முதலையால் பிரசித்தமான காசர்கோடு கோவில் -45 (Post No.12,877)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,877

Date uploaded in London – –   2 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 45

கோவில் எண்கள் –63,64,65, 66

63.அனந்த பத்மநாப சுவாமி கோவில் முதலை

காசர்கோடு மாவட்டம் கும்பளா பகுதியில் – அனந்தபுரத்தில்  அனந்த பத்மநாபசுவாமி கோயில் உள்ளது.

அங்குள்ள குளத்தில் பபியா என்ற பெயருள்ள முதலை 75 ஆண்டுகளாக சைவ முதலையாக வசித்து இறந்தவுடன் உலகம் முழுதும் அந்தச் செய்தி பரவியது. ஏனெனில் சாதாரணமாக முதலைகள் மாமிச உணவையே உண்ணும். அந்த முதலையோ கோவிலில் அர்ச்சகர் தரும் பிரசாதத்தை மட்டுமே உண்டு வாழ்ந்தது. அதே குளத்தில் சரியாக ஓராண்டுக்குப் பின்னர் நவம்பர் 2023-ல் மேலும் ஒரு முதலை தோன்றியவுடன் மேலும் அதிசயச் செய்திகள் பரவின. ஏனெனில் சாதாரணமாக முதலைகள் வசிக்காத வட்டாரம் அது

கோவிலில் சயன கோலத்தில் பாம்பு மீது விஷ்ணு அறிதுயில் செய்வதைக் காணலாம் .

ஆண்டுதோறும் மார்ச்மாதம் தெப்பத்  திருவிழா நடக்கும் ; இரவில் கர்நாடக யக்ஷகானம் நடைபெறும் .

கர்நாடக எல்லையில் உள்ள மாவட்டம்  . காசர்கோடு

64.பார்த்தசாரதி-கிருஷ்ண தேவ கோவில்

கும்பலா நகரிலிருந்து 5 கி.மீ .தொலைவில் பார்த்தசாரதி கோவில் இருக்கிறது அர்ஜுனனுக்கு தேரோட்டிய கிருஷ்ணனை பார்த்த சாரதி= டிரைவர் கிருஷ்ணா என்கிறோம்.

இங்கு பிப்ரவரி மாததத்தில் 7 நாள் விழா நடக்கும். அப்போது கர்நாடக யக்ஷகான கலைஞர்கள் புராண இதிஹாஸக் காட்சிகளை நாட்டிய நாடகமாகக் காட்டுவார்கள் ஒவ்வொரு ஆண்டும் துலா மாதப்பிறப்பில்  நடக்கும் விழாவுக்கு பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வருகிறார்கள் ; இரவு முழுதும் யக்ஷகானத்தைக் கண்டு களிப்பார்கள் .

65.மதூர் விநாயகர் கோவில் Madhur Sree Madanantheshwara-Siddhivinayaka Temple i

காசர்கோடு நகரிலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் மதுவாகினி நதிக்கரையில் சிவன் கோவில் இருக்கிறது. கோவில் சிவனுக்குகானதாக இருந்தாலும் அங்குள்ள விநாயகர் மூலமே கோவில் பிரபலம் ஆகியுள்ளது

சிவ பெருமானின் பெயர் மதானந்தேஸ்வரர். அதாவது மதமாச்ச்ர்யங்களை வென்ற இறைவன்.

சிவபெருமானின் கருவறைக்குள், பார்வதி தேவியும் வீற்றிருக்கிறார். கருவறைக்கு தெற்கே அமைந்துள்ள சித்தி விநாயகர் மிகவும் வரப்பிரசாதம் உடையவர் ; நினைத்த வரங்களை அருளுவதால் அப்பாவை வீட பிள்ளைக்கு—பிள்ளையாருக்கு,  பெருமை

குன்றுகளும் நெல் வயல்களும் தோப்பு துறவுகளும் நிறைந்த வட்டாரத்தில் கோபுரம் கம்பீரமாக உயர்ந்து நிற்கிறது கூரையை செப்புத தகடுகளால் வேய்ந்துள்ளனர்.

கேரள- கர்நாடக கட்டிடக்கலை  பின்னிப் பிணைந்த அமைப்பினைக் கண்டு ரசிக்கலாம். இரண்டு அடுக்கு கோபுரம் கொண்ட கருவறையின் வெளிப்புறச் சுவர்களில் கண்கவரும் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. கேரள கோவிலுக்குப் புறம்பான சடங்குகளையே கோவிலில் பின்பற்றுகிறார்கள். ஏப்ரல் மாதத்தில் 5 நாள்  விழா நடக்கும் . நாலாம் நாள் விழாவில் இறைவன் உருவம் கொண்ட திடம்பு ஒன்றரை மைல் தொலைவுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் . பல்ல்லாயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் விழாவில் அருகாமை மாநிலமான கர்நாடக யக்ஷகான இசைக்கலைஞர்கள் நாட்டிய நாடகங்களை நடித்துக் காட்டுவார்கள்.

66.காஞ்சங்காடு கோவில்கள், ஆஸ்ரமம் ANANDASHRAMAM, KANHANGAD

ஆனந்தாசிரமம், என்னும் புகழ்பெற்ற ஆஸ்ரமம் 1931ம் ஆண்டில் சுவாமி பாப்பா ராமதாஸால் துவக்கப்பட்டது. காஞ்சங்காடு நகரிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் தேசிய நெடுஞ்சாலையின் ஒரு சந்திப்பில் அமைந்துள்ளது. அவருடன் கிருஷ்ணாபாய் என்ற அன்னையும் இருந்து அருளுரை ஆற்றி வந்தனர் .காஞ்ஞங்காடு அல்லது காஞ்சங்காடு என்று அழைக்கப்படும் ஊர் கேரள- கர்நாடக எல்லையில் இருக்கிறது .

ஆசிரமத்தின் துவக்க விழாவின் போது, சுவாமி ராம்தாஸ் ஆசிரமத்தின் நோக்கத்தை விவரிக்கும் ஒரு சிற்றுரையை நிகழ்த்தினார்: “ஆசிரமத்தின் இலட்சியமானது உலகளாவிய அன்பும் சேவையுமே ஆகும். இது உலகின் அனைத்து உயிர்களிலும் தெய்வீகப் பார்வையை அடிப்படையாகக் கொண்டது . இங்கே ஆண், பெண், குழந்தை என அனைவரும் எந்த சமயத்தை சாதியையும் சேர்தவர்களாக இருந்தாலும் அனுமதிக்கபடுவர். பரஸ்பரம் அன்பு, சேவை உணர்வு போன்றவற்றை வளர்ப்பதற்கு முயலும் இடமாக இருக்கும், இதன் மூலம் இதன் எல்லைக்குள் உணரப்படுவது வெளி உலகில் மனித வாழ்க்கைக்கு சரியான ஒரு நடத்தைக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் (this para is from Wikipedia).

மடியன் கோவிலகம்

நகரில் மடியன் கோவிலகம் இருக்கிறது .அங்கு க்ஷேத்ர பாலகனும் காளராத்ரி அம்மா என்னும் பத்ரகாளியும் உறைகின்றனர்; பாட்டுற்சவம் என்ற 9 நாள் ஆண்டு உற்சவம் கலை நிகழ்ச்சிகளுடன் நடக்கும் . கோவிலில் மதியத்தில் பிராமணரும் மற்ற நேரங்களில் பிராமணர் அல்லாதோரும் பூஜிக்கும் வினோத வழக்கம்  இங்கு பின்பற்றப்படுகிறது . 500 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு உடைய கோவில் இது.

மண்டியோட்டு தேவாலயம்

ஊரிலிருந்து 2 கி.மீ தொலைவிலுள்ள  மண்டியோட்டு தேவாலயத்தில் ஆண்டுதோறும் இரண்டு விழாக்கள் நடக்கின்றன. 4 நாள் விழாவில் 7 வகை தெய்யம் நடனங்களில் 7 தெய்வங்களைக் காட்டி ஆடுவது இந்தக் கோவிலில் சிறப்பு .

9 நாள் நடக்கும் விழாவில் பூரக்களி நடனம் நடக்கும். ஜனவரி, மார்ச் மாதங்களில் இவை நடக்கின்றன.

காசர்கோடு நகரில் இருக்கும் மல்லிகார்ஜுன சிவன் கோவிலும்காஞ்சன் காட்டு அணியல் தெரு பகவதி கோவிலும் இந்த வட்டாரத்திலுள்ள மேலும் இரண்டு முக்கியக் கோவில்கள்.

–SUBHAM—

Tags- அனந்த பத்மநாப சுவாமி கோவில், முதலை ,பார்த்தசாரதி, கிருஷ்ண தேவ கோவில் , மதூர் விநாயகர் கோவில் ,காஞ்சங்காடு, ஆஸ்ரமம், காசர்கோடு

Leave a comment

Leave a comment