). Research Article written by London swaminathan.
—SUBHAM—
TAGS–தொல்காப்பியம், பகவத் கீதை, வரிகள், மன்னன், யதா ராஜா ததா பிரஜா , குறள் , திருமூலர், சாணக்கியன், அவ்வையார் , புறநானூறு