
Post No. 12,242
Date uploaded in London – 8 July , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
மாறி வரும் மும்பை!
ச.நாகராஜன்
மும்பை மாறி வருகிறதாம்!
இணையதளத்தில் ஒரு அன்பர் இதை வெளியிட அது எங்கும் பரவி வருகிறது.
என்ன தான் சொல்கிறார் அந்த அன்பர் என்பதைப் பார்ப்போம்.
முடிவு மும்பைவாசிகளுடையது தான்!
அவரது பார்வை அவரது வார்த்தைகளிலேயே இதோ:
மும்பையை ஒரு சுற்று சுற்றி வாருங்கள்
டீ, நொறுக்குத் தீனிகள், முட்டை ஆம்லெட், தண்ணீர் ஆகிய அனைத்தும் கடற்கரையிலும் தெருக்களிலும் இஸ்லாமியரே கடைகளை வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இவர்கள் மற்ற வெளி மாநிலங்களிலிருந்து மும்பைக்கு வந்தவர்கள் அல்லது ரோஹிங்யாக்கள்!
சாலை ஓரம் இருக்கும் தள்ளுவண்டிகளில் தேங்காய்களும் கறிகாய்களும் விற்பனை செய்கிறார்களே அவர்கள் அனைவரும் பெரும்பாலும் இஸ்லாமியரே.
மனீஷ் மார்கெட், க்ராஃபோர்ட் மார்கெட், க்ராண்ட் ரோட் ஆகிய இடங்கள் ஒரு காலத்தில் மராத்தியருக்கும் மார்வாரிகளுக்கும் சொந்தமாக இருந்தது. இன்றோ நீங்கள் ஒரு மார்வாரியையோ மராத்தியரையோ அங்கு பார்க்க முடியாது.
இந்த மாற்றம் திடீரென்று ஏற்பட்ட ஒன்று அல்ல.
ஆஜ்மி அல்லது நவாப் மாலிக் போன்றோர் இதற்காகவே வரிந்து கட்டிக் கொண்டு வேலை பார்த்து வந்தனர். தேசீயவாதிகளும் சிவசேனாக்காரர்களும் அவர்களுக்கு ஆதரவைத் தந்தனர்.
இவர்கள் ஒரு நிறுவனத்தை உருவாக்கினர். உத்தரப்பிரதேசத்திலிருந்து வரும் ஒரு இஸ்லாமியர் அல்லது பீஹார், பங்களா தேஷ், வங்காளம் அல்லது ஒரு ரோஹிங்யா தங்கள் இடத்திலிருந்து மும்பை வந்தவுடன் அருகிலிருக்கும் ஒரு மசூதிக்குச் செல்வார். அங்கிருந்து அவர்கள் நவாப் மாலிக் அல்லது அபு ஆஜ்மி நடத்தும் ஒரு என் ஜி ஓ அலுவலகத்திற்குக் கூட்டிச் செல்லப்படுவார்.
அவர்களின் ஆட்கள் யார் யார் எங்கு எங்கு என்ன என்ன தொழிலை நடத்துகிறார்கள் என்பதை நன்கு தெரிந்து வைத்திருப்பவர்கள்.
வருகின்ற ஆளுக்கு ஒரு தள்ளு வண்டி தரப்படும். முழு சாதனங்களும் தரப்படும். அவர் எங்கு செல்ல வேண்டும் என்ன தொழில் செய்ய வேண்டும் என்பதும் சொல்லித் தரப்படும். வருகின்ற வருமானத்தில் ஒரு சிறிது தொகையை கமிஷனாக அவர் என் ஜி ஓ விற்குத் தர வேண்டும்.

மும்பையின் ஜனத்தொகை இப்படியாக வெகு வேகமாக மாறி வருகிறது.
மிரா ரோட், கார், க்ராண்ட் ரோட், பைகுல்லா, அப்துல்ரஹ்மான் வீதி, மொகம்மது அலி ரோட், பாம்பே சென் ட் ர ல், க்ராஃபோர்ட் மார்கெட், சாந்தாக்ரூஸ், அந்தேரி வெஸ்ட், ஜோஹேஸ்வரி, ஓஷிவாரா, ராம் மந்திர் ஸ்டேஷன், கோரேகான் வெஸ்ட், மல்வானி, சார்கோப் மற்றும் இதர பல பகுதிகள் இஸ்லாமியரின் வலிய கோட்டையாக மாறி வருகிறது.
இப்போது இந்தப் பகுதிகளில் ஒரு ஹிந்து தேர்தலில் நின்று நிச்சயம் ஜெயிக்க முடியாது.
என் சி பி தலைமையில் மேலே சொல்லப்பட்ட என் ஜி ஓக்கள் ஒரு புதிய இயக்கத்தைத் துவங்கி உள்ளனர்.
அது என்னெவெனில் மும்பை காவல் படையில் அதிகமதிகம் இஸ்லாமியரைச் சேர்ப்பது தான்.
இதற்காகப் பல பயிற்சி மையங்கள் ஸதாரா கோல்ஹாபூர், சாங்லி, ராய்காட், அஹ்மத்நகர், புனே, நாக்பூர், மும்பை ஆகிய இடங்களில் துவங்கி உள்ளன. இவைகள் உத்தரபிரதேசம், பீஹார், வங்காளம் ஆகிய இடங்களிலிருந்து வரும் இஸ்லாமியருக்கு மராத்தி மொழியைக் கற்பிக்கின்றன. ஆகவே அவர்கள் எளிதாக போலீஸ் சோதனைத்தாள்களை எதிர் கொள்ள முடியும்.
அவர்களுக்குத் தங்குமிடம் இலவசம். மாதம் உதவித்தொகை ஒவ்வொருவருக்கும் 8000 ரூபாய் வழங்கப்படுகிறது.
2023ஆம் ஆண்டுக்குள் மஹராஷ்டிரா போலீஸ் படையில் 30 சதவிகிதம் பேர் இஸ்லாமியராக இருக்க வேண்டும் என்ற தன் விருப்பத்தை ஒரு கடிதத்தில் நவாப் மாலிக் தெரிவித்துள்ளது வெளி வந்திருக்கிறது.
‘மராத்தி மண் எனக்கே’ என்று சொல்லிக்கொண்டு மார் தட்டும் மராத்திய வீரனுக்கு இப்படி கோஷம் போடத் தான் தெரியுமே தவிர உண்மையான நாட்டு நடப்பு என்ன என்பதே தெரியாது.
அட, என்ன ஒரு பரிதாபம்!
இப்படி முடிகிறது கட்டுரை.
மும்பைவாசிகள் தான் இதைப் பற்றி யோசித்து, அங்குமிங்கும் சென்று பார்த்து உண்மையைச் சொல்ல வேண்டும்!
நன்றி : கல்கத்தா ஆங்கில வார இதழ் ட்ரூத் தொகுதி 91 இதழ் 8
9-7-2023 தேதியிட்ட இதழ்
***