திருவிடை மருதூர் கோவில் தரிசனம் (Post No. Post No. 11,797)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,797

Date uploaded in London – –  12 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

திருவிடை மருதூர் , மாயவரம்- தஞ்சாவூர் மார்க்கத்தில் கும்பகோணத்திலிருந்து 7 கிலோ மீட்டர்.

திருவிடை மருதூர் ரயில் நிலையத்திலிருந்து கோவில் 2 பர்லாங் தூரத்தில் இருக்கிறது.

மூவர் பாடிய தலம்.

திருவிடை மருதூர் , திருப்புடை மருதூர், ஸ்ரீ சைலம் பற்றி காஞ்சி மகா சுவாமிகள் சொற்பொழிவுகளைப் படித்தோருக்கு மூன்று மருத மரத்தலங்களின் மஹிமை புரியும்

அர்ஜுன மரம் =மருத மரம்

xxxx

எங்களது பிப்ரவரி 2023 இந்திய விஜயத்தின்போது தரிசித்த முக்கிய சிவன் கோவில் திருவிடை மருதூர் ஆகும். ஆந்திரத்திலும்  நெல்லை வட்டாரத்திலும் உள்ள இரண்டு மருதூர்களுக்கு இடையில் இந்த ஊர் அமைந்திருப்பதால் இது இடை மருதூர் என்று அழைக்கப்படுகிறது . திரு என்ற அடைமொழியே தேவாரப்பாடல் பெற்ற தலம் என்பதைக் காட்டும். ஆகவே 1500 ஆண்டுக்கு முந்திய கோவில் இது.

திருவிடை மருதூர் தலம் மத்யார்ஜுனம் என்றும் அழைக்கப்படும். ஆந்திரத்தில் இருப்பது ஸ்ரீசைலம் இறைவன்- மல்லி கார்ஜூனர் ; திருநெல் வேலி வட்டாரத்தில் அம்பாசமுத்திரத்துக்கு அருகில் இருப்பது புடார்ஜுனம்.அர்ச்சுன / மரத்தின் பெயர் மூன்று ஊர்ப்பெயர்களிலும் இறைவன் பெயரிலும் உண்டு.அதுதான் தல விருட்சமும்.

சுவாமியின் திருநாமம் – மருதப்பர், மருதப்ப ஈஸ்வரர்

தேவியின்  திருநாமம்- பெருநல மாமுலை நாயகி

xxx

திருவிடை மருதூர், காவிரியின் தென் கரையில் அமைந்துள்ளது. தைப்பூசத்தில் இங்கே ஸ்நானம் செய்வது மிகவும் விசேஷம் . .பாசமொன்றிலராய்  என்ற திருக்குறுந்தொகையில், அப்பர் பெருமான் , பூச ஸ்நானத்தைச் சிறப்பித்துப் பாடி இருக்கிறார்.

வரகுண பாண்டியனின் பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிய தலம் இது. அவர் அநேக தொண்டுகள் செய்து முக்தி பெற்ற தலமும்  இதுதான்

உருத்திரர், உமையம்மை, பிரம்மா, விஷ்ணு, பிள்ளையார், முருகர் பூஜித்த கோவில் .

இத்தலம் மஹா லிங்கம் என்றும் சுற்றியுள்ள தலங்கள் பல சுவாமிகளின் சந்நிதிகளும் என்றும் சொல்லுவர்.

கோவிலின் கிழக்கு வாயிலில் பட்டினத்தடிகளும், மேற்கு வாயிலில் பத்ரகிரியாரும் எழுந்தருளி இருந்தனர்.

பிரகாரத்தில் கயிலாயக் காட்சிகளைக் காணலாம்.

திருவிடை மருதூர் தெருவழகு , திருவாரூர்த் தேரழகு என்பது பழமொழி. நான்கு பெரிய கோபுரங்களும், பெரிய தெருக்களும், திருக்குளமும் உடையது..

இங்கு மூகாம்பிகைக்கு தனி சந்நிதி இருக்கிறது. அவர் மவுனமாக இருந்து தவம் செய்த்ததால் இப்பெயர். பெரிய கோவில்  பிரகாரத்துக்கு அஸ்வமேத பிரகாரம் என்று பெயர்.அதை  வலம் வந்தால் அஸ்வமேத  யாகம் செய்த புண்ணியம் கிட்டும் என்றும், பேய் பிடித்தவர்கள் பைத்தியம் பிடித்தவர்கள் வலம் வந்தால் நோய்கள் நீங்கிவிடும் என்பதும் நம்பிக்கை.

கர்நாடகாத்திலுள்ள கொல்லூர் மூகாம்பிகையை நமக்கு நினைவுபடுத்தும் சந்நிதி

xxxx

149 கல்வெட்டுகள் தரும் அரிய செய்திகள்

இந்த தலம் பற்றிய கல்வெட்டுகள் 149. அவை பராந்தகன் (CE 905-947) குலோத்துங்கன், வரகுண பாண்டியன், சுந்தர பாண்டியன் முதலிய மன்னர்கள் காலத்தவை .

கோவில் கல்வெட்டுகள் , அரிய விஷயங்களை நமக்கு அளிக்கின்றன.

1.முதலாம் ராஜேந்திரன் மூன்றாம் ஆட்சி ஆண்டில் ஏக நாயகன் வாசலுக்கு விளக்குப்போட ஆடுகள் அளித்த செய்தி இருப்பதால் மகாலிங்க சுவாமிக்கு ஏக நாயகன் என்ற பெயர் இருந்ததை அறிகிறோம்.

2.இங்கு உள்ள சோமாஸ்கந்தர் ஆடல் விடங்கத் தேவர் என்று அழைக்கப்பட்டதை ஒரு கல்வெட்டு காட்டுகிறது

3.முதல் பராந்தகன் 37-ஆம் ஆட்சி ஆண்டில் திருவாதிரை, சதயம்,அமாவாசை நாட்களைக் கொண்டாட மானியம் கொடுத்து இருக்கிறான் .

4.மூலஸ்தான தெற்குப் பக்கத்திலுள்ள பூர்ண கணபதிக்கு எட்டு இலைக் காசுகள் மான்யம் கொடுத்ததால் அந்த விநாயகருக்கு பூர்ண கணபதி பெயர் இருந்ததும் தெ ரகிறது

5.தைப்பூச விழா பற்றியும் சில கல்வெட்டுகள் பேசுகின்றன.

6. மஹா லிங்க சுவாமிக்கு தினமும் செண்பகப்பூ சாத்தி வர, திருவெண்காடு பிச்சனால் நிபந்தம் அளிக்கப்பட்டது ஒரு கல்வெட்டில் காணப்படுகிறது

7.சோழன் இராஜகேசரி வர்மன் காலத்தில் (CE 985-1003), பத்தாவது ஆட்சி ஆண்டில் 278ம் நாளில் அரசி பஞ்சவன் மாதேவியரால் உமா சகிதருடைய தங்க உருவம் அமைக்கப்பட்டது .

8.திருக் காமக்கோட்ட முடைய நாச்சியாருக்கு இராஜகேசரி வர்மன்

ஒன்பதாம் ஆண்டில் நம்பிராட்டியார் பஞ்சமாதேவியால் 9 கழஞ்சு பொன் வழங்கப்பட்டது

9. பல கல்வெட்டுகள், திரு மஞ்சனம் கொண்டு வர, மண் குடங்கள் அளிக்கப்பட்டதைக் காட்டுவதால் அபிஷேகத்துக்கு மண் குடங்களில் தீர்த்தம் கொண்டு வரப்பட்டதையும் அறிகிறோம்.

10. விக்கிரம சோழனின் ஐந்தாம் ஆண்டு ஆட்சிக் கல்வெட்டு மாணிக்கக்கூத்தர் கோவிலை குறிப்பிடுகிறது. இது நடராஜர் கோவிலா என்பதை உறுதிப டக் கூற முடியவில்லை

11. ஆறலூரிலுள்ள வாணாதிராயர் , ஆளுடைய பிள்ளையார் சிலை அமைக்க பணம் கொடுத்தான்

12.ஆளுடைய பிள்ளையார், ஆளுடைய நம்பி இவர்களுடைய படிவங்களை அமைக்க , வரியில்லாத நிலத்தை, இருமரபுந் தூய  பெருமாள் , சதுர்வேதி மங்கலத்தில்  அளித்தான் .

13.விக்கிரம பாண்டியன் சாந்தி திருவிழா என்ற ஒரு விழாக் கொண் டாடப்பட்டதை , அவனது கால கல்வெட்டு அறிவிக்கிறது .

14. நாலாவது பிரகாரத்திலுள்ள மூகாம்பிகைப் பிடாரி, யோகிருந்த பரமேச்வரி என்று அழைக்கப்படுகிறார் .

15. ஏனைய கல்வெட்டுகள், அரசனும் அரசியும், கோவிலில் விளக்கீட்டுக்காக,  நிலமும், பொன்னும், ஆடும் அ ளித்தமை அறிவிப்பின.

–subham— 

TAGS– திருவிடை மருதூர், கல்வெட்டுகள், மருத மரம், அர்ஜுனன், மகாலிங்க சுவாமி,  மூகாம்பிகை

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: