
Post No. 12,267
Date uploaded in London – – 13 July , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
1.தஞ்சாவூர் என்று சொன்னவுடன் எந்த இரண்டு கட்டிடங்கள் உங்கள் நினைவுக்கு வரும்?
XXXXX
2.தஞ்சாவூர் பெரிய கோவிலில் உள்ள இரண்டு பெரிய சிலை அதிசயங்கள் என்ன?
XXXXX
3. தஞ்சாவூர் பெரிய கோவில் கோபுரத்தின் சிறப்பு என்ன ?
XXXXX
4.பெரிய கோவிலில் ஆயிரம் ஆண்டு பழமையான ஓவியங்கள் உள்ளன அவைகளில் உள்ள இரண்டு முக்கிய மனிதர்கள் யார்?
XXXXX
XXXXX
5.தஞ்சாவூர் சரஸ்வதி மஹாலை உருவாக்கியவர் யார் ? அங்கு என்ன அபூர்வ விஷயங்கள் உள்ளன?
XXXXX
6. தஞ்சாவூரில் உள்ள காமாட்சி அம்மன் யார்?
XXXXX
7.சங்கீத மும்மூர்த்திகளில் தஞ்சாவூருக்கு நெருக்கமானவர் யார்?
XXXXX
8.தஞ்சாவூரில் இப்போது அரண்மனை இருக்கிறதா?
XXXXX
9. தஞ்சாவூரில் தமிழ் பல்கலைக்கழகம் எப்போது துவங்கப்பட்டது ?
XXXXX
10.இலக்கியத்தில் தஞ்சாவூர் பற்றிய முதல் குறிப்பு எங்கே கிடைக்கிறது?
XXXXXX

விடைகள்
1.தஞ்சாவூர் பெரிய கோவில் எனப்படும் பிரஹதீஸ்வரர் ஆலயமும் சரஸ்வதி மஹால் நூலகமும் நினைவுக்கு வரும்.
XXXXX
2.பெரிய நந்தியும் பெரியலிங்கமும் இரண்டு பெரிய சிலை அதிசயங்கள்:
லிங்கத்தின் அளவு –13 அடி உயரம்!
நந்தியின் அளவு — 12 அடி உயரம். எடை 12 டன்!
XXXXX
3..வானளாவிய கோபுரம்; 216 அடி உயரம்; எல்லா ஊர்களிலும் கர்ப்பக்கிரகத்துக்கு மேல் சின்ன கோபுரம்/விமானம் இருக்கும். வெளியே பெரிய கோபுரங்கள் இருக்கும். தஞ்சையிலோ கர்ப்பக்கிரகத்துக்கு மேல் 216 அடி கோபுரம்! கோபுரத்தின் உச்சியில் வட்டவடிவ சிகரம். அங்குள்ள கல்லின் எடை 81 டன்!
XXXXX
4.கோவிலைக் கட்டிய மாமன்னன் ராஜ ராஜ சோழன் ; அவனுக்கு ராஜ குருவாக விளங்கிய கருவூர் சித்தர் .
XXXXX
5. தஞ்சாவூரின் மராத்திய மன்னா் சரபோஜி மன்னா் ஆவார் (கி.பி.1798-1832). முன்னர் இருந்த புஸ்தகங்களை அவர் ஒன்று திரட்டி நூலகத்தை சிறப்பாக அமைத்தார் . இதன் முழுப்பெயர் சரபோஜி சரஸ்வதி மகால் நூலகம்.
இங்கு, தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மராத்தி, ஆங்கிலம் மற்றும் இந்தியாவை சார்ந்த பிறமொழி காகித குறிப்புகளும் உள்ளன. இங்கு 30, 433 சமஸ்கிருத மற்றும் பிறமொழி ஓலைச்சுவடிகளும் 6, 426 புத்தகங்கள் மற்றும் சஞ்சிகைகளும் உள்ளன. ஒரு அருங்காட்சியகமும் நூலக கட்டிடத்தில் உள்ளது.
XXXXXX
6.தஞ்சாவூரில் புகழ் பெற்ற கோவில்கள் பல உண்டு. அவைகளில்
சுவர்ண பங்காரு காமாட்சி அம்மன் கோவில் மிகவும் புகழபடைத்தது சம்ஸ்க்ருதத்தில் சுவர்ண என்றால் தங்கம். தெலுங்கில் பங்காரு. இந்த தங்க காமாட்சி முதலில் காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் இருந்தது. துலுக்கப்படைகளும் ஐரோப்பிய கிறிஸ்தவ படைகளும் இந்துக் கோவில்களை கொள்ளையடித்து வந்தனர் அப்போது காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் (கி.பி. 1746 – 1783) இந்த விக்ரகத்தை பாதுகாப்பாக இங்கே கொண்டு வந்து நிறுவினார். விஜய நகர, நாயக்க, மராத்திய மன்னர்களுக்கு அருள்மழை பொழிந்தவள் இந்தக் காமாட்சிதான்
XXXXX
7.சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சியாமா சாஸ்திரிகள், இந்தக் காமாட்சி அம்மன் சந்நிதியில் அமர்ந்து பல கீர்த்தனைகளைப் பாடியிருக்கிறார். காமா ட்சியால் அவர் பிரபலமானது போல, அவர் மூலம் சுவர்ண / பங்காரு காமாட்சியும் பிரபலம் அடைந்தாள் என்று சொன்னால் மிகையாகாது .
XXXXX
8.சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் நாயக்க மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட அரண்மனை இருக்கிறது பிறகு தஞ்சையை ஆட்சிசெய்த மராட்டிய மன்னர்களால் மேலும் அது விரிவுபடுத்தப்பட்டது. . மன்னர்களின் அரசவை, அவர்கள் பயன்படுத்திய போர்க்கருவிகள், உடைகள், ஆபரணங்கள், சிறைக்கூடம், சுரங்கப்பாதை, மாடமாளிகை, பழங்கால ஓவியங்கள் இன்னும் உள்ளன.அரண்மனை வளாகம், மொத்தம் 110 ஏக்கர்.
XXXXX
இது 1981, செப்டம்பர் 15ஆம் நாள் உருவாக்கப்பட்டது. தஞ்சாவூரில் தஞ்சாவூர்-திருச்சிராப்பள்ளி சாலையில் இப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. பல்வேறு துறைகளில் தமிழ் மொழியும் பண்பாடும் கண்ட வளர்ச்சியை ஆராய்ந்து ஆவணப்படுத்தி வருகிறது தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் – 613010
+91 4362 226720
tamilunivc@gmail.com
XXXXX
1O.அப்பர் பாடிய தேவாரத்திலும் (600 CE ), பின்னர் பூதத்தாழ்வார் , திருமங்கை ஆழ்வார் பாடிய பாசுரங்களிலும் தஞ்சை பற்றிய குறிப்பு வருகிறது. ராஜ ராஜ சோழனால் உலகப் புகழ் பெற்றது .
XXXXX

—SUBHAM—–
TAGS- தஞ்சாவூர், பெரிய கோவில் , பிரஹதீஸ்வரர் ஆலயம் ,சரஸ்வதி மஹால் நூலகம் , சியாமா சாத்திரிகள், சுவர்ண பங்காரு, தஞ்சை , தமிழ் பல்கலைக் கழகம், Thanjavur Quiz