
Post No. 11,987
Date uploaded in London – – 10, May , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
தாழம்பூவை ஏன் பயன்படுத்தக் கூடாது? என்ற கதை பெரும்பாலோருக்குத் தெரிந்ததுதான்.

தத்தாத்ரேய த்ரிபுர ரஹஸ்யத்தில் உள்ள கதை :–
பிரம்மாவுக்கு முதலில் ஐந்து தலைகள் இருந்தன. அப்போது பிரம்மா விஷ்ணு இருவரிடையேயும் யார் பெரியவர் என்ற போட்டி இருந்தது . அந்த நேரத்தில் சிவபெருமான் பெரும் ஜோதியாகத் தோன்றினார். பிரம்மாவும் விஷ்ணுவும் இது என்ன ஜோதி என்று வியந்தனர். சரி இதன் அடி, முடி இரண்டையும் கண்டுபிடிப்போம். யார் முதலில் கண்டுபிடிக்கிறாரோ அவரே பெரியவர் என்று முடிவு செய்தனர்.. உடனே விஷ்ணு ஒரு பன்றியின் வடிவம் எடுத்து பூமியைத் தோண்டிச் சென்றார். அந்த ஜோதியின் முடிவைக் காண்பது அவரது நோக்கம். அதே நேரத்தில் பிரம்மா, ஒரு அன்னத்தின் வடிவம் எடுத்து மேல் நோக்கிப் பறந்தார். விஷ்ணுவால் ஜோதியின் முடிவைக் கண்டு பிடிக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தார். பிரம்மாவாலும் ஜோதியின் மேல்பாகத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் திரும்பிக்கொண்டு இருந்தார். அப்போது ஒரு தாழம்பூ (screw pine flower or Pandanus ) வானத்திலிருந்து கீழே விழுந்து கொண்டிருந்தது.
எங்கிருந்து வருகிறாய் என்று பிரம்மா கேட்டார்.எனக்குத் தெரியாது என்றது . சிவனின் தலையிலிருந்து வருவதாக பொய் சாட்சியம் சொல்லு என்று அழைத்துச் சென்றார் பிரம்மா . இருவரும் சிவனிடம் சென்றனர். சிவனின் ஜோதி வடிவின் முடியைக் கண்டுவிட்டதாக பிரம்மா சொல்லி, அதற்கு சாட்சியம் தாழம்பூ என்று சொல்ல, சிவனுக்கு மஹா கோபம் எற்பட்டது பிரம்மாவின் ஒரு தலையைக் கிள்ளி எறிந்தார் . தாழம்பூவை எவரும் பயன்படுத்தக்கூடாது என்ற தடையும் போட்டார் . பிரம்மாவுக்குக் கோவில் எழுப்பக் கூடாது என்று தடையும் போட்டார் .
இப்போதும் இந்துக்கள் பூஜையில் இதைப் பயன்படுத்துவதில்லை. அதேபோல பிரம்மாவுக்கும் அதிக கோவில்கள் இல்லை .
தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில், சின்னப் பெண்களுக்குப் பின்னல் பின்னி தாழம்பூவை கட்டி , அதைக் கண்டு மகிழ்கிறார்கள்.
Xxxx
வெட்டிவேரின் கதை (குச என்னும் புல்)

வங்காளத்தில் கஸ் சஷ்டி என்னும் விழா பெளஸ மாத சுக்ல பக்ஷ ஆறாம் நாள் (சஷ்டி) கொண்டாடப்படுகிறது .
அப்போது கஸ் என்று வங்காளிகள் சொல்லும் குச புல் வழிபடப்படுகிறது. சஷ்டி என்னும் தேவதையை அந்தப் புல்லின் அம்சமாகக் கருதுகின்றனர். தமிழில் அதை வெட்டிவேர் என்று சொல்கிறோம் (Khas or Khus அல்லது Andropogon muricatus) . சஷ்டி தேவதை குழந்தைகளுக்கு பாதுகாப்பு தருபவள்.
இந்த கஸ் சஷ்டி பற்றி வங்காளத்தில் வழங்கும் கதை பின் வருமாறு:-
ஒரு மாமியாருக்கு அடங்காத ஒரு நாட்டுப்பெண் (மருமகள்) வந்து வாய்த்தாள். கடவுளுக்குப் படைப்பதற்காக செய்யப்பட பிரசாதங்களைக்கூட , நைவேத்த்யம் செய்யும் முன்பாகவே உண்டு விடுவாள். . அவளுக்குப் பிறக்கும் குழந்தைகள் எல்லாம் இறந்துபோயின. இதற்குக் காரணம், மருமகளின் தெய்வ நிந்தனையே என்று மாமியார் கருதினார்.. எப்படியாவது அவளை சஷ்டி விரதம் அனுஷ்டிக்க வைக்கவேண்டும் என்று மாமியார் கருதினாள் .
நிறைய அழுக்குத் துணிகளை மூட்டை கட்டி, ஆற்றங்கரைக்குச் சென்று துவைத்துக் கொண்டுவா என்று அனுப்பினாள் . மருமகளும் துணி மூட்டையை சுமந்து கொண்டு நதிக்கரைக்குச் சென்று நாள் முழுதும் துவைத்தாள் ; சாப்பிடக்கூட நேரமில்லை. அவ்வளவு துணிகள்.
அவள் மாலையில் வீடு திரும்புவதற்குள் சஷ்டி தேவதை பூஜைக்கான ஏற்பாடுகளை மாமியார் செய்து முடித்தாள் . மண்ணை எடுத்து, குளம் போல நடுவில் குழி தோண்டி கரைப்பகுதியில் வெட்டிவேரின் புல்லை நட்டு நாள் முழுதும் விரதம் இருப்பது வழக்கம். மாமியாரும் அவ்வாறே செய்து , பிராமண புரோகிதரையும் அழைத்து, மேள தாளம் கொட்ட ஏற்பாடு செய்தார் மருமகளுக்குப் பிடித்த தின்பண்டங்களை நைவேத்யத்த்துக்கு தயாரித்தாள் .

மாலையில் வீடு திரும்பிய மரு மகளுக்கு அதிசயம் கார்த்திருந்தது . அவள், நாள் முழுதும் சாப்பிடாமல் இருந்தது விரதம் போல ஆயிற்று. மாமியாரின் திட்டமும் வெற்றி பெற்றது. அவளுக்கும் தெய்வ பக்தி ஏற்படவே, பின்னால் பிறந்த குழந்தைகள் எல்லாம், நீண்ட ஆயுளுடன் வாழ் ந்தார்கள் . அதிலிருந்து இந்த குச புல் (வெட்டிவேர்) விரதம் பரவியது .
-subham—
Tags- குச, கஸ் , சஷ்டி, தேவதை, வெட்டிவேர், தாழம்பூ , பிரம்மா, விஷ்ணு, சிவன்