
Post No. 11,922
Date uploaded in London – – 21 APRIL 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx

நெல்லிக் காய், நெல்லிக் கனியின் (Phyllanthus emblica, Indian gooseberry) மருத்துவ பயன்கள் ஏராளம். அவ்வையாருக்கு அதிய மான் கொடுத்த நெல்லிக்கனி முதல் ஆல்பெருனி தனது புஸ்தகத்தில் எழுதிய அபூர்வ நெல்லிக்கனி வரை நாம் ஏற்கனவே படித்துள்ளோம் (இந்த பிளாக்கில் எனது தமிழ், ஆங்கிலக் கட்டுரைகளில் காண்க)
இந்துக்கள் மிகப் பெரிய விஞ்ஞானிகள் ; மருத்துவ குணமுள்ள எல்லா தாவரங்களையும் தல விருட்சம் என்ற பெயரிலோ அல்லது பிள்ளையாருக்கு உகந்தது , சிவனுக்குப் பிடித்தது, விஷ்ணுவின் அம்சம் இது என்ற பெயரிலோ நூற்றுக் கணக்கான செடி, கொடி , மரங்களை இந்துக்களின் வாழ்வில் பின்னிப் பிணைத்துவிட்டனர் . அதில் ஒன்று நெல்லிக்காய் மரம்.
மஹாராஷ்டிர மாநிலத்தில் கார்த்திகை மாதத்தில் சுக்லபட்ச ஏகாதசியை பிரபோதின ஏகாதஸி என்று கொண்டாடுவார்கள். அதாவது விழித்தெழுந்த பதினோராம் நாள் என்பது இதன் பொருள். விஷ்ணு , நான்கு மாத காலம் தூங்கிய பின்னர் எழுந்த நாள் இது.. இதற்கு மறுநாள் துளசி கல்யாணமும் நடைபெறும்.
அதற்கு மறுநாள் துவாதசி (12ம் நாள் என்று அர்த்தம்) அன்றைய தினம் வன போஜனம் நடை பெறும் . இதை மஹாராஷ்டிரர்கள் நெல்லிக்காய் மர (ஆவலி ) போஜனம் என்றும் அழைப்பார்கள் . வசதியின் பொருட்டு இதை பத்தாம் நாள்முதல் 15ம் நாள் (தசமி முதல் பெளர்ணமி வரை) வரை கூட செய்வார்கள். காரணம் குடும்பத்தினர் எல்லோரும் சேர்ந்து PICNIC பிக்னிக் போவார்கள். ஒரு நெல்லிக்காய் மரம் அல்லது தோப்புக்குச் சென்று மரத்துக்கு அடியில் பாய் விரித்து, உண்டு களிப்பார்கள் .
தமிழர்கள் 18ஆ ம் பெருக்கு அன்று சிறு தேர்களை இழுத்துக்கொண்டு காவிரி அல்லது உள்ளூர் நதிக்குச் சென்று போஜனம் செய்வது போல பல குடும்பங்கள் நண்பர்கள் சகிதம் பாடிக்கொண்டு செல்வார்கள்.
நெல்லிக்காய் மரம் விஷ்ணுவின் அம்சம். ஆகையால் மரத்தின் வேர்களில் பயபக்தியுடன் நீரைப் ப்ரோக்ஷித்து (தெளித்து) அதைச் சுற்றி நூல் கட்டுவார்கள் . மரத்தை வலம் வந்து வணங்குவார்கள் நாள் முழுதும் ஆடிப்பாடி சிறுவர்களை விளையாடவிட்டு மாலையில் வீட்டுக்குத் திரும்புவார்கள்.
வீட்டில் விஷ்ணு உருவத்தை வைத்து வழிபடுவோர். கடந்த நான்கு மாதங்களில் அவரை சயன கோலத்தில் (உறங்கும் நிலை) வைத்திருப்பார்கள். இன்று அவரை நின்ற கோலத்தில் நின்ற நெடுமால் ஆக வைப்பர். விஷ்ணு கோவில்களிலிருந்து பெருமாள் புறப்பட்டு நதிக் கரைக்கோ குளக்கரைக்கோ எழுந்தருளுவார். மழைக்காலம் முடிந்ததை இது குறிக்கும்
(திருவனந்தபுரம் முதல் மும்பாய் வரை 1000 மைல்களுக்கு ஜூன் முதல் செப்டம்பர் வரை மழைக்காலம். தென் மேற்கு பருவக் காற்று, பேய் மழையைக் கொட்டிவிட்டு இமையமலையை நோக்கிச் செல்லும். பின்னர் திரும்பிவரும் பருவாக்காற்று (Returning Monsoon) என்ற பெயரில் வட இந்தியாவில் சில இடங்களில் மழையைக் கொட்டும். இந்துக்களும் ஆங்ககாங்கு உள்ள, பருவ மழை , அறுவடைக் காலம் ஆகியவற்றுக்குதக விழாக்களை மாற்றி அமைத்துக்கொள்ளுவர்.
அவர்கள் மிகப்பெரிய விஞ்ஞானிகள். எதையும் அறிவியல் முறையில்தான் அணுகுவார்கள். உலகில் ஆல மரம், அரச மரம் , நெல்லிக்காய் மரம் முதலியவற்றுக்கு நூல் சுற்றி (ஆடை அணிவித்து) மரியாதை செய்வதை வேறு எங்கும் காண முடியாது
நெல்லிக்காய் மரம் ஏன் ?
முதலில் எல்லா மரங்களுக்கும் மதிப்பும் மரியாதையும் கொடுக்க (Environmental awareness) வேண்டும் என்பதாகும்.
இரண்டாவது நெல்லிக்காயின் துவர்ப்புச் சுவை, ஏகாதசி பட்டினி கிடந்த வயிற்றில் சுரந்த அமிலத்தை (neutralising acidity in the stomach) சமப்படுத்திடும்.
தமிழ்நாட்டிலும் கூட ஏகாதசி உண்ணாவிரதம் இருப்போர் மறுநாள் துவாதசி பாராயணம்/ பாரணை செய்கையில் நெல்லிக்காய் துவையல், அகத்திக் கீரை ,சுண்டைக்காய், கறி சகிதம் உண்ணுவதைக் காணலாம்
கார்த்திகை மஹாத்மிய புராணம், விரத கெளமுதி முதலிய நூல்களில் ஆவலி / ஆமலக போஜன விஷயங்கள் விளக்கப்பட்டுள்ளன

ஏகாதசி பற்றி ஒரு கதையும் உண்டு
கும்ப என்று ஒரு அசுரன் இருந்தான்.அவனுக்கு ம்ருது மன்ய என்ற பெயரில் ஒரு மகன் இருந்தான். சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தான். சிவனுக்கு ஆசுதோஷ் என்று ஒரு பெயர் உண்டு. அவரை எளிதில் த்ருப்திப்படுத்திவிடலாம் என்பது இதன் பொருள் . அவரும் அரக்கனின் மகன் முன் தோன்றி அப்பா நீ கேட்பது என்ன ? அருள் புரிதல் என் தொழில் என்கிறார் சிவன்.
பூவுலகில் பிறக்கும் ஆண் மகனோ , பெண் மகளோ என்னைக் கொல்ல க்கூடாத வரம் வேண்டும் என்றான். சிவனும் தந்தேன் போ என்றார் . அவன் அட்டஹாஸம் செய்யத்து வங்கியவுடன், பிரம்மா, விஷ்ணு, சிவன் எல்லோரும் அலறினர். துர்கா, லெட்சுமி, சரஸ்வதி மூவரும் ஒரு நெல்ல்லிக்காய் மரப்பொந்தில் ஒளிந்து கொண்டனர். அவர்கள் மூவரும் சுவாசித்த காற்றிலிருந்து ஏகாதசி என்ற பெயருள்ள பெண் பிறந்தாள் . அவள் சென்று ம்ருது மன்யநைக் கொன்றுவிடுகிறாள் . இவள் பூவுலகிலும் தோன்றவில்லை; பெண்களின் கர்ப்பப் பையிலும் உதிக்கவில்லை . ஆகையால் சிவன் தந்த வரம், ம்ருது மன்யநைப் பாதுகாக்கவில்லை. அவள் நினைவாக அல்லது அசுரனைக் கொண்ட நாளாக ஏகாதசி என்ற பெயரில் இந்துக்கள் மாதத்துக்கு இரண்டு முறை உண்ணாவிரதம் இருக்கிறார்கள்
துளசி வில்வம் முதல் ஆல மரம் , புளிய மரம் வரை எல்லா மரம் செடி கொடிகளுக்கும் மரியாதை கொடுக்கும் ஒரே ஜாதி இந்துக்களே . விநாயக சதுர்த்தியன்று 21 வகை பத்திரங்களை (21 types of leaves) கணபதிக்கு சமர்ப்பிக்கவேண்டும் என்று சொன்னவுடன் ஒரு Botany Class பாட்டனி கிளாஸ் போன அறிவு வரும். 21 பத்திரங்கைள அறிய தாய், தந்தையர் சொல்லிக் கொடுப்பர். நவக்கிரக ஹோமத்தில் நவதானியம் படைத்து ஒன்பது வித ஹோம சமித்து க்களை அக்கினியில் போட வேண்டுமென்று சொன்னவுடன் 18 பொருள்கள் பற்றி Botany Lesson பாட்டனி லெஸ்ஸன் கிடைக்கும். நவ தானியம் எது ? நவ சமித்து எது? என்பதை கடைக்கார செட்டியார் முதல், ஐயர் வீட்டுப் பயன் வரை அனைவரும் அறிவர் . மிகப்பெரிய விஞ்ஞான மதம் இந்துமதம். நாள் தோறும் இப்படி இயற்கை அறிவை வளர்க்கும் மதம் உலகில் வேறு எங்கும் இல்லை. உங்களை Botanist and Scientist பொட்டானிஸ்ட் , சைன்டிஸ்ட் என்ற நிலைக்கு உயர்த்திவிடும் .

BOTANICAL INFORMATION
Phyllanthus emblica, also known as emblic,emblic myrobalan, myrobalan, Indian gooseberry, Malacca tree,or amla,from the Sanskrit आमलकी (āmalakī), is a deciduous tree of the family Phyllanthaceae. Its native range is tropical and southern Asia.
(மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளி வாசலில் உப்பு மிளகாய்பொடியோடு நெல்லிக்காயும், வெள்ளரிக்காயும் வாங்கிச் சாப்பிட்டதை என்னால் மறக்கவே முடிவதில்லை. சிவானந்த பக்தர்கள் நடத்தும் மதுரை தெய்வ நெறிக்கழகத்தில் அவ்வப்போது இமயமலை ரிஷிகேஷ் தயாரிப்பான சியவனப்ராஸ் லேகியம் (நெல்லிக்காய் லேஹியம் ) சாப்பிடத்தையும் மறப்பதற்கில்லை)
https://tamilandvedas.com › tag › athiyaman
31 Jan 2012 — அதியமான், அவ்வையார், ஆல்பிரூனி, அருணகிரிநாதர் ஆகிய நால்வருக்கும் …
-subham—
Tags- நெல்லிக்காய், மரம், ஆமலக , வன போஜனம் , லேகியம், மரம், ஏகாதசி கதை, துவாதசி , ஆவலி போஜனம்,மர வழிபாடு, நெல்லிக் கனி