அயோடின் கலந்த உப்பு அவசியமா ? (Post No.12,891)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,891

Date uploaded in London – –   6 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

(கட்டுரையில் அயோடின் என்னும் மூலகமும் அது உருவாக்கும் தைராக்சின் என்னும் ஹார்மோனும் மாறி மாறி வருவதால் அவைகளை சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்)

உலகில் பல  நாடுகளில்  உப்பில் அயோடின் சேர்ப்பதில்லை. ஆனால் இந்தியாவில் கடைகளில் விற்கும் உப்பில் அயோடின் (Iodised salt)சேர்ப்பது கட்டாயம் ஆகும் .

ஏன் சில நாடுகளில் சேர்ப்பது இல்லை?

உதாரணமாக பிரிட்டனில் கடைகளில்  வாங்கும் உப்பில் அயோடின் கிடையாது ; காரணம் என்னவெனில் மாடுகளுக்கான தீவனத்தில் அயோடின் கலக்கப்படுவதால் எல்லோரும் சாப்பிடும் பாலில் தேவையான அயோடின் கிடைத்துவிடுகிறது. ; மேலும் மேலை நாடுகளில் வெள்ளைக்காரர்கள் சாப்பிடும் மீன் வகைகளில் அயோடின் அதிகம் இருக்கிறது.

அயோடின் ஏன் தேவைப்படுகிறது ?

மனிதனின் உடலில் பல சுரப்பிகள் இருக்கின்றன. அதில் ஒன்று தைராக்சின் (Thyroxine) என்னும் ஹார்மோன் திரவத்தைச் சுரக்கிறது . இந்த தைராக்சின் சுரக்க உதவுவது அயோடின் என்னும் மூலகம் (element) ஆகும்.

Iodine is important for the production of the thyroid hormones triiodothyronine (T3) and thyroxine (T4).

அயோடின் எளிதில் கிடைக்கும்  உணவுப் பண்டங்கள் ?

கடல் மீன் வகைகள்

சிப்பி மீன் வகைகள்

பால், தயிர்

ஒவ்வொருவருக்கும் நாள்தோறும் குறைந்தது 140 மில்லிகிராம் அயோடின் தேவை.

Iodine Content of Selected Foods

Cod (3 ounces): 99 mcg காட் வகை மீன்

Plain low-fat yogurt (1 cup): 75 mcg கொழுப்பு சத்து நீக்கிய தயிர்

Reduced fat milk (1 cup): 56 mcg கொழுப்பு சத்து நீக்கிய பால்

White enriched bread (2 slices): 45 mcg ஊட்டச் சத்து ரொட்டி

Shrimp (3 ounces): 35 mcg இறால்

Enriched macaroni (1 cup): 27 mcg ஊட்டச் சத்து மகரோனி

Egg (1 large): 24 mcg முட்டை

Canned tuna in oil (3 ounces): 17 mcg டப்பியி லுள்ள ட்யூனா மீன் வகை

Dried prunes (5 prunes): 13 mcg உலர்ந்த ப்ரூன் பழம்

Cheddar cheese (1 ounce): 12 mcg செட்டர் சீஸ்

Raisin bran cereal, (1 cup): 11 mcg தவிடு , உலர்ந்த கிஸ்மிஸ் உடைய சீரியல் (தானிய உணவு)

Apple juice (1 cup): 7 mcg ஆப்பிள் ஜு ஸ்

Frozen green peas (1/2 cup): 3 mcg பட்டாணி

Banana (1 medium): 3 mcg வாழைப்பழம்

(எவ்வளவு மைக்ரோகிராம் என்ற எண் ஆங்கிலத்தில் mcg என்று குறிக்கப்பட்டுள்ளது .

சில வகை உணவுகளை அதிகம் சாப்பிட்டாலும் தைராய்ட் சுரப்பி செயல்பாட்டினை பாதிக்கும். அவைகள் : முட்டைக்கு கோசு ,  காலிபிளவர் , டர்னிப், சோயா மொச்சை , பிராக்கோலி, தினை வகை தானியங்கள்

xxxxx

Iodine: Daily Recommended Dietary Allowance (Micrograms)

உணவில் இருக்கவேண்டிய அயோடின் (மைக்ரோ கிராமில் )

6 மாதம் வரையுள்ள குழந்தைக்கு ……..110

7 மாதம் முதல் ஒரு வயது வரை …………..130

1 முதல் 8 வயது வரை …………………………… 90

9 முதல்13 வயது வரை …………………………..120

14+ வயது ……………………………………………….. 150

கர்ப்பிணிப் பெண்களுக்கு ……………………220

தாய்ப்பால் கொடுக்கையில் ………………… 250

இதைவிடக் கூடப்போனாலும் பிரச்சினைகள் வந்துவிடும்!

அயோடின் குறைந்தவர்களுக்கு கழுத்து வீங்கி முன்கழலை நோய் (Goiter) உண்டாகும்..

xxxxxx

தைராக்சின் குறைந்தால் வரும் உடல் பிரச்சினைகள் அல்லது நோய்கள்

tiredness களைப்பு

being sensitive to cold குளிர்

weight gain எடை அதிகரிப்பு

constipation மலச்சிக்கல்

depression மனத்தொய்வு

slow movements and thoughts மந்த புத்தி

muscle aches and weakness உடலில் வலி, பலவீனம்

muscle cramps சதைப்பிடிப்பு

dry and scaly skin காய்ந்த சருமம்/தோல்

brittle hair and nails மயிரும், நகமும் எளிதில் உடைதல், பிரிதல்

loss of libido (sex drive) உடலுறவு கொள்வதில் விருப்பமின்மை

pain, numbness and a tingling sensation in the hand and fingers (carpal tunnel syndrome)

கை மற்றும் விரல்களில் கூச்சம் 

irregular periods or heavy periods பெண்களுக்கு காலம் தவறிய மாதவிடாய் அல்லது அதிக ரத்தப்போக்கு .

எப்படி அறிவது ?

பல நோய்களின் அறிகுறிகள் ஒரே மாதிரி இருக்கும். ஆகையால் டாக்டர்கள் ரத்த பரிசோதனை மூலம் தைராக்சின் குறைபாட்டினைக் கண்டுபிடிப்பார்கள் .

தேவையானால் தைராக்சின் குறைபாட்டினை ஈடுசெய்ய லெவோ தைராக்சின் (Levo thyroxine) என்ற மருந்தினை எழுதிக்கொடுப்பார்

எவ்வளவு காலம் மருந்து சாப்பிட வேண்டும்?

உடலில் கழுத்தின் கீழுள்ள தைராக்சின்/ தைராய்ட்  சுரப்பி சரியாக வேலை செய்யாவிடில் வாழ்நாள் முழுதும் மருந்து சாப்பிட வேண்டும் .

சாப்பிடாவிட்டால் இருதய நோய்கள் , மந்தமான செயல்பாடு வரும் .

குறிப்பாக கர்ப்பிணிப் பெண்களுக்கு தைராக்சின் போதுமான அளவு இல்லாவிடில் மூளை வளர்ச்சி (cretenism)  குறைந்த,  உடல் வளர்ச்சி குன்றிய (Stunted growth)  குழந்தைகள் பிறப்பதை ஆராய்ச்சி முடிவுகள் காட்டுகின்றன .

xxxxx subham xxxxxx

tags- அயொடின் , உப்பு, தைராக்சின், முன்கழலை , தேவையான அளவு

Previous Post
Leave a comment

Leave a comment