கலியுகத்தில் உங்கள் உயிர் யாரிடமெல்லாம் இருக்கிறது? (Post No.11,883)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,883

Date uploaded in London –   9 APRIL 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சம்ஸ்கிருதச் செல்வம்

கலியுகத்தில் உங்கள் உயிர் யாரிடமெல்லாம் இருக்கிறது?

ச.நாகராஜன் 

எந்த காரணத்தினால் ஒருவரை கௌரவிக்க வேண்டும்?

ஒருவரை கௌரவிக்க வேண்டுமென்றால் அதற்கான தகுதி அவரிடம் இருக்க வேண்டுமல்லவா?

எந்த எந்த தகுதிகள்  பார்க்கலாமா?

1) வித்யா – கல்வியில் சிறந்து விளங்குவோரை கௌரவிக்க வேண்டும்.

2) புத்தி – புத்தியில் மேதையாக இருப்பவரை கௌரவிக்க வேண்டும்.

3) பௌருஷம் – வீரத்தில் சிறந்து விளங்குவோரை கௌரவிக்க வேண்டும்.

4) அபிஜனம் – ஒரு சிறந்த குடும்பத்தில் பிறந்தவரை மதிக்க வேண்டும்.

5) கர்மாதிசயா – பிரம்மாண்டமான பிரமாதமான செயல் புரிந்தவரை மதிக்க வேண்டும்.

இப்படி அர்த்த சாஸ்திரம் கூறுகிறது. ||| – 20-23

பூஜ்யா வித்யா புத்தி பௌருஷாபிஜன கர்மாதிஷயதஸ்ச புருஷா: |

யாரை நன்கு பார்த்துக் கொள்ள வேண்டும்?

யாரை நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும்.

ஐந்து பேர்களை! யார் அவர்கள்?

1) அதிதி – வீட்டிற்கு வந்த விருந்தாளையை நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும்.

2) பாலகா – குழந்தைகளை நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும்.

3) பத்னி – மனைவியை நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும்.

4) ஜனனி – பெற்ற தாயை நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும்.

5) ஜனகா – பெற்ற தந்தையை நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும்.

சுபாஷித ரத்னாகர பாண்டாகாரம் என்ற சுபாஷித நூலில் உள்ள ஒரு ஸ்லோகம் இந்த அறிவுரையை வழங்குகிறது.

அதிதிபாலிக: பத்னி ஜனனி ஜனகஸ்ததா |

பஞ்சைதே க்ருஹிண: போஷ்யா இதரே ச ஸ்வஷக்தித: ||

                     சுபாஷிதரத்னாகர பாண்டாகாரம்  157/206

ஒரு நல்ல எஜமானன் எப்படி இருக்க வேண்டும்?

ஒரு நல்ல எஜமானனுக்கு என்ன குணாதிசயங்கள் இருக்க வேண்டும்?

அவனுக்கு ஐந்து நல்ல அடிப்படை குணங்கள் தேவை.

அவையாவன:

1) பாத்ரே த்யாகி – தகுதியான (பாத்திரமுடையவர்களுக்கு) அவன் வழங்கவேண்டும்.

2) குணராகி – நல்ல குணங்கள் கூடியவராக இருத்தல் வேண்டும்.

3) போகி பரிஜனை: – உறவினர்களுடன் சந்தோஷமாக இருத்தல் வேண்டும்.

4) பாவ போதா – சாஸ்திரங்களில் நல்ல தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

5) ரணே யுத்தா: – போர்க்களத்தில் வீரத்துடன் போர் புரியத் தெரிந்திருக்க வேண்டும்.

இதை சுபாஷிதம் ஒன்று தெரிவிக்கிறது.

பாத்ரே த்யாகீ குணே ராகீ போகீ பரிஜனை: சஹ |

பாவபோத்தா ரணே ப்ரபுள் பஞ்சகுணோ பவேத் ||

–    சுபாஷிதரத்னாகர பாண்டாகாரம்  142/12

நல்ல அறிவைப் பெற வழிகள் யாவை?

நல்ல அறிவைப் பெற்றவர் எப்படி இருப்பார்கள்?

1) சப்த ப்ரமாணம் – சப்தத்தால் ப்ரமாணத்தைத் தருபவர்கள்.

(நல்ல பேச்சுத் திறமையால் தமது கருத்தைத் தருபவர்கள்)

2) அர்தாபட்டி – (Postulation) கொள்கை அனுமானக் கோட்பாட்டைக் கொண்டு அர்த்தத்தை நல்ல முறையில் விவரிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

3) அனுமானம் – ஊகம் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும்.

4) உபமானம் – இதை இதனுடன் ஒப்பிடலாம் என்ற உபமானக் கலையில் தேர்ந்த வல்லவராக இருத்தல் வேண்டும்.

5) ப்ரத்யக்ஷம் – (Perception) எதையும் உள்ளுணர்வால் உணரும் திறனைப் பெற்றிருக்க வேண்டும்.

இப்படி இருந்தால் அவரை உலகம் நன்கு மதிக்கும்.

இந்த ஐந்து குணங்களை ப்ரபாகர மீமாம்ஸை வலியுறுத்துகிறது.

கலியுகத்தில் உங்கள் உயிர் யாரிடமெல்லாம் இருக்கிறது?

கலியுகத்தில் உயிராக இருப்பவர்கள் ஐந்து பேர். இந்த ஐந்து பேர்களை நீங்கள் உங்கள் உயிருக்குச் சமானமாக மதிக்க வேண்டும்.

யார் அந்த ஐந்து பேர்கள்?

1) க்ருஹிணி – இல்லத்தரசியாக விளங்கும் மனைவி

2) ஸ்வசுரௌ: – மாமனார்

3) ஸ்வஸ – மாமியார்

4) பகிணி – மனைவியின் சகோதரி

5) ஷ்யால – மைத்துனர் (மச்சான்)

பிழைக்கத் தெரிந்த வழியை இந்த சுபாஷிதம் கூறி நம்மை மகிழ்விக்கிறது; கலியுகத்தில் கடைத்தேற வழியைக் காண்பிக்கிறது!!

க்ருஹிணீ பகினீ தஸ்யா: ஸ்வசுரௌ ஷ்யால இத்யபி |

ப்ராணினாம் கலிநா ஸ்ருஷ்டா: பஞ்சப்ராண பரே ||

***

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: