QUIZ மும்பை பத்து QUIZ (Post No.12,301)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,301

Date uploaded in London – –  20 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

QUIZ No.46

1.பம்பாய் எப்படி மும்பை ஆனது ?

Xxxxx

2.மும்பையில் நடிகர் நடிகையரும் வரக்கூடிய இந்துக்கோவில்கள் எவை ?

xxxxxx

3.கேட் வே ஆப் இண்டியா Gate way of India , இண்டியா கேட் India Gate – இவற்றில் மும்பையில் உள்ளது எது?

xxxxx

4.நியூயார்க்கில் வணிக விஷயங்களை கவனிக்கும் நிறுவனங்கள், ஸ்டாக் மார்க்கெட் உள்ள தெருவை Wal Street வால் ஸ்ட்ரீட் என்பர். இது போல மும்பையில் வணிகர் தெரு எது?

xxxxxxx

5.மும்பை வட்டாரத்தில் பல Beach பீச் – கடற்கரைகள் உள்ளன. ஜூஹூ பீச் என்னும் கடற்கரைக்கு ஏன் மதிப்பு அதிகம்.?

xxxxxxx

6.மும்பாயிலிருந்து கடலில் படகில் சென்றால் காணக்கூடிய பெரிய திரிமூர்த்தி சிலை எங்கேயுள்ளது ?

xxxxx

7.புத்தர் சிலைகள் உள்ள இரண்டு  குகைகளும் மும்பையில் உள்ளன. அவற்றின் பெயர்கள் என்ன?

zzzzz

8.மும்பை யிலிருந்து நீண்ட காலமாக வெளிவரும் ஆங்கில நாளேடு  எது ?

xxxxxx

9. இந்திய ரயில்வே வரலாற்றில் மும்பைக்கு உள்ள தனிச் சிறப்பு என்ன ?:

xxxxxx

10.உலகிலேயே பெரிய சேரிப்  பகுதி எது?

Xxxxxxx

ANSWERS

1.இந்த நகரின் பூர்வீக பெயர் மும்பைதான். மும்பா தேவி இந்த நகரின் தெய்வம். இப்போது அவள் கோவிலுக்கு ஏராளமான பேர் போகின்றனர்.

ப= ம என்பது மொழியியல் அறிஞர்கள் அறிந்த விஷயமே;.பர்மா என்பதை இப்போது மியன்மார் என்று சொல்லுவதும் இதனால்தான் ; பண்டார் என்பது மண்டி என்றாகிறது; மேனுவல் என்பது தமிழில் பனுவல் /நூல் ஆகிறது .

xxxxx

2.சித்தி விநாயகர் கோவிலும் , மகா லெட்சுமி கோவிலும் ஆகும்.

Xxxxx

3.இண்டியா கேட், டில்லியில் இருக்கிறது; கேட் வே ஆப் இண்டியா, மும்பையில் இருக்கிறது. ஐந்தாம் ஜார்ஜ் மன்னரையும் அவரது மனைவியையும் வரவேற்க மும்பையில் கட்டினர்

Xxxxx

4.மும்பையிலுள்ள தலால் ஸ்ட்ரீட்; தலால் என்றால் ப்ரோக்கர்.

Xxxxx

5.கடற்கரை அழகான கடற்கரை என்பது மட்டுமல்ல; நடிகர், நடிகையர் வீடுகள் அருகில் இருக்கின்றன. அவர்களும் வாக்கிங் Walking வருவார்கள்

Xxxxx

6.எலிபெண்டா தீவில் உள்ளது

Xxxxx

7.கனேரி குகைகள், மகா காளி குகைகள்

xxxx

8.டைம்ஸ் ஆப் இந்தியா.Times  of  India ; 1838ல் துவங்கியது.  1861 முதல் இந்தப் பெயரில் வெளிவருகிறது.

xxxxx

9.இந்தியாவின் முதல் ரயில் பாதை 1853ல் பம்பாய்க்கும் தானே நகருக்கும் இடையேதான் போடப்பட்டது . அதன் நீளம் 32 கிலோமீட்டர்தான் .

xxxx

10.மும்பையிலுள்ள தாராவி சேரி உலகில் பெரிய சேரி ஆகும்

Xxxx subham xxxxxx

Tags-  ஆங்கில நாளேடு, டைம்ஸ் ஆப் இந்தியா,. மும்பை 

முதல் ரயில் பாதை,  ஜூஹூ பீச், மும்பை கோவில், Quiz

Leave a comment

Leave a comment