ஆற்று மணலில் லிங்கம்: பழுர் சிவன் கோவில்-48 (Post No.12,886)

Pazur Sivan Temple

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,886

Date uploaded in London – –   5 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 48

கோவில் எண்கள் –7677787980

76. மூவாட்டுப்புழா பழுர் பெருந்த்ரிக் கோவில்

எர்ணாகுளம் வட்டாரத்தில் பிறவம் அருகில் மூவாட்டுப்புழா நதிக்கரையில் அமைந்த இந்த சிவன் கோவில் மிகவும் புகழ் பெற்றது  எர்ணாகுளத்திலிருந்து 35 கி.மீ..

சிறப்பு அம்சம்

இங்குள்ள சிவ லிங்கம் ஆற்று மணலால் செய்யப்பட்டது. நம்பூதிரி பிராமண சிறுவர்கள் விளையாட்டாக செய்த சிவலிங்கம் பெரிய கோவில் உருவாகக் காரணம் ஆகியது .அந்த சிவலிங்கம் மணல்    லிங்கம் போல உதிராமல் உறுதியாக நின்றதால் அதை பக்தர்கள் வழிபடத்துவங்கினர்.

இந்தக் கோவிலில் இன்னும் ஒரு அதிசயம் ஒரு சிறகு கொண்ட மரத்திலான கருடன் உருவம் ஆகும். இதை உருவாக்கிய சிற்பி, இரண்டாவது சிறகு செதுக்கப்பட்டவுடன் அது பறக்க எத்தனித்தது. உடனே அந்த சிற்பியே அதன் இரண்டாவது இறக்கையை வெட்டினான் என்பது இதன் பின்னாலுள்ள கதை

கோவில் விமானம் வட்ட வடிவமாக உள்ளது. மரத்தால் ஆன துவாரபாலகர்கள் உள்ளனர். மூலவர் சிவன், கிழக்கு நோக்கி உள்ளார். சதுர அர்த்தமண்டபத்தின் கூரையில் அழகிய மர வேலைப்பாடுகள் காணப்படுகின்றன; பாகவத புராணம், ராமாயணம்,மகாபாரதம் ஆகியவற்றிலிருந்து பல்வேறு உருவங்களை செதுக்கியுள்ளனர் இது  கி.பி.12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தத கோவில்.

ஆண்டுதோறும் சிவ ராத்திரி உற்சவ காலத்தில் 6 நாள் விழா நடக்கும். யானைகளுடன் அலங்கார  பவனி உண்டு.. மாலையில் பிறவம் நகரிலுள்ள கோவிலுக்குச் சென்றுவிட்டு சுவாமி திரும்புவார். 50 காவடிகள், கரகம், மயிலாட்டம், மேள தாளம் புடை சூழ பவனி நடக்கும். 5 அடுக்குள்ள உயரமான காவடிகள் குறிப்பிடத்தக்கவை.

மறு நாளன்று ஆற்றில் முழங் கால் அளவு நீரில் நின்று முன்னோருக்கு நீர் பலி கொடுப்பார்கள்.

xxxx

77.நெட்டூர் மஹாதேவர் கோவில்

எர்ணாகுளத்திலிருந்து 10 கிமீ தொலைவிலுள்ள நெட்டூரில் அரியும் சிவனும் இணைந்த சங்கர நாராயணன் காட்சி தருகிறார்.. ஆண்டுதோறும் எட்டு நாள் உற்சவம் நடக்கையில் சிவனையும் விஷ்ணுவையும் கோவிலைச் சுற்றி ஊர்வலமாகக் கொண்டுவருவார்கள்; இறைவனின் திருமேனி தாங்கிய உருவம் அலங்கரிக்கப்பட்ட யானைகள் மீது பவனி வரும்.  ஆராட்டு குளியலுடன் விழா நிறைவு பெறும் .

ஆண்டுதோறும் ஒரு நாள் மட்டும் த்தம் தாளப் பொலி நடைபெறும் ; பெண்கள் தாம்பாளங்களில் விளக்குகளை ஏந்தி ஊர்வலம் வருவார்கள் . இரவில் வாண வேடிக்கைகள் நடக்கும் .

xxxx

78.வடுதலா கணபதி கோவில்

எர்ணாகுளத்திலிருந்து 5 கிமீ. தொலைவில் வடுதலாவில்   கணபதி கோவில் இருக்கிறது ஆண்டுதோறும் விநாயக சதுர்த்தி காலத்தில் எட்டு நாள் உச்சவத்தைக் கொண்டாடுகிறார்கள், ஆறாவது நாள் நடக்கும் பள்ளிவேட்டை உற்சவம் சிறப்பானது சப்பரத்தில் பிள்ளையாரை வைத்து கோவிலைச் சுற்றி கொண்டுவருவார்கள் . ஏழாவது நாளன்று யானைகள் மீது கணபதி பவனி வருவார். சிறப்பான இன்னிசைக் கச்சேரி ஒன்றுடன் விழா நிறைவு பெறும் .

xxxx

79.சேரை ஸ்ரீ கெளரீஸ்வர கோவில்

வைப்பீன் என்னுமிடத்திலுந்து 18 கி.மீ. தூரத்தில் சேரை சுப்ரமண்ய சுவாமி கோவில் இருக்கிறது.

ஆண்டுதோறும் 9 நாள் விழா நடக்கையில் கதகளி, ஓட்டந்துள்ளல் கலை நிகழ்ச்சிகள் நடக்கும். ஏழாவது நாளன்று பகதர்கள் 150 காவடிகளை சுமந்து ஆட்டிக்கொண்டு வருவார்கள். கடை சி நாள் விழாவில் 18 யானைகள் வண்ண வண்ண குடைகளுடன் வருவது கண்கொள்ளாக் காட்சியாக அமையும் .ஊர்வலத்தின் சுருதியை உச்ச ஸ்தாயிக்குக் கொண்டுபோக பஞ்ச வாத்யக்காரர்கள் கொட்டி முழக்குவார்கள் .

xxxx

80. அம்பலமேடு கோவில்

ஹரி மட்டம்  சிவன் கோவில் எனப்படும் கோவிலில் சிவனும் விஷ்ணுவும் கோவில் கொண்டுள்ளனர். எர்ணாகுளத்திலிருந்து 20 கி.மீ தொலைவில் அம்பல மேடு இருக்கிறது.

ஆண்டு தோறும் எட்டு நாள் விழா நடைபெறும். ஏழாவது நாள் மாலை யில் யானைகளுடன் இறைவன் பவனி வருவார் . கதகளி, ஓட்டந்துள்ளல் முதலிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

கொச்சி வட்டாரத்தில் மட்டுமே நூற்றுக் கணக்கான கோவில்கள் இருக்கின்றன. அங்கு நடைபெறும் இறைவன் ஊர்வலங்கள் யானைகளை வளர்ப்போருக்கும் , கதகளி ஓட்டந்துள்ளல் , சங்கீத, நாட்டிய   கலைஞர்களுக்கும் ஏராளமான வாய்ப்புகளையும் வரும்படியையும் உண்டாக்குகின்றன. ஆண்டு  முழுதும் கோவில் விழாக்கள் நடப்பதால் கலை ரசிகர்களுக்கும் நல்ல விருந்து கிடைக்கிறது.

தமிழ்நாட்டில் பெரிய கோவில்களில் மட்டுமே நடக்கும் கலை விஷயங்களும் யானைகள் ஊர்வலமும் கேரளத்தில் சர்வசாதாரணமாக நடக்கின்றன.என்றால் மிகையாகாது .

மேலேயுள்ள பல கோவில்களின் பெயர்கள் தமிழ் நாட்டிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது..

–subham–

 tags-  வடுதலா , அம்பலமேடு, பெருந்த்ரிக்கோவில் , பழூர் சிவன், கோவில் , கணபதி, 

Leave a comment

Leave a comment